ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

Showing posts with label உயிரே கடவுள். Show all posts
Showing posts with label உயிரே கடவுள். Show all posts

July 27, 2026

ஆக்ஞை

ஆக்ஞை


சில சமயங்களில் நாம் எவ்வளவு தெளிவாக இருந்தாலும் நம்முடைய பையன் அடம் பிடித்தால் போதும், இந்தப் பற்று இங்கே வந்து விடுகின்றது. அது நம் எண்ணத்தை ஆன்மாவிலே மறைத்து விடுகின்றது. இந்த உயர்ந்த எண்ணத்தைப் பெறும் தகுதியை இழக்கச் செய்கின்றது.
 
இந்த நஞ்சான உணர்வு வந்து ஊடுருவப்படும் பொழுது இது தன் இரையை எடுத்துக் கொள்கின்றது. இந்த உடல் பற்றின் உணர்வுகள் அந்த அணுவின் வளர்ச்சியும் நமக்குள் தொடர்ந்து விடுகின்றது. இதைத் துடைப்பதற்கு அவ்வப்பொழுது எண்ண வலுவைக் கொண்டு வரவேண்டும்.
 
அதற்குத்தான் நாம் ஒவ்வொரு நிமிடமும்
1.“ஈஸ்வரா என்று நம் உயிரிடம் எண்ணத்தைச் செலுத்திப் பழக வேண்டும்… கண்ணின் நினைவை அங்கே கொண்டு போக வேண்டும்.
2.கூட்டுத் தியானத்தில் நாம் பெறும் அந்த மகரிஷிகளின் உணர்வை கண்ணின் நினைவிற்குக் கொண்டு வந்து உயிருடன் இணைக்க வேண்டும்.
3.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று இணைக்க வேண்டும்.
 
இவ்வாறு காட்டியதைத்தான் இந்தக் குண்டலினி யோகக்காரர்கள் ஆக்ஞைஇடப்பட்டு என்று சொல்வார்கள்.
1.நாம் எந்த உணர்வைச் செலுத்துகின்றோமோ அது மூலாதாரத்தில்உடலின் அணுக்களில் இயக்குகின்றது.
2.உடலின் உறுப்புக்களுக்கு மூலம் அணுக்களின் தன்மைஇங்கே உயிர் மூலாதாரம்.
 
இதைத்தான் மூலாதாரத்தில் மூண்டெழும் கனலைக் காலமறிந்துஎன்கிற பொழுது நம்மிடத்தில் தீய அணுக்கள் உண்டு. அதற்கு வளர்ச்சி இல்லாதபடி… மூண்டெழும் கனலைக் காலமறிந்து கருத்துடன் செயல்பட வேண்டும் என்று தான் அந்த இடத்தில் காட்டப்பட்டது.
 
இவர்கள் என்ன செய்கின்றார்கள் என்றால் அங்கே கட்டளை இடப்படும் பொழுது தான் ஆக்ஞை என்ற நிலையைக் கொண்டு வருகின்றார்கள். அப்பொழுது ஆக்ஞை இட்டுப் பரவுலகத்தை மேலே உச்சிக்குக் கொண்டு போய் இதன் வழி கொண்டு மோட்ச லோகத்திற்குக் கொண்டு போ என்று சொல்கின்றார்கள்.
 
மூலாதாரம்இந்த உடல் முழுவதற்கும் இங்கே கீழே இழுக்கப்பட்டு இந்த உணர்வுகள் சமைக்கப்பட்டு இந்த உணர்வின் தன்மை இரத்த நாளங்களில் இருந்து பிரிக்கப்படுகின்றது என்று இவர்களின் அனுமானம். மூலாதாரம் கீழே இருக்கின்றது என்று இவர்கள் கொண்டு போகின்றார்கள்.
 
1.ஆனால் நமக்கு மூலம் உயிர்நாம் எடுக்கும் உணர்வுகள் நமக்கு ஆதாரம்.
2.இந்த ஆதாரத்தை நமக்குள் மறைந்திருக்கும் ஒவ்வொரு அணுக்களுக்கும் சேர்ப்பிக்க வேண்டும்… இதுதான் குண்டலினி.
 
கண்ணின் நினைவு கொண்டு உயிருடன் ஒன்றி உணர்வினை உடலுக்குள் பரப்புதல் வேண்டும். அந்த உணர்வின் தன்மை வலுப்பெறும் பொழுது தீமைகளைப் பிளக்கின்றது.
 
