ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

Showing posts with label பேரருள் பேரொளி. Show all posts
Showing posts with label பேரருள் பேரொளி. Show all posts

July 26, 2025

ஈரேழு பதினாலு லோகம் எது…? அதை வென்றவர்கள் யார்…?

ஈரேழு பதினாலு லோகம் எது…? அதை வென்றவர்கள் யார்…?


ஆரம்ப நிலைகள் விண்ணிலே உயிரணுவாகத் தோன்றினாலும் அப்படித் தோன்றிய நிலைகள்
1.பலவாறு அணுவின் தன்மை ஒன்றை ஒன்று விழுங்கி அணுத் தன்மை வளர்ந்து அதன் வழிகளிலே கோளாகி
2.கோளாகி ஆற்றல் பெற்று நட்சத்திரமாகி நட்சத்திரங்கள் சூரியனாகி அதனின்று விளைந்து ஒரு பிரபஞ்சமாகி
3.பிரபஞ்சத்திற்குள் ஒரு கோளாகி அந்தக் கோளுக்குள் மற்ற அனைத்தும் வடிக்கச் செய்து பூமியான நிலைகள் கொண்டு அதிலே உயிரணுக்கள் தோன்றி
4.மற்ற கல்லும் மண்ணும் மற்ற நிலைகள் ஆவியாக மாறி தாவர இனச் சத்துக்களாக மாறி
5.தாவர இனச் சத்துகளின் ஆவிகளைச் சுவாசித்து உயிரணுக்கள் அதை உட்கொண்டு வடித்து
6.அணுத் திசுக்களாக உயிரினங்களின் தோற்றங்களாகி மனிதனாக வளர்ச்சி பெற்று வந்துள்ளோம்.
 
ஒரு அணுவின் தன்மை வளர்ச்சியில் சூரியனாக எப்படி ஆனதோ அதே போன்று பிரபஞ்சத்திற்குள் தோன்றிய உயிரணுவின் துடிப்பு மற்ற உணர்வின் சத்தை எடுத்து மனிதனாக வளர்ச்சி பெற்று வரும் பொழுது எதையுமே அடக்கி ஆளும் சக்தி மனிதனுக்கு உண்டு…”
 
ஆரம்ப நிலையில் அணுவின் தன்மை பெற்ற நாம் மனிதனாக வளர்ச்சி பெற்று வந்தாலும் சூரியனாக வளர்ச்சி பெற்று வந்தாலும் சூரியனையே அடக்கியாளும் சக்தி மனிதனுக்கு உண்டு…”
 
அத்தகைய ஆற்றலின் தன்மை
1.எல்லாவற்றிலும் அது வடித்து உணர்வின் ரசத்தின் தன்மையை அது வடிகட்டிய நிலைகள் கொண்டு மனிதனாக உருப்பெற்றான்.
2.அவ்வாறு உருப் பெற்றதன் நிலைகள் தன் எண்ணத்தை சூரியனிடத்திலே பாய்ச்சி இவனுடைய உணர்வுகளை அங்கே இயக்கச் செய்து
3.சூரியனையே திசை திருப்பவும் கோள்களைத் திசை திருப்பவும் கூடிய ஆற்றல்கள் பெற்றவர்கள் அன்றைய மெய் ஞானிகள்.
 
அவ்வாறு பெற்றவர்தான் அகஸ்திய மாமகரிஷி…!
 
மனித உருவாகும் பொழுது தான் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு நாயகனாக மனித உடல் பெற்றாலும் இந்த வினைக்கு நாயகனாக மனித உடலிலிருந்து வெளிப்பட்டது தான் ஆறாவது அறிவு.
 
சூரியனிலிருக்கக் கூடிய நிறங்கள் ஆறு அதைப் போன்று மனிதனுக்குள் அறிவு ஆறு.
1.சூரியனுடைய ஆறாவது அறிவு ஆறு நிறங்கள் ஏழாவது ஒளி.
2.மனிதனுக்கு அறிவு ஆறு ஏழாவது அறிந்துணர்ந்து செயல்படும் தன்மை.
3.பிரபஞ்சத்திற்குள் வரக்கூடிய விஷத்தின் ஆற்றலைச் சூரியன் ஒளியாக மாற்றும் ஒளியாகக் காட்டும்.
4.ஆனால் மனிதன் இருளுக்குள் மறைந்த பொருளை அறிந்துணர்ந்து செயல்படும் ஆற்றல் பெற்றவன்… இருளை ஒளியாக மாற்றும் திறன் பெற்றவன்.
 
