ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 29, 2016

நம் நல்ல குணங்களை எப்படி வலுவேற்றிக் கொள்வது?

மனிதன் தான் எண்ணியது தன் உடலுக்குள் ஒரு வித்தாக உருவாகின்றது.

பொதுவாக, செடியில் வித்தாக உருவான பின் அதை மீண்டும் ஊன்றினால் அந்த வித்து காற்றிலிருந்து தன் சத்தை எடுத்து வளர்கின்றது.

இதைப் போல அருள் ஞானிகளின் உணர்வுகளை வித்தாக ஊன்றும் பொழுது அதே நினைவலைகளை எதன் தொடர் கொண்டு எப்படி வருகின்றது குருநாதர் காட்டுகின்றார்.

அதே சமயம் ஒரு தாவர இனச் சத்து சோர்ந்து வாடிக் கொண்டிருக்கும் பொழுது அதனுடன் பல உணர்வின் சத்தைச் சேர்த்து உரமாக அதை இணைத்துக் கொண்ட பின் உற்சாகம் அடைந்து தன் சத்தை எளிதாக எடுத்துக் கொள்கின்றது. செடி கொழு கொழு என்று வளரத் தொடங்குகின்றது.

இதைப் போல நமக்குள் இருக்கும் நல்ல உணர்வுக்குள் மெய்ஞானிகளின் உணர்வை இணைத்து அந்தச் சத்தான நிலைகள் வரும் பொழுது அந்த எண்ணத்தால் காற்றிலிருந்து அது எடுக்கத் தொடங்கும்.

அப்படி எடுக்கும் பொழுது நாம் சுவாசித்த உயிர் அதனின் வலுக் கொண்டு இந்த உடலை உணர்வின் தன்மை எப்படி இயக்குகின்றது என்ற நிலையை அங்கே தெளிவுபடுத்தினார் குருநாதர்.

இதையெல்லாம் இயற்கையின் உணர்வின் மாற்றங்களும் தாவர இனச் சத்தின் நிலைகளும் கொண்டு வருவது போலத் தான் குரு காட்டிய வழியில் உங்களுக்குள்ளும் ஆற்றல் மிக்க சக்திகளை இணைக்கச் செய்கின்றோம்.

தாவர இனச் சத்துகளில் இன்று புதுப் புதுவிதமான வித்துகளை மனிதன் நாம் உருவாக்குகின்றோம்,

ஆறாவது அறிவின் தன்மை கொண்டு “பிரம்மாவைச் சிறைப்பிடித்தான்.., முருகன்…,” என்று நாம் சொல்லிக் கொண்டிருப்போம். அதைக் கடவுள் என்போம்.

“அந்தக கடவுள் எங்கே இருக்கின்றான்? எப்படி இருக்கின்றான் என்று பார்…,” என்று சொல்கிறார் குருநாதர்.

இன்று மனிதன் தன் ஆறாவது அறிவு கொண்டு அவன் விஞ்ஞான அறிவைத் தனக்குள் வளர்த்துக் கொண்டு பல உணர்வின் சத்தைச் சேர்த்துப் புதுப் புது வித்துக்களை உருவாக்கி அதனின் நிலை கொண்டு சத்தான வித்துகளை உருவாக்குகின்றான்.

இதைப் போன்று தான் அன்று வாழ்ந்த மெய்ஞானிகள் அந்த மெய் உணர்வின் தன்மை தனக்குள் எடுத்து, சோர்வடைந்த உணர்வுக்குள் மெய்ஞான உணர்வை இணைத்து அதைச் சக்தி வாய்ந்ததாகத் தனக்குள் அந்த எண்ணத்தால் வளர்த்துக் கொண்டான்.

பின் அந்த உணர்வின் நினைவலையைக் கூட்டும் பொழுது காற்றிலிருந்து தனக்குள் எடுத்துத் தன் ஆத்மாவாகவும் சுவாசித்த உணர்வு அதனின் நிலைகளில் வலு கொண்ட நிலைகளில் இயக்குகின்றது, தனக்குள் ஜீவன் பெறச் செய்கின்றது.

 எவ்வாறு இதனின் நிலைகள் என்பதைத் தெளிவாக குருநாதர் அங்கே உணர்த்துகின்றார்.

முன்னாடி இலேசாகச் சொல்லியிருப்பேன். இப்பொழுது ஓரளவிற்குத் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்பதற்காக அந்த உணர்வின் இயக்கங்களும் அந்த உணர்வின் நிலைகள் குருவின் தன்மையும் அந்தக் குரு காட்டிய வழியில் மெய்ஞானியின் உணர்வைத் தனக்குள் எடுத்து எப்படி வளர்க்க வேண்டும் என்பதற்குச் சொல்கின்றோம்.

நாம் பார்க்கும் எதிர்நிலையான உணர்வின் தன்மைகளைப் பாச உணர்வால் இணைத்து அந்த மெய்ஞானிகளின் அருள் சக்திகளை நம் எண்ணத்தால் ஒரு வித்தாக ஊன்றப்படும் பொழுது மீண்டும் நினைவு கொள்ளும் பொழுது நாம் எண்ணிய உணர்வுகள் இங்கே காற்றில் படர்ந்துள்ள அருள் ஞானிகளின் உணர்வை நாம் எளிதில் சுவாசித்து நம் ஆன்மாவாக மாற்றிக் கொள்ள முடியும்.

இந்த உணர்வின் செயல் நமக்குள் ஆகும் பொழுது இந்த ஆன்மாவின் மணம் எதிர் கொண்ட நிலைகளை நம்மைப் பார்க்கும் பொழுது அந்த உணர்வுகள் நமக்குள் புகாதபடி தடுக்கும்.

ஒரு வேப்ப மரம் தன் மணத்தால் தனக்குள் மற்ற நல்ல மணத்தை விடாது. நல்ல மணம் கொண்ட ரோஜாப்பூ தன் மணத்தால் மற்றவை வராதபடி தடுத்துக் கொள்ளும்.

