ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

Showing posts with label தீமைகளைப் பிளக்கும் ஆற்றல். Show all posts
Showing posts with label தீமைகளைப் பிளக்கும் ஆற்றல். Show all posts

November 10, 2020

தீமைகளைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்வதை விட அதை நீக்குவதற்காக நாம் எடுக்க வேண்டிய அருள் சக்திகளே முக்கியமானது

டாக்டருக்குப் படித்தவர்கள் உடல் கூறில் எந்தக் குறைபாடு வந்தாலும் அந்த நோயைக் கண்டுபிடிப்பார்கள். ஸ்கேன் வைத்து அதிர்வுகள் மூலம் பார்ப்பார்கள். அதன் மூலம் உடலிலுள்ள உறுப்புகளையும் பார்க்கின்றார்கள். நாமும் தெரிந்து கொள்கிறோம்.
 
அதே சமயத்தில் உங்களிடம் நான் (ஞானகுரு) உபதேசம் சொல்லும் போது வைத்திய ரீதியாகத்தான் பேச வேண்டும். அந்த உணர்வின் தன்மையை எடுத்துக் கொண்டு உங்களை நீங்கள் அறிய விரும்பினால் உடலின் ஓட்டத்தினை நீங்களும் பார்க்கலாம்.
 
ஆனால் இது நமக்குத் தேவையற்றது.
 
என்ன பார்க்கலாம்…? என்றால்
1.என்னவெல்லாம் தெரிகின்றது என்ற நிலையில்
2.சில பேர் எல்லாவற்றையும் திரும்பிப் பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள்.
3.அப்படிப் பார்க்கும் போது பார்த்த நிலைகள் கொண்டு அங்கிருக்கும் தீமையைத்தான் வளர்த்துக் கொள்ள முடியும்.
 
சில பேர் என்ன செய்கின்றார்கள்…?
 
மந்திரத்தால் பில்லி சூனியங்கள் ஏவப்படுகிறது அதனால் சில விலை உயர்ந்த பொருட்கள் கூட காணாமல் போகின்றது. குடும்பத்திலும் முடக்கங்கள் ஏற்படுகின்றது.
 
சாமிக்கு (ஞானகுரு) சக்தி இருக்கின்றதல்லவா…! சாமி எங்களுக்கு இதை எல்லாம் சரி செய்து கொடுக்கலாம் அல்லவா…! என்று கேட்கின்றார்கள்.
 
குருநாதர் (ஈஸ்வரபட்டர்) எல்லாச் சக்திகளையும் எமக்குக் கொடுத்தார் என்று சொன்னோம் என்றால் அதை வைத்து “மந்திர தந்திரம் செய்பவர்களை நான் அடக்க வேண்டும்” என்ற எண்ணத்தில் இவ்வாறு கேட்கிறார்கள்.
 
நான் செய்வேன் என்று சொன்னால் நானா…?
1.குருநாதர் உபதேசித்த உணர்வுகளை நான் எடுத்தேன்
2.அந்த உணர்வின் வழிப்படி எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளக் கூடிய நிலை வந்தது.
 
குருநாதர் ஞான வித்தை எனக்குள் விதைத்தார்… வளர்த்துக் கொண்டேன்.
1.அதே வழிப்படி உங்களுக்குள்ளும் ஞான வித்தாகப் பதிவு செய்கின்றேன்.
2.அதற்குண்டான சக்திகள் அனைத்தும் இந்தக் காற்றில் இருக்கின்றது.
3.அதை நீங்கள் எண்ணி எடுத்து வளர்த்துக் கொண்டால்
4.உங்களுக்குள் தீமையைப் போக்க கூடிய சக்தியாக அது வரும் என்று தான் சொல்கிறோம்.
 
நான் செய்தேன் என்றால் இதை நான் செய்யவில்லை…! குருநாதர் காட்டிய வழியில் அருளைப் பெருக்கும் போது அது அந்த வழியை உங்களுக்குள் காட்டும். அதன் வழியில் நீங்கள் செல்லலாம்.
 
ஏனென்றால் ஆரம்பத்தில் சில பேருக்கு இதைச் செய்யும்போது எனக்கு அந்தக் கடவுள் தெரிகின்றது உடலில் இருப்பது எல்லாம் தெரிகின்றது என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.
 
காட்சி என்று தெரிந்தாலே எனக்கு எல்லாம் தெரிகின்றது என்று அடுத்தவருக்குக் குறி சொல்வது போல் சொன்னார்கள்.
 
கடைசியில் வீணாக அடுத்தவர்கள் கஷ்டங்களை எல்லாம் எடுத்துக் கொண்டு வம்பிலே போய் மாட்டிக் கொள்கிறார்கள். கஷ்டத்தைத் தான் வாங்கிக் கொள்கின்றார்கள்.
 
தெரிந்ததைச் சொல்லப்படும்போது இதில் வருவதைக் கழிக்கத் தெரிய வேண்டுமல்லவா…? அது முக்கியம்…!
 
ஒவ்வொரு நிமிடமும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து வலுவாக்கிக் கொண்ட பின் அவர்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.
 
ஆனால் அப்படி எடுக்கவில்லை என்றால் அந்த விஷம் இங்கே வந்து விடுகின்றது. அங்கிருக்கும் தீமைகளைத் தான் மீண்டும் தனக்குள் வளர்க்க முடியுமே தவிர நல்லதை வளர்க்க முடியாது.
 
அருள் சக்திகளைப் பெறும் பொழுது அந்த உணர்வை நாம் நுகர்கின்றோம்…. தெரியச் செய்கிறது. தெரிந்து கொண்டாலும் அந்த தீமைகள் வருவதை அறிகின்றோம்.
 
அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டுமென்று இதைத் தனக்குள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
 
பிறர் உணர்வு நுகர்ந்ததை உடனடியாக நீக்க வேண்டும். அந்தத் தீமையின் உணர்வுகள் நமக்குள் புகாது விழிப்புடன் இருக்க வேண்டும்.
 
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளால் அவர்கள் பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும்
2.அவ்ர்களை அறியாது சேர்ந்த தீய வினைகளிலிருந்து விடுபட வேண்டும்
3.அவர்களின் வாழ்க்கை எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும்.
4.அவர்கள் தொழில்கள் நன்றாக இருக்க வேண்டும்
5.அவர்கள் குடும்பம் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்று
6.நம் உணர்வை இந்த மாதிரி அவர்களுக்குப் பாய்ச்சிப் பழக வேண்டும்.

