ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

Showing posts with label விதியை வெல்லும் மதி. Show all posts
Showing posts with label விதியை வெல்லும் மதி. Show all posts

January 2, 2026

“விதி…” உண்டு…! என்றால் அது எப்படி…?

“விதி…” உண்டு…! என்றால் அது எப்படி…?


தாய் கருவிலே சிசு வளரப்படும்போது தாய் எதை உற்றுப் பார்த்து அந்த உணர்வினைப் பதிவாக்குகின்றதோ அதுவே அந்தக் குழந்தைக்குப் பூர்வ புண்ணியம் ஆகிறது.
1.அந்த உணர்வே விதியாகி வளர்ச்சியாகிக் கொண்டிருக்கும்.
2.அந்தத் தருணம் வரப்படும் பொழுது அதன் பயனாக இயக்கிவிடும்.
 
உதாரணமாக… ஒரு தாய் நோயாளியை உற்றுப் பார்க்கிறது… அந்த உணர்வுகள் பதிவானது. நோயாளியின் உணர்வுகள் தாய் இரத்தத்தின் மூலமாகக் கருவிலே வளர்ச்சியடைந்து குழந்தையாகப் பிறக்கப்படும் பொழுது அந்த விதிப்படி அவனுக்கு நோய் வந்தே தான் தீரும்.
 
அதை மாற்ற ஜோதிடம் பார்த்தேன் அதைச் செய்தேன் மருத்துவரிடம் சென்றேன் என்றாலும் விதிப்படி நடக்கத் தான் செய்யும்.
 
மருத்துவர் கொடுக்கக்கூடிய மருந்துகள் ஒட்டாது. அந்தத் தருணம் வந்தபின் அந்த மருத்துவர் கொடுத்த மருந்தில் உள்ள நஞ்சைத் தன்னுடன் இணைத்து இணைத்து அதுவும் பெருகி அவனை வீழ்த்திய தீரும்.
1.சிறிது நாளைக்கு வலியிலிருந்து வேண்டுமென்றால் தப்பலாம்.
2.அந்த விஷத்தைத் தனக்குள் எடுத்து மற்ற உறுப்புகளை வீழ்த்தி விதிப்படி அவன் மடிந்தே தீருவான் விதி…!
 
விதி என்ற ரூபம் இப்படித்தான் வருகிறது.
 
பிறந்த பின் வருவதெல்லாம் அது விதியாகாது…! தாய் கருவிலே வளர்க்கப்படும் பொழுது அது எதை எதையெல்லாம் தனக்குள் உருவாக்கி உள்ளதோ இந்த விதியின் பலனே நடக்கும்…”
 
தாய் கருவுற்றிருக்கும் போது ஒரு தத்துவத்தைப் பேசி உயர்ந்த ஞானத்தைப் பேசி அதன் வழி “இந்த மகான் உயர்ந்தார்…” என்ற ஏக்கத்துடன் ஏங்கி இருக்கலாம்.
 
சந்தர்ப்பத்தில்… குடும்பத்திலே சிக்கல்கள் அதிகமாகும் பொழுது
1.தாய் மகான்களை எண்ணி அந்த மகானின் உணர்வு தன் குடும்பத்தில் படர வேண்டும் என்று
2.அந்த எண்ணத்தைத் தாய் ஓங்கிச் செயல்படுத்தி இருந்தால் அந்த உணர்வுடன் இருக்கும் நிலையில்
3.யாரோ ஒரு சாது அன்று அந்த வீட்டிற்கு வரப்படும் பொழுது அந்த மகானின் அருள் பெற வேண்டும் என்று எண்ணும் நிலையில்
4.அவருக்குச் சக்தி இருக்கின்றதோ இல்லையோ
5.அவரை மகானாக எண்ணி அந்த உணர்வைப் பெற வேண்டும் என்று எண்ணும் பொழுது அந்த உயர்ந்த உணர்வு…” பதிவாகி விடுகிறது.
 
யாசகத்திற்கு இந்த தாய் அவருக்கு உணவு கொடுக்கின்றார் என்று வைத்துக் கொள்வோம். “நீ நன்றாக இரம்மா உன் குடும்பம் நன்றாக இருக்கும்…” என்று அவர் சொல்லி அதை இவர் பதிவாக்கப்படும் பொழுது
1.இந்த உணர்வின் தன்மை கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்கு அது விதியாகின்றது…”
2.அந்த விதிப்படி அதனின் வளர்ச்சிகள் அவன் வளர வளர எதிர்பார்க்காதபடி குடும்பத்தில் காரியங்கள் சித்தியாகும்.
 
ஒரு குடும்பத்தில் நான்கு பேர் இருந்தாலும் ஒருவன் செல்வங்களைத் தொலைத்துக் கொண்டிருப்பான். ஒருவன் வளர்த்துக் கொண்டிருப்பான்.
 
குடும்பம் தரித்திரமான நிலையில் இருக்கும். தாய் கருவுற்றிருக்கும் போது நோயாளியைப் பரிவுடன் பார்த்து.. அவர் உணர்வை எடுத்துக் கொண்ட பின் குழந்தை பிறந்த பின் நலிந்து கொண்டேயிருப்பான்.
 
அவனை எண்ணும் பொழுதெல்லாம் தாய் வேதனைப்பட்டு கொண்டிருக்கும். இந்த வேதனை குடும்பத்தில் அனைத்தையும் மாற்றிக் கொண்டேயிருக்கும்.
 
ஆனால்
1.மகானின் உணர்வு பதிவாகி வளர்ச்சி பெற்ற குழந்தை தீமைகளை வென்றிடும் சக்தியாக அவன் வருவான்
2.இது எல்லாம் விதிப்படி நடப்பது என்று சொல்வது.
 
அதனால் தான் மதி கொண்டு விதியை மாற்ற வேண்டும்.
 
உதாரணமாக மனிதனின் வாழ்க்கையில் ஒரு தீமையைப் பார்க்கின்றோம் அந்த உணர்வின் தன்மை ஊழ்வினை என்ற வித்தாக உருவாகிது. அந்த வித்து முளைக்காதபடி தடுப்பது மதி.
 
1.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று மதி கொண்டு அதைத் தன் உடலுக்குள் செலுத்தப்படும் பொழுது
2.அந்தத் தீமையின் உணர்வு தனக்குள் வளராதபடி முளையிலேயே கிள்ளி எறிந்து விடுகின்றது…”
 
புளியங்கொட்டையை நாம் தூக்கிப் போட்டாலும் அது குப்பையில் தான் விளையும். பின்… அது வளர்ச்சி அடைந்து வீட்டின் அருகில் வந்து விட்டால் விழுதுகளைப் பரப்பிப் அது பெரும் விருட்சமாக மாறுகின்றது.
 
வளர்ந்த பின் அதை அப்புறப்படுத்த வேண்டும் என்றால் வெட்டுவதற்கு நிறைய பந்தோபஸ்து செய்ய வேண்டும் பெரிய கோடாலி எல்லாம் வேண்டும்.
 
வெட்டும் பொழுது தெரியாமல் வீட்டிலே சாய்ந்து விட்டால் கட்டிடத்தை நொறுக்கிவிடும். ஆகவே அதைச் சிறுகச் சிறுக வெட்ட வேண்டும். அதாவது… நாம் மதி கொண்டு வீடு இடியாமல் நாம் வெட்ட வேண்டும்.
 
மதி கொண்டு செயல்பட வேண்டும் என்பதற்காகத் தான் ஞானிகள் மகரிஷிகள் உணர்வை உங்களுக்குள் சிறுகச் சிறுகப் பதிவு செய்து கொண்டு வருகிறோம்.
1.அதை நீங்கள் எந்த நேரமும் எண்ணி எடுத்து
2.அவ்வப்போது தீமைகள் உங்களுக்குள் புகாது… அது உடலில் விதியாக வளர்ந்திடாது மாற்றிட முடியும்.
 
விதியை மதியால் மாற்ற முடியும்…!

June 23, 2025

விதி இயக்கினாலும்… செய்த பாவத்திற்கு அனுபவித்தாலும்… “அருள் பற்றை மட்டும் தான் நாம் வளர்க்க வேண்டும்”

விதி இயக்கினாலும்… செய்த பாவத்திற்கு அனுபவித்தாலும்… “அருள் பற்றை மட்டும் தான் நாம் வளர்க்க வேண்டும்”


சிலர் கஷ்டம் கஷ்டம் கஷ்டம் என்று வந்து என்னிடம் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். அதிகமாகச் சொல்லப்படும் பொழுது இந்த உணர்வை யாம் எடுத்தவுடனே அது ஜீவன் பெறுகின்றது.
 
