ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

Showing posts with label உங்களால் முடியும் - நம்புங்கள். Show all posts
Showing posts with label உங்களால் முடியும் - நம்புங்கள். Show all posts

May 24, 2024

ஆண்டவன் வந்து நமக்குச் செய்து தருவதல்ல… நாம் தான் முயற்சி செய்ய வேண்டும்

ஆண்டவன் வந்து நமக்குச் செய்து தருவதல்ல… நாம் தான் முயற்சி செய்ய வேண்டும்

 

இருட்டில் உள்ள பொழுது வெளிச்சத்தைக் கண்டவுடன் மகிழ்கின்றோம். வெயிலில் உள்ள பொழுது நாம் நிழலுக்கு ஏங்குகின்றோம்.

ஆனால் இந்த நிலை பெற்ற பிறகு உண்மையின் நிலையிலேயே உள்ளோமா…? தன்னிச்சைப்படி இந்த வழித் தொடரின் வாழ்க்கையில் தான் உழன்று கொண்டுள்ளோம்.

அதே போல் நம் வாழ்க்கையில் பல நிலைகளை நம் உடலினுள் கூட்டிக் கொண்டுள்ளோம். இந்த நிலையை மாற்றி நம் ஒளியைக் காண முயல்கின்றோமா…?

கண்ணாடியின் தூசியை அகற்றித் தெளிவாக உருவைக் காணுகின்றோம்.
1.இந்த உடலில் உள்ள அசுத்த அலைகளையும் தீய எண்ணங்களையும் மாற்றி
2.நம்மின் உண்மை அழகைக் காண முயல்கின்றோமா…?

நம்மிடமுள்ள அசுத்த அலைகளை அகற்ற நாம் விழையாமல் “ஆண்டவன் வந்து தானாக அகற்றுவான்...! என்று ஆண்டவனை வேண்டி... அக அழகு காண முயல்கிறோம்...”

ஒரு செம்பில் உள்ள நீரில் அதற்கு மேன்மேலும் நல்ல நீர் ஊற்றும் பொழுது நல்ல நீரும் அசுத்த நீரும் கலந்து வெளிப்பட்ட பிறகு தானாக அனைத்தும் நல்ல நீராகி விடுகின்றது.

அதைப் போல் நம்மில் உள்ள தீய அணுக்களை நாம் எடுக்கும் நல் உணர்வின் ஈர்ப்பினால்... மேன்மேலும் சேமிக்கப்படும் நல் உணர்வான அமில குணங்கள் அதிகப்படப்பட... இந்தத் தீய அணுக்கள் பல ரூபத்திலும் வெளிப்பட்டுவிடும்.

1.நம் உடலில் இரத்த நாளங்களில் ஆக்ரோஷமான ஆவி ஆத்மா ஏறியிருந்தாலும்
2.தீய அமில குணங்கள் வெளிப்படும் பொழுது
3.அதன் குண அமிலத்திற்குகந்த ஆகாரம் கிடைக்காத தன்மையில்
4.அதன் பாதிப்பான குணத் தூண்டுதலும் நம்மை ஒன்றும் செய்திடாது.

இந்நிலையை உணர்த்தும் தத்துவ ஞானத்தை உணர்ந்து இந்த ஆத்மாக்கள் உயர்ந்தால் தான் சக்தி நிலை கூடும்.

உலக சக்தியும்... அண்டசராசரங்கள் என்று உணர்த்துகின்றனரே... அந்த அனைத்துச் சக்தியையும் உணர்த்த வல்ல சக்தி இந்த உலக ஆத்மாக்களுக்குத் தான் உண்டு.

மனித ஆத்மாவினால் முடியாத சக்தி எச்சக்திக்குமில்லை...!

இதை உணர்த்தும் நிலை இந்த உலகம் நம் பூமியின் நிலை கூடிக் கொண்டேயுள்ளது. உலகச் சுழற்சியில் பல அமில சக்திகளை நம் உலகம் ஈர்த்துக் கொண்டே சுழன்றுள்ள நிலையில் உலகின் உள் நிலையில் உள்ள பல அமிலங்கள் வெளிப்பட்டு விட்டது.

1.இயற்கையாக வெளிப்பட்டது மட்டுமின்றி
2.மனிதனால் பூமியிலுள்ள பல பொக்கிஷத்தை ஈர்த்து எடுத்ததினால்
3.மேல் பாகம் கனத்தும் உள் நிலை வலுவிழந்தும் உள்ள நம் பூமியின் நிலை
4.இந்தக் குறுகிய காலப் போக்கில் தன் நிலையைத் தானாக ஒழுங்குபடுத்தும் நிலை வருகின்றது.

அப்பொழுது நம் நிலை எல்லாம் என்னவாகும்..? என்பதனை உணர்ந்து இந்த உடல் என்ற கோளத்தை நம் நிலைக்குகந்த அமிலங்களைச் சேமித்து நம் உயிராத்மாவிற்கு ஊட்டம் தந்து ஆத்ம ஞானம் பெறும் அறிவின் பொக்கிஷத்தின் வழித் தொடரை உருவாக்குங்கள்.

April 27, 2024

“பிறருக்காக… பிறருக்காக…!” என்று சொல்லி நம்மையே நாம் ஏமாற்றிக் கொண்டுள்ளோம்

“பிறருக்காக… பிறருக்காக…!” என்று சொல்லி நம்மையே நாம் ஏமாற்றிக் கொண்டுள்ளோம்

 

நாம் உண்ணும் உணவை எல்லாம் நம் உடல்… உடலுக்கு ஏற்ற சத்தை மட்டும் ஏற்றுக் கொண்டு மற்றவற்றை எல்லாம் கழிவுப் பொருளாக ஆக்கிவிடுகின்றது.

1.நம் உடல் அமைப்பையே ஆண்டவன் இந்நிலையில் அளித்திருக்கும் பொழுது
2.நம் ஆத்மாவிற்கு நாம் இன்னும் எத்தனை பெரும் தெய்வீக நிலையை ஏற்றுத் தர வேண்டுமப்பா..!

நம்மைச் சுற்றிப் பல பல காரியங்களும் நல்லெண்ணம் உடையவர்களும் தீய எண்ணம் உடையவர்களும் எல்லாம் தான் கலந்துள்ளன.

நம்முள் இருக்கும் பல கோடி அணுக்களின் உந்துதலுக்கு நாம் ஆளாகாமல் நம் சுவாச நிலையில் நம் ஆத்மாவுக்கு வேண்டிய நல்ல நிலையைத்தான் நாம் பெற வேண்டுமப்பா…!

நம் உடல் அமைப்பை ஆண்டவன் இந்நிலையில் அளித்திருக்கும் பொழுது நம் ஆத்மாவிற்கு நாம் தானப்பா பெரும் பொக்கிஷத்தைத் தேடி வைத்திட வேண்டும்.

இன்றைய பெரும் பகுதி மனிதர்கள் உள்ளோன்று வைத்து வெளியிலே ஒன்று பேசுபவர்களாகவும் பிறருக்காக… பிறர் மெச்சத் தான் வாழ வேண்டும் என்ற எண்ணம் உடையவர்களாகவும் தான் நாம் பார்க்கின்றோமப்பா..!
1.பிறருக்காக வாழ்பவரும்
2.பிறர் பார்த்துப் புகழ வேண்டும் என்ற எண்ணத்தில் வாழ்பவரும்
3.பிறரைத் துவேஷிப்பவரும்
4.பிறரைப் புகழ்பவரும் எல்லோருமே
5.தன் ஆத்மாவை மறந்துவிடுகின்றார்களப்பா…!

இன்றைய உலகில் உள்ள நற்காரியங்கள் செய்பவர்களும் புகழ்ச்சிக்கு ஏங்கித்தான் செய்கிறார்களப்பா…!
1.புகழ்ச்சிக்கு ஏங்கிச் செய்யும் நற்காரியங்களும்
2.ஆத்மாவிற்கு ஒரு நன்மையும் செய்வதில்லையப்பா…!

பசித்து வருபவனுக்குப் பசி அறிந்து அன்னமிட்டாலும் இந்தக் காலத்தில் அதையும் ஏமாற்றிப் பிழைக்கத்தான் பார்க்கின்றார்களப்பா…! நல்லவர்களையும் நல்லவர்களாக வாழவிடுவதில்லையப்பா இன்றைய உலகம்.

இன்றைய உலகிலிருந்து மீண்டு வருவதுவே நம் ஆத்மாவிற்குத் தேடித் தரும் பொக்கிஷமப்பா…!

January 28, 2024

நான் யார்…? என்ற புதிருக்கு “விடை”

1.பல பல பிறவிகளில் நாம் செய்த நிலைகள் அனைத்தும் செய்வினையாகி (PAST)
2.அதனுடைய செயல் தொடராக இந்தப் பிறவியில் செய்கின்ற (தற்சமயம் நிகழ்ந்து கொண்டிருக்கும் – PRESENT) வினைப் பயனாகி
3.மீண்டும் செய்த வினையாகின்ற எண்ணத்தின் வழிச் செயலுக்கு வித்தாகும் (FUTURE) “இவனே…!”
4.ஏற்கனவே செய்யப்பட்ட முன் ஜென்ம வினையான உரத்தை ஈர்த்து
5.வினையினது இரு வழிச் செயலான நல்வினை தீவினை இரண்டின் பயன் வீரியப் பயனுக்கு
6.அந்தத் தொடரில் இவனும் உட்பட்டு இரண்டின் பலன்களையும் அனுபவிக்கும் நிலை வருகின்றது.

தீமையோ நன்மையோ எந்த வினையின் வீரியம் அதிகமாகின்றதோ அதற்குள் மற்றொன்று உள்ளடங்கி விடுகின்றது. அப்படி நடக்கும் செயலைத் “தன் விதி” என்னும் செயல்பாடாக
1.செய்த வினையின் வீட்டில் (முன் பிறவிப் பயனால் உருவான உடலில்)
2.செய்யப்பட்ட வினை வந்து இருந்து தன் அரசைத் தான் ஓச்சி
3.தனது செயலுக்கு இவனின் எண்ண உந்துதல்களுக்குத் துணையாகி
4.இன்ப துன்பங்களை ஒவ்வொரு நாளும் அனுபவிக்கச் செய்கின்றது.

மூலமும் இவனே ஆகின்றான்…! மூலக் காரணமும் இவனே ஆகின்றான்…! என்னும் தத்துவக் கோட்பாட்டின் தொடரில் நல்லது கெட்டதன் காரணத்தை ஆராயப் புகும் இவன்
1.தன் எண்ணச் செயலின் நிகழ்வு வழிக் கொள்கைகளைப் புரிந்து கொண்டான் என்றால்
2.நான் என்பது யார்…? என்ற புதிருக்கும்…
3.உயிரா…? ஆன்மாவா…? எண்ணமா…? என்றெல்லாம் சிந்திக்கச் செய்யும்
4.சுழல்கின்ற அணுவின் (உயிரணு) சுழலோட்ட எண்ணத்தின் வினைப் பயனைக் கண்டுணரலாம்.
5.மதி கொண்டு தெளிவு பெற்று உயர் ஞானம் பெறும் செயலுக்கெல்லாம் வழி உணர்ந்திடலாம்
6.அந்த வழியில் நல்வினைப் பயனுக்குச் சக்தி ஊட்டி… சக்தி பெற்று
7.ஆதி சக்தியால் (இயற்கை) கலப்பான தீவினையான எண்ணப் பயன் களையத் தலைப்பட்டு
8.அதைத் தொடர்ந்து வரும் செய்யப்பட்ட வினையின் (இப்பொழுது செய்து கொண்டிருக்கும்) நற்செயலின் செயலுக்கே உரமாக்கிடலாம்.

