ஒருவர் மிகவும் மோசமானவர். வாயினால் அழகாகப் பேசுவார். அப்படி அழகாக மகிழ்ச்சியான
நிலைகளில் அவர் பேசுவதை “நாம் பதிவு செய்து கொள்கின்றோம்”.
அவர் ஏமாற்றுவதை இன்னொருவர் தெரிந்து வைத்திருக்கிறார்.
ஏன் அவர் வலையில் போய் சிக்குகின்றீர்கள்…? உங்களை அவர்
“ஏமாற்றிவிடுவார்…!” என்று நம்மிடம் சொல்கின்றார்.
முதலில் சொன்னவர் உணர்வு வந்த பின் இவர் என்ன சொன்னாலும் “ஏமாற்றுவதற்குத்தான்
சொல்கின்றார்” என்று எண்ணுகின்றோம். இரண்டாவது சொல்பவர் “அனுபவப்பட்டவர்” நம்மிடம் வந்து
சொல்கின்றார் என்று எண்ணுவதில்லை.
அதற்குப் பதில் அவரைக் குற்றவாளியாக்குகின்றோம்.
பார்…, அவரிடம் நட்பாக இருக்கின்றோம். பொறாமையால் பிடிக்காத நிலைகளில் “இப்படிச் சொல்கிறார்…” என்று எண்ணுகின்றோம்.
நம்மைக் காப்பதற்காகச் சொன்னாலும் அவரிடம் உங்களை எப்படியெல்லாம் சொல்லுகின்றார்…! என்று (முதலமாவரிடம்)
சொல்லி விடுகின்றோம்.
ஆனால் சொல்லி ஏற்றுக் கொண்டு சிந்தித்துப் பார்க்கின்றோமா? என்றால் இல்லை. அந்த
உணர்வை உடனே வெளிப்படுத்துகின்றோம்.
அவர்களுக்குள் தீமை செய்யும் உணர்வுகளே விளைந்து இருக்கின்றது. (நாம் தவறு செய்யவில்லை).
ஆனால் அவரின் இனிமை நமக்குள் விளைந்து விட்டால், பின்னாடிதான்… “அதிலே சிக்கிவிட்டோம்
போல் இருக்கிறது…” என்று தெரிகின்றது.
இதை நாம் எப்படி மாற்றுவது? ஏமாற்றுபவர்களிடம் சிக்காமல் இருக்க வழி வேண்டுமல்லவா…!
அதற்காகத்தான் “உங்களை நீங்கள் நம்புங்கள்…!” என்று சொல்வது. நம் உயிர் நாம்
நுகர்வதை (த்தான்) அப்படியே இயக்கிக் காட்டும்.
மகரிஷிகளின் அருள் உணர்வைத் தொடர்பு கொண்டு “ஓ..ம் ஈஸ்வரா…!” என்று புருவ மத்தியில்
கண்ணின் நினைவினைக் கொண்டு போய்த் தடுத்து நிறுத்தினால் நாம் சுவாசித்த மற்றவர்கள்
ஏமாற்ற நினைக்கும் உணர்வைப் பிரித்துக் காட்டும்.
நம் பற்று மகரிஷிகளின் பால் இருக்க்க வேண்டும். இது மிக முக்கியம்…!
அப்பொழுது நாம் சுதாரித்து… “பார்க்கலாம்…! பார்த்துக் கொள்ளலாம்…! என்ற உணர்வின்
நினைவுகளை வெளிப்படுத்த வேண்டும். அதற்கொத்த சொல்கள் வரும்.
அதை அவர்கள் நுகர்ந்தால் சுவாசித்தால் நாம் வெளிப்படுத்திய உணர்வுகள் அவர்களுக்குள்
ஊடுருவி நம்மை ஆமோதிக்கின்றானா…? அல்லது எதிர்க்கின்றானா…? ஒன்றுமே புரியவில்லையே என்ற
குழப்பத்தை ஏற்படுத்தும்.
அதைப் பார்க்கலாம். அப்பொழுது நாம் மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் பெற்று அங்கே
ஏமாற்றும் சிந்தனைகள் மாறி அந்த உண்மைகளை அவரே அனுபவித்து உணர வேண்டும் என்ற உணர்வுகளைத்
திருப்பி விட்டால் அடுத்து நம்மிடம் ஏமாற்றும் எண்ணம் கொண்டு வர மாட்டார்கள்.
என்னுடைய அனுபவம் இது தான்.