இருளான சரீரத்திற்குள் நின்று உயிர் உணர்வுகளை வளர்க்கச் செய்த இந்தத் தசைகளை (உடலை)
1.மீண்டும் இன்னொரு தசைகளின் (உடல்) தன்மை பெறுவதற்குப் பதில்
2.சூரியன் எப்படிப் பிரகாசிக்கின்றதோ இதைப் போன்று தன் உணர்வை ஒளியாக மாற்றி உயிராத்மாவை ஒளியாக மாற்றி விண் செல்வது
 
இது தான் கடைசி நிலை.
 
சூரியப் பிரபஞ்சத்திற்குள் தோன்றிய எத்தகைய சக்தியின் நிலைகளையும் வென்று அதை ஒளியாக மாற்றி விண் செல்ல முடியும்…” என்ற நிலையை அன்றைய அகஸ்திய மாமகரிஷி நமக்கெல்லாம் உணர்த்திச் சென்றுள்ளார்.
 
அவன் தென்கோடியிலே தோன்றியவன் தான். தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று நாம் அவனைத் தான் போற்றிக் கொண்டிருக்கிறோம்.
1.அவன் வழி வந்த மக்கள் தான் நாம் அனைவருமே.
2.அவன் சென்ற எல்லையினை நாமும் அடைய வேண்டும்.

June 4, 2025

உணர்வினை ஒளியாக மாற்றும் நிலை

உணர்வினை ஒளியாக மாற்றும் நிலை


நமக்குள் வெறுப்போ சலிப்போ இதற்கு முன் அறியாத நுகர்ந்த உணர்வுகளோ நோயாக உருவாக்கப்பட்டு உணர்வின் தன்மை வேதனைப்பட்டாலும் அதை மாற்றி அமைக்க யாம் உபதேசிக்கும் உணர்வின்படி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்று எண்ணும்பொழுது அதனுடைய வளர்ச்சியைக் குறைக்கலாம் வளராது தடுக்கலாம்.
 
1.நமக்குள் ஊழ்வினை என்ற வித்துகள் அதிகமாக இருக்கும் பொழுது
2.அதன் இன விருத்தியின் உணர்வுகளை நமக்குள் வளராதபடி தடுக்க
3.அருள் ஒளியை நமக்குள் சேர்த்து இருளை உருவாக்கும் உணர்வினை மாற்றி
4.நமக்குள் தெளிந்த மனதை நாம் உருவாக்கினால் நோய்களிலிருந்து விடுபடச் செய்யும்.
 
மனக்கவலையோ மனசோர்வோ சஞ்சலமோ நமக்குள் தோன்றும் பொழுதெல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பெற வேண்டும் என்று
1.அந்த அருள் உணர்வை எடுத்து உங்களுக்குள் தீமை வளராது இந்த உணர்வினைத் தடைப்படுத்துங்கள்.
2.நம் ஈர்ப்புக்குள் வராததை நாம் ராததை சூரியன் கவர்ந்து மேலே அழைத்துச் சென்று விடுகின்றது.
3.தீமையான உணர்வுகளுக்கு உணவு கிடைக்காது தடைப்படுத்தி விடுகின்றது.
4.இவ்வாறு நமது வாழ்க்கையில் தொடர்ந்து இந்தப் பணிகளைச் செய்தல் வேண்டும்.
5.இந்த உலகை விட்டுச் செல்லும் வரையிலும் அருள் ஒளி என்ற உணர்வினை நமக்குள் எடுத்து வளர்க்க வேண்டும்.
 
ஆனாலும்… இந்த உடலை விட்டு உயிர் எப்படியும் சென்றே தான் ஆகும். எதனின் உணர்வை முதிர்வாகத் தனக்குள் வளர்த்தோமோ அதற்குத்தக்க உணர்வு கொண்ட உடலை எடுக்கும்.
 
