ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

Showing posts with label சாமி கும்பிட வேண்டிய முறை. Show all posts
Showing posts with label சாமி கும்பிட வேண்டிய முறை. Show all posts

April 2, 2026

நாம் தெய்வமாக ஆவதற்குத்தான் ஆலயங்களை அமைத்தார்கள் ஞானிகள்

நாம் தெய்வமாக ஆவதற்குத்தான் ஆலயங்களை அமைத்தார்கள் ஞானிகள்


முன் சேர்த்துக் கொண்ட வினைக்கு நாயகனாக இந்த மனித உடல் பெறும் பொழுது
1.நாம் எதை எண்ணுகின்றோமோ அதை ஜீவனாக்கும் திறன் பெற்றது.
2.ஒவ்வொரு பொருளையும் தெரிந்துணர்ந்து செயல்படும் திறன் பெற்றது.
3.அதனால் தான் சரணபவா குகா கந்தா கடம்பா கார்த்திகேயா என்று சொல்வது.
 
மனிதனின் ஆறாவது அறிவு ணபவா…! நாம் சாப்பிடும் ஆகாரத்தில் கலந்துள்ள நஞ்சை மலமாக மாற்றிவிட்டு ஆறாவது அறிவாக நம் உடலில் அந்த மம் வருகின்றது.
 
இந்த ஆறாவது அறிவின்ம் கொண்டு சரணபவா குகா கந்தா பல பொருள்களை எண்ணினாலும் கடம்பா அதை உருவாக்கி கார்த்திகேயா என்று சொல்லும் பொழுது தெரிந்துணர்ந்து செயல்படும் திறன் பெற்றவன்.
 
ருள் ஞானிகள் உணர்வை எண்ணி அதை நமக்குள் ஜீவன் செய்யப்படும் பொழுது ஓ… அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நமக்குள் ஜீவனாக்கி அதை ம்… என்று நம் உடலாக ஆக்கும்போது அது ஓம் நமச்சிவாய…!
1.எல்லாவற்றையும் அடக்கிய அந்த அருள் ஞானியின் உணர்வுகளை நமக்குள் ங்களுக்கு அதிபதியாக்கி
2.நமக்குள் சிறுமை ஊட்டும் உணர்வின் தன்மையை அடிமைப்படுத்தி மெய் ஞானிகள் உணர்வை நமக்குள் அதிபதியாக்கி
3.இந்த வாழ்க்கையில் தீமை அகற்றிடும் உணர்வாக விளைய வேண்டும் என்பதற்குத்தான் இதைச் சொன்னார்கள் ஞானிகள்.
 
குடும்பத்தில் அறியாது சலசலப்பு சஞ்சலமும் வெறுப்பு வேதனைகள் வந்தாலும் இதை அகற்றிட ஆலயத்தை அருள் ஞானிகள் காட்டினார்கள். அங்கே விண்ணை நோக்கி ஏங்கிவிட்டுக் கோவிலுக்குள் சென்ற பின் தீப ஆராதனை காட்டப்படும் பொழுது பொருள்கள் தெரிகின்றது.
 
பொருளறிந்து செயல்படும் இச்சக்தி நாங்கள் பெற வேண்டும் இந்தத் தெய்வ குணத்தைப் பெற வேண்டும். இந்த உண்மையை உணர்த்திய அருள் மகரிஷிகளின் உணர்வை நாங்கள் பெற வேண்டும் மலரின் மம் பெற வேண்டும். இவை அனைத்தும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்னைப் பார்ப்போருக்கு அந்த நறுங்கள் கிடைக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.
 
அங்கே வைத்திருக்கும் கனியைப் பார்க்கும் பொழுது கனியைப் போன்ற சுவையான சொல்லும் செயலும் நாங்கள் பெற வேண்டும் என் சொல்லைக் கேட்போர் வாழ்விலே இனிமை பெற வேண்டும் என்று நாம்ண்ண வேண்டும்.
 
1.ஆலயத்திற்கு வருவோர் அனைவரும் இந்தத் தெய்வ குணம் பெற வேண்டும்
2.அவர் குடும்பம் நலம் பெற வேண்டும் அந்தக் குடும்பங்கள் அனைத்தும் மகிழ்ச்சி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.
 
தொழில் நடத்தினால் எங்கள் வாடிக்கையாளர்கள் அனைவருமே அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும். தெய்வ குணங்களைப் பெற வேண்டும் வாடிக்கையாளர் குடும்பங்களில் எல்லா நலங்களும் பெற வேண்டும். எங்கள் பார்வை எல்லோரையும் நலமாக்க வேண்டும். என்னைப் பார்ப்போருக்கு நல்ல எண்ணங்கள் வர வேண்டும் என்று நாம் எண்ண வேண்டும்.
 
இப்படி எண்ணி நம் உயிரான ஈசனால் கட்டப்பட்ட இந்த ஆலயத்தை இந்த ஆலயத்தில் இருக்கும் நல்ல குணங்களைத் தெய்வமாக மதித்து நடக்கும்படி தான் அன்று ஆலயங்களை அமைத்தார்கள் ஞானிகள்.
 
ம்மையறியாது நமக்குள் வரும் வேதனை சலிப்பு சஞ்சலம் சங்கடம் வெறுப்பு கோபம் குரோதம் என்ற தீமையான உணர்வுகள் அழுக்காக உடலுக்குள் சென்று நல்ல குணங்களை மாசுபடச் செய்யும் நிலையில் இருந்து நம்மைத் தூய்மைப்படுத்த விநாயகர் தத்துவத்தைக் காட்டினார்கள்.
 
நற்குணங்களின் தன்மையை நறுமணத்தின் உணர்வைத் தனக்குள் எடுத்து நம்மைப் பிறர் பார்க்கும் பொழுது இந்த நறுமணங்கள் அங்கே வர வேண்டும். என் சொல்லைக் கேட்கும் பொழுது அவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்பட வேண்டும் என்ற இந்த எண்ணங்களைத் தோற்றுவிக்கும் இடம் தான் ஆலயம்.
 
அபிஷேகம் ஆராதனைகளை இன்று செய்கிறோம். செய்துவிட்டு நமக்குள் கொதிப்பையும் வேதனையையும் தான் எண்ணுகிறோம்.
 
நல்லதைச் செய்தேன் ஆனால் தீமையே செய்கின்றான்…! என் குழந்தை நன்றாக வர வேண்டும் என்று விரும்பி உன்னைத்தான் வணங்கினேன். ஆனால் அவன் தவறு செய்கின்றானே எதிர்த்து பேசுகின்றானே…! என்று வேதனைப்பட்டு
1.அந்தத் தெய்வம் தான் செய்யும் என்று நாம் நம்புகின்றோம்.
2.ஆனால் அந்தத் தெய்வ குணத்தை நமக்குள் எடுத்தால் அந்த எண்ணம்
3.நம் செயலின் தன்மை அந்தத் தெய்வத்தின் தன்மையாகச் சொல்லால் இயக்கும்.
4.நாம் எண்ணி தெய்வ குத்தின் உணர்வுகள் நமக்குள் அந்தச் சக்தியாக மலரும்.
5.நாம் அந்தத் தெய்வமாக ஆவதற்குத் தான் ஆலயங்களை அமைத்தார்களே தவிர
6.அந்தத் தெய்வம் செய்யும் என்று யாரும் சொல்லவில்லை.
 
ஆனால் தெய்வம் செய்யும் என்ற நம்பிக்கையில் தான் செல்கின்றோமே தவிர
1.அந்தத் தெய்வ குணத்தை நமக்குள் எடுத்தால்
2.அந்தத் தெய்வ சக்தி நமக்குள் இருந்து நம் சொல்லையும் செயலையும் அது இயக்கும் என்ற நிலை காலத்தால் மறைந்து விட்டது.
 
நம்மை நாம் அறியாமலே நமக்கு நாமே நல்ல குணங்களுக்கு அடிக்கடி தீங்கு விளைவிக்கின்றோம்.
 