ஆகவே இந்த ஜென்மத் தொடரில் தொடர்ந்து செய்யப்படுகின்ற வினையின் செயலை
1.நற் செயலாக்கினால்
2.நல் சுவாசத்தால் ஈர்த்துக் கொண்டால்
3.அவ்வாறு அமைக்கும் அதே தொடரில் - செய்த வினைப் பயனை நல் வினையின் வளர்ப்பாக ஆக்க முடியும்.

சந்தர்ப்பத்தால் வரும் தீவினைப் பயன்களை எல்லாம் களைவதற்குத் தியான முறையாக வான இயல் வழியைக் (விண் செல்லும் மார்க்கம்) கண்டு அதன் வழியில் செல்லச் செல்ல அனைத்தும் ஒன்றான நல்வினைப் பயனாக்கிடலாம்.

இத்தகைய விதிகளை எல்லாம் செயல்படுத்துகின்ற காரண காரிய கர்த்தாவான மூலமும் “இவனே ஆவான்…!”

November 27, 2023

நான் உங்களைக் காப்பாற்றுவேன் என்று “நீங்கள் எண்ணினால் அது தப்பு…”

ஞானிகள் காட்டிய அருள் வழியில் இந்த வாழ்க்கையில் மன வலிமையை நாம் எப்படிக் கொண்டு வருதல் வேண்டும்…?
1.அருளைப் பெறும் அருள் சக்தி பெற வேண்டும் என்ற மன வலிமை பெற்றால்
2.சிந்தித்துச் செயல்படும் வலிமையாக இயக்கச் செய்யும்.
3.நம்மைக் காக்கும் உணர்வுகளும் வளரும்.

திரும்பத் திரும்ப இந்த உபதேசத்தின் வாயிலாக ஞானிகளின் உணர்வுகளை உங்களுக்குள் பதிவாக்கிய பின் அதை நினைவு கொண்டால் சிந்தித்துச் செயல்படும் ஞானம் உங்களுக்குள் வர வேண்டும்.

உங்களைக் காக்க உங்கள் நினைவு தான் வர வேண்டுமே தவிர “நான் காப்பாற்றுவேன்…” என்று எண்ணத்தை நீங்கள் எண்ணினால்
1.தனக்குள் அந்த உயர்ந்த சக்திகளை எடுக்கும் தகுதியை
2.நீங்கள் இழந்து விடுகின்றீர்கள் என்று தான் அர்த்தம்.

இன்றைய உலகில் விஞ்ஞான அறிவால் கடும் விளைவுகள் வருகின்றது. இந்த விளைவில் இருந்து நாம் தப்ப வேண்டும்.

உங்களுக்குள் உபதேசித்த உணர்வின்படி அருளை நீங்கள் பெருக்கிக் கொண்டால் தீமை நீக்கும் சக்தி பெறுகின்றீர்கள் அதைப் பெருக்கக் கூடிய ஞானம் உங்களுக்கு வர வேண்டும்.

அந்த ஞானம் உங்களுக்குள் வரவேண்டும் என்றால் இந்த உபதேசத்தின் வாயிலாக யாம் உங்களுக்குள் அந்த அருள் உணர்ச்சிகளைத் தூண்டி உங்களை அதன் வழியில் சுவாசிக்கச் செய்கின்றோம்.
1.சுவாசிக்கும் பொழுது உங்கள் இரத்தங்களில் புது விதமான உணர்ச்சிகளின் ஓட்டங்கள் இருக்கும்
2.அந்த உணர்வுகள் பல நிலைகள் பல கலவைகள் ஆகின்றது.
3.சிந்திக்கும் ஆற்றலைப் பெருக்கும் அத்தகைய கருத் தன்மை உங்கள் இரத்தத்தில் உருப்பெறுகின்றது

இதை வளர்த்துக் கொண்டே வந்தால் அந்த அருள் ஞானத்தை கொண்டு உங்கள் வாழ்க்கையைச் சீர்படுத்திக் கொள்ள உங்கள் எண்ணம் உதவும்.

அத்தகைய அணுக்கள் உடலில் உருவாகிவிட்டால் இந்த உணர்வின் தன்மை நுகரும் போது உயிரில் படுகின்றது சிந்திக்கும் ஆற்றல் வருகின்றது நல்ல உணர்வுகளை நுகரும்படிச் செய்கின்றது. நல்ல அணுக்கள் உங்கள் உடலில் பெருகத் தொடங்குகிறது அருளைப் பெருக்குகின்றது அருள் உணர்வுகள் நமக்குள் பெருகுகின்றது.

1.இந்த உடலுக்குப் பின் அந்த ஞானியின் அருள் வட்டத்திலே செல்கின்றோம்
2.”எந்த ஞானி இருளை நீக்கினானோ” அவன் ஈர்ப்பு வட்டத்திற்கு… துருவ நட்சத்திரத்துடன் நாம் செல்ல முடிகின்றது.

இது தான் நமது கடைசி எல்லை உயிர் ஒளியானது… அந்த உயிரோடு ஒன்றி ஒளியின் தன்மை நாம் பெற வேண்டும்

ஆனால் நான் (ஞானகுரு) சாமியாராக இருக்கின்றேன்… உங்களைக் காப்பாற்றுவேன் என்று நீங்கள் நினைத்தீர்கள் என்றால் அது தப்பு. சாமி சொன்ன உணர்வின் தன்மையைப் பெற்றால் நாம் நுகர்ந்த உணர்வு நம்மைக் காக்கும் என்று எண்ணினால் அது தான் சரி.

ஏனென்றால் பல கோடிச் சரீரங்களில் எல்லா வகையான தீமைகளிலிருந்தும் தப்பிக்கும் உணர்வு பெற்று இந்த மனித உடலை உருவாக்கியது நம் உயிர்.

உயிர் மனித உடலை உருவககிய பின் பல கோடித் தீமைகளையும் வென்று உணர்வை ஒளியாக மாற்றியவன் அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக ஆனது.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நீங்கள் பெற வேண்டும் என்று
1.குருநாதர் காட்டி அருள் வழியில் எனக்கு அனுபவபூர்வமாகக் கொடுத்ததை உங்களுக்குள் பதிவாக்கி நினைவாக்கும்படி செய்கின்றேன்
2.உங்களை காக்க அந்த அருள் ஞானம் கிடைக்கும்.
3.இருளை நீக்கிடும் ஞானிகளாக நீங்கள் உருவாக முடியும்

July 1, 2023

உங்கள் வாழ்க்கையில் வரக்கூடிய துன்பத்தை “எண்ணிய நேரத்திலே” மாற்ற முடியும்

மற்றவர்கள் சிரமப்படுவதைக் கண்டு அவர்கள் மீது இரக்கப்பட்டு நீங்கள் உதவி செய்கிறீர்கள். ஆனாலும் அவர்கள் பட்ட வேதனை உங்களை அறியாமல் உங்களுக்குள் புகுந்து வாட்டி வதைக்கின்றது.

அதை மாற்றி… உங்களைக் காத்துக் கொள்வதற்கு ஞானிகள் உணர்வினை இந்த உபதேசத்தின் வாயிலாக உங்களுக்குள் நிரப்புகின்றோம். அதை நீங்கள் பெருக்கிக் கொண்டு அந்த ஞானிகள் காட்டும் வழியில் செயல்பட்டீர்கள் என்றால் அந்த உணர்வு உங்களைக் காக்க உதவும்.

நான் (ஞானகுரு) ஒன்றும் உங்களைக் காப்பாற்ற முடியாது…!

1.குரு வழியில் நான் அதைப் பெற்றேன்…
2.எடுத்து எனக்குள் வளர்த்தேன்… என் துன்பத்தைப் போக்க முடிந்தது
3.மகரிஷிகளின் அருள் சக்திகளை என்னால் எளிதில் பெற முடிகின்றது
4.உங்களுக்குள் அதைப் பாய்ச்ச முடிகின்றது.

ஆகவே அந்த அருள் ஞானத்தைக் கொடுக்கின்றேன் நீங்கள் வளர்த்துக் கொண்டால் தான் அந்தப் பலனைப் பெற முடியும். ஞான வித்தை உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்… அதற்குண்டான நீரை ஊற்றினால் தான் ஞானிகள் உணர்வு உங்களுக்குள் விளையத் தொடங்கும். மற்ற யாரும் செய்து தர முடியாது.

எந்த ஞானியாக இருந்தாலும் யோகியாக இருந்தாலும்
1.நம்முடன் கலந்து உறவாடி அந்த உணர்வின் தன்மை கொண்டு அந்த இணைப்பு இருந்தால்தான் சொல்லி…
2.உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்களை விண்ணுக்குச் செலுத்தவும் முடியும்… நாமும் அங்கு செல்ல முடியும்
4.அப்படி இணைப்பில்லாதவர்கள் ஒன்றும் செய்ய முடியாது.

நாம் எடுத்துக் கொண்ட உயர்ந்த உணர்வு மெய் ஒளியின் சுடரைக் கொண்டு “சிறு துளி பெரு வெள்ளம்…” என்று அந்த ஆற்றல்மிக்க சக்தியைக் கூட்டி அதை வளர்த்து அந்த எண்ணத்தின் தன்மை கொண்டு தான் நாம் எதனையும் செயல்படுத்த முடியும்.

நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்தவர்கள் “யாராக இருந்தாலும் சரி…” நம் குருநாதர் காட்டிய வழியிலே அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் அந்த ஆன்மாக்கள் இணைய வேண்டும் என்று அந்தந்த வீட்டாருடன் சேர்ந்து செயல்படுத்தினோம் என்றால் அவர்களை விண் செலுத்த முடியும்.

இன்னொரு உடல் பெறும் உணர்வுகளை அங்கே கரைத்து விட்டு ஞானிகளின் அருள் வித்தின் தன்மையை விளைய வைக்க முடியும்.

சப்தரிஷி மண்டலத்திலிருந்து வரக்கூடிய ஆற்றல் மிகுந்த சக்திகளை
1.நீங்கள் பெற வேண்டும் என்று யாம் எப்படிச் செய்தோமோ இந்த உணர்வின் தன்மை கொண்டு
2.உங்கள் எண்ணத்தை அங்கே மீண்டும் செலுத்தினால் தான் உங்கள் நினைவலைகள் அங்கே செல்லும்.

அது அல்லாதபடி… என் பிள்ளை “இப்படி இருக்கின்றானே… இப்படி இருக்கின்றானே…” என்று பிள்ளையைப் பற்றியே எண்ணிக் கொண்டிருந்தால் இங்கே நோயாகி இறந்த பின் அவன் உடலுக்குள் சென்று அவனை இன்னும் கொஞ்சம் நாசமாக்கத் தான் முடியும். நான் நாசமானேன்.. அவனும் நாசமானான்…! என்ற நிலை தான் வரும்.

வேதனையுடன் இறந்தால் இதே உணர்வின் தன்மை தான் அங்கேயும் தோன்றும்.