பேரருள் என்ற உணர்வின் தன்மை நாம் எடுக்கப்படும் பொழுது பேரொளியான உணர்வுகளை உருவாக்குகின்றது.
 
இருள் சூழ்ந்த ஒரு உடலுக்குள் நின்று அறிவென்ற நிலை இருந்தாலும் உடலில் இருந்து இயக்குகின்றது. அறிந்துணர்ந்து செயல்படும் தன்மை இது.
1.அங்கே அப்படி அல்ல…!
2.ணர்வினை ஒளியாக மாற்றும் நிலை பெற்றது
3.அந்த உணர்வினை நமக்குள் எடுத்தால் அறிந்த அறிவின் தன்மை இயக்குவது அல்ல.
4.ணர்வினை ஒளியாக மாற்றும்... அதை நுகர்வோருக்கு இருளை அகற்றி அறிவைத் தெளிவாக்கும் நிலை வரும்.
 
இதன் தொடர் வரிசையில் முழு முதல் கடவுள் என்று விநாயகர் தத்துவத்தில் கூறியது போல் மனிதனின் உயிர் மனிதனாக உருவாக்கிய பின் முழுமையினை உருவாக்கும் சக்தி பெற்றது.
 
பேரருள் என்ற உணர்வினை உருவாக்கினால்
1.அந்த ஒளியின் தன்மை கொண்டு நுகர்வோர் உணர்வுகளிலும் தீமைகளை அகற்றி ஒளி என்ற உணர்வினை உருவாக்கும் கடவுளாக நாம் ஆக முடியும்.
2.உள் நின்று தீமைகளை அகற்றி பகைமைகளை மாற்றி அருள் உணர்வைப் பெருக்கி ஒவ்வொரு மனிதனையும் நல்வழிப்படுத்தும் நிலை வரும்.
 
ஆகவே நம் முன்னோர்கள் சப்தரிஷி மண்டல எல்லையை அடைந்த நிலையில் துருவ தியானத்திலிருந்து தங்கள் குடும்பத்தில் அந்த அருள் சக்தியைப் பரவச் செய்தால்
1.உங்கள் குடும்பத்தில் உடலை விட்டுச் சென்ற மூதாதையர்கள் உணர்வுகள் இங்கே இருப்பினும்
2.அந்த அருள் ஒளி என்ற உணர்வுகள் இந்த இருளை அகற்றி
3.நல்வழி காட்டும் நிலையும் மெய்ப்பொருள் காணும் நிலையும் இல்லற வாழ்க்கையில் மகிழ்ந்து வாழ்ந்திடும் சக்தியும் பெற முடியும்.
 
அருள் வழி வாழுங்கள் மெய்ப்பொருளைக் காணுங்கள் பிறவி இல்லாத நிலை அடையுங்கள். விண் செல்லும் மார்க்கமாகத் துருவ தியானத்தைக் கடைப்பிடியுங்கள்.
 
இதன் தொடர் கொண்டு உங்கள் வாழ்க்கையே தியானம் ஆக்குங்கள். தீமை புகாது தடுக்க அருள் உணர்வுகளைப் பெறுங்கள் அதைப் பெருக்குங்கள்.
 
இல்லற வாழ்க்கையில் வரும் துன்பங்களை அகற்றுங்கள். தன்னை அறியாது இயக்கும் தீமைகளை தனக்குள் புகாது தடுத்து நிறுத்துங்கள். பேரின்பப் வாழ்வு என்ற நிலையில் வாழுங்கள்.
1.இந்த வாழ்க்கையில் மகிழ்ச்சி பெறும் உணர்வினை வளர்த்துக் கொள்ளுங்கள்.
2.அருள் ஒளி என்ற உணர்வினைக் கூட்டுங்கள்… இருளை அகற்றுங்கள்.