மனிதனை உருவாக்கிய அனைத்தையும் அறிந்திடும் சக்தியாக இயக்கிக் கொண்டிருக்கும் உயிரான ஈசனுக்கு வேதனையும் சோர்வையும் எண்ணி எண்ணி
1.அந்த ஈசனுக்குச் சரியான நிலைகள் பணிவில்லாதபடி அவனுக்குண்டான சேவைகள் செய்யாதபடி
2.நம்மை ஆண்டு கொண்டிருக்கும் அந்த ஈசனுக்கு அடிக்கடி வேதனை சலிப்பு சஞ்சலம் சங்கடம் கோபம் என்ற
3.தீமையின் உணர்வின் சக்தியைத் தான் செலுத்திக் கொண்டிருக்கின்றோம்.
 
ஈசனை வணங்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?
 
ஞானிகள் காட்டிய விநாயகத் தத்துவப் பிரகாரம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று இதை வினைக்கு நாயகனாக இந்த உடலுக்குள் ஆக்கிட வேண்டும்.
 
அதைக் கணங்களுக்கு அதிபதியாக்கி நமக்குள் தீமை விளைய வைக்கும் அந்த உணர்வினை அடக்கி ஞானிகள் உணர்வின் தன்மையை ஒளியின் சுடராக…” நாம் உருவாக்க வேண்டும்.
 
வைரம் எப்படி நஞ்சினை ஒடுக்கி ஒளியின் சுடராமாற்றுகின்றதோ இதைப் போன்று
1.வாழ்க்கையில் வரும் தீமைகளை நஞ்சினை மகரிஷிகள் சக்தி கொண்டு ஒடுக்கினால்
2.நமக்குள் அறிந்திடும் ஆற்றலும் உணர்வுகள் ஒளியாக மாறும் நிலையும் வருகின்றது.
 
இதைத்தான் ஞானிகள் நமக்கு ஆலயத்தில் தெளிவாக வழிகாட்டி உள்ளார்கள்.

November 7, 2025

தூப ஸ்தூபி

தூப ஸ்தூபி

 
மாரியம்மன் கோயிலைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் திரும்பும் பக்கமெல்லாம் ஊருக்குள் வைத்திருப்பார்கள்.
 
நாம் நல்லதைத்தான் ஒவ்வொரு நிலையிலும் நினைக்கின்றோம். ஆனால் நம்மை அறியாமலே வேதனைகள் புகுந்து விடுகின்றது. அந்த விஷமான உணர்வுகள் வந்து நோயாகி விடுகின்றது.
 
அதை நீக்குவதற்காக வேண்டி… மெய் ஞானிகள் அருள் ஒளியைப் பெற வேண்டும் என்று மாரியம்மனைப் பார்த்து அதை எடுக்கும்படி சொல்கின்றார்கள். அதாவது…
1.பேரண்டத்தின் பேருண்மையைக் காட்டிய
2.தீயதைச் சுட்டெரித்து ஒளியின் சுடராகச் சுழன்று கொண்டிருக்கும்
3.அந்தச் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் நாம் பெற வேண்டும் என்று நினைவுபடுத்தினார்கள்.
 
நமக்கு யாரும் இதைச் சொல்லிக் கொடுக்கவில்லை. ஆனால் இப்பொழுது யாம் சொன்னாலும் கேட்பதற்கு ஆள் இல்லை
 
மாரியம்மனுக்கு ஆட்டைக் கொடுத்து கோழியைக் கொடுத்து கருவாட்டுக் கறியை வைத்து வணங்குபவர் உண்டு. எந்தெந்த அசிங்கமான பொருளைச் சாப்பிடக் கூடாதோ ஒரு சில இடங்களில் தையும் செய்கின்றார்கள்
 
கெட்டுப் போன பொருளை உபயோகப்படுத்தினால் என்ன செய்யும்…?
 
அது நம்மைக் கருவாடாக வாட்டிவிடும் கெட்ட நாற்றங்களை நமக்குள் உருவாக்குகின்றது. கெட்ட பேச்சுகளைப் பேச வைக்கிறது கெட்ட உணர்வுகளை நமக்குள் தூண்டுகின்றது. நம்மை அறியாமலே அந்த தீமைகள் நம் நல்லவைகளை அழித்து விடுகின்றது.
 
அதைச் சுட்டுப் பொசுக்க… மெய் ஞானிகள் அருள் சக்தியைப் பெற வேண்டும் என்று
1.அங்கே தூப ஸ்தூபியை வைத்துக் கவட்டையை வைத்து அக்கினிச் சட்டியைக் காண்பித்து
2.திறந்த வெளியிலே விண்ணை நோக்கி ஏங்கி அந்த அருள் சக்தியைப் பெற வேண்டும் என்று காட்டுகின்றார்கள்.
 
யாராவது அப்படிச் செய்கின்றார்களா…?
 
காரணம் அந்த நல்ல வினையை நாம் சேர்க்க வேண்டும். அதாவது தனக்குள் வரும் தீமையான வினைகளைச் சுட்டுப் பொசுக்கும் அந்த நல்ல வினைகளை நமக்குள் சேர்ப்பிக்க வேண்டும் என்று காட்டுகின்றார்கள்.
 
இனி எதிர்காலத்திற்காக வேண்டி இதை நீங்கள் செயல்படுத்துங்கள். ஆலயம் என்பது நம்மைப் பண்படுத்தும் இடம் அது.
 
அங்கே அர்ச்சனை செய்து நல்ல பலகாரங்களை வைத்து யாகத் தீயில் பல பொருள்களைப் போட்டு புகையைப் போட்டு வாழ்க்கையில் வரும் துன்பங்களையும் குறைகளையும் சொல்வதற்குண்டான இடம் அது அல்ல.
 
1.நமது உயிர் ஒரு நெருப்பு நமது உடல் ஒரு குண்டம்.
2.இந்தக் குண்டத்திற்குள்… மெய்ப் பொருளைத் தனக்குள் போட்டு
3.அதன் வழி இந்த உடலுக்குள் வரக்கூடிய மத்தைப் பார்வையாலும் சொல்லாலும் செயலாலும்
4.உலகம் முழுவதற்கும் தன் உணர்வின் சக்தி கொண்டு மக்களை மகிழ்விக்கும் செயலை உருவாக்குவது தான் இந்த யாகக் குண்டம்.
 
ஆகவே… அந்த ஞானி காட்டிய வழியில் அக்கினியை மூட்டுங்கள். அந்த அக்கினியை மூட்டிக் கொண்டிருப்பது ஓங்காரம்…”
 
கண்ணின் நினைவைப் புருவத்தியிலே உயிரிலே செருகப்பட்டு …..ம் என்ற உணர்வின் தன்மை கொண்டு தீமையான உணர்வுகளைத் தடுத்து விட்டு…” மெய் ஒளியான அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று உடலுக்குள் செலுத்த வேண்டும்.
 
அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறச் செய்வதற்கும் வாழ்க்கையில் அறியாது தத்தளித்துக் கொண்டிருக்கக் கூடிய நிலையில் நல்ல உணர்வுகளை மீண்டும் செம்மையான நிலைகள் செயல்படுத்துவதற்கே…” இந்த உபதேசம்.
 
உங்களை நீங்கள் நம்புங்கள்…!
 
1.இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கமும்
2.பிரபஞ்சத்திற்குள் ருபெற்ற சப்தரிஷி மண்டலங்களின் உணர்வின் எண்ண அலைகளையும் உங்களுக்குள் கலவையாகச் சேர்த்து
3.சப்தரிஷிகள் அருள் ஒளி இங்கே படர்ந்து கொண்டிருப்பதை
4/நீங்கள் நினைத்தவுடன் எடுக்கும் நிலைகளுக்குத் தான் உபதேசிக்கின்றோம்.
 