1.அபயக் குரலை இடுகின்றார்கள்அது இங்கே வரப்படும் போது நன்மை செய்ய எண்ணுகின்றோம்.
2.அந்த விதி…! உணர்ச்சிகள் தூண்டப்படுகின்றதுசந்தர்ப்பங்கள் அதை உணர்த்தும்உருபெற்றபடி என்ன செய்கிறோம்…?
 
வரபோகும் போது மேடான பாதையிலிருந்து காலை வைக்கப்படும் போது அங்கே சரியாக என்னால் போக முடியவில்லை.
1.அங்கே விபத்தாவதைத் தப்பிக்க (அபயம் கேட்டவர்களை) வைக்கின்றோம்.
2.ஆனால் இங்கே என் உடலைக் காக்க முடியவில்லை விதி இங்கே வேலை செய்கின்றது (ஞானகுரு தனக்கு எலும்பு முறிந்ததைச் சொல்கிறார்)
 
மீண்டும் அதையே எடுத்துக் கொண்டால் என்ன ஆகும்…?
 
1.அதனுடைய எதிர் அலைகள் ஏராளமாக வரும் அப்பொழுது உடல் பற்று வருகின்றது
2.விதிப்படி நாம் மீண்டும் பிறவிக்கு வருகின்றோம் பல துன்பங்களை அனுபவிக்க நேரும்.
 
அந்த உணர்வுகளை அதிகமாக வளர்த்து விட்டால் இதைப் போன்று பல இம்சைகளை உருவாக்கக்கூடிய ஒரு உயிரினமாக உயிர் மாற்றிவிடும். நம் உடலில் இப்படி எத்தனையோ விதிகள் உண்டு…”
 
அதனதன் நிலைகள் வரப்படும் பொழுது
1.நாம் செய்த நிலைகளுக்கு இது கழிகின்றது
2.இனி நாம் அருள் வழியை கூட்ட வேண்டும் என்ற நினைவில்
3.”போய்க் கொண்டே இருக்க வேண்டும்…”
 
எது எப்படி இருந்தாலும் தெரிந்தோ தெரியாமலோ நுகர்ந்தால் உயிர் இயக்கிவிடும்.
 
பாத்திரத்தை அடுப்பில் வைக்கின்றோம் சமையல் செய்கின்றோம்.
1.நான் தானே சமையல் செய்கிறேன்… நான் போடாமல் அதிலே வேறு ஒரு பொருள் விழுந்தால் என்ன ஆகும்…?
2.அதற்கு நான் என்ன செய்ய முடியும்…? நான் போடவில்லை என்றால் என்ன செய்ய முடியும்…!
 
ஏனென்றால்
1.காற்றிலிருந்து ஒரு விஷப் பூச்சி பறந்து வந்து பாத்திரத்திற்குள் விழுகிறது.
2.பூச்சியை நான் போடவில்லை…! நான் போட்டால் தானே அது வரும் என்று சொன்னால் என்ன ஆகும்…?
 
இதைப் போன்று தான் நம் உயிரின் வேலை. அது நெருப்புக்குச் சமம்…!
 
பாத்திரத்தை வைத்து அதில் எந்தச் சரக்கைப் போடுகின்றோமோ அதை அந்த நெருப்பு சமைக்கும். உயிருடைய வேலை அது தான்.
 
ஆனால் இதையெல்லாம் மாற்றி அமைக்கக்கூடிய சக்தி யாரிடம் இருக்கின்றது…? நம் ஆறாவது அறிவிடம் இருக்கின்றது.
1.ஆறாவது அறிவை நாம் சீராகப் பயன்படுத்தவில்லை என்றால்
2.மீண்டும் தேய்பிறைக்குச் சென்று விடுகின்றோம்.
 
இதற்கு முன் எத்தனையோ சரீரங்களில் நாம் வேதனைப்பட்டு இருக்கின்றோம் எத்தனையோ இம்சைப் பட்டிருக்கின்றோம்.
 
இப்பொழுது நாம் பார்க்கின்றோம் அல்லவா…! ஒரு விட்டில் பூச்சி பறக்கிறது என்றால் காகம் அதைக் கொத்திக் குதறுகின்றது விழுங்குகின்றது. தன்னுடைய குஞ்சுகளுக்கு உனவாகக் கொண்டு போய்க் கொடுக்கின்றது அந்த வீட்டில் பூச்சியின் உயிர் அடுத்து காகமாகப் பிறக்கின்றது.
 
பத்து எறும்புகள் சேர்த்து ஒரு வீட்டில் பூச்சியைக் கடித்துக் கொண்டு செல்கின்றது. அந்த உணர்வை நுகரப்படும் பொழுது எறும்பின் நினைவே வீட்டில் பூச்சிக்கு வந்து அடுத்து அது எறும்பாகப் பிறக்கின்றது.
 
இப்பொழுது நாம் பல கோடிச் சரீரங்கள் தாண்டி மனிதனாக வந்திருக்கின்றோம். ஒரு பாம்பு நம்மைத் தாக்க வருகிறது. நம்மைக் காப்பாற்ற நாம் அதை அடிக்கின்றோம். அந்தப் பாம்பின் உயிர் அடித்தவரின் உடலுக்குள் சென்று விடுகின்றது. மனித உணர்வைக் கருவாக்கி அந்தப் பாம்பு அடுத்து மனிதனாகப் பிறக்கும் தகுதிக்கு வருகின்றது.
 
ஆனால் பாம்பு மனிதனைக் கடித்தால் நினைவுகள் இழக்கப்படுகின்றது ஐயோபாம்பு கடித்து விட்டது பாம்பு கடித்து விட்டது…” என்றே நினைவு வருகின்றது. இந்த உணர்வின் தன்மை ஆன பின் மனிதனின் உயிர் அந்தப் பாம்பின் ஈர்ப்புக்குள் சென்று பாம்பாகப் பிறக்கும்.
1.பரிணாம வளர்ச்சியில் முதலில் மனிதனாக வந்தோம்
2.மீண்டும் விஷத்தன்மையான பின் நினைவாற்றலை இழந்து விஷத்துக்குள் தான் சென்று அடங்குகின்றோம்.
 
இது ஒரு விதியாக மாறுகின்றது. விதியைப் பற்றி ஏன் சொல்கிறோம் என்றால்……!
 
என் வாழ்க்கையில் சிறுபிள்ளையிலிருந்து நடந்த சம்பவங்களை எல்லாம் குருநாதர் என்னிடம் சொல்லிக் கொண்டு வருகின்றார். எறும்பை நசுக்கினாய் ஒடக்கானைப் பிடித்து அதன் கண்ணிலே பொடியைப் போட்டாய்…! அது தலை ஆட்டுவதைக் கண்டு ரசித்தாய். அதற்குப் பின் நீ எத்தனை நாள் தலையாட்டினாய்…? என்று கேட்கிறார்.
 
நான் கல்யாணம் முடித்த புதிதிலே வீட்டிலிருந்து நடந்து டவுனுக்குப் போய்க் கொண்டிருக்கின்றேன். தன்னை அறியாது கிறு கிறு என்று தலை சுற்றலானது நடக்க முடியவில்லை கீழே விழுந்து விட்டேன்…!
 
அதை ஞாபகப்படுத்திச் சொல்கின்றார் நீ இந்த இடத்தில் நினைவிழந்து விழுந்தாய்உனக்குத் தெரியுமல்லவா…! என்றார்.
 
ஓரு சமயம் நானும் என் மனைவியும் ஒரு சிறிய பாலம் அருகே ரயில்வே தண்டவாளத்தின் குறுக்கே சென்று கொண்டிருந்தோம். வண்டி வந்து கொண்டிருந்தது. சிறிது கவனம் இழந்திருந்தால் இரண்டு பேருமே அடிபட்டிருப்போம். ஆனால் தப்பிவிட்டோம்.
 
குருநாதர் அதைச் சொல்லி
1.இது எல்லாம் நீ சிறு வயதில் எடுத்துக் கொண்ட உணர்வின் சத்து உனக்குள் இருக்கப்படும் போது விதியாக அது அமைகிறது.
2.“டேய்…! அன்று நான் தான்டா அப்போது உன்னைக் காப்பாற்றினேன் என்று குரு சொல்கின்றார்…!
3.முன் ஒரு சமயம் வேறு ஒரு பிறவியிலிருக்கப்படும் பொழுது நீ எனக்கு ஒரு உதவி செய்தாய்.
4.அருள் சக்திகளை நான் பெற்றிருக்கின்றேன் இப்பொழுது (இந்தப் பிறவியில்) நான் உன்னைக் காப்பாற்றினேன்.
5.மறைந்த உணர்வுகளை வரிசைப்படுத்தி குருநாதர் எடுத்துக் காட்டுகின்றார்.
 
