ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 25, 2026

"உங்களுடைய வாக்கு" எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்...?

"உங்களுடைய வாக்கு" எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்...?

 

1.தியானத்தில் வந்தால் மட்டும் பத்தாது.
2.உங்கள் அனுபவத்தை எடுத்துத் தைரியமாக மற்றவர்களுக்குச் சொல்ல வேண்டும்.

குருநாதர் காட்டிய அருள் வழியினைக் கடைப்பிடித்து எந்த நோயிலிருந்து விடுபட்டு நீங்கள் நன்றாக ஆகின்றீர்களோ உங்களுடைய வாக்கால் "நோய் இல்லை" என்று அடுத்தவர்களுக்குச் சொன்னால் அவர்கள் நோய் நீங்கும்.

1.சாமி மட்டும் தான் என்று அல்ல.
2.நீங்கள் நலமான பின் மற்றவர்களுக்கும் இந்த வாக்கினைக் கொடுக்க முடியும்.

உதாரணமாக மற்றவர்கள் அவர்கள் கஷ்டத்தை நம்மிடம் சொன்னால் அதை நாம் கேட்டுணர முடிகின்றது. இரக்கத்துடனும் ஈகையுடனும் கேட்கப்படும் பொழுது அந்தக் கஷ்டம் நம்மையும் இயக்கி நமக்குள்ளும் விளைகிறது.

அதே சமயத்தில் மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற்று உடல் நலமான பிற்பாடு... நீங்கள் யாருக்குச் சொன்னாலும் அங்கே நோய் நீங்கி நலமாகும்.

விபூதியைக் கொடுத்தாலோ... வெறும் பச்சைத் தண்ணீரைக் கொடுத்தாலோ... அல்லது ஒன்றுமே இல்லை என்றாலும் அங்கிருக்கக்கூடிய மண்ணை எடுத்து அவர்கள் மேல் தூவினாலும் அவர்கள் நோய் நீங்கும்.

1.இவ்வாறு நீங்கள் சொல்லி மற்றவர்களுக்கு அது நல்லதனால்
2."உங்களுக்குள் எந்தத் தீமையும் வராது..."

இந்தக் காற்று மண்டலமே விஷத்தன்மையாகப் பரவிக் கொண்டிருக்கும் நிலையில் இதிலிருந்து எல்லாம் நம்மைக் காக்க வேண்டும்.

டி.வி. ரேடியோ இவை எல்லாம் அலைவரிசையில் தான் இயக்குகின்றது. இதே காற்றிலிருந்து தான் கவர்ந்து படமாகக் காட்டுகிறது.

இதே போல நம் வாழ்க்கையில் எத்தகைய சிக்கல்கள் வந்தாலும் அந்தச் சிக்கல்களை நீக்கக் கூடிய சக்தியை நாம் எடுக்க முடியும்... அந்தச் நமக்கு உண்டு.

"அதைப் பயன்படுத்தும் முறை கொண்டு செயல்படுத்தினால்" நல்லதாக இருக்கும்.

உதாரணமாக நெருப்பை எடுத்துக் கொண்டால் அதை வெளிச்சமாகவும் பயன்படுத்துகின்றோம்... பொருள்களை வேக வைக்கின்றோம்... பதார்த்தங்களை ருசியாகச் சமைக்கின்றோம். இரும்பைக் கூட அந்த நெருப்பை வைத்து உருக்குகின்றோம்.

இதைப் போன்று தான்
1.நமது உயிர் ஒரு நெருப்புக்குச் சமம்.
2.அதிலே உயர்ந்த உணர்வின் தன்மையை இணைத்துக் கொண்டால் நமக்குள் அறிவு என்ற "ஒளியான அணுக்களை" உருவாக்குகின்றது.

கோப குணத்தை எடுத்தால் மற்றவரைச் சொல்லால் சாபமிடச் செய்து பொசுக்கவும் செய்கின்றது. வேதனையைக் கவர்ந்தாலும் அதே போல் இயக்குகிறது.

இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொண்டு எதை நமக்குள் உருவாக்க வேண்டும்...? என்ற நிலையில்
1.ஆத்ம சுத்தியைக் கடைப்பிடித்து அருள் ஞானத்தைப் பெறக்கூடிய சக்தியாக
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நினைவு கொண்டு எடுத்து நல்லதாக்கிக் கொள்ள முடியும்.

அந்த நம்பிக்கை உங்களுக்கு வர வேண்டும்.