ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 13, 2018

குருநாதர் சொன்னபடி “துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறவேண்டும்” என்று எண்ணி அதை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள்

அகஸ்தியன் தாய்க் கருவிலே பெற்ற பூர்வ புண்ணியத்தால் நஞ்சை வென்றிடும் சக்திகளை அவன் பெற்றான்.

அதன் வழில் நஞ்சை நீக்கும் ஆற்றல்கள் அவன் உடலுக்குள் வளர்கின்றது. அவன் ஒருவரிடம் வளர்ந்தது மட்டுமல்லாதபடி திருமணம் ஆனபின் தன் மனைவியிடமும் அதையெல்லாம் சொல்லுகின்றான்.

அவர்கள் இருவரும் அருள் உணர்வுகளை எடுக்கும் போது நஞ்சை வென்றிடும் உணர்வின் அணுக்கள் இருவர் உடலிலும் விளைகின்றது.

நஞ்சை வென்றிடும் உணர்வுகளை இருவரும் வளர்க்கப்படும் போது பேரண்டத்திலிருந்து வரும் எத்தகைய கடும் விஷமாக இருந்தாலும் அதை ஒடுக்கி ஒளியாக மாற்றும் தன்மையாக வருகின்றார்கள்.

ஒளியின் சரீரமாகத் துருவ நட்சத்திரமாக ஆகின்றார்கள்.

அகஸ்தியன் எப்படித் தன் வாழ் நாளில் நஞ்சினை ஒடுக்கி உணர்வினை ஒளியாக மாற்றினானோ இதைப்போல நாமும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் ஆழமாகப் பதிவாக்கிக் கொள்ள வேண்டும்.

நாம் நினைத்த மாத்திரத்தில் அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வினைக் கவர கற்றுக் கொள்ள வேண்டும்.

ஒருவர் சண்டை இடுகின்றார் என்றால் உணர்வின் வேகம் அந்த வலிமை வருகின்றது.

எனக்கு இப்படித் “துரோகம் செய்தான் பாவி…! என்றால் அமெரிக்காவில் இருந்தாலும் இந்த உணர்வுகள் புரையோடி உணவு உட்கொள்ளும் போது நிலையை மாற்றிவிடும். நுரையீரலுக்குள் போனால் மரணம் கூட சம்பவிக்கும்.

வாகனம் ஓட்டும் போதோ தொழில் செய்யும் போதோ “துரோகம் செய்தான்…” என்று எண்ணினால் இந்த உணர்வு சிந்திக்கும் தன்மையைச் செயலிழக்கச் செய்து அங்கே எதிர்பாராத சம்பவங்கள் நடக்கின்றது.

1.அப்போது அவர்களுக்கு அங்கே நஷ்டம்.
2.இங்கே நினைக்கும் பொழுது இவருக்கும் நஷ்டம்.

அதே சமயத்தில் “நண்பன் எனக்கு நல்ல சமயத்தில் உதவி செய்தான்…!” என்று எண்ணினால் விக்கல் ஆகின்றது. இவனுக்கு அந்த மகிழ்ச்சி ஏற்படுகின்றது,

அங்கே விக்கல் ஆகும் போது “யாரோ நினைக்கின்றார்கள்…” என்று அங்கேயும் நல்ல செயலை உருவாக்குகின்றது.

நல்ல குழந்தை என்று மெச்சிக் கொண்டு இருக்கின்றோம். ஆனால் படிக்கப் போன இடத்தில் ஒரு மாதமாக நமக்குத் தகவல் வரவில்லை என்றால் “என்ன ஆகிவிட்டதோ…?” என்று இங்கே வேதனைப்படுகின்றோம்.

யாருடைய உணர்வு நம் உடலில் இருக்கின்றதோ வேதனைப்பட்டு மீண்டும் நினைவை அவர்கள் பால் பாய்ச்சப்படும் போது அந்த குழந்தையின் உடலிலே விஷத்தின் தன்மை பாய்ந்து அங்கே சிந்திக்கும் தன்மையை இழக்கச் செய்கின்றது.