இப்படி என் வாழ்க்கையில் என்னென்னவெல்லாம் நடந்தது என்று எல்லாவற்றையுமே குருநாதர் சுட்டிக் காட்டுகின்றார்.
 
நீ உன் இளமையில் செய்த தவறுகள் நீ அறியாது செய்த நிலைகள் நீ எண்ணியதை எல்லாம் உன் உயிர் ஜீவ ணுவாக மாற்றி அதன் வழிப்படி ஒவ்வொரு தவறாகச் செய்யச் சொல்லி அது பெருகிக் கொண்டே வந்தது. உன்னைத் தவறான நிலைக்கு அந்த உணர்ச்சிகள் எப்படிக் கொண்டு செல்லும்…? என்று சொல்கிறார்.
 
தப்பித் தவறி நீங்கள் உங்கள் குழந்தைகளைப் பூச்சியைக் கொல்லும்படி விட்டு விடாதீர்கள். ஏனென்றால் நாம் எதைச் செய்கின்றோமோ உயிர் நுகர்ந்ததை இயக்கிவிடும்.
 
மனித வாழ்க்கையில் எப்படி இருக்க வேண்டும்…? என்பதை குருநாதர் தெளிவாக எடுத்துச் சொல்கின்றார். அதைத்தான் இப்பொழுது உங்களையும் செய்யச் சொல்கின்றோம்.
 
1.எது எப்படி இருந்தாலும் அவ்வப்போது இது (வினை – விதி) கழியும்.
2.நான் எல்லோருக்கும் நன்மை தானே செய்தேன். நான் ஏன் கீழே விழுவானேன்…? என் எலும்பு ஏன் முறிந்தது…?
 
எல்லோருக்கும் நன்மை செய்தேன் இவ்வளவு பெரிய சக்தி பெற்றிருக்கின்றேன். குருநாதரைப் பார்த்து என்னை இப்படி எல்லாம் சோதிக்கின்றாயே…! என்று சொன்னால் என்ன ஆகும்…?”
1.நான் செய்த பாவத்திற்கு நான் தானே அதை அனுபவித்தாக வேண்டும்.
2.ஆனால் அனுபவித்தாலும் மீண்டும் அந்த உயர்ந்த நிலையை பெற வேண்டும் என்று
3.மேலே பட்ட தூசியைத் தட்டி விடுவது போன்று துடைத்துக் கொள்ள வேண்டும்.
4.உடல் பற்று இல்லாதபடி அருள் பற்றுடன் நாம் சென்றால் இந்த உடல் பற்று நம்மை இயக்காது.
 
என் உடலிலே எத்தனையோ முறை எரிச்சல் வந்திருக்கின்றது. ஒரு சந்தர்ப்பம் நான் சுற்றுப்பயணம் செய்து வரும் பொழுது குமாரபாளையத்தில் நடந்த நிகழ்ச்சி இது.
 
தீயில் எரிந்த ஒரு ஆன்மா ஒரு அம்மாவின் உடலுக்குள் சென்று விட்டது. அந்த அம்மாவிற்கு 45 வயது. உடல் எல்லாம் எரியுதே எரியுதே என்று குதிக்கும். மேலே சேலையைப் போட்டாலே குதிக்கும் ஐய்யய்யோ எரிகின்றதே என்னைக் கொல்கின்றீர்களே…!” என்று சொல்லிக் கொண்டு ஓடும். அதனால் பொறுக்க முடியாது.
 
ம்மிடம் அழைத்து வர வேண்டும் என்று துணியைப் போட முயற்சித்தார்கள். ஆனால் துணியை போட முடிந்தால் தானே…! மேலே பட்டாலே என்னைக் கொல்கிறார்கள் என்று ஓடுகின்றது.
 
எங்களால் அந்தப் பெண்ணை அழைத்து வர முடியவில்லை என்று என்னிடம் சொன்னார்கள். நாலாபுறமும் சுற்றித் துணியைக் கட்டி மறைத்து அழைத்துக் கொண்டு வாருங்கள் மேலே துணியைப் போட வேண்டாம் என்றேன்.
 
அதன்படி செய்தார்கள். இங்கே கூட்டுத் தியானம் எடுத்துக் கொண்டிருக்கின்றேன்.
1.தியானத்தில் எடுக்கக்கூடிய அலைகள் அந்தப் பெண்ணின் உடலில் எப்படிப் பாய்கின்றது…? என்று
2.சிறு குழந்தைகளை வைத்து நேரடியாகப் பார்க்கும்படி சொன்னேன்.
 
அந்த உடலில் இருக்கும் ஆவி வெளியே செல்கின்றது. அது போய்விட்டது என்று தெரிந்த உடனே இந்த அம்மா எழுந்து உட்காரும். துணியைக் கொடுப்பார்கள்.
 
ஆவி மறுபடியும் வந்து விட்டது என்று சொல்லி எரியுதேஎன்று அந்த அம்மா மீண்டும் சொல்லும். இப்படிப் பல நிலைகள் ஆனபின் ஒரு வழியாக அது விலகியது. இந்த அம்மாவுக்குச் சரியானது.
 
ஆனால் அந்த அம்மா உடலில் பட்ட எரிச்சல் அது எப்படி இருக்கிறது…? என்பதை நீ பார் என்று குருநாதர் சொன்னார். நான் எடுத்தவுடனே கப கப என்று என் உடல் எல்லாம் எரிகின்றது.
 
அந்த உடலிலே இருந்த அந்த ஆவியின் தன்மை அடங்கினாலும் அதனுடைய எரிச்சலான உணர்வுகளை நான் கவரப்படும் பொழுது நுகர்ந்தறிந்த உணர்வுகள் எனக்குள் பதிவாகின்றது.
 
அது உடலில் இருந்த ஆவி
1.அது எரிந்த உணர்வலைகள் அதிலிருந்து வந்ததை நான் சுவாசிக்கப்படும் பொழுது எனக்கு அந்த நேரத்தில் எரிகின்றது
2.இப்பொழுது எரிவதற்குக் காரணம் உன் உடலுக்குள் ஏற்கனவே விளைந்தது அது எரிந்தது…” இப்படி இயங்குகின்றது (குரு சொல்கிறார்)
 
உன் சிறு வயதில் நீ குருவியைச் சுட்டு எப்படிடா தின்றாய்…? கயிறை வைத்துக் கட்டி தலை கீழாக உயிருடன் குருவியை வாட்டினாய் அல்லவா.
1.ஆனால் இப்பொழுது நீ உயிருடன் இருக்கும் போது (அந்த அம்மாவிற்கு) நன்மை செய்யப் போனாய்.
2.தீயிலே வெந்த ஆவி அந்த உடலில் இருக்கின்றது. அதை நீ அடக்க எண்ணும் போது அந்த வேதனையைச் சூரியனுடைய காந்த சக்தி எடுக்கின்றது.
3.அப்பொழுது அந்த உணர்வு என்ன செய்கின்றது…? நீ எண்ணி எடுத்தாய் உனக்குள் வந்துவிட்டது.
4.காரணம் அந்தக் குருவி எப்படி எரிந்ததோ அந்த அணுக்கள் உன் உடலில் இருப்பதற்குச் சாப்பாடு தேவை.
5.இதை எடுக்கின்றது அந்த எரிச்சல் உனக்குத் தெரிகின்றது…!
 
நடந்த நிகழ்ச்சி…! அனுபவித்துத் தான் இதைச் சொல்கின்றேன்.
 
நான் செய்த தவறு அது ஒரு விதி ஆகிறது. அந்த நேரத்திலே அங்கே எரிச்சல் ஆகிறது.
1.ஆனால் அவரைக் காப்பாற்றுகின்றேன்.
2.எனக்குள் கொஞ்சம் அந்த ஊழ்வினை மறைகின்றது.
 
இப்படி நமக்குள் எத்தனையோ விதிகள் உண்டு. இதையெல்லாம் மாற்ற வேண்டும்.
 
நான் தினமும் தியானம் செய்கின்றேன். எனக்கு ஏன் கஷ்டம் வருகிறது…? எனக்கு ஏன் நோய் வருகிறது…? என்று சொல்லிக் கொண்டிருந்தால் நாம் இங்கேதான் இருப்போம். அங்கே விண்ணுலகம் செல்ல முடியாது,
 
ஆகையினால் எந்தக் (எத்தகைய) கஷ்டம் வந்தாலும்
1.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
2.எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும்
3.எங்கள் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மா ஜீவணுக்கள் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று
4.இதை எண்ணி வளர்த்தோம் என்றால் நம் உணர்வுகள் அங்கே செல்கின்றது அடுத்து நாம் சப்தரிஷி மண்டலம் செல்கின்றோம்.
 
