ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

Showing posts with label பிறவியில்லா நிலை. Show all posts
Showing posts with label பிறவியில்லா நிலை. Show all posts

January 11, 2026

பல கோடிச் சரீரங்களில் தீமைகளை வென்றிடும் சக்தி பெற்று… வளர்த்துத் தான் இன்று மனிதனாக வந்துள்ளோம்

பல கோடிச் சரீரங்களில் தீமைகளை வென்றிடும் சக்தி பெற்று… வளர்த்துத் தான் இன்று மனிதனாக வந்துள்ளோம்


இயற்கையின் நிலைகள் மாறுபட்டுக் கொண்டிருக்கும் இந்த வேளையில் மனிதனாக உருப்பெற்ற பின் உணர்வின் தன்மை ஒளியாக மாற்றிய துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வினை நாம் நுகர்ந்து நமக்குள் அந்த உணர்வை வளர்த்துக் கொண்டால்… நாம் பிறவி இல்லா நிலை அடைய இது உதவும்.
 
1.மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ நாம் பழகிக் கொள்ள வேண்டும்.
2.அந்த உணர்வினை நுகர்ந்து நமக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
3.துருவ மகரிஷியின் அருள் சக்தியை நாம் பெறுவதற்கு துருவ தியானம் இருந்து பழகுதல் வேண்டும்.
 
கஷ்டங்களையும் நஷ்டங்களையும் எப்போது பார்த்துணர்ந்தாலும் அடுத்த கணம் துருவ நட்சத்திரத்தை எண்ணி அந்தச் சக்தி எங்கள் ரத்த நாளங்களிலே கலக்க வேண்டும் என்று இதைக் கலந்து கேட்டறிந்த தீமை வலுப் பெறாதபடி தடுத்துப் பழகுதல் வேண்டும்.
 
அதற்குத்தான் ஆத்ம சக்தி என்ற ஆயுதத்தைக் கொடுத்துள்ளோம். அதை வைத்துத் தீமைகள் வளராது தடுத்தல் வேண்டும்.
 
ஏனென்றால்
1.பல கோடிச் சரீரங்களில் தீமைகளிலிருந்து விடுபடும் உணர்வை நாம் நுகர்ந்து நுகர்ந்து நுகர்ந்து
2.அதன் வழியில் தான் மனிதனாக வளர்ச்சி பெற்று வந்திருக்கின்றோம்.
 
மனித உடலிலிருந்து வெளிப்படும் மம் கார்த்திகேயா என்றும் தீமை என்று தெரிந்த பின் அந்தத் தீமை புகாது தடுக்கும் நிலை தான் சேனாதிபதி ஆறாவது அறிவு என்றும்… முருகன் பிரம்மாவைச் சிறை பிடித்தான் என்றும் ஞானிகள் காட்டியுள்ளார்கள்.
 
துருவ நட்சத்திரத்திலிருந்து வருவது நஞ்சினை வென்றிடும் சக்தி…? என்று அதை அறிகின்றோம் கார்த்திகேயா. அதை நமக்குள் நுகர்ந்து உருவாக்கினால் தீமை புகாது அதனை அடக்கி ஒளியின் சிகரமாக மாற்றும் சக்தி வரும்…”
 
மனிதனா பின் பல கோடிச்ரீரங்களில் தீமைகளை வென்றிடும் உணர்வைச் சேர்த்துச் சேர்த்து அதன் அறிவாக அறிந்திடும் அறிவைச் சேர்த்துச் சேர்த்து இன்று நாம் அனைத்தையும் அறிந்திடும் ஆற்றலைப் பெற்றிருக்கிறோம்.
1.அந்த ஆறாவது அறிவைத் தான் கார்த்திகேயா என்றும்
2.சேனாதிபதி என்றும் தீமைகள் புகாது பாதுகாக்கும் நிலை என்றும்
3.பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் என்றும் காட்டியுள்ளார்கள்.
 
 இத்தகைய நிலைகள் வளர்ச்சி பெற்று அதிலே முழுமை அடைந்தவன் தான் துருவ மகரிஷி துருவ நட்சத்திரமாக உள்ளார். அதனின்றி வெளிப்படும் உணர்வைச் சூரியனின் காந்த சக்தி கவர்கின்றது.
 
