ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 31, 2017

இன்று எந்த நிமிடத்திலும்… எதுவும் நடக்கும்…!

முன்பு வாழ்ந்த மனிதரின் நிலைகளில் அவர்கள் சூது வாது அற்ற நிலைகள் கொண்டு தனக்குள் சந்தர்ப்பத்தால் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை கொண்டு தன் உயிராத்மாவை ஒளியாக மாற்றிச் சென்றவர் பல கோடி பேர்கள்.

2000 ஆண்டுகளுக்கு முன்னாடி நடந்த நிகழ்ச்சிகளுக்கும் இன்று விஞ்ஞான நிலைகளில் போன வருடம் நடந்ததற்கும் இந்த வருடம் புதிய நிலைகளாக வருகிறது.

இப்பொழுது ஒரு மாதத்திற்குள் கூட துரித நிலைகளில் மாறிக் கொண்டே வருகிறது.

ஆனால், இன்று மனிதனே கூண்டுடன் அழியக்கூடிய தன்மைகள். நாட்டுக்கு நாடு அரசு தன்னைத் தற்காத்துக் கொள்ள மாற்று அரசை வீழ்த்திக் கொண்டுள்ளது. ஏனென்றால்
1.அவன் வளர்ந்துவிட்டால் தன்னை அழித்து விடுவான் என்ற
2.இந்த அழிக்கும் உணர்வுகள் அரசு போர் முறைகளில் பாயப்பட்டு
3.போர் முறைகளில் உலகத்தையே அழிக்கக்கூடிய நிலைகள் துரித நிலைகளில் உருவாகி,
4.மனிதன் கூடிய சீக்கிரம் மனித இனமே இல்லாத நிலைகளுக்கு ஆகப்போகின்றோம்.

மனித இனம் இருக்கலாம். மிருக நிலைகள் கொண்டு ஆரம்ப நிலைகளில் சிந்தனையற்ற நிலைகளில் இருந்தானே அதைப்போன்று இந்த விஞ்ஞான உலகத்திலே இப்பொழுது நாம்
1.மனிதன் என்ற தர்மத்தையே இழந்து
2.இன்று சிந்தனையற்ற நிலைகளில் இருக்கின்றோம்.

இதைக் காட்டிலும் விஷ அணுக்களின் தன்மையை நம்மை அறியாமலேயே நமக்குள் நுகரச் செய்துவிட்டார்கள். அதனால் இன்று வாழும் மனிதர்கள்
1.தன் பிள்ளைகள் யார்?
2.தன் வீடு எது?
என்கிற சிந்தனையே அற்ற நிலைகள் வர ஆரம்பித்துவிட்டது.

இதைப் போன்றுதான் போர் முறைகளில் நவீன ஆயுதங்கள் எடுத்து மற்ற அரசை மடக்கிக் கொண்டு இப்படித்தான் நாம் பயந்த சுவாசத்தின் நிலைகளில் வளர்ந்து வளர்ந்து இன்று விஞ்ஞான அறிவின் தன்மையால் ஒருவருக்கொருவர் அழிக்கும் நிலைகளில் இன்று முழுமையாக அழித்துக் கொள்ளும் நிலைகளுக்கே எல்லை கடந்து வந்துவிட்டோம்.

எந்த நிமிடத்திலும் எதுவும் நடக்கும் நிலைகளில் நாம் இருந்து கொண்டிருக்கின்றோம்.

குருநாதர் காட்டிய அருள் வழியில் அவர் எனக்கு உபதேசித்து உணர்த்திய இந்த உண்மை நிலைகளை பத்து முப்பது வருடமாகத் தொடர்ந்து சொல்லிக் கொண்டு தான் வருகின்றோம்.

அழிந்தால் எல்லோரும் தானே அழிவோம்…! அதற்கப்புறம் என்ன தெரியப் போகிறது என்று எண்ணத்தில் இருப்பவர்களும் இருக்கலாம்.

ஆனால் இந்தச் சுற்று போனால் இனி அடுத்து இன்னொரு பிரபஞ்சத்திற்குச் சென்று அங்கே உயிரினங்களை உருவாகும் பூமிக்குள் சென்று பல கோடிச் சரீரங்களை மீண்டும் எடுத்து மனிதனாக வரும் நிலைகள் எத்தனையோ “பல ஆயிரம் கோடி ஆண்டுகளாகும்”.

அது வரையில் எடுத்துக் கொண்ட விஷமான உணர்வு கொண்டு வேதனையை அனுபவித்துக் கொண்டு தான் இருக்க வேண்டும்.

