ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

Showing posts with label வேதங்கள். Show all posts
Showing posts with label வேதங்கள். Show all posts

December 27, 2024

அதர்வண வேதம்

அதர்வண வேதம்


ரிக் வேதம் சாம வேதம் யஜுர் வேதம் அதர்வண வேதம் - ஒரு பொருளின் நிலைகள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படும் பொழுது
1.ஒன்றை விழுங்கி… அப்போது நாதத்தின் சுருதிகள் மாறுகின்றது.
2.அதனுடைய இனப்பெருக்கம் இனச்சேர்க்கை இனத்தை உருவாக்கும் என்ற நிலைகள் வேதங்களில் இப்படிப் பிரிக்கப்பட்டுள்ளது.
 
இயற்கையின் விளைவின் தன்மை பெறப்படும் பொழுது அதர்வண வேதத்தைத் தனியாகப் பிரித்துக் காட்டுவார்கள்.
 
ஒரு புலி மானைப் பார்க்கிறது என்றால் அதனுடைய வேகத்துடிப்புகள் மான் பார்த்த பின் உடனே அஞ்சி நடுங்க வைக்கின்றது. இது அதர்வண வேதத்தைச் சேர்ந்தது.
 
புலியின் உணர்வு இதற்குள் சேர்ந்த பின் மான் செயலற்றதாகி அதனைப் புலி விழுங்கி விடுகின்றது. மானின் உணர்வுகள் இயங்காது உயிர் அகன்று வந்த பின் புலி கவர்ந்து கொண்ட பின் தன் இனமாகச் சேர்த்து அதனின் உயிரைத் தன் இனமாக வளர்கின்றது. இதைக் கவனமாக வைத்துக் கொள்ளுங்கள்.
 
அதர்வண வேதம் என்ற நிலையில்
1.ஒரு உணர்வின் தன்மை ஒன்றைக் குவித்து உணர்வால் மாற்றப்பட்டு இது வளர்ந்த பின்
2.உயிருடன் இணைந்த பின் இதைக் கொண்டு அது இணைத்துக் கொண்ட
3.அதாவது விழுங்கிய உணர்வின் தன்மை கொண்டு எவ்வாறு ரூபங்கள் மாறுகின்றது…? என்ற நிலையை அதர்வண வேதம் காட்டுகிறது.
 
வேத சாஸ்திரங்கள் படித்தவர்கள் இருக்கலாம். ஆனால் வேதத்தின் நுண்ணிய நிலைகளை அன்று மெய் ஞானிகள் சித்தரித்துக் காட்டினார்களே…!
1.அதனின் உண்மைப் பொருளை இன்று காணாது
2.அதர்வண வேதம் என்ற நிலைகளில் யாகத்தைச் செய்து ஒவ்வொரு தெய்வத்திற்கும் சக்தி ஊட்டுகின்றார்கள்.
 
யாக வேள்விகளை நாம் பரப்பப்படும் பொழுது அந்த மந்திரங்களைச் சொன்ன பின் இந்தத் தெய்வத்திற்குச் சக்தி ஊட்டப் போகின்றோம் என்ற நிலைகளில் 48 நாட்கள் மந்திரங்களை ஓதுகின்றார்கள்.
 
அந்த தெய்வத்திற்காகப் பல பொருள்களை இட்டு அவர்கள் சொல்லும் மந்திரங்களும் யாகத் தீயில் போடும் பல மங்களும் இவையெல்லாம் சேர்த்து சோமபானம் (மது) என்பதையும் ஐதீகத்திற்காக என்று சொல்லி ஊற்றுவார்கள்.
 
அங்கே அவர்கள் சொல்லும் மந்திரங்களை நாம் கேட்டுணர்ந்தால் இதற்குப் பெயர் வசியம். ஆலயத்தில் உள்ள தெய்வத்திற்கு சக்தியைச் செருகேற்றுகின்றார்கள் என்றால் இப்படிச் சொல்லும் பொழுது மனிதன் இந்த தெய்வம் இன்னது செய்யும் என்று காவியங்களைத் தீட்டுகின்றார்கள்… மந்திரங்களைச் சொல்கிறார்கள் நாம் கேட்டறிகின்றோம்.
 
அவர்கள் சொல்வதெல்லாம் நமது உயிருக்குள் ஆழமாகப் பதிவாகி விடுகின்றது.
 
மந்திரத்தைச் சொன்ன பின் வாத்தியங்களை வைத்து இசைகளை இசைப்பார்கள். ஒவ்வொரு மேளத்திற்கும் ஒவ்வொரு விதமான நாதங்கள் உண்டு ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு விதமான வாத்தியங்களை வாசிப்பார்கள்.
 