அதை உங்களுக்குள் பதிவாக்கி நீங்கள் அதை எடுக்கும் நிலைக்குத் தான் உபதேசித்து வருகிறோம்.
1.அதன் உணர்வை நீங்கள் ஏங்கிப் பெற்று ஊழ்வினை என்ற வித்தாக வைத்து
2.அதை மீண்டும் நினைவு கொண்டு அருள் ஒளி என்ற உணர்வினைத் தனக்குள் வளர்த்துப் பிறவியில்லா நிலை அடைய முடியும்.
 
அது உங்கள் எண்ணத்தில் தான் இருக்கின்றதே தவிர… யாரோ வந்து அந்தப் பிறவி இல்லாத நிலை நம்மை அடையச் செய்வார் என்று எண்ணுதல் வேண்டாம்.

December 10, 2025

போகாப்புனல்

போகாப்புனல்


நாம் எண்ணிய எண்ணங்கள் கூர்மையாக விண்ணை நோக்கி ஏகி அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை உடலுக்குள் நாம் அடிக்கடி சேர்க்கப்படும் பொழுது அது நன்கு வலுப்பெறுகின்றது.
 
இவ்வாறு நமக்குள் வலுப்பெறச் செய்வதைத்தான் விண்ணை நோக்கி ஏகுவதைக் கூர்மை என்றும்கூர்மை அவதாரம் வராக அவதாரம்என்பது.
 
அந்த வலுப்பெற்ற சக்தியின் துணை கொண்டு அந்த ஞானிகள் எவ்வாறு  ஒளிச் சரீரம் பெற்றார்களோ அதே போல நமக்குள் வலுப்பெறச் செய்து வராக அவதாரமாக நாம் எதைக் கூர்மையாக எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணுகின்றோமோ அதன் நிலையாக நாம் கல்கியின் பத்தாவது அவதாரமாக ஒளிச்சரீரம் பெற முடியும்.
 
இதை நமது வாழ்க்கையில் கடைப்பிடித்து விண் சென்ற அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் பருகினால்தான் விண் செல்ல முடியும்.
 
இல்லையென்றால்
1.இன்று நாம் நமது வாழ்க்கையில் பக்தி மார்க்கங்களில் எண்ணியபடி
2.இந்தத் தெய்வம் செய்யும் அந்தத் தெய்வம் செய்யும் இந்த மனிதர் செய்வார் அந்தச் சாமியார் செய்வார் என்ற நிலையை
3.நம் எண்ணத்தில் வளர்த்துக் கொண்டால் உடலுக்குள் இது சாகாகக் கலையாக இந்தப் பூமியிலேதான் நாம் சுழல முடியும்.
 
ஆனால் வேகாக்கலை என்றும் போகாப்புனல்…” என்ற நிலையை அடைய வேண்டுமென்று வள்ளலார் பாடல்களிலே பாடியுள்ளார்.
 
1.அந்த மகரிஷிகள் பெற்ற உணர்வினை நமக்குள் செலுத்தினால்வேகாக்கலை  அடைந்து
2.னிப் பிறவியில்லா  போகாப்புனல்” அதாவது இன்னொரு பிறவியில் நாம் பிறக்காத நிலையை அடைய முடியும்.
 
ம் ஈஸ்வராஎன்று நம் உயிரைப் புருவ மத்தியில் எண்ணி விண்ணிலே நினைவைச் செலுத்தி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும்என்று ஏங்கி  அதை உயிர் வழி கவர்ந்து அவ்வாறு கவர்ந்த உணர்வுகளை நம் உடல் முழுவதற்கும் செலுத்தும் பொழுது இதற்கு ஆத்ம சுத்திஎன்று பெயர்.  அந்த எல்லா மகரிஷிகளின் அருள் சக்தியை நம் உடலுக்குள் சேர்ப்பிக்கும் நிலை.
 
உங்கள் வாழ்க்கையில் துயரங்களோ வேதனையோ சலிப்போ சஞ்சலமோ சங்கடமோ வெறுப்போ பயமோ ஆத்திரமோ அவசரமோ இதைப் போன்ற நிலைகள் ஏற்படும் பொழுதெல்லாம் நம் குருநாதர் காட்டிய அருள் வழிப்படி முதலில் சொன்ன மாதிரி விண்ணை நோக்கி ஏகி அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்ற ஏக்கத்துடன் நம் உடலில் உள்ள ஒவ்வொரு குணங்களிலும் உணர்வுகளிலும்  அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நாம் அடிக்கடி சேர்த்து வரவேண்டும்.
 
