அன்று விவேகானந்தர் ஒவ்வொரு உயிரையும் கடவுளாக மதித்தார்.
நாம் உயர்ந்த குணங்கள் கொண்டு நாம் எதை எண்ணுகின்றோமோ அதையே நமக்குள் படைக்கின்றது
என்றும் இதைப் போல நாம் எண்ணிய உணர்வுகள் எப்படி வினை என்ற நிலைகளையும் அந்த வினைக்கு
நாயகனாக எந்த நிலைகளை இயக்குகிறது என்ற நிலைகளையும் உணர்ந்து கொண்டார் விவேகானந்தர்.
அவ்வாறு உணர்ந்து கொண்ட நிலையில் தான் சிகாகோவில்… “சகோதர சகோதரிகளே…!” என்று
தன்னுடன் இணைத்து (மிஸ்டர்… அது… இது… என்று சொன்னாலும்) வெளிப்படுத்திக் காட்டினார்.
“சகோதர சகோதரிகளே…” என்று தன் குரு தனக்கு உணர்த்திய வழியைத் தனக்குள் இணைத்து
அவர் காட்டிய உணர்வின் தன்மை கொண்டு மேலை நாட்டில் “கடவுளின் அவதாரம்” என்ற நிலைகளையும்
வெளிப்படுத்தினார்.
நெகடிவ்.., பாசிடிவ்.., - ve.., + ve.., என்ற இயக்கம் இல்லை என்றால் இந்த உலக
இயக்கம் இருக்காது.
ஒரு மனிதன் நல்ல நிலைகளில் இயக்கப்படும் பொழுதுதான் மற்றவர்களுடைய உணர்வுகள்
இயக்கப்பட்டு மற்றவன் தீமை செய்கின்றான் என்று உணர்த்துகின்றது.
அப்படி உணர்த்தினாலும்
1.”தீமையிலிருந்து விடுபட வேண்டும்…” என்று
2.நல்ல உணர்வு கொண்டு இயக்கினால் தான் அந்தத் தீமைகளை அகற்ற முடியும்
3.இதையெல்லாம் அங்கே உணர்த்துகின்றார் விவேகானந்தர்.
சிகாகோவில் அவர் பேசிய உபதேசங்கள் ஆங்கில வடிவில் பேசினார். நமது குருநாதர் மாமகரிஷி
ஈஸ்வராய குருதேவர் தமிழ் வடிவில் எனக்கு உபதேசித்தருளினார்.
நான் (ஞானகுரு) எந்தப் புத்தகங்களையும் படித்து இதைச் சொல்லவில்லை.
விவேகானந்தர் தன் குரு காட்டிய வழியினை அங்கே இருக்கக்கூடிய மக்களுக்கு எடுத்துக்
காட்டினார். நம் நாட்டின் பெருமையை அங்கே நிலைநாட்டினார்.
1.“ஆச்சாரம்… அனுஷ்டானங்கள்..,” என்பதை நீக்கிவிட்டு
2.நாம் அனுஷ்டிக்க வேண்டிய முறைகள் எது…? என்ற தத்துவத்தைத்தான்
3.விவேகானந்தர் அங்கே தெளிவாக எடுத்துரைத்தார்.
1.ஆச்சாரங்களும் அனுஷ்டானங்களும் நம்மைக் காக்காது.
2.”நாம் அனுசரித்து நடக்கக்கூடிய ஆச்சாரம்… எதுவோ…,” அது தான் வழி நடத்தும்.
ஒரு மனிதன் பிழையானதைச் செய்கின்றான் என்றால் அந்தப் பிழை நமக்குள் ஓங்கி வளரப்படும்
பொழுது நமக்குள்ளும் அந்தப் பிழைகள் வளர்கின்றது.
அந்தப் பிழையான நிலைகள் அங்கே உருப்பெறுவது நீங்க வேண்டும் என்று நாம் எண்ணினால்
1.அந்தப் பிழை நமக்குள்ளும் நீங்குகின்றது.
2.அவன் அறியாது செய்யும் பிழைகளையும் நீக்க முடியும் என்ற இந்தத் தத்துவத்தை
3.இந்த நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் வெளிப்படுத்தினார்.