ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 23, 2018

“தில்லையம்பதி சரித்திரத்தைப் படைத்த இடம்” - நடனக் கலையும் சிதம்பர இரகசியமும்

மனித உடலின் தன்மை உணர்வின் குணங்களால் இயக்குகின்றது என்றும் அந்தக் குணங்களுக்கொப்பத்தான் உடலின் இயக்கம் - நடனம் என்று நடனக் கலையைக் காட்டியவர் “திருமூலர்…” 

உணர்வுக்கொப்ப உடலிலிருந்து வெளிப்படும் இசையும் அந்த இசைக்கு ஒப்ப உடலின் இயக்கமும் என்ற நிலைகளைத் திருமூலர் தான் கண்டுணர்ந்தத மக்களுக்குத் தெளிவாக அன்று காட்டினார்.

“நெருப்பிலிருந்து தான்…” நீர் தோன்றியது…! என்று அவர் சொன்னார்.

காரணம் ஆதியிலே பேரண்டத்தில் விஷமானது விஷமற்றதைத் தாக்கும் போது தான் வெப்பமாகின்றது. அந்த வெப்பத்தின் தணல் தாங்காது அணுக்களாகச் சிதறுண்டு ஓடுகின்றது. ஓடும் போது ஈர்க்கும் நிலைகளாகக் காந்தம் வருகின்றது.

இதைத்தான் திருமூலம் என்று உணர்த்துகின்றார்.

கோள்களோ நட்சத்திரங்களோ சூரியனோ எதுவுமே இல்லாத பொழுது ஆதியிலே உருவான இந்த உணர்வின் தன்மையைத் தெளிவாகக் காட்டுகின்றார்.

விண்ணுலகில் பேரண்டத்தில் இத்தகைய நிலைகள் வரப்படும் போது
1.இருண்ட நிலைகளில் இருந்த விஷம் என்பது “ஆதிசக்தி”
2.அதனால் தாக்குண்டு வெப்பமாக உருவாகும்போது
“ஆதிபராசக்தி”
3.அந்த வெப்பத்தின் தணலில் தான் நகர்ந்து செல்லும் போது ஈர்க்கும் காந்தமாக விளைவது “ஆதிலெட்சுமி”
4.ஆக ”கருமாரி உருமாறி” ஒரு பொருளாக எப்படி உருவானது என்று காரணப் பெயரும்
5.காரணத்துடன் இயற்றப்பட்ட உண்மையின் உணர்வுகளையும் கண்டுணந்த
6.அந்த மகா ஞானி திருமூலர் அமர்ந்த இடம் தான் “தில்லையம்பதி…”

திருமூலர் ஞானம் பெற்ற “தில்லையம்பதி… அது எவ்வளவு பெரிய சரித்திரத்தைப் படைத்த இடம்…!” என்று நாம் ஒவ்வொருவரும் உணர்ந்தால் அந்த ஆலயத்தில் வணங்கும் முறைகளைப் பார்க்கலாம்.

1.தன்னைத் தான் உணர்தல் என்றும்
2.தான் எடுக்கும் உணர்வின் இயக்கம் எப்படி ஆகின்றது என்றும்
3.வாழ்க்கையில் தான் எதைப் பெற வேண்டும் என்பதை அவர் கண்டுணர்ந்ததைத்தான்
4.”தில்லை நடராஜா” என்றும் “தில்லை அம்பலத்தாண்டவா” என்றும் உணர்த்தினார்.

பதஞ்சலியாக இருக்கும்போது மற்ற ஆசையின் நிலைகளினால் எதனால் தான் மெய் உணர்வை இழந்தோம்…? அதை மீண்டும் எப்படிப் பெறுவது.? என்று
1.தன்னுள் வளர்த்துக் கொண்ட மெய் உணர்வுகளைத் தான்
2.தில்லையம்பதியில் சிதம்பர இரகசியமாக  வெளிப்படுத்துகின்றார் திருமூலர்.

சிதம்பர இரகசியத்தை உணர்ந்தவர்கள் அனைவரும் “அதனின் இயக்கமாக... அதனுடன் ஐக்கியமாகி...” விண்ணிலே சப்தரிஷி மண்டலமாக வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.