மாமகரிஷி ஈஸ்வராய
குருதேவர் காட்டிற்குள் அழைத்துச் சென்று குளவியைக் காட்டுகின்றார். குளவி
புழுவைத் தூக்கி வந்து விஷத்தைப் பாய்ச்சி அதைத் தன் இனமாக ஆக்க வேண்டும் என்ற
நோக்கத்துடன் செயல்படுகின்றது.
உயிரினங்களில் தன்
இனத்தைப் பெருக்க வேண்டும் என்ற உணர்வுகளில் இனச் சேர்க்கை வேறு.
1.இனத்தை உருவாக்க
வேண்டும்
2.தன் இனமாக ஆக்க
வேண்டும் என்ற உந்துதல் வேறு.
குளவி தனக்குள் எண்ணிய
உணர்வின் தன்மையைப் புழுவின் மேல் பாய்ச்சுகின்றது. தனக்குள் ஊறும் உமிழ் நீரைக்
கூடாகக் கடி அந்தப் புழுவினை அங்கே இணைக்கப்படும் பொழுது தன் உணர்வின் இயக்கங்களை
அதன் மேல் தாக்குகின்றது.
இதற்குள் இருக்கும்
விஷத்தின் தன்மை தாங்காது புழுவுக்கு, அந்தக் குளவியின் நினைவே வருகின்றது.
புழுவின் உடலில் அந்த உணர்வுகள் அதிகரிக்கப்படும் பொழுது அதிலே பதிந்து விடுகின்றது.
குளவி தன் விஷத்தால்
புழுவைத் தாக்கும்போது புழுவின் நினைவலைகள் குளவியால் தாக்கப்பட்ட உணர்வு கொண்டு
எவ்வாறு இணைக்கின்றது.
அந்த உணர்வுகள் அதற்குள்
இருக்கக்கூடிய காந்தப் புலனறிவு எவ்வாறு இயக்குகின்றது எவ்வளவு துரிதமாக
இயக்குகின்றது என்பதை உணர்த்துகின்றார்.
அதே சமயத்தில் எம்மை
ஓங்கி அடிக்கின்றார். அடித்தவுடன் அவரைத் திடீரென்று பார்க்கின்றேன். குருநாதர்
மேல் திருப்பம் வருகின்றது.
திடீரென்று திரும்பியவுடன்
அவர் உணர்த்தும் உணர்வின் அலையை அந்த மெய்ஞான உணர்வை எடுத்து
1.எம் எண்ணத்தில்
கவரச் செய்கின்றார் இழுக்கச் செய்கின்றார்.
2.அவர் உணர்த்தும்
மெய் உணர்வைக் கவர்ந்து இழுத்தவுடன் சிரிக்கின்றார் குருநாதர்.
அதாவது..., குருநாதர்
அடித்தவுடன் திரும்பிப் பார்க்கின்றேன். அவருக்குள் விளைந்த சக்திகள் அவர்
எண்ணத்தால் வெளியிடுவதை உடனே உற்றுப் பார்த்தவுடன் அந்த உணர்வுகள் வருகின்றது.
அப்பொழுது அவரை
எண்ணியபின் அவர் அடித்ததை மறந்து குளவி எப்படி விஷத்தால் புழுவைத் தாக்கியபின்
அந்தப் புழு வேதனையை நீக்கிவிட்டு குளைவியையே எண்ணுகின்றதோ அதே மாதிரி குருநாதரையே
எண்ணுகின்றேன்.
1.குருநாதருடைய
எண்ணத்தை வைத்து
2.குருநாதருடைய
நிலைகளை எண்ணப்படும் பொழுது
3.அவர் கண்டுணர்ந்த
மூலத்தின் உணர்வுகளை
4.அவருக்குள் இணைத்ததை
எனக்குள் (ஞானகுரு) இணைக்கின்றார்.
5.இப்படித்தான்
குருநாதர் மெய் உணர்வின் தன்மையை எம்மைப் பெறச் செய்தார்.