ஒரு புலி ஒரு மானைப் பார்க்கின்றது என்று வைத்துக் கொள்வோம். அந்த மானைப் பார்த்தவுடன்
“அமைதி கொண்டதாகவே…” இருக்கின்றது.
1.தன்னருகிலே இருப்பதை உற்றுப் பார்ப்பதில்லை.
2.ஆனால் வெகு தூரத்தில் இருக்கும் மானைப் புலி குறி வைக்கிறது.
அதைப் பதிவு செய்துவிட்டதென்றால் அதன் மேல் எண்ணம் வருகின்றது. பக்கத்திலிருப்பதை
நின்று வேடிக்கை பார்க்கின்றது. ஆனால், தூரத்தில் இருப்பதை உற்றுப் பார்க்கும் பொழுது
அந்த மான் ஓட ஆரம்பிக்கின்றது.
மானிற்கு இந்த உணர்வின் ஒலி பட்டபின் உணர்வின் அறிவு உன்னைக் குறி வைக்கின்றது
என்று உணர்த்துகின்றது. உடனே அது ஓட ஆரம்பிக்கின்றது.
1.புலியோ பக்கத்தில் இருக்கின்றதைப் பிடிக்காதபடி
2.தூரத்தில் இருப்பதைத் துரத்திச் செல்கின்றது.
3.அந்த உணர்வின் வலு எதுவோ அதனைத்தான் துரத்துகின்றது.
4.இதைப் போலத்தான் நாம் எதனைப் பதிவு செய்கின்றோமோ
5.அந்த உணர்வின் “நினைவாற்றல்தான்” நம்மை இயக்குகின்றது.
ஆகையினால் நாம் பக்கத்தில் இருப்பதையெல்லாம் (“என் உடல் சரியில்லை; என் மனம்
சரியில்லை; என் குடும்பம் சரியில்லை; என் தொழில் சரியில்லை’ மக்கள் சரியில்லை; இந்த
உலகம் சரியில்லை…!”) விட்டுவிட்டு அந்த மகரிஷிகளின் உணர்வை நமக்குள் எடுத்துக் கொண்டால்
நம்மை ஒன்றும் பாதிக்காது.
அகஸ்திய மாமகரிஷி நஞ்சினை வென்றிடும் ஆற்றலைத் தன் தாய் கருவிலேயே பெற்றார்.
அவர் மனித வாழ்க்கையில் நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக்கி உயிருடன் ஒன்றச் செய்த அலைகள்
இன்றும் உண்டு.
அவைகளை நாம் நுகர்ந்தால் அந்த எண்ணம் வரப்படும்போது நம் உடலிலே நுகர்ந்த தீயவைகளுக்கு
எமனாக ஆகின்றது. நாம் கேட்டுணர்ந்த உணர்வுகள் நமக்குள் வந்து அதை நாம் அறிந்து கொண்டாலும்
தீமை என்று அறிந்தபின் மகரிஷிகளின் அருள் சக்தியை இந்த முறைப்படி உள்ளே நுகர்ந்து அதைப்
பிளத்தல் வேண்டும்.
அதைப் பிளப்பதற்கு “நுகரும் ஆற்றல்” அந்தச் சக்தி
வேண்டும். அந்த சக்திகளைப் பெறுவதற்காகத்தான் வெகு தொலைவில் இருக்கக்கூடிய மகரிஷிகளின்
பால் நம் நினைவுகளைச் செலுத்திப் பழக வேண்டும் என்று சொல்வது.
1.எட்டாத தூரத்தில் இருக்கும் அருள் மகரிஷிகளின் உணர்வை நமக்குள் சேர்த்துக்
கொண்டால்
2.இங்கே இந்தப் பூமியில் பக்கத்திலிருக்கும் உணர்வுகளின் ஈர்ப்புக்குள் நாம்
சிக்க மாட்டோம்.
3.அந்த உணர்வுகள் நம்மிடம் மோதினால் நமக்குள் வராது விலகிச் செல்லும்.
என்னுடைய அனுபவம் இது.