
"சாமி சொல்லும் வழியில் நடந்தால்" நம்மை நாம் காக்க முடியும் என்ற நம்பிக்கை வர வேண்டும்
மற்றவர்களைக் காக்க நாம் உதவி செய்தாலும்... அவருடைய துயரத்தை வேதனையை நுகர்ந்த நிலையில் அது விஷமான உணர்வாக நம் உடலுக்குள் சென்று... நம்மை ஆபத்தான நிலைகளுக்குக் கொண்டு செல்கின்றது.
ஏனென்றால் நன்மை செய்தாலும் அதைத் தடுக்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும். அதற்குத் தான்
1.உங்கள் வாழ்க்கையில் எந்த நிமிடமும் எந்த நேரத்திலும் நீங்கள் எண்ணும் பொழுதெல்லாம்...
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெறும்படி தகுதியை ஏற்படுத்துகின்றோம்... அடிக்கடி நினைவு படுத்துகின்றோம்.
3.அனைவரது உடல்களிலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று
4.24 மணி நேரமும் நான் சதா தியானத்தின் மூலம் எடுத்துப் பாய்ச்சிக் கொண்டிருக்கின்றேன்.
எம்முடைய உபதேசத்தைக் கேட்டுக் கொண்டிருந்தாலே உங்கள் தலை வலி மேல் வலி குறையும்... இடுப்பு வலி இருந்தால் அதுவும் குறையும். ஏனென்றால் இதைக் கேட்கப்படும் பொழுது அந்த நஞ்சுகள் அகல்கின்றது.
ஆனாலும்... சாமி உபதேசிக்கின்றார்...! அதைக் கேட்க விடாது "மற்றவர்கள் பேசிக் கொண்டிருக்கின்றார்களே..." என்று அதன் பால் நினைவச் செலுத்தி விட்டால் அடுத்த நிமிடம் மேல் வலி தலை வலி... வெறுப்பு எரிச்சல் கை கால் குடைச்சல் நிச்சயம் வரும்.
காரணம்... "நாம் நுகர்வதைத் தான் நமது உயிர் இயக்குகிறது..." என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். புரிந்தாலும் அதை மாற்றும் வழி வேண்டும்.
அதை மாற்றுவதற்குண்டான சக்தி உங்களுக்குக் கிடைப்பதற்குத் தான் இதை உபதேசிப்பதும் அருள் உணர்வுகளைப் பதிவு செய்வதும்.
உபதேசக் கருத்துக்களை மீண்டும் நினைவுக்கு கொண்டு வந்தால் உங்கள் எண்ணம் உங்களைக் காக்கும் சக்தியாக அது வரும். ஆனால் அதற்குப் பதில் சாமி தான் செய்து கொடுப்பார் என்று நம்பினால்... "அது மிகவும் பிழையானது..."
1.சாமி சொன்ன உணர்வைப் பதிவாக்கி கொள்ள வேண்டும்.
2."அதன் வழி நடந்தால் நம்மை நாம் காக்க முடியும்... " என்ற அந்த நம்பிக்கை வர வேண்டும்.
ஏனென்றால் சாமியார் செய்வார் கோவிலில் இருக்கும் தெய்வம் செய்யும் என்ற இந்த நம்பிக்கையில் தான் வாழ்கின்றோம்.
அந்தத் தெய்வ குணத்தைப் பெற வேண்டும். அந்தத் தெய்வ நிலை பெற வேண்டும்... அந்தத் தெய்வச் செயலாக நாம் செயல்பட வேண்டும். இந்த ஆலயம் வருவோரெல்லாம் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று எண்ணினால்
1.அந்த உணர்வு நமக்குள் அத்தகைய செயலாக உருவாக்குகின்றது.
2.ஆக நாம் எண்ணியதைத் தெய்வமாக்குகின்றது.
அனைவரும் நல்லவராக வேண்டும்... குடும்பத்தில் அனைவரும் தெய்வீகப் பண்புகள் பெற வேண்டும் என்று எண்ணினால் நாம் அதுவாக ஆகின்றோம்.
குருநாதர் காட்டிய அருள் வழியில் இயற்கையின் பேருண்மைகளை எல்லாம் சொல்லி வருகின்றோம். ஆனாலும் நான் படிக்காதவன் தான்.
1.அனைத்துச் சக்திகளும் காற்றில் இருக்கின்றது... குரு காட்டிய வழியில் அதை நான் நுகர முடிகின்றது.
2.வியாசகன் எப்படி அகஸ்தியன் உணர்வை நுகர்ந்து உண்மைகளைக் கண்டறிந்தானோ அதைப் போன்று தான் குருநாதர் எம்மை நுகரும்படி செய்தார்.
3.அதைத்தான் உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.
நீங்கள் பிறவி இல்லாத நிலை அடைய வேண்டும். வாழ்க்கையில் வரும் இருளை அகற்றி மெய்ப்பொருள் காண வேண்டும் என்று எண்ணினால் எந்தத் தீமையும் உங்களை சாடாது. உங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.
உங்களை நீங்கள் நம்புங்கள.