ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

Showing posts with label மகாபாரதம். Show all posts
Showing posts with label மகாபாரதம். Show all posts

February 10, 2026

தீய வினைகள் அனைத்தும் பாசத்தால் வருவது தான்…! - கண்ணன் சொன்னது

தீய வினைகள் அனைத்தும் பாசத்தால் வருவது தான்…! - கண்ணன் சொன்னது


புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையில் ஒவ்வொரு உடலிலும் காத்துக் கொள்ளும் உணர்வினை எடுத்து மனிதனாக வளர்ச்சி அடைந்ததைக் குறிப்பிடுவதற்குத்தான்
1.அர்ச்சுனன் சகலகலா வல்லவன்சகல வித்தைகளையும் கற்றுக் கொண்டவன்
2.வல்லமை பெற்றவன்…! என்று ஞானியர்கள் உணர்த்தினார்கள்.
 
கண்ணன் கீதா உபதேசம் செய்வதாகத் தத்துவங்களைச் சொல்கின்றனர். அன்று ஞானியர்கள் உணர்த்திய அந்த உண்மைகளைப் பார்ப்போம்.
 
தன் சகோதரர்கள் எதிர் நிலையில் இருந்து போர் செய்கின்றார்கள். சகோதர பாசம் என்ற உணர்வுகள் அர்ச்சுனனுக்குள் இருந்ததினால் சகோதரர்களைப் பார்த்ததும் அவர்களைக் கொல்ல அவனுக்கு மனம் வரவில்லை. 
 
அவர்களை விட்டு விட்டால் அவர்கள் உன்னை அழித்து விடுவார்கள்.  ஆகையால் நீ உன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று கண்ணன் அர்ச்சுனனுக்கு உபதேசித்தாகச் சொல்வார்கள்.
 
அதன் விளக்கம்…! ஒருவன் தவறு செய்கிறான் என்றால் அந்தத் தவறான நிலைகளை நாம் கூர்ந்து கவனித்தால் அந்தத் தவறான உணர்வுகள் நமக்குள் இயக்குகின்றது…
 
ஒருவன் வேதனைப்படுகின்றான் என்றால் அந்த வேதனையான உணர்வை நம் கண் கொண்டு பார்க்கப்படும் பொழுது அந்த உணர்வுகள் நமக்குள் மாறி நமது நல்ல குணங்களைச் செயலற்றதாக ஆக்கிவிடும்…
 
ஆகையால் நீ சகோதரன் என்று பார்த்தாலும்
1.அந்த இரக்க உணர்வால் நீ இதைச் செயலாக்கவில்லை என்றால் அது உன்னை அழித்துவிடும்
2.நீ கற்றுணர்ந்த வல்லமை அப்போது எங்கே செல்கின்றது…? என்று கண்ணன் அர்ச்சுனனுக்கு உபதேசிக்கின்றான்.
 
கண்ணன் சொன்னதன் நிலைகள் தீய வினைகள் அனைத்தும் பாசத்தால் வரக்கூடியது தான்…!” தன் சகோதரன் என்று உணர்ந்தாலும் தீய விளைவுகளிலிருந்து அவர்கள் தீயவர்கள் என்று உணர வேண்டும்.
 
அவர்கள் செய்யும் தவறான உணர்வுகளைத் தனக்குள் எடுத்துக் கொண்டால் நமது நல்ல குணங்களை இங்கு அழித்து விடுகின்றது.
 
1.ஒருவன் செய்யும் தவறான உணர்வை உன் உடலுக்குள் சேர்க்கா வண்ணம் அதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
2.அவன் செய்யும் தவறான உணர்வை எண்ணாதபடி அவனுக்குள் உனது நல் எண்ணத்தைச் செலுத்த வேண்டும்.
3.அவன் அறியாத இருள்களிலிருந்து மீள வேண்டும்… இதை உணர்த்தவே அங்கு அம்பாக எய்யச் சொன்னது.
4.அதாவதுஇந்த எண்ணத்தைக் கொண்டு மகரிஷிகளின் அருள் உணர்வுகளை அவர்களுக்குப் பாயச் செய்வது.
 
அதன் வழி எதிரிகளிடம் இருக்கும் உண்மையின் நிலைகளைத் தெளிவாக எடுத்துச் சொல்ல வேண்டும். எதிரியுடன் இருந்து நின்று அவர்கள் போர் செய்யும் பொழுது தவறான உணர்வுகளில் சிக்கித் தவிக்கும் நிலைகளில் இருந்து அவர்களை மீட்க வேண்டும். அதை எவ்வாறு மீட்க வேண்டும்? என்ற நிலையைக் கண்ணன் உபதேசித்ததாகவும் கீதையிலே எழுதுகின்றனர்.
 
உடலுக்குள் நடக்கும் இத்தகைய “உணர்வின் இயக்க நிலைகளைத் தான்அன்று ஞானியர்கள் கண்ணன் சொன்னதாக உணர்த்தினார்கள்.

March 17, 2025

துவர் ஆடை கொண்டு ஞான நீர் அருந்த வேண்டும்

துவர் ஆடை கொண்டு ஞான நீர் அருந்த வேண்டும்


வியாசக பகவான் பார்த்தனுக்குத் தத்துவப் பொருளாகக் கீதையை உபதேசித்து கண்ணன் என்று பாரத இதிகாசத்தை உலகினுக்கீந்த சூத்திரதாரியாகச் செயல்பட்ட அந்த மாமுனிவர் யாரப்பா?
 
இயங்கும் இயக்கம் என்று தத்துவப் பொருள் காட்டிய எத்தனை எத்தனையோ வாழ்க்கை நடைமுறைகள் அவற்றின் சம்பவங்கள்
1.ஆத்மா ஐக்கிய நிலை
2.நீதியை நிலைநாட்டும் வேகம்வேகம் கொண்டிட்ட விவேகம்
3.இயங்கும் இயக்கமான சம்பவங்களில் நீதியை நிலைநாட்டும் போராட்டம்
4.வாழ்க்கை மோதல் சம்பவங்களின் நன்மை தீமைகளில் இருவினைப் பயனால் செயல்படுத்திடும் தாந்திரீகங்கள்
5.தாந்திரீகத்தால் வெற்றிக்கு வழி தேடும் போராட்டங்கள்
6.ஒலி உச்சாடனங்கள் என்று கைக்கொள்ளும் வாழ்க்கை நிலைகளில் நடைபெறும் செயலாக
7.வேத விளக்கங்கள் காட்டி உண்மையின் சக்தியே வெற்றி பெறும்…” என்றும்
8.சத்தியத்திற்கு ஏற்படும் சோதனையில் வென்று காட்டிடும் வழியாக
9.பேரருள் பெறும் மனத்தின் பக்குவமே வானவியல் ஞான திருஷ்டி...!”
 
சத்தியமே விஸ்வரூபம் காட்டி வினைப் பயன் களைந்திட்ட உபதேசமும் சத்திய நியாய தர்மத்தை வெறுத்திடும் கலியில் குருவே (உயிர்) தர்மத்தை நிலை நாட்டும் தர்ம தேவனாக…” மனப்போராட்டத்தையே வென்று காட்டிடும் ஜீவன் முக்தனாக ஒவ்வொரு ஆத்மாவும் நன்னிலை பெற்று விட்டால் மனித எண்ணத்தின் உயர்வைக் கைக்கொள்ளும் காரியமாக நன்னெறி வழிகாட்டிய மகரிஷிகளின் உயர் தத்துவத்தால் ஆத்ம வலு பெற்றிட வேண்டுமப்பா.
 
கிருஷ்ண லீலைகள் என்று காட்டியவற்றை இன்ப ரசம் என்று எண்ணுகின்றான். அனைத்துமே இன்பம் தான். ஈஸ்வரரின் சொரூபத்தில்
1.அனைத்து உயிர்களையும் ஒரே பாவனையாகக் காட்டுபவனவற்றில்,
2.எண்ணத்தால் ஆத்ம ஐக்கியம் பெற்றிடும் சம்பவங்களின் கோவையே கோபியர்கள் கொஞ்சிட்ட லீலைகள்.
 
இறை சக்தி தன்னுள் ஒன்றான தனி சக்தி என்றே
1.அன்பு மனத்தினோடு நாயகன் நாயகி பாவனையாக
2.ஒன்று கலந்திடும் உயிர் ஆத்ம கலப்பே உயர் ஞானப் பொக்கிஷம்.
 
கோபியர்களுக்குத் தீங்கிழைக்க வந்துற்ற எத்தனை அசுரர்களைக் கண்ணன் மாய்த்தான்…? என்று காட்டியவற்றில் மனிதன் பெற்று உயர வேண்டிய ஒளி காந்த சக்தி ஆத்மாவின் அருள்
1.பேரருள் செல்வத்திடம் பற்று வைத்திடும் உள்ளமாக
2.காக்கப்பட வேண்டிய நிலைகள்காக்கும் தன்மைகள் அனைத்தும் உணர வேண்டும்.
 
உயர் ஞான வளர்ப்பின் சித்து சித்தன் கண்ட செயலாகக் கொண்ட எண்ணத்தின் லட்சியம் எதுவோ அந்த லட்சியத்தை வென்றுவிடும் திட மனத்தின் சித்தம் எவ்வகையில் செயல் கொண்டிட வேண்டும்…? என்று விளக்கிட்ட காவிய படைப்பின் ஓர் அங்கமாக
1.ஞானப்பயிர் வளர்க்க மகான்கள் உபதேசமாக மொழிந்த நிலைகளில் எல்லாம்
2.மனிதன் பஞ்சேந்திரியங்கள் கொண்டு செய்யும் தொழில் கர்மா என்று சூட்சுமப் பொருள்படுத்தி
3.செய்கின்ற வினைகளுக்கு உரிய நாயகன் எனும் உயர் சக்தி முயற்சி என்ற
4.ஆய்வில் கருத்தினைச் செலுத்திடும் பாங்கில் கண்ட இலச்சினை (அடையாளம் – LANDMARK)
5.அதுவே லட்சியமாகக் கொள்ளும் மனத்தின் திறன் வளர்க்க
5.மனத்திறன் ஈர்ப்பில் ஆத்ம ஒளிப்பயிர் வளர்க்க
6.வியாச பகவான் பெற்று உயர்ந்த அனுபவ ஞானமே… “அர்ஜுனன் என்ற விவேகியின் வீரத்தை ஞானச் செல்வங்கள் பெற்றிட வேண்டுமப்பா.
 