சாதாரண மனிதருடன் நாம் கலந்து உறவாடும் போது பத்து வருடத்திற்கு முன் ஒருவன் துன்பம் செய்தான் என்று இருந்தாலும் திடீரென்று அதை இப்பொழுது நாம் எண்ணினால் நம் மனதை அது துடிக்கச் செய்கின்றது.
 
அன்றைய தினம் நாம் செய்யக்கூடிய காரியங்களைத் தடைப்படுத்துகின்றது. உணவையும் அஜீரணமாக்கி நஞ்சாக ஆக்குகின்றது.
 
தைப் போல ஒவ்வொரு நிமிடமும் துன்பங்கள் நேரும் பொழுதெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் அந்த அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று எண்ணுங்கள்.
 
1.துன்பத்தை விளைய வைக்கும் தீமைகளை அது கருக்கிவிட்டு
2.நல்ல உணர்வின் தன்மையைட்டுவதற்குத் தான் மீண்டும் மீண்டும் இதை ஞாபகப்படுத்துகின்றோம்.
3.உங்கள் நல்ல குணங்களுக்குள் அந்த மகரிஷிகளின் ணர்வுகளைத் திரும்பத் திரும்ப இணையச் செய்கின்றோம்.

August 27, 2025

நம்முடைய மோப்ப சக்தி எதுவாக இருக்க வேண்டும்…?

நம்முடைய மோப்ப சக்தி எதுவாக இருக்க வேண்டும்…?


நாம் நன்றாகத்தான் இருக்கின்றோம். இரு நண்பர்களுக்குள் ஆகவில்லை. ஆனால் அவரிடம் நாம் பழகி இருக்கிறோம் என்பதைத் தெரிந்து கொண்டவர்கள் என்ன செய்கின்றார்கள்…?
 
என்னங்க…! நீங்கள் இவ்வளவு உதவி செய்கின்றீர்கள் உங்களைப் பற்றி அவன் கேவலமாகப் பேசுகின்றான்…! என்பார்கள்.
 
நாம் அப்படியா என்போம்.
 
அவர்களுக்கு அந்த நண்பன் ஆகவில்லை.
1.நாம் செய்யும் உதவி அவனுக்குக் கிடைக்காமல் செய்ய வேண்டும் என்பதற்காக நம்மிடம் இப்படிச் சொல்கிறார்கள்.
2.ஆனால் சொன்னவுடன் நாம் மோப்பம் பிடிக்கின்றோம்.
 
கருப்பண்ணசாமிக்கு முன் என்ன இருக்கின்றது…? நாய் இருக்கின்றதுகையிலே அரிவாள் இருக்கின்றது.
 
நம்மைத் தவறாகச் சொல்கிறான் என்று அவர் சொன்ன தீமையான உணர்வுகளை நாம் கேட்டபின் உடனே நம் மனம் இருண்டு விடுகின்றது…”
 
 நாய் என்ன செய்கின்றது…? யார் அதை வளர்த்தார்களோ அதற்கு விசுவாசமாக இருக்கின்றது.
1.எதன் உணர்வை மோப்பம் பிடித்ததோ உடலுக்குள் சேர்த்துக் கொண்டதோ
2.அதன் உணர்வின் தன்மைக்கு விசுவாசமாக இருக்கின்றது.
 
இவர்களைப் பிரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அவன் சொன்னான். ஆனால் நாமோ இருக்கட்டும் பார்க்கின்றேன்…” என்ற இந்த உணர்வை நல்லதை நீக்கிவிட்டு அந்தப் பகைமையான உணர்வுகளை உருவாக்கி விடுகின்றது.
 
பரசுராம் என்று வரும் பொழுது தீமைகளை நீக்கிச் சமப்படுத்தும் ஆற்றல் பெற்றவன் மனிதன் என்ற நிலையினை ஞானிகள் காட்டியுள்ளார்கள்.
 
இருந்தாலும்… மனித வாழ்க்கையில் அவன் சுகத்திற்காக  இவ்வாறு தீமைகளைச் செய்யப்படும் பொழுது நுகர்ந்த உணர்வு நம்மை அறியாமலேயே நமக்குள்ளும் தீமைகளை உருவாக்கி விடுகின்றது.
 
அந்த நேரங்களில் எல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
1.மகரிஷிகளின் அருள் சக்தி அவரும் பெறட்டும் தெளிந்த மனம் பெறட்டும்
2.பொருளறிந்து செயல்படும் சக்தி அவர் பெறட்டும் என்று எண்ணி விட்டோம் என்றால்
3.அவர் சொன்ன உணர்வு நமக்குள் குரோதமாக ஆக்காது.
 
இப்படி மாற்றவில்லை என்றால்அவர் சொன்னதைப் பதிவாக்கிய பின் அவரைப் பார்த்தாலே மோப்பம் பிடிப்போம். பிறகு எதையாவது பேசினோம் என்றாலும் இந்த மாதிரிச் சொன்னீர்கள் அல்லவா… என்று அந்தப் பதிவு நினைவாகி மீண்டும் பகைமையை உண்டாக்கிவிடும்…”
 
இதைப் போன்ற நிலைகள் நம்மை அறியாது சந்தர்ப்பத்திலே ஊருவாகுவதைக் காட்டுவதற்குத் தான்
1.கருப்பணசாமியை வைத்து அந்த உணர்வின் இயக்கங்களை நமக்குச் சுட்டிக் காட்டுகின்றார்கள்.
2.இருண்ட நிலையாக நமக்குள் உருவாகிவிடுகிறது என்பதை இப்படிக் காட்டுகின்றார்கள் நல்லதைக் காக்க முடியாது போய் விடுகின்றது.
 
மேலும் கருப்பண்ணசாமிக்கு ஆட்டைப் பலி கொடுப்பதும் மற்றதையும் செய்தால் அவன் நம்மைக் காப்பான் என்று ஞானிகள் கொடுத்த உண்மையின் உணர்வுகள் எல்லாம் “தலை கீழாக மாறிய நிலையில் தான் இன்று உள்ளது…”

August 26, 2025

“அபிஷேகத்தின் தத்துவம்” சாதாரணமானதல்ல

“அபிஷேகத்தின் தத்துவம்” சாதாரணமானதல்ல


கோவிலில் தெய்வச் சிலையை அலங்காரம் செய்வதற்கு முன்னாடி அபிஷேகம் செய்கின்றார்கள். சிலை மீது பாலை ஊற்றுகின்றார்கள் சந்தனத்தை ஊற்றுகின்றார்கள் கனி வர்க்கங்களைக் கரைத்து ஊற்றுகின்றார்கள் டைசியில் நன்னீரை விட்டுக்ழுவுகின்றார்… அப்புறம் பன்னீரை ஊற்றுகின்றார்கள்.
 
சிலைக்கு எதற்காக இதைச் செய்கின்றார்கள்…? னால் அப்போது நாம் என்ன செய்கின்றோம்…?
 
இங்கே வீட்டிலே கோரிக்கை வைக்கின்றோம். எப்படி…?
 