தீமை என்று தெரிந்தாலும் தெரிந்து கொண்டேன் என்பதை விட அதை நீக்கும் அருள் சக்திகளை எடுத்து வலுவாக்க வேண்டும். அதைத் தான் அடுத்தவருக்கும் போதிக்க வேண்டும்.

September 19, 2019

தீமைகளை வென்றிடும் சூட்சமங்களைப் பற்றி அறிந்து கொண்டால் நம் உணர்வுகளை ஒளியாக்கிட முடியும்


ஆடு மாடு மற்றவைகள் எல்லாம் தனக்குள் உருவாகும் விஷத்தின் தன்மை கொண்டு கடினமான தட்டைகளை (தாவர இனங்களை) தனக்குள் உருவாகும் உணர்வின் தன்மை அதை அடிமைப்படுத்தி பிஸ்கெட் போலக் கரைத்து உணவாக்கிக் கொள்கின்றது.

கரைத்துத் தனக்குள் எடுத்துக் கொண்ட பின் அதற்குள் இருக்கும் விஷம் கலந்த உணர்வின் சத்தையும் தனக்குள் எடுத்து
1.வலுவான உடலாகத் தன் உடலை மாற்றுகின்றது.
2.ஆனால் அதே சமயத்தில் அதிலிருந்து வெளிப்படும் மணம் சாணம் நல்லவைகளாக இருக்கின்றது.

பல பல விஷ மூலிகைகளையும் ஆடு உணவாக உட்கொள்கின்றது. பின் அந்தச் சாணத்தை அது வெளியிடும் பொழுது எடுத்து நாம் நுகர்ந்து பார்த்தால் நமக்குள் இருக்கும் நஞ்சுகளை அது முறித்து அதை அடக்கிடும் அந்தச் சக்தி பெறுகின்றது.

1.அந்தச் சாணத்தில் வெளிப்படும் மணத்தை நாம் நுகரப்படும் பொழுது
2.நம் இரத்தங்களிலே இது கலக்கப்பட்டு
3.நம்முடைய சுவாசப்பைகளிலேயோ மற்ற உறுப்புகளிலேயோ இருக்கும் விஷத்தை முறிக்கும் ஆற்றல் கிடைக்கின்றது.

இதை நீங்கள் பார்க்கலாம்.

அதே சமயத்தில் அந்தச் சாணத்தை வைத்து நம் வீட்டை மெழுகும் பொழுது புவியின் வெக்கையால் அலைகள் வெளிப்படும். அதன் மீது நடந்தால்
1.வீட்டில் இருக்கும் துன்பமான உணர்வுகளை
2.நம் பாதத்தால் கவரப்படும் இந்த உணர்வுகளை அடக்கும் சக்தி பெறுகின்றது.
3.அதனுடைய மணங்களுக்குத் தீமைகளை அடக்கும் சக்தி வருகின்றது.

இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆனால் மனித உடலிலோ நாம் சுவைமிக்க உணவை உணவாக உட்கொண்டாலும் நம் உடலுக்குள் சென்ற பின் நம் உடலின் தன்மையோ நஞ்சைப் பிரித்துவிட்டு நல்ல உணர்வை உடலாக மாற்றுகின்றது. நல்ல அணுக்களாக மாற்றுகின்றது.

அப்படி நல்ல அணுக்களாக மாற்றப்படும் பொழுது தான் நாம் எதனையும் நிதானித்து தெரிந்து கொள்ளும் தன்மையை அடைகின்றோம்.

ஒரு விளக்கு அது எரியப்படும் பொழுது வெளிச்சமாக இருக்கின்றது. அதன் மீது ஒரு கருப்பான பொருளை ஒட்டிவிட்டால் கருப்பின் நிறமே வருகிறது. சிவப்பான பொருளை ஒட்டிவிட்டால் சிவப்பின் நிறமே வருகின்றது.

இதைப் போல் தான் நம் கண்களின் வழியாக வேதனை என்ற உணர்வின் தன்மையைக் கவர்ந்து விட்டால் இந்தக் கண்கள் அந்த வேதனையைத் தான் கவரும் திறன் பெறுகின்றது. அதன் உணர்வின் தன்மை நாம் எதை எண்ணுகின்றோமோ அது வருகின்றது.

வேதனை என்ற நிலைகளை நீக்க விஷத்தை வென்ற அருள் மகரிஷிகளின் உணர்வுகள் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று உயிருடன் வேண்டி அந்த உணர்வை ஏங்கப்படும் பொழுது இந்த நஞ்சினை வென்றிடும் ஒளியின் அறிவாக நமக்குள் கண்கள் காட்டுகின்றது.

அந்தக் கண்ணின் நிலைகளில் கொண்டு நாம் எந்தத் தீமையை வென்ற உணர்வை எண்ணுகின்றோமோ இந்தக் காற்றிலிருக்கும் மகரிஷிகளின் உணர்வைக் கவர்ந்து நம் உடலுக்குள் செலுத்தினால் நஞ்சினை மாற்றிடும் சக்தி பெறுகின்றது.

ஆகவே நாம் எத்தகைய நஞ்சாக இருந்தாலும் அதை ஒளியாக மாற்றும் அந்தப் பருவம் பெறுதல் வேண்டும்.

December 8, 2018

காந்திஜி “அதிசயம்...!” என்று எதைச் சொன்னார்...?


ஒரு சமயம் காந்திஜியும் புலாபாய் தேசாயும் மற்ற நண்பர்கள் எல்லோரும் லண்டன் வட்ட மேஜை மகாநாடுக்குப் போய்விட்டு வரும் சமயம் கப்பலில் வந்து கொண்டிருந்தார்கள்.

ஆங்கிலேயர்கள் இவர்களுக்குள் இருக்கும் ஒற்றுமை எப்படி இருக்கும் என்று பரிசோதிப்பதற்காக டெலஸ்கோப் ஒன்றையும் கொடுத்து அனுப்பியிருந்தார்கள்.

உயர்ந்த சக்தி வாய்ந்த கண்ணாடி பொருத்தப்பட்ட அந்தக் கண்ணாடி மூலம் கடலுக்கு அடியில் ஊர்ந்து செல்லும் உயிரினங்களை எல்லாம் பார்க்க முடியும்.