April 14, 2025

புத்தாடை

புத்தாடை


ஒருவன் தீமை செய்வதைக் கண்களால் பார்க்கின்றோம் தீமை செய்பவனைப் பார்க்கப்படும் பொழுது கண்கள் கூர்மையாகப் பார்க்கின்றது. அந்த உணர்வின் தன்மை பதிவாக்குகின்றது. அவன் செய்த தவறின் உணர்வுகள் நமக்குள் வந்து நல்ல குணங்களைக் கொல்கிறது.
 
நமது வாழ்க்கையில் அறிந்து கொள்ள நம் எண்ணங்களைச் செலுத்துகின்றோம். நோயோடு வாடுகின்றான் உற்றுப் பார்க்கின்றோம். கேட்டு உதவி செய்கின்றோம் இதே கண்களால் தான்…!
 
1.கண்கள் கொண்டு பார்த்து உதவி செய்தாலும் தீமை என்ற உணர்வுகள் நமக்குள் வந்தே விடுகின்றது.
2.நம் உடலுக்குள் சேர்ந்த பின் பூராம் நரகாசுரனாக மாறி விடுகின்றது.
 
எத்தனையோ கோடி உடல்களைக் கடந்து இன்று பார்த்து உணர்ந்து நுகர்ந்து மற்றவர்களுக்கு உதவி செய்தாலும் நமக்குள் திருடனைப் போன்று அந்த வலிமை புகுந்து நம் நல்ல குணங்களைக் கொன்று குவிக்கின்றது.
 
நரகாசுரனைக் கொன்ற நாள் எது…? தீபாவளி.
 
தீமை என்ற உணர்வைத் தெரிந்து தீமையை நுகர்ந்ததனால் நமக்குள் இத்தனை நோய்கள் வந்தது அதைக் கண்களால் பார்த்தோம்.
1.அதே கண்களால் தீமையை நீக்கிய அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று
2.அந்தக் காலையில் 4 மணிக்கு எண்ணப்படும் பொழுது
3.கண்ணுற்றுப் பார்த்து துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கவர்ந்து உடலில் உள்ள இரத்த நாளங்களில் கலந்து
4.நம் உடலில் உள்ள உறுப்புகளுக்கும் ஜீவணுக்களுக்கும் அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்று பாய்ச்ச வேண்டும்.
 
யாரையெல்லாம் நாம் பார்த்தோமோ அந்தக் குடும்பங்கள் எல்லாம் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும். அவர்கள் குடும்பங்கள் நலம் பெற வேண்டும் ஒன்றுபட்டு வாழ வேண்டும் தொழில்கள் வளம் வர வேண்டும் அருள் வழி வாழ வேண்டும் அருள் வாழ்க்கை வாழ வேண்டும் என்று அன்றைக்கு முழுவதுமே இப்படிச் சொல்ல வேண்டும்.
 
இப்படி நமக்குள் தீமைகளை மறந்து செயல்பட்டால்
1.நம் ஆன்மாவில் இருக்கும் தீமைகளை காலை 6 மணிக்கெல்ல்லாம் சூரியன் அதை எடுத்துச் சென்று விடுகின்றது.
2.பரமாத்மாவில் உள்ள அசுர குணங்களும் மாற்றப்படுகின்றது.
 
நாம் எடுத்துக் கொண்ட அருள் உணர்வுகள் எல்லோரும் அன்புடன் பண்புடன் இருக்கப்படும் பொழுது நம் ஆன்மாவிலே அன்பு கொண்ட புத்தாடையாகின்றது.
 
தீமைகளை நீக்கி நல்ல உணர்வு கொண்டு நமது வாழ்க்கையில் எப்படி இருக்க வேண்டும்…? என்று தான் இந்த புத்தாடை அணியும் நிலையைக் காட்டுகின்றார்கள்.
 
நாம் துணிகளைப் புதிதாக அணிவதல்ல…!
 
தீமைகளை நீக்கும் துருவ நட்சத்திரத்திண் உணர்வை நம் ஆன்மாவாக மாற்றி நமக்கு அது புத்தாடையாகி பகைமை உணர்வு வராதபடி நம்மை எப்படிக் காத்துக் கொள்ள வேண்டும்…? நாம் எப்படி மற்றவர்களைப் பார்க்க வேண்டும்…? என்பதற்காகத்தான் தத்துவத்தைக் கொடுத்துள்ளார்கள்.
 