அப்படி அடிக்கடி சேர்த்து வந்தோமென்றால்
1.வாடிய பயிருக்குள் உரம் சேர்த்தால் அது எவ்வாறு காற்றிலிருந்து தன் சக்தியைச் சேர்த்து மணி முத்துக்களை விளையச் செய்கின்றதோ
2.அதைப் போன்று ஒவ்வொரு நிமிடமும் நமக்குள் அறியாது சேரும் தீமைகள் அனைத்தையும் நீக்கி
3.மகரிஷிகளின் அருள் சக்திகளை எண்ணத்தால் எடுத்துச் சேர்த்து ஒளியான அணுக்களாக நமக்குள் வளர்த்துக் கொள்ள முடியும்.
 
இவ்வாறு நீங்கள் அந்த நல்ல எண்ணங்ககளுக்கு மகரிஷிகளின் அருள் சக்திகளை உரமாகச் சேர்த்தீர்கள் என்றால் அது வலுப் பெற்று ஒளியின் முத்தாக உங்கள் உணர்வுகள் விளைந்து…” உயிருடன் ஒன்றிய ஒளிச் சரீரமாகப்பெருவீடு பெருநிலைஎன்ற நிலையடைவீர்கள். கல்கி அவதாரமான பத்தாவது நிலையை அடைவது திண்ணம்.
 
வேகாக்கலை போகாப்புனல்…” என்று வள்ளலார் பாடியது போல நீங்கள் அனைவரும் அந்த நிலை அடைய முடியும். உங்களை நீங்கள் நம்ப வேண்டும்.
 
இதைக் கேட்டுணர்ந்தோர் அனைவருமே உங்களுக்குள் எத்தகைய குறைகள் நேரினும் இதற்கு முன் உங்கள் உடலிலே வளர்த்துக் கொண்ட கடும் நோயோ மனக்கவலையோ மன வேதனையோ இதைப் போன்ற நிலைகளிலிருப்போர் ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்.
 
அந்த மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் உடலில் உள்ள அனைத்து உயிரணுக்களிலும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரோளியும் படர வேண்டும்என்ற இந்த உரத்தினை நீங்கள் செலுத்துங்கள்.
 
இது வலுப் பெற்றதாகி இதைப் போல உங்கள் வீட்டிலும் நீங்கள் இதனைப் பின்பற்றுங்கள். அந்த அருள் ஒளியின் உணர்வுகள் உங்களுக்குள் விளைய உங்கள் வாழ்க்கையில் உங்களை அறியாது சேர்ந்த இருள்கள் அனைத்தும் உங்களை விட்டு விலகிவிடும்.
 
நீங்கள் மெய்ப் பொருள் கண்டுணர்ந்து உங்கள் வாழ்க்கையைச் சீர்படுத்தும் வலுவான எண்ணங்கள் உங்களுக்குள் தோன்றி உங்கள் எண்ணமே நற்செயலாகச் செயல்படும் நிலையும் உங்கள் வாழ்க்கையை உயர்த்திடும் நிலையாக அடைய முடியும்.
 
அந்த நிலையை உலக மக்கள் அனைவரையும் அடையச் செய்வதற்குத்தான் ஞாபகப்படுத்துகின்றோம்.
 
1.நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில்
2.அவர் இத்தகைய நிலைகளை உருவாக்கும்படி எமக்கிட்ட அந்த ஆணைப்படித்தான் இதைச் செய்திருக்கின்றோம்.
3.அவர் எமக்கு உபதேசித்த அருள் வழிப்படித்தான் உங்களுக்குள் உபதேசிக்கின்றோம்.
 
கூட்டமைப்பாக இருந்து கூட்டுத் தியானங்கள் செய்யும் பொழுது அதன் வழியாகத்தான்  அனைத்து மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுகின்றீர்கள்.
 
ஆகையினால்… எல்லா மகரிஷிகளின் அருள் சக்தி உங்கள் அனைவருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதற்காக யாம் சதா தவம் இருந்து கொண்டிருக்கின்றோம்.