என் பிள்ளை சொன்னபடி கேட்கவில்லை என்று பாலாபிஷேகம் செய்யப் போகிறோம். விவசாயம் சரியாக வரவில்லை என்னிடம் வாங்கிச் சென்றவன் பணத்தைத் திரும்பத் தரவில்லை என்று அதற்காக வேண்டி ஆண்டவனுக்குப் பஞ்சாமிர்தத்தை ஊற்றி அபிஷேகம் செய்து… குறைகளை எல்லாம் அங்கே சொன்னால் அவன் பார்த்துக் கொள்வான்” என்று அவனை (தெய்வத்தை) திருப்திப்படுத்துவதற்காகச் செயல்படுத்துகின்றோம்
 
இருந்தாலும்… இந்தத் தெய்வம் நல்லதைச் செய்யும் என்று தான் சிலையாக அங்கே வடிக்கப்பட்டுள்ளது. அந்தச் சிலை மீது தான் இத்தனையும் ஊற்றுகின்றார்கள் பார்க்கின்றோம். ஏன்…?
1.ஊற்றுவது பால் என்று தெரிகிறது… பாலைப் போன்ற மனம் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா.
2.மகிழ்ந்து வாழும் சக்தி நாங்கள் பெற வேண்டும்.
3.என் பையனுக்குத் தீமையை நீக்கிடும் பாலைப் போன்ற அந்தத் தெளிந்த மனம் பெற வேண்டும்.
4.கணவன் மனைவிக்குள் சில குறைபாடுகள் இருக்கும். என் கணவருக்குப் பாலை போன்ற தெளிந்த மனம் பெற வேண்டும்.
5.அவர் சொல்லிலே இனிமை வர வேண்டும். சந்தனத்தைப் போன்ற நல்ல நறுமணம் பெற வேண்டும் என் கணவருக்கு.
6.இந்த ஆலயம் வருவோர் குடும்பங்கள் அனைவருக்கும் அந்தப் பாலை போன்ற மனம் பெற வேண்டும் என்று
7.பாலாபிஷேகம் செய்யும் பொழுது யாராவது இப்படி நினைக்கின்றீர்களா…?
 
ஏனென்றால் அப்படிச் சுவாசித்தால் நம் உயிருக்கு அந்த அபிஷேகம் நடக்கின்றது. இந்த உணர்வுகள் இரத்தத்திலே கலந்து அமுதாக உடலை உருவாக்கிய அணுக்களுக்கு ஆகாரமாக அது கிடைக்கின்றது. நல்ல வீரிய சக்தியாகக் கிடைக்கின்றது.
 
1.கண்களிலே பார்ப்பது துவைதம்.
2.அதிலிருந்து வரக்கூடிய மணத்தை நுகர்ந்தால் அத்வைதம்.
3.நுர்ந்து உயிரிலே பட்டால் விசிஷ்டாத்வைதம்.
 
நாம் எந்த மகிழ்ச்சி பெற வேண்டும் என்று எண்ணினோமோ அந்த உணர்வுகள் இயக்கப்பட்டு ஆகாரத்துடன் சேர்த்து உடலாக மாறுகின்றது. உயர்ந்த குங்களை உனக்குள் உருவாக்கு… “துவைதம் உடல்…”
 
தெரியாத மக்களுக்குத் தெரிய வைக்க சூட்சுமத்தில் நடக்கும் உண்மைகளை” உருவம் அமைத்து அந்த உணர்வின் சக்தியை நாம் பெறுவதற்கு ஞானிகள் அதை உருவாக்கிக் கொடுத்துள்ளார்கள்.
 
யாராவது கொஞ்ச நேரம் இவ்வாறு எண்ணி எடுக்கின்றோமா…? நன்றாக யோசனை செய்து பாருங்கள்.
 
என் கணவருக்குப் பாலை போலச் சந்தனத்தைப் போல பன்னீரைப் போன்ற தெளிந்த மம் பெற வேண்டும். எனக்கும் அந்த தெளிந்த மம் பெற வேண்டும். கணவன் மனைவிக்கும் மனைவி கணவனுக்கும் இப்படி எண்ணி எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் இந்த மம் கிடைக்க வேண்டும் என்று இப்படித்தான் எண்ணி எடுக்கும்படி ஆபிஷேகிக்கும்படிச் சொல்லி உள்ளார்கள்.
 
யாருக்கு…? நம் உயிருக்கு…!”
 
அதற்குத்தான் இந்தத் தெய்வம் நல்லது செய்யும் என்று காட்டியுள்ளார்கள். காரணப் பெயரை வைத்துச் சிலையை வைத்து ஊற்றும் பொழுது அந்தச் சக்தி நாங்கள் பெற வேண்டும் எண்ணி ஏங்குவதற்குத் தான் நறுமணமானதை அங்கே ற்றினார்களே தவிர ஊற்றி முடித்த பின் அந்தத் தீர்த்தத்தைப் பிடித்துச் சென்று குடிப்பதற்கு அல்ல அதை பிடித்து நம் வீட்டிற்குக் கொண்டு வருவதற்கு அல்ல…!
 
இதை நமக்குள் எடுத்து இந்த உணர்வின் தன்மையை நமக்குள் செலுத்துவதற்குச் செய்தான் ஞானி.
 
ன்று டாக்டர்கள் என்ன செய்கின்றார்கள்…? நோய் என்று தெரிந்தால் இன்ஜெக்க்ஷனைப் போட்டு ரத்தத்தில் தான் அந்த மருந்தைக் கலக்கும்படி செய்கின்றார்கள்.
 
அது ஜிர்ர்… என்று போய் நல்ல அணுக்களுக்கு வீரியத்தை ட்டுகின்றது. அதற்குண்டான உணவைக் கொடுத்து ஆகாரத்துடன் கலக்கப்படும் பொழுது அதனுடன் இணைத்து நோய்க்குக் காரணமான அணுக்களை வலு இழக்கும்படி செய்கின்றார்கள்.
 
ஆனால் ஞானிகள் என்ன செய்தார்கள்…? அங்கே தெய்வத்திற்கு அபிஷேகம் செய்யும் பொழுது
1.உற்றுப் பார்த்து அந்த உயர்ந்த மணத்தை நாம் சுவாசித்து
2.உயர்ந்த சக்திகளை நம் ரத்தத்திலே எப்படிக் கலக்க வேண்டும்…? ன்று அபிஷேகம் செய்து காட்டுகின்றார்கள்.
 
அவ்வாறு அதை நுகர்ந்து டுத்தால் நம் உயிரான ஈசனுக்கு அபிஷேகம் ஆகின்றது. மகிழ்ச்சியூட்டும் உணர்வின் உணர்ச்சிகளாக அதன் வழி நம்மை இயக்குகின்றான்.
 
நாம் இப்படி எண்ணும் உணர்வுகள் நினைவாக்கப்படும் பொழுது உயிரிலே படும் பொழுது அரங்கநாதன். எந்த உணர்ச்சியின் உணர்வோ ஆண்டாள். அந்த உயர்ந்த உணர்வுகள் நம்மை ஆளத் தொடங்குகிறது…”
 
நம்முடைய எண்ணமே நம்மை ஆளுகின்றது என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றார்கள்.
 
1.நமது சாஸ்திரங்களில் பொய்யில்லை.
2.ஆனால் நாம் மெய்யைப் பொய்யாக்கி விட்டு… பொய்யைத் தான் இன்று மெய்யாகச் செய்து வாழ்ந்து கொண்டுள்ளோம்.

June 27, 2025

ஆலயத்தை உருவாக்கிய ரிஷிகளைப் பற்றி யாராவது சொல்கின்றார்களா…?

ஆலயத்தை உருவாக்கிய ரிஷிகளைப் பற்றி யாராவது சொல்கின்றார்களா…?


மனிதன் தனது வாழ்க்கையில் ஆறாவது அறிவை வைத்து எப்படி வாழ வேண்டும்…? என்பதற்குத்தான் ஆலயங்களை அமைத்தார்கள். நம் கண்களின் இயக்கங்களைப் பற்றி அன்று வியாசகர் தெளிவாகக் கொடுத்துள்ளார்.
1.கண்களால் காணும் உணர்வுகளைப் பதிவாக்குவதும்
2.கண்களால் கவர்ந்த உணர்வை உயிருடன் இணைப்பதும்
3.உயிரின் நிலைகள் அதை இயக்கிச் செயலாக்குவதும்
4.அதன் உணர்ச்சிகள் நம்மை எப்படி உருவாக்குகிறது…? என்பதையும் அறியச் செய்தார்.
 
தெய்வத்தைக் கண் கொண்டு உற்றுப் பார்த்து அந்தச் சிலையின் குணங்களை நாம் எடுக்கும் பொழுதுஇந்தத் தெய்வ குணம் நாங்கள் பெற வேண்டும்இந்த ஆலயம் வருவோர் எல்லாம் அந்தத் தெய்வ குணம் பெற வேண்டும் என்று நாம் எண்ண வேண்டும்.
 