நாம் அதை எல்லாம் மறந்திருக்கின்றோம் விஞ்ஞான உலகால் உலகம் அழியும் தருணத்தில் நமது குருநாதர் காட்டிய வழியில் ஞானிகள் காட்டிய நெறிகளைப் பின்பற்றினால் வரும் விஷத் தன்மைகளிலிருந்து நம்மை மீட்டிக் கொள்ளலாம்.
 
வருடம்தோறும் ஒவ்வொரு மாதத்திலும் விழாக் காலங்களில் அருள் உணர்வுகளைப் பெருக்கிப் பாருங்கள்.
1.உடலுக்குள் இருக்கும் பகைமைகள் மாறுகின்றது.
2.இந்த காற்று மண்டலத்தில் இருக்கக்கூடிய தீமையான உணர்வுகளும் தூய்மையாக்கப்படுகின்றது
3.எல்லோரும் இதை செயல்படுத்தும் பொழுது பரமாத்மா பரிசுத்தம் அடைகின்றது.

January 16, 2025

பேரின்பப் பெருவாழ்வு என்று நீங்கள் வாழப் பிராத்திக்கின்றேன்… தவமிருக்கின்றேன்

பேரின்பப் பெருவாழ்வு என்று நீங்கள் வாழப் பிராத்திக்கின்றேன்… தவமிருக்கின்றேன்


பேட்டரியில் சார்ஜ் குறைந்தால் அதை மீண்டும் ஏற்றிக் கொள்வது போன்று
1.ஒவ்வொருவரும் அதிகாலை துருவ தியானத்தைச் சீராக எடுத்துக் கொண்டு
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை அதிகரித்துக் கொண்டால்
3.அன்றாட வாழ்க்கையில் வருவதையெல்லாம் நாம் சீர்படுத்திக் கொள்ள முடியும்.
 
காலையிலிருந்து இரவு வரை நாம் எத்தனையோ பேரைச் சந்திக்க நேர்கின்றது. சலிப்பு சஞ்சலம் சங்கடம் வெறுப்பு கோபம் குரோதம் பயம் போன்ற உணர்வுகளை நாம் சந்திக்க நேர்கின்றது.
 
அப்படி நாம் பார்த்து கேட்டு நுகர்ந்த உணர்வுகள் நம்மை இயக்காது தடைப்படுத்த… “துருவ நட்சத்திரத்தினுடைய சக்தியை உடனடியாக துரிதமாக ஏங்கி நம் உடலுக்குள் செலுத்தினால் தீமைகள் நமக்குள் புகாது தடுக்க உதவும்.
 
காலையில் இந்த நினைவலைகளை நாம் அதிகமாகப் பெருக்கி அருள் உணர்வுகளை நமக்குள் சேர்க்கச் சேர்க்கச் சேர்க்க
1.துருவ நட்சத்திரத்துடன் நம்முடைய பற்று அதிகரிக்கின்றது
2.இந்தப் புவியின் பற்றைத் தகர்த்துக் கொண்டே வருகின்றோம்.
3.எந்தத் துருவ நட்சத்திரத்தினுடைய சக்தியை அதிகமாக எடுத்தோமோ உடலுக்குப் பின் நம்மை அங்கே அழைத்துச் செல்லுகின்றது நம் உயிர்.
 
இந்த உடலில் சேர்த்த உணர்வுகள் தீமை என்றால்
1.துருவ நட்சத்திரத்தின் அருகிலே செல்லும் பொழுது இந்த உடலில் பெற்ற தீமைகளை அங்கே கருக்கி விட்டு
2.இருளை ஒளியாக மாற்றும் திறன் பெறுகின்றது.
3.எத்தகைய நஞ்சு இருந்தாலும் அதை மாற்றி விடுகின்றது.
 
பாம்பு தன் விஷத்தைப் பாய்ச்சி மற்ற உயிரினங்களை உட்கொண்டாலும் அந்த விஷமே அதற்குள் மீண்டும் சேமித்துச் சேமித்து நாகரத்தினமாக மாறுகின்றது.
 