தொழில் செய்து கொண்டிருந்தால் தவறிழைத்துக் குற்றவாளி ஆக்கிவிடும். வெளியிலே நடந்து செல்லும் போது சிந்தனை தவறி மேடு பள்ளம் தெரியாது இடறிக் கீழே விழுகச் செய்துவிடும் ஆக்ஸிடென்டும் ஆகும்.

இதெல்லாம் எங்கிருந்து வருகின்றது? இயற்கை எப்படி நம்மை மாற்றுகின்றது? என்று அந்த இயக்கத்தின் உண்மைகளை உணர்ந்து கொண்டால் அதை நம்மால் மாற்றியமைக்க முடியும். பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன்.

சந்தர்ப்பத்தால் வேதனையான உணர்வு வரும் போது உயிர் அதை பிரம்மமாக்கி நமக்குள் சிருஷ்டிக்கின்றது.

ஆனால் ஆறாவது அறிவு கொண்டு வேதனையை நீக்கும் உணர்வைப் பெறவேண்டும் என்று இச்சைப்பட்டால் தீமைகளை அகற்றும் உணர்வுகள் நமக்குள் சிருஷ்டியாகும். இது சந்தர்ப்பம்.

இதைப் போன்ற சந்தர்ப்பத்தை நாம் உருவாக்கத் தெரிந்து கொள்ள வேண்டும். அகஸ்தியன் துருவனாகி துருவ நட்சத்திரமான அந்தப் பேரொளியான உணர்வுகளைக் கலந்து கலந்து அடிக்கடி உபதேசிக்கின்றோம்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறவேண்டும் என்று தியானித்துத் தன் மனைவிக்குக் கிடைக்க வேண்டும் கணவன் எண்ண வேண்டும் அதே போல தன் கணவனுக்குக் கிடைக்க வேண்டும் என்று மனைவியும் எண்ண வேண்டும்.

கணவன் மனைவி இரு உணர்வும் கருவாக்கி ஒளியின் அறிவாக மாற்றி நஞ்சை வென்றிடும் சக்தியை இப்படிக் கூட்டிக் கொள்ள முடியும்.

ஞானகுரு உபதேசித்த அருள் வழிப்படி துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற்றால் நம் தீமைகள் போக்க முடியும் என்ற தன்னம்பிக்கை வர வேண்டும். ஆனால்
1.குருநாதர் செய்வார்…,
2.”அவர் தான் செய்து தர முடியும்…!” என்று எண்ணினால் இது பிழையாகும்.

ஒரு செடியின் தன்மையை உருவாக்கிக் கொடுத்து நீரை ஊற்றி அதை வளர்த்துக் கொள்ளுங்கள் என்று கொடுக்கின்றோம்.
1.குருநாதரே செடியையும் வளர்த்துக் கொடுப்பார் என்று சொன்னால்
2.அது எப்படி இருக்கும்…!

ஏனென்றால் குழந்தை மீது உள்ள பாசத்தால் “உணர்வுகள் ஒன்றாகும்போது…” நீங்கள் எண்ணி எடுக்கும் வேதனை உணர்வுகள் அது குழந்தையைத் தாக்கி அங்கே தீமையை உருவாக்குகின்றது.

இதைப் போன்று தான் உங்கள் உடலிலே துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளைப் பதிவு செய்கின்றேன். அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று சதா தவமிருக்கின்றேன்.

நான் எண்ணுகின்ற மாதிரி நீங்களும் குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்னை அறியாத இருள்கள் நீங்க வேண்டும் என்று எண்ணி எடுத்துக் கொண்டால் இது உங்களுக்குள் அரும் பெரும் சக்தியாக உருவாகும்.

1.உங்கள் எண்ணத்தால் தான் உங்களைக் காக்க முடியும்.
2.நான் காப்பாற்றுவேன் என்று சொன்னால் நான் கடவுள் அல்ல.
3.உங்கள் உயிர் தான் கடவுள்.