இதைப் போல அந்த உணர்வின் சத்தான அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளை அந்த அருள் மணங்களை நமக்குள் கூட்டும் பொழுது வாழ்க்கையில் சந்திக்கும் எத்தகையை தீமை செய்யும் உணர்வுகளும் அது விலகிச் செல்கின்றது. நம் ஆன்மா பரிசுத்தமாகின்றது.

அப்பொழுது எதனை நீ நேசிக்க வேண்டும்? எதனை உனக்குள் வலுவாக ஏற்க வேண்டும்? எதனின் துணை கொண்டு உன் மனித வாழ்க்கையில் ஒளியாக மாற்ற வேண்டும் என்று குருநாதர் உணர்த்துகின்றார்.

ஆகவே ஒளியின் சிகரமாக மாறிய அருள்ஞானியின் நிலைகள் இணைக்கப்படும் பொழுதுதான் உணர்வின் மணங்கள் இப்படி மாறுகின்றது என்ற நிலையை உள் உணர்வில் கொடுத்துக் கொண்டேயிருப்பார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

குருநாதர் எமக்குக் கொடுத்த முறைப்படி தான் உங்களுக்கும் பேராற்றல்களைப் பெறும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்துகின்றோம். எமது அருளாசிகள்.

November 28, 2016

தாங்க முடியாத கஷ்டம் வந்தபின் “வேறு வழி இல்லை” என்றால் எந்த நிலை ஆகின்றது?

ஒரு உயிரணு நம் பூமிக்குள் வந்து ஒரு செடியின் சத்தை நுகர்ந்து புழுவாகின்றது. புழுவான பிற்பாடு அடுத்த செடியின் வாசனை படும் பொழுது பார்ப்பதற்குக் கண்கள் இல்லை.

கண் இல்லை என்கிற பொழுது என்ன செய்கிறது?

தன் இரைக்காகச் செல்லும் போது எந்தச் செடியில் உருவானதோ அந்த மணத்தை நுகர்ந்து பார்த்துத்தான் செல்ல வேண்டும்.

அப்படி நுகர்ந்து பார்க்கும் பொழுது இதைக் காட்டிலும் ஒரு மோசமான செடியின் வாசனையை நுகர நேருகின்றது. அதனின் சந்தர்ப்பம் அவ்வாறு ஆகின்றது.

அந்த மோசமான செடியின் வாசனையை நுகர்ந்தவுடன் மயக்கமாகின்றது. அப்படி மயக்கமானபின் என்ன செய்கின்றது? தன் இரையைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் இரண்டும் சேர்த்து வருகின்றது.

அந்த மயக்கமாகும் பொழுது “பார்க்க வேண்டும்…,” என்ற உணர்ச்சிகள் புதிதாகத் தோன்றுகின்றது.

ஏனென்றால் கண்கள் இல்லாதபோது தன் இரையைப் பார்க்க வேண்டும் என்று தன் எண்ணத்தைப் பரவச் செய்யும் பொழுது அந்த மணத்தை அறிய விரும்புகின்றது.

ஆனால், முடியவில்லை. அப்பொழுது அதனால் வேதனைப்படுகின்றது.

அந்த மோசமான செடியின் வாசனை பட்டதனால் அதற்கு வேதனை வருகின்றது. வேதனை ஆனவுடன் பார்க்க வேண்டும் என்ற உணர்ச்சி “தன்னிச்சையாகவே…,” உந்துகின்றது.

சாதாரணமாக ஒரு மனிதனுக்குக் கஷ்டம் வந்ததென்றால் தப்ப வேண்டும் என்ற எண்ணம் வருகின்றது. கஷ்டம் வருவதற்கு முன் நாம் செய்வதைச் செய்து கொண்டிருப்போம்.

கஷ்டம் வந்ததும் அதிலிருந்து எப்படி விலகுகின்றது என்று அதற்கப்புறம் தான் வரும்.

ஒருவருடன் சண்டை போட்டோம். அவனுக்குப் பக்கபலமாக ஆள் இருக்கின்றது என்று தெரிந்தவுடன் உடனே அவனிடமிருந்து “எப்படிடா தப்புகின்றது…,” என்ற நினைப்பு வரும.

முதலிலே இலேசாகத் தெரியும்.

ஆனால், பின்னனியில் ஆள் இருக்கிறது நம்மை உதைப்பதற்குக் கூட்டம் வந்துவிட்டது என்றால் “இதற்கு என்ன செய்வது..?” என்ற தெரியாதபடி தவிப்போம்..

இதே மாதிரித்தான் தனக்குள் வலு தேடும் எண்ணங்கள் வருகின்றது.

ஆக, புழுவாக இருக்கப்படும் பொழுது தன் மணத்தால் விஷத்தின் தன்மையை நுகர்ந்தபின் பார்க்க வேண்டும் என்ற உணர்வுகள் தோன்றுகின்றது.

அப்படி அந்தப் புழுவின் உடலில் தோன்றும் பொழுது அது சுவாசிக்க நேருகின்றது. அந்த உணர்வுகள் வருகின்றது. அப்பொழுது தான் சுவாசித்ததை உருவாக்குகின்றது.

யார்..?

“வாசு தேவன்”, சுவாசித்ததை உருவாக்கக்கூடியவன் என்று உயிருக்குக் காரணப் பெயரை வைக்கின்றார்கள்.

முதலில் உயிருக்கு பெயர் ஈசன் என்றும் விஷ்ணு என்றும் காரணப் பெயர் வைத்தாலும் “பார்க்க வேண்டும்.., என்று சுவாசித்த உணர்வு” வாசுதேவன்,

“தேவகி…, பார்க்க வேண்டும் என்ற “தேவைக்குத் தக்கவாறு” இது நுகர்ந்து கொண்ட பின் அதன் உடலில் கண்கள் உருவாகின்றது.

