இந்த
வாழ்க்கையில் செல்வத்தைச் சேர்க்க ஒவ்வொரு நாளும் எவ்வளவோ பிரயத்தனங்கள்
எடுக்கின்றோம். சம்பாரித்து வாழ்ந்தாலும் எவ்வளவு நாள் வாழ்கின்றோம்...?
கொஞ்ச நாள் தான்
இந்த உடலில் வாழ்கிறோம்.
கடைசியில் எப்படியும் இந்த உடல் அழிந்து தான் போகிறது. இந்த உடல்
நமக்கு என்றுமே சொந்தமல்ல. அப்பொழுது நாம்
என்ன செய்ய வேண்டும்.
எல்லோரும் நன்றாக
இருக்க வேண்டும்
என்று அந்த மகா ஞானிகளின் அருள் ஒளியைப் பாய்ச்ச
வேண்டும்.
1.இந்த உணர்வை
எடுத்துப் பாய்ச்சும் பொழுது
2.அதை நாம்
முதலில் பெறுகின்றோம்
3.மகரிஷிகளின்
அருள் உணர்வை நமக்குச் சொந்தமாக்கி விடுகிறோம்.
ஏனென்றால் உணர்வுகள்
நோய்வாய்ப்பட்டால் உடல் சுருங்கத்தான் செய்யும். அருள் மகரிஷிகளின்
உணர்வுகளை நாம் பற்றுடன் பற்றும்போது தீய உணர்வுகள் தீய அணுக்கள் குறையப்படும்போது
இந்த உடல் சுருங்கத்தான் செய்யும்.
அதே சமயத்தில் அந்தப் பேரருள் பேரொளியின் உணர்வுகள்
உடலிலே ஒன்று சேர்ந்து இணைந்தபின்
1.அந்தத்
துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் இருந்து
2.அதைக்
கவர்ந்து அதை உணவாக எடுத்து
3.நாம் ஒளியின்
பிழம்பமாக மாறுவோம்.
4.அப்பொழுது
நாம் பிறவியில்லா நிலை அடைகிறோம்.
இராமாயணத்தில்
இராமன் நேரமாகி விட்டது என்று மணலைக் கூட்டித் (மனதைக் கூட்டி) தியானிக்க ஆரம்பித்துவிடுகிறான்.
இதைப் போலத்தான்
நாம் செய்யும் தியானத்தில் மூலம் நம் எண்ணங்களெல்லாம் ஒன்று சேர்ந்து பகைமையில்லாத
எதிர்ப்பில்லாத உணர்வுகளை வளர்த்து
1.நம் உயிரான
ஈசனுட ஒன்றி
2.இந்த உடலிலிருக்கும்போதே
அருள் ஒளியின் உணர்வைச் சேர்த்து
3.ஒளியின்
சரீரமாக மாற்ற வேண்டும்.
இது தான் கடைசி
நிலை.