ஆனால் என்னை இப்படி எல்லாம் பேசினார்கள் பாவிகள் உருப்படுவார்களா…? அவர்களால் தான் இப்படி ஆனேன்…! என்று சொன்னால் இந்த உடலுக்குப் பின் யாரை எண்ணிச் சொன்னோமோ அங்கே சென்று மீண்டும் நோயால் வாடும். மீண்டும் பிறவிக்குத் தான் வர வேண்டும்.
 
இதைப் போன்ற நிலையில் இருந்தெல்லாம் நாம் தப்ப வேண்டும்.
1.அதற்குத்தான் குருநாதர் எனக்குக் காட்டியதை
2.உங்களுக்கு ஞாபகப்படுத்தித் தெளிவாக்கிக் கொண்டு வருகிறேன்.

September 26, 2024

எல்லாவற்றுக்கும் காரணம் சந்தர்ப்பம் தான் (“தலைவிதி” அல்ல)

எல்லாவற்றுக்கும் காரணம் சந்தர்ப்பம் தான் (“தலைவிதி” அல்ல) 


உதாரணமாக “ஒரு வேலையின் காரணமாக நடந்து செல்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள் அப்போது
1.அதே உணர்வை எடுத்துச் செல்லப்படும் போது
2.அதிகமான நேரத்தைச் செலுத்திச் சென்றால் போகும் பாதையில் கீழே போகும் வாய்க்கால் தெரிவதில்லை.
 
காரணம்…
1.உங்கள் நினைவு அங்கிருக்கிறது… பரந்த மனதுடன் பார்ப்பதில்லை.
2.குறி ஒன்றாகச் செல்லப்படும் பொழுது தவறி அந்த பள்ளம் தெரியாது இடறிக் கீழே விழுந்து விடுகின்றோம்.
 
ஆனால் நாம் தவறு செய்யவில்லை சந்தர்ப்பம் அந்தச் சூழ்நிலையை  நமக்கு உருவாக்கி விடுகின்றது. அதைத் “தலைவிதி என்று சொல்வதற்கு இல்லை.
 
சந்தர்ப்பம் சூழ்நிலையை அது இப்படி மாற்றுகின்றது
1.இதனால் தோஷம் வந்தது அதனால் தோஷம் வந்தது என்று இல்லாதபடி
2.நாம் சந்திக்கக்கூடிய சந்தர்ப்பம் (அது தான் தோஷம்) இப்படி ஆகிவிடுகிறது.
 
இதை விடுத்து விட்டு தோஷத்தை நிவர்த்தி செய்ய எதை எதையோ செய்ய வேண்டும் என்பது இல்லை. எல்லாம் சந்தர்ப்பம் தான்…”
 
ஒரு சமயம் இது போன்ற ஒரு நிகழ்ச்சி நடந்து விட்டால் பதிவாகி விடுகின்றது.
1.அப்புறம் எங்கே சென்றாலும் அதற்குப் பின் கீழே பார்த்துத் தான்  நடக்கச் சொல்லும்.
2.ஏனென்றால் அந்த அதிர்ச்சி ந்த உணர்ச்சிகளை ஊட்டும்.
 
அதே சமயத்தில் வீடுகளில் உள்ள தரைகள் எல்லாம் டைல்ஸ் போட்டு பாலிஷ் செய்து வைத்திருக்கின்றோம். கொஞ்சம் போல் ஈரமான காலாக இருந்தால் சறுக்… என்று வழுக்கி விடுகின்றது.
 
காரணம்… குளித்து விட்டு வரும் போது வேறு எண்ணத்துடன் தான் வருகின்றோம். வழுக்கும் பொழுது சுதாரித்துக் கொண்டால் கீழே அடிபடாது தப்பிக்கலாம் வழுக்கிய பின் அப்படியே உட்கார்ந்து பழகி விட்டால் ஒன்றும் இல்லை.
 
வழுக்கும் போது அதைக் கண்ட்ரோல் செய்ய வேண்டும் என்று முயற்சி செய்தால் “டப்…” என்று கீழே விழுந்து பின்னாடி அல்லது தலையில் அடிபட்டு விடுகின்றது. முடியாதவர்களாக இருந்தால் எலும்பு கூட நொறுங்கி விடுகின்றது.
 
இதுவும் சந்தர்ப்பம் தான்… எல்லாமே சந்தர்ப்பத்தால் நிகழக் கூடியது தான்.
 
இந்த மாதிரி ஒருவர் கீழே விழுகிறார் என்று பார்த்து விட்டோம் என்றால்… நம்மை அறியாமலே அடுத்து அது வேலை செய்யும். உங்கள் உணர்வுகள் ஒன்றைப் பார்த்து விட்டால் அது பதிவாகி அதன் நிலையிலேயே நம்மை இயக்கும்.
 
ஆகவே…
1.எல்லாமே சந்தர்ப்பத்தால் தான் என்ற நிலையை நாம் உணர்தல் வேண்டும்.
2.உலகம் உருவானதும் சந்தர்ப்பம் தான் உலகம் மாற்றமடைவதும் சந்தர்ப்பம் தான்
3.மனிதனாவதும் மனிதன் மீண்டும் அடுத்த ரூபமாக உடல் மாறுவதும் எல்லாம் உயிரால் தான் நடக்கிறது என்பதை
4.நாம் தெளிவாகத் தெரிந்து கொள்தல் வேண்டும்.
 
இது மெய் ஞானம்…!

June 19, 2024

மகரிஷிகள் அடைந்த கதியை நாமும் அடைய வேண்டும்

மகரிஷிகள் அடைந்த கதியை நாமும் அடைய வேண்டும்

 

உதாரணமாக ரோட்டிலே நாம் செல்லப்படும் பொழுது சந்தர்ப்பத்தில் விபத்துகளைப் பார்க்க நேர்கின்றது. அங்கே சிதறிக் கிடக்கும் உறுப்புகளை உற்றுப் பார்த்த பின் நம்மை அறியாமல் அச்சமும் பதட்டமும் பயமும் வருகின்றது.

சிதறுண்ட அந்த உணர்வலைகளை நாம் எடுக்கப்படும் பொழுது நமக்குள்ளும் அது உருவாகி சிந்திக்கும் செயல் இழக்கச் செய்து எதற்கெடுத்தாலும் பதறும் நிலை வருகின்றது.

1.சிதைந்த உடலில் இருந்து வெளிப்பட்ட உணர்வலைகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்கின்றது.
2.நாம் உற்று நோக்கும் போது அதனின் வித்தாக நமக்குள் பதிவாகின்றது.
3.பதிவான பின் அந்த உடலில் விளைந்த “உறுப்புகள் சிதைந்த உணர்வுகள்” நமக்குள் வந்துவிட்டால்
4.நம்மை அறியாமலே நம் உடல் கூறுகள் சிதைந்து கொண்டே வரும்.

இதைத் தீய வினை என்று சொல்வார்கள்.

நாம் தவறு செய்யவில்லை…! சந்தர்ப்பம் அதை உற்று நோக்குகின்றோம் அறிகின்றோம். இருந்தாலும் உற்று நோக்கிய தீமையை விளைவிக்கும் அந்த உணர்வுகள் வித்தாக உடலில் விளைகின்றது.

ஒரு டேப்பில் இனிமையான பாடலைப் பதிவு செய்கின்றோம். மீண்டும் அதைச் சுழல விட்டால் அதைக் கேட்கப்படும் பொழுது உடல் அசைகின்றது… இனிமையாக இருப்பதால் முகமும் மலர்கின்றது… நமக்கு மகிழ்ச்சி மேலோங்குகின்றது.

ஆனால் ஒரு வேதனை கொண்ட பாடலை இசைத்தாலோ நம்மை அறியாமலே நம் உணர்வுகள் சோர்வடைகின்றது.

ஒரு வீணையை வாசிக்கிறார்கள். சீராக இசைக்கப்படும் போது மகிழ்ச்சி வருகிறது. ஆனால் அதிலே நாதத்தை எழுப்பும் ஒரு சுருதி மாறி விட்டால் நினைவுகள் உடனே சிதறி… மனதில் இருக்கும் மகிழ்ச்சி அப்பொழுதே குறைந்து விடுகின்றது.

இதைப் போன்று தான் நாம் மகிழ்ந்து வாழ்ந்து கொண்டிருந்தாலும் முதலிலே சொன்ன மாதிரி ஒரு மனித உடல் விபத்தில் சிதைந்த நிலைகளை நாம் உற்றுப் பார்த்த பின்… அவன் எப்படிக் கடைசி நேரத்தில் வேதனைப் பட்டானோ அதைக் கவர்ந்து கொண்டால் அந்த உணர்வின் சக்தியே நம்மை இயக்குகின்றது.

ஏனென்றால் எதை உற்றுப் பார்த்தாலும்… கண் நம் உடலுக்குள் ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாக்கி விடுன்றது. மீண்டும் அதனை நினைவு கொள்ளும் போது… திரும்பத் திரும்ப எண்ணிய பின் அது விதியாக மாறி விடுகின்றது.