அதைத்தான் வாசுதேவனுக்கும் தேவகிக்கும் இந்த உடலான சிறைக்குள் கண்ணன் பிறந்தான். கண்கள் பிறந்தது. நம் சாஸ்திரங்கள் இவ்வளவு தெளிவாகக் கூறியுள்ளது. புழு அதனுடைய எண்ணத்தால் தான் கண் உருவாகியது.

இப்பொழுது ஒரு தொழில் செய்யும்போது ஏதோ நிலைகள் சிந்தனையில்லாது இருண்ட நிலைகளில் இருக்கின்றீர்கள்.

இவன் அப்படிச் செய்தான், இவன் இந்த மாதிரி நடக்கின்றான், கொடுத்தவனுக்குப் பணம் கொடுக்க முடியவில்லை, வந்து கேட்கின்றான். கேட்பவனுக்குப் பதில் சொல்ல முடியவில்லை.

“என்ன செய்வது..,” என்று தெரியவில்லை.

இதில் கொஞ்சம் கௌரவம் வந்ததென்றால் “இனி என்னத்தை.., உயிரை வைத்துக் கொண்டு வாழ்வது?” என்ற இந்த நிலைக்குச் சென்றுவிடுகின்றார்கள்.

எப்படி உயிர் வாழ வேண்டும் என்று நினைக்கும் பொழுது என்ன செய்கின்றார்கள்? தற்கொலைக்குச் சென்று விடுகின்றார்கள்.

வேதனை தாளாது நிவர்த்திக்கக்கூடிய வழி இல்லை என்கிற பொழுது இருண்ட நிலை வருகின்றது. அந்த இருண்ட நிலை வரப்படும் பொழுது முடியாத நிலை வரப்படும் பொழுது தற்கொலை ஆகின்றது.

அப்படி ஆகவில்லை என்றாலும் கூட இருண்ட நிலை வரும் பொழுது சிந்தனையற்ற நிலையில் போகும்போது ரோட்டில் சென்றால் ஆக்சிடென்ட் ஆகின்றது.

யாராவது சொன்னால் வெறுப்பு வருகின்றது. ஏதாவது ஒரு பொருளை எடுக்கப் போனால் கவலையுடன் எடுக்கும் பொழுது சரியாக அதைப் பிடிக்கத் தெரியாமல் கீழே விட்டுவிடுவார்கள்.

அப்பொழுது எது செய்கின்றது? அந்த உணர்வின் இயக்கமாகத்தான் இருக்கின்றது. அதற்கு மாற்றாக ஒரு வலு வேண்டுமல்லவா?

புழுவாக இருக்கும் பொழுது “பார்க்க வேண்டும்” என்ற வலுவை எண்ணுகின்றது. ஏனென்றால், வேறு வழி இல்லை.

வேறு வழி இல்லை என்றால் தற்கொலை செய்வதற்குத்தான் மனிதர்கள் நிறையப் பேர் இருக்கின்றார்கள்.

செல்வத்தைத் தேடிக் கொண்டிருப்பார்கள். ஆனால் தாங்க முடியவில்லை நான் என்ன செய்வது?

அவன் கேட்பான், இவன் கேட்பான் பிள்ளைகள் படிப்புக்குப் பணம் கேட்குமே? இதற்கெல்லாம் நான் என்ன செய்வது? ஆக, தற்கொலைக்குச் சென்றுவிடுகின்றார்கள்.

அப்பொழுது நாம் மனிதனாக வந்து இந்த உடலை வளர்த்த நல்ல உணர்வை நம் உணர்வு கொண்டு அந்த விஷத்தைப் பாய்ச்சி இந்த உடலை அழித்துவிட்டால் என்ன ஆகும்?

உடலை விட்டு வேண்டுமென்றால் போகலாம்.

ஆனால், விஷத்தால் எந்த உணர்வைச் சேர்த்தோமோ இந்த உயிர் அதற்குத்தக்கவாறு “நீ வாப்பா…, உனக்கு நல்ல உடலைக் கொடுத்தேன் நீ கொன்றுவிட்டாய்.., என்னை நீ அவமதித்துவிட்டாய்..., ஆகவே, இன்னொரு தரம் இந்த உடலில் நீ அனுபவித்துப் பார்.

அந்த வேதனைப்படும் உணர்வைக் கொண்டு இந்த உயிர் அடுத்த உடலை உருவாக்கும். “தப்ப முடியாது”.

(தற்கொலை செய்து) தப்பித்துவிட்டோம் என்று நினைக்கின்றோம். ஆனால், தப்ப முடியாது. இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

பல கோடித் தீமைகளிலிருந்து விடுபடவேண்டும் என்று சுவாசித்த உணர்வு கொண்டு மனிதனாக வந்த நாம் தீமைகளை நீக்கத் தவறினால் மறுபடி கீழான விஷ ஜெந்துக்களாகத்தான் பிறக்க நேரும்.

நேற்றைய செயல் இன்றைய சரீரம், இன்றைய செயல் நாளைய சரீரம்.

ஆகவே, நம் வாழ்க்கையில் எத்தகைய கடுமையான இன்னல்கள் வந்தாலும் அந்த நேரத்தில் அதிலிருந்து நம்மை மீட்டிக் கொள்ள அருள் மகரிஷிகளின் ஆற்றல்களை நாம் நுகர்ந்து பழகுதல் வேண்டும்.

அருள் மகரிஷிகளின் உணர்வை நம் உடலுக்குள் சேர்த்து அதை விளைய வைத்து, உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக அந்த மகரஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்து வாழ்வதே மனிதனின் கடைசி எல்லை.

அந்த எல்லையை அடையும் மார்க்கங்களைத்தான் குருநாதர் காட்டிய அருள் வழியில் உணர்த்திக் கொண்டு வருகின்றோம்.

November 27, 2016

தூணிலும் இருக்கின்றான், துரும்பிலும் இருக்கின்றான், உன்னிலும் இருக்கின்றான், என்னிலும் இருக்கின்றான், அனைத்திலும் இருக்கின்றான் கடவுள்

நம்முடைய சாஸ்திர விதியே இது தான்.