அதாவது பல நூறு அடிகளுக்கு அடியில் நடக்கும் அதிசயங்களையும் ஊடுருவிப் பார்க்கும் திறன் வாய்ந்த இயந்திரத்தில் இணைக்கப்பட்ட ஒரு டெலஸ்கோப் அது. அதை வைத்துப் பார்க்கப்படும் போது கடலுக்குள் நடக்கும் அதிசயங்கள் எல்லாம் தெரிகின்றது.

பார்த்தவுடனே... ஆஹா...! பெரிய மீன் வருகின்றது.. சிறிய மீன் வருகின்றது... நத்தைகள் ஓடுகின்றது... அதிசயமான நிறங்களில் பல பல மீன்கள் ஓடுகின்றது...! என்றெல்லாம் சொல்லச் சொல்ல
1.அருகிலே இருக்கிறவர்களுக்கெல்லாம் “எங்கே பார்க்கலாம்...! என்று
2.அந்த டெலஸ்கோப்பை ஒருவருக்கு ஒருவர் பறிக்கும் நிலை வருகின்றது.
3.ஒருவர் பார்த்து முடிக்கும் முன்னால் அடுத்தவர் பறிக்கின்றார்.
4.இப்படி மாறி மாறிச் செயல்படுத்தும் பொழுது அங்கே பொறுமை இழக்கும் சந்தர்ப்பங்கள் வருகின்றது.

அப்போது தான் காந்திஜி சிந்திக்கின்றார்.

நம்முடைய ஆர்வ உணர்வுகள் எப்படிச் செயல்படுகிறது...? நாம் எதற்காக லண்டனுக்கு வந்தோம்...? எதை அறிய விரும்பினோம்....? பகைமை உணர்வுகளை அகற்றிச் சகோதர உணர்வை வளர்க்கும் தன்மையா அறிந்துணர்ந்து செயல்படுவதற்காக வந்தோம்.

ஆனால் டெலஸ்கோப்பை வைத்து பொருளைக் காணும் ஆசையில் நான்கு பேருமே ஒன்றாக எண்ணும் போது அதிலே பகைமைகள் எவ்வாறு உருவாகின்றது...?

பார்க்க வேண்டும்... என்ற அவசர உணர்வுகள் ஒவ்வொருவருக்கும் வரும் பொழுது அடுத்தவர் பறிக்கும் நிலையில் அதிசயத்தைப் பார்த்துக் கொண்டிருப்பவர் “இப்படிப் பறிக்கின்றார் பார்...!” என்ற வெறுப்புகள் அவருக்குள் எப்படித் தோன்றுகின்றது.

அந்த வெறுப்பும்... வெறுப்பால் பகைமையும்... எப்படித் தோன்றுகிறது...?  என்ற நிலையை அங்கே அப்பொழுது விளக்க உரையாகக் காந்திஜி கொடுக்கின்றார்.

உலகம் நலம் பெற வேண்டும் என்ற உணர்வின் எண்ணங்கள் கொண்டு நாம் வந்தாலும் இதைப் போன்ற நிலைகள் மீண்டும் மனிதனுக்குள் வந்து அந்த உணர்வின் இயக்கமாக “எதிரியாக எப்படி மாற்றுகின்றது...?” என்று உணர்த்துகின்றார்.

விஞ்ஞானத்தின் வளர்ச்சி கொண்டு பகைமை உணர்வு உருவாக்கும்படியாக அறிவிலிகளாக நம்மை மாற்றுகின்றார்கள். அறிவு இழந்தவர்களாக மாற்றுகின்றார்கள். நம்முடைய ஒற்றுமையின் தன்மையை இழக்கச் செய்கின்றார்கள்.

இதிலிருந்து விடுபட நாம் என்ன செய்வது...? என்று சற்று சிந்தித்துப் பார்ப்போம்...! என்று காந்திஜி அங்கே உபதேசிக்கின்றார்.

ஆகவே நாம் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து பகைமை ஊட்டும் நிலைகளில் இத்தகைய அதிசயத்தைப் பார்க்க வேண்டாம்.
1.”தீமையிலிருந்து விடுபடும் உணர்வின் தன்மை...!” ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் விளைய வேண்டும் என்று
2.இந்த அதிசய உணர்வை நமக்குள் வளர்த்துக் கொள்வோம்.
3.பகைமையை அகற்றும் உணர்வின் தன்மையை நாம் வளர்ப்போம் என்று அதே கப்பலில் உபதேசிக்கின்றார்.

ஒவ்வொருவரும் அருள் சக்தியைப் பெற்று ஆற்றலை வளர்ப்போம். அந்த ஆற்றல் ஒவ்வொருவரிடம் வளர்வதைக் கண்டு அதிசயப்படுவோம். அந்த அதிசயத்தைப் பார்க்க விரும்புவோம்.

விஞ்ஞான அறிவால் கண்ட உணர்வை வெறுப்போம். மெய் ஞானத்தால் வளர்ந்த உணர்வை நமக்குள் வளர்ப்போம்.

மெய்ப் பொருளைக் காணும் நிலையில் மனித உடலுக்குள் மறைந்து இயக்கிக் கொண்டிருக்கும் தீமையில் இருந்து விடுபட நாம் அனைவரும் செயல்படுவோம்.

இத்தனை உபதேசங்களும் காந்திஜி கொடுத்தார். ஆனால் அதெல்லாம் வெளியில் வரவில்லை. ஏனென்றால் அரசியல் வாழ்க்கையில் காந்திஜி இருந்தாலும் ஒரு இயந்திரக் கண்ணாடியை வைத்து அங்கே தத்துவ ஞானத்தைத் தான் புகட்டினார்.

அவர் காட்டிய அறநெறியை உங்களுக்குள் இப்பொழுது பரப்புகிறோம் என்றால் பகைமையிலிருந்து மீட்டுவதற்காக அவர் எடுத்துக் கொண்ட உயர்ந்த உணர்வுகள் இன்று உண்டு, உங்களுக்குள் இதை பதிவு செய்து கொள்ளுங்கள்.

வாழ்க்கையின் சில சந்தர்ப்பங்களில் உங்களை அறியாமல் இயக்கும் தீமைகளிலிருந்து உங்களை மீட்டுக் கொள்ள இந்த நினைவாற்றல் உங்களுக்கு உதவ வேண்டும் என்பதற்குத்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் இதை உபதேசிக்கின்றோம். பயன்படுத்திக் கொள்ளுங்கள்...!