1.ருப்பண்ணசாமி மாடசாமி இவர்களுக்கெல்லாம் டும்டும்டும் என்று அடிப்பார்கள்.
2.அப்படி டித்தாலே போதும் தன்னை அறியாமலே ஆட்டங்கள் வந்து விடும்.
3.எதைப் பதிவு செய்து வைத்துள்ளதோ அந்த உறுமி மேளச் சத்தத்தைக் கேட்டாலே போதும்…
4.ஆடாத பேயெல்லாம் ஆட ஆரம்பித்து விடும். இது எல்லாம் சுருதிகள் மந்திரத்தால் ஏற்படுத்தப்பட்ட நிலைகள் தான்.
5.யாக வேள்விகளால் வரக்கூடிய சில தீமைகள் இவைதான்.
 
பக்தி மார்க்கங்களில் யாகத்தைச் செய்து தெய்வத்திற்கு நெய்வேத்தியம் வைத்து அதன் வழிகளில் நாம் சக்தி பெறுவது என்பது மந்திர ஒலிகள் தான்…”
 
மந்திரம் இல்லாத மதங்கள் இல்லை. ஒவ்வொரு மதமும் மந்திரத்தை உருவாக்கித் தான் உருவத்தின் தன்மை கொண்டு ஒவ்வொரு கோயிலுக்கும் சில நிலைகளைச் செயல்படுத்துகின்றார்கள்.
 
இதைப்போல எடுத்துக் கொண்ட உணர்வுகள் நாம் கேட்டறியும் போது
1.நாதங்கள் சுருதிகள் அவர்கள் சொல்லும் வாக்கியங்கள் இந்தத் தெய்வம் ன்னது செய்யும் என்று பறைசாற்றி
2.தெய்வ குணங்களைச் சித்தரித்து அது நமக்கு வாரி வழங்கும் என்று ஆசையை ட்டி
3.அதனின் நிலைகள் இவர்கள் ஓதும் மந்திரத்தை நாம் செவிகொண்டு கேட்கப்படும் பொழுது ஒலி அலைகள் நமக்குள் பதிவாகின்றது.
 
அவர்கள் சொல்லும் உணர்வுகள் வந்து நல்ல குணத்தில் அதர்வண வேதமாக “நல்லதுக்குள் தீமைகளாகப் பதிவாகி விடுகின்றது…”
 
இதிலிருந்தெல்லாம் மீள வேண்டும் அல்லவா.

July 24, 2024

மனிதன் விண் செல்லும் வழியைத் தான் காட்டுகிறது “வேதங்களும் உபநிஷத்துக்களும்”

மனிதன் விண் செல்லும் வழியைத் தான் காட்டுகிறது “வேதங்களும் உபநிஷத்துக்களும்”

 

1.உருவம். அது ரிக்
2.ஒரு பொருளிலிருந்து மணங்கள் வரும்போது சாம.
3.ஒரு பொருளுடன் இணைந்து அதை மாற்று நிலைகள் உருமாற்றும்போது இரண்டு செயலும் தன் உணர்வின் சத்தை மாற்றுகின்றது அதர்வண.
4.இரண்டும் மாறி ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படும்போது யஜூர்.

ரிக் சாம அதர்வண யஜூர் மீண்டும் சாம…! வேதங்கள் கூறியபடித் தான் நான் (ஞானகுரு) உபதேசிக்கின்றேன். புதிதாக ஒன்றும் சொல்லவில்லை.

ஒருவர் உடலை விட்டுப் பிரிந்து விட்டால் அதர்வண வேதத்தில் உருவாக்கப்பட்ட சாங்கிய சாஸ்திரங்களைத் தான் நாம் கையாளுகின்றோமே தவிர… ஞானிகள் காட்டியதை நாம் கடைப்பிடிக்கவில்லை.

ஒரு மனிதன் கோபமாகப் பேசுகிறான் என்றால்
1.அதிலிருந்து வெளிப்படக்கூடியது சாம இசையாக மாறுகின்றது… மணங்களாக மாறுகின்றது… குணங்களாக மாறுகின்றது.
2.எந்த மனிதன் அதை நுகர்கின்றானோ அந்த இசையின் தன்மை சாந்த குணம் கொண்டவனை…
3.கோப குணங்கள் அடக்கி விடுகின்றது அதர்வண.
4.நல்ல குணங்களை அடக்கிய பின் யஜுர் கோபத்தை உருவாக்கும் வித்தாகிறது.

அதாவது நல்ல குணத்துடன் ஒரு கோபக்காரரின் உணர்வு சேர்ந்து விட்டால் யஜுர்… நம்முடன் கலந்து அந்த உணர்வின் தன்மை எனக்கு எவன் தீங்கு செய்தானோ அவனை எண்ணச் செய்கின்றது… மீண்டும் அதனுடைய நிலைக்கு…!