March 12, 2025

“எனது நிலை (எல்லை)” பிறவி இல்லா நிலை அடைவது தான்

“எனது நிலை (எல்லை)” பிறவி இல்லா நிலை அடைவது தான்


1.கோடிச் செல்வம் சேர்த்தாலும் அவர்கள் வாழ்க்கையில் மன அமைதி என்பது இல்லை.
2.அழியாச் செல்வம் (அருள் செல்வம்) என்ற நிலையை எடுத்துக் கொண்டால் எச்செல்வம் இருந்தாலும் தைக் காக்க முடியும்.
3.ஞானம் இல்லை என்றால் செல்வத்தைக் காக்க முடியாது. செல்வத்தைக் காக்க அருள் ஞானம் நமக்குத் தேவை.
 
இதையெல்லாம் மனதில் வைத்து இந்த வாழ்க்கையில் குறை கூறும் வழக்கத்தை விடுத்து விட்டு குறையை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று உணர்வினை வளர்த்துக் கொள்வோம்.
 
எங்கிருந்து எதனுடைய நிலைகள் வந்தாலும் வாழ்க்கையின் சந்தர்ப்பங்களில் குறைகள் ஏற்படுவது சகஜம்.
1.அந்தக் குறையை உற்று நோக்கி அதையே திரும்பத் திரும்ப எண்ணுவோம் என்றால்
2.நம்மை அறியாமலேயே அந்தக் குறையான செயல்களைச் செயல்படுத்தும் நிலையும்
3.நம்மை அறியாமலே தவறுகள் செய்யும் உணர்வுகளே வளர்ந்து விடுகின்றது.
 
இதைப் போன்ற நிலைகளில் இருந்து நாம் மாறுதல் வேண்டும்.
 
குறையின் உணர்வுகள் வளர்ந்து விட்டால் இந்திரலோகத்திற்குள் இரண்யன் சென்று நம்மை நல்வழியில் செயல்படுத்தாத நிலையை உருவாக்குகின்றான் என்று சொல்வார்கள்.
 
சொர்க்கத்தை அடையும் உணர்வின் தன்மை நமக்குள் இருக்கும் பொழுது பிறருடைய குறைகளை நுகர்ந்து விட்டால் நம் காரியமே செயலற்றதாக ஆகி நமக்குள் குழப்ப நிலைகள் உருவாகி சிந்தித்துச் செயல்படும் சக்தியும் இழந்து துருவத்தின் ஆற்றலைப் பெறும் தகுதியை இழந்து விடுகின்றோம்…!”
 
இதைப் போன்ற நிலையில் இருந்து நாம் விடுபடுதல் வேண்டும்.
 
அரும்பெரும் சக்தியை உங்களுக்குள் பதிவு செய்கின்றேன். ஞான வித்தை உங்களுக்குள் பதிவாக்குகின்றேன் இதன் வழி கொண்டு அந்த வித்தினை குரு காட்டி அருள் வழியில் நாம் பெறுவோம்.
1.இந்த வாழ்க்கையில் இனி பிறவி இல்லாத நிலை அடைவேன்.
2.அரும்பெரும் சக்தியான மகரிஷிகளின் அருள் சக்திகளை எனக்குள் சேர்ப்பேன்.
3.இந்த வாழ்க்கையை அருள் வழியில் நான் வாழ்வேன்
4.இந்த நிலையே எனது கடைசி எல்லை பிறவி இல்லா நிலை என்ற இந்த உணர்வுடன் வாழ்ந்து பழகுங்கள்.
 
உங்கள் எண்ணம் உங்களைக் காக்கும்.
 
செல்வங்கள் நிலைப்பதில்லை செல்வம் இருப்பினும் இந்த உடலின் உபாதைக் காலங்களில் கூட செலவழிப்பதற்கு அது பத்துவதில்லை. செல்வம் அதிகமாக இருப்பினும் உபாதைகள் அதிகரிக்கப்படும் பொழுது நல்ல உணவை உட்கொள்ள முடிவதில்லை…”
 
இதைப் போன்ற நிலைகளில் இருந்து விடுபட்டு இந்த பிறவிக் கடனை அகற்றி… இனி பிறவியில்லா நிலையை அடையும் நிலையினைச் செயல்படுத்துதல் வேண்டும்.
 