October 23, 2018

உயிரான ஈசனிடம் நாம் எதை வேண்டிப் பிரார்த்தனை செய்ய வேண்டும்...?


தீமைகளிலிருந்து விடுபடச் செய்யும் எல்லா நினைவும் எங்களுக்கு அருள்வாய் ஈஸ்வரா என்று புருவ மத்தியில் இருக்கும் உயிரிடம் வேண்டி ஏங்கித் தியானியுங்கள்.

“எல்லா நினைவும்” என்றால் அது எது...?

நமது உயிர் புழுவாக உடல் பெற்ற நிலையிலிருந்து மனிதனாக வருகிற வரையிலும்
1.தன்னைக் காட்டிலும் வலு கொண்ட உணர்வில் இருந்து தப்பிக்கும் உணர்வை வளர்த்தது.
2.தனது வாழ் நாள் முழுவதும் தீமை என்று உணர்ந்தாலே “அதிலிருந்து மீண்டிட வேண்டும்...” என்ற உணர்வை நுகர்ந்தது.

இப்படித்தான் நாம் ஒவ்வொரு சரீரத்திலும் ஒன்றுக்கொன்று கொன்று தின்று இரையாகி அதிலிருந்தெல்லாம் மீள வேண்டும் என்று எடுத்துக் கொண்ட எண்ணத்திற்கொப்ப அடுத்த உடலை வலுவாக உருவாக்கியது.

1.எதனின் வலுவைத் தனக்குள் நுகர்ந்ததோ
2.தீமையிலிருந்து நீக்கிடும் உணர்வை விளைய வைத்து... விளைய வைத்து... விளைய வைத்து... விளைய வைத்து...!
3.தீமைகளை எல்லாம் அகற்றிடும் உடலின் தன்மையாக நம்மை மனிதனாக உருவாக்கியது இந்த உயிர் தான்.

இன்று நாம் உணவாக உட்கொள்ளும் உணவிற்குள் மறைந்து வரும் நஞ்சினை மலமாக மாற்றிவிட்டு அனைத்தையும் அறிந்துணர்ந்து தீமையை அகற்றிடும் அருள் மணம் கமழும் ஆறாவது அறிவை நமக்குள் ஊட்டியதும் இதே உயிர் தான்.

ஆகவே எனது வாழ்க்கையில் இனி வரும் இருளினை வராது பாதுகாத்திடும் சக்தியாக  
1.தீமைகளை நீக்கினேன்... என்ற உணர்வும்
2.தீமையிலிருந்து மீண்டேன்... என்றும்
3.தீமையிலிருந்து விடுபடும் அந்த உணர்வினை எனக்குள் நீயே (உயிர்) உருவாக்கினாய் என்றும்
4.தீமையிலிருந்து விடுபடும்... “இந்த எல்லா நினைவையும் நான் பெற அருள்வாய் ஈஸ்வரா...!”
5.தீமையற்ற உணர்வின் தன்மையை உருவாக்க - அனைத்தையும் அறிந்திடும் அறிவாக
6.தீமையென்ற நிலைகள் புகாது தடுக்கும் சேனாதிபதியாக நீயே இருக்க வேண்டும் ஈஸ்வரா...!

அகஸ்தியனும் அவர் மனைவியும் தங்கள் வாழ் நாளில் தீமையெல்லாம் அகற்றி தீமைகளை அகற்றிடும் உணர்வின் ஒளியாகப் பெற்று வசிஷ்டரும் அருந்ததி போன்று வாழ்ந்து நளாயினி போன்று ஒருவரை ஒருவர் மதித்து நடந்து சாவித்திரி போன்று இரு மனமும் ஒன்றி  இரு உயிரும் ஒன்றி பேரருள் என்ற உணர்வின் தன்மை பெற்றுப் பேரொளியாகத் துருவ நட்சத்திரமாகத் திகழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள்.

1.அகஸ்தியரும் அவர் மனைவியும் பெற்ற அந்தப் பேரருள் உணர்வின் தன்மை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா...!
2.இருளில் இருந்து மீட்டிடும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரொளியை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா...!
3.இனி வரும் எல்லாத் தீமைகளையும் அகற்றிடும் அருள் மணத்தை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.

இவ்வாறு வேண்டி நம் உயிரிடம் பிரார்த்திக்கும் பொழுது நாம் புழுவிலிருந்து மனிதனாக உருவான நிலையில் ஒவ்வொரு சரீரத்திலும் சேர்த்துக் கொண்ட பல கோடித் தீமைகளிலிருந்து விடுபட்ட பேராற்றல் நமக்குக் கிடைக்கின்றது.

அதன் துணை கொண்டு இந்த வாழ்க்கையில் மகிழ்ந்து வாழ்ந்து உடலுக்குப் பின் என்றுமே அழியாத ஒளி உடலாக ஒளிச் சரீரம் பெறலாம்.

October 14, 2018

எதிர் நீச்சல்...!


நீருக்குள் நீந்திச் செல்லும் மீன் தனக்குள் ஓட்டத்தின் வேகம் அதிகமாகி அது தேய்ந்து குறையும் போது - அதற்குள் மின் உற்பத்தி அதிகமாகும். மின் உற்பத்தி அதிகமாக ஆனாலும் நீருக்குள் இருக்கும் காந்தப்புலனுடன் உராய்ந்து உராய்ந்து வேகமான நிலைகள் உராய்ந்தபின் மீனின் உடலுக்குள் இருக்கும் காந்தப் புலன்கள் அது குறைந்து விடுகின்றது.

அது மீண்டும் தனக்குள் அந்த உணர்வின் சத்தாகப் பெற வேண்டும் என்றால் மீண்டும் நீருக்கு வெளியிலே வந்து வெளியிலே இருக்கும் காந்தப் புலனைத் தனக்குள் சுவாசித்தே ஆகவேண்டும்.

ஆகவே வெளியில் வந்து சுவாசித்துக் காந்த சக்தியைத் தனக்குள் கூட்டிய பின் மீண்டும் நீருக்குள் சென்று அதில் இருக்கக் கூடிய காந்தப் புலனறிவிற்குள் உராய்ந்து கரண்டை உற்பத்தி செய்து “எதிர் நீச்சலாகின்றது…!”