நமது உயிர் நமக்குள் “ஓ” என்று இயக்கி அந்த உணர்வின் துணையால் பல கோடி உணர்வின் தன்மைகளை நாம் பெற்றுப் பல மிருக இனங்களாகப் பிறந்தும் அதிலிருந்து நம்மைக் காத்திடும் உணர்வின் துணை கொண்டு இன்று நம்மை உருவாக்கியுள்ளது.

இதை அறிந்து கொள்ளும் நிலைகள் பெற்ற நிலைகளில் அறிந்த மனிதன் தான் அணுவிற்குள் அணுவின் ஆற்றலைத் தனக்குள் கண்டுணர்ந்து இந்த உணர்வின் செயலைத் தெளிவாக எடுத்துரைத்தது அகஸ்தியர் தான்.

அவருக்குள் கண்டுணர்ந்த உணர்வின் சக்து விளைந்து இன்றும் நம் பூமியில் நமக்கு முன் பரவிப் படர்ந்து கொண்டுள்ளது.

அவன் அந்த உடலிலே தீமைகளை அகற்றி உணர்வின் சத்தை ஒளியாக மாற்றி உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாகி இன்றும் துருவத்தில் நிலை கொண்டு “துருவ மகரிஷியானான்”. துருவ நட்சத்திரமாக இன்றும் இயங்கிக் கொண்டுள்ளது.

அவன் காட்டிய நிலைகள் தான் சாஸ்திரத்தில் - முதலிலே பேரண்டத்தின் நிலைகள் எதுவாக இருப்பினும் “கடவுள் எங்கேயோ ஒளிந்து கொண்டுள்ளான்..,” என்ற நிலை இல்லை.

நமக்குள் நம்மை உருவாக்கியது நம் உயிரே.

பேரண்டத்தின் ஆற்றலை அந்த உணர்வின் தன்மை கவர்ந்து வெளிப்பட்டாலும் அந்த உணர்வைப் பிளந்து உணர்வின் இயக்கத்தை அறிந்து அறிந்த நிலைகள் நம்மை இயக்கி இத்தகையை உடலின் உணர்வை மனிதனாக உருவாக்கியது நம் உயிரே.

ஆகவே, கடவுள் எங்கேயோ இல்லை நமக்குள் நின்றே இயக்குகின்றான், அவன் இயக்குகின்றான்.

நாம் எத்தகையை உணர்வின் தன்மை நாம் கவர்கின்றோமோ இந்த உணர்வினை “ஓ” என்ற ஜீவனாக்கி நமக்குள் ஜீவ அணுவாக மாற்றும் பொழுது நாம் எண்ணிய குணமும் நமக்குள் பதிந்த உணர்வும் மீண்டும் அது நினைவுபடுத்தி இயக்கப்படும் பொழுது “அதுவும் கடவுளாகத்தான்..,” இயக்குகின்றது.

தூணிலும் இருக்கின்றான், துரும்பிலும் இருக்கின்றான், உன்னிலும் இருக்கின்றான், என்னிலும் இருக்கின்றான், அனைத்திலும் இருக்கின்றான் என்று “பிரகலாதன்” கதையில் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

ஆக, சூரியனின் காந்தப் புலனறிவு ஒரு உணர்வின் சத்தை அது கவர்ந்து கொண்டால் அதே சூரியனால் இயக்கப்படும் உடலின் இயக்கத்திற்குள் நம் உயிரால் கவரப்பட்ட உணர்வின் தன்மை அதைப் பிளந்து உணர்வின் தன்மை இயக்கத்தை உணர்ந்து அது உணர்ந்த உணர்வின் செயலாக நம்மை இயக்கும் செயலாகக் “கடவுளாக அது எப்படி இயக்குகின்றது…?” என்ற நிலையை நமது சாஸ்திரத்தில் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது.

ஆகவே, அந்தச் சாஸ்திர விதிப்படி நமது உயிர் கடவுள். உள் நின்றே இயக்குகின்றது. நாம் எண்ணிய உணர்வின் சத்தை “ஓ” என்று ஜீவனாக்கி “ம்” என்று உடலாக்கி நம்முள் நின்று அக்குணமே கடவுளாக இயக்குகின்றது.

இந்தப் பேருண்மையைக் கண்டவன், உணர்ந்தவன் அகஸ்தியன். அணுவின் ஆற்றலையும் அணுவின் இயக்கத்தையும் தெளிவாக எடுத்துரைத்தவன் அகஸ்தியன்.

அதன் உணர்வே பல நிலைகளில் இங்கே படர்ந்து கொண்டுள்ளது என்ற இந்த உண்மையைத் தான் மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் இதை உணர்த்துகின்றார்.

November 26, 2016

“இது மனிதனல்ல, ஏதோ ரிஷி பிண்டம்.., இவரை விட்டுவிடாதீர்கள்…” என்றார் வேதங்களைக் கற்றவர்

ஆரம்பத்தில் குருநாதரைப் பைத்தியக்காரர் என்றுதான் நான் நினைத்துக் கொண்டிருந்தேன்.

ஒரு சமயம் பழனியிலே ரோட்டிலே நான் நடந்து வரப்படும் பொழுது வேதங்களைச் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர் ஒருவர் அதன் வழியாக வந்தார்.

குருநாதர் என்ன செய்தார்?

அவரை இடைமறித்து சொல்லாத வார்த்தைகளைச் சொல்லித் திட்டி “இங்கே வாடா..,” என்று அவர் குடுமியைப் பிடித்து இழுத்துக் கொண்டு வந்தார்.

வேதம் சொல்லிக் கொடுப்பவரை குருநாதர் ஓங்கி ஓங்கி அடிக்கின்றார். இவர் பிடியிலிருந்து அவர் தப்ப முடியவில்லை.

“யானைக்குப் பலமா..? எனக்குப் பலமா..?” என்று சொன்னவர் (நம் குருநாதர்) கையில் சிக்கினால் எப்படியிருக்கும்?