அர்ஜுனன் கைக் கொண்ட காண்டீபம்” (கூர்மை) லட்சியத்தை அடைந்திட கருவின் திருவாக உள்ளத்தில் விளைந்தது என்ன…? மரம் தெரிந்ததா…? மரக் கிளைகள் தெரிந்ததா…? கிளைகளில் ஆடும் இலைகள் தெரிந்ததா…?
1.இலை மறைவு காய் மறைவு அன்றோ அவன் கண்டது…!
2.மகரிஷி புகட்டிடும் உண்மைத் தத்துவம் இலச்சினை கண்டான் அடைந்திடும் லட்சியம் கொண்டான்.
 
லட்சியம் மறைந்திடாத் தன்மையாக அடைய வேண்டிய குறிக்கோள் அதுவே உயர் ஞான விழிப்பின் பின் சாந்தம் குடிகொள்ளும் அமைதி…” காப்பிய ரிஷியின் ஒவ்வொரு அனுபவமே ஆரம் கொண்ட முத்துக்களப்பா…”
 
நீர் தேடிப் பாலையில் அல்லலுற்ற பேய்த்தேர் என்றும் அலகைத் தேர் என்றும் அன்று காட்டிட்ட கானல் நீரைக் கண்ட பொழுது உயிர் வாழப் பதைபதைட்ட பீமன் என்னும் பலவான் ஆகும் மனித மனத்தின் பாங்கு நீர் பருகிடும் அதி அவசரத்தால் பாலையின் நீரைப் பருகிட முடிந்திடுமோ…?”
 
1.நகுல மன உத்தியால் நீர் அருந்த நீரைச் சுவைத்திட
2.சகாதேவனும் துவர் (துறவியின் ஆடை) ஆடை கொண்டு ஞான நீர் அருந்த
3.வென்றது தர்மம் என்று மனத்தின் பாங்கு பலம் பெறுவதே ஆத்ம பலம் பெற்றிடும் சீரிய சிந்தனை…”
 
ஆடையில் நனைத்த நீரினைப் பருகிப் பின்னர் ஆடையை உதறிவிட்டால் பாலையின் ஏடென்ற துர் மணல் நீங்குமப்பா. ஞானத்தைக் கூட்டி இதைத் தெரிந்து கொள்…!”

February 10, 2025

உடலின் கடைசி முடிவு

உடலின் கடைசி முடிவு


மகாபாரதத்தில் திரௌபதி என்பது உயிர் (உணர்வின் உணர்ச்சி) பஞ்ச பாண்டவர்கள் (புலனறிவு ஐந்து) நுகரப்படும் பொழுது இந்த ஐந்து பேருடைய உணர்வுகள் கொண்டு அதை இயக்குகின்றனர்.
 
சூரியனிலிருந்து வரக்கூடிய வெப்பமும் காந்தமும் நுகரும் சத்தும் அதன் உணர்வின் தன்மைமும் சேர்த்துப் புலனறிவு ஐந்து என்று
1.இந்த உணர்வின் தன்மை நாம் எக்குத்தை நுகர்கின்றோமோ அந்த உணர்வின் இயக்கமாகத்தான் இயக்குகின்றது.
2.கண்ணனின் சகோதரி திரௌபதி. தன்னுடன் இணைந்து உணர்வினைக் கண் காட்டுகின்றது உடலிலே.
3.சகோதரியாக உடலுக்குள் தன் உணர்வின் நிலையாக உணர்த்துகின்றது கண்ணன்.
4.ஆக எதை எண்ணுகின்றானோ அந்த உணர்வின் தன்மை து உள்முகமாக எவ்வாறு ஊட்டுகின்றது என்று மகாபாரதத்தில் காட்டுகின்றார்கள்.
 
ஆனால் பிறரை அடிமைப்படுத்த வேண்டும் என்ற உணர்வுகளை வளர்த்துக்  கொள்வதைக் ”கௌரவர்கள் என்று காட்டுகின்றார்கள்.
1.உண்மையின் உணர்வை நுர்ந்தால் பஞ்ச பாண்டவர்களை சூதின் நிலைகள் கொண்டு திசை திருப்புகின்றனர்.
2.தன் உணர்வின் வலிமை கொண்டு உள் புகாது நன்மையினைப் பெறாது கௌரவர்கள் தடைப்படுத்துகின்றார்கள்.
 
ஆக… கௌரவர்கள் பாண்டவர்கள் இருவருக்கும் போர் முறை என்று காட்டுகின்றார்கள்.
 
உணர்வின் வலுவைக் காட்டப்படும் போது நாம் எண்ணும் உணர்வுகள் அர்ஜுனன் என்றும் அவன் உணர்வின் தன்மை கொண்டே நம்மை மாற்றுகின்றான் என்றும் இதே உணர்வின் செயலாக அதனின் செயலாக்கங்களும்… “அதுவே வலுவாகிறது என்றும்”
1.உணர்வின் உணர்வுகள் நமக்குள் எடுக்கும் போது - ஆன்மா எதனின் உணர்வோ அது…!
2.அதாவது கெடுமதியோ அல்லது கெடுமதியை நீக்கும் உணர்வுகள் வரப்படும் பொழுது பீமன்” அது வலுக் கொண்ட உணர்வின் ஆன்மாவாகின்றது.
 
ஆன்மாவிற்குள் அதனின் வலிமை பெறுகின்றது என்ற உண்மையைக் காட்டுகின்றனர்.
 
பாண்டவர்கள் வலுக் கொண்டாலும் உள் நின்று புகாது தடுக்கும் நிலையே கௌரவர்கள். பல நிலைகள் கொண்டு மகாபாரதப் போர் நடந்தாலும் தீமை என்ற உணர்வுகள் வளரப்படும் பொழுது இவர்கள் (பாண்டவர்கள்) ஜெயித்தாலும் கண்ணன் மடிகின்றான். அதற்கு முன் பலராமன் மடிகின்றான்… “கடைசி முடிவு…”
 
1.நாம் நுகரும் உணர்வுகள் எண்ணம்
2.எண்ணத்தின் நிலை கொண்டே கண்.
3.கண்ணின் நிலை கொண்டே பல உணர்வுகள் அதிலிருந்து பல எண்ணங்கள்
4.அதன் வழி கொண்டே உணர்கின்றோம் வளர்கின்றோம் என்ற நிலை தெளிவாக்கப்படுகின்றது.
 
கண்ணனின் சகோதரன் பலராமன் மூத்தவன் என்று கொண்டு வருகின்றார்கள். பலராமன் மடியப்படும் போது கண்ணனுக்கும் செயலில்லை… அவனும் மடிகின்றான். பின் ஈர்க்கும் வலுவின் தன்மை இல்லை என்றால் பீமனும் மடிகின்றான்
 
நகுலன் சகாதேவன் உணர்வைக் கவர்ந்தால் தான் நகுலனும் இயக்க முடியும் நன்மை தீமை என்பதை அறியும் நிலை அவர்களால் தான் அங்கே இருக்கின்றது… அப்போது அவர்களும் செயலை இழந்து விடுகின்றார்கள்.
 
அனைத்து வலிமை கொண்டு தீமைகள் புகாது தடுக்கும் அர்ஜுனனும் வலுவை இழக்கின்றான்,,, மடிகின்றான். வீரிய உணர்வுகளை இழந்த பின் அவன் கண்ணுக்கு முன்னாடியே திருடர்கள் திருடுகின்றார்கள் மாடுகளை ஓட்டிச் செல்கின்றார்கள்.
 
காண்டீபத்தை எடுத்து மந்திரத்தைச் சொல்லி ஏவுகின்றான்… ஆனால்.
1.மற்ற சகோதரகள் செயல் இழந்த பின் அது ஒன்று சேர முடியவில்லை.
2.இவனுடைய ஆயுதங்கள் அங்கே பாய முடியவில்லை. திருடர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை.
3.தான் வீழ்ந்து விட்டோமே என்ற உணர்வுகள் வருகின்றது.
 
ஏனென்றால் கண்களால் கவர்ந்த உணர்வுகள் வலுவை இங்கே ஊட்டித்தான் அந்த வலுவால் இயக்குகின்றது என்பதை ங்கே காட்டுகின்றார்கள்.
 
உடலுக்குள் உணர்வுகள் எவ்வாறு இயக்குகின்றது கண்ணன் மடிந்த பின் மற்ற நிலைகள் மடிந்த பின் எப்படி உடலுக்குள் செயல்கள் மடிகின்றது என்பதை மகாபாரதத்தில் தெளிவாகக் காட்டுகின்றார்கள்.
 
நாம் நுகரும் உணர்வுகள் எண்ணங்கள் வேதனை என்று நுர்ந்தால் வாலி… கோபம் என்றால் காளி…!
 
நாம் நுகரும் உணர்வு உயிரில் பட்ட பின் இந்த உணர்வின் தன்மை எவ்வாறு இயக்குகின்றது…? இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும் அறிந்திடல் வேண்டும்.
 
1.நமக்குள் புகுந்த பிறிதொரு உணர்வுகள் நல்லதைப் புகவிடாமல் தடுக்கும் நிலையினை எவ்வாறு தடுக்க வேண்டும்…?
2.மனிதன் எவ்வாறு வாழ வேண்டும் என்ற வழி வகைகளை ஞானிகள் காட்டுகின்றார்கள் மகாபாரதத்தில்.