அதாவது நீரின் ஓட்டம் எவ்வளவு வேகமான நிலைகள் வந்தாலும் அதில் எதிர் நீச்சலாகித் தான் வாழ தான் எதை எண்ணியதோ அதை அடைய அதனின் வேகத்தின் துரித நிலைகள் பெறுகின்றது.

செங்குத்தான இடங்களில் இருக்கும் நீர் வீழ்ச்சிகளில் பார்க்கலாம். மீன்கள் அந்த நீர் வீழ்ச்சியில் மேலே ஏற முடியவில்லை என்றால்
1.மீண்டும் வெளியிலே வந்து தனக்குத் தேவையான காந்தத்தைச் சுவாசித்துச் சென்று
2.உள்ளே சென்று செங்குத்தான நீரின் வேகத்தின் சுழலிலும் அந்தக் காந்தப்புலனில் உராய்ந்து
3.தான் மேலே செல்லும் ஆற்றலை அது பெறுகின்றது.
4.நீர் எவ்வளவு வேகமாக விழுந்தாலும் அந்த மீன் மேலே செல்கின்றது.

இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால்… நம் வாழ்க்கையில் நாம் தவறு செய்யாமலேயே நமக்குப் பல தீங்குகள் விளைவிக்கும் வேதனையோ சங்கடமோ வெறுப்போ துன்பமோ எத்தனை நிலைகள் வந்தாலும் அதனை எதிர்த்து எதிர் நீச்சலாகி நாம் விண்ணின் ஆற்றலைப் பெற வேண்டும்.

ஏனென்றால் நம் புலனின் (ஐம்புலனறிவு) ஆற்றல் சாதாரண மனிதர்கள் பால் நாம் எண்ணத்தைச் செலுத்தும்போது இது நமக்குள் ஊடுருவி இந்தப் புவியின் ஈர்ப்பிற்குள்ளேயே நம்மைச் சிக்க வைத்து விடுகின்றது.

அத்தகைய உணர்வை எல்லாம் ஒளியாக மாற்றி விண் சென்ற ஒளியின் சுடராக இருக்கும் துருவ நட்சத்திரத்திலிருந்தும் சப்தரிஷி மண்டலத்திலிருந்தும் வரும் மெய் ஞானிகளின் அருள் வித்துக்கள் விண்ணிலேயும் மிதந்து கொண்டு இருக்கின்றது. நமக்கு முன்னாடியும் படர்ந்து கொண்டுள்ளது.

அந்த அருள் வித்தின் தன்மையை நம் உடலுக்குள் புகுத்தச் செய்யும் இந்தச் சந்தர்ப்ப நிகழ்ச்சி தான் இந்த மெய் ஞான உபதேசம். ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடியிலேயும் அந்த ஞானியின் அருள் சத்தை நாம் பெற்றுப் பழக வேண்டும்.

அவ்வாறு பெற்றோம் என்றால்
1.எப்படி மீன்கள் செங்குத்தான நீர் வீழ்ச்சியிலும் அது எதிர் நீச்சல் ஆகின்றதோ
2.இதைப் போல மனிதர்களாக வெளியிடப்பட்ட மூச்சின் எண்ண அலைகள்
3.இந்தப் பூமியிலே வேதனை சங்கடம் சலிப்பு துயரம் துர்மரணங்கள் தீவிரவாதம் வன்முறைகள் இதைப் போன்று எத்தனையோ கொடிய உணர்வின் அலைகளாக வீசிக் கொண்டிருந்தாலும்
4.மெய் ஞானிகள் காட்டிய அருள் வழிப்படி இந்தத் தியானத்தின் நிலைகள் கொண்டு சக்தியைக் கூட்டி நாம் இதையே சாதகப்படுத்தி
5,நம் உடலைச் சுத்தப்படுத்தி நம் உணர்வுகளைச் சுத்தப்படுத்தி தன் உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி என்றும் பதினாறு என்ற ஒளி நிலையை அடையலாம்.

அந்த நிலையை அடைவதற்காகத்தான் இதைச் சொல்கிறோம்…!

October 12, 2018

“கஷ்டம்...கஷ்டம்...!” என்று கஷ்டத்தையே சொல்வதற்கு பதில் கஷ்டம் நீங்க வேண்டும் என்று எண்ணிப் பாருங்கள்...!


எந்தக் கோயிலுக்குச் சென்றாலும்
1.அங்கே நிம்மதியாக இருந்து எங்கள் கஷ்டம் எல்லாம் நீங்க வேண்டும் என்று கேட்டிருக்கின்றீர்களா…?
2.தெய்வத்திடம் உங்கள் கஷ்டத்தைத் தான் சொல்லிக் கொண்டு இருக்கின்றீர்கள்.

அந்தக் கோயிலிலே கேட்ட அதே பழக்கத்தில் என்னிடம் (ஞானகுரு) கேட்கும் பொழுதும் குடும்பத்தில் கஷ்டம்... வியாபாரத்தில் நஷ்டம்... பிள்ளைகள் சொன்னபடி கேட்கவில்லை...! வீட்டில் ஒரே கலவரமாக இருக்கிறது என்று தான் சொல்வீர்கள்.

அது எல்லாம் நீங்க வேண்டும் என்று யாராவது கேட்கிறார்களா என்றால்  இல்லை....!
1.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும்.
2,மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும்.
3.எங்கள் பிள்ளைகள் நன்றாகப் படிக்க வேண்டும்... தாய் தந்தையரை மதித்து அவர்கள் நடக்க வேண்டும்
4.எங்கள் தொழில் நன்றாக இருக்க வேண்டும்.
5.விவசாய நிலத்தில் விளைச்சல் நன்றாக இருக்க வேண்டும் என்று
6.இந்த ஆசை கொண்டு நீங்கள் கேட்டால் அதற்குரிய நல்ல சக்திகளை நீங்கள் பெற முடியும்.

அதைத்தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்று சொல்லப்பட்டுள்ளது. நாம் எதை எண்ணுகின்றமோ அதைத்தான் காற்றில் இருந்து நம் கண்கள் கவர்கின்றது.

கண் கவர்ந்ததை இழுத்து ஆன்மாவாக்கிச் சுவாசிக்கும் பொழுது உயிரில் பட்டவுடன் எண்ணம் சொல் செயல் என்று நம் உடலை இயக்குகின்றது. ஆக நம் கண்கள் ஒரு ஆண்டெனா போல் செயல்படுகின்றது.

