இராகவேந்திர சுவாமிகளை
எடுத்துக் கொண்டால் பக்தியினுடைய நிலைகளில் அவருடைய உணர்வின் சக்தி கொண்டு நல்ல ஒழுக்கத்தைக்
கடைப்பிடித்தார்.
நல்ல நிலைகளைச் செயல்படுத்தினார்.
உயர்ந்த நிலைகள்
பெற வேண்டும் என்று எண்ணினார். எல்லோரும் நல்லவராக இருக்க வேண்டும் என்று எண்ணினார்.
ஆனால் ராகவேந்திர சுவாமிகள் தன் குடும்பத்தில் தன் மனைவியைத் துறந்து
அவரைச் சங்கடப்படுத்திவிட்டுச் சென்றார்.
புவியின் நிலைகள்
கொண்டு உயர்ந்த நிலைகளைச் செயல்படுத்தினாலும், மனைவியை விட்டுத் தான் தனித்துப் பெறவெண்டும் என்று சென்றார்.
அதாவது, மனைவியின்
சக்தியைத் தன்னுடன் இணைக்காத நிலைகள் கொண்டு தான் இறைவைனின் சக்தியைப் பெற்று சொர்க்கத்தை
அடைய வேண்டும் என்று எண்ணினாரே தவிர பக்தியின் மார்க்கத்தில் பிறரை எண்ணவில்லை.
இராகவேந்திர சுவாமிகள்
பக்தியின் நிலைகளில் அவர் தர்மத்தைப் பேசும் பொழுது அந்த ஞானியின் அருளைப் பெற வேண்டும்
என்ற உண்மையை எடுத்துரைத்தார். எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணினார்.
தன்னை அணுகி உள்ளவரை மறந்துவிட்டார்.
அதனுடைய நிலையை
அடைந்த அந்த ஆத்மா தான் முக்தி அடைய வேண்டுமென்று ஜாதக ரீதியில் தன் ஆயுளை நிர்ணயித்து
இந்தக் காலத்தில் என் உயிர் போய்விடும்.
அதற்குள் நான்
எண்ணிக் கொண்டிருக்கும் அந்த ஆண்டவனின் ராம நாமத்தைப் பாடி உடலின் தன்மையிலிருந்து
மெய் ஒளி பெறவேண்டும் என்று அவர் ஒரு குகைக்குள் அடங்கி உணர்வின் சக்தி கொண்டு மூடச்
செய்து மூச்சுத் திணறி அதாவது நோய்வாய்ப்படாமலேயே நான் சென்றுவிட்டால் இறைவனை அடைந்துவிடுவேன்
என்ற ஏக்கத்தில் அதே ஏக்கத்துடன் இந்த உயிராத்மா சமாதி அடைந்தது.
ஜீவ சமாதி என்று
அதற்குப் பெயர் வைத்தனர்.
ஆனால் மனைவியினுடைய
நிலையோ தன்னைவிட்டுச் சென்றுவிட்டாரே, நாங்கள் என்ன செய்வோம்?
என்று தவித்த நிலைகளில் அவர் அல்லல்படும் நிலைகளில் அவர் எண்ணிய நிலைகள்
கை கூடாதபடி அது இழுத்து வைத்துக் கொள்கின்றது.
இராகவேந்திர சுவாமிகள்
மெய் ஒளியைப் பெறவேண்டும் என்று எண்ணினார்.
எந்தக் கிருஷ்ண
பக்தியினுடைய நிலைகளில் கீதையைத் தனக்குள் வடித்துக் கொண்டாரோ அந்தப் பிரம்மத்தினுடைய
நிலைகளில் காயத்ரியினுடைய தன்மைகள் கொண்டு அதைப் பெறவேண்டுமென்று தான் எடுத்துக் கொண்ட
படைத்த உணர்வின் தன்மை கொண்டு அவர் உடலின் தன்மை சென்றாலும் அவருடைய ஆன்மா பல காலம்
திரிந்து மும்முடிவாரத்திலிருந்த பாலயோகீஸ்வரரின் உடலில் புகுந்தது.
அவருடைய உடலில்
ராகவேந்திர சுவாமிகளுடைய உணர்வுகள் பதியச் செய்யும் பொழுது பாலயோகியினுடைய உடலில் இருந்துதான்
இந்த உணர்வின் சக்தியை மெய் ஒளியைப் பெறமுடிந்தது.
ஒன்றுமறியாத பாலயோகியினுடைய
உடலிலிருந்து மெய் ஒளியைக் காணும் நிலைக்கு அவர் எடுத்துக்கொண்ட மெய் ஒளியின் தன்மை
கொண்டு எவ்வாறு ஜீவ சமாதி ஆனாரோ முன்னூறு ஆண்டுகளுக்குப் பின் அவருடைய உயிராத்மாவும்
சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து அழியா ஒளிச் சரீரம் அடைந்தது.