இதைப் போன்று தான் நமது வாழ்நாளில் அருள் மகரிஷிகள் உணர்வைச் சேர்க்கச் சேர்க்க நம் உணர்வுகள் அனைத்தும் உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக மாறுகின்றது.
 
மனிதராக இருக்கும் நாம் தான் இதைச் செயல்படுத்த முடியும்.
 
மிருகங்கள் தான் வாழத் தன்னைக் காட்டிலும் வலுக் கொண்ட உணர்வைச் சுவாசிக்கும் பொழுது அந்த உணர்வை வளர்த்து உடலுக்குப் பின் பரிணாம வளர்ச்சியில் அடுத்த உடலைப் பெறுகின்றது.
 
ஆனால் மனிதன் அன்பும் பண்பும் பரிவும் கொண்டு இருப்பினும் பிறருடைய நோய்களைக் கேட்டறியும் போது உதவி செய்தாலும் அந்த நோய் மிகவும் வலிமையானது விஷம் கலந்தது.
 
அதை நுகரப்படும் பொழுது அந்த விஷத்தின் உணர்வுகள் நம் நல்ல குணங்களுடன் கலந்து விடுகின்றது. பின் நல்ல குணங்களை வீழ்த்தி விடுகின்றது.
 
இந்த உணர்வுகள் கலக்கக் கலக்க மனிதனை உருவாக்கிய உணர்வுகள் அனைத்தும் நலிந்து அணுக்கள் மடியத் தொடங்கும். நம் உடல் உறுப்புகளும் குறையத் தொடங்கும்.
 
உடல் குறைந்து விஷத்தின் தன்மை பெருகும் பொழுது உயிர் உடலை விட்டுச் சென்று மனிதரல்லாத உருவை உருவாக்கி விடும்.
 
அதை மாற்றியமைக்க அருள் மகரிஷிகளின் உணர்வுகளை சேர்க்கச் சேர்க்க
1.உடலை விட்டுச் செல்லும் உயிரான்மா எதன் வலுக் கொண்டதோ
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருகிலே நம்மை அழைத்துச் செல்லும்.
 
தீமைகளைக் கருக்கிடும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்திகள் பட்டப்பின் மனித வாழ்க்கையில் நாம் சேர்த்துக் கொண்ட தீமைகளை அங்கே கருக்கிவிட்டு உயிரின் ஈர்ப்பு துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தப்பட்டு பேரருள் பேரொளி என்று ஒளியின் சரீரமாக அழியா ஒளிச் சரீரமாக பிறவியில்லா நிலை அடைகின்றோம்.
 
உயிர் தோன்றி மனிதனாக வளர்ச்சி பெற்ற பின்பு தான் முழுமை அடைய முடியும் உயிர்.
 
ஆகவே நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் மகரிஷிகள் பெற்ற ஒளிச் சரீரத்தை நாமும் பெறுவோம்.
1.இந்த வாழ்க்கையில் வரும் இருளை அகற்றிப் பேரருள் பெற்று
2.இல்லற வாழ்க்கையில் பேரின்பப் பெருவாழ்வு என்று நீங்கள் வாழப் பிராத்திக்கின்றேன் தவமிருக்கின்றேன்.

January 8, 2025

ஒளியின் சக்தியைப் பெற்று உயர்ந்திடுவேன்

ஒளியின் சக்தியைப் பெற்று உயர்ந்திடுவேன்


இராமன் குகன் மீது நட்பு கொண்டான்... குகனின் துணை கொண்டு கங்கையில் ஓடத்தில் இராமன் சென்றான் என்றாலும்...
1.இராமன் கொண்ட பாசம் சகோதர நயமாக...
2.தன் மனத் தேரில் குகன் பவனி வரும் பாங்காக வந்தது என்பது அது அன்பில் சிறந்தது
 
ஒரு தேரை (தவளை) ஆற்றின் கரையில் வாழும் பொழுது ஆகாரம் புசிப்பதற்காக சிறு சிறு பூச்சிகளை விழுங்குகின்றது. அந்தப் பூச்சிகளின் உயிர் தேரைக்குள் சென்று தேரையாகப் பிறக்கும் நிலை பெறுகின்றது.
 