வாயில் வராத கொச்சையான வார்த்தைகளைச் சொல்லித் திட்டி ஓங்கி ஓங்கி அடிக்கின்றார் குருநாதர். சொல்லவே முடியாது, அந்த அளவிற்கு மோசமாகப் பேசுகின்றார்.

 “ஏண்டா.., நீ வாத்தியாராடா…?” என்று கேட்டார் குருநாதர். அங்கே என்னடா சொல்லிக் கொடுத்தாய்?

யாகம் வளர்க்கும்போது அங்கே தப்பான ஒலிகளை எழுப்பினார் என்பதற்காக அப்படிக் கேட்கின்றார் குருநாதர்.

அங்கே நீ இன்னென்னதை இப்படித் தப்பாகச் சொன்னாய் அதை இப்படித்தான் சொல்ல வேண்டும் என்று குருநாதர் அவரிடம் சொல்லுகின்றார்.

ஆக, அந்த ரிக் வேதத்தை முதலில் மேலிருந்து சொல்லி மறுபடி தலை கீழாகவும் சொல்கிறார். சுருதி சுத்தமாகப் பாடிக் காட்டுகின்றார் குருநாதர்.

இதைக் கேட்டவுடன் அந்த வாத்தியார் அப்படியே சாஷ்டாங்கமாகக் குருநாதர் காலில் விழுந்தார்.

வேதம் என்றால் என்ன? அதற்குள் உள்ள பொருள் என்ன? இதை நீ எப்படி எடுக்க வேண்டும்? வேதத்தைக் கண்டவன் சொன்னது என்ன? ஆனால், நீ சொன்னது என்ன என்றார் குருநாதர். உடலுக்காக (பணத்திற்காக) வேண்டி நீ தவறாகச் சொல்கிறாய் என்றார் குருநாதர்.

ரிக் வேதம் என்கிற பொழுது ஒரு உணர்வின் தன்மை இயற்கையில் விளைந்தது எவ்வாறு அது மாறுகின்றது? அது நாதங்களாக எப்படி மாறுகின்றது என்று சுருதியை அவர்கள் இயக்கிக் காட்டினாலும் “ஏற்றம்.., இறக்கம்..,” அதாவது கரைந்து மீண்டும் கோளாகி (ஒரு பிரபஞ்சத்திற்குள்) மீண்டும் கரைந்து எப்படிக் கோளாகின்றது?

அதனின் நிலைகள் மாறி மாறி மீண்டும் ஒரு தாவர இனமாகின்றது. இந்த உணர்வின் சக்தி கரைந்து மீண்டும் அலைகளாக எப்படி மாறுகிறது? இது அனைத்தையும் வேதங்களில் இந்த உணர்வின் தன்மைகளை எப்படிக் கொடுத்திருக்கின்றார்கள்? என்று அவரை அடித்துவிட்டுச் சொல்கிறார் குருநாதர்.

அப்பொழுது அதை நான் கேட்கும் பொழுதுதான் எனக்குப் புரிகின்றது. ஏனென்றால், அவர் சமஸ்கிருதத்தில் பேசுகின்றார். புரியாத பாஷையில் பேசுகின்றார்.

அவரை அடித்துவிட்டு இதைக் காட்டுகின்றார். ஆனால், நான் குருநாதரைப் “பைத்தியம்” என்று நான் எண்ணும்போது அங்கே வேதங்களை உணர்த்திக் காட்டுகின்றார்.

ஆக, நடு ரோட்டில் வைத்துக் குருநாதர் காலில் விழுந்து அந்த வாத்தியார் வணங்குகின்றார். “நான் செய்த பாவமெல்லாம் இன்றோடு போய்விட்டது..,” என்று பேரானந்த நிலையில் சொல்லிவிட்டுச் சென்றார்.

மறு நாள் அந்த வாத்தியார் என்னை வந்து சந்தித்தார். “இது மனிதனல்ல…, ஏதோ ரிஷி பிண்டம்…” அவருடைய அருளாசி உங்களுக்குக் கிடைத்திருக்கின்றது. அவரை நீங்கள் விட்டுவிடாதீர்கள் என்றார்.

என்னைப் பற்றி அவருக்கும் தெரியும். மங்களூர் அவர் சொந்த ஊர். அவர் இவ்வாறு என்னிடம் சொன்ன பின் தான் ஓரளவிற்குக் குருநாதரைப் பற்றி அறிய முடிந்தது ஆரம்ப நிலைகளில்.

அவர் சொன்ன மொழிகள் வேறு. இவர் ரிக் வேதத்தை எடுத்து வாசிக்கப்படும் பொழுது அண்டத்தின் நிலைகள் எவ்வாறு உருவாகின்றது? நாதங்கள் சுருதிகள் எப்படி மாறுகின்றது? அந்த உணர்வின் தன்மை ஒலி அலைகள் எப்படி மாறுகின்றது?

உணர்வின் தன்மை ஒலிக்கொப்ப தாவர இனங்கள் எப்படி மாறுகின்றது? என்று அவர் சுட்டிக் காட்டிய நிலைகள் அவரை அடித்துக் காட்டியது என்னை அடித்து உணர்த்தியது போன்று இருந்தது.

இந்த நினைவுகள் வரப்படும் பொழுது தான் இந்த உணர்வின் இயக்கங்களை உணர்த்திக் காட்டினார் குருநாதர். இதுவெல்லாம் வேதங்களைப் பற்றி வேத சாஸ்திரங்களில் தெளிவுண்டு.

ஆனால், வேத சாஸ்திரங்கள் அனைத்தையுமே நாம் எப்படி மாற்றிவிட்டோம் என்றால் இந்த மனிதன் சுய லாபங்களுக்கும் இந்த மனித வாழ்க்கையின் உணர்வுகளுக்குமே மாற்றியமைத்துவிட்டார்கள்.