July 5, 2024

“தர்மயுத்தம்” என்ற பெயரில் ஞானிகள் கொடுத்த உண்மையையே தலைகீழாக மாற்றி விட்டார்கள்

“தர்மயுத்தம்” என்ற பெயரில் ஞானிகள் கொடுத்த உண்மையையே தலைகீழாக மாற்றி விட்டார்கள்

 

ஒவ்வொரு காலத்திற்குள்ளேயும்…
1.ஆதியில் இருந்து இன்று வரையில்
2.காலத்துடன் ஒன்றி கடவுள் என்பவர் பிறக்கின்றார்… அவதாரம் எடுக்கின்றார்

நீ அறிந்த காலம் வரை சொல்கின்றேன்.

சிவனாகப் பிறந்ததும் அவனே; சிவனின் மகனாக வந்ததும் அவனே; இராமனின் காலமும் அவனே; கிருஷ்ணனும் அவனே; நபியும் அவனே; இயேசுவும் அவனே; புத்தனும் அவனே…!

புத்தரின் காலத்திற்குப் பின் கடவுளின் சக்தியைக் கொண்டு அவதாரம் யாரும் எடுக்கவில்லை. இராமாவதாரம் கிருஷ்ணாவதாரம் நபி புத்தர் இயேசு ஆகியோர் ஞான அருள் பெற்ற “ஞான தீபங்கள்” ஆவர்.

சிவனும் சித்தர் தான்…! அன்றும் அவதாரம் எடுத்தார் “இன்றும் அவதாரம் எடுத்திருக்கின்றார்…!” அன்றுள்ள காலத்தில் மக்களால் ஏற்றுக் கொள்ள முடிந்தது. இக்காலத்தில் மக்களின் மனமே மாறிவிட்டது.

கலியின் தன்மையைப் பார்த்தாயா…?

கலியின் தன்மை எல்லாம் மாற்றிடத் தான் மானிடருக்குத் தியானத்தைப் பற்றி சொல்கின்றேன் கல்கியின் தன்மையில் வந்து விட்டால் காவியத்தில் வந்துவிடும்… கருத்துடன் எல்லாம் நடந்து விடும் கர்ம பயனைப் பெற்றுவிடலாம் காவியத்தன்மையில் இடம் பெற்றிடலாம்.

இக்கலியுகத்தின் எண்ணமெல்லாம் காவியத்தில் நிலைத்திடாது காலப்போக்கில் அழிந்துவிடும்.
1.பறக்கும் மனிதனை இனி நீ காண்பாய்
2.பாரினில் உள்ள நிலை எல்லாம் பார்த்திடலாம்

பழிக்கும் எண்ணம் தான் இன்று உள்ளது பழிவாங்கிடும் நிலையே தான் இருக்கின்றது. நல்லதை எண்ணும் நிலை இல்லை… தூற்றிடும் உள்ளங்கள் தான் உண்டு.

கலியில் பிறந்த மனிதன் எல்லாம் காவியத்தில் வந்திடுவானா…? உன் அறிவுக்கு எட்டும் விஷயங்களை எல்லாம் சிறுகச் சிறுகப் பகிர்ந்திடுவேன்.

இராமாவதாரத்தைப் பற்றி விளக்கங்கள் சொன்னேன்… சிறு புள்ளிதான் அது…! கிருஷ்ணாவதாரத்தின் நிலையைப் பார். கிருஷ்ணனின் கதையிலேயே “கிருஷ்ணரின் பிறப்பின் ஜாதகத்தைக் கணித்து விட்டார்கள்...”

கிருஷ்ணனின் அவதாரம் என்ற நாளில் தான் ஜாதக நிலையும் வந்தது
1.பெரும் குறை (குழப்பம்) நிலையும் வந்தது.
2.மனிதனின் நிலையையே மாற்றியது கிருஷ்ணாவதாரக் காலத்தில் தான்.

இராமாவதாரம் முடிந்து கிருஷ்ணாவதாரம் ஆரம்பிப்பதற்குள் மனிதரின் நிலை எல்லாம் சிறிது சிறிதாக மாறிவிட்டது. கிருஷ்ணாவதாரத்தில் தோன்றிய சித்தன் தான் கிருஷ்ணாவதாரம் என்ற நூலையும் எழுதியவன்.

கிருஷ்ணன் என்பவன் பிறந்தானா…? பிறந்து வெண்ணையை அவன் உண்டானா…? வாயைத் திறந்து உலகத்தன்மையே காட்டினானா…? கிருஷ்ணன் என்பவன் யாரப்பா…?

மனிதர்கள் தங்களுடைய நிலைக்காக இராமாவதார நூலில் உள்ள “ஒருவனுக்கு ஒருத்தி” என்ற நிலையையே மாற்றி கிருஷ்ணாவதாரம் என்ற நூலில் கிருஷ்ணனுக்குப் பல மனைவிகளை அமைத்தார்கள்.

இராமாவதாரத்தில் உள்ள நிலையிலும் கிருஷ்ணாவதாரத்தில் உள்ள நிலையிலும் உள்ள மாற்றங்களைப் பார்த்தாயா…? இராமாவதாரத்தில் தந்தை சொல் தட்டாத தனயனும் சகோதரப் பற்றுமுள்ள தமயனையும் காணலாம்.

தர்மம் நியாயம் என்பதெல்லாம்
1.கிருஷ்ணாவதாரத்தில் தர்மயுத்தம் என்ற நிலையிலேயே அழிந்து விட்டது.
2.பெரும் சூதும் சூதாட்டமும் கிருஷ்ணாவதாரத்தில் அமைந்ததுவே.
3.தன் நிலை உயர்ந்திட எந்த நிலையிலும் இருக்கலாம் என்னும் பழக்கமே கிருஷ்ணாவதாரத்தில் தான் வந்தது.
4.சொல்லும் செயலும் மாறியதும் கிருஷ்ணாவதாரத்தில் தான்.

சித்தன் எழுதிய கீதையையே மாற்றி விட்டார்கள். கிருஷ்ணாவதாரத்தில் கீதையின் உபதேசங்கள் எல்லாம் படித்தவுடன் புரிகின்றதா…?
1.பாமரனுக்கும் புரிந்திடும் கீதையைப் பழிக்கும் நிலையில் விட்டு விட்டார்கள்.
2.குருவும் சிஷ்யனும் என்ற நிலையைக் குருடாக்கி விட்டார்கள்.
3.தான் கற்றதைப் பிறருக்குச் சொல்லும் நிலையில் இல்லாமல் மாற்றி விட்டார்கள்.

கோவில் குளங்கள் என்பதையே ஜாதி மதம் என்னும் தன்மையில் ஏற்றி விட்டார்கள். ஜாதியும் மதமும் கிருஷ்ணாவதாரத்தில் வந்ததுதான். உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்பதெல்லாம் கிருஷ்ணாவதாரத்தில் வந்தது.

ஏழை பெருத்தவன் சிறுத்தவன் பெரும் செல்வந்தன் என்னும் நிலையில் கிருஷ்ணரைச் செல்வந்தனாகவும் குசேலரைப் பரம ஏழையாகவும் காட்டியது கிருஷ்ணாவதாரத்தில் தான்.

நூலின் தன்மையையே அவரவர் இஷ்டத்துக்கு மாற்றி விட்டார்கள். கிருஷ்ணாவதாரத்திற்குள்ளே கிருஷ்ணன் என்பவன் இல்லை அப்பா. “கிருஷ்ணா…” என்னும் ஜெபம் ஓங்கிடவே கிருஷ்ணனின் கதையும் வந்ததப்பா.

சக்தியின் சக்தியே அக்கிருஷ்ணன் அப்பா. கிருஷ்ணனின் கதை எல்லாம் மனிதர்கள் (அவர்கள்) சொன்ன கதையப்பா. ஆகவே கிருஷ்ணனின் கதையைப் படித்துக் கிருஷ்ணனே இப்படித்தான் இருந்தான்…! என்னும் நிலை வேண்டாம்

கிருஷ்ணாவதாரக் காலத்தில் மனிதர்கள் இருந்த நிலையை வைத்துத்தான் கதையெல்லாம் உள்ளது. “தர்மயுத்தம்” என்பதும் மனிதர்கள் வைத்த கதை தான்

கிருஷ்ணாதாரத்தில் வந்த கிருஷ்ணனைப் பார்த்தவர் யாரப்பா…? இராமனும் வாழ்கின்றான்… கிருஷ்ணனும் வாழ்கின்றான்… கலியும் வாழுகின்றது கல்கியும் வருகிறது… “எல்லாமே ஈஸ்வர சக்தியின் ஆசியால்…!”

December 12, 2023

தீமையை நீக்கும் எண்ணத்தையே… “கண்கள் வழி” நினைவுக்குக் கொண்டு வர வேண்டும்

வீட்டில் பையன் ரொம்ப சேட்டை செய்கிறான்... அவனுக்குப் புத்தி வரட்டும் என்று நினைக்கின்றோம். ஆனால் சொல்லும் பொழுது
1.எப்பொழுது பார்த்தாலும் குறும்புத்தனம் செய்து கொண்டிருக்கின்றான்.
2.இவன் அடங்கவே மாட்டான் என்று தான் அடுத்தவரிடம் சொல்கின்றோம்

“எப்பொழுது பார்த்தாலும் சேட்டை செய்து கொண்டே இருப்பான்” என்று அவனுடைய உணர்வை எடுத்து அதிகமாக விளைய வைத்துக் கொள்கின்றோம்.

அவனுடைய உணர்வை எடுத்து விளைய வைத்தபின் கண்ணில் பார்க்கின்றோம். அடுத்தாற்போல் அவனைப் பார்க்கும் பொழுதெல்லாம் “சேட்டைக்காரன்...” என்று தான் அவனை மாற்றுகின்றோம்.

அதே உணர்வை நாம் எடுத்துக் கொண்ட பின் “எப்பொழுது பார்த்தாலும் குறும்புத்தன்ம் செய்வான்” என்று எல்லோரிடமும் சொல்லிக் கொண்டே இருக்கின்றோம்.

அவன் சும்மா இருந்தால் கூட நாம் மிரட்ட ஆரம்பிப்போம் இத்தகைய மிரட்டல் என்ன செய்யும்...? அங்கே இருப்பதைத்தான் நாம் நமக்குள் சமைத்து விளைவிக்கின்றோம்.

