மனித இன
ஞான வளர்ச்சி தன்மையின் காலம் கற்காலமாக இருந்து உலோக காலமாக வளர்ந்து இன்று அது
விஞ்ஞான யுகமாக பரிணமித்துள்ளது. ஆனாலும் இதைக்
காட்டிலும் இன்று விஞ்ஞான அறிவாக மெய்ஞான உணர்வுகளே மனித சமுதாயத்தில் வளர்ந்துக்
கொண்டுள்ளன.
புவியின்
மண்ணில் கலந்துள்ள உலோகங்களைப் பிரித்தெடுத்து அதனைப்
பயன்படுத்தும் நிலையை தெரிந்து கொண்ட மனிதன் மண்பாண்டங்களைக் கைவிட்டு
உலோகப் பாண்டங்களுக்கு மாறினான்.
மேலும்
மனிதன் தன்னைப்
பாதுகாக்க ஒரு சக்தி தேவை என்ற நிலைகளில் மனித உணர்வின் உண்மை நிலைகளை அறிந்து கொள்ளத்
தொடங்கினான்.
ஒரு
மனிதன் இறந்து விட்டால் அவனின் உயிரான்மா… தான் மனிதனாக வாழ்ந்த
பொழுது எந்த நோக்கில் யார் மீது பற்று கொண்டிருந்தானோ அவரின் உடலினுள் சென்று
தன்னுடைய ஆசையின் நிலைகளை அவருடைய உடலில் எப்படிச்
செயல்படுத்துகின்றது என்கிற நிலைகளை மனிதன் அறிந்து கொள்கின்றான்.
இவ்வாறு மனிதன் தான் அறிந்து கொண்ட நிலைகள் கொண்டு தனக்குப்
பாதுகாப்பான நிலைகளை அமைத்துப் பிற மனித உடல்களில் மந்திர ஒலிகளைப் பாய்ச்சி… தான் இந்த
உடலை விட்டுப் பிரிந்த
பின் எந்த உடலில் மந்திர ஒலிகளைப் பாய்ச்சினாரோ அதை மீண்டும் எழுப்பப்படும் போது உடலை விட்டுப் பிரிந்து
சென்ற ஆன்மாவைத் தனக்குள் கைவல்யப்படுத்திக் கொள்கின்றார்கள்.
இதனின்
நிலைகள் கொண்டு தான் பிற மனிதர்களைத் தனக்குள் எப்படிக் கைவல்யப்படுத்துவது…? என்ற
நிலைகளும் பல மனிதர்களின் உணர்வுகளைத் தனக்குள் வளர்த்துக் கொண்டால் அதனின் வலிமை மிக்க சக்தி
கொண்டு மற்றவர்களை எப்படி அடக்கி ஆட்சி புரியலாம்…? என்ற
நிலைகளும் தான் மனிதரிடத்தில் வளர்ந்தன.
இதே
ஆசையின் நிலைகள் கொண்டு தான் காடுகளில் வாழும் மக்கள் பிற உயிரினங்களைப் பலி
கொடுப்பதும் தான் வாழும் இடத்தை விட்டுப் பிறிதோரு இடத்தில் வாழும் ஒருவனைப் பிடித்துக் கொண்டு வந்து கட்டி
வைத்துக் குறித்த
காலம் வரும் வரை கட்டி வைத்திருந்து அந்த நபரின் உடலில் பல
விஷத்தன்மை கொண்ட உணர்வுகளைப் பாய்ச்சி அவனின் எண்ணங்களில் ஊடுருவச் செய்யும்
பொழுது அவன் வேதனையின் தன்மை தாங்காது மடிவான்.
பின்…
அதிலிருந்த ஒலிகளை மந்திரத்தால் கவர்ந்து அடக்கி வைத்துப் பிறர்
மேல் பாய்ச்சுவதும் பிற நாடுகளின் மீது பாய்ச்சுவதும் மிருக இனங்களின் மீது
பாய்ச்சுவதும் போன்ற நிலைகளுக்குப் பயன்படுத்திக் கொண்டான்.