ஆனால் இராமன் தன் பாணத்தால் அறிந்திடாத் தன்மையால் அதன் மீது எய்த பொழுது அவ் உயிர் சக்திகளின் பிறப்பின் நிலை மனித உடலுக்குள் வந்து உயிரணுக்களாக... மனிதனாகப் பிறக்கும் (உயர்ந்த நிலையாக) விமோசனம் பெறுகிறது.
 
ஆனாலும்
1.சந்தர்ப்பத்தின் வசம் வினைப் பயன் காரியார்த்த நடைமுறைகள் அதை உணர்ந்து கொண்டிடும் உயர் ஞானம் போல
2.அதிவேக உணர்வுகள் கூட்டிக் கொண்டிடும் உணர்வுகளால்
3.எண்ணத்தால் ஏற்படுத்தப்படும் சந்தர்ப்பத்தின் வசம் இராமன் கொண்ட அனுபவமாக
4.தெய்வீக புருஷன் அரக்க குணம் கொண்ட (இராவண) பிறப்பின் நிலை எண்ணத்தால் வரு(ந்)த்திட்டான் என்று காட்டி
5.”இராமபாணம் துளைத்தது என்று கொண்டிட்ட உயர்வான எண்ணம் எடுத்துத் தன்னைத்தான் காத்துக் கொண்டு
6.சாப நிலையை மாற்றி விமோசனத் தன்மையாகத் தன்னை உயர்த்தியது என்பதுதான் இராம காவியத்தின் சூட்சுமம்.
 
அன்பின் வசம் தான் அனைத்துமே (அகண்ட அண்டத்தில்) அடங்கும்…!
 
உலக நிலையில் ஒன்றை அறிந்து கொள்தல் என்பது இன்றைய அனுபவ நடைமுறையாக இருக்கலாம். ஆனால் இயற்கை என்ற வசுக்கள் சக்தியை…”
1.மனிதன் இருந்த இடத்தில் இருந்து கொண்டே தன்னில் தெளிந்து
2.ஆத்ம பலம் பெற்றிடும் வழியாகத் தன்னைத்தான் வளர்த்து
3.ஈர்ப்பின் செயல் (எங்கே செல்ல வேண்டும் என்ற) சூட்சுமம் அறிந்து கொள்ள வேண்டும்
 
புயலால் கடல் மிகவும் கொந்தளிக்கும் அது போல் கோப குணத்தால் மனிதனின் மனம் தத்தளிக்கும்….! ஞானச் செல்வங்கள் அத்தகைய உணர்வுகளில் சிக்கிடாத நிலைக்கு வானவியல் தத்துவ செயல் குணம் கொள்ள வேண்டும்,
 
மேகத்தின் ஊடே சூரிய ஒளியைக் கவர்ந்து பல வண்ணம் காட்டும் ஸ்படிக நீர்…” வான்வெளியில் செயலுருவாக கருப்பொருள் காட்டுவதைப் போன்று
1.ஒளியின் சக்தியைப் பெற்றுப் பெற்று உயர்ந்திடுவேன் என்ற எண்ணம் வளர வளர
2.அந்த மேன்மையான நிலையில் வழி நிற்றலே சம்பூரணம்
 
ஆக
1.தானாக வளர்வது இயல்பு நிலை
2.பலனாய் வளர்ப்பது நம் நிலை…!” (ஞானிகள் வழி)
 
இதிலே பொருள் உண்டு உணர்ந்து கொள்…!

January 6, 2025

அருள் ஒளியினைப் பெருக்கிப் பேரருளாக மாற்றி பேரொளியாக நாம் வாழ வேண்டும்

அருள் ஒளியினைப் பெருக்கிப் பேரருளாக மாற்றி பேரொளியாக நாம் வாழ வேண்டும்


ஒரு வேதனைப்படும் மனிதனை உற்று நோக்கினால் அப்போது நமது எண்ணங்கள் பலவீனம் அடைந்து விடுகின்றது. அதை மாற்றி அமைக்க அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று நாம் உடனடியாக எண்ணி எடுத்தல் வேண்டும்.
 