நான் ஒருவனுக்கு உதவி செய்தேன்…! ஆனால் பதிலுக்கு அவன் இடைஞ்சல் செய்தான் என்றால் “பாவிப் பயல்… நான் நல்லது செய்தேன் எனக்கு இப்படிச் செய்தானே… இப்படிச் செய்தானே…!” என்று எண்ணிக் கொண்டிருந்தால் போதும்.

கடைசியில் உடலை விட்டுச் செல்லும் பொழுது அவன் நினைப்பு தான் வரும். இதே உணர்வு கொண்டு அந்த உடலுக்குள் புகுந்து இந்த வேதனையை அங்கே விளைய வைத்து அவனையும் வாழ விடாது விஷத்தையே மீண்டும் எடுத்து வளர்த்துப் பல உடல்களுக்குள் சென்று தொல்லைகளைக் கொடுத்து விஷ ஜந்துக்களாகத்தான் பிறக்க முடியும்.

விஷ ஜெந்துக்களாகப் பிறந்தாலும் மனிதன் கையில் சிக்கி அடிபட்டு
1.அவனுடைய உணர்வைக் கவர்ந்தால் தான் மீண்டும் மனிதனாக வர முடியும்
2.அதற்கு எத்தனை ஆண்டுகள் ஆகும் என்று சொல்ல முடியாது…!
3.அது வரையிலும் எடுத்த வேதனையை அனுபவித்துக் கொண்டு தான் இருக்க வேண்டும்

ஆகவே எந்தச் சந்தர்ப்பத்திலும் இந்த உடலை விட்டு நாம் சென்ற பின் மெய் வழியின் தன்மை கொண்டு மெய் ஒளியின் தன்மை பெற்று அங்கே சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும்.

விஞ்ஞான உலகில் படர்ந்து கொண்டிருக்கும் நஞ்சின் தன்மையிலிருந்து உங்களை மீட்டிக் கொள்வதற்கு இது உதவும்.

உங்களுக்கு இதிலே கஷ்டம் ஒன்றுமில்லை… நஷ்டமும் இல்லை. பக்தியிலே எப்படி நல்லதை நினைக்கின்றீர்களோ அதைப் போல் “ஞானிகளின் அருள் சக்திகளை எண்ணி எடுத்து… எனக்குள் அதை வளர்ப்பேன்…” என்று செயல்படுத்துவதே தியானம்.

1.மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுவேன்
2.என் சொல்லுக்குள் இனிமை பெறுவேன்
3.என் பேச்சு மூச்சும் நன்மை பெறும்
4.நான் பார்ப்பதெல்லாம் நல்லதாக இருக்கும்
5.நான் செய்வதெல்லாம் நல்லதாக இருக்கும் என்று
6.இதை எண்ணி வளர்த்துக் கொள்ளச் செய்யும் இந்தத் தியானம் உங்களுக்குக் கெட்டதா…?

ஆகவே ஞானிகள் காட்டிய அருள் வழியிலே நாம் சென்று பழகுதல் வேண்டும்.

குருநாதர் எனக்கு எப்படி வாழ்க்கையில் வந்த விஷத்தின் தன்மையை மாற்றுவதற்கு… ஞானிகள் உணர்வுகளை என் நல்ல உணர்வுடன் கூட்டச் செய்து அருள் உணர்வுகளைப் பெருக்கச் செய்தாரோ… எனக்குள் வரக்கூடிய துன்பத்தைத் துடைக்க எதைச் சொன்னாரோ… அவர் கற்றுக் கொடுத்ததைத் தான் உங்களுக்கும் உணர்த்துகின்றோம்.

அதன் வழி கடைப்பிடித்தால்…
1.உங்கள் வாழ்க்கையில் வரக்கூடிய துன்பத்தை
2.“எண்ணிய நேரத்திலே” அதை மாற்ற முடியும்… தெளிவு பெறும் தன்மையும் வரும்.

அந்த விண்ணின் ஆற்றலைப் பெறக்கூடிய தகுதி நீங்கள் பெற வேண்டும் என்று ஆசையிலேயே சொல்கின்றேன்.
1.அதைப் பெற வேண்டும்… அந்த மெய் ஒளி பெற வேண்டும் என்ற
2.அதே ஆசையில் நீங்களும் இருந்தால் இது சீக்கிரம் உங்களுக்குக் கை கூடும்.

அவ்வாறு நீங்கள் அதைப் பெற வேண்டும் என்று எல்லா மகரிஷிகளையும் வேண்டிக் கொள்கின்றேன்.

April 1, 2023

“நான் உங்களைக் காப்பாற்றுகிறேன்…!” என்று சொன்னால் அது உங்களை ஏமாற்றுவதாகத்தான் அர்த்தம்

உயிரணு தோன்றிய பின் பூமிக்குள் வந்து உடல் பெற்ற பின்
1.நுகர்ந்த உணர்வுகள் அதற்குள் எண்ணங்களாக எப்படி இயக்குகிறது என்றும்…?
2.அதன் படி இந்த உலகம் எப்படி இயங்குகிறது என்றும்…? மனித உடல் எப்படி இயங்குகிறது…? என்றும்
3.உயிர் என்ற நிலை வரும் பொழுது மனிதன் எப்படி உருவானான்…? என்ற நிலையினையும்
4.ஐக்கிய உணர்வு கொண்டு மனிதன் தன்னைத்தான் அறிந்து எப்படி வாழ வேண்டும்…? என்றும்
5.அன்றே நமக்குக் வழி வகுத்துக் கொடுத்தது தான் இராமாயணமும் மகாபாரதமும்

அன்றாட வாழ்க்கையில் காலையிலிருந்டு இரவு வரை அந்தந்தச் சந்த்ரப்பத்திற்கொப்ப நாம் நுகர்ந்த உணர்வுகள் ஒன்றுடன் ஒன்று மோதுகின்றது… ஒன்றை ஒன்று வென்றிடும் நிலை வருகின்றது…!

நாம் நுகர்ந்த உணர்வுகள் உடலுக்குள் எப்படிப் போர் செய்கின்றதோ இதைப் போன்று ஆசையின் நிமித்தம் ஒவ்வொரு உடலும் தான் வாழ எத்தனையோ போர் செய்கின்றது.

அத்தகைய போர் நிலையில் ஒரு குணத்தை எடுத்தால் தர்மத்தையும் நியாயத்தையும் பார்ப்பதில்லை… அப்படிப்பட்டவனைச் சத்திரியன் என்று சொல்கின்றார்கள்.
1.ஒன்று அது மற்றொன்றை அடிமைப்படுத்தும் உணர்வுகளை அதுவே வளர்ச்சி என்ற நிலையில்
2.எந்த உணர்வின் தன்மை வருகின்றதோ… சத்திரியத்தின் தர்மத்தின் தன்மை கொண்டு அங்கே உருவாகின்றது.

அதே சமயத்தில் நாம் நுகர்ந்த உணர்வுகளுக்குள் எதை அடக்க வேண்டும் எதை நினைக்கின்றோமோ… அதை அடக்க வேண்டும் என்று எண்ணிச் செயல்படுத்தினால் அந்த உணர்வுகள் தனக்குள் பிரம்மம் ஆகி விடுகின்றது.

அந்த எண்ணத்தின் தன்மை எவர் கொள்கின்றனரோ அது பிரம்மத்தின் தன்மை அடைந்து அதன் உணர்வுக்கு ஒப்ப உடலின் தன்மையாகத் தன் வாழ்க்கையின் நிலைகளை எவ்வாறு மாற்றி அமைக்க முடியும் என்று தெளிவாகக் கூறுகிறது நம் சாஸ்திரங்கள்.

அதை எல்லாம் நாம் மறந்து விட்டோம்…! நம்மை நாம் இழந்து… நமக்குள் இருக்கும் சக்திகளை அறியாது…
1.எவனோ செய்வான் எவரோ செய்வார் என்ற நிலையும்
2.ஆண்டவன் எங்கோ இருக்கின்றான்… இறைவன் எங்கோ இருக்கின்றான்…
3.ஈசன் எங்கேயோ இருக்கின்றான்… சிவன் எங்கேயோ இருக்கின்றான்… என்று
4.நம்மை அலையவிட்டு ஆண்டவனைத் தேடிக் கொண்டிருக்கும்படி செய்து விட்டனர்.

அதே சமயத்தில் ஆசையின் நிமித்தம் செல்வத்தைத் தேடவும்… இந்த உடலில் இச்சைகளைப் பெறவும்… அரசர்கள் சுகபோகம் என்று ஆசையை ஊட்டி அதை வளர்த்து விட்டனர்.

ஞானிகள் உருவாக்கிய ஆலயங்களின் தத்துவங்களைத் திரிபு செய்து
1.தன் ஆசையை நிறைவேற்ற இந்தத் தெய்வத்தை வணங்கினால்
2.உனக்குச் செல்வம் வரும் என்றும் மாற்றிவிட்டனர்.

ஆனால்… அப்படி ஆசையின் உணர்வுகள் வளரப்படும் பொழுது தான் எண்ணியது தடைப்பட்டால் வேதனையாகின்றது. வேதனைகள் அதிகமானால் “வெறி கொண்டு… தான் எப்படியும் வாழ வேண்டும் என்ற ஆசையில் திருடு கொலை கொள்ளைகளை உருவாக்கி விட்டனர்…”

இத்தகைய நிலைகள் அரசனால் உருவாக்கப்பட்டு அதன் வழி வழி வளர்ந்து நம்மை அறியாது பெரும் தவறின் வழிகளுக்கே அழைத்துச் செல்லும் சக்தியாக இன்று அது பெருகி விட்டது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் மீள்தல் வேண்டும். இந்த உடலுக்குப் பின் நாம் பிறவியில்லா நிலை அடைய வேண்டும்.

நஞ்சினை வென்றிடும் மின்னணுக்களை அகஸ்தியன் நுகர்ந்து உணர்வுகள் அனைத்தையும் உயிருடன் ஒன்றிய ஒளியின் கதிராக அவன் எவ்வாறு மாற்றினானோ அதைப் போன்று நாமும்…
1.அந்த அகஸ்தியன் நுகர்ந்த மின்கதிர்களை எடுப்போம் என்றால்
2.இந்த உலகில் வரும் விஷத்தின் தன்மைகளை அடக்கி ஒளியாக ஆக்க முடியும்.

இரு நட்சத்திரங்களின் கதிரியக்கங்கள் மோதும் பொழுது மின்னலாகப் பாய்கிறது.
1.அந்த ஒளிக் கதிர்களை அகஸ்தியன் வழியில் எடுத்தால்…
2.(அதாவது) மறைமுகமாக எடுத்து உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்கு இரையாகக் கொடுத்தால்
3.நஞ்சை வென்றிடும் சக்திகளை நிச்சயம் பெறுவோம்.

ஆகவே அகஸ்தியன் எப்படித் துருவ நட்சத்திரமாக ஆனானோ… அதனின்று வரும் பேரருள் உணர்வுகளைச் சிறுகச் சிறுக உங்களுக்குள் பெறச் செய்வதற்குத் தான் “இந்த உணர்வை ஊட்டி… உங்கள் நினைவை அங்கே அழைத்துச் சென்று… அந்த உணர்வை நுகரும்படி செய்கின்றோம்…”

அதை நீங்கள் எடுத்துக் கொண்டால் உங்கள் உடலில் அது இந்திரீகமாக மாறி அதே உணர்வுகள் அணுவாக விளையத் தொடங்கும். விளைந்த பின் அது தன் இரைக்காக உணர்ச்சிகளை உந்தும் போது துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைக் கவரும் தன்மையாக வரும்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை இப்படிக் கவரும் போது… அறிவின் தன்மையாக இருளை நீக்கும் எண்ணங்கள் வந்து… உங்கள் வாழ்க்கையைச் சீர்படுத்த அது உதவும் என்று தெளிவாகக் கூறுகின்றோம் (ஞானகுரு).