இப்படி எண்ணும் பொழுது நாம் அதுவாகவே ஆகின்றோம்.
1.பண்படுத்தும் உணர்வுகள் நமக்குள் விளைகின்றது
2.நம் சொல் பிறரைப் பண்படுத்தும் நிலையும் உருவாக்குகின்றது.
 
ஆக இந்த உடலுக்குள் இருக்கும் சக்தியின் நிலைகளைத்தான் தெளிவாக்கி நீ எதை எப்படி வளர்க்க வேண்டும்…? எதன் வழிகளிலே இந்த வாழ்க்கை வாழ வேண்டும்…? என்று காட்டுகின்றார்கள்.
 
யாகம் என்றால் என்ன…?
 
நமது உயிர் ஒரு நெருப்பு. அதிலே அருள் உணர்வைச் சுவாசிக்கும் பொழுது உடல் முழுவதும் படர்கின்றது.
1.நம் மூச்சு வழி சொல் வழி கூடி இந்த உணர்வலைகள் வெளிப்படுகின்றது.
2.கேட்போர் உணர்வுகளை மகிழச் செய்கின்றது
 
ஆனால் யாகத் தீயிலே பல நல்ல பொருள்களைப் போட்டவுடன் கருகிப் புகை மண்டலமாக வெளி வருகின்றது. நம் கண்ணிலேயும் படுகின்றது சுவாசித்தால் நெடியும் வருகின்றது.
 
இந்த யாக மண்டலத்தில் என்ன இருக்கின்றது…? புறநிலையைக் காட்டி அதனை அகநிலைகளுக்கு ஊட்ட முடியாது.
 
நம்முடைய கண்கள் புறக்கண் உயிர் அகக்கண். நாம் புறக்கண்ணால் பார்ப்பதும் உயிரிலே உராயப்படும் பொழுது அகக்கண்ணாக அது உள் நின்று நம்மை இயக்குகின்றது என்ற நிலையைக் காட்டுவதற்குத் தான் இது துவைதம்அதாவது உருவம்.
1.சமஸ்கிருதத்தில் துவைதம் - இது உருவம்
2.அதை எண்ணத்தால் எண்ணும் பொழுது அருவம்
3.அருவத்தின் உணர்வை நுகரப்படும் பொழுது அதனுடைய உணர்ச்சி.
4.துவைதம் அத்வைதம் விசிஷ்டாத்வைதம் தனக்குள் மறைந்து இயக்கும் என்று உணர்த்துகின்றார்கள்.
 
கண்ணிலே ஒரு பாம்பைப் பார்த்தோம் என்றால் அந்த உணர்ச்சி ஐயோ பாம்பு…!” என்று இயக்குகின்றது. ஒரு அழகான பொருளைப் பார்த்தோம் என்றால் ஆஹாஹா…” என்று மகிழ்ச்சி அடைகின்றோம்.
 
பொருள் துவைதம் உருவம் உணர்வை நுகரப்படும் பொழுது அத்வைதம். உயிரிலே பட்ட பின் அந்த உணர்ச்சி. அந்த உணர்வின் தன்மை உணர்ச்சியை ஊட்டும். உயிர் அந்த அணுவாக மாற்றுகின்றது.
 
ஆலயத்தில் காட்டப்பட்டுள்ள தெய்வம் அது உருவம்அந்த உயர்ந்த குணங்களை உன் உடலாக்கு. ஆனால் வேதனைப்படும் உணர்வுகளை நுகர்ந்து உருவாக்கினால் உடல் நலிகின்றது சைவ சித்தாந்தப்படி…!” ஏனென்றால் அதன் வழிகளில் தான் ஆலயங்கள் அமைக்கப்பட்டது.
 
அந்தத் தெய்வச் சிலைக்குப் போடப்பட்டிருக்கும் வைர கிரீடத்தைப் பார்க்கப்படும் பொழுது அது எப்படி ஜொலிக்கின்றதோ அதே மாதிரி என் சொல் ஜொலிக்க வேண்டும். அதாவது என் சொல்லைக் கேட்போருக்கெல்லாம் சந்தோசம் வர வேண்டும்.
 
தங்கம் எப்படி மாங்காது இருக்கின்றதோ என் மனம் எப்பொழுதும் அவ்வாறு மங்காது இருத்தல் வேண்டும். இந்த ஆலயம் வருவோர் அனைவரும் தங்கத்தைப் போன்று மங்காத மனம் பெற வேண்டும்.
1.நீங்களும் நினைக்கின்றீர்கள் நானும் எண்ணுகின்றேன்
2.இருவருமே உயருகின்றோம்.
 
சாமி மீது போட்டிருக்கும் மலர் எதற்கு…?
 
நாம் எதை எண்ணுகின்றோமோ அந்த மணம் தான் இங்கே வரும். ஆகவே அந்த மலரைப் போன்ற நாங்கள் மணம் பெற வேண்டும் இந்த ஆலயம் வருவோர் எல்லாம் மலரைப் போன்ற மணம் பெற வேண்டும் என்று நாம் எண்ணுதல் வேண்டும்.
 
மகரிஷிகள் எவ்வாறு தங்கள் பார்வையில் மற்றவருடைய தீமைகளை அகற்றி மகிழ்ச்சி பெறச் செய்தார்களோ
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று அந்த உணர்வை இந்த உடலான ஆலயத்தில் சேர்க்க வேண்டும்
2.மகரிஷிகள் அல்லாது நறுமணத்தைக் காக்க முடியாது
3.அதை இணை சேர்க்கவில்லை என்றால் நம் வாழ்க்கையில் நன்மைகள் பெற முடியாது.
 
ஆலயத்தை உருவாக்கியது ரிஷிகள்…! ஆனால் அந்த ரிஷிகளைப் பற்றி யாராவது சொல்கின்றார்களா…?

June 9, 2025

ஊண் உடம்பு ஆலயம்

ஊண் உடம்பு ஆலயம்


மனிதர்களாக இருக்கக்கூடிய ஒவ்வொருவருமே துன்பத்தை அனுபவித்து “எனக்கு இப்படி வந்து விட்ட்தே…” என்று சொல்லி எல்லாத் தெய்வங்களையும் வணங்குகின்றோம். நான் உன்னை வணங்கினேனே எனக்கு இப்படித் துன்பம் வருகிறதே… தெய்வமே…!
 
எந்தெந்தத் தெய்வத்தை வணங்கினோமோ
1.அந்தத் தெய்வ குணத்தை நல்ல குணத்தை எண்ணாதபடி நாம் வேதனைப்படுகின்றோம்
2.நல்ல பாலிலே விஷத்தை ஊற்றிக் குடித்தது போன்று…!
 
அதே சமயம் ஆத்திரம் வந்து விட்டால் உன்னைத்தான் நான் வணங்கி வந்தேன் என்னைப் பரிசோதிக்கின்றாயே…” என்ற ஆத்திரம்…! அந்த நல்ல குணத்தில் காரத்தைக் கலந்து நாம் குடித்தது போல் ஆகின்றது.
 
ஆனால் ஆலயத்தில் காட்டப்பட்டது என்ன…?
 
நாம் நல்ல குணங்களைச் செயல்படுத்தினோம் என்றால் அவை நமக்குள் மறைந்திருக்கின்றது. ஊண் உடம்பு ஆலயம்…!” நான் எடுத்துக் கொண்ட உணர்வுகள் ஊணாக மாறி உடலாக மாறி இது ஆலயமாக மாறும்.
 