விதி முளைத்து விட்டால் ஒரு தடவை அச்சமடைந்ததைப் பார்த்த அந்த உணர்வுகள் விதியாக மாறி விட்டால் அந்த கதியின் தன்மையாக நாம் அடிக்கடி பயமடைவதும் என்ன ஆகுமோ என்று அந்த பயத்தின் கதியிலேயே நம்மை இயக்கும்.

இதைப் போன்று நம்முடைய வாழ்க்கையில்
1.நாம் உற்று நோக்கிப் பதிவாக்கியதை மீண்டும் எண்ணும் பொழுது விதியாக மாறி
2.விதியின் தன்மை கொண்டு அந்த உணர்வின் மணங்கள் “கதியாக” நம்மை இயக்கத் தொடங்கி விடுகின்றது.

அந்தக் கதியிலிருந்து நாம் விடுபட வேண்டும் என்றால் எதைக் கொண்டு…? மதி கொண்டு தான் அந்த இருளை நீக்க முடியும்.

1.அதற்கு மகரிஷிகளின் அருள் சக்திகளை ஊழ்வினையாக நாம் பதிவு செய்ய வேண்டும்
2.பின் அதனை மீண்டும் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து விதியாக நாம் மாற்ற வேண்டும்.

ஏனென்றால் மனிதனின் விதியை மதி கொண்டு மாற்ற வேண்டும். மகரிஷிகள் தங்கள் வாழ்க்கையில் வந்த நஞ்சினை எல்லாம் ஒடுக்கி அதை ஒளியாக மாற்றி இன்றும் விண்ணிலே “அதனின் கதியில் அழியாத நிலை கொண்டு சுழன்று கொண்டுள்ளார்கள்…”

1.தன் மதியால் விதியை மாற்றி ஒளியின் சிகரமாக எத்தகைய தீமையும் தனக்குள் அணுகிடாது
2.அந்த கதியிலேயே இன்றும் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.
3.அதை நாம் நுகர்ந்து நமக்குள் வரும் தீய வினைகளை “அந்த விதியை மாற்றி
4.அவர்கள் அடைந்த கதியை நாமும் அடைய வேண்டும்.

June 7, 2024

அருள் ஞானிகளுடன் ஒன்றுவதே “மதி”

அருள் ஞானிகளுடன் ஒன்றுவதே “மதி”

 

இந்த உபதேசத்தைக் கேட்பவர்கள் அனைவரும்… உங்களுக்கு நோயோ அல்லது மற்ற குறைபாடுகளோ தற்சமயம் ஏற்பட்டால் அது எல்லாம் இப்பொழுது வந்தது அல்ல.

இளமையில் ஏங்கிப் பெற்ற அல்லது பார்த்துணர்ந்த
1.தீமையான நிலைகளில் இருந்து விடுபட நுகர்ந்த உணர்வுகள் நமக்குள் விளைந்து
2.அது வளர்ச்சி பெறும் பொழுது விதி என்ற நிலையும்
3.அந்த விதிப்படி வினைகள் விளைந்து நோயாக விளைந்து
4.வேதனை என்ற நிலைகளை நமக்குள் வளர்க்கின்றது.

அந்த விதிப்படி விளைந்த உணர்வுகளை மாற்ற
1.அருள் ஞானிகள் உணர்வை நாம் நுகர்ந்து விதி என்ற அந்த இருளை நீக்கி
2.அருள் ஞானிகளுடன் ஒன்றச் செய்வதே மதி.

மனிதன்… மதி என்ற நிலைகள் கொண்டு தான் எத்தனையோ விஞ்ஞானம் உருப் பெற்றது. எத்தனையோ அருள் ஞானம் உருப் பெற்றது.

நம்மை அறியாது சேர்ந்த இருளை அகற்றும் அருள் ஞானத்தைப் பெறுவோம். இந்த வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியிலும் அந்த மகரிஷிகளின் ஆற்றலை நமக்குள் செலுத்தி நம்மை அறியாது சேர்ந்த நோய்களை அகற்றுவோம்.

நமது வாழ்க்கையில் முன் செய்து கொண்ட வினையே இது வருகின்றது. உதாரணமாக… ஒரு விபத்து என்று ஆனாலும் அதனைப் பற்றி நாம் கேட்டுணர்ந்த பின் அந்த உணர்வின் தன்மை நமக்குள் வலுப்பெற்றால்… நம் நல்ல குணங்களும் இருள் சூழச் செய்து விடுகிறது.

அது மட்டுமல்ல… விபத்தைப் பார்த்துணர்ந்த… கேட்டுணர்ந்த அதே உணர்வுகளும் நம்மை இயக்கப்பட்டு நம்மை அறியாமல் சில நோய்கள் வந்து விடுகிறது… அல்லது விபத்தாகி விடுகின்றது.

இதைப் போல
1.நாம் நுகர்ந்த உணர்வின் தன்மை கொண்டு நம்மை அறியாமலே அந்த உணர்வுகள் அழைத்துச் சென்று
2.எத்தனையோ வினைகளுக்கு ஆளாக்கி அந்தத் தீவினையே நமக்குள் விளையச் செய்யும் நிலையாக உருவாகிவிடுகிறது.

ஆகவே எத்தகைய தீமைகளைக் கேட்டுணர்ந்தாலும் அடுத்த கணம் அந்தத் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும்… எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும்… நாங்கள் பார்ப்போர் அனைவரும் நலம் பெற வேண்டும்… அவர்கள் வாழ்க்கையில் தெளிந்த மனம் பெற வேண்டும்… அவர் குடும்பங்கள் அனைத்தும் நலம் பெற வேண்டும்… என்ற இந்த உணர்வை நமக்குள் வளர்த்துக் கொண்டால்… உயிர் நாம் எண்ணிய உணர்வை நமக்குள் விளையச் செய்கின்றது “அந்த வலுவாக வளரச் செய்கின்றது…”

ஆகவே எண்ணும் பொழுதெல்லாம் அந்த மகரிஷிகள் அருள் சக்தியை நீங்கள் பெறும் அந்தத் தகுதிக்குத் தான்
1.நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த உயிரான்மாக்களை சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்து
2.வாழ்க்கையில் வந்த இருளை வென்று உடல் பெறும் உணர்வுகளை அங்கே சப்தரிஷி மண்டலத்தில் கரைக்கச் செய்து
3.அறிவின் ஒளியாக அவர்களை அங்கே நிலைக்கச் செய்யும்படி பயிற்சி கொடுக்கின்றோம்.

“அந்த அறிவின் ஒளியின் தன்மை” நமக்குள் பெறும் போது நம்மை அறியாது வந்த இருளை நீக்கும் ஆற்றலை நாம் பெறுகின்றோம். பேரின்பப் பெரு வாழ்வு என்ற நிலையை அடையும் தன்மையும் நாம் பெறுகின்றோம்.

அனைவரும் நாம் இதைப் பெறுவோம்… அருள் ஞான வழியில் நாம் செல்வோம்… என்று பிராத்தித்துக் கொள்கின்றேன் (ஞானகுரு).

June 2, 2024

தீமை கலந்து விட்டால் தீமை விளைகிறது… அதனுடன் மகரிஷிகள் உணர்வைக் கலந்தால் நன்மையாகிறது

தீமை கலந்து விட்டால் தீமை விளைகிறது… அதனுடன் மகரிஷிகள் உணர்வைக் கலந்தால் நன்மையாகிறது

 

குருநாதர் என்னிடம் சொன்னது…
1.நீ முந்தி செய்த வினைகள் அது வளரும் பருவம் வரும் பொழுது
2.உனக்குள் விதியாக வந்துவிடும்.

அந்த விதி வரும் பொழுது நீ எதை எண்ண வேண்டும்…?

என்னை அறியாது இருள் நீங்க வேண்டும்… அந்த மெய்ப்பொருள் காணும் சக்தி பெற வேண்டும். நான் பார்ப்பதெல்லாம் நலம் பெற வேண்டும். அந்த அருள் ஒளி பெற வேண்டும் என்று ஏங்கி அதைப் பெற வேண்டும்.

நான் என்னுடைய சிறு வயதில் அறியாமல் செய்தது அனைத்தும் விளைந்து… கால் பாதங்கள் எரிவதும் உடலும் எரிகின்றது. ஒவ்வொரு நிமிடமும் அதை மாற்றுவதற்கு மகரிஷிகளின் அருள் ஒளியை எடுத்தேன்.