அந்த மெய்ப்பொருளைக் கண்டுணர்ந்து மெய்ப்பொருளின் சக்தி கொண்டு இந்த வாழ்க்கையில் நமக்குள் வந்த அசுர உணர்வுகளை எப்படி நீக்குவது என்று தான் அதிலே காட்டிய நிலைகள்.

மாறாக, வேள்வி யாகம் என்று காட்டி மாற்றிவிட்டார்கள். ஆக, யாகம் என்றால் என்ன?

யாகம் என்பது நம் உயிர் ஒரு நெருப்பு. நாம் எடுத்துக் கொண்ட உயர்ந்த உணர்வின் தன்மை இந்த யாகத் தீயில் போடும் போது தான் நமக்குள் உணர்வின் அலைகள் படர்ந்து தீமைகள் அகற்றும் நிலை வருகின்றது.

தீமையை அகற்றிடும் உணர்வு நமக்குள் எடுத்துக் கொண்டபின் அந்த உணர்வின் எண்ண அலைகள் அது வெளிப்படும் பொழுது சூரியனின் காந்த அலைகள் கவர்ந்து பூமியில் எவ்வாறு படர்கின்றது என்ற நிலைதான் அந்த வேதங்களின் சாஸ்திரங்களில் கூறப்பட்டிருக்கின்றது.

யாக வேள்வியில் புறத் தீயிட்டு அதற்குள் புறத்திலிருந்து நாம் பல பொருள்களைப் போட்டு அதனால் மகிழ்ந்து ஆண்டவன் நமக்கு எங்கிருந்தோ செய்வான் என்ற நிலைகள் சொல்லி மாற்றியமைத்து விட்டார்கள்.

புறப்பொருள்களின் நிலைகளைக் காட்டுவது எதற்கு என்றால் அகப்பொருள்களின் இயக்கங்கள் எவ்வாறு என்று தெளிந்து உணர்த்திட வேண்டும் என்பதற்குத்தான் காட்டினார்கள்.

2000 வருடங்களுக்கு முன் வந்த ஆதிசங்கரர் இதைத்தான் சூட்சம நிலைகள் கொண்டதை எண்ணத்தால் எடுக்கும் பொழுது இந்த உணர்வின் தன்மை “துவைதம்” அது உறையும் தன்மை (உடலாக) அடைகின்றது.

ஆகவே நாம் எதை எண்ண வேண்டும்? எதன் உணர்வை நாம் கவர்கின்றோமோ இந்த உயிரின் இயக்கம் இவ்வாறு தான் இருக்கின்றது என்று காட்டினார்.

ஒன்று அத்வைதம் இரண்டாவது துவைதம். ஆக, எடுத்துக் கொண்ட உணர்வு இரண்டாவதாக உறையும் தன்மை அடைகின்றது.

ஆனால், உறைந்த நிலைகள் கொண்டு இந்த உணர்வின் தன்மை உள் நின்று எவ்வாறு இயக்குகின்றது என்ற நிலையைத் தான் சாஸ்திர விதிகள் காட்டப்பட்டிருக்கின்றதே தவிர புறத் தீயிட்டு இதைச் செய்யச் சொல்லவில்லை.

ஆனால், புறத்தீயிட்டுச் செய்தால் எனக்குக் கொடுப்பான் என்று பிறரை வேடிக்கை பார்க்க வைத்து உழைத்த பொருளை அங்கே கருக்கிவிட்டு எதையோ கிடைத்தது என்று சிறிது சந்தோசத்தையே அங்கே ஏற்படச் செய்கின்றார்கள்.

ஆனால், செய்த நிலைகள் மாறியது என்ற நிலையைத்தான் அங்கே உருவாக்க முடிந்ததே தவிர மெய்ப்பொருள் காணும் உணர்வை அங்கே காட்டவில்லை என்று தெளிவாக உணர்த்தினார் அன்று ஆதிசங்கரர்.

இதையெல்லாம் நமது குருநாதர் எனக்கு அனுபவபூர்வமாகக் கொடுத்தார்.

ஆக, குருநாதர் பேசியது கன்னடம், துளு இதைப் போல பல பாஷைகள், அதாவது அவர் 32 பாஷைகள் பேசுவார். அது அர்த்தமற்றதாக எனக்குப் புரியவே புரியாது.

புரியாத நிலைகள் இருப்பதை அந்த உணர்வால் பதியச் செய்து மீண்டும் நினைவுக்குக் கொண்டு வரும் பொழுதுதான் அதைத் தெளிவுறக் காட்டுகின்றார் குருநாதர்.

குருநாதர் மூலம் கண்டுணர்ந்த மெய் உணர்வுகளைத்தான் உங்களுக்குச் சொல்லி வருகின்றோம்.

November 25, 2016

பண்டைய காலத்தில் அருள் ஞானத்தை வளர்ப்பதற்காக அன்னதானம் செய்தார்கள் - இன்று அப்படிச் செய்கின்றோமா..?

“சாகாக்கலை.., வேகாநிலை.., போகாப்புனல்” என்ற நிலையில் இராமலிங்க அடிகள் தெளிவுற எடுத்துரைத்தாலும் கவி நயங்களில் அவர் எழுத்தின் வடிவத்தை நாம் படித்து அதைப் பிறருக்குப் பாடமாக ஒப்பிக்கும் பொழுது அதை ரசித்திருக்கலாம்.

ஆனால், அதற்குள் பொதிந்த உட்பொருளின் பொதிந்த நிலையும் நமக்குள் உணர்வின் ஆற்றலாக மாற்றி உணர்வின் தெளிந்த நிலைகள் கொண்டு “ஜோதியாக..,” ஒளியாக மாறும் நிலையை யாரும் அடையவில்லை.

“அருட்பெரும் ஜோதி நீ தனிப்பெரும் கருணை” என்று சொன்னாலும் பிறருக்கு அன்னமிட்டுப் பசியைப் போக்கினால் அந்த நிலைகள் எனக்கு நன்றாக இருக்கும் என்று இவர்கள் இன்று பேசுகின்றனர்.