1.நான் எந்தக் குணத்தின் தன்மையை எடுத்தேனோ அந்த உணர்வின் சக்தி எனக்குள் தெய்வமாக இருக்கின்றது.
2.நான் நல்லதை எண்ணி நினைவுபடுத்தும் பொழுது அதைப்போல நான் சுவாசித்து உயிரான ஈசனிடம் படும்பொழுது
3.அந்த மகரிஷிகள் எண்ண ஒலிகளைப் பரப்பி நான் நல்லதைச் செய்வேன் என்ற எண்ணம் வருகின்றது.
4.அத்தகைய குணம் எனக்குள் நல்லதை உருவாக்கும் பக்குவமாக
5.அந்த எண்ண அலைகள் உணர்வுகள் எனக்குள் வளர்ந்து தெய்வமாக இருக்கின்றது மனிதனுக்குள்.
 
நாம் சாப்பிடும் ஆகாரத்திற்குள் விஷம் மறைந்திருந்தாலும் அந்த விஷத்தை மாற்றி விட்டு உடலை நல்லதாக்கி எனக்குள் வரும் மணத்தின் தன்மை சுவாசித்து நல்லதைச் செய்யும் உணர்ச்சிகளைத் தூண்டிச் செயலாக்கும் எண்ண அலைகளைப் பரப்பிக் கொண்டு இருக்கும் அந்த நல்ல குணங்களைத் தான்
1.ஒவ்வொன்றையும் தனித்துத் தனித்து இன்னென்ன குணங்கள் இன்னென்னது செய்யும் என்று
2.1008 குணங்களாகப் பிரிக்கப்பட்டு 1008 ஆலயங்களாகப் பிரிக்கப்பட்டது.
 
நான் நல்லதைச் செய்ய வேண்டும் என்று என் பையனை எண்ணுகின்றேன். அந்த நல்ல உணர்வுடன் போகும் பொழுது சம்பந்தமில்லாதபடி ஒரு குழந்தை உருண்டு கீழே விழுந்து விடுகின்றான்.
 
கீழே விழுந்தவுடனே அவன் அலறுகின்றான். தாய்ப் பாசம் கொண்டு நாம் ஐயோ இப்படி ஆகிவிட்டதே என்ற வேதனை கொண்டு நல்ல உணர்வுடன் எண்ணும் பொழுது நான் எந்தக் குணத்தை எண்ணினேனோ அந்த உணர்வின் சுவாசம் (நினைவு) அந்த எண்ண அலைகள் சுவாசிக்கப்பட்டுச் செயல்படும் ஆற்றலாக இங்கே வருகின்றது.
 
அவன் கீழே விழுந்த பின் அவன் சுவாசித்த வேதனையின் உணர்வலைகளை
1.நான் சுவாசிக்கும் போது என் உயிரிலே பட்டு எனக்கு அந்த வேதனை தெரிகின்றது.
2.அவன் வலி எனக்கு வந்ததாகக் கருதி அவனைக் காப்பாற்றுகின்றேன்.
 
அவனைக் காப்பாற்றி விட்டேன் ஆனால் அந்த நல்ல குணத்திற்குள் வேதனைகள் கலந்து வரும் பொழுது யார் பெத்த பிள்ளையோ…? இப்படி ஆகிவிட்டதே…! என்ற வேதனையும் அவன் வேதனையில் பட்ட துடிப்பு நிலையும் ன் நல்ல குணத்துடன் கலந்து விடுகின்றது.
 
இதை இப்படியே விட்டு விட்டால் என்ன செய்யும்…?
 
இன்று இதைச் செய்து விட்டோம். இதைப் போன்று ஏதாவது ஒரு உணர்ச்சிகள் நாம் போகும் பாதையில் ஒரு பையன் ஒரு சாமானைத் தூக்கிப் போடுகிறான் என்றால் பயத்தால் இந்த உணர்ச்சியின் வேகங்கள் எனக்குள் தூண்டிக் கொண்டே இருக்கும்.
 
பய உணர்வுகள் தோன்றி
1.அதைத் தடுக்கும் நிலைகளில் இருந்து கீழே விழுந்து விடுமோ விழுந்து விடுமோ என்று எண்ண எண்ண அந்தப் பொருள் கீழே விழுந்து விடும்.
2.சரியான நிலைகள் பக்குவப்படுத்த முடியாதபடி உர்வின் இயக்க நிலைகள் மாறி விடுகின்றது.
3.நான் நல்லதை நினைத்தேன் நல்லதைச் செய்தேன்…! :எதைத் தொட்டாலும் என் காரியம் விளங்க மாட்டேன் என்கிறது…”
 
நல்லதை நினைத்தேன் ன்று வேதனையான நிலைகளை எடுத்துக் கொண்டு அந்த ணர்வலைகள் அதிகமாகும் பொழுது என் வட்டமாகின்றது.
 
உதாரணமாக ஒரு குழம்பை வைக்கப்படும் பொழுது எல்லாம் சமமாக இருந்தால் ருசியாக இருக்கும். காரம் அதிகமாகி விட்டால் உசு உசு என்று எரிச்சல் ஆகின்றது அதே சமயம் காரல் அதிகமாகி விட்டால் அதற்குத் தக்க சுவை மாறுகின்றது. உப்பு அதிகமாகிவிட்டால் கரிக்கின்றது.
 
இதைப் போல நாம் எடுத்துக் கொண்ட மம் அதிகமாக எடுக்கப்படும் பொழுது அது முன்னணியில் வந்து விடுகின்றது. அப்பொழுது ஏதாவது ஒரு நல்ல காரியத்திற்கு நான் போகிறேன் என்றால்
1.நான் வாயை திறந்து பேசினாலே போதும்
2.சங்கடமான அலைகள் முன்னாடி இருக்கும் பொழுது
3.என் சொல் மற்றவர்கள் செவிகளிலே படும் அந்த உணர்ச்சிகள் உந்தி என்னைப் பார்க்கின்றார்கள்.
4.எனக்கு முன் இருக்கும் இந்தச் சங்கட அலைகள் அவருடைய ஈர்ப்புக்குள் போகும்.
5.அதைச் சுவாசித்த உடனே என் வார்த்தை மீது நம்பிக்கை இல்லாது வெறுப்படைவார்கள்.
6.நான் எவ்வளவு நல்லது செய்கிறேன் ஆனால் என்னைப் பார்த்து வெறுக்கின்றார்களே என்று நாம் சொல்வோம்.
 
ஆனால் தவறு செய்யவில்லை. அப்பொழுது இதை யார் துடைப்பது…? இதற்குத்தான் ஆலயத்தைக் கட்டி வைத்துள்ளார்கள்.
 
நல்ல குணத்தை எதனால் நீ போர்த்திக் கொள்ள வேண்டும்…? அந்த மலரை வைத்து நல்ல வாசனை கொண்ட பூக்களைப் போட்டு.
1.வாசனையான சந்தனத்தை சாமி மீது ஊற்றுகின்றார்கள்.
2.ஏனென்றால் நம்மிடம் இருக்கும் குணத்திலே அதை ஊற்றினால் தான் அந்தத் தீமையான வாசனை போகும்.
 
என் நல்ல குணத்துடன் கீழே விழுந்தவனைப் பார்த்தேன். அவன் வேதனைப்பட்ட உணர்வை எடுத்த உடனே இதை மூடிவிட்டது அதிலிருந்து
1.பாலில் விஷம் பட்டால் குடித்தால் நம்மையும் எப்படி வேதனைப்படச் செய்யுமோ
2.நல்லது எண்ணும் போதெல்லாம் வேதனை வந்து கொண்டே இருக்கின்றது.
 
அதைத் துடைப்பதற்குக் கோவிலைக் கட்டி வைத்து ந்தத் தெய்வ குத்தைப் பெறும்படி செய்தார்கள்.
 
இருட்டறைக்குள் சாமியை வைத்திருக்கின்றார்கள் திரையை நீக்கியபின் எதைக் கொண்டு அங்கே பார்க்கின்றோம் தீபத்தைக் காட்டும் போது வெளிச்சத்தால் இருட்டுக்குள் மறைந்த அனைத்தும் தெரிய வருகின்றது.
 
