ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 20, 2018

“உப்புச் சத்து” அதிகமானால் உடல் உறுப்புகளில் ஏற்படும் மாற்றங்கள்

நோயை நீக்குவதற்காக மருந்தினை உட்கொள்கின்றோம். ஆனால் அந்த மருந்து உடலுக்குள் சென்று
1.நன்மை செய்ய வேண்டும் என்றால்
2.அந்த மருந்திற்கு வீரிய சக்தி ஊட்ட ஒரு விஷம் தேவை.

அதைப் போன்று தான் சுவை மிக்க உணவைப் படைக்க வேண்டும் என்றால் காரம் தேவை. தனி உப்பு கையிப்பாக இருப்பினும் உப்பைப் போட்டால் தான் உணவில் சுவை கூட்டுகின்றது.

ஆகவே நல்லது நல்லதுமல்ல. கெட்டது கெட்டதுமல்ல. நல்லவை கெட்டவையாகின்றது கெட்டது நல்லதாகின்றது.

ஒரு பொருளுக்குள் உப்பும் காரமும் இணைக்கப்படவில்லை என்றால் நல்ல நிலை கொண்டதாக இருந்தாலும் அதில் சுவை இழந்து விடுகின்றது.

ஆகவே உப்பையும் காரத்தையும் அதற்குண்டான மற்ற மட்டலான பொருள்களையும் இணைக்கும் போது அந்த உமட்டலை மாற்றி சுவையை ஊட்டுகின்றது.

 தனியாகச் சீரகத்தைக் காய்ச்சிச் சாப்பிட்டால் மட்டலைக் கொடுக்கும். அதையே ரசத்திலோ குழம்பிலோ சேர்த்து உட்கொள்ளும் போது
1..ம் இரத்தத்தில்  கலந்துள்ள தீமைகளைப் பிரித்துத்
2.தீமைகளை அகற்றும் சக்தியாக வளருகின்றது.
3.சீர் + அகம் = சீரகம் நம்மைச் சீராக்கும் தன்மை பெற்றது.

ஆனாலும் வெறும் சீரகத்தைத் தனித்து சாப்பிட்டால் உடலுக்குள் சேராது அதை வெளியே தள்ளி விடுகின்றது. உணவில் அதிகரித்துவிட்டால் நல்ல பொருளைத் தனக்குள் சேர்க்காது செய்து விடுகின்றது.

அதே போல உப்பினை அதிகமாகச் சேர்த்தாலும் உமட்டலை ஊட்டி விடுகின்றது. சுவையற்றதாக்கி விடுகின்றது. சாப்பாட்டில் தனி உப்பை அதிகரித்து விட்டால்
1.இரத்தங்களில் உப்புச் சத்து அதிகமாகக் கலந்து
2.எலும்புகளில் ஊடுருவி எலும்பை வளர்ச்சி அற்றதாக வலுவிழக்கச் செய்து விடுகின்றது.
3.ஈரல் போன்ற உள் உறுப்புகளிலும் இது அதிகரித்து விடுகிறது.

உப்பை அதிகமாகச் சாப்பிடுவோரைப்  பார்த்தால் நுரையீரலில் உப்பு அதிகரித்து அடுத்து மூச்சுத் திணறலில் கொண்டு போய் விடும்.
1.மூச்சுத் திணல் உள்ளவர்கள் உப்பைக் குறைத்து விட்டால்
2.மூச்சுத் திணறல் தன்னிச்சையாகக் குறையும்.
3..உப்பை அதிகமாகச் சாப்பிடுவோருக்கு இந்த நிலை வரும்.

சுவையைக் கூட்டுவதற்காகவும் உணர்ச்சிகளை ஊட்டுவதற்காகவும் தைப் போன்று சேர்க்கும் பொழுது இயற்கையின் நிலைகள் மாற்றங்கள் உடலுக்குள் எப்படி...? என்பதை நாம் றிந்து கொள்தல் வேண்டும்.