நீ சிறு வயதில் எத்தனையோ பாவங்களைச் சேர்த்தாய் என்றார் குருநாதர். அதை எல்லாம் இப்பொழுது நான் சொன்னால் நீங்களும் பயந்து விடுவீர்கள்…

ஒடக்கானைப் (ஓணான்) பிடிப்பேன். மூக்குப் பொடியை எடுத்து அதனுடைய கண்ணிலே தூவி விடுவேன். அது தலையை ஆட்டும். பார் பேய் ஆடுகிறது என்று காட்டுவேன்.

இதையெல்லாம் நான் செய்தவன் தான். அப்பொழுது எனக்குக் கண் எரிச்சல் எல்லாம் வரும். குருநாதர் இதையெல்லாம் எனக்குச் சுட்டிக் காட்டுகின்றார்.

சிறு வயதில் நீ தெரியாமல் செய்தாய். ஆனாலும் உன் உயிர் என்ன செய்கிறது…?
1.உடலில் உனக்குள் அணுக்களாக விளைய வைத்திருக்கின்றது
2.அது விளைந்து வரப்படும் பொழுது ஒவ்வொன்றாக அந்த அனுபவம் வரும்.

இப்போது அதை நீக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

1.நல்ல குணங்களுடன் சேர்ந்து இது எப்படி எரிச்சலாக வந்ததோ இந்த எரிச்சல் வரும் பொழுது
2.நீ அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி பெற வேண்டும் என்று உயிரிலே எண்ண வேண்டும்.

அந்த நிலையைத்தான் நீ பெற வேண்டும் என்றார் குருநாதர்.

நான் (ஞானகுரு) தவறு ஒன்றும் செய்யவில்லை. உங்களுக்கு நன்மை தான் செய்து கொண்டிருக்கின்றேன். சந்தர்ப்பத்தில் நான் கவிழ்ந்து விழுந்து விட்டேன். விழுகும் போது சாக்கடையில் கையைக் கொண்டு போய் ஊன்றுகின்றேன்

எனக்கு வலு இருக்கின்றது. ஆனால் எலும்பு ஒடிகிறதே…! நான் தவறு செய்தேனா…? இல்லை.

அப்பொழுது தான் குருநாதர் சொல்கின்றார்.
1.ஒவ்வொரு நிமிடத்திலும் நீ பட்ட நிலைகள் இது வரும்.
2.விதிப்படி இது நடக்கும்… ஆனால் மதி கொண்டு இதை மாற்ற வேண்டும்.

மனிதனான பின் மதி என்றால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற வேண்டும் என்று உணர்வினைத் தனக்குள் எடுக்க வேண்டும். இந்த மதி கொண்டு தான் அந்த விதியை வெல்ல முடியும்.

கீழே விழுந்து விட்டேன்…! எம்மா… எப்பா…! என்று சொன்னால்… நான் சொல்லும் வேதனையை நீங்கள் கேட்டால் உங்களிடமும் இது விளையும். உங்களிடம் விளைந்த பின் இரண்டு பங்கு என்னிடம் கொடுப்பீர்கள் இதைத்தான் என்னால் வளர்க்க முடியும். இதைப் போன்ற தீய வினைகளிலிருந்து நாம் மாறுதல் வேண்டும்.

1.என்று… நாம் எதைச் செய்திருந்தாலும்
2.விதிப்படி அந்தந்த உணர்வுகள் வளர்ச்சி அடையப் படும்பொழுது அது வரும்.

அது தான் சித்திரை…! சிறு திரைகள்…! நம்மை அறியாது நாம் செய்த பிழைகள் திரை மறைத்து அந்த உணர்வின் அணுவின் தன்மையாக விளையும். அதன் வித்தின் தன்மை நிச்சயம் விளையத் தான் செய்யும்.

வேதனைப்படுபவர்களைப் பற்றி அடிக்கடி நாம் கேட்டுக் கொண்டிருந்தால் இந்த விஷத்தின் தன்மை அது வளரத் தான் செய்யும்… அந்த விஷம் கூடத்தான் செய்யும் என்று குருநாதர் காட்டுகின்றார்.

இதை மாற்ற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…? அருள் மகரிஷிகளின் உணர்வைப் பெற வேண்டும்.
1.என்னைப் போன்ற இந்தத் தீமைகள் மற்றவர்களுக்கு வரக்கூடாது…! என்று எண்ணுதல் வேண்டும்.
2.தலை வலிக்கிறது என்றால் இந்த வலி மற்றவருக்கு வரக்கூடாது.
3.அவர்கள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற இந்த உணர்வை… விதியை… மதி கொண்டு வெல்லுதல் வேண்டும்.

“வெறுமனே எண்ணாதபடி” அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்றி அடிக்கடி அதை இணைத்துச் சொல்ல வேண்டும். காரணம் அருள் ஞானிகள் இதைப் போன்ற நிலைகளை வென்றவர்கள். அதை எடுத்துத் தான் மாற்ற வேண்டும்.

ஆகவே உங்களுக்குள் ஞானிகளைப் பற்றித் திரும்பத் திரும்பச் சொல்லும் பொழுது… உங்கள் அறியாத வரும் இருள்களிலிருந்து மீள்வதற்கு இதை வளர்த்துக் கொண்டால் மதி கொண்டு விதியை வெல்கின்றீர்கள். இன்னொரு பிறவிக்குச் செல்லாதபடி ஒளிச் சரீரம் பெறுகின்றீர்கள்.

நான் எத்தனையோ பேருக்கு ஆசிர்வாதம் கொடுக்கின்றேன்… எனக்கு ஏன் இப்படிக் கையில் அடிபட்டது…? என்று எண்ணினால் என்ன ஆகும்…!

விதிப்படி நான் அதை வளர்க்கின்றேன் மீண்டும் இன்னும் எத்தனையோ தொல்லைகள் வரும். அது போன்ற நிலையிலிருந்து நாம் மீள வேண்டும்
1.தொல்லைகள் எப்பொழுது மனிதனுக்கு வருகின்றதோ அது விதி.
2.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற உணர்வை வளர்த்துக் கொண்டால் மதி…!

அத்தகைய மதி கொண்டால் பிறவியில்லா நிலை அடையலாம்.

February 25, 2024

தியானம் செய்வதற்காகக் காட்டுக்குச் சென்றான்

எந்த நிலை பெற வேண்டி விழையும் (ஆர்வம், விருப்பம்) மனம் அதைப் பெற நல்ல நிலையாக எண்ணிச் செயல்படும் காலங்களில்
1.செயல் நிலை எப்பொருளோ அப்பொருளே கருத்தாகவும்
2.அந்தக் கருத்தின் கருப்பொருளே வீரிய வளர்ப்பாகவும்
3.அப்படிச் செயல்படுத்தும் நிலை எதுவோ அதுவே “முயற்சி...!”

கடலில் உருவாகின்ற சிப்பி தனக்குள் முத்தை வளர்ப்பாக்க எடுக்கும் முயற்சி எப்படிப்பட்டதாக இருக்கிறது...?

சரியான காலமறிந்து அந்தக் காலத்தைப் பயன்படுத்தும் விதமாக மழை நீர் தன்னுள் விழும் நேரத்தை அறிகிறது. அந்த நேரம் வாய் திறந்த நிலையில் அது எடுக்கும் உணர்வின் ஞானம் தன்னுள் விழும் நிலை கருத்தறிந்து உயிரணுவின் கருக்கொள்கிறது.

பின் வாய் மூடி ஒரிடத்தே அமைத்துத் தன் கருவின் கருவையே முத்தாக்கும் செயல் நிலைக்கு வருகிறது. இருந்தாலும் சில மாறுபாட்டின் தன்மையால் முத்து விளையாமலும் போகலாம்.
1.ஆனால் ஆக்கத்தின் ஆக்கம் ஊக்கம் என்பது போல் “முயற்சி விளைவாக்கும்...!”
2.முத்தாக விளையாவிட்டால் என்ன செய்வது...! என்று
3.சிப்பி மழை நீரைக் கவர முயற்சிக்காமல் இருப்பதில்லை (இது முக்கியம்..!)