ஏனென்றால் துருவ நட்சத்திரம் தீமைகளைக் கருக்கியது தீமையை வென்றது நஞ்சினை வென்றது. ஆகவே அந்த உணர்வின் சக்தியை நாம் நுகர்ந்து வேதனையான உணர்வுகள் நமக்குள் செயலாகாதபடி தைச் சேர்த்து வேதனையைக் குறைத்துப் பழகுதல் வேண்டும்.
 
வேதனைப்படுவோரைப் பார்த்தால்
1.அவர் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
2.வேதனையிலிருந்து அவர் விடுபட வேண்டும்
3.அவர் உடல் நலம் பெற வேண்டும்
4.மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டும் என்ற உணர்வினை நாம் எடுத்து அங்கே பாய்ச்சுதல் வேண்டும்.
 
இந்த உணர்வை நுகர்ந்தோம் என்றால் நமது உயிர் ஓ என்று ஜீவ அணுவாக மாற்றும் அணுவின் கருவாக உருவாக்குகின்றது.
 
பின் நம் ரத்த நாளங்களில் கலந்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் அணுவாக மாறும் பொழுது
1.நாம் எத்தகைய நிலை பெற்றோமோ அந்த உணர்வின் தன்மை நுகர்ந்து அது தன் இனத்தைப் பெருக்கும் சக்தி பெறுகின்றது.
2.அப்பொழுது நம் உடலுக்குள் தீமை அகற்றிடும் அணுக்கள் பெருகுகின்றது
3.தீமையை மாற்றி அமைக்கும் சக்தியும் நாம் பெறுகின்றோம்.
 
நமது வாழ்க்கையில் தீமை என்ற நிலைகளோ அல்லது வேதனைப்படும் உணர்வுகளோ கோபமோ வெறுப்போ… சந்தர்ப்பத்தால் பயமோ ஆத்திரமா இத்தகைய உணர்வுகள் தோன்றும் போதெல்லாம் அவைகள் நமக்குள் அணுக்களாக உருவாகாதபடி துருவ நட்சத்திரத்தின் உணர்வு உண்டு அவைகளைத்ணித்துப் பழகுதல் வேண்டும்.
 
ஆனால் தீய உணர்வையே நுகர்ந்து தீய அணுக்களே நம் உடலுக்குள் பெருகி விட்டால் நம் உடல் சீர்குலைகின்றது கடும் நோய் ஆகிறது.
 
ஆகவே அத்தகைய நோய்கள் வளராது தடுப்பதற்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று அவ்வப்போது நமது ஆன்மாவைத் தூய்மைப்படுத்திக் கொள்ளுதல் வேண்டும்.
 
இப்படி ஒவ்வொரு நிமிடத்திலும் எந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பற்றுடன் பற்றுகின்றோமோ அதனால் நமக்குள் இந்த பூமியின் பற்று அற்றுப் போய் விடுகின்றது.
 
ஆனால் நோயின் தன்மையை அதிகமாக நேசிக்கும் போது புவியின் பற்றுக்கே வருகின்றோம். நோயினைப் பற்றி விட்டால் மனிதனல்லாத உருவையே பெறுகின்றோம்.
 
இதிலிருந்து நாம் விடுபடுதல் வேண்டும்.
 
ஆகவே துருவ தியானத்தில் பெற்ற துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஒவ்வொரு நொடிப்பொழுதும் பெற்றுத் தீமைகள் விளைந்திடாது தடுக்க வேண்டும்.
 
1.நாம் பார்ப்பதெல்லாம் நலம் பெற வேண்டும் என்று உணர்வினைக் கூட்டி வளர்த்தால் நமக்குள் தீங்கு விளையாது.
2.அருள் ஒளியினைப் பெருக்கிப் பேரருளாக மாற்றி வாழ வேண்டும்
3.பேரருள் என்றால் நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் அனைத்தையும் தீமைகளை அகற்றிடும் அணுக்களாக மாற்றி
4.பேரொளி என்ற நிலையை நம் உடலுக்குள் உருவாக்க வேண்டும்.