ஆகவே, இந்தப் பிரபஞ்சம் முதுமையடையும் நிலைகள் ஆகிவிட்டது. இந்த நிலையிலிருந்து அதைச் சிறிதேனும் சிறிது பேரையாவது மீட்டுக் கொள்ளலாம், மீட்டிட வேண்டும் என்ற நோக்குடன் “மெய்ஞானியின் அருள் ஆற்றலை உனக்குள் வளர்த்துவிடு.” என்று நமது குருநாதர் எம்மிடம் சொன்னார்.

வளர்த்த ஆற்றலை ஒவ்வொரு உள்ளத்திலும் வயலைப் பண்படுத்துவது போல மனதிலே பண்படுத்து.

இதைப் போல கண்டறிந்த உணர்வின் சக்தியை அவர்களைக் கூர்ந்து கவனித்திடச் செய். அந்த மனத்தினுடைய நிலைகளை ஒரு நிலைப்படச் செய். அந்த நிலைகளை ஏங்கவை. அந்த உணர்வுக்குள் இந்த ஞானிகளின் அருள் வித்தைப் பதியச் செய்.
1.அப்படிப் பதிந்த உள்ளம் கொண்டு அவர்களும் தமக்குள் துன்பத்தை நீக்கிட வேண்டும் என்று எண்ணினால்,
2.அவர்கள் விண்ணை நோக்கி எண்ணும் பொழுது
3.அந்த உணர்வின் ஆற்றலால் விண்ணின் ஆற்றல் அவர்களுக்குள் பெருகி
4.அவர்களை அறியாது வந்த துன்பங்களை நீக்கி
5.அந்த ஞானிகள் அருள் வட்டத்தில் செல்ல
6.இது உதவியாக இருக்கும் என்று குருநாதர் சொன்னார்.

அதைத்தான் யாம் செய்து கொண்டிருக்கின்றோம்.

தியானமிருப்பவர்களுக்கு ஏற்படும் “உள் உணர்ச்சி”

இப்பொழுது முறைப்படி நாம் தியானமிருக்கிறோம் என்று சொன்னால் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நமக்குள் பெறுவதற்குத்தான்.

அதற்கடுத்து ‘’ஓம் ஈஸ்வரா’’ என்று உயிரை எண்ணி மகரிஷிகளின் அருள்சக்தியை நாங்கள் பெறவேண்டும் என்று ஏங்கிவிட்டு அந்த மகரிஷிகளின் அருள்சக்தியை எங்கள் ஜீவாத்மா பெறவேண்டும் என்று உங்கள் உடலுக்குள் தியானிக்க வேண்டும்.

அப்படித் தியானிக்கப்படும்போது இந்தக் காற்றிலே படர்ந்திருகின்ற மகரிஷிகளின் அருள்சக்தி உங்களுக்கு எளிதில் கிடைக்கும். “அந்த அருள் சக்தியாலே “உங்கள் துன்பம் போகும்...” என்று யாம் உபதேசிக்கின்றோம்.

உங்கள் உணர்வுக்குள் பதிவு செய்த இந்த உணர்வை ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தியவுடன் அந்தக் காற்றிலிருந்து அந்தச் சக்தியை எடுத்து உங்கள் மனம் சஞ்சலப்படும் இந்த நிலையை அது அடக்கும்.

காரணம் சதா உங்களிடம் யாம் வாக்குகளைச் சொன்னாலும் அதை நீங்கள்
1.உங்கள் உயிரைக் கடவுளாக மதித்து
2.உங்கள் உடலைக் கோயிலாக மதித்து
3.அவன் வீற்றிருக்கக்கூடிய கோயிலில்
4.அங்கே நல்ல வாசனையைப் போட்டால் எல்லாம் மகிழ்ச்சியாக இருக்கும்.

அதைப்போல உங்கள் வாழ்க்கையில் எல்லா நலமும் பெறவேண்டும். உங்கள் வாழ்க்கையில் எல்லா வளமும் பெறவேண்டும். உங்கள் மனமும் நன்றாக இருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு அந்த “நல்ல மணங்கள் உங்களுக்குக் கிடைக்க வேண்டும்” என்று யாம் தியானிக்கின்றோம்.

அதே சமயத்தில் அதற்கு வேண்டிய அந்தச் சக்தியை எடுத்து உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று இன்றும் யாம் ஜெபித்துக் கொண்டேயிருக்கின்றோம். அப்படி யாம் உங்களை எண்ணும் பொழுது அந்த சக்திகள் கிடைக்கும்.

