மகரிஷிகளின் அருள்
சக்திகளைப் பயன்படுத்தி உங்கள் வாழ்க்கையில் வரும் இன்னல்களை எளிதில் மாற்றிக்
கொள்ள முடியும். அப்படி எளிதில் மாற்றிக் கொள்ளும் இந்த “உபாயத்தைத்தான்…”
உங்களுக்குள் பதிவாக்கிக் கொண்டிருக்கின்றோம்.
ஒரு கம்ப்யூட்டரில் எப்படிப்
பதிவு செய்கின்றனரோ அதைப் போல் யாம் சொல்வதை உற்றுக் கேட்டுக் கொண்டிருந்தால் போதும்.
1.கண்ணின் கரு விழி
உங்கள் விலா எலும்புகளில்
2.ஊழ்வினை என்ற
வித்தாகப் பதிவாக்கி விடுகின்றது.
3.மீண்டும் எண்ணும்
போது…., தீமை நம்மை எப்படி இயக்குகின்றது?
4.தீமையிலிருந்து
எப்படி மீள வேண்டும்? என்ற ஞானம் உங்களுக்குக் கிடைக்கும்.
செல்ஃபோன்களை
வைத்துள்ளார்கள். அதிலே அந்த நம்பரை யார் அடிக்கின்றார்களோ இதை நாம் தெரிந்து
கொள்கின்றோம்.
இதைப் போல எங்கேயோ
இருக்கக்கூடிய நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் செய்தியை அனுப்புகின்றோம். வயர்
இல்லை.
சூரியனிலிருந்து
வரக்கூடிய காந்தப்புலன் அறிவு இதை மோதச் செய்து அதை அங்கே
இருக்கக்கூடியவர்களுக்குத் தெரியப்படுத்துகின்றது. விஞ்ஞான அறிவின் துணை கொண்டு
நமக்கு இதைத் தெளிவாகக் காட்டுகின்றான். இதைப் போலத்தான்
1.கரு விழியின் துணை
கொண்டு விலா எலும்புகளில் உள்ள ஊனுக்குள்
2.மகரிஷிகளின்
உணர்வுகளை ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாக்கி விட்டால்
3.நீங்கள் துருவ
நட்சத்திரத்தை எண்ணும் போதெல்லாம் அது எளிதில் உங்களுக்குக் கிடைக்கும்.
இதை வளர்த்துக்
கொள்வதற்கு இரவில் தூங்கச் செல்லும் போதேல்லாம்
1."ஈஸ்வரா..."
என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி
2.உங்கள் அம்மா
அப்பாவை நினைவுக்குக் கொண்டு வாருங்கள்.
3..அந்தத் துருவ
நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் எங்கள் இரத்த
நாளங்களிலே கலக்க வேண்டும்.
4.எங்கள் உடலிலுள்ள
உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேருருள் பெற
வேண்டும் என்று
5.அதிகமாக எண்ணவில்லை
என்றாலும் இதை (1 to 4) எண்ணுவதற்கு உங்களால் முடியும்.
உங்கள் உடல் உறுப்புகளை
உருவாக்கிய அணுக்களெல்லாம் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற
வேண்டும் என்று கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்திச் சிறிது நேரம் எண்ணினால் அந்த
அணுக்களுக்கு நேரடியாகச் சக்தி கிடைக்கும்.
இரவிலே தூங்கப் போகும்
பொழுது எடுத்து இதைப் போல் பழகிக் கொள்வது மிக மிக முக்கியம். இவ்வாறு
செய்துவிட்டுத் தூங்கினால் தூங்கிய நேரம் முழுவதுமே அந்த அருள் உணர்வுகள் உங்களைச்
சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருக்கும்.
தூங்கிய நேரம்
முழுவதும் தியானம் செய்ததற்கு ஒப்பானதாகும். செய்து பாருங்கள்.