ஏனென்றால் நமக்குள் பதிவான குணங்கள் பல கோடி. அது அது சாப்பாட்டிற்குக் கிளர்ந்தெழத்தான் செய்யும். பூமிக்குள் என்னென்ன விதை மறைந்திருக்கின்றதோ மழைக் காலம் வந்து விட்டதென்றால் துணிந்து ஆகாரத்தை எடுத்துத் தழைக்க ஆரம்பித்துவிடும்.
 
அதே மாதிரி அந்தந்தக் காலப் பருவத்தில் அது அதை எடுத்துக் கொள்கின்றது.
 
ஒருவர் கோபப்படுவதைப் பார்த்துப் பதிவு செய்து விட்டால் சண்டை போடுவதைப் பார்த்தால் அந்தக் காலப்பருவம் வந்துவிட்டது. உடனே ஆன்மாவில் சேர்ந்துவிடும்.
1.உடனே சண்டை போடுகிற மாதிரிதான் வரும்.
2.சண்டையை வேடிக்கை பார்த்தால் வீட்டில் சண்டை போடுவீர்கள்.
3.அந்தக் காலப்பருவத்தில் அது வளர ஆரம்பித்து விடுகின்றது.
 
நமக்குள் விளைய வைத்த வித்துகள் அந்தந்தக் காலப்பருவம் வந்து விட்டால் அது அது விளைய ஆரம்பித்து விடுகின்றது. எந்தக் காலப்பருவத்தில் விளைந்தாலும் நமக்குத் தேவைப்பட்டதை விளையச் செய்யக் களையை நீக்குகின்றோம். அதை நீக்குவதற்குச் சக்தி கொடுக்கின்றோம்.
 
1.எந்தக் காலப்பருவமானாலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற வேண்டும்.
2.அந்த உணர்வை உள்முகமாக உடலுக்குள் செலுத்தி வலுப் பெறச் செய்து அதற்குச் சாப்பாடு இல்லாமல் செய்ய வேண்டும்.
 
இந்தக் களையை நீக்க வேண்டும். இதை நீக்கினால்தான் அதற்குச் சாப்பாடு கிடைக்காது. இல்லையென்றால் சண்டை போட்ட அணுவெல்லாம் சாப்பாடு எடுத்துவிடும்.
 
ஓரு குடும்பத்தில் வேதனைப்படுகிறார்கள். அந்த வேதனையான சொல்லைக் கேட்டுக் கொண்டிருந்தோமென்றால் அந்தக் காலப்பருவம் என்ன செய்யும்…? அந்த வேதனையான அணுக்கள் நம்மிடம் வந்து வளர்ச்சிடைய ஆரம்பித்து விடுகின்றது.
 
இப்படிப் பெரும்பகுதி எங்கு திரும்பினாலும்ரயிலில் போகும் பொழுது அடுத்தவர்கள் செய்யும் தவறைப் பார்த்தால் வேதனை. கடையில் இருக்கும் போது ஒருத்தருக்குக் கடன் கொடுத்துவிட்டு அவர் திரும்பத் தரவில்லை என்றால் வேதனை கோபம் குரோதம் வெறுப்பு.
 
1.இதுவெல்லாம் சந்தர்ப்பத்தால் விளையப்படும் போது உள்ளுக்குள் ஊட்டம் கொடுத்துக் கொண்டேயிருக்கும்அது அது வளரும்.
2.மனிதருடைய மனநிலை காலையில் ஒரு மனதாக இருக்கும்.
3.இதை விட்டு வெளியே போகின்றோம் என்றால் மனது வேறு விதமாக மாறும்.
 
தொழிலில் அமர்ந்தவுடன் என்ன ஆகும்…?
 
ஒருவன் நம் சொல்லைக் கேட்காமல் இருப்பான். நமக்கு இடைஞ்சல் செய்து கொண்டே இருப்பான். நாம் இங்கே இருக்கும் வரையில் இதையெல்லாம் மறந்து இருப்போம். ரோட்டில் போகும் பொழுது மறந்திருப்போம். தொழிலில் உட்கார்ந்தவுடனே அவனைப் பார்த்தவுடனே மீண்டும் அந்தக் களை முளைக்க ஆரம்பித்துவிடும்.
 