நல்லது நடக்க வேண்டும் என்ற அந்த எண்ணத்தில் இருந்தால் அது நமக்குள் பதிவாகின்றது நாம் எண்ணும் போது காற்றில் இருந்து அந்த நல்லதைச் சுவாசிக்கச் செய்கின்றது. நமக்குள் வரும் கெட்டதை இப்படி மாற்றப் பழக வேண்டும்.

ஒரு சிலர் கோவிலுக்குச் சென்று ஒரு காரியத்தைத் தொடங்கும் முன் அதைச் செய்யலாமா... அல்லது வேண்டாமா...! என்று ஜோசியம் கேட்பது போல் சாமியிடம் பூ வைத்துக் கேட்பார்கள்.

சங்கடமான எண்ணத்துடன் பூவைக் கண்ணில் பார்ப்பார்கள். அதற்கும் இதற்கும் அந்தத் தொடர்பு வந்தவுடனே எதிர்மறையாகி வித்தியாசமான பூ விழும்.

சிவப்புப் பூவை நினைத்து அது வந்து விட்டால் கல்யாணம் கட்டிக் கொள்ளலாம் என்று சொல்வார்கள்.
1.ஆக இவர்கள் எண்ணத்தில் எப்படி எப்படி இந்த மனம் வருகிறதோ
2.இந்தக் கல்யாணத்தை நடத்தியே ஆகவேண்டும் என்று பார்ப்பார்கள்
3.அந்த எண்ணத்தின் வலுவுக்கொப்ப அந்தச் சிவப்புப் பூ விழும். கல்யாணமும் நடந்து விடும்.

அதே சமயத்தில் கணவன் மனைவிக்குள் இரண்டு பக்கமும் வித்தியாசமாக இருக்கும். பெண்கள் அவர்களுக்குப் பெண்ணைக் கொடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு இருப்பார்கள். ஆண்களோ வேண்டாம் என்ற நிலையில் எண்ணுவார்கள்.

தாயே நீ இந்த மாதிரிச் சோதனையாக இருக்கிறது. நீதான் வழி காட்ட வேண்டும். என்ன செய்வது...! என்று இரண்டு பேரும் கூடிப் பேசிய பிறகு அங்கே போய்ப் பார்ப்பார்கள்.

பெண்கள் சக்தி அதிகமாகி விட்டது என்றால் அவர்கள் எண்ணத்திற்குத்தக்க பூ வரும்.
1.பார்த்தீர்களா…! சாமி வந்தாச்சு...! சரியான பதில் கிடைத்துவிட்டது என்று
2.இவர்களுடைய எண்ணங்களுக்கொப்ப அதாவது கண்ணிலிருந்து வரக்கூடிய மேக்னட் பவர் அந்த வேலையைச் செய்யும்.

நம்முடைய வாழ்க்கையில் இப்படித்தான் ஜோசியம் கேட்டு நம்முடைய நல்ல குணங்களை நாமே செயலற்றதாக மாற்றிக் கொள்கின்றோம்.
1.நல்ல குணங்களை வளர்ப்பதற்காகக் கோயில் வைத்தால்
2.நல்ல குணங்களைக் குறைத்து
3.கெட்ட குணங்களை வளர்ப்பதற்குத் தான் நாம் கோயிலைப் பயன்படுத்துகின்றோம்.

ஏனென்றால் இன்றைக்கு இருக்கக்கூடிய காற்று மண்டலம் விஷத் தன்மையாகப் போய்விட்டது. அந்த உணர்வுகள் எல்லாம் நம்மிடம் பதிவாகி இருக்கிறது.

விஞ்ஞான உலகில் அடிக்கடி கோபப்படுகின்றவர்களை நாம் பார்க்கின்றோம். அவர்கள் உடலில் நல்ல குணங்களை இழந்ததால் தான் அவர்கள் அப்படிக் கோபப்படுகின்றார்கள்.

அதே உணர்வை நாம் நுகரும் பொழுது நம் உடலில் அது வந்து நம் நல்ல குணங்களை எல்லாம் சாப்பிட ஆரம்பித்து விடுகின்றது. இரத்தக் கொதிப்பு நிச்சயம் வரும்.

அப்போது இந்த மாதிரித் தீமைகளைப் பார்த்தவுடனே துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று கண்ணில் ஏங்கி நம் உடலில் உள்ள என் ஜீவான்மாக்கள் அனைத்தும் பெற வேண்டும் என்று துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் சேர்க்க வேண்டும்.
1.அப்போது அது வீரியம் அடைந்தவுடனே
2.அந்தக் கோபமான உணர்வு நம் உடலுக்குள் புகாதபடி தள்ளி விட்டு விடுகிறது.
3.இப்படித் தள்ளக் கற்று கொள்ள வேண்டும்.

துணியில் அழுக்கு நிறைய இருக்கிறது என்றால் சோப்பைப் போட்டு நுரையைப் போட்டு எப்படி வெளியேற்றுகிறோமோ இதை மாதிரிச் செய்து பழக வேண்டும்.

இதெல்லாம் நாம் சாதாரணமாகத் தெரியாத ஜனங்களுக்கு தனக்குள் நடக்கக்கூடிய நிகழ்ச்சி நாம் எண்ணியதனால் நமக்குள் என்ன விளைவு வருகிறது. இதிலிருந்து நாம் எப்படித் தப்பிக்க வேண்டும் என்று தான் கொடுத்திருக்கிறார்கள்.

தீமைகளை நீக்கி நஞ்சினை வென்று உணர்வை ஒளியாக மாற்றிய அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை உங்களைப் பெறச் செய்வதற்குத் தான் இந்த உபதேசத்தின் வாயிலாக ஒவ்வொரு குணங்களிலேயும் உணர்வுகளிலேயும் இணைக்கும்படி செய்கிறோம்.

கல்லூரிகளில் புரொபஸர்களோ அல்லது தொழிற்சாலைகளில் உள்ள இஞ்சினியர்களோ அவர்கள் எதை எதைச் சொல்லிக் கொடுக்கின்றார்களோ அதைப் பதிவாக்கி மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்த் அதனதன் பணிகளைச் செய்கின்றார்கள் அல்லவா...!

அதே மாதிரித்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தீமையை நீக்கும் மெய் ஞானத்தை எனக்குப் பழக்கிக் கொடுத்தார். அதை உங்களுக்குள்ளும் பழக்குகிறோம்.