அதே சமயத்தில் நம் நினைவு எல்லாம் எப்படி இருக்கும்...?
1.இப்படிக் குறும்புத்தனம் செய்கின்றானே... என்ன செய்வது என்று தெரியவில்லையே
2.அவனுக்கு இப்படி செய்தால் பரவாயில்லையா...! அப்படிச் செய்தால் பரவாயில்லையா...! என்று இந்த கவலை இருக்கும்.

கவலை கலந்த உணர்வுகள் வந்தவுடன் வெறுப்புடன் தான் பையனிடம் பேசுவோம். வெறுப்புடன் சொல்லப்ப்படும் போது
1.இந்த வெறுப்பு அவனுடன் கலந்து அவனுக்குள் உருவான வித்திற்கு உரம் போட்ட மாதிரி ஆகிவிடும்
2.அடுத்து அவன் கெடுதல் தான் அதிகமாகும்.... அதைத் தான் உருவாக்கும்.

அவனுக்கு இந்த உணர்வு தான் அதிகரிக்குமே தவிர நல்லது உருவாகாது. அவனிடம் விளைந்ததை நமக்குள் எடுத்து மீண்டும் நமக்குள்ளும் அதைத்தான் கூட்ட முடியும்.

இவனை பார்த்துப் பார்த்து... பேசிப் பேசி என் கை கால்கள் எல்லாம் ஓய்ந்து விட்டது... எனக்கு இப்படி ஆகிவிட்டது அப்படி ஆகிவிட்டது... என்று இத்தனை உணர்வுகள் வரும்பொழுது அடுத்து சமையலுக்குப் போனால் அங்கே சீராகச் செயல்படுத்த முடியாது.

ஒரு துணியைச் சுத்தம் செய்து துவைக்க வேண்டும் என்றால் கூட கை ஓய்ந்துவிடும். அதில் இருக்கக்கூடிய அழுக்கைப் போக்க முடியாது

ஏனென்றால் இந்த உணர்வுக்குத் தக்கவாறு அந்தச் செயல் வரும். பொழுது ரொம்ப அழுக்காக இருந்ததைப் பார்த்த உடனே ஒரு விதமான சடவு வரும்... அதை நீக்க முடியாது.

அதே போன்று ஒருவர் நல்லது சொல்கின்றார் என்று நாம் அதைக் கேட்கும் பொழுது நம்மை அறியாமலேயே ஒரு சோர்வும் சஞ்சலமும் வரும். என்னுடைய பையன் நன்றாக இருக்கின்றான் என்று அவர் சொன்னவுடனே அதைக் கேட்க விடாது. சோர்வும் சஞ்சலமும் தான் வரும். அப்பொழுது
1.மீண்டும் நமக்கு வேதனை தான் உருவாகின்றது... நல்லதை விடுவதில்லை
2.அந்த உணர்வே ஆட்சி புரியத் தொடங்குகின்றது... நல்லதை விடாதபடி நமக்குள் தடுதலாகின்றது
3.இதைத்தான் மகாபாரத்தில் கௌரவர்கள் என்று சித்தரித்துக் காட்டுகின்றார்கள்.

நல்லதாக இருக்க வேண்டும் என்று எடுத்துக் கொண்ட உணர்வுக்குள் கௌரவப் போராகின்றது. நல்லவர்களைப் பார்க்கும் போதெல்லாம் என்ன செய்கிறது...? நல்லதைச் சொன்னார்கள் என்றால் மீண்டும் வெறுப்பாகி அந்த நல்லதை உள்ள விடாதபடி கௌரவர்கள் போர் செய்கின்றார்கள்.

கண் இழுத்து உண்மையைச் சொல்கிறது. கண்ணுடன் சேர்ந்தவுடனே திரௌபதி உயிர் அந்த உணர்வை எடுத்து உள் உணர்வை ஊட்டுகின்றது ஊட்டிய உடனே நல்லது என்று சொன்னவுடன் அதை அவமதிக்கின்றது.

உடனே கோபமான உணர்வுகளைத் தூண்டி... திரௌபதியை நாம் கேவலப்படுத்தத் தொடங்குகிறோம் நல்ல உணர்வுகள் இல்லாதபடி கேவலமான வார்த்தைகளைப் பேசுகின்றோம்... நல்லதை இயக்க விடுவதில்லை.

அப்பொழுது எது செயல்படுகின்றது...?

நம் பையன் மீது நினைவு வரும் போது
1.இப்படிச் சேட்டை செய்கின்றானே என்று இந்த உணர்வுகள் தான் வருமே தவிர
2.கண்கள் நுகர்ந்து நல்ல உணர்வின் தன்மை ஊட்டினாலும் உள்ளுக்கே விளைந்த உணர்வின் தன்மை (கௌரவர்கள் - பையனைப் பார்த்து நுகர்ந்தது)
3.சிந்தனையற்ற நிலையில் கொண்டு நமக்குள் போர் முறையே வருகின்றது.

இதனுடைய வலு எது...?

நம்முடைய கூர்மையான எண்ணங்கள் அர்ஜுனன். நுகரப்படும் போது நகுலன்... காந்தப்புலன் மாற்றி அமைத்து அதன் தெளிவான நிலைகளை நமக்கு ஊட்டும். நுகர்ந்த உணர்வு உடலுக்குள் இணைந்து விட்டால் சகாதேவன். நுகர்ந்த உணர்வின் சத்து உடலுக்குள் வலுவாகும் போது பீமன் வலுவின் தன்மைகொண்டு இயக்கும் சக்தியாக வருகின்றது.

மகாபாரதத்தில் திரௌபதை கண்ணனுடைய சகோதரி பெண்பால் இது ஆண்பால் ஆனால் கண்...! கண்ணுடன் சேர்ந்த கருவிழிக்குப் போகும் பொழுது தெரிவதில்லை... அந்தச் சக்தி மனைவியாகின்றது ருக்மணி.

கண்ணோடு சேர்ந்த காந்தப்புலன் சத்தியபாமா தவறு செய்யும் உணர்வை நுகர்ந்து நம் உயிரிலே சேர்த்து உண்மையை உணர்த்துகின்றது தனதாகவே மாற்றுகின்றது. சேர்த்துக் கொண்ட உணர்வின் தன்மை கண்ணனுடைய சகோதரி உடலுக்குள் நமக்கு உணர்த்துகின்றது.

பகைமை என்ற நிலையில் பையனைப் பற்றி வேதனைப்பட்டுக் கொண்டிருக்கப்படும் பொழுது நல்லவர் வந்து சொல்கின்றார்கள் என்று சொன்னால் அந்த வலிமைமிக்க நிலைகளைச் சொல்லப்படும் பொழுது அதை (அர்ஜுனனை) விடுவதில்லை. அதாவது நல்லதை வலுவாக்கும் அந்த உணர்வுகளை விடுவதில்லை..

நீங்களே ரொம்ப சங்கடமாக இருக்கின்றீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.
1.அந்த நேரத்தில் ஈஸ்வரா...! என்று சொல்லி உயிரை எண்ணி துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுக்கலாம் என்றால்
2.அந்தச் சங்கடம் அதை எடுக்க விடுமா...? என்று பார்க்கலாம்.

அப்போது எது செய்கிறது...? அந்தக் கௌரவர்கள்... “என்னை இப்படிப் பேசினார்களே...” என்ற இந்த உணர்வு முன்னணியில் வரும் பொழுது நல்லதை விடுவதில்லை.

நல்லதை விடுவதில்லை என்கிற பொழுது
1.அதை மாற்றுவதற்குண்டான அந்த வலுவான சக்திகளை நீங்கள் பெற வேண்டும் என்பதற்குத்தான்
2.உபதேசத்தினை மீண்டும் மீண்டும் உங்களுக்கு அழுத்தமாகக் கொடுப்பது.

இந்த உணர்வின் தன்மை நீங்கள் ஆழமாகப் பதிவு செய்து அதைத் திருப்பி எண்ணும் பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தினுடைய உணர்வை எடுத்துக் கலந்த பின் உங்களுக்குள் வலுவாகின்றது. அதை எடுத்துச் சங்கடத்தை நீக்க முடியும்.

அழுத்தமாகப் பதிவாக்கவில்லை என்றால் அடுத்தவர்கள் நல்லதைச் சொன்னால் அதை ஏற்க விடாதபடி மீண்டும் கவலை அதிகமாகும். உயிர் நல்ல உணர்வுகளை விளையச் செய்யப்படும் பொழுது கௌரவர்கள் அவமதிக்கின்றார்கள்.
1.கௌரவர்கள் உள்ளுக்குள் இருந்து கொண்டு அதை அவமதிக்கின்றார்கள்
2.திரௌபதியின் துகிலை உறிகின்றார்கள் சபையில் வைத்து.

சூதாட்டம் ஆடி சூதிலே ஜெயித்த பிற்பாடு பாண்டவர்கள் ஐந்து பேரையும் அடிமையாக்கி விடுகின்றார்கள் அவர்களின் மனைவியையும் அடிமையாக்கி விடுகின்றார்கள் இந்த உணர்வின் தன்மை என்ன ஆகிறது...?

எதை இயக்கியதோ அது மற்றதை அடிமையாக்கப்படும் பொழுது இவர்கள் வேலை ஒன்றும் ஆவதில்லை. அவனுக்குக் கீழ் அடிபணிந்து தான் அவர்களால் இருக்க முடிகிறது.

சபையில் வைத்து திரௌபதியின் துகிலை உறிகின்றார்கள். துகிலை உறியும் போது திரௌபதி என்ன செய்கின்றது...?
1.கண்களைத் தான் எண்ணுகின்றது. கண்ணா...! என்று கண்களை எண்ணுகின்றது
2.அவர்கள் செய்யும் அவமதிப்பை எண்ணுவதில்லை.
3.தெளிவாக நமது சாஸ்திரம் காட்டுகின்றது... மகாபாரதத்தில் வியாசகன் கொடுத்த உண்மைகள் இது.