பொருளறிந்து செயல்படும் அந்தச் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா என்று ஈசனிடம் கேட்கின்றோம். அதை நாம் சுவாசிக்கும் பொழுது நம் உயிரிலே படுகின்றது.
 
கீழே விழுந்தான் கீழே விழுந்ததைச் சுவாசித்த பின் உயிரிலே பட்டு என்று பயமாகி அந்த வேதனைப்பட்டு அவனைக் காக்கச் செய்கின்றது. ஈசனுக்குள் படும் பொழுது தான் இது வரும்.
 
அதே உணர்வு உமிழ் நீராக மாறி அந்த வேதனை என் உடலுக்குள் போகும்போது என் நல்ல குணங்கள் எல்லாம் பதறுகின்றது. அந்த நல்ல குணங்களை எல்லாம் சேர்த்துத் தாங்கி உடலாக இருக்கும் சிவம் இப்படிச் செய்கின்றதே என்று பதட்டமாகின்றது. இந்த உடல் முழுவதும் பதட்டமாகின்றது நல்ல குணங்களுக்கும் பதட்டமாகின்றது. ஆனால் ஈசனுக்கோ வேதனையாகின்றது.
 
அதைத் துடைப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்…? கோவிலில் அங்கே சென்று அங்கிருக்கும் சிலைக்கு அபிஷேகம் செய்தால் இங்கு சரி ஆகுமா…?
 
அபிஷேகம் எதைச் செய்ய வேண்டும்…? எங்கே செய்ய வேண்டும்…?
 
அந்தச் சந்தனத்தைப் போன்ற நறுமணம் நான் பெற வேண்டும் என் பேச்சிலும் மூச்சிலும் நல்ல இனிமையான உணர்வுகளைச் சுவாசிக்க வேண்டும் ஈஸ்வரா என்று
1.இங்கே நம் உயிருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.
2.இதை அங்கே புறத்திலே சிலைக்கு ஊற்றிக் காண்பிக்கின்றார்கள். ஆனால் இப்படி யாரும் நினைப்பது இல்லை.
 
அங்கே சந்தனத்தை ஊற்றுவார்கள். அப்போது “பையன் சொன்னபடி கேட்கவில்லையே என்று இங்கே வருத்தமாக இருக்கும். ஆக இங்கே வருத்தத்தைச் சுவாசித்து இங்கிருக்கும் ஆண்டவனுக்குக் கவலையை அபிஷேகம் செய்கின்றோம்.
 
நல்லத்தை எடுத்து உனக்குள் இருக்கக்கூடிய தெய்வங்களுக்கு அதைக் கொடு என்று ஆலயத்திலே காண்பித்தால் யாரும் அவ்வாறு கும்பிடுவதில்லை.
 
சரணாகதித் தத்துவமாக உன் கஷ்டத்தை எல்லாம் அங்கே அழுது சொல்லு. அவன் பார்த்துக் கொள்வான் போ…! தேங்காய் பழம் பகாரத்தைச் செய்து கொடுத்து…
1.உனக்கு நல்லதை எல்லாம் கொடுத்து இருக்கின்றேன் என்னை எப்படி எல்லாம் துன்பப்படுத்துகின்றார்கள்
2.நல்லதைச் செய்கின்றேன் என்னை இப்படிப் பேசுகின்றார்கள் நல்லதைச் செய்தேன் ஏமாற்றுகின்றார்கள்
3.நீயே பார்த்துக் கொண்டிருக்கின்றாயே…! ஏன் நீ அவர்களுக்குச் சொல்லக் கூடாதா…? என்று சரணாகதித் தத்துவமாக அழுது அங்கு புலம்புகின்றோம்.
 
வேதனையைக் கொண்டு அபிஷேகம் செய்தால் எதைச் சம்பாதித்து வருகின்றோம்…?
 
எதை நீக்குவதற்காகக் கோவிலை வைத்தார்களோ
1.அந்தக் கோவிலுக்குச் சென்று சுத்தப்படுத்துவதற்குப் பதிலாக அசுத்தப்படுத்துகின்றோமே தவிர
2.கோயிலின் மரியாதையையே நாம் கெடுத்து விடுகின்றோம்.
 
இந்த உடலான கோவிலைச் சுத்தப்படுத்துவதற்கு நமக்குள் இருக்கும் நல்ல குணங்களைக் காப்பாற்றுவதற்கு மாறாக அவன் பட்ட வேதனையைத் தான் எண்ணுகிறோம். காரணம் என் நல்ல குணங்களை அது மூடிவிட்டது. அதைத் துடைக்க வேண்டும் அல்லவா.
 
ஆனால் நல்ல குணங்களைக் காப்பாற்றிய ஞானிகள் சப்தரிஷி மண்டலங்களாக அங்கே இருக்கின்றார்கள். அதனால் தான் பௌர்ணமி அன்று விண்ணை நோக்கி உற்றுப் பார்க்கும்படி சொல்வதும் காலையில் சூரியனைப் பார்க்க வேண்டும் என்றும் அன்று ஞானிகள் சொன்னார்கள்.
1.ஞானிகள் உணர்வை எண்ணி எடுப்பதை காயத்ரி என்பார்கள்.
2.இந்த காற்றிற்குள் சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்ட ஞானிகள் பேசிய உயர்ந்த சக்திகள் இருக்கின்றது.
3.அதை எண்ணி எடுத்து அந்த ஞானியின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நமக்குள் சேமிக்க வேண்டும்.
 
அது பரமாத்மா பூமியில் இருப்பது. அதை எண்ணி எடுக்கப்படும் பொழுது உடலுக்குள் அணைப்பாக வருகின்றது. இரண்டாவது என் ஆத்மா. அதிலிருந்து சுவாசித்து உடலுக்குள் சேர்க்கப்படும் பொழுது ஜீவாத்மா. இது எல்லாம் நல்ல குணங்களை விளைய வைத்துச் சுத்தப்படுத்தி உயிருடன் சேர்க்கப்படும் பொழுது நல்ல உணர்வாக வரப்படும் பொழுது நான்காவது உயிராத்மா. இதற்குப் பெயர் காயத்ரி…”
 
அந்த உயர்ந்த உணர்வுகளை நமக்குள் எடுத்து விளைய வைத்தால் உண்மையான முழு சக்தியாக அங்கே பெறுகின்றது. இதை ஆண்கள் தான் செய்ய வேண்டும் பெண்கள் செய்யலாமா வேண்டாமா…? என்று இப்படி ஒரு கேள்வி கேட்பார்கள்.
 
முதலில் தாய்மை…!
1.சக்தி தான் முதலில் சிவமாகின்றது. சிவத்தில் இருந்து தான் சக்தியும் வளர்ச்சி பெறுகின்றது
2.சக்தி இல்லையேல் சிவமில்லை சிவம் இல்லையேல் சக்தி இல்லை.
3.சக்தியை முதலில் வைத்துத்தான் சிவமாகும் என்று அன்று சொல்லி இருக்கின்றார்கள்.
 
ஆனால் இன்று இருக்கக்கூடிய சாஸ்திர சட்டங்கள் பெண்கள் காயத்ரி மந்திரம் சொல்லலாமா கூடாதா என்று சொன்னால் இது என்ன கேள்வி…? பெரும்பகுதியானவர்கள் பெண்கள் காயத்ரி மந்திரம் சொல்லக் கூடாது சொன்னால் தப்பு” என்கிறார்கள்… இவர்கள் சொல்லிக் கொள்ளும் காயத்ரி மந்திரம்.
 
மந்திரம் என்றால் என்ன…? அந்த இயற்கையின் சக்தி ஞானிகளுடைய அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணி ஈர்க்கப்படும் பொழுது நமது ஆத்மாவாகி சிறுகச் சிறுகச் சேர்ந்து ஜீவாத்மாவாக நமக்குள் விளைந்து அதில் விளைந்த நிலைகள் உயிராத்மாவாகச் சேருகின்றது.
 