ஆனால் உங்களுக்காக இதை யாரும் செயல்படுத்த மாட்டார்கள்…
1.நீங்கள் நுகர்ந்த உணர்வுகள் உங்களுக்குள் விளைந்து
2.அது தான் உங்களைக் காக்குமே தவிர வேறு யாரும் காக்கப் போவதில்லை.

“நான் உங்களைக் காப்பாற்றுகிறேன்…!” என்று சொன்னால் அது ஏமாற்றுவதாகத்தான் இருக்க முடியும். என் மேல் நீங்கள் பற்று கொள்ளும் போது உங்களிடம் இருந்து நான் வாங்கிக் கொள்ள முடியும். என்னை மதிக்கச் செய்து அதன் வழிகளிலே… அதன் மறைவிலே… நான் வாழத்தான் முடியும்… உங்களை ஏமாற்றி வாழலாம்.

ஆனால் நீங்கள் வாழ வேண்டும் அந்த உயர்ந்த உணர்வைப் பெற வேண்டும் என்ற இந்த இச்சையில்தான் குருநாதர் இட்ட கட்டளைப்படிதான் அருள் சேவையாக இதைச் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றேன்.

ஆகவே அந்த அகஸ்திய மாமகரிஷியின் அருள் சக்தியைப் பெறுவோம் அருள் வழியைப் பெறுவோம். இருளை அகற்றிடும் அருள் சக்தியை அனைவரையும் பெறச் செய்வோம்.

December 9, 2022

அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக ஆனான்.. ஏன் நாம் ஆக முடியாதா...?

வான் வீதியிலே ஜீவ அணுக்கள் உருவாகி இருக்கிறது... நிறைய இருக்கின்றது என்று சுமார் 40 வருடங்களுக்கு முன்பே சொல்லி இருந்தேன் (ஞானகுரு).

பூமிக்குள் வரும் பொழுது அது எதன் எதன் வழிகளில் எந்தெந்த நட்சத்திரத்தின் நிலைகளில்,,, அதன் உணர்வின் தன்மை மோதப்பட்டதோ வியாழன் கோளுக்குள் வரும்பொழுது ஜீவனுள்ள அணுவின் தன்மையாக மாறுகின்றது.

இன்று விஞ்ஞானிகளும் சொல்கின்றார்கள் வான் வீதியில் வைரஸ் என்ற அணுக்கள் இருக்கிறது... அங்கே ஜீவிக்க முடியும் என்று.

ஆனால் தாவர இனங்கள் இல்லாது மேலே (வான்வீதியில் மற்ற மண்டலங்களில்) வாழ முடியாது.

1.எல்லாக் கோள்களிலும் “வைரஸ்கள்...” அந்த அணுக்களுக்குள் இருக்கத்தான் செய்கின்றது.
2.அங்கிருக்கக்கூடிய உணர்வுகளை எடுத்தாலும் மாற்றிடும் உடலின் நிலைகள் இல்லை... உடல் பருமனம் இல்லை.
3.விஷ அணுக்களின் தன்மை வைரஸ்களாக மாறுமே தவிர உடல் அமைப்புகள் இல்லை.

காற்று மண்டலமாக மாறும் தன்மை... திடப்பொருளாக உருவாகும் தன்மை... சில கோள்களில் தான் உயிரணுக்கள் தோன்றி மடிகின்றது... தோன்றி மீண்டும் மடிகிறது. சிறிது காலம் இருக்கும். எந்த மண்ணை எடுத்ததோ வளர்கிறது... மீண்டும் மடிகிறது.

1.பூமி ஒன்றிலே தான் தாவர இனங்கள் இருப்பதனால் அதன் வழி கொண்டு
2.உயிரணுக்கள் அந்தச் சத்தினைக் கவர்ந்து ஒவ்வொரு உணர்வும் உணர்ச்சி கொண்டு
3.தாவர இனத்திற்கு ஒப்ப எண்ணங்களாகி உணர்வின் சத்தை எடுத்து உடலுக்கொப்ப அணுக்களும் வருகின்றது

இதையெல்லாம் இன்று விஞ்ஞான அறிவு கண்டு கொண்டு தான் உள்ளார்கள். இந்தப் பூமியை விடுத்து “மற்ற மண்டலங்களுக்குச் சென்று அங்கே வாழலாம்...” என்று செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால் ஞானிகள் காட்டிய வழியில் செல்லும் நிலைகள் இல்லை. உடல் பற்றே வருகின்றது. சொர்க்கலோகமாக இருக்கும் இந்த மனித உடலிலிருந்து என்றுமே அழியாத நிலை பெற முயற்சிக்கவில்லை.

ஏனென்றால்
1.சொர்க்கத்தை அடையும் தகுதி பெற்றது தான் இந்த மனித உடல்.
2.கார்த்திகேயா... என்று ஆறாவது அறிவின் துணை கொண்டு உயிருடன் ஒன்றி என்றும் ஒளியின் உடல் பெறுவது தான் சொர்க்கம் என்பது.
3.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்புக்குள் (நாம்) செல்லப்படும் பொழுது என்றும் ஒளியின் உடலாக மாறுகின்றது

இந்தச் சூரியக் குடும்பத்திற்குள் பிறந்தது தான் உயிரணு. அந்த உயிரணு பல கோடிச் சரீரங்களில் வளர்ச்சியாகி... மனிதனாக ஆன பின் உயிருடன் ஒன்றி ஒளியாக மாற்றிச் சென்றது தான் அந்தத் துருவ நட்சத்திரம்.

1.சூரியனிலிருந்து வரக்கூடிய விபத்துக்களோ அல்லது விபரீதங்களோ...
2.இந்தப் பிரபஞ்சத்தில் வரக்கூடிய மற்ற எதுவாக இருந்தாலும்
3.துருவ நட்சத்திரம் அந்த விஷங்களை எல்லாம் மாற்றித் தன்னைச் சீர்படுத்தி ஒளியாக மாற்றிக் கொள்ளும் திறன் பெற்றது.

அது எப்படி அந்த நிலை பெற்றது...?

இந்த மனித உடலில் இருந்து தான் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமாக ஆனது.
1.இந்தப் பூமியில் தோன்றிய மனிதர்களில் விண் சென்ற முதல் மனிதன் அகஸ்தியன்
2.துருவத்தில் நிலை கொண்டு “அவன் தான் துருவ நட்சத்திரமாக உள்ளான்...”

நம்மைப் போன்ற மனிதன் தான் அகஸ்தியன்... அவன் துருவ நட்சத்திரமாக ஆனான். ஏன்... நாம் ஆக முடியாதா...?

March 22, 2022

தியானம் செய்யக்கூடிய அனைவருமே முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டியது

 

1.சில நேரங்களில் கஷ்டங்களோ உடல் உபாதைகளோ வந்தால்
2.நாம் சரியான முறையில் தியானம் எடுத்து வந்தால்
3.அந்தக் கஷ்டத்தை மாற்றுவதற்குண்டான ஞானமும்... அதை எப்படி வழி நடத்த வேண்டும் என்ற உபாயமும்... வரும்.

சங்கடங்கள் வரப்படும் பொழுது ஈஸ்வரா...! என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானிக்க வேண்டும்.

பின்... துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்... எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

அப்போது சலனம் சஞ்சலம் சங்கடம் இதையெல்லாம் நீக்கிவிட்டு
1.எது உண்மையோ அதை உணர்ந்து
2.அதற்குத் தக்க நம்முடைய எண்ணங்களைச் சீராக்குவதும்... நல்ல செயல்களைச் செயல்படுத்தவும் முடியும்.

உடல் உபாதை உற்றவரைப் பார்க்கும் பொழுது முதலிலே ஆத்ம சுத்தி செய்ய வேண்டும். அது சிறு குழந்தையாக இருந்தாலும்... தன்னால் வெளியிலே சொல்ல முடியவில்லை என்றாலும்
1.எலக்ட்ரிக் எலகட்ரானிக் என்ற உணர்வின் தன்மை கொண்டு
2.நாம் பாய்ச்சும் மகரிஷிகளின் அருள் சக்தி அந்தக் குழந்தை உடலில் ஊடுருவி அங்கே இயக்கச் சக்தியாக மாற்றும்.

“முடியவில்லை...” என்பவர்களுக்கு இருதயத் துடிப்பு நின்றாலும் கூட இதே மாதிரி ஆத்ம சுத்தி செய்துவிட்டு அந்த இருதயத்திற்கு மேல்... “கை வைத்தோம்...” என்றால் அந்தத் துடிப்பு மீண்டும் வருவதற்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது.

ஆனால் மிகவும் பழுதாகி விட்டால் ஒன்றும் செய்ய முடியாது. திடீரென்று எதிர்பாராதபடி சில நிலைகள் வந்திருந்தால் அதை மீண்டும் இயக்க வைக்க முடியும்.

இருதயத்திலிருந்து வரக்கூடிய நிலைகளால் அங்கே துடிப்பிலே ஏதாவது சிறிது பிசகானால் இருதயத்திற்கு மேல் கையை வைத்தவுடனே இயங்கிவிடும்.

ஆனால் இருதயத்தை இயக்கக்கூடிய சிறுமூளையில் உள்ள நுண்ணிய நரம்புகளில் பழுதாகி அதனால் இருதயம் சரியாக இயங்கவில்லை என்றால் அது ஒன்றும் செய்ய முடியாது.

ஆகவே
1.இதைப் போல ஒவ்வொரு சந்தர்ப்பமும்... ஒவ்வொரு நோய்க்கும்... ஒவ்வொரு விதமாக இருக்கும்.
2.இருந்தாலும் நாம் எடுக்க வேண்டியது அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளைத் தான்.

அதைப் பெற வேண்டுமென்று வலுவான நிலையில் எண்ணி நமது பார்வையைச் செலுத்தி அதே உணர்வுடன் நம் கையைக் குழந்தையின் உடலில் வைத்தால் அதை எழுப்ப முடியும்.

ஆக... சிறு குழந்தையால் எண்ண முடியாது... அதனால் சொல்ல முடியாது... சொன்னால் கேட்க முடியாது...! என்று இருந்தாலும் கூட உடலில் கையை வைத்தோம் என்றால் அங்கே வேலை செய்யும்.

உதாரணமாக... நாம் வேலை செய்யும் இடத்தில் ஆபீஸர் நம் மீது கோபப்பட்டு... நமமைக் குறை சொல்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.
1.அந்தக் குறை நமக்குள் வராதபடி ஆத்மசுத்தி செய்து விட்டு
2.அவர் சிந்தித்துச் செயல்படும் ஆற்றலும் நம் மீது அவருக்கு நல்ல எண்ணங்கள் வர வேண்டும் என்றும் எண்ணினால்
3.இந்த உணர்வு அங்கே ஊடுருவும்.

ஆனால் நாம் தவறு செய்துவிட்டு ஆபீஸர் நமக்குச் சாதகமாக வரவேண்டும் என்று சொன்னால் அது நடக்காத காரியம்.