பின்னாடி வந்தவர்கள் அதை எப்படி எப்படி எல்லாம் திருத்தி விட்டார்கள் சொல்வது அர்த்தமாகிறது அல்லவா.

திரௌபதி சபையில் மற்றவர்கள் யாரையும் எண்ணவில்லை
1.கண்ணனை (கண்களை) மட்டும் தான் எண்ணுகின்றது தன்னுடைய அண்ணனை.
2.அவன் எனக்கு ஆபத்திலிருந்து காப்பாற்றுவான்... எனக்கு அவன் உதவி செய்தான் என்ற உணர்வை எடுக்கின்றது.
3.அப்பொழுது உள்ளுக்கே அவமதிக்கும் தன்மை தடைப்பட்டு ஓய்ந்து விடுகின்றது.

எவ்வளவு அழகாக மகாபாரதத்தில் தெளிவாகக் கொடுத்திருக்கிறார்கள். நன்றாக யோசனை செய்து பார்த்துக் கொள்ளுங்கள்...! வியாசகன் கொடுத்த அந்தப் பேருண்மையைத் திரித்துக் கூறி எப்படி எப்படியோ இன்று மாற்றிவிட்டார்கள்.

குறிப்பு:-
1.தியானம் செய்யும் போதும் ஆத்ம சுத்தி செய்யும் போதும் நம் கண்ணின் நினைவைத் துருவ நட்சத்திரத்திற்குக் கொண்டு போக வேண்டும் என்று சொல்வதன் தத்துவமே இதற்குத் தான்.
2.நம்முடைய கண்களால் மற்றதை எண்ணாது துருவ நட்சத்திரத்தை எண்ணினால் தான் உயிரிலே படும் அந்த அவமதிப்பை மாற்ற முடியும்.
3.ஞானகுரு அவர்கள் கண்களைத் திறந்து பின் கண்களை மூடி மீண்டும் கண்களைத் திறந்து மூடி இப்படி மாற்றி மாற்றித் துருவ நட்சத்திரத்தினை எண்ணச் சொல்வதும் இதற்குத் தான்.
4.எந்தக் கண்ணால் நம்மை அறியாதபடி தீமைகள் உள்ளே வந்ததோ அதே கண்களால் தீமைகளை நீக்கிய சக்தியை உள்ளே கொண்டு வர வேண்டும்.
5.நம் எண்ணத்தை இப்படி மாற்றினால் தான் எதையும் மாற்றி அமைக்க முடியும்.
6.எண்ணத்தை மாற்றாதபடி கண்களில் தீமைகளைப் பற்றியே அழுத்தமாக எண்ணிக் கொண்டிருந்தால் அது தான் மீண்டும் வலுவாக இயக்கும்.
7.பின்… என்னால் ஒன்றும் முடியவில்லை என்ற சொல் தன்னாலே வரும்… நாம் இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

November 30, 2023

சகுனியின் சூதாட்ட சூழ்ச்சி

உதாரணமாக (பிறரிடம்) நம் காரியத்தைச் சாதிக்க வேண்டும்… பணம் வாங்க வேண்டும் என்றால்… நண்பன் (அல்லது அதற்குண்டானவர்கள்) எதைச் சொன்னாலும் ஏற்றுக்கொள்ளும் தன்மை வரும். அப்படி ஏற்றுக் கொள்ளும் தன்மை வரப்படும் பொழுது சாந்தமாகும்.

சாந்தமான நிலைகள் வரப்படும் பொழுது “தர்மன்” என்ற நிலை அடைகிறது.

சாந்தமான நிலை வருவதற்கு முன் நமக்குள் இருக்கக்கூடிய உணர்வுகளின் தன்மை எது இருந்தாலும்
1.காரியத்தைச் சாதிக்க வேண்டும் என்று அவர்கள் சொல்வதையெல்லாம் கேட்டு…
2.நம் மனதை அடக்கிச் செயல்படுத்தும் பொழுது
3.நம் எண்ண வலுவில் தன்மைக்குள் நண்பனின் உணர்வு நமக்குள் திணிக்க்கப்படுகிறது… அப்பொழுது அதன் வலு தான் “அர்ஜுனன்…”

நமக்குப் பணம் தேவைப்படுகின்றது (நண்பனின் தயவு) என்று கண் கொண்டு நண்பனை உற்றுப் பார்க்கின்றோம். ஆறாவது அறிவால் மனதை அடக்கி… அவர் சொல்வதை எப்படியும் நாம் கேட்டாக வேண்டும். ஏனென்றால் கேட்டால் தான் நமக்குச் சலுகை கிடைக்கும். அவன் சொல்லும் உணர்வுகள் அர்ஜுனன் வலிமையானது.

ஏனென்றால் அந்த நண்பன் உடலில் இருந்து வெளிப்படும் உணர்வுகளைச் சூரியனிலிருந்து வெளிப்படக்கூடிய வெப்பம் காந்தம் என்ற நிலையில் சூரியனின் காந்த சக்தி கவர்கின்றது. அதை நுகர்ந்தால் அர்ஜுனன்.

நண்பன் பேசும் உணர்வுகளைக் காந்தப் புலனறிவு கவர்ந்து கொண்டால் பரப்பிரம்மம் என்ற அணுத்தன்மை அடைகின்றது. அந்த உணர்வின் சத்தி அதை இயக்கக்கூடிய பரப்பிரம்மம் ஆகின்றது அதன் உணர்வின் தன்மை அதனுடன் இணைந்து சரஸ்வதி ஆகின்றது… பிரம்மாவின் மனைவி சரஸ்வதி.

அந்த அணு இப்படிக் கவர்ந்து கொண்டால் அந்த ஞானத்தின் வழியே அதனின் வித்தாகிறது.

இருந்தாலும் நாம் அதை ஏற்றுக் கொள்ளாத மனமாக இருக்கப்படும் பொழுது
1.பணம் வாங்கும் காரியத்திற்காக ஏற்றுக் கொள்கின்றோம்.
2.ஆனாலும் அதை இந்த மனது ரொம்பக் கஷ்டப்பட்டுத் தான் ஏற்றுக் கொள்கின்றது.

இதைப் பார்த்து மற்றவர்கள்… என்ன…? அவருடன் இப்படிக் கூடிக் குழாவுகின்றாய் என்று கேட்பார்கள். என்ன செய்வது…! அவரிடம் காசு வாங்க வேண்டி இருக்கின்றது அல்லவா. இல்லை என்றால் எப்படிக் கிடைக்கும்…? என்ற நிலையில் இருக்கின்றோம்.

அந்த உணர்வுகளை நாம் நுகரப்படும் பொழுது
1.அதைத்தான் சூழ்ச்சி என்பதாக… சூதாட்டம் ஆடுவதாக
2.சூட்சும நிலைகள் கொண்ட “சகுனி” என்று மகாபாரதத்தில் காட்டுகின்றார்கள்.

சகுனி தாயக் கட்டைய உருட்டுவது போல் நம் காரியத்தை எண்ணி அதை நாம் உருட்டி எடுக்கின்றோம். அதாவது நாம் என்ன செய்கின்றோம் என்றால்
1.நம் காரியத்தைச் சாதிப்பதற்காக அவருடைய எண்ணத்தை “உருட்டி” எடுக்கின்றோம் “சூதின் மூலமாக…!”
2.அப்போது நாம் ஜெயித்து விடுகின்றோம் (பணத்தை வாங்கிவிடுகின்றோம்)

முந்தி அவர்கள் நல்லதைச் சொல்லிக் கொண்டு வந்தார்கள்… அப்பொழுதெல்லாம் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. பணம் வாங்குவதற்கு மட்டும் உள்மனதாக வைத்து இதைக் கலந்து ஏற்றுக்கொள்ளும் அந்த உணர்வு ஆகிறது.

பணம் வாங்கி ஓரளவுக்கு வசதியாக ஆன பிற்பாடு என்ன செய்கின்றோம்…? சமயம் வரும்பொழுது அவருக்கு என்னவெல்லாம் தீங்கு செய்ய வேண்டுமோ அதெல்லாம் செய்வோம்…! (எல்லோருமே இதை அனுபவத்தில் பார்த்திருப்போம்)

சகுனி தாயம் போட்டு சூதாட்ட விளையாட்டிலே தோற்கடித்து விட்டேன் என்ற நிலை வருகிற மாதிரி நமக்குள் சூதின் உணர்வுகள் வந்து விடுகிறது.

முதலிலே அந்த நண்பனின் உணர்வுகள் அர்ஜுனன் ஆகின்றது. அவன் எதையுமே குறிவைத்துத் தாக்கும் தன்மை பெற்றவன். இருந்தாலும் நுகர்ந்த உணர்வுகள் “நகுலன்” உடலுக்குள் அது இணைந்து செயல்படும் தன்மை வருகின்றது.

நாம் எண்ணும் ஆந்த உணர்வை உயிரிலே சேர்த்து… சேர்த்துக் கொள்ளும் உணர்வாக எண்ணும் போது அதற்கு இடம் கொடுக்கின்றோம். அந்த உணர்வின் தன்மை உடலுக்குள் வரப்படும் பொழுது “சகாதேவன்…” ஆகின்றது.

ஆனால் அதே சமயத்தில் அந்த உணர்வின் தன்மை நம் உடலுக்குள் இருக்கும் அணுக்கள் ஏற்றுக்கொண்டால் “பீமன்” ஆகின்றது. அவர் சொன்ன உணர்வு அந்த வலுவும் நமக்குள் வருகின்றது. பீமன் என்ற அந்த வலுவான உணர்வுகள் ஆனால் அதன் வழி தர்மன் ஆகின்றது

நம் உடலுக்குள் இத்தனை போர் நடந்து கொண்டிருக்கின்றது

இருந்தாலும்… நம் எண்ணங்கள் அவரை ஏமாற்றும் விதமாகச் செயல்படும் பொழுது
1.”சகுனி…” நமக்குள் இருந்து அதன் உணர்வாகக் கலந்து தான் நமக்குள் ஏற்றுக்கொள்கிறதே தவிர
2.நண்பன் நமக்கு நல்லதைச் சொன்னார் என்ற நிலையில் ஏற்கும் பருவமில்லை.