அது தான் கீதையில் நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய் என்று சொல்வது. நமது வாழ்க்கையில் அருள் ஒளியின் சக்தியை பெற வேண்டும் என்று நினைத்தால் அருள் ஒளியே நமக்குள் வளர்கின்றது…”
 
இல்லை இவன் ப்படி அவன் அப்படி அவன் ப்படி என்று குறை கூறிக் கொண்டே இருந்தால் குறையின் உணர்வு வளர்ச்சியாகி நோயாகி… நமக்குள் அதுவாகவே நாம் ஆகி விடுகின்றோம்.
 
நமக்குள் சீர்படும் செயலை இழந்து செயலற்ற நிலைகள் படும்பொழுது நம் தொழிலே குந்தகமாகி வாழ்க்கையிலே எதிர்ப்பின் உணர்வுகளாக நமக்குள்ளேயே எதிரிகளை உருவாக்கி மனிதனல்லாத நிலையை உருவாக்கும் நிலை வந்து விடுகிறது.
 
இதைப்போன்ற நிலையில் இருந்து நாம் விடுபடுதல் வேண்டும்.
1.அருள் ஒளி பெற அனு தினமும் மறவாது இருத்தல் வேண்டும்.
2.அருள் ஞானம் பெற அனு தினமும் மறவாது இருத்தல் வேண்டும்.
 
அதற்குத் தகுதியான நேரம் இந்தக் காலை துருவ தியான நேரமே. நான்கிலிருந்து ஆறரைக்குள் விழித்த நேரத்திலே துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுக்கக் கற்றுக் கொள்ளுங்கள் உங்கள் உடலில் உள்ள எல்லா அணுக்களுக்கும் அதைப் பெறச் செய்யத் தவறி விடாதீர்கள்.
 
1.அருள் ஒளியைப் பரப்புங்கள் அருள் வழியில் வாழ்க்கை வாழுங்கள்.
2.அருள் சொல்லையே சொல்லுங்கள் உங்கள் சொல்லைக் கேட்போர் தீமைகள் அகலட்டும்.
3.அருள் ஞான வழியில் நாம் வளருவோம்
4.நம் பார்வையில் அனைவரது தீமைகளையும் அகற்றுவோம் நம்மைப் பார்ப்போர் அனைவரது தீமைகளும் அகலட்டும்.
5.அருள் ஞான வழியில் நாம் வாழ்வோம் வளர்வோம்…!
 
உங்களுக்கு அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்று பிராத்திக்கின்றேன்… தியானிக்கின்றேன் (ஞானகுரு).

March 5, 2025

கீழ் நோக்கியது – புவி ஈர்ப்பு நிலை… மேல் நோக்கியது – தெய்வீக நிலை

கீழ் நோக்கியது – புவி ஈர்ப்பு நிலை… மேல் நோக்கியது – தெய்வீக நிலை

 
இயற்கையின் படைப்பில் ஜீவ பிம்ப சரீரம் பெற்ற மனிதன் உலகோதய நடைமுறை நிகழ்த்த பெரும் காரியங்கள் வினைக்கீடாய் (புவி ஈர்ப்பில் சுழலும் நிலை) வினைக்கு ஈடான செயல் கொள்கின்றான்.
 
புவி ஈர்ப்பு நிலை
1.சரீரமும்
2.மூச்சு - ஈர்த்திடும் தன்மையாக மனிதனுக்குக் கீழ்நோக்கிப் பாய்தல்
3.வாய் - உண்டிடும் உண்டி அருந்திடும் நீர் சரீர கதியில் கீழ்நோக்கிப் பாய்தல்
4.அதுவே ஜீவநோத்பவம் பெற்ற பின்பு மலவாய் வழி கீழ்நோக்கிச் செல்கின்றது
5.சிறுநீர் வெளியேறும் வழியும் அத்தகையதே.
 
தெய்வீக நிலை
பூமியின் ஈர்ப்பில் செயல்படும் காரியங்கள் எதுவாக இருந்தாலும்
1.ஒளி நெறியாம் உயர்வெண்ண தியானத்தின் வலுவாகச் செயல்படும் காலத்தே
2. மேல் நோக்கிய சுவாசம் கொண்டு மற்ற புற காரிய செயல் நிகழ்வுகள் உயர்வெண்ண உந்துதல்
3.அதுவே தெய்வீக நிலையாகத் தொழில்படும்.
 