நமக்குள் தப்பு இல்லாத நிலையைப் பார்த்துக் கொள்ள வேண்டும். தவறு செய்துவிட்டு தவறுக்குச் சரியான மார்க் கொடுக்க வேண்டும் என்று சொன்னால் அது தவறான நிலைகள்.

ஆகவே உண்மை என்று தெரிந்தால் ஆத்ம சுத்தி செய்து விட்டு
1.அவர் என் பால் நல்ல உணர்வை உணர்ந்து
2.அந்த உண்மையின் இயக்கத்திற்கொப்ப எனக்கு உதவி செய்ய வேண்டும் என்று எண்ணினால் நிச்சயம் அது நல்லதாகும்.

இதை எல்லாம் ஒரு பழக்கமாக எடுத்துக் கொண்டால் நம்முடைய மன உறுதியும் நாம் எடுக்கும் அருள் உணர்வும் தீமையிலிருந்து விடுபடக் கூடிய சக்தியாக நமக்குள் வருகின்றது...!

ஒவ்வொருவருக்கும் இது போன்ற சந்தர்ப்பங்கள் உண்டு. இந்தத் தியானத்தை எடுத்துக் கொண்டவர்கள் மன உறுதி கொண்டு செயல்படுத்தினால் மாற்றி அமைக்க முடியும். உங்களை நீங்கள் நம்புங்கள்.

January 17, 2022

“சாமி செய்து தருவார்…” என்ற எண்ணத்தை வளர்த்தால் உங்களுக்கு அதிலே ஏமாற்றம் தான் வரும்

 

நம்மை ஒருவர் திட்டினால் அதைக் கூர்ந்து கவனிக்கின்றோம். அடுத்தாற்போல் அதே செயலில் நாமும் இயங்க ஆரம்பித்து விடுகின்றோம்.

அது போன்று யாம் (ஞானகுரு) இங்கே உபதேசிக்கும் போது யார் ஒருவர் இதைக் கூர்ந்து கவனிக்கின்றீர்களோ
1.சாமி சொன்ன வழிகளில் நாம் போக வேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால்
2.அந்த உணர்வுகள் உங்களுக்குள் வருகின்றது.

கீதையிலே சொன்னது போல் நீ எதை நினைக்கிறாயோ அதுவாகின்றாய்... மூஷிகவாகனா...! எதை நினைக்கின்றீர்களோ அதையே நீங்கள் சுவாசிக்கின்றீர்கள்.

அப்படி அந்த ஞானிகளை நினைப்பதற்குண்டான ஆற்றலையும் அதை நீங்கள் பெறுவதற்கும் அதைச் சுவாசிக்க கூடிய நிலைகளுக்கும் சந்தர்ப்பத்தை உருவாக்கும் நிகழ்ச்சி தான் தியானம்.

அந்த முறைப்படி நினைக்கப்படும் பொழுது மெய் ஞானிகள் காட்டிய வழிகளிலே அங்கே போகலாம்.
1.சாமி செய்து கொடுப்பார் என்று எண்ணினால் ஏமாந்து தான் போக வேண்டும்.
2.சாமி பெரிய மகான்...! அவர் கொடுக்கின்றார் பிரசாதம் கொடுக்கின்றார்... அது கொடுக்கின்றார்... என்று எண்ணிக் கொண்டிருந்தால்
3.உங்களை நீங்களே ஏமாற்றிக் கொண்டிருக்கின்றீர்கள் என்று தான் அர்த்தம்.

இயற்கையின் உண்மை இதுதான் என்று உங்களுக்குள் அருள் உணர்வின் வித்தாகக் கொடுக்கப்பட்டிருக்கின்றது. அந்த விதைக்கு நீரூற்றி வளர்க்க வேண்டியது “உங்களுடைய பொறுப்பு…”

குருநாதர் எனக்கு அந்த அருள் வித்தைக் கொடுத்தார்… அதற்கு வேண்டிய பக்குவத்தைச் சொன்னார்… எடுத்துக் கொண்டேன். அதன்படி விளைய வைத்த வித்தின் தன்மையை உங்களுக்குள் கொடுக்கப்படும்போது அதை நீங்கள் வளர்த்துக் கொள்ளுங்கள் என்று தான் சொல்கின்றேன்.

“சாமி கொடுப்பார்...” என்று கோவிலில் தெய்வத்திடம் சென்று வரம் வாங்கிக் கொடு...! என்று கேட்பது போன்று கேட்டுக் கொண்டிருக்க வேண்டியதில்லை.

சாமி பெரிய சக்தி வாய்ந்தவர்…! என்ற எண்ணத்தில் தலைவலி என்னை விட்டே போக மாட்டேன் என்கிறது… முழங்கால் வலி போகவே மாட்டேன் என்கிறது என்று சொல்லிக் கேட்கின்றார்கள்.

வலி நீங்கி நான் நன்றாக வேண்டும் என்று கேட்கச் சொல்கின்றேன். மீண்டும் தலை வலி விட மாட்டேன் என்கிறது… ஐந்தாறு மாதமாக விட மாட்டேன் என்கிறது… என்னென்னமோ வைத்தியம் பார்த்தேன் என்றே சொல்கிறார்கள்.

இப்போது என்ன வேண்டும்...? என்று கேட்டாலும் அது தான் வலி விட மாட்டேன் என்கிறது என்று மீண்டும் அதையே தான் கேட்கிறார்கள். ஏனென்றால் அந்த உணர்வுதான் நம்மைப் பேச வைக்கின்றது.

எத்தனை தடவை சொன்னாலும் கூட அதைத்தான் திருப்பிக் கேட்கின்றார்கள். ஏனென்றால் அந்த அளவிற்கு நமக்குள் பக்தியை வளர்த்து வைத்து விட்டார்கள்.

டாக்டரிடம் சென்று தலை வலி... இடுப்பு வலி மேல் வலி என்று சொல்கிறார்கள். அவர்கள் அதற்குண்டான மருந்தை கொடுத்து மற்ற எல்லாம் சொல்கின்றார்கள்.

டாக்டர் சொன்ன வழிப்படி செய்தால் தானே அந்த நோய் சரியாகும்.

ஊசியையும் போட்டு மருந்தையும் உட்கொண்ட பின் ருசியாக இருக்கிறது என்று டாக்டர் சாப்பிடக்கூடாது என்று சொன்னதைச் சாப்பிட்டால் என்ன ஆகும்...?

மீண்டும் கை கால் குடைச்சல் உடல் வலி வரத்தான் செய்யும்.

அதே போன்று இங்கே தியானத்தைச் சொல்லிக் கொடுத்து மெய் ஒளியின் தன்மையைப் பதிவு செய்கின்றோம். அதை எடுத்து உங்களுக்கு வரக்கூடிய தீமையைப் போக்கிக் கொள்ளுங்கள் என்று சொல்லும் போது அதை நீங்கள் செய்தால் தான் சரியாகும்.
1.உங்களை நீங்கள் நம்புங்கள் என்று தான் சொல்கிறேன்
2.நான் சரியாக்கித் தருகின்றேன் என்று சொல்ல வரவில்லை.

November 8, 2021

குருநாதர் சொல்கிறார்... என்னால் முடியவில்லையே...! என்ற நிலைக்கு நீங்கள் வரக்கூடாது

 

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் நாம் சுவாசிக்கும் உணர்வுகள் வினையாக (அணுக்களாக) உடலிலே எப்படிச் சேர்கின்றது...? வினைக்கு நாயகனாக நம் செயலை எல்லாம் எப்படி மாற்றுகின்றது...? என்று இந்த உணர்வின் எண்ணங்களை எல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்குத்தான் விளக்க உரைகளைக் கொடுத்துக் கொண்டு வருகின்றேன்.

ஆனால் இதை எல்லாம் கேட்டுவிட்டு
1.சாமி (ஞானகுரு) பிரமாதமாகச் சொல்லி விட்டார் என்ற எண்ணத்தில் வெறுமனே சென்று விடாதீர்கள்
2.ஒவ்வொன்றிலும் நீங்கள் அந்தத் தெளிவுக்கு வர வேண்டும்.

உபதேசத்தை எல்லாம் கேட்ட பின் “சாமி சொன்னார்...” நாம் இந்தத் தவறை எல்லாம் செய்யக் கூடாது என்று நினைப்பீர்கள். பிற்பாடு என்ன சொல்வீர்கள்...?

கடலில் பெருங்காயத்தைக் கொண்டு போய்க் கரைத்தால் சிறிது நேரம் கம...கம... என்று வாசனையாக இருக்கும். கடலுக்குள் பெருங்காயம் மறைந்தபின்... “ஐய்யய்யோ... வாசனையையே காணோம்...” என்று தான் சொல்ல முடியும்.

அதைப் போல இங்கே இந்த உபதேசத்தின் வாயிலாக
1.அந்த அருள் ஞானிகள் பெற்ற ஆற்றல்களை ஊழ்வினை என்று வித்தாக உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கிறேன்.
2.அந்த ஞானியின் உணர்வுகள் உங்களுக்குள் இயங்கக் கூடிய அனைத்தையும் திரும்பிப் பார்க்கச் செய்கிறது.
3.உங்கள் நிலைகளையும் அது என்ன...? என்று உணர்கிறீர்கள்.

ஆனாலும் சிறிது நேரம் சென்றபின் கடலுக்குள் இருக்கும் உப்பின் தன்மை பெருங்காயத்தின் நறுமணத்தை மறைத்து விடுவது போன்று ஆகிவிடுகிறது.

ஏன்...?

உங்கள் வாழ்க்கையில் இதற்கு முந்தி எடுத்துக் கொண்ட விருப்பு வெறுப்பு வேதனை ஆத்திரம் என்ற அந்தக் கைப்பின் (உப்பு) தன்மைகள் அதிகமாகி உண்மையின் நிலைகளைப் புரிந்து கொள்ளாத வண்ணம் அதைத் தடைப்படுத்தும் உணர்வுகளாக வந்துவிடுகிறது.

1.பின்... “சாமி சொல்கிறார்... என்னால் முடியவில்லையே.......!” என்ற இந்த நிலைதான் வரும்.
2.அதை எப்படியும் முடிய வைக்க வேண்டும் என்று நான் உபதேச வாயிலாக வலுப்படுத்துகிறேன்.

ஆனாலும் அதை நீங்கள் வலுப்படுத்திக் கொள்வதற்குப் பதிலாக என்ன சொல்வீர்கள்...?

1.சாமி...! எத்தனையோ நல்லதை எல்லாம் நீங்கள் சொன்னீர்கள்... கேட்டேன்.
2.நான் திருந்தி விடலாம் என்று நினைத்தேன்...
3.ஆனால் “என்னை விட மாட்டேன் என்கிறதே...!” என்று பெரும்பகுதியானோர் சொல்கின்றார்கள்.
4.செய்ய முடியவில்லையே... செய்ய முடியவில்லையே...! என்று தான் சொல்கிறார்கள்.

செய்ய முடியவில்லை என்று சொல்வதன் காரணம் என்ன...?

கடலில் கலக்கிய பெருங்காயம் போன்றுதான் நீங்கள் எண்ணும் உணர்வுகள் அமைந்து விடுகிறது.