இப்போது இங்கே தியானம் செய்கின்றோம் என்றால்… பல வகைகளிலும் பலவிதங்களை எடுத்துக் கொண்டு வந்திருக்கின்றோம்.

எப்படியோ தொழிலில் முன்னேற்றம் அடைய வேண்டும்… தியானம் செய்தால் நமக்கு நல்லதாகும் என்ற இந்த உணர்வின் தன்மை கொண்டு தான் வருகிறோம்.

அவ்வாறு ஆசைப்பட்டு சுவாசித்து உயிரிலே பட்ட பின் அந்த உணர்வுகள் தான் .வரும். நாம் எண்ணிய அந்த உணர்வுகள் பதிவாகிறது. பதிவின் உணர்வு மீண்டும் நினைவாகும் பொழுது நம்மை இயக்குகின்றது.

நாம் எந்தத் தொழிலின் நிமித்தம் இணைத்து “இந்தத் தியானத்தைச் செய்தால் நாம் நன்றாக இருப்போம் என்று எண்ணினோமோ…” அதன் எல்லை வரை இது வளரும்.

தான் எதிர்பார்த்த நிலைகள் இல்லை என்றால் உடனே குருக்ஷேத்திரப் போராகிறது. எங்கே…? இந்த உயிருக்குள்…!
1.இவ்வளவு நாளும் என்னத்தைத் தியானத்தைச் செய்து என்ன பலன் கிடைத்தது…? என்ற உணர்வை எடுக்கப்படும் பொழுது
2.எண்ணியபடி நடக்கவில்லை என்றால் இந்தப் போர் நடக்கின்றது.
3.தியானத்திற்குப் போவோமா வேண்டாமா…!
4.தியானத்தைச் செய்வோமா வேண்டாமா…? என்ற இந்த உணர்வு வந்து கொண்டே இருக்கும்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடிக்கும் நமக்குள் உயிரிலே இந்த குருக்ஷேத்திரப் போர் நடந்து கொண்டே உள்ளது. ஏனென்றால் நம் உணர்விற்கும் புறத்திலிருந்து வரக்கூடிய நிலைகளுக்கும் இந்த வித்தியாசம் ஆகிறது.

அதனால் தான்… நாம் நம் மனதைக் குவிக்க வேண்டும்… அனைத்து உணர்வுக்குள்ளும் பகைமைகளை அகற்றிய ஞானிகளின் உணர்வுகளைச் சேர்த்து உயிருடன் ஒன்றச் செய்ய வேண்டும்… ஒளியாக மாற்ற வேண்டும் என்று சொல்லிக் கொண்டே வருகிறோம்.

December 30, 2022

ஐம்புலன்களின் இயக்கம் (பஞ்ச பாண்டவர்கள் – ஐவர்மலை)

மான் சாந்தமானது புலியோ கொடூரமானது. புலி மானைத் தாக்க விரும்புகின்றது தன் உணவுக்காக வேண்டி…!

மானைக் கொன்று புசிக்க வேண்டும் என்ற உணர்வுகள் புலியிடமிருந்து வெளிவரப்படும் பொழுது சூரியனிலிருந்து வெளிப்படக்கூடிய “வெப்பகாந்தம்…” அதைக் கவர்ந்து கொள்கிறது.

புலியின் உணர்வைக் கவர்ந்து கொண்ட பின்
1.மான் புலியைப் பார்த்த பின்… வெப்பகாந்தம் கவர்ந்த உணர்வை மான் நுகர்ந்தபின் அதற்கு அந்த வலிமை வருகின்றது.
2.அது தான் கண்ணன் சங்கநாதம் ஊதியபின் குருக்ஷேத்திரப் போர் என்று சொல்வது.
3.மான் புலியைப் பார்த்து அந்த உணர்வுகள் வரப்படும் பொழுது உயிரிலே மோதப்பட்டு
4.அபாயக் குரல்களை… இந்த உணர்ச்சிகளை எழுப்புகின்றது...
5.கண்ணன் சங்கநாதம் ஊதுகின்றான்... குருக்ஷேத்திரப் போர் அங்கே நடக்கிறது.

சூரியன் வெளிப்படுத்தும் வெப்பம் காந்தம் விஷம் என்ற நிலையில் புலியின் உணர்வுகளை அது எடுத்துக் கொண்டு வரும் பொழுது… “அர்ஜுனன் - வலிமைக்க சக்தி…!”

எதைக் கவர்ந்து கொண்டதோ அந்தச் சத்தை இதில் உள்ள விஷம் “அந்த உணர்ச்சியின் வேகத்தை ஊட்டும் – நகுலன்…!”

மான் நுகர்ந்து கொண்ட பின் உயிரிலே குருக்ஷேத்திரப் போராகிறது… ஆனால் அதே சமயத்தில்… எதையுமே குறிவைத்துத் தாக்கும் வல்லமை பெற்றவன் அர்ஜுனன் என்ற நிலையில் “புலியின் உணர்வுகளை உடலுக்குள் செலுத்தி… இரத்தத்தின் வழி சென்று அந்த வலிமையை உடல் முழுவதும் பரவச் செய்கின்றது – அர்ஜுனன்…”

இந்த உடலுக்குள் இந்த உணர்வின் தன்மை ஊடுருவி… குறி வைத்துத் தாக்கப்படும் போது… நகுலன்.
1.அதனுடைய இயக்க உணர்வின் தன்மை மானை உருவாக்கிய அணுக்களுக்குள்
2.இந்த வலிமையை ஒன்று சேர்த்து விடுகின்றது… அதாவது அதற்குள் விரிவடையச் செய்கின்றது.

அதனுடன் சேர்த்துக் கொண்ட பின்… இரண்டறக் கலந்து விட்டால் (மானின் உணர்வும் புலியின் உணர்வும்) – “சகாதேவன்…” என்றும் அதனுடன் சேர்த்து வலிமையாகி விட்டால் – “பீமன்…” என்றும் காட்டப்படுகிறது.

மானின் உடலுக்குள் புலியின் உணர்வுகள் வலிமை பெற்றால் அப்போது பீமன் என்ற நிலை வருகிறது. பீமன் எல்லாவற்றையும் அடித்து நொறுக்கித் தனது நிலைக்கே அடிமையாக்கி விடுகின்றான் என்று காவியத் தொகுப்புகள் காட்டுகிறது.

புலி தன் பசிக்காக அந்த மானை அடித்து உட்கொண்ட பின் மானின் உயிரான்மா வெளி வருகிறது. மானின் உயிரான்மா வெளி வரப்படும் பொழுது அர்ஜுனனுக்குக் கண்ணன் சாரதியாகச் செல்கின்றான்…!

எப்படி…?

கண்கள் தான் உற்று நோக்குகிறது…
1.புலியோ மானின் உடலை இரையாக்குகின்றது
2.புலி மானின் உடலை இரையாக்குவதற்கு முன் “புலியின் உணர்வின் உணர்ச்சிகளை…”
3.மானின் கண்கள் தனக்குள் புலியின் உணர்வுகளை இரையாக்கி விடுகின்றது.

இரையின் உணர்வு செயலாகும் போது… எதன் வலிமை பெற்றதோ அதன் நிலை கொண்டு உருவாகிடும் தன்மை பெறுகின்றது. மானின் உயிரான்மா வெளி வரப்படும் பொழுது கண்ணன் அர்ஜுனனுக்குச் சாரதியாக செல்கின்றான்.

அந்த வலிமைக்குத்தக்க சாரதியாகச் சென்று எந்தப் புலியைக் கூர்மையாக உற்றுப் பார்த்ததோ அந்தக் கூர்மைக்குத்தக்க வலிமை கூடி
1.அங்கே இதிலே சேர்ந்த காந்தப்புலன் எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற நிலைகளில்
2.செல்ஃபோன்களில் நாம் பதிவாக்கி விட்டால்… அதை இயக்கப்படும் பொழுது அது எப்படித் திரும்ப இயங்குகின்றதோ
3.ஒரு செடியில் விளைந்த வித்தினை நிலத்தில் ஊன்றினால் புவியின் ஈர்ப்பின் துணை கொண்டு தன் தாய்ச் செடியின் சத்தைக் கவர்ந்து அது எப்படி விளைகின்றதோ
4.அதைப் போன்று எந்தப் புலியின் உணர்வுகள் மானின் உடலுக்குள் சென்றதோ
5.மானின் உயிரான்மா வெளிவந்த பின் புலியின் ஈர்ப்புக்குள் சூட்சமமாக வந்து விடுகின்றது.

புலியோ உடலுடன் இருக்கின்றது… அதைக் (மானின் ஆன்மாவை) கவர்ந்து விடுகின்றது. அதனுடைய கண்கள் இந்த மானை எப்படிப் பார்த்ததோ அதன் உணர்வு கொண்டு அதைக் கவர்ந்து விடுகின்றது.

புலியின் ஈர்ப்புக்குள் சென்று… புலியின் வியூகத்தைத் தகர்த்து அதனுள் சென்று நீ அதுவாகு…! என்று கண்ணன் உபதேசிக்கின்றார்.

பரிணாம வளர்ச்சிக்குக் கண் தான் பெரும்பகுதி வழிகாட்டுகிறது. ஆகவே… நமது வாழ்க்கையில் சந்தர்ப்பவசத்தில்
1.நாம் நுகரும் தன்னைக் காட்டிலும் வலிமையான உணர்வுகள்
2.நம்மை எப்படிப் பரிணாம வளர்ச்சியில் மாற்றியது என்று தான் தெளிவாகக் கூறப்படுகின்றது நமது சாஸ்திரங்கள்.

இப்படி மானின் ஆன்மா புலியின் உடலுக்குள் சென்ற பின் அதனுடைய குட்டியாக உருவாகிவிடுகிறது. “குட்டியாக ஈன்ற பின் – தர்மன்…!”