எந்த மனித உடலில் இருந்து இந்தத் தீங்கின் தன்மை விளைவித்ததோ அதனின் உணர்வின் வலுவாக அதே எண்ணங்கள் கொண்டால் அடுத்து அந்த உடலுக்குள் சென்று அதை வளர்க்கும்.

ஆனால்
1.இதையெல்லாம் வென்ற அருள் மகரிஷிகள் உணர்வை நாம் நுகர்ந்தோம் என்றால் அது சாம
2.அதை நமக்குள் நுகர்ந்து வளர்த்துக் கொண்டால் தீமையை அடக்கும் அதர்வண.
3.தீமைகள் அடக்கும் உணர்வுகள் ஒன்றி தனக்குள் முழுமை அடையும் பொழுது யஜுர் (வித்தாகிறது)

மீண்டும் அந்த அருள் மகரிஷிகளை நினைவு கொண்டால் அருள் ஞான உணர்வுகள் விளைந்து… மலரைப் போன்ற மணமும் மகிழ்ந்து வாழும் நிலைகளும் பெற்று இந்த உடலை விட்டு நாம் சென்ற பின் அருள் மகரிஷிகளின் வட்டத்தில் இணைகின்றோம்.

1.அவரின் சார்புடையோர் விண்ணின் ஆற்றலைப் பெருக்கி
2.அந்த உயிரான்மா சப்தரிஷி மண்டலம் சென்றடைய வேண்டும்
3.உடல் பெறும் உணர்வுகள் கரைய வேண்டும்
4.உயிருடன் ஒன்றிய அறிவின் ஞானம் நிலைத்திருக்க வேண்டும் என்று
5.எண்ணத்தால் எவர் ஒருவர் செய்கின்றனரோ “உபநிஷத்துக்களில் கூறப்பட்ட வழிப்படி அவர்கள் செய்கிறார்” என்று பொருள்.

வேதங்களில் காட்டப்பட்டுள்ள சாரங்களும் இது தான்.

அந்த உயிரான்மா முதலில் அழியா ஒளிச் சரீரம் பெறுகின்றது… அடுத்து அதன் வழியிலேயே அவரை பின்பற்றிக் அந்த குடும்பத்தாரும் விண் செல்ல ஏதுவாகின்றது.

June 1, 2024

சாம அதர்வண யஜூர்

சாம அதர்வண யஜூர்

 

ஒரு வேதனைப்படுபவரை சந்தர்ப்பவசத்தில் நாம் பார்க்கின்றோம் அந்த உணர்வின் இசை “சாம…!”
1.வேதனையான உணர்வுகள் வந்தபின் உனக்கு இப்படி ஆகிவிட்டதா…? என்போம்…
2.அவர் அம்மா……! என்று அலறினால் போதும் நாம் ஐயோ…! என்று சொல்வோம்.

ஆக இந்த உணர்வின் தன்மை தனக்குள் ஆகிவிட்டால் நல்ல குணங்களின் இசைகளையே மாற்றி விடுகின்றது… “அதர்வண…” மாறி அதுவே ஒரு வித்தாகி விடுகிறது “யஜூர்…”

வித்தாக ஆன பின் மீண்டும் சாம…
1.அவரைப் பற்றி மீண்டும் மீண்டும் எண்ணப்படும் பொழுது
2.நம்முடைய சோக கீதம் அங்கே வாசிக்கத் தொடங்கி விடுகின்றது… எம்மா… எப்பா… மீண்டும் சாம…!

ஆகவே இது போன்ற சந்தர்ப்பங்கள் எல்லாம் அருள் மகரிஷிகளின் உணர்வைத் எடுத்து இதை அடக்கிடல் வேண்டும். அந்த மகரிஷிகளின் உணர்வுகள் நாங்கள் பெற வேண்டும்… எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று உடனுக்குடன் இதைத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

பின்… “எந்த நோயாளியை நாம் பார்த்தோமோ” மகரிஷிகளின் அருள் சக்தி அவர் உடலில் படர வேண்டும்… அவர் நோய் நீங்க வேண்டும்… அவர் அருள் ஞானம் பெற வேண்டும்…! என்ற இந்த உணர்வைப் பாய்ச்சுதல் வேண்டும்.

இந்த உணர்வை நினைவுபடுத்தி “அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நீ பெறு… உன் உடல் நலம் பெறும்…” என்ற இந்த உணர்வின் வித்தினை விதைத்து விடவேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணும் பொழுது அது அந்த வேதனையை அடக்குகின்றது.
1.மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் எடுக்கும் பொழுது அதனுடைய இசை சாம.
2.மகரிஷிகளின் அருள் சக்தி அந்த வேதனையை அடக்கப்படும் பொழுது அதர்வண
3.அதே உணர்வின் தன்மையைத் தனக்குள் எடுக்கும் பொழுது யஜுர்.