வேதனை வெறுப்பு வந்து விட்டால் நல்லவர்களையும் வெறுத்துப் பேச ஆரம்பித்துவிடும். ஒரு நல்ல அமைப்பை அமைக்க வேண்டுமென்றால் வெறுப்பாகத்தான் வரும். அந்தந்தக் காலப்பருவத்தில் அது அது விளைகின்றது.
 
நாம் ஒவ்வொரு நிமிடத்திலும் மனிதன் காலப்பருவத்தை மாற்றுகின்றோம். அதே போல
1.மாற்றியமைத்த அருள் ஞானிகளின் உணர்வுகளை உடலுக்குள் செலுத்தி
2.அந்தந்தப் பருவங்கள் வரப்படும் பொழுது களைகளை நீக்கிக் கொண்டே இருக்க வேண்டும்.
 
இதுதான் ஆத்ம சுத்தி என்பது.
 
அந்தத் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும். எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் ஜீவான்மாக்கள் ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று நம் கண்ணின் நினைவைப் புருவ மத்திக்குக் கொண்டு வந்து பல முறை எண்ண வேண்டும்.
 
இதைத்தான் அன்று ஞானிகள் சொன்னது ஆக்ஞை..! இந்த உணர்வின் தன்மை கொண்டு நம் உயிருடன் எதை எண்ணுகின்றோமோ உயிர் அதை இயக்கும்.
 
அந்தத் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி, எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்ற உணர்வைப் புருவ மத்தியின் வழியாக உடலுக்குள் கொண்டு போக வேண்டும்.
 
சிறிது நாட்களுக்குப் பழக்கம் வந்து விட்டதென்றால் இது உள்ளுக்குள் கொண்டு போகும். அப்பொழுது இந்த உணர்வின் செல்களை வளர்க்கப்படும் பொழுது எதை அங்கு பற்றினோமோ இந்த நினைவு துருவ நட்சத்திரத்திற்குக் கொண்டு போகும்.

July 22, 2026

நீசமாகும் உடலுக்கு நாம் கௌரவம் பார்க்க வேண்டியதில்லை

நீசமாகும் உடலுக்கு நாம் கௌரவம் பார்க்க வேண்டியதில்லை


உதாரணமாக நாம் நமது நண்பர் ஒருவர் வீட்டிற்குச் செல்வோம். அப்பொழுது அவர் ஏதோ ஒரு சங்கடத்தில் இருந்திருப்பார். அவர் தன் சங்கட நிலையில் நம்மைவாங்க…!” என்று அழைக்காது விட்டு விட்டால் போதும்.
 
நமது மனதில்இவனுக்கு வந்த கௌரவத்தைப் பார்வீடு தேடி வந்திருக்கிறேன்கொஞ்சமாவது மதிக்கிறானா…?” என்ற வெறுப்பு உணர்வுகளைச் சுவாசிக்க நேர்கின்றது. “நம்மை மதிக்கவில்லையே…” என்று எண்ணும் பொழுது, வேதனை உணர்வுள் நம்மிடத்தில் வருகின்றது.
 
1.“வாங்க…” என்று எந்த மனிதர் நம்மை அழைக்கவில்லையோ
2.அந்த மனிதருடைய நல்ல குணங்களை நல்ல பண்புகளை நாம் அறிய முடியாதபடி
3.நம்முடைய வேதனையான உணர்வுகள் மறைத்து விடுகின்றன.
 
நண்பராக இருந்து அன்புடன் பழகிய அவரின் நல்ல உணர்வுகளை நாம் அறிய முடியாதவாறு நம்முடைய சிந்தனைத் திறனும் தெளிந்த மனமும் குறைந்து கொண்டே வருகின்றது.
 
உங்கள் வாழ்க்கையில் எத்தகைய தீமைகள் ந்தாலும் அத்தகைய தீமைகளை நீக்கிடும் அருள் சக்தி பெற வேண்டும் என்பதற்குத்தான் யாம் அருள் ஞானத்தை உங்களுள் பதிவாக்குகின்றோம்.
 
நமக்குள் இருக்கக்கூடிய உயிரான ஈசன் இந்த உடலை விட்டுப் போய்விட்டது என்றால் இந்த நீசத்திற்கு வேலையே இல்லை. நாம் எத்தனை கௌரவம்எத்தனை துணிஎத்தனை அலங்காரம்எத்தனை சுகமான நிலைஎத்தனை பஞ்சு மெத்தை…? போட்டு வைத்திருந்தாலும் இந்த ஈசன் போய்விட்டால் குப்பையில் போட்டு எரித்துவிடுவார்கள்.
 