மானின் உடல் முதலில் புலிக்கு இரையாக்கப்பட்டது. இந்த உணர்வின் தன்மை உடலுக்குள் குட்டியான பின் தன் நிலை (புலி) ஆன பின் தர்மன்… “எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டு சமாதானப்படுத்துவான்…”

இது எல்லாம் காவியத் தொகுப்புகளில்
1.ஒவ்வொரு உணர்வுகளும் உணர்ச்சிகளும் எதன் எதன் வழியில்…
2.எப்படி இயக்குகின்றது…? என்ற நிலையைத் தான் சாஸ்திர விதிகளில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

October 24, 2022

நான் செய்வது எப்படித் தவறாகும்... என்று கேட்பது நாம் தானா...! அல்லது சுவாசித்ததா...?

மகாபாரதத்தில் கௌரவர்கள் நூறு பேர் என்றும் பாண்டவர்கள் ஐந்து பேர் என்றும் காட்டுகின்றார்கள். அதனின் உட்பொருள் என்ன...?

எந்த உணர்வின் தன்மை நாம் நுகர்கின்றோமோ அவை தான் நம்மை ஆளுகின்றது என்பதை ஞானிகள் காட்டியுள்ளனர். அதாவது
1.வெப்பம் காந்தம் விஷம் மணம் உணர்வு என்ற இந்த ஐந்து (பாண்டவர்கள்) நிலையில்
2.நாம் நுகரும் உணர்வுகள் எதுவோ (கௌரவர்கள்) அதுவே அதன் வழியில் நம்மை ஆளுகின்றது
3.நம் உயிர் அதனின் உணர்வை இயக்குகின்றது - நம் உயிர் சக்தியாக இயக்குகின்றது.

நாம் நினைக்கும் (எண்ணும்) உணர்வுகளே நம்மை இயக்குகின்றது என்ற நிலையை அங்கே உருவாக்கி அதைக் கௌரவர்கள் என்று காட்டியுள்ளனர்.

ஒரு குணத்தை நான் எடுத்துக் கொண்டால் அதைக் காக்க வேண்டும் என்றும் அதே குணத்தைத் தான் நான் வளர்த்துக் கொள்ளும் நிலையும் வருகின்றது.

உதாரணமாக ஒருவர் மேல் நான் கோபத்தை வளர்த்துக் கொண்டால் அந்தக் கோபமே எனக்கு உகந்தது என்றும்... அதிலிருந்து தன்னை மீட்டுக் கொள்ளும் நிலை இல்லாது அதை வழி நடத்த வேண்டும் என்றும்... அகங்காரம் கொள்ளுகின்றது.

அதே போல ஒருவர் தொழில் செய்தால்
1.அதிலே தான் தவறு செய்தாலும் அதை ஏற்றுக்கொள்ளும் நிலை இல்லாதபடி
2.நான் செய்தது எப்படித் தவறாகும்...? என்று பிடிவாத குணங்கள் இருப்பதும்
3.தெரியாதபடி ஒரு சொல்லைச் சொன்னாலும்... தான் நுகர்ந்த உணர்வுகள்... தான்... தனது... என்ற நிலையில்
4.தன்னைக் காக்க அதன் உணர்வுகளை நாம் வலுப்படுத்தும் போது தீமையின் உணர்வுகளே நமக்குள் வளர்கின்றது.

ஆகவே இதைப் போன்ற உணர்வுகள் தனக்குள் வளராது நம்மைக் காத்துக் கொள்ள வேண்டுமா இல்லையா...?

ஆகையினால் தான் அதைக் கௌரவர்கள் என்றும் தனக்குள் எடுக்கும் குணங்கள் ஒவ்வொன்றும்... “தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் நிலையாகவே வரும்...” என்று மகாபாரதத்தில் இது தெளிவாக்கப்படுகின்றது.

ஒரு வேப்பமரம் கசப்பின் தன்மை கொண்டு தன் கௌரவத்தைக் காத்துக் கொள்ள விரும்புகின்றது. ரோஜாப் பூவோ தன் நறுமணத்தைக் காத்துக் கொள்ள விரும்புகின்றது. மற்ற மணங்கள் தனக்குள் வராது தடுக்கின்றது.

இதைப் போல ஒருவனைத் தாக்க வேண்டும் என்று எண்ணிவிட்டால் மற்றவர் சொன்னால் அதை ஏற்றுக் கொள்வதில்லை.
1.தான் வாழ வேண்டும் என்று எண்ணிவிட்டால் பிறருடைய துன்பங்களை நாம் பார்ப்பதில்லை... துன்பப்படுத்தியே நாம் வாழுகின்றோம்
2.துன்பப்படுத்துகின்றோம் என்று உணர்த்தினாலும் “எனது வாழ்க்கைக்காக நான் இதைச் செய்தேன்...” என்று
3.அசுர குணங்களைத்தான் அகங்களைக் கொண்டு தான் வாழ்கின்றோம்.

இவ்வாறு வாழும் நாம் எதனின் உணர்வை நாம் பெற்றோமோ அதனின் நிலையாகவே உயிர் நம்மை இயக்கி விடுகின்றது. அதனால் தான்...
1.நீ எதை எண்ணுகின்றாயோ அதன் உணர்வையே நீ பெறுகின்றாய்
2.அதை வளர்க்கின்றாய்... அதுவாக ஆகின்றாய் என்று கீதாச்சாரம் சொல்கிறது.

July 8, 2022

மகாபாரதப் போர் எங்கே நடந்து கொண்டிருக்கிறது...?

நம் உடலில் இருக்கும் 1008 குணங்கள் அது மனிதனாக நம்மை எப்படி உருவாக்கியது…? ஒவ்வொரு குணமும் அது எப்படி உருவானது…? என்றும் ஆலயங்களிலே காட்டப்பட்டுள்ளது.

பத்து உணர்வுகள் சேர்த்து ஒரு தெய்வ குணத்தைப் பெறுகின்றது. கோவில்களில் “10 நாள் விழா...” என்று கொண்டாடுவார்கள்... மாடு வாகனம் காளை வாகனம் சர்ப்ப வாகனம் அன்ன வாகனம் என்றெல்லாம் சொல்வார்கள்.

இந்த உடலிலே ஒன்றுக்குள் ஒன்று விழுங்கித் தான் ஒரு குணத்தின் தன்மை உருவானது... அந்தத் தெய்வ குணமாக ஆனது. மனிதனாகும் பொழுது தீமையிலிருந்து விடுபட்டு நல்ல உணர்வைத் தனக்குள் உருவாக்கும் சக்தி பெற்றது என்று தான் இங்கே வருகின்றது.

மகாபாரதத்தில் கௌரவர்கள் 100 பேர்கள் என்றும் பஞ்ச பாண்டவர் ஐந்து என்று வந்தாலும்...
1.அரச நிலைகள் கொண்டு கௌரவர்கள் தனக்குள் எடுத்துக் கொண்ட உணர்வுகள் அந்த வலிமை கொண்டு
2.நல்லதை எண்ணினால் அதை விடாதபடி செய்கிறார்கள்.

எல்லாம் கெட்டவர்களாக இருக்கின்றார்கள்.. ஆசைப்பட்டுத் தனக்குள் வளர்த்திருக்கின்றோம்.

நமது உயிர் திரௌபதையாக இருக்கின்றது. ஐந்து புலனறிவு கொண்டு நாம் நுகர்கின்றோம்.
1.தீமைகளை நீக்கிடும் உணர்வை எண்ணி எடுத்து அதை நாம் நுகர்ந்தோம் என்றால்
2.கௌரவர்கள் தனக்கு இடைஞ்சலாகிவிடும் என்று உள்ளே புகாதபடி தடுக்கும் போது இந்தப் போர் முறைகள் வருகிறது என்று
3.மகாபாரதத்தில் இப்படித் தெளிவாகக் கொடுத்திருக்கின்றார்கள்... நாம் புரிந்து கொண்டிருக்கின்றோமா...?

மகாபாரதப் போர் என்றால் அதை எப்படி எப்படியோ காட்டி விட்டார்கள்...!

கௌரவர்களுக்கும் பஞ்ச பாண்டவர்களுக்கும் அதாவது
1.ஐந்து புலனறிவு கொண்டு ஒரு உணர்வை நுகரப்படும் பொழுது அதற்கும்
2.இந்த உடலில் உள்ளுக்குள் (ஏற்கனவே) வளர்த்ததற்கும் இதற்கும் எதிர்மறையாகின்றது.

கோபமான குணங்களை எடுத்துக் கொண்ட பின் அடுத்து ஒரு சாந்தமான நிலைகளை நாம் எண்ணினால் அது விடுகின்றதா...? இல்லை. அந்த உணர்வை விடாதபடி எதிர்த்து நின்று போர் செய்து அதைத் தொலைத்து விடுகின்றது.

ஆகவே நாம் எதனின் உணர்வை எடுத்தோமோ இந்தக் கண்கள் அதற்கு உதவி செய்தாலும் அடுத்து இந்தக் கண்கள் அதை எப்படி மாற்றி அமைக்கின்றது...? என்ற நிலையைக் இங்கே காட்டுகின்றார்கள்.

மகாபாரதப் போரைப் பற்றி இன்று எழுதி வைத்திருக்கும் வித்தியாசங்களைப் பார்த்தோம் என்றால் அதிலே திசை திருப்பிய நிலைகளைப் பார்க்கலாம்.

அகஸ்தியன் கண்ட உணர்வைத் தான் வியாசகன் அறிந்து இத்தனை நிலைகளையும் அவன் வெளிப்படுத்தி உள்ளான்.

மனிதனின் வாழ்க்கையில் நீங்கள் எப்படிப் பார்த்தாலும் இந்த மனப் போர் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கின்றது.

ஆகவே… நமது குரு காட்டிய அருள் வழியில்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் பதிவாக்கி நல் உணர்வுகளை உயர்வாக்கி
2.இந்த உடலுக்குப் பின் நாம் பிறவியில்லா நிலை அடைதல் வேண்டும்.
3.அதற்கேதான் இந்தத் தியானமே தவிர சொத்து வேண்டும்… சுகம் வேண்டும் என்பதற்காக அல்ல.