இதையே வேதாள மகரிஷி அலகினால் உணவைக் காட்டிடும் கோழி என்பார். குஞ்சுகளைப் பேணுகின்ற கோழியானது உணவின் தானியங்கள் இருக்கின்ற இடமாகக் கண்டு தனது அலகினால் தானியத்தைக் கொத்திப் பேணுகின்ற செயலாக தன் குஞ்சுகளுக்கும் அந்த ஆகாரத்தைப் பெற்றிடும் வழி காட்டுவதைப் போல்
1.நெறிப்பயிர் ஞான உணவு எடுத்தல் - உயிராத்மா சக்தி பெற்றிடும் செயலில்
2.சரீர உயிரணுக்கள் அனைத்தும் பெற்றுக் கொண்டிடும் போஜனம் (உணவு கொடுக்கும் நிலை) என்று பேணுதல்.
 
இந்நிலை பெறுகின்றவர் நெறிப்பயிர் விளைவாக்கும் கிழார் என்றதில் பெற்றுக் கொண்டிட்டதின் முழுமை விளங்கும்.
 
எண்ணம் கொண்டே மாமகரிஷிகள் காட்டிடும் சூட்சும உணவு பெற்றுக் கொண்டிடும் நியதியில் சுவாசக் காற்று என்பதின் தொடர்பு தூங்காமல் தூங்கி அரிதுயில்எனும் அறிவியல் தத்துவமாக விளக்குவது எது…?
 
பிராண வாயு சுவாசமாக உள் நுழைவதும் கரியமில வாயு வெளியேறிடும் செயலும்
1.இச்சூட்சுமத்தில் பளுவாக இயங்கிடும் இதய கேந்திரங்கள் இலகுவாக
2.உள் நுழைந்திடும் சுவாசம் குறைவு கொண்டு
3.வெளியேற்றிடும் கரியமில வாயு குறைவு கொண்டு
4.மூப்பு அற்ற நிலையைக் காட்டி
5.அரிதுயில் அழகன் எனும் மால்… (“திருமால்”) எனும் தெய்வ வடிவு தாங்கிடும் பேறு பெறுகின்றான்.
 
உயிராத்ம சக்தியை இணைத்துக் கொண்டிடு…!” என உரைப்பதெல்லாம் வேதாள மகரிஷியின் கூற்றாக இணைப்பறவையின் உறும் (பொருந்தும்) கருத்து என்பார்.
 
அதாவதுமகரிஷிகள் உரைத்திடும் இத்தகைய மறைபொருள் தன்மையில் அநேக விளக்கங்கள் உண்டு.
 
இரு பறவைகள் இருந்ததாம். ஆண் பெண் என்ற அவைகள் கருத்து வேற்றுநிலை பெற்றதாம். உறும் கருத்து வேறுபடின் - மனத்தின் பிரிவு கொண்டதாம்.
 
இருந்தாலும்எந்த நிலை ஆயினும் சக்தியாகிய அந்தப் பெண் பறவை சிவத்தின் நினைவே பிரிவுறா நிலை நினைவால் கொண்டு தான் இருக்கும்.
 
இறை தேடி இயங்குகின்ற அவைகளின் செயலில்
1.ஒன்றினில் ஒன்றாக மனத்தின் பேதம் நீக்கிட சிவத்துவ நிலை கண்டது தான் உயிராத்ம சக்தியையே பறவைகளாகக் காட்டி
2.உலகோதய நாட்டம் காட்டிடுவதை மனத்தின் பேதம் என்றும்
3.இறை தேடும் செயலுக்கு இணைகின்ற சூட்சுமம் ஒன்று கலந்திடும் தன்மையாக
4.பேரருள் செல்வத்தைப் பெற்று உயரும் வழிதனை உரைத்திட்ட செயலே அது.
 
சூட்சுமப் பொருள் காட்டி சித்தின் தொடர்புக்கு எண்ணம் சொல் செயல் மூன்றும் அனுபவ ஞான விசேஷ குணத்தன்மையாகப் பெற்றிட அதற்குண்டான பக்குவத்தைக் கனிந்திடச் செய்ய எல்லோருக்கும் வேதாள மகரிஷி ஆசி வழங்குகின்றார்.
 