ஒரு மனிதர் மேல் வெறுப்படைந்தால் அவரைப் பார்க்கும்போது வெறுக்கும் உணர்வுகளையே நமக்குள் ஊட்டுகிறது. இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் தப்புவதற்கு
1.அருள் ஞானிகளின் உணர்வை நமக்குள் இணைத்து விட்டால்
2.நம் நல்ல குணங்களைச் சமப்படுத்துகிறது
3.தீமைகளைத் தனக்குள் வளர்ச்சி அடையாமல் காக்கிறது.
4..சுவை மிக்க உணர்வுகளாக நமக்குள் உருவாக்குகிறது.
இது தான் “கல்யாணராமா” என்பது.

ஆனால் வெறுப்பாகிப் பகைமை நமக்குள் வளர்ந்து விட்டால் நம் நல்ல உணர்வுகளும் பகைமை உணர்வும் ஒன்றோடொன்று போர் செய்யும் போது மன நிலை குறைகின்றது.

உடலில் உள்ள நல்ல அணுக்களுக்கு ஆகாரம் கிடைப்பதில்லை. மனக் குழப்பமும் வேதனை என்ற உணர்வும் ஒன்றோடு ஒன்று போர் செய்யும் போது மின்னலைப் போன்று வேலை செய்யும்.

ரு நட்சத்திரத்தின் சத்து மற்றொரு நட்சத்திரத்தோடு ஒன்றோடு ஒன்று மோதும் போது பளீர்..” என்ற நிலைகள் மின்னலாக உருவாகின்றது.

இதே போல நாம் எடுக்கும் உணர்வுகள் ஒன்றோடொன்று மோதும் போது இரத்தத்துடன் கலந்து அணுக்களின் தன்மையில் சேரும் போது தீமையான உணர்வுகள் ஏற்படும்.

அப்பொழுது கெட்ட அணுக்கள் நல்ல அணுக்களுடன் சேரும் போது பளீரென்று மின்னும்.

 உணர்வின் வேகங்கள் ஊடுருவி நமக்குள் இருதய வாயில்களில் அது ஊடுருவி நுண்ணிய நரம்புகளில் வேதனைப்படச் செய்து வேதனையை உருவாக்கும்.

மின்னல் தாக்கியது போல நம் சிந்தனையின் நிலைகள் துடிப்பதும்.. சிந்திக்கும் உணர்வுகளைச் செயலற்றதாக்கும் நிலைகளெல்லாம் நமக்குள்  உருவாகி விடுகின்றன. இது இயற்கையின் நிலைகள்.

அருள் ஞானியின் உணர்வை நமக்குள் சேர்த்துக் கொண்டால் நமக்குள் பகைமை வளராது இவை அனைத்தும் சமப்படும். அந்த நிலை பெறுவதற்குத்தான் காலையில் துருவ தியானம் எடுக்க வேண்டும் என்று சொல்வது.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை எடுத்து அதை உடலுக்குள் வினையாக்கி கணங்களுக்கு அதிபதியாக்க வேண்டும்.

நமது வாழ்க்கையில் எப்போது தீமைகளைப் பார்க்கின்றோமோ தீமையான செயலைக் கேட்கின்றோமோ அப்போதெல்லாம் இந்த உணர்வுகள் நமக்குள் வராது தடுக்க உடனே மகரிஷிகளின் உணர்வை நமக்குள் எடுத்து சமப்படுத்திப் பழக வேண்டும்.

இது பழக்கத்திற்கு வந்து விட்டால்
1.உண்மையான தியானம் இது தான்
2.உண்மையான விரதம் இது தான்
3.உடலான சிவனுக்குச் செய்ய வேண்டிய சேவையும் அது தான்.
4.உயிரான ஈசனுக்குச் செய்ய வேண்டிய அபிஷேக ஆராதனையும் அது தான்.
5.நமக்குள் இருக்கின்ற உயர்ந்த குணங்களுக்கு நைவேத்தியமும் இது தான்

ஆகவே உயர்ந்த ஞானியின் உணர்வுகளை ஒவ்வொரு நாளும் நிமிடமும் நம் உடலை உருவாக்கிய எல்லா அணுக்களுக்கும் கொடுக்கும் போது எல்லாம் ஒருக்கிணைந்த நிலையில் பேரானந்தப் பெரு மகிழ்ச்சி பெறுவது என்பதும் இது தான்.