அருள் ஞானச் சொத்து என்ற அந்தப் பேரின்ப சொத்தைத்தான் நாம் தேட வேண்டும். அதைத் தேடிக் கொண்டால் அமைதியும் நிறைவும் மகிழ்ச்சியும் நம்மைத் தேடி வரும்.

January 16, 2021

கண்ணனுக்கு மூத்தவன் பலராமன் என்றால் அதனின் விளக்கம் என்ன...?

ஒருவர் வேதனைப்படுவார்.. ஒருவர் சங்கடப்படுவார்... ஒருவர் நோயுடன் அவதிப்படுவார்... ஒருவர் கோபக்காரராக இருப்பார்...! இவர்களின் உணர்வை எல்லாம் அன்றாட வாழ்க்கையில் நாம் உற்றுப் பார்க்க நேர்ந்து அதை நுகர்ந்தறிந்தால் இந்த உணர்வுகள் நமக்குள் பதிவாகின்றது.
 
சீதா என்றால்... சத்து சுவை என்றும்.. ராமா என்றால் எண்ணங்கள் என்றும்... சீதாராமா என்றால்.. மனிதனுக்குள் நுகர்ந்தால் (சுவாச நிலை) சுவைக்கொப்ப எண்ணங்கள் வருகின்றது என்றும்... நமக்குள் பலவிதமான நிலைகளை (மேலே சொன்னதை) நுகர்ந்தால் அந்த உணர்வின் எண்ணங்கள் “பல ராமனாக (பலராமன்) இயக்குகின்றது...” என்றும் சாஸ்திரங்களில் காட்டப்பட்டது.
 
பலராமனாக வருவதற்குக் காரணம்... நம் கண் ஒன்றை உற்றுப் பார்க்கின்றது. கண்களால் கவரப்பட்ட உணர்வை நுகரச் செய்கின்றது. அதன் உணர்வின் எண்ணங்களாக வருகின்றது.
 
உயிரோ அந்த உணர்வை ஈசனாக இருந்து இயக்குகின்றது. உடலுக்குள் அது பதிவாகின்றது. இவ்வாறு பதிவாக்கிய உணர்வுகளை
1.கண்களால் அந்தந்த உணர்வை அறிய முடிகின்றது
2.நுகர்ந்த பின் அந்தந்த உணர்ச்சி கொண்டு உயிர் நன்மை தீமை என்று அறிவிக்கின்றது.
 
நன்மை தீமை என்று அறிவதற்குக் கண்ணே கவர்ந்து அந்த உணர்வைப் பதிவாக்கி அந்த உணர்வை நுகரச் செய்கிறது.
1.உயிர் அந்த உணர்ச்சியை ஊட்டி உடல் முழுவதும் அது சக்கரம் போன்று சுழன்று படரச் செய்கின்றது.
2.உடலுக்குள் சென்ற பின் உடல் அதை அரவணைத்துக் கொள்கின்றது.
 
நாம் எத்தனையோ கோடிச் சரீரங்களைக் கடந்து மனிதனாக வந்தாலும் மனிதனான பின் இந்த உணர்வுகள் அனைத்தும் நமக்குள் மறைந்துள்ளது. பல விதமான எண்ணங்கள் நமக்குள் உண்டு,
 
இந்த உயிர் இங்கே பூமிக்குள் முதலில் வந்த பின் தாவர இனத்தில் விழுந்து உடல் பெற்றாலும் “கண்கள் உருவாவதற்கு முன் எண்ணங்களே இருந்தது...!” அனைத்தையும் (தாவரங்களின் மணங்களை) உணர்ந்து நுகர்ந்து உணர்வுகள் அது எண்ணங்களாக வளர்ந்தது.
 
ஒரு செடியின் சத்தைச் சூரியன் கவர்ந்து கொண்டால் அது சீதாலட்சுமியாக மாறுகின்றது. ஆனால் அதே சமயம் இந்த உயிரணு சூரியன் கவர்ந்த அந்த மணத்தை நுகர்ந்தால் சீதாராமனாக வருகின்றது. உயிரணு நுகர்ந்து உடலாக்கப்படும் பொழுது  சிவமாகின்றது.
 
உயிரோ ஈசனாகின்றது. உயிரின் இயக்கம் விஷ்ணுவாகின்றது. நாராயணன் மறு அவதாரம் விஷ்ணு. உயிரின் துடிப்புகள் வெப்பமாக வரப்படும் பொழுது விஷ்ணு என்றும் காட்டுகின்றார்கள்.
 
நாராயணன் என்றால் சூரியன். தான் எடுத்துக் கொண்ட உணர்வு சீதாலட்சுமியாக மாறினாலும் இந்த உயிரணு நுகர்ந்தபின் சீதாராமனாக அந்த எண்ண்ங்கள் தோன்றுகிறது. நாராயணன் திரேதா யுகத்தில்  சீதாராமனாகத் தோன்றுகின்றான். திரேதா என்றால் உடல்.
1.இதை எல்லாம் ஒவ்வொன்றுக்கும் காரணப் பெயர் வைத்து
2.நாம் அறியும் தன்மைக்குக் கொண்டு வருகின்றனர் ஞானிகள்.
 
இப்படி வந்த இந்த உயிர் தான்... நுகர்ந்த பின் இந்த சீதா என்ற அந்தச் சுவை உடலாகும் போது சிவம்..
 
உடலுக்குள் அந்த உணர்ச்சியின் எண்ணங்களைத் தோற்றுவிப்பதும் நாராயணன் அந்த உடலுக்குள் சீதாரமனாக அந்தச் சுவை எதுவோ அந்த எண்ணத்தின் உணர்ச்சியாக அது இயக்குகின்றது என்பதனைத் தெளிவாகக் காட்டுகின்றது நம் சாஸ்திரங்கள்.
 
கடவுளின் அவதாரத்தில் இது தெளிவாக்கப்படுகின்றது.
 
இவ்வாறு உருவான அந்த எண்ணங்கள் சீதாராமன் என்று வந்தாலும் அதற்கப்புறம் கண் இல்லை என்கிற போது பார்க்க வேண்டும் என்ற உணர்வு வருகின்றது.
 
1.பல தீமையான உணர்வுகளை நுகரும் போது அதனால் வேதனைப்படுவதனால்
2.அந்த வேதனையிலிருந்து மீள வேண்டும் என்ற உணர்ச்சிகள் உந்துகின்றது.
3.அதன் அறிவாக மாற்றம் அடைகின்றது... தப்பிக்கும் உணர்வுகள் அங்கே வருகின்றது.
 
பார்க்க வேண்டும்... பார்க்க வேண்டும்... என்ற உணர்வுகள் பார்த்துத் தெரிந்து உணர வேண்டும் என்ற நிலையில் அதற்குள் அந்த நினைவாற்றல்கள் கூடி அந்த உணர்வின் எண்ணங்களைத் தோற்றுவிக்கின்றது.
 
1.அவ்வாறு தோற்றுவித்த உணர்வுகள் ஒவ்வொரு உடலிலும் சேர்த்துச் சேர்த்து
2.பல உடல்களில் பார்க்க வேண்டும் என்ற உணர்வுகள் வளர்ச்சி அடைகிறது,
3.அதைத் தான் “துவாரகா…” என்று காட்டுகின்றனர்.
 
ஒரு சுவையின் சத்தை நுகரப்படும் போது திரேதா யுகத்தில் உணர்வுகள் எண்ணங்களாகிக் கிரேதா உடல் என்று ஆனாலும் அதே சமயத்தில் இங்கே துவாரகா இந்த உடலுக்குள் தான் தன் தேவைக்குகந்ததை (தேவகி)  நுகர்ந்த உணர்வுகள் வாசு தேவனாக சுவாசித்த உயிர் அதை உருவாக்குகின்றது.
 
அதாவது “தேவகி” என்ற உணர்வின் சத்தை
1.தன் தேவைக்கு என்று எண்ணிய அந்த உணர்வுகள் இரண்டும் சேர்ந்து
2.இந்தத் துவாரகா யுகத்தில் வாசுதேவனுக்கும் தேவகிக்கும் இந்த உடலான சிறைச்சாலைக்குள் கண்ணன் பிறந்தான்... கம்சனை வெல்ல..!
 
கம்சன் என்றால் இருள். இருளை நீக்க அவன் பிறந்தான். இப்படிப் பல ஆயிரம் ஆண்டுகள் பல சரீரங்களீல் பார்க்க வேண்டும் என்ற உணர்ச்சிகள் தோன்றித் தோன்றி அந்த எண்ணங்களால் தான் கண்கள் தோன்றியது என்று நம் சாஸ்திரங்கள் தெளிவாக்குகிறது.
 
இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வதற்காக மகாபாரதத்தில் பலராமன் கண்ணனுக்கு மூத்தவன் என்று காட்டுவார்கள்.
 
பல உணர்வின் எண்ணங்கள் (பல ராமன்) அங்கே தோன்றித் தான் பார்க்க வேண்டும் என்ற கண்கள் தோன்றியது.
 
ஆக...
1.இந்த இயக்கத்தின் நிலைகளை மனிதன் புரிந்து கொள்ளும் நிலைக்கே
2.பல உண்மையின் உணர்வுகளை இயக்கத்தைக் காட்டியிருந்தாலும்
3.காலத்தால் அந்த உண்மைகள் மறைந்து விட்டது.
 
மனிதனாக உருவாகக் காரணமான... “நாம் நுகர்ந்த உணர்வுகள்...” எவ்வாறு சந்தர்ப்பங்களில் ஒவ்வொன்றயும் நுகரச் செய்தது..? சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உயிர் நம்மை எப்படி மனிதனாக உருவாக்கியது...? என்று இதை எல்லாம் நம் சாஸ்திரங்களில் மிக மிகத் தெளிவாக்கப்பட்டுள்ளது.   

அதைச் சொன்னாலும் இன்று தெரிந்து கொள்ளும் நிலை இல்லை...! ஏற்கும் நிலையும் குறைவாகவே உள்ளது...!