அதாவது நமக்கு ஏதாவது வந்தால் உடனே கோவிலுக்குச் சென்று சாமிக்கு அபிஷேகம் ஆராதனை செய்ய வேண்டும். அதிலே மீறி விட்டால் ஜோசியரிடம் சென்று கேட்க வேண்டும். அவர்கள் விவரத்தைச் சொல்வார்கள். தப்பித்துக் கொண்டு வந்துவிடலாம்.

முருகனுக்கோ அல்லது மற்ற தெய்வங்களின் ஆலயத்திற்கோ சென்று சாந்தி செய்து விடு...! என்றும் அங்கே போ... இங்கே போ...! எல்லாம் சரியாகிவிடும்...! என்று சொல்வார்கள்.

உங்களுக்குப் பகைமைகள் நிறைய இருக்கின்றது. அது தீரவேண்டும் என்றால் மாரியம்மன் கோவிலுக்குச் சென்று இரண்டு மண்ணை வாரித் தூற்றிவிட்டு வந்து விட்டால் சரியாகிவிடும் என்று இப்படித்தான் ஆலோசனை சொல்கிறார்கள்.

ஆகையினால் நாம் எல்லோரும் என்ன செய்கிறோம்...? என்றால் சாமியார் செய்து தருவார்... சாமி செய்யும்.. ஜாதகம் செய்யும்... மந்திரம் செய்யும்... யாகம் செய்யும்...! என்று இப்படித்தான் சுற்றிக் கொண்டிருக்கின்றோமே தவிர
1.மனிதனான பின் தனக்குள் நாம் எண்ணியதைச் செயலாக்கும் சக்தி
2.”நம் உயிர் தான்...!” என்பதை மறந்தே இருக்கின்றோம்.

கோபத்தையும் வெறுப்பையும் வேதனையையும் மட்டும் அதிகமாக வளர்த்துக் கொள்கின்றோம். நல்லதை மட்டும் எண்ணவே முடியவில்லை...!

காரணம்... ஒரு விஷம் கொண்ட பொருளுக்குள் நல்ல பொருளைப் போட்டால் அந்த நல்ல பொருளும் ஒடுங்கிவிடுகின்றது.

விஷம் கொண்ட உலகமாக இருக்கும் பொழுது விஷம் கொண்ட இயக்கமாக இருக்கும் பொழுது இன்றைய மனிதனின் வாழ்க்கையில் அந்த உணர்வின் செயலாக்கமே நம் நல்ல உணர்வை அறியவிடாது தடைப்படுத்துகின்றது.

நல்ல உணர்வுகளை அறிய வேண்டும் என்றால் நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் யாம் கூறும் உபாயத்தைக் கடைப்பிடித்து
1.மகரிஷிகளின் அருள் உணர்வுகளை ஒவ்வொரு நிமிடமும் எடுத்துக் கொண்டால்
2.உங்கள் எண்ணம் உங்களைக் காக்கும்.
3.அடுத்து உங்களைப் பிறவியில்லா நிலையை நிச்சயம் அடைய முடியும்.
4.இந்த விஞ்ஞான உலகின் பேரழிவிலிருந்து உங்களைக் காத்துக் கொள்ள இது உதவும்.
5.உங்களை நீங்கள் நம்ப வேண்டும்.

May 11, 2020

இன்றைய சூழ்நிலையில் நிச்சயம் உங்களால் அழியா ஒளிச் சரீரம் பெற முடியும்…!


“ஞானிகளைப் பற்றிய முழு உண்மைகளையும் நீங்கள் கேட்க வேண்டுமென்றால்” வருடக்கணக்கில் அமர்ந்திருக்க வேண்டும் உங்களுக்குப் பொறுமை பத்தாது.

உணவு உட்கொள்ளாமல் உங்களால் இருக்க முடியாது. இருந்தாலும் அதை உங்களால் ஜீரணிக்க முடியாது.
1.ஆனால் எப்படியும் சுருங்கச் சொல்லி அதை எல்லாம் பதிவு செய்ய வேண்டும்
2.மகரிஷிகள் நினைவுகள் உங்களுக்குள் வர வேண்டும் என்பதற்கே தான் இதையெல்லாம் தொடர்ந்து சொல்கின்றேன் (ஞானகுரு)

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்குள் விண்ணின் ஆற்றலை எவ்வாறு பதிவு செய்தாரோ இது போல் உங்களிடமும் பதிவு செய்கின்றேன். அந்தப் பதிவை நீங்கள் எண்ணி மீண்டும் வளர்த்து வந்தால்
1.மனிதன் என்ற நிலைகள் முழுமை அடைந்து
2.உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரம் நிச்சயம் நீங்கள் பெற முடியும்.

ஏனென்றால்…
1.அறிவு இல்லை என்ற நிலைகளை எண்ண வேண்டாம்.
2.கற்கவில்லை என்று எண்ணவும் வேண்டாம்.
3.ஞானகுரு சொல்வதை எல்லாம் நாம் எப்பொழுது பெறப் போகின்றோம்…! என்ற ஏக்க நிலையும் வேண்டாம்.
4.பெற முடியும்…! என்ற ஏக்கத்தின் நிலைகள் வரும்போது
5.நிச்சயம் ஒவ்வொரு மனிதனும் இதைப் பெற முடியும்.

அதற்கேதான் இதை உங்களிடம் மீண்டும் மீண்டும் மீண்டும் சொல்வது.

ஏனென்றால் “பௌர்ணமி போன்று” பூரண நிலைகள் நாம் பெற முடியும். இருள் சூழ்ந்த சந்திரன் இன்று ஒளி கொண்டு பௌர்ணமியாக ஒளியின் சுடராக வீசுவது போல
1.ஒரு உயிர் கொண்ட உணர்வின் தன்மை
2.புழுவாக இருந்து பரிணாம வளர்ச்சியில் மனிதனாக வரும்போது
3.உலகை அறிந்திடும் உணர்வு பெற்ற… பூர்ண பௌர்ணமியாக
4.ஒளியின் உடலாகப் பூரண நிலையை ஒவ்வொருவரும் பெற முடியும்.

இருளை மாய்த்து உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக என்றும் ஒளியாக நிலை கொண்டிருக்கும் ஆறாவது அறிவு கொண்டு ஏழாவது நிலை பெற்றதுதான் “எண்ணிலடங்காத சப்தரிஷிகள்…” சப்தரிஷி மண்டலமாக இன்றும் இருக்கின்றார்கள்.

அந்தச் சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளியை நமக்குள் வலுக் கொண்டு எடுத்து உடலை விட்டு அகன்ற நமது குலதெய்வங்களான உயிராத்மாக்களை அங்கே அந்தச் சப்தரிஷி மண்டலங்களுடன் இணைத்து விண் செலுத்த வேண்டும்.

அவர்கள் எப்படி உடலைக் கருக்கினரோ அதைப் போன்று உடல் பெறும் உணர்வை மாய்த்துவிட்டு ஒளியின் தன்மையாக அடையச் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் அவர்களும் சப்தரிஷிகள்தான்.

உயிருடன் ஒன்றச் செய்து ஒளியின் சரீரமாக நிலை கொண்டு செயல்படுத்தும் நிலைகளில் முதலில் அவர்கள் ஆனார்கள் என்றால் அவர்களைத் தோடர்ந்து நாமும் இதைப்போல் அங்கே நிலை கொள்ள முடியும்.

ஆறாவது நிலையிலிருந்து ஏழாவது நிலையாக ஒளியாகப் பெற்றதுதான் சப்தரிஷி.

March 22, 2020

“நம்மைக் காக்கும் சக்தியை” நமக்குள் நாமே பெருக்கும் வழி


சர்க்கரையைத் தயாரிக்கும் போது கரும்பில் இருக்கக்கூடிய சாற்றில் இருக்கும் விஷத்தைப் பிரிப்பதற்கு கெமிக்கலைத் தான் போடுகின்றார்கள்.

1.அந்தக் கெமிக்கலை ஒரு துணியில் போட்டால் துணி வெந்து போகும்.
2.ஆனால் அதைத்தான் சர்க்கரையில் போட்டு நாம் சாப்பிடுகின்றோம்.
3.பார்ப்பதற்கு அழகாக (சீனி) இருக்கின்றது ருசியாகவும் இருக்கின்றது.

இப்படி அந்தக் கெமிக்கலைக் கலந்து அழுக்குகளை நீக்கினாலும் அது சிறிது சர்க்கரையுடன் கலந்துவிடுகின்றது. இப்படி விஞ்ஞான அறிவால் ஒரு பொருளைத் தெளிவாக்கினாலும் விஷத் தன்மை நம் உடலுக்குள் சேர்கின்றது.

1.குடிக்கும் நீரிலும் இதைப் போன்றே தூய்மைப்படுத்துகின்றார்கள்.
2.நாம் சமையலுக்கு உபயோகப்படுத்தும் எண்ணெய் வகைகளிலும் கெமிக்கலைப் பயன்படுத்துகின்றனர்.

எண்ணையிலுள்ள கொழுப்பு சத்து மற்றவைகளை எடுப்பதற்காக கெமிக்கலைப் போட்டுச் சுத்தப்படுத்துகின்றனர். ஆனால் அது வேண்டாதவைகளை எடுத்து விடுகின்றது.

அதே சமயத்தில் நம் உடலுக்குள் அந்தக் கெமிக்கல் கலந்த எண்ணை சென்றுவிடுகின்றது. நம் உடலுக்குள் சென்றவுடன் எல்லா அணுக்களிலும் சேர்ந்து விடுகின்றது.

இதைப் போன்ற கடும் விளைவுகள் வருவதனால் இதிலிருந்து தப்புதல் வேண்டும். ஆகையினால் இதை நாம் அந்த மகரிஷிகளின் உணர்வைப் பெற்று அந்த உணர்வுகளை நமக்குள் வளராது தடுத்துப் பழக வேண்டும்.

1.இன்று இந்தக் காற்று மண்டலத்தில் பல வகையிலும் படர்ந்து வரும் நச்சுத் தன்மையால்
2.இந்த விஞ்ஞான அறிவால் அஞ்ஞான வாழ்க்கை வாழ்ந்து
3.சிந்தித்துச் செயல்படும் திறன் எல்லோருக்கும் இழந்து விட்டது.

அதனால் திடீரென்று உணர்ச்சிவசப்படுவதும்… தவறு செய்யக்கூடிய  உணர்வுகளைத் தூண்டுவதும்… சிந்தனை இல்லாத செயல்களைச் செயல்படுத்தும் நிலைகள் வருகின்றது. (எல்லோருக்கும் இப்படித்தான்…!)

இதைப் போன்ற நிலைகள் வரப்படும் பொழுதுதான் போக்குவரத்துகளிலும் தொழில் செய்யும் இடங்களிலும் விபரீத விபத்துக்கள் ஏற்படுகின்றது.

மேலும்…
1.மனிதனுக்கு மனிதன் விபரீதச் செயல்களைச் செய்து (இன்றைய நிலை)
2.மனிதன் என்ற நிலை இல்லாதபடி இரக்கம் ஈகையற்ற நிலைகளில்
3.தாக்கிக் கொன்று கொண்டிருக்கும் உணர்வுகள் பெருகிவிடுகின்றது.

ஏனென்றால் ஒரு பொருளில் விஷம் பட்டால் அதை உட்கொண்டால் சிந்தனை சிதறிவிடுகின்றது. இதைப் போன்று விஷத் தன்மையை நமக்குள் அதிகமாகச் சேர்க்கச் சேர்க்க நம்மை அறியாமலே தவறு செய்யும் நிலைகளாக மாறுகின்றது… கடும் நோயாகவும் விளையும் தன்மை வருகின்றது.