தன்னிடத்தில் ஞானத்தை உரைத்திடும் குழந்தை மற்றவரிடம் அதே ஞான வழியாக நடக்கின்றதா…? அன்பு கொண்டு செல்கின்றதா…? மாயையின் வசம் ஆட்பட்டு கோபத்தின் குணமாகப் பெற்றுக் கொண்ட சக்திகளை விரயம் செய்கின்றதா…? என்று ஞானிகள் பரிசோதிப்பார்கள்
 
முகம் காட்டிடும் கண்ணாடிதான் கொண்டிடும் உயர்வெண்ணத்தைக் காட்டுவது எப்படி…?
 
1.சாந்தம் என்ற குணத்தால் அமைவு பெற ஆத்ம ஞானி கொண்ட உயர்வைக் காட்டுவது கண்கள்…”
2.சுவாசத்தின் செயல் சிந்தையைச் சீர்படுத்த உரைப்பது கனிவு…”
3.கேட்கின்ற ஒலிகள் நாராசமாயினும் ஞானி அதனை சங்கீதமாகக் கொள்வான் ஓங்காரமாக…”
4.இல்லத்தில் வீசுகின்ற பாசம் மெய் ஞானிக்கு அன்பின் வசமாக அகில உலகும் பின் தொடரும்…” ஆத்ம பதிவை நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும்.
5.கணவன் மனைவி தொடங்கி தன்னைச் சார்ந்தவர் தொடங்கி எல்லோரையும் அரவணைத்திடும் அன்பு
6.அகண்ட வியாபகமாய் (எங்கும் நிறைந்திருக்கும்) பேரருள் செல்வத்தைக் கொணரும்.
7.அத்தகைய ஞானவான் பிரம்மத்தை அறிந்திடும் பிராமணன் ஆகின்றான்.
 
பக்குவங்களை எல்லாம் மகரிஷிகள் வழிகாட்டிட குழந்தை தவழ்ந்து தளிர் நடை பயின்று ஓடியாடி வளர்ந்து இசைவாக எண்ணம் கொண்டு உறுதியின் நிலை நிற்றலை
1.ஞானச் செல்வங்கள் குருதேவருடன் மனம் ஒன்றி வாழ்ந்திடும் அந்த வளர்ப்பு
2.சாஸ்வதம் கொண்டு அனைவருக்கும் அது வழி காட்டும்.
3.இந்தக் குறுகிய கலியில் பிறவியின் தளை விடுத்துப் பேரருள் செல்வத்தில் கலந்திடவே அனைவரையும் அழைக்கின்றோம்…”

January 11, 2025

பிறவிக் கடல் கடந்து அழைத்துச் செல்ல உனக்காகக் காத்திருக்கின்றேன்

பிறவிக் கடல் கடந்து அழைத்துச் செல்ல உனக்காகக் காத்திருக்கின்றேன்


பிறப்பு வளர்ப்பு இறப்பு (எல்லாவற்றிலும்) எனும் உண்மைகளை உணர்ந்துதம் ஆத்ம நிலையைக் காத்துக் கொள்ள உள்ளபூர்வமாக இதயத்தின் ஒளியாக
1.யாம் சுட்டிக் காட்டிய தியானத்தின் வழித் தொடராக
2.பயணம் செய்பவர்கள் குறைந்து கொண்டே வருகின்றனரப்பா…!
 
ஆனாலும் பிறவி என்னும் மகா சமுத்திரத்தில் வாழ்க்கை என்னும் ஓடத்தில் இக்கலியின் மக்கள் மாக்களாக மாறிடும் நிலையை நீக்கிட
1.அறிவு பூர்வமான ஆக்க செயல்களை உணர்த்தி
2.மாயத் தளைகளை அகற்றி
3.”விழிப்பாக உணர்ந்திடும்” - ஞானச் செல்வங்களை (உங்களை)
4.பிறவிக் கடல் கடந்து அழைத்துச் செல்லும்யாம் (ஈஸ்வரபட்டர்) ஓர் ஓடக்காரன்…”
 
கால தேச வர்த்தமானம் எண்ணிடாதபடிஎன் கடமையின் வினைச் செயலாக இரவு பகல் எந்த நேரமும் நான் காத்திருக்கின்றேன்…”
 
1.இரவிலோ இன்னும் பேரருள் பிரகாசம் என்னும் ஜோதியைக் கையில் ஏந்தி
2.உங்கள் வாழ்க்கையின் பயனைக் காட்டிடவே சூட்சுமத்தில் செயல் கொள்கின்றேன்.
 
பயன் கொள்ளுங்களப்பா…!