இதைப் பதிவாக்கிய பின் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தால் மெய் ஞானிகளின் அருள் உணர்வுகளைச் சுவாசிக்கச் செய்து
1.அவ்வப்பொழுது உங்களுக்குச் சீரான சிந்தனை கொடுக்கும்
2.தீமையை நீக்கக் கூடிய ஞானம் உங்கள் எண்ணத்தில் வரும்.
3.உங்களை நீங்கள் காத்துக் கொள்ளவும் முடியும்.

September 24, 2018

தீமையை அகற்றிடும் தியான முறை…!


அம்மா அப்பாவை மனதில் நினைத்து அம்மா அப்பா உயிரைக் கடவுளாக மதித்து நம்மை மனிதனாக உருவாக்கி நம்மைக் காத்து நமக்கு நல் வழி காட்டிய அவர்களைத் தெய்வமாக மதித்து நம் வாழ்க்கையில் என்றுமே வழிபட வேண்டும் என்ற உணர்வினை எடுத்துத் தியானிப்போம்.

குருவாக இருந்து வழி காட்டிய அன்னை தந்தையரின் அருள் துணையுடன் மெய் ஞானிகளின் அருள் சக்தியை நம் உடலுக்குள் சேர்ப்போம்.

இந்த உலகில் தீமைகளை அகற்றி உணர்வினை ஒளியாக மாற்றி உயிருடன் ஒன்றிய உணர்வை ஒளியாக மாற்றிய துருவ மகரிஷியின் அருள் சக்தியும் அவரைப் பின்பற்றி விண் சென்றவர்கள் விண்ணுலகில் சப்தரிஷி மண்டலங்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த மாமகரிஷிகளின் அருள் ஆற்றலையும் நாம் பெறுவோம்.

மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுவோம்… பெறுவோம்…! என்று மனதில் ஏக்க உணர்வு கொண்டு நம்முடைய உடலுக்குள் இருக்கும் அனைத்து குணங்களுக்குள்ளும் அந்தச் சப்தரிஷிகளின் பேரருள் பேரொளியையைச் சேர்த்துக் கணங்களுக்கு அதிபதியாக்குவோம்.

அரச சபையை எடுத்துக் கொண்டால் அரசனுக்குக் கீழ் இருக்கும் நிலைகளில் மந்திரிகள் என்றும் படைகலன்களில் சேனாதிபதி என்றும் அதற்குள் எத்தனையோ வகைகள் பிரிக்கப்பட்டுச் சிப்பாய்கள் என்றும் குடிமக்கள் என்ற நிலைகளும் இருக்கின்றது.

அரசன் இடும் கட்டளைப்படித் தான் மந்திரி சேனாதிபதி அவர்களின் செயலாக்கங்கள் இருக்கும். இதைப்போன்று தான்
1.நம் உடலுக்குள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைக் கணங்களுக்கு அதிபதியாக்கும் போது அதனின் ஆணைப்படி
2.நன்மை செய்யும் நற்குணங்கள் மந்திரிகளாக இருந்து அது நல்ல வழியில் நடக்கும் ஆலோசனைகளை நமக்குக் கூறுவதும்
3.அதன் வழியில் சேனாதிபதிகளாக ஆட்சி புரியும் வலிமையான உணர்வுகள் நம் உடலுக்குள் வளர்ந்து
4.இந்த வாழ்க்கையில் தீமை அகற்றும் சக்தியாக பொருள் காணும் உணர்வாக நமக்குள் வளர்க்கச் செய்யும்.

அதாவது தீமையை அகற்றும் உணர்வின் தன்மையை நமது சாம்ராஜ்யமாக்கி குடிமக்களின் தன்மை போன்று நமக்குள் இருக்கும் உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றி உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரம் பெற வேண்டும் என்ற நிலைக்கு நாம் வர வேண்டும்.

நம் அன்னை தந்தையரின் அருளாசியுடன் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் சப்தரிஷிகளின் அருள் சக்தியும் நாம் பெறுவோம்…! அந்த அருள் சக்திகளை நம் உடலுக்குள் அதிபதியாக்க வேண்டும் என்று நாம் ஏங்கித் தியானிப்போம்.

August 26, 2018

கடலில் தோன்றும் அலைகள் போன்றது தான் அன்றாட வாழ்க்கையில் வரும் உணர்வின் மோதல்களும் – அந்த அலைகளை எல்லாம் விலக்கிக் கரையேற வேண்டுமா இல்லையா…?


வாழ்க்கை என்பது ஓர் கடல் அலை போன்றது. இன்று கடல்களில் அலைகள் வருகின்றது. மோதுகின்றது… மறைகின்றது…! இதைப்போல உங்கள் வாழ்க்கையில் நீங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தாலும் பிறர்படும் துயரங்களே அது அலைகளாக மாறுகின்றது.

அதை எல்லாம் கண்ணுற்றுப் பார்க்கும் போது அந்த அலைகள் எல்லாம் உங்கள் சுவாசத்தால் ஈர்க்கப்பட்டுப் புருவ மத்தியிலிருக்கும் உங்கள் உயிரிலே மோதுகின்றது. அவ்வாறு மோதும் உணர்வுகளை நீங்கள் உணர முடிகின்றது.

உணர்ந்த உணர்வுகளையோ உங்கள் உயிர் அது அணுவாக மாற்றி விடுகின்றது. அவர்கள் படும் துயர உணர்வை நாம் நுகர்ந்தால் நமக்குள் அந்தத் துயரத்தை உருவாக்கும் அணுக்களாக மாற்றி விடுகின்றது.
1.நாம் தவறு செய்யவில்லை என்றாலும்
2.நாம் வேதனைப்படவில்லை என்றாலும்
3.வேதனைப்படுவோரை நுகரப்படும் போது அந்த உணர்வுகளை
4.நம் உடலிலே நம் உயிர் உணர்த்துகின்றது.

ஏனென்றால் துன்பப்படுவோரைப் பார்க்கப்படும் பொழுது நம் கண் கவர்கின்றது. அந்த உணர்வை நுகரச் செய்கின்றது. நுகர்ந்த பின் நாம் அறிகின்றோம். இதைத்தான்
1.நம் கரு விழிக்குப் பேர் ருக்மணி என்றும்
2.கண்ணின் காந்தப் புலனுக்குப் பேர் சத்தியபாமா என்றும்
3.நம்மை மேய்ப்பது “இடையன்…” என்றும் கண்ணுக்குப் பெயர் இடையன் என்று காரணப் பெயர் வைக்கின்றார்கள்.
4.ஏனென்றால் நம்மை வழி நடத்திச் செல்வது நமது கண்களே.