இதைப் போன்ற கொடுமைகளிலிருந்தெல்லாம் நாம் மீள வேண்டும் என்றால் அதிகாலை துருவ தியானத்தை எப்படியோ நீங்கள் படுக்கையை விட்டு எழுந்தவுடனே எடுத்துத் தியானிக்க வேண்டும்.

தியானித்துவிட்டு…
1.மனைவிக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி கிடைக்க வேண்டும்
2.கணவனுக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி கிடைக்க வேண்டும்
3.குழந்தைகளுக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி கிடைக்க வேண்டும்
4.குடும்பத்தில் அனைவரும் அந்தச் சக்தி பெறவேண்டும் என்றும்
5.கட்டாயப்படுத்திச் செய்ய வேண்டும்.

குழந்தைகளையும் இவ்வாறு எண்ணும் பழக்கத்திற்குக் கொண்டு வர வேண்டும்.

ஒரு இரண்டு மூன்று நாளைக்கு அவர்களுக்குச் சொல்லிச் சொல்லி நீ மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறு… உடல் நலம் பெறுவாய்… உனக்கு நன்றாகப் படிப்பு வரும்… நல்ல ஞான சக்தி கிடைக்கும்…! என்று இது ஒரு பழக்கத்திற்கு வந்துவிட வேண்டும்.

காலை ஐந்து அல்லது ஐந்தரைக்குள் எழுந்து ஒரு பத்து நிமிடம் அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று தியானித்தால் போதும்.

இந்த மாதிரி எண்ணி எடுத்து அந்தச் சக்திகளைப் பெருக்கிப் பழக வேண்டும். நம்மைக் காக்கும் சக்தியை நமக்குள் நாமே பெருக்கும் பழக்கத்திற்கு வர வேண்டும்.

October 13, 2019

மறைக்கப்பட்ட... மறைந்த உண்மைகளை... வெளிப்படுத்தினாலும் இன்று ஏற்றுக் கொள்வாரில்லை...!


பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் நம் பூமியில் தோன்றிய அகஸ்தியன் தான் இன்றும் துருவ நட்சத்திரமாக இருக்கின்றான்.

நம் பிரபஞ்சம் மற்ற நிலைகளை எடுத்தாலும் உயிரணுவாகத் தோன்றிய பின் இந்த 27 நட்சத்திரத்தின் உணர்வுகளை உணவாக உட்கொண்டு அந்த உணர்வின் ஒளியாக மாற்றும் தன்மை வருகின்றது. மற்றதைக் கருக்கி விடுகின்றது.

நட்சத்திரங்கள் தன் உணர்வின் அலைகள் வரப்படும் போழுது மின் கதிர்களாக வரும் பொழுது எப்படி மாற்றுகின்றதோ இதைப் போல் தான் இந்த உயிரணுவின் தோற்றங்கள் இப்படி உருவாகித் துருவ நட்சத்திரமாக இருக்கின்றது.
1.உயிரணுவாகத் தோன்றி மனிதனாக ஆன பின்
2.கணவனும் மனைவியும் இரு உயிரும் ஒன்றாக ஆன பின் அந்தத் துருவ நட்சத்திரமாக மாறுகின்றது,

அதன் உணர்வை நுகர்ந்தவர்கள் அனைவரும் இந்த உடலை விட்டுச் சென்ற பின் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வாழ்கின்றார்கள். ஆறாவது அறிவு கொண்டவன் ஏழாவது ஒளி என்ற நிலையை அடைந்தால் சப்தரிஷியாகின்றது,

சிருஷ்டித்துக் கொண்ட உணர்வு அந்தச் சப்தரிஷி மண்டலங்களாகத் துருவ நட்சத்திரத்துடன் இயங்குகிறது. இது எல்லாம் மகாபாரதத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
1.காலத்தால் இதை எல்லாம் மறைத்து விட்டனர்.
2.இந்த உண்மைகளை எல்லாம் மறந்தே  போய்விட்டோம்.

அரசர்கள் தனக்குத் தெரிந்த இரகசியம் மற்றவருக்குத் தெரியக் கூடாது...! என்ற நிலையில் வேதங்களில் மாற்றப்பட்டு விட்டது.

இந்த உண்மையின் இயக்கங்களை மறைக்கப்பட்டு மறைந்த உணர்வுகளை நாம் எடுத்து உண்மைகளை நாம் தேடிக் கொண்டேயிருக்கின்றோம்... இன்னும் கிடைத்தபாடில்லை.

ஆனால் இப்பொழுது நீங்கள் தேடிக் கொள்ள வேண்டாம்..!

1.உங்கள் உடலுக்குள்ளேயே எல்லாச் சக்திகளும் உண்டு...!
2.இதை நீங்கள் எப்படி மாற்ற வேண்டும்...? என்று யாம் சொன்னாலும்
3.இப்பொழுது இதை ஏற்றுக் கொள்வாரில்லை.
4.ஏற்றுக் கொள்வதே மிகவும் கடினமாக இருக்கின்றது.

அந்த அகஸ்தியன் துருவனாகித் துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமான அதிலிருந்து வரக்கூடிய அந்தப் பேரருளை அந்த இயக்கச் சக்தியை இந்தத் துருவ தியானத்தில் உங்களுக்குள் உருவாக்கச் செய்து அதன் வழியில் இயங்கிப் பேரொளியாக மாற்றும் பருவத்தை ஏற்படுத்துகின்றோம்.

உயிர் எப்படி ஒளியானதோ உங்கள் உடலில் உள்ள அணுக்கள் அனைத்தும் ஒளிமயமாக மாறி அதற்கப்புறம் எத்தகைய தீமையும் தனக்குள் வராதபடி வேகா நிலை என்ற நிலையை அடைய முடியும்.

பேரருள் பேரொளியாக இயங்கிக் கொண்டிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் என்றுமே நாம் இணைந்து வாழக் கற்றுக் கொள்வது தான் இந்தத் துருவ தியானப் பயிற்சியின் நிலைகள்.

ஆகவே இதை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்து கொள்ளுங்கள்...!

இந்த உணர்வினை மீண்டும் மீண்டும் நினைவு கொண்டு இந்த வாழ்க்கையில் வரும் இருளை அகற்றி நாம் இனிப் பிறவியில்லா நிலைகள் அடைய வேண்டும் என்று இதை அடிப்படை ஆதாரமாக வைத்து உங்கள் வாழ்க்கையை வழி நடத்துங்கள்.

இந்த மனித வாழ்க்கையில் சலிப்போ சஞ்சலமோ வெறுப்போ பகைமை உணர்வோ இதைப் போன்ற நிலைகளை எல்லாம் மாற்றியமைத்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் பெறவேண்டும் என்று அதைப் பற்றுடன் பற்றுங்கள்.

1.இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளைக் கேட்டறிந்தாலும்
2.அந்த அருள் உணர்வுகள் அதனுடன் கலக்கப்படும் பொழுது அதன் வலிமையை இழக்கச் செய்து
3.நம் உடலில் நுகர்ந்த உணர்வுகளை ஒளியான அணுத் தன்மையாக மாற்றும் தன்மை பெற வேண்டும் என்பதற்குத் தான்
4.அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறுவதற்கு இந்தத் துருவ தியானத்தையே ஏற்படுத்துகின்றோம்.

ஏதோ துருவ தியானம் என்றால் நீங்கள் இலேசாக நினைக்கின்றீர்கள். ஏனென்றால் இந்த உடல் நீடித்த நாள் இல்லை... இருக்கப் போவதில்லை...! என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

அதற்குள் அருள் ஒளியை வளர்த்துக் கொள்ளுங்கள்... மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்து வாழும் தகுதியைப் பெறுங்கள். எமது அருளாசிகள்.

August 9, 2019

மற்றவர்கள் நம்மைப் போற்றிப் புகழ வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டால் “தவறுகள் கூடும்… நல்லவைகள் மறைந்துவிடும்..!”


குழந்தை பாக்கியம் இல்லை என்று எம்மிடம் (ஞானகுரு) ஆசீர்வாதமும் வாங்கிக் கொண்டு… குழந்தை கிடைத்த பின் பெருமையும் பட்டு.. அதன் பின் அவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா…?

எங்கள் வீட்டிற்கு வரவேண்டும் என்று கூப்பிட்டார்கள். கலசம் வைக்க வேண்டும் என்றார்கள். வைத்துக் கொடுத்தேன். அதற்கப்புறம் வாருங்கள் என்று சொன்னேன்.

ஒரு நாள் ஒரு பொழுது கூட இந்தப் பக்கம் வரவே இல்லை. அப்பொழுது எம்முடைய உபதேசம் எல்லாம் என்ன ஆகிறது…?

உங்கள் எண்ணங்கள்… உங்களுக்குள் அந்த உணர்வுகள்… எதை… எப்படிப் பதிவாக்குகிறது..? பதிவின் நிலைகள் எப்படி உங்களை இயக்குகிறது…? அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

அதனால் இந்த நிலைகள் “நான் செய்தேன்…!” என்று நீங்கள் எண்ண வேண்டாம்…!”
1.சாமி செய்தார்… என்றால் சாமியிடம் என்ன சக்தி இருக்கிறது…?
2.உங்கள் எண்ணத்தால் தான் அது உருவானது
3.உங்கள் எண்ணத்தின் உணர்வு கொண்டு உங்கள் உயிர் என்ன செய்கிறது..? என்று சொல்கிறோம்.
4.அதற்குண்டான ஒரு நல்ல கருவை… ஞானத்தைக் கொடுக்கின்றோம்.
5.அந்த ஞானத்தின் தொடர் கொண்டு நீங்கள் வளர்ந்து அதே வரிசையில் வரவேண்டும் அல்லவா…?

இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால்
1.மனம் ஒத்த நிலைகள் ஒத்து வரப்படும் பொழுது
2.நமக்குள் அந்த இணக்கங்கள் வந்து நல்வழியை உயர்த்தும்.

இதைத்தான் குருநாதர் “ஈஸ்வரபட்டர்” எமக்குச் சொன்னார்.

நீங்கள் எல்லோரும் என்னைப் போற்ற வேண்டும்…! என்று நான் நினைத்தேன் என்றால்
1.தவறுகள் கூடிக் கொண்டே தான் இருக்கும்.
2.நல்லவைகள் மறைந்து கொண்டு தான் இருக்கும்.

ஆகவே அனுபவரீதியில் இதைக் கொண்டு வருவதற்குத்தான் இதை எல்லாம் தெளிவாகவே சொல்லிக் கொண்டு வருகின்றோம். சிறிது பேராவது இதை உணர்ந்து கொண்டால் தெளிவாகும்.

நம் குடும்பத்தில் ஒருவருக்கு நோயாகின்றது. அவரைப் பாசத்துடன் உற்றுப் பார்க்கின்றோம். அவரிடமிருந்து வேதனைப்படும் சொல்கள் வெளி வருகின்றது.

