நான் (ஞானகுரு) சிரமப்பட்டேன்.
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரிடம் பல அனுபவங்களைப் பெற்றேன்.
1.தீமையான உணர்வுகளைப்
பார்க்கச் செய்வார்.
2.தீமை உன் உடலில் எப்படிச்
செயல்படுகின்றது என்று பார்…! என்பார்.
3.பின் தீமையை
நீக்கும் வழியைக் காண்பித்தார்.
4.எல்லாம் அறிந்து
தெரிந்து கொண்டேன்.
துருவ நட்சத்திரத்தின்
உணர்வுகளை எடுத்துச் சுவாசிக்கும் பொழுது அசுர உணர்வுகள் நமக்குள் புகாதவாறு அதை
மடியச் செய்கின்றது.
துருவ நட்சத்திரத்தின்
அருளைப் பெற்றுப் பழகுதல் வேண்டும். உங்களால் எளிதில் பெறமுடியும். இதற்குப் பிறகு
உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எடுத்துக் கொண்ட உணர்வுகள் உங்கள் உடலில் தீமையான உணர்ச்சிகள்
எப்படி இயங்குகிறது என்று உணர்ந்து தெரிந்து கொள்ள முடியும்.
உணர்ந்த உடனே அந்தத்
துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து உங்கள் இரத்த நாளங்களில் கலக்கச் செய்து அதை
மாற்றிக் கொள்ளும் சக்தி உங்களுக்கு வர வேண்டும்.
அந்தத் துருவ நட்சத்திரத்தின்
உணர்வைப் பெறும் அருள் வழியை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உங்களுக்குள் பதிவாக்குகின்றோம்.
இப்போது உதாரணமாக
செல்ஃபோன்களில் எதை எதை எல்லாம் பதிவு செய்கின்றோமோ அதை எல்லாம்
1.நம்மால் மீண்டும்
திருப்பியும் பார்க்க முடிகின்றது.
2.செல்ஃபோன்கள் மூலமாகச்
செய்திகளையும் மற்றவைகளையும்
3.இன்னொரு
இடத்திற்குச் செலுத்தவும் முடிகின்றது.
இதே போல சந்தர்ப்பத்தால்
நாம் கேட்ட உணர்வுகள் நம் எலும்புக்குள் இருக்கும் ஊனுக்குள் ஊழ் வினையாகப்
பதிவாக்குகின்றது.
அதிலே தீமை என்ற உணர்வு
பதிவானால் அதனின் இயக்கம் தனித்து இயங்காதபடி
1,அந்தத் துருவ
நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வைப் பெறவேண்டும் என்று எண்ணும் பொழுது
2.அதன் அருகிலேயே பதிவாகின்றது
- அதைக் காட்டிலும் வலுவானது துருவ நட்சத்திரம்.
3.நல்லவனாக வேண்டும்
நல்லது செய்ய வேண்டும். நல் வழியில் வரவேண்டும்.
4.உலகம் நலம் பெற
வேண்டும் என்ற உணர்வைப் பதிவாக்கினால் அதைச் சுற்றிப் பெரிய வட்டமாகி விடுகின்றது.
ஒரு குழம்பில் பல
பொருள்களைச் சேர்த்தாலும் அதில் எதை அதிகமாகச் சேர்க்கின்றோமோ அதன் சுவையே
கடைசியில் வருகின்றது. இதே போல
1.அருள் ஞானிகளின்
உணர்வுகளைக் கொண்டு
2.சிந்திக்கும்
உணர்வுகளை இதில் கலந்து விட்டால்
3.அதை நாம் கவர்ந்து…
உணர்ந்து… சிந்தித்துச் செயல்படும் தன்மை வருகின்றது…!