ஒருவர் வேதனைப்படுகிறார் என்றால் அந்த அவருக்கு நாம் உதவி செய்தாலும் நுகர்ந்த உணர்வுகளை வேதனைப்படும் அணுவாக உடலுக்குள் நம் உயிர் உருவாக்கி விடுகின்றது.

இருப்பினும் அவருக்கு உதவி செய்கின்றோம். நாம் உதவி செய்த உணர்வுகளோ நமக்குள் அத்தகைய நிலையாக மாறிவிடுகின்றது.

வேலை செய்கின்றோம். கையிலே அழுக்குப் பட்டால் கழுவி விடுகின்றோம். இதைப்போல நாம் இந்த வேதனைப்படுவோரை உற்று நோக்கினால் அதை உடனே துடைக்கவில்லை என்றால் என்ன ஆகும்…?

அவர்கள் வேதனைக்குண்டான காரணங்கள் எத்தனையோ இருக்கும். அவர்கள் குடும்பங்களில் ஒருவருக்கு ஒருவர் சண்டயிட்டு இருப்பர். அதனால் வெறுப்படைந்திருப்பார்கள். அதன் வழி கொண்டு வெறுப்பான அலைகள் அவர்கள் கண்களிலிருந்து வெளிப்படும்.
1.அந்த அலைகள் நமக்குள் மோதியபின்
2.நாம் என்ன…? என்று கேட்டால்
3.என் குடும்பத்தில் எத்தனையோ தொல்லைகள் சங்கடங்கள் சலிப்புகள் என்று கூறுவர்.

அந்த உணர்வுகள் அலைகளாக மோதியபின் நம் உடலிலே சுழல்கின்றது. அதாவது நாம் எண்ணிய உணர்வுகள் உயிரிலே மோதும் போது ஒலி அலைகளாகப் பரவி உடல் முழுவதும் சுழற்றுகின்றது. அந்த உணர்வின் இயக்கமாகவே நம்மை மாற்றி விடுகின்றது.

கணவன் தொழில் செய்யும் போது தொழில் செய்யும் இடங்களிலும் இத்தகைய சந்தர்ப்பம் வரும். அதே சமயம் மனைவி வீட்டில் இருக்கும் போதும் சந்தர்ப்பத்தில் இத்தகைய நிலைகள் ஏற்படும்.

வீட்டில் இருந்தாலும் பக்கத்து வீட்டிலோ அக்கம்பக்கம் வீடுகள் குடி இருப்பவரோ அவர்களில் சிறிது பிழையானாலும் பிழையின் உணர்வுகளைக் கேட்கப்படும் பொழுது பயந்து போய் வெறுப்புடனும்  வேதனையுடனும் அவர்கள் பேசலாம். அதனால் அதிர்ச்சி அடைய நேர்கின்றது.

நம் கரு விழி அதை உற்றுப் பார்க்கும் பொழுது அந்த உணர்வின் தன்மை நமக்குள் பதிவாகி அவர் உடலில் இருந்து வரக்கூடிய உணர்வை நுகரச் செய்கின்றது. உணர்கின்றோம். அதனின் உணர்வுகள் நமக்குள் பகைமையாகயும் மாற்றி விடுகின்றது.

இப்படி நாம் எண்ணும் உணர்வுகள் அனைத்தும் காலையில் இருந்து இரவு வரையிலும் நாம் நுகர்ந்தறிந்த உணர்வுகளை வாழ்க்கையில் சதா சிவமாக்கிக் கொண்டே உள்ளது என்பதைச் சிவன் ஆலயத்தில் ஞானிகள் காட்டுகின்றார்கள்.

எந்தக் குணத்தை அன்றைய நிலைகளில் நம் வாழ்க்கையில் அதிகமாகச் சேர்க்கின்றோமோ அதற்குத்தக்கவாறு அன்று வாழ்க்கை அமைகின்றது.
1.குடும்பத்திற்குள் பற்றையும் பாசத்தையும் கூடப் பிரிக்கும் நிலைகள் வந்து விடுகின்றது.
2.தன்னை அறியாமலேயே ஏன் சண்டை இடுகிறோம்…? என்று தெரியாதபடி
3.நாம் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த அந்த உணர்வுகள் நம்மை இயக்கி விடுகின்றது.

இதைப் போன்ற நிலைகளில் நாம் மீள வேண்டுமா இல்லையா…? மீள வேண்டும் என்றால் ஒவ்வொரு நிமிடமும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகளை எடுத்துப் பழக வேண்டும்.

அகஸ்தியனும் அவன் மனைவியும் இரு மனமும் ஒன்றென இணைந்து பேரருள் பெற்று பேரொளியாக இன்றும் துருவ நட்சத்திரமாக வாழ்ந்தும் வளர்ந்து கொண்டு உள்ளார்கள்.

அவர்கள் இந்த மனித வாழ்க்கையில் பல துன்பங்களை அகற்றியவர்கள். அதை ஒளியாக மாற்றிக் கொண்டவர்கள். அவர்களை நாம் எண்ணி அந்தத் துருவ மகரிஷியின் அருள் சகதியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்று உடலுக்குள் பல முறை செலுத்த வேண்டும்.

தீமைகளைக் காணும் பொழுதும் அல்லது தொழிலின் நிமித்தம் வேறொரு குறைபாடுகள் வந்தாலும் அடுத்த நிமிடம் அந்தத் துருவ மகரிஷியின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று
1.உங்கள் நினைவினைப் புருவ மத்தியிலிருக்கும் உயிரிடம் ஒன்றி
2.அந்த உயிரான ஈசனிடம் வேண்டுதல் வேண்டும்.

அந்த நினைவினை நாம் ஏற்றுக் கொண்ட பின் எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும். எங்கள் ஜீவான்மா பெற வேண்டும். எங்கள் ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகளை உடல் முழுவதுக்கும் சுழலச் செய்து
1.நம் உடலை…
2.நம் ஆன்மாவை…
3.நம் உயிரான்மாவைச் சுத்தப்படுத்தியே ஆக வேண்டும்….!