சில நேரங்களில் நெற்றியிலே “குறு குறு” என்று இருக்கும். சில நேரங்களில் பார்த்தால் உங்கள் உடல்களில் "ஒரு விதமான புது உணர்வுகள்” தோன்றுவதைப் பார்க்கலாம்.

ஏனென்றால் உங்கள் வாழ்க்கையில் சங்கடமோ சஞ்சலமோ வரப்படும்போது
1.மனம் நொந்து இருக்கக்கூடிய நேரங்களில் கூட
2.யாம் எடுத்துக்கொண்ட இந்த ஜெபம்
3.உங்கள் உடலில் சில உணர்ச்சிகளைத் தூண்டும்
.
அந்த நேரமாவது நீங்கள் பார்த்து உணர்ந்து சுதாரித்து ஓம் ஈஸ்வரா என்று உயிரை எண்ணி ‘மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெறவேண்டும் என்று நீங்கள் ஏங்கினால் அந்தச் சக்தி உங்களுக்குள் இணைந்து அந்த மனக்கலக்கத்தைத் தீர்க்க இது உதவும்.

“நீங்கள் எண்ணி எடுத்தால்தான்” அந்தச் சக்தி கிடைக்கும்.


ஆகவே ஒவ்வொருவரும் ஆத்மசுத்தி என்ற இந்த ஆயுதத்தை பயன்படுத்திப் பழகிக் கொள்ளவேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைக் கண்களால் கவர வேண்டிய முறை

உதாரணமாக கருடன் கடலுக்கு மேல் பறந்து கொண்டிருக்கும். கடல் நீருக்குள் மீன் இருக்கும். மீன் கடலுக்கடியில் உள்ளிருந்து மேலே நீர் மட்டத்திற்கு வருவதற்கு முன்னால்
1.கருடன் மீனின் மணத்தை நுகர்ந்தறிந்து,
2.அந்த மீனை “லபக்...” என்று கவ்விக் கொண்டு செல்கின்றது.
3.மீன் தண்ணீருக்குள் இருக்கின்றது. மீனின் உணர்வின் மணத்தை நுகர்ந்தவுடனே “சடாரென்று பாய்ந்து..,” மீனைப் பிடித்து செல்கின்றது.

ஆனால் நாமோ கடலுக்குள் போனாலும் மீனைப் பிடிக்க முடிவதில்லை. ஆக கருடனின் உணர்வுகள் எப்படி இருக்கும்?

இது போன்றுதான் நமது உணர்வின் இயக்கங்கள் எதன் வலிமையைச் சேர்த்ததோ அதன் வலுவைப் பெருக்க உதவி செய்கின்றது.

இதை எல்லாம் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

உதாரணமாக மான் புலியைப் பார்க்கின்றது. புலியோ மானைத் துரத்துகின்றது. மான் “தீமையிலிருந்து தான் தப்ப வேண்டும்” என்று புலியின் வலுவான உணர்வை நுகர்கின்றது.

1.புலியின் தாக்குதலில் மானின் தசைகள் புலிக்கு இரையானாலும்
2,மானின் உயிரான்மா புலியின் ஈர்ப்பிற்குள் சென்று
3.புலியின் உணர்வைக் கவர்ந்து வளர்ந்து
4.புலியின் ரூபமாக புலிக்குக் குட்டியாகப் பிறக்க நேருகின்றது.

இது சந்தர்ப்பம்.

இப்படித்தான் “தீமையிலிருந்து தப்ப வேண்டும்... தப்ப வேண்டும்...” என்ற உணர்வுகளை எடுத்து எடுத்து பரிணாம வளர்ச்சியில் தீமைகளை வென்றிடும் ஆறாவது அறிவு கொண்ட மனிதனாக நம்மை உருவாக்கியது நமது உயிர்.

கண்களால் பார்த்துத்தான் உணர்ச்சியின் தன்மையை வளர்க்கின்றது. ஆகையால் கண்ணன் “பிரம்மத்தைச் சேர்ந்தவன்” என்று கூறுகின்றனர்.

நீங்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறவேண்டும் என்று கண்ணின் நினைவைப் புருவ மத்திக்குச் செலுத்தி எண்ணிப் பாருங்கள்.

1.அந்தப் பேரருள் உணர்வை
2.உங்களுடைய கண் உங்களிடத்தில் உருவாக்கும்.

ஞானிகள் காண்பித்த அருள் வழியில் தம்முள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெருக்கித் தீமைகள் தம்முள் வராது காத்துக் கொள்ளுங்கள்.