நடைமுறையில் நாம் பார்க்கும் கௌரவம் எல்லாம்இப்படியெல்லாம் இருந்தார்கள் என்று பார்க்கிறோமோ…?
1.இழுத்துக் கொண்டு கட்டையில் வைக்கும் போதும் மண்ணைக் கொட்டும் போதும் பார்த்துக் கொண்டேதான் இருக்கின்றோம்.
2.ஏன்டா இப்படிச் செய்கின்றாய்…? என்று கேட்கின்றோமோ…!
3.ஒரு நாளைக்கு மேல் வைத்திருந்தால் நாற்றம் அடிக்கும் என்று தூக்கிச் சென்று விடுகிறோம்.
 
இப்படி இருக்கப்படும் பொழுது இந்த உடலிலே ஈசன் இருக்கும் போழுதே நீங்கள் இந்த கௌரவத்தைப் பார்ப்பதைக் காட்டிலும் அந்த மெய் ஞானியின் உணர்வை எடுத்து அந்த நீசமான உணர்வு நமக்குள் வளராதபடி அந்த மெய் ஞானியின் உணர்வை வளர்க்கச் செய்யுங்கள்.
 
இந்தக் கௌரவப் பிரச்சனை நமக்குள் நிறையவே உண்டு. ஏனென்றால் நாம் அல்ல.
 
அரசனுக்குகௌரவத்தில் என்ன செய்கிறான்…? யார்… என்ன தப்புப் பண்ணினாலும் சரி…? உடனே போர் தான். நான் சொன்னேன் கேட்கவில்லை... உடனே போர் முறை.
 
இப்பொழுது நான் வலுவாக நிலையில் இருக்கிறேன்.
1.நான் சொன்னதைக் கேட்கவில்லை என்றால் உடனே எதிர்த்துவிடு.
2.என்னை எதிர்த்துப் பழகி விட்டால் அதே உணர்வு என்ன சொன்னாலும் அங்கே கேட்க மாட்டார்கள்.
3.இந்த உணர்வினுடைய வேலை எதிர் நிலைகளில் வேலை செய்து கொண்டே தான் இருக்கும்.
 
ஆக எந்தெந்த உணர்வுகள் நமக்குள் முன்னனியிலே நிற்கிறதோ அது வேலை செய்து கொண்டே இருக்கும்.
 
இதை மாற்றுவதற்காகத் தான் உங்களுக்கு இந்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைக் கொடுக்கின்றோம். இதை வைத்து வாழ்க்கையில் எப்பொழுது துன்பம் வருகிறதோ அப்பொழுது நிவர்த்தி செய்து பழக வேண்டும்.
 
இன்று நாம் நமது மனித வாழ்க்கையில் உடல் பற்று கொண்டு உடலை வளர்க்கச் செல்வத்தைத் தேடி அலைகின்றோம். அதே சமயம் தேடிச் சேர்த்த செல்வம் நாம் இறந்தபின் நம்முடன் வருமா…? வருவதில்லை. நமது உடல் கூட வருவதில்லை.
 
ஆனால் நாம் சேர்த்து வைத்திருக்கும் செல்வத்தை எண்ணி அந்தச் செல்வத்தைத் தன் மகன் காப்பானா…? அடுத்தவர்கள் திருடிக் கொண்டு போய்விடுவார்களா…? என்ற அச்சமும் வேதனையும் கொள்கின்றோம்.
 
தன் மகனைக் காக்க வேண்டுமென்றுதான் எண்ணுகிறோம்.
1.அவனை எப்படிக் காக்கப் போகிறேன்…? என்று அவனை நினைத்து வேதனையை நமக்குள் வளர்த்து விட்டால்
2.நமது உடலில் விஷ அணுக்கள் பரவி நம்மை மனிதனாக உருவாக்கிய நல்ல அணுக்களைக் கொன்று விடுகின்றது
3.கடும் நோயினை நமக்குள் உருவாக்கிவிடுகின்றது.
 
நோயானபின் உடல் நலிந்து மனித உடலை உருவாக்கிய உணர்வுகள் அனைத்தும் அழிந்து விஷம் கொண்ட உணர்வுகள் உடலில் பெருகிய நிலையில் உடலை விட்டு உயிரான்மா வெளியில் வருகின்றது.
 