அருள் மகரிஷிகளின் உணர்வுகள் நமக்குள் வித்தாகி விட்டால்…
1.இந்த உணர்வின் தன்மை வளரப்படும் பொழுது எங்கே செல்கின்றோம்…?
2.அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்திற்குச் செல்கின்றோம்.

ஒரு மனிதன் வேதனைப்படும் குரலை நாம் கேட்டோம் என்றால் சாம… நாமும் அந்த வேதனையைச் சொல்லும் போது “ஐயோ… உனக்கு இப்படி ஆகிவிட்டதா…?” என்று இந்த உணர்வின் தன்மை தனக்குள் வரும் பொழுது அதர்வண…! நல்ல குணங்களை அடக்கி விடுகின்றது,

மீண்டும் சாம…! அந்த வாசனை கொண்டு “அவர் இப்படி ஆகிவிட்டாரே… இப்படி ஆகிவிட்டாரே…” என்று மீண்டும் அந்த அணுக்களை நமக்குள் வளர்த்துக் கொள்கின்றோம்.

அவர் இறந்து உடலை விட்டு வந்தால்… அவரின் உணர்வு நமக்குள் வளர்ந்திருந்தால் அந்த நோயால் இறந்த ஆன்மா நம் உடலுக்குள் வந்து… அதே நோயை இங்கே வளர்க்கத் தொடங்கி விடுகின்றது.

பின் நாமும் மடிகின்றோம்.

இறந்த பின் நம் மீது பற்றுள்ள உடலில்… இதே உணர்வுகள் கலந்து அந்த உடலுக்குள் சென்று நாம் இப்படித் தேய்பிறையாகச் செல்ல வேண்டி வருகின்றது.

இதை மாற்றி அமைப்பதற்குத் தான் விநாயகர் தத்துவத்தை நமக்கு ஞானிகள் கொடுத்தார்கள்.

திரும்பத் திரும்ப யாம் (ஞானகுரு) சொல்கிறோம் என்று நினைக்காதீர்கள்
1.ஒவ்வொரு கோணத்திலும் “ஒரு உணர்வின் தன்மை அது எப்படி இயக்குகின்றது…?” என்பதை நீங்கள் அறிந்தாக வேண்டும்.
2.பல முறை நீங்கள் கேட்டறிந்துள்ளீர்கள்… ஆனால் உங்களால் திருப்பிச் சொல்ல முடிகிறதா… என்றால் இல்லை.
3.அதன் வழி நடக்க முடிகின்றதா…? என்றால் இல்லை.
4.ஒருவன் கோபித்து விட்டான்… வேதனைப்படுகின்றான் என்றால் அதில் தான் லயித்து விடுகின்றோம்.
5.மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்துத் துடைக்கத் தெரியவில்லை.

அதற்காகத் தான் மீண்டும் மீண்டும் உங்களுக்கு ஞாபகப்படுத்துகின்றோம்

உங்களுக்குள் தெளிவான நிலைகளை உருவாக்க வேண்டும் நீங்கள் எம்முடைய அருள் உரையைக் கேட்கக் கேட்க…
1.நீங்கள் சுவாசிப்பது சாம.
2.இந்த உயர்ந்த ஞானத்தை உங்களுக்குள் பதிவு செய்யப்படும் பொழுது அதர்வண… உங்கள் கஷ்டங்களை நீக்கும்.
3.கஷ்டங்கள் நீக்கும் அந்த உணர்வின் வித்தாக உருப்பெற்றால் யஜுர்…
4.மீண்டும் சாம… அதை எண்ணத்தால் எண்ணும்போது உங்கள் துன்பத்தையும் கஷ்டத்தையும் அடக்கி… உயிர் நல்லதாக மாற்றுகின்றது.

July 22, 2022

சாம வேதத்தின் மூலங்களை குருநாதர் எனக்குக் கற்றுக் கொடுத்தவிதம்

காட்டுக்குள் புலி செத்துக் கிடக்கிறது. அந்த உடலிலிருந்து வெளிப்படும் “அழுகிய உணர்வுகள்...” மணங்களாக வருவதைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து கொள்கிறது.

அப்படிக் கவர்ந்து கொண்ட பின் அதனுடைய சக்தி வலிமையாக இருக்கின்றது. அதே சமயத்தில் இயற்கையிலேயே விஷத்தின் தன்மை கொண்ட ஒரு செடியின் சத்தைச் சூரியனின் காந்த சக்தி நுகர்ந்து
1.அது அலைகளாக வரப்படும் பொழுது
2.இந்தப் புலியின் உணர்வின் தன்மையை நகர்த்திச் (துரத்தி) செல்கின்றது.