பண்டைய காலங்களில் எல்லாமே தெய்வ வழிப்படி செய்ய வேண்டும், ஆக, வெகு தூரம் நடந்து செல்ல வேண்டும் என்றால் அவர்களுக்கு உணவு வேண்டும்.

அவர்கள் உழைத்துச் சாப்பிடும் இந்த நிலைகளிலிருந்து “உணவைக் கொடுத்தாவது” அந்த உயர்ந்த நிலைகள் பெறவேண்டும் என்று அன்று செய்தார்கள்.

ஏனென்றால், அன்றைய நிலைகளில் ஓட்டல் கிடையாது. பிறருடைய வீட்டில் நண்பர்கள் இருந்தால்தான் அங்கே போக முடியும். இல்லை என்றால் அந்தத் தர்ம சாலைகளைக் கட்டி ஆகாரங்களை இடுவார்கள்.

தர்ம சாலைகளில் உணவிட்டு தர்மம் செய்வோர் இறைவனை வணங்கி வரப்படும் பொழுது அவர்களுக்கு இந்த உணவைக் கொடுத்தால் நல்ல நிலைகள் கிடைக்கும்.

அவர்கள் உணவு உண்டால் நாம் சொல்லும் உணர்வின் உபதேசங்கள் அங்கே பதிவாகும் என்ற இந்தத் தத்துவத்தைத்தான் கடந்த காலத்தில் ஏற்படுத்தினார்கள்.

இன்று நாம் என்ன செய்கின்றோம்? பலருக்கு அன்னமிட்டால், தர்மம் செய்தால் அதனால் “புண்ணியம் கிடைக்கும்…,” என்று செய்து கொண்டுள்ளோம்.

அன்னமிடும் பொழுது சாப்பிட்டுவிட்டுச் சோம்பேறியாவதும் பிறரைக் குறை கூறுவதும் குறை கூறும் உணர்வை வளர்த்துக் கொண்டு தீமையை விளைவிக்கும் நிலைகளிலே நாம் வருகின்றோம்.

ஆனால், உணவு எதற்காக உட்கொள்கின்றோம்? எதனைக் கொண்டு உணவு நாம் உட்கொள்ள வேண்டும் என்ற நிலையை மறக்கச் செய்து இதுதான் தர்மம் இது தான் தர்ம சாலை என்ற நிலைகளில் நாம் நினைத்துக் கொண்டிருக்கின்றோம்.

இப்படித்தான் காலங்களால் தர்ம நீதிகளை எப்படி வழி நடத்த வேண்டும் என்று நிலைகள் மறைந்து விட்டது.

ஆகவே, தர்மம் செய்வது எதுவாக ஆக்க வேண்டும்?

இப்பொழுது யாம் உபதேசித்துக் கொண்டிருக்கும் இந்த அருள் உணர்வுகள் மனிதனுடைய உணர்வுகளுக்கு தீமையை அகற்றி மெய்ப்பொருள் காணும் சக்தியாக அமைகின்றது.

நீங்கள் மெய்ப்பொருள் காண வேண்டும், அந்தத் தீமையை அகற்றிடும் அருள் சக்தி உங்ககளுக்குக் கிடைக்க வேண்டும் என்றும் உங்களை நான் தியானிக்கும் பொழுது அந்த உணர்வின் தன்மை எனக்குள்ளும் விளைகின்றது.

மீண்டும் இதே போன்று தியானித்தால் அந்த உணர்வின் சக்தி பெரும் சொத்தாக மாறி உங்களுக்குள் இருளை மாய்த்துவிட்டு பொருள் காணும் நிலைகளுக்கு வரும்.

ஆகவே, அருள் ஞானிகளின் அருள் வட்டத்தில் நம் நினைவலைகள் அனைத்தும் செல்தல் வேண்டும்.

நமது குருநாதர் காட்டிய அருள் நெறிகள் கொண்டு எனக்கு உபதேசித்தார். எனக்குள் அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பதிவு செய்தார்.

அதைத்தான் உங்களுக்கும் செய்கின்றேன். குருவின் அருள் ஞானத்தை உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.

இதை மீண்டும் நீங்கள் நினைவுக்குக் கொண்டு வரும் பொழுது உங்களைத் தூய்மையாக்கும் நிலையும் தீமையற்ற வாழ்வும் மன பலமும் மன வளமும் பெற்று மகரிஷிகளின் அருள் சக்தி பெறுவீர்கள்.

வைகுண்ட ஏகாதசி அன்று குருநாதர் ஒளி சரீரம் பெற்ற நாளில் நாமும் அதைப் பின்பற்றி என்றும் அழியா ஒளிச் சரீரமும் என்றும் இந்த வாழ்க்கையில் நமக்குள் இருள் சூழா நிலையும் மெய்ப்பொருள் கண்டுணர்ந்து செயல்படும் திறனும் நாம் பெறுவோம் என்று தியானிப்போம். 

November 24, 2016

பிரதோஷம் - “தன்னைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ..,” என்ற எண்ணத்திலேயே தான் பெரும்பகுதியானோர் வாழ்கின்றனர்

உங்களை நீங்கள் அறிந்து கொள்வதற்குத்தான் இதைச் சொல்கிறோம். ஏனென்றால், என்னை அறிந்து கொள்ள குருநாதர் பல அனுபவங்களைக் கொடுத்தார்.

ஆகவே, இந்த வாழ்க்கையில் நீங்கள் யாரையும் குறை காண வேண்டாம். சந்தர்ப்ப பேதங்கள் நம்மை எப்படி உருமாற்றுகின்றது என்ற நிலையை நீங்கள் உங்களை அறிந்து கொள்ள முடியும்.

இன்றிருக்கும் விஷமான விஞ்ஞான உலகில் அருள் ஞானிகளின் அருள் வட்டத்தில் நம்முடைய எண்ண அலைகளை நிரப்ப வேண்டும் என்று தான் சொல்லி வருகின்றோம்.