கோவிலிலே பார்க்கப்படும் பொழுது எந்தக் குணத்தைக் காக்க வேண்டும் என்று எண்ணினோமோ அந்தக் குணமான சக்தி எனக்குள் இருக்கின்றது. அந்தக் குணத்தை நான் எண்ணும் பொழுது தான் அவனைக் காப்பாற்றினேன் (கீழே விழுந்தவனை). ஆனால் அதே உணர்வு எனக்குள் கலந்து விடுகின்றது.
 
அந்த குத்திற்குள் கலந்ததை நான் துடைக்க வேண்டும். அதற்குத் தான் அங்கே காட்டியுள்ளார்கள்.
1.அவனைக் காக்க வேண்டும் என்று எண்ணினேன். அந்த உணர்வின் சத்து எனக்குள் பட்டுவிட்டது.
2.அந்த வேதனையை அகற்றிவிட்டு நல்ல குணத்தைக் காக்க வேண்டும் என்றால்
3.கோவிலில் காட்டப்பட்டுள்ள அந்த தெய்வ குணத்தை நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா.
4.இதை அருளிய அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நான் பெற வேண்டும் ஈஸ்வரா. வானை நோக்கி நாம் எண்ண வேண்டும்.
5.இந்தத் தெய்வ குத்தை அவர்களுக்குள் விளைய வைத்து இது தான் உண்மை என்று அறிந்து சொன்ன வாக்கினை நாம் எடுக்க வேண்டும்.
 
தெய்வத்தைச் சொல்லி அந்தத் தெய்வத்திற்கு அர்ச்சனை செய்தால் நல்லது என்று சொன்ன சாதாரண மனிதன் இங்கே இருக்கின்றான். நல்லதைச் சொல்லிச் செய்பவன் எல்லாம் விண்ணிலே இருக்கின்றான். ஆனால் சாமியை நீ சொல் என்று மந்திரத்தைச் சொல்லி நீ இதைச் செய்தால் நல்லதாகும் என்று சொல்கின்றான்.
 
அதே மந்திரத்தைச் சொல்லி தெய்வத்தை ஜெபித்து வணங்கப்படும் போது நாம் இறந்த பின் இன்னொரு மனிதன் அதே மந்திரத்தைச் சொல்வான் என்றால் அவனுக்குள் ஆட்டிப்படைக்கும் பொம்மையாக ஆவோம்.
 
1.எந்தெந்த மந்திரத்தைச் சொல்லி உடலில் சேர்த்துக் கொண்டோமோ இறந்த பிற்பாடு
2.அதே மந்திரத்தை இன்னொரு மனிதன் சொன்னால் அந்த மந்திரத்திற்குள் சிக்கப்பட்டு
3.அவன் என்னென்ன வேலை செய்கின்றானோ அதற்கு அடிமையாவோம் இவர்கள் சொல்லும் மந்திரத்தில் சென்றால்…!
 
ஞானிகள் சொன்ன வழிப்படி.. அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நான் பெற வேண்டும் அந்த மகரிஷிகள் உணர்த்திய அருள் சக்தியான தெய்வ நிலைகள் நான் பெற வேண்டும் ஈஸ்வரா என்று ஏங்கி என் உடலுக்குள் அதைச் செலுத்தி மலரைப் போன்ற மம் பெற வேண்டும் இந்த வாசனை என் உடலுக்குள் பெற்று அந்த நறுமணமான நிலைகள் பெற வேண்டும். என் சொல்லுக்குள் அந்த நறுமணம் வரவேண்டும். நான் சொல்வதெல்லாம் மற்றவர்களுக்கு இனிமையாக இருத்தல் வேண்டும் என்று எண்ண வேண்டும்.
 
கனியைப் பார்க்கின்றோம். அதை உட்கொண்டால் எப்படி இனிமையாக இருக்கின்றதோ அது போன்று என் சொல்லுக்குள் அந்த இனிமை கலந்து பிறருடைய செவிகளிலே படும் பொழுது அங்கே நல்லதாக அமைய வேண்டும்.
 
ஆனால் கீழே விழுந்தவனைப் பார்த்தவுடனே ஆ…! என்று எனக்குள் அலறல் ஆகின்றது. பிறருடைய மகிழ்ச்சியான சொல்களைக் கேட்கப்படும் பொழுது எனக்குள் ஆனந்தத்தைத் தூண்டுகின்றது.
1.இதைப் போல அந்த மகிழ்ச்சியான உணர்வின் தன்மை நான் பெற வேண்டும்
2.கனியைப் போன்ற சுவையான சொல்லும் செயலும் நான் பெற வேண்டும் ஈஸ்வரா என்று எனக்குள் இந்த உணர்வினை அபிஷேகம் செய்தால்
3.இந்த உணர்வின் தன்மை கீழே விழுந்தவனைக் காப்பாற்றிய அந்த விஷத்தை நீக்கிட” அந்த ஞானியின் அருள் வித்து உதவுகின்றது.
4.இவனைக் காப்பாற்றினேன்தே உணர்வின் தன்மை எனக்குள் அந்த நல்ல குணத்தை நிலை நிறுத்த முடிகின்றது.
 
இப்படித்தான் ஆலயத்தின் பண்புகளை நமக்குச் சொன்னார்களே தவிர சரணாகதித் தத்துவமாக துன்பத்தை எல்லாம் சொல்லி எல்லா பதார்த்தங்களையும் அங்கே வைத்துவிட்டு நான் எல்லாமே உனக்குச் செய்தேன் என் பிள்ளை மக்காக இருக்கின்றானே…! உன்னைத்தானே நான் வேண்டினேன் என்று வேதனையைத் தான் சொல்கின்றோம். எல்லோருக்கும் நான் தர்மத்தைத் தானே செய்தேன். எல்லோரும் ஏமாற்றுகின்றார்களே…!
 
அப்பொழுது எதை வணங்குகின்றோம்…?
 
ஆக நமக்குள் வந்த தீமையைத் தான் அந்தக் கோவிலுக்குள்ளும் சென்று அங்கேயும் அதே தீமையை வளர்க்கின்றோம். நாம் விடும் மூச்சுகள் நமக்குக் கெட்ட்தாவதோடு மட்டுமல்லாதபடி மற்றவர்களுக்கும் அது அங்கே கெடுதல் ஆகின்றது.
 
ஆலயம் நம்மைப் புனிதப்படுத்தும் நிலைக்காகத்தான் உருவாக்கப்பட்டது. ஆகையினால் இனி எந்த ஆலயத்திற்குச் சென்றாலும் அந்தத் தெய்வ குணத்தைப் பெற வேண்டும் ஈஸ்வரா. இதையெல்லாம் அருளிய அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா. மலரைப் போல் மணம் நாங்கள் பெற வேண்டும். என் மூச்சாலும் பேச்சாலும் நல்ல மங்கள் வெளிப்பட வேண்டும் ஈஸ்வரா என்று எண்ணுங்கள்.
 
பிறரை மகிழ வைக்க வேண்டும். கனியைப் போன்ற சுவையான சொல்லும் செயலும் பெற வேண்டும். என் சொல்லால் பிறர் மகிழ வேண்டும் என் செயலால் பிறர் ஆனந்தப்பட வேண்டும்.
1.அந்த மகரிஷியின் அருள் சக்தியால் எனக்குள் அது விளைய வேண்டும் ஈஸ்வரா.
2.அந்தக் கோவிலுக்கு வரும் அத்தனை பேருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியால் நலமும் வளமும் பெற வேண்டும்.
3.என் சொல்லும் செயலும் இங்கு வருவோர் அனைவரையும் மகிழ வைக்கும் எண்ண அலைகளாகப் படர வேண்டும் ஈஸ்வரா என்று
4.இப்படி எல்லாம் செய்யும் போது நாம் தெய்வமாகின்றோம்.
 
இது தான் கோவிலின் தத்துவம்.