நகர்த்தி வேகமாகச் செல்லப்படும் பொழுது அடுத்துப் பல செடிகளின் உணர்வுகளுடன் மோதி இது கலவையாகி ஒரு சுழற்சி என்ற நிலையை அடைகின்றது.

இப்படி மூன்றும் ஒன்றாகிக் கருத்தன்மை அடைகின்றது. எடை கூடி பூமியின் ஈர்ப்பில் சிக்கி மண்ணிலே பதிகின்றது.

உதாரணமாக… வேப்பமரத்தினுடைய சத்தும் ரோஜாப்பூவினுடைய சத்தும் விஷச் செடியினுடைய சத்தும் சேர்ந்து புது விதச் செடியாகக் கருவேப்பிலையாக மாறியது போன்று…
1.இரத்தத்தை உறிஞ்சி வாழும் புலி (இறந்தது) உடலிலிருந்து வந்த உணர்வுகள்
2.மற்ற விஷச் செடியின் மணத்துடனும்… விஷமற்ற செடியின் மணத்துடனும் இணைந்து
3.புது விதத் தாவர இனமாக மாறுகின்றது

அந்த வித்து முளைத்துக் கொடியாகவோ செடியாகவோ வளர்ந்த பின் இரத்தம் கொண்ட மனிதனோ யானையோ புலியோ குருவியோ அந்த இடத்திலே சென்றால் அதை அப்படியே இழுத்துக் கவர்ந்து இரத்தத்தை உறிஞ்சிவிடும்… மடிய வேண்டியது தான்.

அஸ்ஸாம் காடுகளில் இது நிறைய உண்டு. இது எல்லாம் எப்படி இருக்கிறது...? என்ற நிலையைக் குருநாதர் காட்டினார்.

இங்கே நாம் வாழும் பகுதியில் அனேகமாக இல்லை. வைத்தியத்திற்காகப் பறித்து விடுவார்கள்.
1.கேன்சர் நோய் வந்த இடத்தில் இந்தச் செடியின் சத்தை மேலே தடவினால்
2.விஷத்தின் தன்மையை இது உறிஞ்சிடும் சக்தி பெற்றது.

இதைப் போன்ற செடிகள் விளைவது மிகவும் கடினம்.

அக்காலத்தில் இதை “ராஜ வைத்தியம்...” என்று சொல்வார்கள். அரசர்களுக்கு இதைப் பயன்படுத்திப் பயன்படுத்தி இந்த வித்தை மீண்டும் வளர்க்காது மறைந்தே போய்விட்டது.

குருநாதர் இத்தகைய செடிகள் எல்லாம் எப்படி உருவாகின்றது...? உருவானது…? என்பதைத் தெரிந்து கொள்வதற்காக காடுகளிலும் மேடுகளிலும் எம்மை (ஞானகுரு) அலையச் செய்தார்.

எனக்கு அங்கே சாப்பாடு இரண்டு பேரிச்சம்பழம்... இரண்டு பச்சிலை அவ்வளவுதான்…! அதைச் சாப்பிட்டு விட்டுத் தண்ணீரைக் குடித்துவிட்டு… குருநாதர் சொன்ன வழியில் போய்க் கொண்டே இருக்க வேண்டும்.

இப்படித்தான் இயற்கையின் நிலைகளைப் பார்க்கும்படி செய்தார்.
1.ஒவ்வொரு நொடிக்கு நொடியும் இந்த காற்று மண்டலம் எப்படி மாறுகின்றது…?
2.எதன் வழி அது இயங்குகின்றது…?
3.செடி கொடிகளின் உணர்வுகள் எப்படி மாறுகின்றது…? என்று அந்த நிலையைப் பார்த்துக் கொண்டே நான் செல்ல வேண்டும்.

ஒரு இடத்தில் சுழிக்க்காற்று வருகிறது என்றால் அங்கு ஓடிச் சென்று நான் பார்க்க வேண்டும். எங்கே நிலை பெறுகிறதோ அங்கே பூமியிலே படரும் இடத்திற்குச் சென்று மணத்தால் அதை நுகரும்படி செய்வார்.
1.மணத்தால் நுகர்ந்து என்னென்ன செடிகள் வந்தது…? எல்லாம் கலந்து எப்படி ஆகிறது…?
2.புதுவிதமான செடிகளாக எப்படி உருவாகிறது…? என்று காடுகளிலும் மலைப் பகுதிகளிலும் பார்க்கும்படி செய்தார்.

இதைத்தான் ஆயுர்வேதம் என்று சொல்வார்கள். தாவர இனங்களின் உணர்வுகள் உணர்ச்சியாக இயக்குவதைச் “சாம வேதம்...” என்றும் சொல்வார்கள் .