அதைப் போல் தான் உயர் தெய்வீக உயிர்ச் சக்தி (நீல வண்ணராமன்) உலகோதய உடல் வாழ்க்கை மோதல்கள் நடை பெறும் கால கட்டத்தில்... விதி என்ற எண்ணச் செயல் வழி முறை வலுப் பெற்று வேறு வேறு திசைக்குத் தள்ளினாலும்... தன் உணர்வுகளின் செயல்பாட்டைத் தன் ஞானக் கட்டுக்குள் அடக்கும் முறைப்படுத்தினான். (முயற்சி செய்து)

வெளி மோதல் எண்ணங்களின் செயலுக்குத் “தான் ஏகும் முறை என்பது...”
1.விதி முன்னாடி செல்ல இராமன் பின்ன்னாடியே சென்றான்...! என்ற சொற்றொடரில்
2.நடந்த நிகழ்ச்சிகளின் செயலே விதி வழி முறையானாலும்
3.தன் வாழ்க்கையில் அப்படி வந்த அந்த மோதல் காலங்களில்
4.தன் சூழலில் தனக்கு எந்த வித மாற்றத்தையும்.. உயிர்ச் சக்தியின் சக்திக்கு எந்தவிதப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை...! என்ற
5.சம நோக்குப் பெறும் நிலையை வான்மீகி மகரிஷி வற்புறுத்தி
6.பாசம் என்ற நிலையில் தனக்குள் வகுத்த சட்ட திட்டங்களுக்கும்... ஒழுங்கு வரை முறை நியமனங்களுக்கும் கட்டுப்பட்டே... உலக நியதி இயங்குகிறது...! என்று சொல்லி
7.இராமன் அதற்குக் கட்டுப்பட்டே அந்த “விதியின் வழி ஏகினான்...!” என்பதில்
8.உயர் சக்தி “மதியின் பால் இயங்க வேண்டிய அவசியத்தை... மாயமான் படலம்..!” மூலமாக வான்மீகியார் அருளியுள்ளார்.

ஆக வாழ்க்கையில் அன்றாடக் கடமைகளைச் செயல்படுத்திக் கொண்டு வந்தாலும்
1.விதி என்ற நிலையில் அது வீரியமாக இயக்கும் கால கட்டங்களில்
2.தன் உயிராத்மாவிற்குப் பாதிப்பு உண்டாக்கும் நிலைகளைத் தன் எண்ண வலு கொண்டு தவிர்த்த இராமன்
3.தியானம் செய்வதற்காகக் காட்டுக்குச் சென்றான்...! என்று காட்டும் நோக்கில் (சூட்சம உணர்வு)
4.உயிர் தன்மையின் உயர்வைக் காட்டுகின்றார் வான்மீகியார்.

உயிரின் உயர்வைக் காட்டும் வான்மீகி மாமகரிஷி விதி வழி செல்லும் செயல் வாழ்க்கையில் அதிலே வனத்தில் பட்ட துன்பங்களாகவும் கூறவும் தவறவில்லை.

இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொண்டால் நாம் செல்லும் ஞானப் பாதையில்… ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் சலிப்போ சோர்வோ சங்கடமோ சஞ்சலமோ நம்மை அண்டாது...!

September 30, 2020

வயதாகி விட்டாலே நோய் வரும் என்று ஏன் சொல்கிறோம்...?

பெரும்பகுதியானவர்கள் எனக்கு வயதாகி விட்டது. அதனால் என் உடலில் நோய் வந்து விட்டது என்பார்கள். இப்பொழுது செய்ததனால் வந்ததல்ல அந்த உடல் நோய்.
 
இளமையிலிருந்தே ஏங்கிப் பெற்ற... சந்தர்ப்பத்தால் பார்த்துணர்ந்த தீமைகள் அதிலிருந்து விடுபட...
1.நாம் நுகர்ந்தறிந்த உணர்வுகள் நமக்குள் விளைந்து
2.அது வளர்ச்சி பெறும் போது விதி என்ற நிலையாகி
3.விதிப்படி வினைகள் விளைந்து நோயாகி... வேதனையாக நமக்குள் வளர்க்கின்றது.
 
அப்படிப்பட்ட விதிப்படி விளைந்த உணர்வுகளை அருள் ஞானிகளின் உணர்வை நாம் நுகர்ந்து “அந்த விதி என்ற இருளை நீக்கி அருள் ஞானியுடன் ஒன்றச் செய்வதே மதி...!” . மகரிஷிகளின் அருள் சக்தி என்ற மதி கொண்டு விதியை மாற்ற வேண்டும்.
 
தன் மதி கொண்டு தான் மனிதருக்குள் எத்தனையோ விஞ்ஞானம் உருப் பெற்றது... எத்தனையோ அருள் ஞானம் உருப்பெற்றது.
 
ஆகவே... அருள் மகரிஷிகளின் உணர்வை நம் உடலுக்குள் செலுத்துவோம். நம்மை அறியாது சேர்ந்த இருளை அகற்றும் அருள் ஞானத்தைப் பெறுவோம்.
 
இந்த வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியிலேயும்... அந்த மகரிஷிகளின் ஆற்றலை நமக்குள் செலுத்தி நம்மை அறியாது சேர்ந்த நோய்களை அகற்றுவோம். 
 
ஏனென்றால் ஒவ்வொரு நோடியிலேயும் நம் வாழ்க்கையில் முன்பு செய்து கொண்ட வினையே (விதியாக) இது வருகின்றது.
 
ஒருவர் விபத்தில் சிக்கினாலோ அல்லது அதைக் கேட்டுணர்ந்தாலோ அந்த உணர்வின் தன்மை நமக்குள் வலுப் பெற்றால் நம் நல்ல குணங்களையும் அது இருள் சூழச் செய்து விடுகிறது.
 
அந்த விபத்தைப் பார்த்துணர்ந்த... கேட்டுணர்ந்த... அதே நிலைகள் நம்மை இயக்கி நம்மை அறியாமலே சில நோய்கள் வந்து விடுகின்றது... விபத்தும் ஏற்பட்டு விடுகின்றது.
 
இதைப் போல் நாம் நுகர்ந்த உணர்வின் தன்மை கொண்டு நம்மை அறியாமலே அந்த உணர்வுகள் அழைத்துச் சென்று... அந்த வினைகளுக்கு ஆளாக்கி... அந்தத் தீவினையே நமக்குள் விளையச் செய்யும் நிலையாக உருவாகின்றது.
 
இதைப் போன்ற தீயவினைகளைக் கேட்டுணர்ந்தாலும் அடுத்த கணம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று சுத்தப்படுத்த வேண்டும்.
 
சுத்தப்படுத்திய பின்பு நாங்கள் பார்க்கும் அனைவரும் நலம் பெறவேண்டும்... அவர்கள் வாழ்க்கையில் தெளிந்த மனம் பெற வேண்டும்... அவர்கள் குடும்பங்கள் அனைத்தும் நலம் பெறவேண்டும்... என்ற இந்த உணர்வை நமக்குள் வளர்த்துக் கொண்டால் நாம் எண்ணும் இந்த நல் உணர்வுகளை உயிர் நமக்குள் விளையச் செய்கின்றது. அந்த வலுவாக வளரச் செய்கின்றது.
 
எண்ணியவுடன் அந்த மகரிஷிகளின் ஆற்றலைப் பெறுவதற்குண்டான தகுதியை நாம் பெற வேண்டும்.
 
அதற்கு... நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற நம் முன்னோர்களின் உயிரான்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்ய வேண்டும்.
 
இந்த வாழ்க்கையில் வந்த இருளை வென்று அங்கே உடல் பெறும் உணர்வுகளைக் கரைக்கச் செய்து அறிவின் ஒளியாக நம் முன்னோர்களை நிலைக்கச் செய்ய வேண்டும்.
 
அப்படி நிலைக்கச் செய்து... அந்த அறிவின் ஒளியின் தன்மையை நமக்குள் பெறும் போது...
1.நம்மை அறியாது வரும் இருளை நீக்கும் ஆற்றல் பெறுகின்றோம்.
2.பேரின்பப் பெருவாழ்வு என்ற நிலையும் நாம் அடையும் தன்மை பெறுகின்றோம்.
 

ஆகவே குருநாதர் நமக்குக் காட்டிய இந்த அருள் ஞான வழியில் செல்வோம்.

July 31, 2020

பிறந்த பின் அமைவது விதி அல்ல... தாயின் கருவில் தான் நம் விதியே நிர்ணயமாகின்றது


இன்றைய மனிதனின் நிலைகளில் “விதி...!” என்ற நிலைகள் ஒன்று உண்டு என்றால் அது எப்படி இருக்கிறது...?

மனிதன் தாயின் கருவிலே சிசுவாக வளரப்படும் பொழுது அந்தத் தாய் எதை உற்றுப் பார்த்து அந்த உணர்வின் தன்மையை அது பதிவாக்குகின்றதோ...
1.அதுவே குழந்தைக்குப் பூர்வ புண்ணியமாக ஆனாலும்
2.அந்த விதியே அவன் வளர்ச்சியில் அதன் நிலைகளே வளர்த்துக் கொண்டிருக்கும்.

உதாரணமாக ஒரு நோயாளியை அந்தத் தாய் கருவுற்ற ஒன்றிலிருந்து தொண்ணூறு நாட்களிலே உற்றுப் பார்த்தால் கருவிலே விளையப்படும் பொழுது குழந்தைக்கு இந்த நோயின் உணர்வுகள் பதிவாகி விடுகின்றது.