இதனின்
நிலைகளை இன்றும் மலைப்பகுதிகளில் காணலாம். புலையர் எனும் இனத்தவர் இன்றும் இதனைச் செய்து
வருகின்றனர்.
ஆனால்
அகத்தியர் ஆரம்பத்தில் கண்டுணர்ந்து வெளிப்படுத்திய உணர்வுகள் வேறு. இதுவே காலம்
மாற மாற அவர் உணர்த்திய பேருண்மைகள் மறைக்கப்பட்டன.
இன்று
மலைப்பகுதியில் உள்ளோர் மந்திரச் செடிகளை எடுத்து அதற்குரிய மந்திரங்களை ஓதி இவன் உடலில்
விளைந்ததைத் தாவர
இனத்துடன் கலந்து மற்ற நிலைகளையும் அதனுடன் கலந்து உருவாக்கி இதை மற்ற ஆடு, மாடு போன்ற உயிரினங்களுக்குக் கொடுத்து
அதனின் உணர்வலைகளை மாற்றித் தனக்கு உகந்ததாக இதே ஒலிகளை எழுப்பி தனக்குள் கைவல்யப் படுத்துகின்றனர்.
இந்த உணர்வைத் தனக்குள்
கலந்து கொண்ட பின் இந்த உணர்வின் அலைகளை இந்த உடலுக்குள் ஆடு, மாடு, மான் போன்ற
இவற்றின் உணர்வுகளைத் தனக்குள் பெற்ற பின் இந்த உணர்வுக்கு ஏற்ற ரூபங்களாக
மான் போன்று, மாடு போன்று, நரி, நாயைப் போன்று மாறுவதுமான நிலைகள்
மலைப்பகுதியில் வசிக்கும் மக்களிடம் உண்டு.
அதுவும்
காலத்தால் அழிந்துவிட்டது. ஒரு சில இடங்களில் மட்டும் இது நடந்து கொண்டுள்ளது.
1.யாம்
இருபது வருடம் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்யப்படும் பொழுது
2.அன்று
ஞானிகள் கண்டறிந்து வெளிப்படுத்திய உணர்வின் தன்மைகள் எவ்வாறு உருமாறின…?
என்பதையும்
3.அவைகள்
இன்று மனிதனுக்கு பயனற்றவைகளாக எவ்வாறு ஆயின…?
என்பதையும் குருநாதர் ?மிகவும் வருத்தத்துடன்” எம்மிடம்
கூறினார்.
மனித இன
ஞானத்தின் வளர்ச்சியாக உலோகக் காலம் இருந்தது. இந்த உலோகக்
காலத்தில்தான் கந்தகம் மற்றும் வெடி பொருட்களை மனிதர் கண்டறிந்தனர்.
கந்தகம்
மற்றும் மனோசீலை போன்ற பொருட்களுடன் வெடியுப்புக்களைக் கலந்து
வெடிக்கச் செய்து அதனின் செயல் தன்மையைக் கண்டறிந்தனர்.
ஆனால்
அன்று வைத்திய ரீதியில் கந்தகம் மற்றும் பிற பொருட்களை ஒன்றாகச் சேர்த்து
மனோசீலையாக மாற்றி நோயுள்ள உடல்களில் ஊடுருவச் செய்து நோயினை போக்கும் நிலைக்கு
அதனை உருவாக்கினார்கள்.
அதுவும்
ஒரு காலத்தில் மறைந்து விட்டது.
1.இவ்வாறு
அகத்தியர் கண்டுணர்ந்த உணர்வுகளை மனிதன் தனது சுயநலங்களுக்காகப்
பயன்படுத்தி
2.நாளடைவில்
கடும் தீமைகளை விளைவிக்கும் நிலையாக உருவாக்கி விட்டனர்.