ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 3, 2018

எந்தச் சந்தர்ப்பத்திலும் “இப்படி… ஆகிவிட்டதே…!” என்று வேதனைப்படுவதைக் காட்டிலும் “வேதனைகளை நீக்கிய அருள் ஞானிகளின் உணர்வுகளை” எண்ணி ஏங்கி எடுக்கப் பழக வேண்டும்

இயேசு அவர் வாழ்ந்த காலத்தில் தாய் கருவிலே பெற்ற உண்மையின் உணர்வுகள் கொண்டு மக்களுக்குப் பல நன்மைகள் செய்தார்.

மக்கள் அதனால் நல்லதாகி மகிழ்ச்சி அடைந்தாலும் மக்கள் எடுத்துக் கொண்ட வேதனையின் உணர்வுகளை அவர் கவர நேர்ந்தது.

அவர் மக்களுக்கு நல்லதாக வேண்டும் என்று எண்ணும் பொழுது மற்றவர்களுக்கு நல்லதானது.

1.ஆனால் அவர் உடலில் தீமையின் விளைவே வந்தது.
2.துன்புறுத்தும் உணர்வே வந்தது.

மக்களுக்குப் பல நன்மைகளை அவர் செய்தாலும் அன்று ஆண்ட யூத சட்டத்திற்கு விரோதமானது என்று அவரைச் சிலுவையில் அறைந்தார்கள். என் தந்தையே… “என்னைக் கைவிட்டுவிட்டாயே…!” என்று அவர் வேதனைப்பட்டார்.

அதே சமயத்தில் அங்கே ஒரு கொள்ளைக்காரனையும் தண்டனைக்காகச் சிலுவையில் அறைந்திருந்தார்கள். இவரைப் பார்க்கும் பொழுது “அவனுக்கு அந்த வேதனை தெரியவில்லை…!”

ஏனென்றால் மக்களுக்கு நன்மை செய்தார்…! அவருக்கு இந்தத் தண்டனையா…? என்று அவரை அவன் எண்ணும் பொழுது
1.அவர் செய்த நன்மையின் உணர்வுகள் அவனுக்குள் வந்து
2.தன் வேதனையை மாற்றியது.
3.திருடன் அவன் தீயதை மறந்து நல்லதை எடுத்தான்.
4.அவனுக்கு வேதனை தெரியவில்லை.

இதே போலத்தான் நமது வாழ்க்கையில் இன்று உலகில் எத்தகைய தீமைகள் நிகழ்ந்தாலும் அவைகளை அழுத்தமாகத் திரும்பத் திரும்ப எண்ணிப் பார்க்க வேண்டியதில்லை.

1.தீமைகள் பல வந்தாலும்…
2.தீமைகளை எண்ணிக் கொண்டிருந்தால்…
3.தீமைகளைத் தடுக்க முடியாது…!
4.தீமைகளை அகற்றும் சிந்தனை வர வேண்டும்.
5.தீமைகளை அகற்றிய சக்திகளை நாம் எண்ணி ஏங்கி எடுத்துப் பழக வேண்டும்.

நமக்குள் அத்தகையை தீமையான உணர்வின் தன்மை இயங்காது தடுக்க நஞ்சினை வென்ற அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து நம் உடலில் உள்ள அணுக்களுக்குப் பாய்ச்சித் தீமைகள் நமக்குள் வராதபடி தடுத்து நிறுத்த முடியும்.

அதை நாம் நுகர்ந்தால் அந்தக் கணக்கு கூடினால் இந்த உடலுக்குப் பின் நாம் பிறவியில்லா நிலை என்னும் நிலையை அடைகின்றோம்.

“சீதா ராமா… ஹரே ராம்… ஹரே ராம்…! என்று காந்திஜி வெளிப்படுத்தினார். “ஹரி” என்றால் சூரியன். அது நுகர்ந்து கொண்ட உணர்வின் இயக்கமே நமக்குள் எண்ணங்களாக வருகின்றது என்று உணர்ந்தவர் காந்திஜி.

பகைமைகளை நீக்கி சகோதரத்துவத்துடன் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்று அவர் வெளிப்படுத்திய அவர் உடலுக்குள் விளைந்த உணர்வுகள் இன்றும் காற்றிலே உண்டு.
1.மகான்கள் இட்ட நல்ல உணர்வுகள் இங்கே இருக்கப்படும் பொழுது
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் பெற்றோம் என்றால்
3.அந்த மகான்களின் உணர்வுகள் நமக்குள் அறிவை ஊட்டி

4.இருளை அகற்றும் அந்த அருள் ஞானத்தை நாம் பெறமுடியும்.