அது வளர்ச்சி அடைந்து பிறக்கப்படும் பொழுது அந்தத் தருணம் வரப்படும் பொழுது முடிவின் தன்மையாக அவன் விதிப்படி அந்த நோய் வந்தே தீரும்.

நீங்கள் ஜோதிடம் பார்த்து அல்லது வேறு எந்த மந்திரத்தைச் செய்தாலும் டாக்டரிடம் சென்று நீக்க முயற்சி செய்தாலும் அந்த விதிப்படி அந்த நோயின் பாதிப்பு இருக்கத்தான் செய்யும்.

1.அவர் மருந்துகள் கொடுப்பார்
2.இருந்தாலும் அந்தத் தருணம் வந்த பின் அந்த மருந்து கொடுத்ததில் உள்ள நஞ்சே
3.அது தன்னுடன் இணைத்து இணைத்து அதுவும் பெருகி இவரை வீழ்த்தியே தீரும்.

ஆக சிறிது நாளைக்கு அந்த வலியிலிருந்து தப்பலாம். ஆனால் உள்ள விஷத்தைத் தனக்குள் எடுத்து உடல் உறுப்புகளைக் கொன்று இந்த விதிப்படி அவன் மடிந்தே தான் தீருவான்.
1.விதி இப்படிப்பட்ட ரூபத்திலே தான் வருகின்றது...!
2.நாம் பிறந்த பின் வருவதெல்லாம் அது விதியாகாது.

கருவில் வளரப்படும் பொழுது அந்தத் தாய் எதை எதை எல்லாம் தனக்குள் உருவாக்கி உள்ளதோ அந்த விதியின் பலனே நடக்கும்.

தாய் கருவிலே இருக்கும் பொழுது... ஒரு தத்துவத்தைப் பேசி உயர்ந்த ஞானத்தைப் பேசி “அதன் வழி உயர்ந்தார்...” என்ற ஏக்கத்துடன் தன் குடும்பத்தின் நிலைகள் சிக்கல் அதிகமாகும் பொழுது எண்ணி
1.அந்த மகான்களை எண்ணி...
2.அந்த மகானின் உணர்வுகள் எங்கள் குடும்பத்தில் படர வேண்டும் என்ற இந்த எண்ணத்தை ஓங்கி வளர்த்து
3.அதிலே நாட்டத்தை அந்தத் தாய் அதிகம் செயல்படுத்தியிருந்தால்
4.அந்த உணர்வின் தன்மை கொண்டு ஒரு சாது வரப்படும் பொழுது அந்த மகானின் அருள் பெறவேண்டும் என்று
5.அவரிடம் சக்தி இருக்கிறதோ இல்லையோ அவரை மகானாக எண்ணி
6.அந்த உணர்வினைப் பெறவேண்டும் என்ற எண்ணம் வரும் பொழுது அந்த உயர்ந்த சக்தி பதிவாகின்றது.

அதே சமயத்தில் ஒரு யாசகத்தைக் கொடுக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். நீ நன்றாக இரம்மா... உன் குடும்பம் எல்லாம் நன்றாக இருக்கும்...! என்ற இந்தச் சொல்லை அந்த சாதுவிடம் இருந்து பதிவாக்கப்படும் பொழுது அந்த உணர்வின் தன்மை கருவிலே வளரக்கூடிய சிசுவிற்கு “அது விதியாகின்றது...”

அதன் விதிப்படி அதன் வளர்ச்சிகள் இங்கே வளர அவன் எதிர்பார்க்காத நிலைகள் காரியங்கள் எல்லாம் சித்தியாகும். குடும்பத்தில் நான்கு பேர் இருந்தாலும் ஒருவன் தொலைத்துக் கொண்டே இருப்பான். ஆனால் இவன் ஒருவன் வளர்ந்து கொண்டே இருப்பான்.

அந்தக் குடும்பமோ தரித்திரமான நிலைகளில் இருக்கும். ஆனால் தாய் கருவில் இருக்கும் பொழுது எதை எடுத்ததோ ஒருவருக்கு நோய் வந்திருக்கின்றது என்றால் அந்தக் குழந்தை நலிந்து கொண்டே இருப்பான்.

அவனை எண்ணும் பொழுதெல்லாம் தாய் வேதனைப்பட்டுக் கொண்டேயிருக்கும். இந்த வேதனை குடும்பத்தில் அனைத்தையும் மாற்றிக் கொண்டேயிருக்கும்.

ஆனால் அதே குடும்பத்திலே ஒருவர் ஞானத்தின் வழி கருவாகி உருவாகி இருந்தால் தன் நிலைகளை எடுத்துக் கொண்டு இந்தத் தீமைகளை வெல்லும் சக்தியாக அவர் வளர்வார். இது எல்லாம் விதிப்படி நடக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம்.

இதற்குத்தான் மதி கொண்டு அந்த விதியை மாற்ற வேண்டும் என்று சொல்வது...!

ஒரு தீமையை நாம் பார்க்கின்றோம் மனித வாழ்க்கையில். அந்த உணர்வு உடலுக்குள் ஊழ்வினை என்ற வித்தாக உருவாகின்றது. அந்த வித்து முளைக்காது தடுப்பதே மதி...!

1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெறவேண்டும் என்று
2.மதி கொண்டு தன் உடலுக்குள் செலுத்தப்படும் பொழுது
3.அந்தத் தீமை தனக்குள் வளராது முளையிலே அதைக் கிள்ளி எறிந்து விடுகின்றது.

புளியங்கொட்டை என்று அதைக் கீழே தட்டி விட்டால் அது குப்பையில் தான் விளையும். ஆனால் தன் வீட்டருகில் வந்து விட்டால் அது தன் விழுதுகளைப் பரப்பி அது பெரும் விருட்சமாக மாறுகின்றது.

அதை வெட்ட வேண்டும் என்றால் மிகுந்த பாதுகாப்பு வேண்டும். வெட்டும் போது வீட்டுப் பக்கம் சாய்ந்து விடாமல் நம் மதி கொண்டு அதைச் சிறுகச் சிறுகத் தான் அப்புறப்படுத்த வேண்டும்.

இதைப் போன்று தான் மதி கொண்டு விதியை மாற்றுதல் வேண்டும்.

இப்படித்தான் இந்த வாழ்க்கையில் இன்னொரு உடல் பெறாத நிலையில் தன் மதி கொண்டு உணர்வின் தன்மையை வளர்த்தான் துருவ மகரிஷி... தன் சந்தர்ப்பத்தால் பெற்ற உணர்வு கொண்டு...!

அந்த மதி கொண்டு தன் மனைவியும் அந்த உயர்ந்த சக்தி பெறவேண்டும் என்று ஊக்குவித்தான். அதனில் விளைந்த உணர்வுகள் கொண்டு தன் மதி கொண்டு தன் உணர்வுக்குள் மனைவியையும் சேர்த்துக் கொண்டான்.
1.இந்த உணர்வின் தன்மை கொண்டு தான் மதி கொண்டு விதியை மாற்றினான்
2.பிறவியில்லா நிலை அடைந்தான் துருவ மகரிஷி.

இதை எல்லாம் குருநாதர் ஒவ்வொரு நொடிக்கும் பல இன்னல்களைக் கொடுத்துக் காட்டிற்குள் அழைத்துச் சென்று இது எல்லாம் எப்படி உருப்பெறுகின்றது...? உருமாற்றியது...? இதிலிருந்து நீ எப்படி உருமாற வேண்டும்...? நீ எப்படி உருமாறினாய்...? எப்படி உருமாற்ற வேண்டும்...? என்ற நிலைகள் கொண்டு தான் உனக்குள் உபதேசிக்கின்றேன்.

1.அருள் ஞான வித்தை உனக்குள் கொடுக்கின்றேன்
2.இதைச் சீராகப் பண்படுத்தி வளர்த்துக் கொள்
3.அதிலே விளைந்த வித்தின் எண்ணங்களைப் பரப்பு
4.மக்கள் அனைவரும் உயர வேண்டும் என்ற உணர்வை உனக்குள் உயர்த்திக் காட்டு.

அந்த உணர்வின் சொல்களை ஒவ்வொரு நிலைகளிலும் வெளிப்படுத்து கேட்டுணர்ந்தோர் உணர்வுகளில் பதிவாகி விட்டால் அவர்கள் அதை மீண்டும் நினைவாக்கப்படும் பொழுது அருள் ஞானம் அங்கே நிச்சயம் வெளிப்படும்.

அதைக் கண்டு நீ பேரானந்தப்படு... அந்தப் பேரானந்தம் தான் உன்னை ஒளியின் சுடராக மாற்றும் என்று தெளிவாக்கிய அதே வழிப்படித்தான் உங்களுக்கும் இதை உபதேசிக்கின்றேன் (ஞானகுரு).