நமது குருநாதர் வைகுண்ட ஏகாதசி அன்று தன் உடலின் தன்மை உணர்வை ஒளியாக மாற்றிச் சென்றார். அவர் ஒளியான உணர்வை நமக்குள் சேர்த்து இனிப் பிறவியே இல்லை என்ற நிலையை நாம் அடைய வேண்டும்.

என்றுமே அந்த ஒளியின் உணர்வாக மகிழ்ந்த நிலையில் வளரவேண்டும் என்ற அந்த நிலைக்குத்தான் இதை உபதேசிக்கின்றோம்.

நீங்கள் எல்லாம் அந்த ஆற்றல்களைப் பெறவேண்டும் என்று நான் எண்ணும் பொழுது நானும் அதைப் பெறுகின்றேன்.

ஆக, நான் மட்டும் பெறவேண்டும் என்றும் நான் சொல்வதை எல்லாம் நீங்கள் கேட்க வேண்டும் என்று எண்ணினால் நான் நிச்சயம் பெற முடியாது.

சிறு துளி பெரு வெள்ளம். விண்ணின் ஆற்றலை சூரியனின் அணைப்பிலே கோள்கள் சென்றாலும் பல பல உணர்வுகள் இருந்தாலும் அது அனைத்தும் அதனுடன் சேர்த்து இணைக்கப்படும் பொழுது தான் ஒளியின் சுடராக மாறுகின்றது.

நமது உயிரும் அவ்வாறே.

ஆகவே எல்லோருடைய உணர்வுகள் நமக்குள்ளும் பல பல உணர்வுகள் உண்டு. அதைப் போல எல்லோரிடத்திலும் பல பல உணர்வுகள் உண்டு.

அதே சமயத்தில் ஒருவரிடத்தில் கார உணர்வு அதிகமாக இருக்கலாம். ஒருவரிடத்தில் சலிப்பு உணர்வு அதிகமாக இருக்கலாம். ஒருவரிடத்தில் சஞ்சல உணர்வு அதிகமாக இருக்கலாம்.

இதைப் போல ஒவ்வொரு உடலிலும் பல நிலைகள் முன்னனியில் உண்டு. அதன் கீழ் இயங்கும் நிலைகள் கொண்டு அவர்கள் எண்ணங்களும் அவர்களுடைய செயல்களும் அவர்களுடைய உடலின் நிலைகளும் அவரின் நோய்களும் அதுவாகத்தான் இருக்கும்.

இதைப் போன்ற பல நிலைகளில் நாம் தொடர்பு கொண்டாலும் நாம் அவர்கள் அனைவரும் நலம் பெறவேண்டும் மகரிஷிகளின் அருள் ஒளி பெறவேண்டும் என்ற ஏக்கத்துடன் நாம் இருப்போம் என்றால் சமத்துவம் பெறும் நிலை வருகின்றது.

ஆகவே, இதைப் போன்ற உணர்வின் நிலையை குருநாதர் சாக்கடைக்கு முன் அமர்ந்து என்னையும் அமரச் செய்து எனக்குள் வியாசகரின் தத்துவங்களை உபதேசித்தார்.

சாக்கடையில் அமர்ந்து தான் அதையெல்லாம் சொன்னார்.

காரணம், சாக்கடையின் நாற்றத்திலிருக்கும் பொழுது மற்றவர்கள் என்னைப் பார்க்கின்றனர். பார்த்தாலும் “சாக்கடை நாற்றமாகின்றதே..,” என்ற எண்ணம் தான் எனக்குள் வருகின்றது.

ஆனால், அதே சமயம் அவர் சாக்கடைக்குள் அமர்ந்து அவர் சொல்லும் பொழுதெல்லாம் எனக்கும் அருவெறுப்பாக இருக்கும்.

வியாசகருடைய தன்மைகளை அங்கே எடுத்துக் கூறி அந்த உணர்வின் ஆற்றல் கொண்டு எவ்வாறு விண்ணுலகம் சென்றார் என்று சொல்லும் பொழுது இந்த நிலைகள் மாறி அந்த உணர்வுகள் வருகின்றது.

இந்த நாற்றம் அப்பொழுது வரவில்லை.

ஆக, பிறர் என்ன பேசுகின்றார் என்று புற நிலைகளைப் பற்றிச் சிந்திக்க வேண்டியதில்லை. நமக்குள் இருக்கும் உணர்வின் தன்மையை மெய்ப் பொருளின் உணர்வின் தன்மையை நாம் பெறவேண்டும்.

யார் என்ன சொல்வார்கள்? இவர்கள் என்ன சொல்வார்கள்? என்னை அசிங்கமாகப் பேசுவார்களோ? என்னைக் கேவலமாக நினைப்பார்கள், என்னைக் குறையாக நினைப்பார்கள் என்று இதன் அடிப்படையில் தான் பெரும் பகுதியானவர்கள் இன்று நாம் வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

நாம் எதை மையமாக வைக்கின்றோமோ அதனின் உணர்வின் துணை கொண்டுதான் மற்றவைகள் அனைத்தும் அது இயங்கும்.

ஆகவே மெய்ப்பொருளின் உணர்வை நாம் பெறவேண்டும் என்று குரு காட்டிய வழிகளில் அதை முன்னிலைப்படுத்தி எடுக்கப் பழக வேண்டும்.

அந்த மெய்பொருளால் நம்மைப் பார்ப்பவர்கள் இருள்கள் நீங்க வேண்டும். அவர்கள் பொருளறிந்து செயல்படும் திறன் பெறவேண்டும் என்று இதை ஏற்றுக் கொண்டு இந்த வாழ்க்கையில் நாம் தொடர வேண்டும்.

இதை நீங்கள் தொடர்வீர்கள் என்றால் தீமையை அகற்றிடும் நிலையாகவும் தீமையை அகற்றிடும் அந்தச் சக்தியாகவும் உங்கள் சொல்லைக் கேட்போரும் தீமைகள் அகற்றிடும் நிலையாகவும் நீங்கள் பெறமுடியும்.