எந்த மகன் மீது பற்று வைத்தோமோ அவனுடைய உடலுக்குள் புகுந்து விடுகின்றது.
 
குடும்பத்தில் பத்துப் பேர் இருந்தாலும்
1.பத்துப் பேரில் யார் மீது அதிகப் பாச உணர்வைச் செலுத்தினோமோ
2.இந்த உயிரான்மா இதன் தொடர் கொண்டு பற்று கொண்ட உடலுக்குள் தான் செல்கின்றது.
 
இது போன்றே பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மை கொண்ட நீங்கள்நான் அவனுக்கு உதவி செய்தேன். ஆனால் அவன் என்னை மதிக்கவில்லை. உதவி வேண்டும் போது மட்டும் என்னை அணுகினான் அவனுக்கு வசதி சேர்ந்தபின் என்னைத் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை என்று வேதனைப்படுகின்றோம்.
 
வேதனைப்படும் உணர்வுகளை நீங்கள் எண்ணினால் வேதனையின் உணர்வுகள் வளர்ந்து எந்த மனிதனை எண்ணி வேதனையின் உணர்வுகளை வளர்த்தார்களோ அதனின் உணர்வுகள் உங்கள் உடலில் பெருகி இந்த உடலை விட்டுப் பிரிந்து சென்றபின் எந்த உணர்வின் தன்மையைத் தன்னுள் வளர்த்தீர்களோ உயிராத்மா அவரின் உடலுக்குள் சென்றுவிடும்.
 
1.அங்கே சென்று தன்னுள் வளர்த்த வேதனையை அவரிடத்திலும் உருவாக்கி
2.வேதனையின் உணர்வுகளை அதிகமாக வளர்த்த நிலையில் தான் புகுந்த உடலையும் வீழ்த்திவிட்டு வெளி வந்தபின்
3.உயிரான்மாபாம்பாகவோ தேளாகவோ தான் அடுத்த உடலைப் பெறும்.
 
ஆகவே நல்ல நினைவு இருக்கும் போதே உயிரை மதித்து மகரிஷிகளின் அருள் சக்திகளை உயிரான்மாவுக்குச் சேர்க்கும் அழியாச் சொத்தாக ஆக்க வேண்டும்.

இச்சை… கிரியை… ஞானம்…!

இச்சை… கிரியை… ஞானம்…!

 
ரோட்டிலே சண்டை போடுகின்றார்கள் ஏன் சண்டை போடுகின்றார்கள்…? என்று இச்சைப்படுகின்றோம். நுகர்கின்றீர்கள்… கிரியை ஆகின்றது. பார் நடு ரோட்டில் சண்டை செய்கின்றான் பார்…! என்பீர்கள்
 
அப்போது யார் பேசுவது…? அந்த உணர்வு உங்களை இயக்குகின்றது.து கிரியை ஆகி அதன் ஞானப்படித் தான் நீங்கள் பேச ஆரம்பிக்கின்றீர்கள்.
 
நான் இங்கே உபதேசம் கொடுத்துக் கொண்டிருக்கின்றேன்.
1.அந்த அருளைப் பெற வேண்டும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று பதிவு செய்து விட்டால்
2.தை நீங்கள் எண்ணும் பொழுது அந்தச்ண்டை போட்ட உணர்வுகள் இயங்காதபடி அதை அமுக்கித் தடைப்படுத்தி விடும்.
3.துருவ நட்சத்திரத்தின் சக்தியை இச்சைப்படும் பொழுது இது முதலில் புகுந்து விடுகின்றது.
 
போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று யார் முந்திப் புகார் (COMPLAINT) செய்கின்றார்களோ அவர்களுடைய உணர்வுகள் தான் எடுபடும்.
 
ஆக நம் உயிர் இருக்கும் இடம் போலீஸ் ஸ்டேஷன்…! இவர்கள் உணர்வை உள்ளே விட்ட பின் என்ன ஆகின்றது.
1.உள்ளுக்கே சென்று அந்த உணர்ச்சியைத் தூண்டுவதற்கு முன்னாடி
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று தடுத்து விட்டால்
3.இங்கே உயிரிடம் ரிப்போர்ட் கொடுத்து விடுகின்றோம்.
4.கெட்டது உள்ளே வராதபடி அதை துரத்துகின்றது உள்ளே போகாதபடி தடுக்கப்படுகிறது.
 
சொல்வது அர்த்தமாகிறதல்லவா.
 