வேதனையான சொல்களைக் கேட்டு அவர்கள் கஷ்டங்களை நாம் நுகர்ந்தால் அந்த நோய் நமக்கும் வந்துவிடுகிறது. அந்தச் சொல்கள் ஒன்று தான்,

அதே போல் நீங்கள் அருள் ஒளி பெற்று உங்களால் நன்றாக ஆகும் பொழுது
1.நல்லதாக ஆனது…! என்ற இதே சொல்லை நீங்கள் சொன்னீர்கள் என்றால்
2.உங்கள் சொல்லைக் கேட்கும் பொழுது மற்றவர்கள் தீமைகள் நீங்கும்.

ஞானிகள் கொடுத்த அரும்பெரும் சக்திகளை நான் விளம்பரம் செய்யாததன் நோக்கங்களே அது தான்..! ஏனென்றால்
1.ஆசையை ஊட்டிவிட்டோம்.. என்றால் அங்கே அறிவு இழக்கப்படுகின்றது.
2.எதைக் குறிக்கோளாக எண்ணி ஆசைப்பட்டு வருகின்றார்களோ அதுவே நிலைக்கின்றது.
3.அதன் நிலைக்கே வந்தவுடனே… அது கிடைத்த பின் தன்னைப் பாதுகாக்கும் சக்தி இழக்கின்றது.

சொல்வது அர்த்தமாகின்றதா…? ஆசைப்பட்டுத் தேடி வந்தது கிடைத்ததும் தங்களைப் பாதுகாக்க முடியாமல் போகின்றார்கள்.
1.அவர்களும் அருள் ஞானிகளின் அருள் சக்திகளை வளர்ப்பதில்லை.
2.மற்றவர்களுக்குப் பயன்படுவதும் இல்லை.

ஆரம்பத்திலிருந்து எத்தனையோ பேரை யாம் (ஞானகுரு) சந்தித்திருக்கின்றோம். அவர்களின் ஆசையின் உணர்வுகள் எப்படிப் போனது…? அதிலிருந்து எப்படி மீள வேண்டும்…? என்பதைத்தான் திரும்பவும் உங்களுக்குத் தெளிவாக்கிக் கொண்டு வருகின்றோம்.

நான் (ஞானகுரு) அந்த அருள் ஞானிகள் பெற்ற அழியாச் சொத்தைத்தான் எனக்குள் தேடி வைத்திருக்கின்றேன். அதிலிருந்து ஞானத்தின் உணர்வுகளைத்தான் உங்களுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கின்றேன்.

உங்களுக்குக் கோடிப் பணம் வாங்கித் தருகிறேன்.. உங்கள் நோயை எல்லாம் நீக்கித் தருவேன்… உங்கள் குறைகளை எல்லாம் நான் நீக்குவேன்…! என்று சொல்ல வரவில்லை.

1.அருள் ஞானத்தைப் பெற்றால்
2.உங்களைத் தேடி எல்லாமே வரும்.
உடலுக்குப் பின் ஒளியின் சரீரமாகி அழியாத நிலைகள் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் மகரிஷிகளுடன் நீங்கள் ஐக்கியமாகலாம்…!

August 8, 2019

“குழந்தைப் பாக்கியமே இல்லை…!” என்று வந்த ஒரு தம்பதிக்குக் குழந்தை பாக்கியம் கிடைத்த நடந்த உண்மை நிகழ்ச்சி


மதுரை வெங்கட்ராமன் வீட்டிற்கு நான் (ஞானகுரு) வரப்போகும் பொழுது இது நடந்த நிகழ்ச்சி. அவர்கள் வீட்டிற்கு அருகிலே அவர்கள் சொந்தக்காரர்கள் இருக்கின்றார்கள்.

அதிலே ஒரு கணவன் மனைவிக்குக் குழந்தை இல்லை என்று எம்மைச் சந்தித்து ஆசீர்வாதம் செய்த பின் அவர்களுக்குக் குழந்தை கிடைத்தது.

அந்தக் குழந்தைக்குப் பேர் வைக்க வேண்டும் என்ற நிலையில் மீண்டும் நான் வெங்கட்ராமன் வீட்டிற்கு வந்த சமயம் என்னைச் சந்திக்க வந்தார்கள்.

அந்த நேரத்தில் தேனி அல்லி நகரத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் அங்கே வருகின்றனர். அவர்களுக்கும் குழந்தை இல்லை. அது மட்டுமல்ல..! “குழந்தை பாக்கியமே இல்லை..” என்ற ஏக்கம். விபரம் கேட்கும் பொழுது
1.குழந்தை இல்லை என்று ஏற்கனவே நாங்கள் சாமியைச் சந்தித்தோம்
2.அவர் ஆசியால் எங்களுக்குக் குழந்தை கிடைத்தது.
சாமியிடம் சென்று இன்றைக்குத்தான் குழந்தைக்குப் பேர் வைக்கப் போகிறோம் என்று இவர்கள் சொல்கிறார்கள்.

அதைக் கேட்டதும் அல்லி நகரத்தில் இருந்து வந்தவர்களுக்கு ஆசை.

சாமியிடம் போனால் உங்களுக்கும் குழந்தை கிடைக்கும் என்றார்கள். அப்பொழுது இவர்கள் தன் குழந்தைக்குப் பேர் வைக்கும் பொழுது அல்லி நகரத்தைச் சேர்ந்தவர்களும் கூட வருகின்றார்கள் எம்மைச் சந்திக்க…!

1.இந்த உணர்வு வேகம் அலைகள் எப்படி வருகின்றது…! என்று சொல்கிறேன்.
2.அவர்கள் பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.
3.அதைக் கேட்டதும்… இந்தத் தம்பதியருக்குத் தங்களுக்கும் குழந்தை வேண்டும் என்ற அந்த உணர்ச்சிகள் வருகின்றது.

அந்த உணர்வைச் சுவாசித்ததும் என்ன நடக்கிறது…?
1.குழந்தை இல்லை என்று இவர்களுக்குக் கிடைத்தது.
2.குழந்தை கிடைத்த அந்த உணர்வை வாக்காலே சொல்லப்படும் பொழுது
3.அந்த ஒலி அலைகள் பட்டவுடன் உற்றுப் பார்த்து அந்த உணர்வுகளைச் சுவாசிக்கின்றனர்
4.அந்தக் கரு உருவாகும் பருவம் அப்பொழுது உருப் பெறுகின்றது.

இது நடந்த நிகழ்ச்சி…!

சாமி எங்களுக்கு எல்லாம் இருக்கிறது… நிறைய மருத்துவர்களையும் பார்த்து விட்டோம்.
1.எங்களுக்குப் புத்திர பாக்கியம் வேண்டும்…! என்று
2.அவர்கள் சொல்லிக் கொடுத்த மாதிரியே “வேண்டும்” என்று எம்மிடம் கேட்கிறார்கள்.
3.”இல்லை…!” என்ற அந்தக் குறையான சொல்லே அவர்கள் வாயிலிருந்து வரவில்லை.

மகரிஷிகளின் அருள் சக்தி கணவன் மனைவி இருவரும் பெறுவீர்கள்…! என்று ஆசீர்வாதம் கொடுத்தேன். பேர் வைக்கக் குழந்தையை எடுத்து வாருங்கள்..! என்று சொல்லி அனுப்பினேன்.

1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கணவன் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று மனைவியும்
2.மகரிஷிகளின் அருள் சக்தி மனைவி பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கணவனும் எண்ண வேண்டும்.
3.புத்திர பாக்கியம் பெறும் அணுக்கள் எங்கள் இருவருக்குள்ளும் ஓங்கி வளர வேண்டும் ஈஸ்வரா என்று
4.கணவன் மனைவி இரண்டு பேரும் ஒருவருக்கொருவர் நெற்றியைப் பார்த்து எண்ணுங்கள்..! என்று சொன்னேன்.

ஒரு ஒன்றரை வருடம் கழித்து மீண்டும் அந்தப் பக்கம் வந்தேன். அந்தக் கணவன் மனைவிக்குக் குழந்தைப் பாக்கியமே இல்லை என்று பரிசோதித்த டாக்டரும் அங்கே வந்திருந்தார்.

அந்த டாக்டர் என்னிடம் சில விபரங்கள் கேட்க வேண்டும் என்று வந்தார்,
1.குழந்தை கிடைக்கும்..! என்று நீங்கள் ஆசீர்வாதம் கொடுத்தவர்களுக்குக் குழந்தை கிடைத்திருக்கின்றது.
2.இவர்களுக்குக் குழந்தை எப்படிக் கிடைத்தது..? என்று எனக்குத் தெரிய வேண்டும்.
3.மருத்துவத் துறையில் நாங்கள் நிறையப் படித்திருக்கின்றோம்.
4.இவர்களும் எத்தனையோ மருத்துவர்களைப் பார்த்திருக்கின்றார்கள்.
5.குழந்தைக்கு வாய்ப்பு இல்லாத ஒரு சூழ்நிலையில் இவர்களுக்குக் குழந்தை எப்படிக் கிடைத்தது..?
6.வழக்கமாகக் கர்ப்பப் பையில் தான் குழந்தை உருவாகியிருக்கும்.
7.ஆனால் இவர்களுக்குக் கர்ப்பப் பைக்கு வெளியே குழந்தை எப்படி உருவானது,..?
8.கர்ப்பப் பை சிறுத்திருக்கின்றது… ஒன்றும் செய்ய முடியாது… என்று நாங்கள் சொன்னோம்.
9.ஆனால் நீங்கள் மருந்தும் கொடுக்கவில்லை. ஒன்றும் செய்யவில்லை…! எப்படிக் குழந்தை உருவானது…?

குழந்தையைப் பேர் வைக்க எடுத்துக் கொண்டு வாருங்கள் என்று தான் சொன்னீர்கள்…! என்னால் இது நம்ப முடியவில்லை. யார் சொன்னாலும் நம்ப மாட்டேன்…! நான் நேரடியாகப் பார்த்த அனுபவம்.

இவர்களுக்குப் பிரசவமும் நானே தான் பார்த்தேன். ஆபரேஷன் செய்து தான் குழந்தையை வெளியில் எடுத்தோம். ஆனால் குழந்தை கர்ப்பப்பைக்கு வெளியில் இருக்கின்றது. இது எப்படிச் சாத்தியமாகும்…? என்று அந்த டாக்டர் என்னிடம் (ஞானகுரு) கேள்வியைக் கேட்டார்.

அப்பொழுது நான் சொன்னேன்…! அவர்கள் எண்ணி ஏங்கி எடுத்துக் கொண்ட உணர்வின் இந்த அணு செல்கள் வெளியில் வரப்படும் பொழுது
1.கர்ப்பப்பைக்கு அருகிலேயே அதனுடைய ஜீவ அணுக்கள் துடிப்புக்குக் கொண்டு வரும்.
2.அப்பொழுது புதுக் கருப்பை அதிலிருந்து உருவாகிறது. அதற்குள் குழந்தை உருவானது.

ஆனால் பிறக்கும் பாதை வழியாக வர முடியாது ஆபரேஷன் செய்து தான் குழந்தையை எடுக்க முடியும். ஒரே குழந்தைதான், அதற்குப் பிறகு வராது என்று முழு விபரத்தையும் டாக்டரிடம் சொன்னேன்.

இது அல்லி நகரத்தில் நடந்த நிகழ்ச்சி இது. ஏனென்றால் இந்தத் தியானம் என்றால் என்ன…? என்ற நிலையில் அந்த மகரிஷிகளைப் பற்றிய எண்ணங்களை உங்களுக்குள் பதியச் செய்வதற்குத்தான் இதைச் சொல்கிறேன் (ஞானகுரு).