இயற்கையின் உண்மை… அந்த உணர்ச்சியின் தன்மை எப்படி உருவானது…? ஒரு செடியின் வாசனை அது எப்படி இயக்குகின்றது…? இந்த உணர்ச்சியின் தன்மை எப்படி இயக்குகின்றது…?

ஒரு உணர்வுக்குள் ஒரு உணர்வைச் சேர்த்து ஒரு உணர்வுக்குள் மருந்தாகக் கொடுக்கப்படும் பொழுது இசைக்கொப்ப இந்த உணர்வுகள் இசையை மாற்றி எவ்வாறு செய்கிறது...? என்று வேதங்களின் மூலங்களில் இது கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த உண்மைகளை நீங்களும் உணர வேண்டும்… உங்களுக்குள் இயக்கும் உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் அறிய வேண்டும் என்பதற்கே இதைச் சொல்கிறேன்.

November 26, 2019

தனுர் வேதம் என்றால் என்ன...? அது ஏதோ பெரிய வேதம் என்று நினைக்கின்றோம்...!


வேதியர்களுக்குத் தான் இந்த சக்தி உண்டு அவர்களுக்குத் தான் இது தெரியும் என்பார்கள். காரணம் அவர்கள் எல்லாம் பிரம்மாவின் வம்சத்தில் வந்தவர்களாம்...! அவர்கள் பிரம்மத்தை உருவாக்கக் கூடியவர்கள் என்பார்கள்.

தனுர் வேதம் என்றால் எதையுமே அடக்கி ஆட்சிபுரியக் கூடிய நிலைகள். மனித உடலில் பல உணர்வுகளைப் பாய்ச்சி இயக்குவது. நல்லது கெட்டது எல்லாம் இருக்கின்றது என்று உடலுக்குள் பாய்ச்சுவார்கள்.

ரிக்கியர்கள் என்றால் அந்த உடலின் அமைப்பைத் தெரிந்து கொண்டவர்கள். அந்தக் காலத்தில் எல்லாம் மந்திரங்ளைச் சொல்லி இசைகளை வாசிப்பார்கள். காது கொடுத்துக் கேட்பார்கள்...!

1.இந்த உடலின் தன்மை கொண்டு எது எது வேண்டும்..? என்கின்ற வகையில்
2.அசுர குணங்கள் கொண்ட மிருகங்களைச் சமைத்து இந்த உணவை இங்கு கொடுப்பார்கள்
3.சோமபானம் என்ற நிலைகளில் மதுவைக் கொடுத்து மயக்கச் செய்வார்கள்.
4.மந்திரத்தைச் சொல்வார்கள்... இந்த மந்திரத்தை சொன்னவுடனே இசை வாத்தியங்களை இசைப்பார்கள்
5.ஒவ்வொரு நிலைகளுக்கும் அதைச் சொல்லி புஷ்பங்களையும் மற்றதையும் போடுவார்கள்.
6.அப்பொழுதெல்லாம் இந்த இசையை வாசித்து இந்த உணர்வின் தன்மை தனக்குள் அதைப் பதியச் செய்வார்கள்.

இதையெல்லாம் கேட்டுக் கொண்ட பிறகு மதுவை நிறையக் கொடுப்பார்கள். நீங்கள் யாரும் இந்தத் தப்பைச் செய்து விடாதீர்கள். சில இதுகளை தெரிந்து கொள்வதற்காகச் சொல்ல வேண்டியிருக்கின்றது,
1.மந்திரத்தைக் கற்றுக் கொள்கின்றேன் என்று
2.தப்பான வழிக்கு நீங்கள் சென்று விடாதீர்கள்…!

அந்த மாதிரி இசைகளை வாசித்துத் தர்ப்பைப் புல்லை வைத்து இதை உள்ளே வைத்து எல்லாம் முடிந்து கடைசியில் நினைவு இல்லாமல் போனவுடனே அவனைக் கட்டிச் சில மந்திரங்களைச் சொல்லித் தீயில் போட்டு எரிக்கின்றார்கள்.

முதலிலே அந்த மந்திரத்தைச் சொன்னார்கள் அல்லவா…! அதைத் திருப்பி சொன்னவுடனே இந்த உடலிலிருந்து ஆவியாகப் போகும்போது ந்த உணர்வை எடுத்து கொள்வார்கள்.

அதற்கென்ற பக்குவ நிலை பெற்று ஏவல் என்ற நிலைக்குக் கொண்டு வருவார்கள். இப்படிச் செய்வதுதான் தனுர் வேதம் என்பது.