உங்கள் நண்பனைக் காண வேண்டும் என்று விரும்புகின்றீர்கள். பார்க்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன் ஆளைக் காணோமே…? எங்கே…? என்று கேட்பீர்கள்.
 
ஐயோ…! உங்களுக்குத் தெரியாதுங்களா…? அவர் உடல் நிலை சரியில்லாதபடி படுத்திருக்கின்றார் என்று சொல்கிறார்கள்.
 
இதைக் கேட்ட பின் பதிவாகின்றதுந்த உணர்வைச் சுவாசிக்கின்றீர்கள் மூஷிகவாகனா.
1.அடுத்த கணம் ண்பரைப் பார்க்க அந்த உணர்வு இங்கிருந்து நம்மை அழைத்துச் செல்கின்றது.
2.அந்த உணர்வுகள் தான் உணர்ச்சியாக எண்ணங்களாக சொல்லாக வந்து இழுத்துச் செல்கின்றது.
 
இச்சை… கிரியை ஞானம்…! அவனைக் காண வேண்டும் என்று ஞானத்தை ஊட்டுகின்றது.
 
வாழ்க்கையில் இதையெல்லாம் புரிந்து கொள்வதற்குக் காவியங்களைப் படைத்து நம் உடலுக்குள் ஒவ்வொரு உணர்வும் என்ன செய்கின்றது…? நம்மை எப்படி இயக்குகின்றது…? நாம் இந்த வாழ்க்கையில் எப்படிச் செல்ல வேண்டும்…? என்று தான் கோவிலில் வைத்துக் காட்டுகின்றார்கள்.
 
அதை நாம் புரிந்து கொள்ள முடியவில்லை.
 
நண்பனைப் பார்க்கின்றோம். அவர் என்னால் முடியவில்லை என்று  சொல்லும் பொழுது.. பாசத்தால் நாம் கேட்கப்படும் போது என்ன நடக்கிறது…? அதைக் கவர்கின்றீர்கள்… இச்சைப்டுகின்றீர்கள்… நீங்களும் சேர்ந்து அழுக ஆரம்பிக்கின்றீர்கள்.
 
அந்த ஞானத்தின் தன்மை கொண்டு இப்படி ஆகிவிட்டதா…? நேற்று நன்றாகத் தானே இருந்தாய் இன்று இப்படி ஆகி விட்டாயா…? என்ற ஞானத்தைத் தான் பேசுகின்றது.
 
ஆகவே இந்த வாழ்க்கையின் நிலைகளில்
1.நம் ஆறாவது அறிவை வைத்து அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்து
2.இதுபோன்று ஒவ்வொரு நொடிப்பொழுதும் வரும் தீமைகளை உடலுக்குள் இயக்கச் சக்தியாக மாறாதபடி நாம் தடுத்துக் கொள்ள வேண்டும்.

July 11, 2026

அவனுக்குள் ஒன்றி… அவனாக… அவனாகவே ஆக வேண்டும்

அவனுக்குள் ஒன்றி… அவனாக… அவனாகவே ஆக வேண்டும்

 

ஈசனுக்கு முன் நாம் எல்லோரும் ஒன்று. நாம் உருவாக்கும் நிலைகள் எல்லாம் ஒன்றி நமது உயிர் ஈசனாகின்றது. அவன் அமைத்த கோட்டை இந்த உடல். இந்தக் கோட்டையை நாம் எப்போதுமே புனிதப்படுத்த வேண்டும்.  
 
1.அவனுக்குள் ஒன்றி அவனாகவே ஆகவேண்டும்.
2.“என்னுள்ளே என்றும் நீ இருந்துவிடு ஈஸ்வரா என்று நாம் சொல்லும் இந்த உணர்வுகள் ஒலி ஒளி என்ற நிலையில்  உயிர் என்று ஆகின்றது.
3.“நீயே தான் நான்... நானே தான் நீ…!” என்று உயிரோடு ஒன்றி  ஒளியென்ற நிலை  நாம் என்றும் பெற்றிடுவோம்.
 
இந்த மனித உடலை உருவாக்கியது நமது உயிர் என்றாலும் ஒவ்வொரு உடலிலும் காத்திடும் உணர்வினைச் சேர்த்துச் சேர்த்து அதன் உணர்வுக்கொப்ப  அந்தந்த உடல்களில் அதைக் காத்திடும் ஞானமும் அதன் வழி வளர்ச்சியும் பெற்று இன்று மனிதனாகி உள்ளோம்.
 
