விநாயகர் தத்துவப்படி
நாம் கூர்மையாக உற்றுப் பார்ப்பதெல்லாம் நம் உடலுக்குள் வினையாகின்றது.
மூலாதாரத்தில்
மூண்டெழும் கனலை காலமறிந்து கருத்தறிந்து செயல்பட வேண்டும் என்று பாடுகின்றார்கள்.
நமது உயிர் “மூலம்...”
அந்த மூலத்தில் மோதும்போது அதனுடைய ஆதாரமாகத்தான் (மூலாதாரத்தில் மூண்டெழும் கனல்) அந்த உணர்வு எதுவோ அது
மோதியவுடன் கனலாக எழும்புகின்றது.
ஒருவர் கோபித்தது
நம்மை வேதனைப்படச் செய்கின்றது. நண்பராக இருக்கும் ஒருவர் கடுமையான செயல்களைச்
செய்திருப்பார். பாசமாக இருக்கும் நம் பிள்ளையே ஒரு தவறான செயலைச் செய்திருக்கும்.
அப்பொழுது கோபமும்
வேதனையும் ஆத்திரமும் அதிகமாக நமக்கு வருகின்றது. அந்த சமயத்தில் நமக்கு அப்படிக் கோபம் வருமளவிற்கு என்ன செய்தார்கள் என்று அதனின் உண்மை நிலைகள் நமக்குத் தெரியாது.
மாமியார் இப்படியெல்லாம்
பேசியது.
அதைக் கேட்டு மாமனார் இப்படி பேசினார் என்று சொல்லி இந்த உணர்வின் தன்மைக்
கொண்டு “ஓ...” வென்று மருமகள் அழுகின்றது.
இதெற்கெல்லாம் காரணம்
என்ன…! நாம் சற்று சிந்தித்துப் பார்க்கின்றோமா…? நமக்கு அந்தப் பழக்கத்தை யாராவது
காட்டியிருக்கின்றார்களா…!
ஏனென்றால
அவர்கள் சொல்லக் கூடிய (அல்லது செய்த) உணர்வை நம் கண் பார்க்கின்றது. அந்த உணர்வலைகள்
நம் ஆன்மாவாக ஆகின்றது. அதைச் சுவாசிக்கும் பொழுது நம் உயிரில்
- மூலத்தில் மோதுகின்றது.
அதில் (உயிரான மூலத்தில்) மூண்டெழும் கனலைக் காலமறிந்து கருத்தறிய வேண்டும். அதைத்தான்
அந்தப் பாடலில் உணர்த்துகின்றார்கள்.
ஏன் இப்படிச் சொல்கிறார்கள்..? என்று
சிந்திக்கின்றோமா…!
1.மற்றவர்கள்
செய்யும் செயலை
2.அது எதனால்...?
என்று காரணத்தை அறிந்தால்
3.காலமறிந்து
அதை நீக்க முடியும்.
அதை நீக்க முடியவில்லை
என்றால் குழந்தையோ நண்பரோ மற்றவர்களோ செய்த அந்த வினைகள் நமக்குள்ளும் வினையாகி அந்த
வினைக்கு
நாயகனாகி நம்மையும் அதன் வழியில் இயக்கத் தொடங்கும்.
அவர்கள்
அறியாது செய்யும் தவறுகளை நீக்கச் சொல்லாது. மாறாக அவர்கள் உணர்த்திய உணர்வுகள்
நம்மை இயக்கி அவர்கள் மேல் பகைமை உருவாக்கும்.
அவர்களை எண்ணும்போதெல்லாம்
அந்த பகைமையின் உணர்வுகளே வளரும். இதைத்தான் விநாயகர் தத்துவத்தில் “மூலாதாரத்தில் மூண்டெழும் கனலைக் காலமறிந்து கருத்தறிந்து செயல்பட வேண்டும்”
என்று தெளிவாகச் சொல்லியுள்ளார்கள்.
ஆகவே மகரிஷிகளின்
அருள் சக்திகளை ஒவ்வொரு நிமிடமும் எடுத்து இந்த வாழ்க்கையில் வரும் சங்கடங்களை நம் மேல் படும் தூசியைத் துடைப்பதுப் போலத் துடைக்க வேண்டும்.