ஒரு மனிதனை வீழ்த்த வேண்டும் என்றால் இந்த உணர்வின் சொல்லாகச் சொன்னவுடனே உடலுக்குள் ஊடுருவிப் பாய்ந்து அவன் நல்ல குணங்களை வீழ்த்தி விடும்.

1.இது எல்லாம் இந்த தனுர் வேதத்தைச் சேர்ந்தது
2.தனுர் வேதம் என்றால் என்னவென்றே தெரியாமல் சில பேர் இருக்கின்றார்கள்
3.அது ஏதோ பெரிய வேதம் போல்…! என்று எண்ணுகின்றார்கள்.

ஆக அதர்வண வேதத்தின்படி ஒரு மனிதனை அடக்கி அவனை வீழ்த்தும் நிலைகள் இது. ஏனென்றால் வேதம் கற்றுக் கொண்டவனுக்கு இது தெரியாது.

இதுவெல்லாம் அதர்வண வேதத்தில் வரும். இப்பொழுது கோவிலில் நடக்கின்றது எல்லாம் அதர்வண வேதம் தான்.

நாம் நினைக்கின்றோம் கோவிலில் யாகத்தைச் செய்து பாவத்தைப் போக்கிவிடுவோம் என்று…! யாகம் செய்பவருக்கு மாலை துண்டு எல்லாம் போட்டு தேங்காய் பழம் எல்லாம் வைத்து புதுத் துணி எல்லாம் கொடுத்து விடுவார்கள்.

மந்திரங்களைச் சொல்வார்… அதைச் சொல்லும் பொழுது உற்றுக் கேட்டுக் கொண்டே இருப்போம். யாகத்தில் வாசனைப் பொருள் எல்லாம் போடுவார்கள். மந்திரத்தைக் காதில் கேட்டுகொண்டே இருப்போம். இதற்குப் பெயர் வசியம் என்று பொருள்.

1.சாமிக்குச் சக்தி ஏற்றுகின்றார்கள்… என்று நாம் நினைப்போம்.
2.ஆனால் நம்மை வசியப்படுத்துகின்றார்கள்…! என்று நமக்குத் தெரிவதில்லை.

நேற்றுவரை கல்லாக இருந்தது. இந்த உணர்வின் தன்மை பெற்றபிறகு சட்டங்களை வகுத்த பிறகு இந்தத் தெய்வத்திற்கு நீ இந்த மாதிரிச் செய்தாய் என்றால்
1.உனக்கு இன்னென்ன சக்திகள் கிடைக்கும்
2.உன் கஷ்டமெல்லாம் போய்விடும்..
3.உன் பாவம் எல்லாம் போய்விடும்
4,அபிஷேகங்களைச் செய் ஆராதனையைச் செய்…! என்பார்கள்.

இப்பொழுது தீயை உண்டாக்கி மனிதனை அதற்குள் போட்டால் அரஸ்ட் செய்துவிடுவார்கள். ஆனால் அன்று அரச காலங்களில் இதையெல்லாம் செய்வார்கள். நீங்கள் பார்க்கலாம்…. மகாலிங்கத்தில் கூட 12 வருடத்திற்கு ஒரு தடவை சிலதுகளைச் செய்கின்றார்கள்.

குழந்தைகளை ஊர்வலமாகத் தூக்கி வந்து அதைப் பலியிட்டு இதைப் போல் சக்தி ஏற்றுவார்கள்மாடசாமி முனிசாமி என்ற காவல் தெய்வங்களுக்கெல்லாம். இதையெல்லாம் எடுத்துக் கொண்டோம் என்றால் பெயரை மாற்றிக் கொண்டு கண்டுபிடிக்க முடியாத நிலைகளில் இருக்கின்றார்கள்.

கோயில்களில் எந்த வாத்தியங்களை வாசிக்கின்றார்களோ அந்தந்த நேரத்தில் எதைச் செய்தார்களோ… எதை வாசித்தானோ அந்த நிலைகளை இழுத்து
1.அந்த உணர்ச்சிகள் நம்மைத் தூண்டினால்
2.நாம் அருளாட ஆரம்பித்துவிடுவோம்.

காளி மாரி மாடசாமி முனிசாமி.. என்று கொடூர தெய்வங்களுக்கு டும்…டும்ம்ம்ம்ம்ம்…! என்று இசைகளை உண்டாக்கி மாமிசத்தை கொடுத்துப் படைப்பார்கள்.

ஆடை வெட்டும்போது டும்…டும்… என்றால் நம்மை அறியாமல் அருளாட ஆரம்பித்துவிடுவோம்.
1.அந்தக் காலத்தில் வெள்ளைக்காரர்களுக்கு ஒன்றுமே தெரியாது.
2.டும்டும்ம்…டும்ம்ம்..! என்றவுடன் கிடுகிடுவென்று ஆட ஆரம்பித்து விடுவார்கள்
3.ஏனென்றால் இந்த இசை மனித உடலுக்குள் போனபின் அதே உணர்ச்சிகள் ஆனபின்
4.எதனால் உருவாக்கினானோதே உணர்வுகள் இங்கு ஆட்டிப் படைக்கின்றது.