இந்த உடலில் உயிர் நம்மை உருவாக்கியது என்று எல்லாவற்றையும் அறிந்திடும் ஆறாவது அறிவின் துணை கொண்டு என்றும் ஒளியின் சுடராக வாழ வேண்டும்.
 
உயிரின்  உணர்வில் எக்காரணம் கொண்டும் நஞ்சு அணுகாது காத்துக் கொண்டவர்கள் ஞானிகள்.
1.இந்த மனித உடலில் ஆறாவது அறிவில் விஷத்தைக் கலக்காது அதைத்  தடுக்கும் ஞானம் தான்
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வினை நம் உடலுக்குள் உள்ள அணுக்களுக்குச்  சேர்ப்பிக்கும் நிலை.
 
அதைப் பெறும் நிலையாகத் தான் இப்பொழுது உபதேசித்துக் கொண்டுள்ளோம். 
 
ஆகையால் நீங்கள் உங்கள் உயிரைக் கடவுளாக மதித்து ஆறாவது அறிவை அதனுடன் இணைக்கும் பருவம் பெற வேண்டும். ஆறாவது அறிவின் துணை கொண்டு தான் இன்று துருவ நட்சத்திரம் ஒளியின் சுடராக இருக்கின்றது.
 
1.நாம் இந்த உடலை விட்டு எந்த நிலையில் சென்றாலும்
2.ஒரு கூட்டமைப்பாக வாழ்ந்து கொண்டிருக்கும்
3.உயிருடன் ஒன்றி உணர்வினை ஒளியாக மாற்றிச் செல்லும் கூட்டமைப்பில் (சப்தரிஷி மண்டலம்) நாம் இணைந்திடல் வேண்டும். 
 
அங்கே இணைந்து விட்டால் நமக்கு அழிவே இல்லை.
 
அகண்ட அண்டமே இருண்ட சூழ்நிலைகள் கொண்டு பல பிரபஞ்சங்கள் அழிவைத் தேடிச் சென்றாலும் அந்தந்தப்  பிரபஞ்சங்களில் தோன்றிய  உயிரணுக்கள் அது ஒளியின் சுடராகத்தான் வாழும்.
 
எத்தனையோ கோடி ஆண்டுகள் என்றும் ஏகாந்த நிலை என்ற அந்த நிலை பெறுவது இந்த மனித உடலில் தான்.  ஆனால்
1.நம்முடைய இந்தச் சந்தர்ப்பம் மிகப் பெரிய சக்தி வாய்ந்த குருவின் அருளைப் பெற்றதினால்
2.நம் அனைவருக்கும் அந்தப் பாக்கியம் கிடைத்துள்ளது.
 
நமது குருவின் மூலம் எத்தகைய கடும் விஷத்தையும் ஒளியாக மாற்றிடும்  சக்தியைப்  பெற முடிந்தது.
1.நமது குரு விஷத்தையும் தாங்கி அதை ஏற்றுக் கொள்ளும் பருவத்தினை ஏற்படுத்தினார்.
2.ஆகவே தான் உங்களுக்கும் அந்த ஆற்றல் மிக்க சக்தியாக விஷத்தை ஒளியாக மாற்றும் திறனைப் பெறச் செய்வது.
 
நாம் ஒவ்வொரு நாளும் உயிரின் முகப்பில் ஈர்க்கப்படும் பொழுது ந்தத்  துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உடல் முழுவதும் பரவுகின்றது.
 
இதைப் போன்று
1.உடல் உறுப்புகளை உருவாக்கிய  அணுக்களின் முகப்பின் இயக்கத்தில்
2.உயிரின் துணை கொண்டு துருவ நட்சத்திரத்தின் உணர்வினை குரு எமக்கு எப்படி ஈர்க்கச் செய்தாரோ
3.அதைப் போன்று உங்களில் ஈர்க்கச் செய்யும் பொழுது நாம் அனைவரும் ஒளியின் சரீரம் பெறும் தகுதி பெறுகின்றோம்.
 
நாம் அனைவரும் அவர் காட்டும்  வழியில்  செல்வோம். குருவின் துணையால் அஞ்ஞானத்தை அகற்றி மெய் ஞானத் தொடரில் இந்த வாழ்க்கையைத் தொடர்வோம். எமது அருளாசிகள்.