ஏனென்றால் குருநாதர் இதையெல்லாம் கண்கூடாகப் பார்க்கச் செய்தார். நாம் திலே எல்லாம் சிக்கியிருக்கின்றோம் நம் நிலையை மறந்து இருக்கின்றோம்…!

கோவிலில் அடுத்ததாக என்ன செய்வார்கள்…?

மேலே கலசத்தை வைக்கும் பொழுது பார்க்க வேண்டும். பறந்து போய் அந்தச் சக்தியைப் பெறப் போகின்றோம் என்று தன்னை அறியாமல் ஆணா பெண்ணா…! என்று கூடப் பார்க்காமல் மோதிக் கொண்டு தான் ஆசிர்வாதம் வாங்கச் செல்வோம்.

1.தே மாதிரிலசத்தை எடுத்துக் கொண்டு போகும்போது பார்க்க வேண்டுமே…!
2.அந்த ஆவேசத்தை வசியம் செய்து விடுவார்கள்
3.இதைத்தான் நாம் பெறுவதற்கு போகின்றோம்.

யாகத் தீயைத் தூக்கிக் கொண்டு போகின்றோம் என்று தலையில் இரண்டு பூவைப் போடுவார்கள். நிற்க வைத்துப் பூக்களை யாகத் தீயில் போடுவார்கள். இன்று சாங்கியமாக இப்படிச் செய்கின்றார்கள். இது சாங்கிய சாஸ்திரம்.

அப்புறம் என்ன செய்வார்கள்…?

முன்னால் அந்த பலி பீடம் இருக்கின்றது. வந்து நின்று நூலைக் கட்டிச் சாமிக்குச் சக்தி ஏற்றுகின்றார்கள். இதை கற்றுக் கொள்வதற்காக மடாதிபதிகள் இருக்கின்றார்கள் நிறையப் பேர்.

வேதங்களைக் கற்றுக் கொண்டு யாகம் எப்படி வளர்க்கின்றது பாவங்கள் எப்படிச் செய்வது…? என்று இப்படியெல்லாம் சொல்லிக் கொடுக்கின்றார்கள்.

 ரச காலங்களில் ப்படி எல்லாம் தவறுகள் செய்து யாரோ செய்வார் எவரோ செய்வார்..! என்று நம்மைச் சூனியமாக்கி வைத்திருக்கின்றார்கள்.

நீ வேறு ஒன்றும் செய்யவேண்டியதில்லை
1.யாகத்தைச் செய்தால் பாவங்கள் போய்விடும்
2.ர்ச்சனை செய்தால் பாவம் போய்விடும்
3.இதையெல்லாம் நீ செய் என்ற நிலையில்
4.உண்மையின் இயக்கத்தின் நிலையை நாம் எடுக்க முடியாமல் தடைப்படுத்திவிட்டார்கள்.
5..உண்மைகள் மறந்தே போய்விட்டதுமறந்துவிட்டோம் பொய்யைத்  தெய்வம் என்று எண்ணிவிட்டோம்.

னால் யாகங்கள் வேள்விகள் எல்லாம் செய்த பிற்பாடு பார்த்தால் கோவிலில் கூட்டம் நிறையப் போகும். அந்தப் பக்தியில் நாம் போவோம்.

தான் எண்ணியது நடக்கவில்லை என்றால் என்னை இப்படிச் சோதிக்கின்றாயே…! என்று வேதனைப்பட்டுச் சொல்வார்கள். கஷ்டத்தைத் தாங்க முடியவில்லை என்னை நீ உன்னிடம் கூட்டிக் கொண்டு போ…! என்றெல்லாம் சிலர் சொல்லுவார்கள்.

துன்பம் தாங்கமுடியாமல் இவ்வாறு சொல்வார்கள்.

செத்த பிற்பாடு என்ன இதே பக்தியில் போவார்கள். அந்த உணர்வின் வேகத்தில் இந்த ஆன்மா அங்கே போய்ச் சேர்ந்து பின் ஆட ஆரம்பித்துவிடும். ஆவியின் தன்மை தான் நமக்குள் வரும்.

1.இதைத்தான் நாம் இயக்கிக் கொண்டு இருக்கின்றோமே தவிர
2.மனிதனைத் தெய்வமாக்கும் ஆலயங்களை நாம் மதித்து நடக்க தெரியாத நிலையில் வைத்து விட்டார்கள்…!