பேரின்ப உணர்வுகளை வளர்த்து என்றும் பதினாறு என்ற பெருவீடு பெரு நிலை பெறும் நிலையாக அழியா ஒளி சரீரம் பெறும் நிலையாக வாழ்ந்து வளர்ந்திட எமது அருளாசிகள்.

May 30, 2017

அனைவரும் மகிழ்வதைக் கண்டு “நீ அருள் பேரானந்தப் படவேண்டும்.., உன்னில் காண்… உன்னில் நீ பார்… உன்னை நீ பார்…” என்றார் குருநாதர்

பிறர்படும் துயரங்களிலிருந்து அவர்கள் விடுபடவேண்டும் என்று நாம் நினைவாக்கப்படும்போது அந்த நினைவின் ஆற்றலே தீமைகளிலிருந்து நம்மை விடுபடச் செய்யும் சக்தியாகும்.

உன்னில் வந்த தீமைகளை அகற்ற பல முறை உன்னைச் சோதித்தேன். தீமைகள் எவ்வாறு சாடுகின்றதென்றும் தீமைகளிலிருந்து விடுபடும் உபாயத்தையும் உன்னிலே பாய்ச்சுகின்றேன் என்றார் குருநாதர்.

இந்த உணர்வின் துணை கொண்டு நீ விண்ணின் ஆற்றலை எப்படிப் பருகுகின்றாய்? இந்த மண்ணுலகில் உனக்குள் சேர்ந்த தீமையை எவ்வாறு நீக்குகின்றாய்? என்ற உணர்வினை

1.“உன்னில் காண்,

2.“உன்னில் நீ பார்,

3.“உன்னை நீ பார்

என்ற இந்த உணர்வினை குருநாதர் உபதேசித்து அந்த உணர்வின் வழிப்படி எமக்குள் பதிவாக்கி இந்தப் பேருண்மையை எமக்குள் வளர்க்கும் திறனைப் பெருக்கினார்.

அத்தகைய உணர்வின் ஆற்றலைத்தான் உங்களிடத்தில் பதிவு செய்கின்றோம்.

இந்த உணர்வினை நீங்கள் எண்ணத்தால் வளர்த்துக் கொண்டால் இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்ற அருள் உணர்வை நீங்கள் நுகர்ந்தால் உங்களை அறியாது வந்த இருளை நீக்கிடும் சக்தியை உங்கள் உயிரே உருவாக்குகின்றது.

நீங்கள் எண்ணியது எதுவோ அதன் வழிப்படி உங்கள் உயிர் அதை உருவாக்குகின்றது. நீங்கள் எதை எண்ணுகின்றீர்களோ இந்தக் கண்கள் அதை வழி நடத்துகின்றது.

ஒருவன் தீமை செய்கின்றான் என்றால் அதனின் உணர்வின் தன்மையை நமக்குள் பதிவாக்கிவிட்டால் தீமை செய்கின்றான் என்று உணர்கின்றோம். அதன் அணுவாகவே நமது உடலில் உருவாகிவிடுகின்றது.

ஆகவே அத்தகைய தீமை செய்யும் அணு நமக்குள் உருவாகி விட்டால் அதனின் உணவுக்காக அது உணர்ச்சிகளைத் தூண்டி அந்த உணர்வுகளை நாம் நுகரப்படும்போது நம்மை அறியாமலேயே நாம் தீமை செய்வோராக ஆகி விடுகின்றோம். தீமையை செய்யும் சக்தியின் அணுக்களை நமக்குள் வளர்த்துக் கொள்கின்றோம்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபட

1.தீமைகளை அகற்றிய அருள் ஞானிகளின் உணர்வுகளை

2.நீங்கள் கேட்கும் பொழுதும் இதைக் கூர்ந்து கவனித்துப் படிக்கும் பொழுதும்,

3.அருள் ஞானிகளின் உணர்வுகள் உயிருடன் ஒன்றி உணர்வின் தன்மை பெறும்போது

4.அதை உங்களுடைய கண்கள் உற்றுப் பார்த்து உணர்வினை நுகரச் செய்து

5.உணர்வின் தன்மையை அணுவாக்கி  உங்கள் உடல்களில் நல்ல உணர்வின் அணுக்களைப் பெறச் செய்வதற்கே

குருநாதர் காட்டிய அருள் ஒளியை யாம் உங்களுக்குள் பாய்ச்சுகின்றோம்.

நமது குரு மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் – அவர் கண்ட பேருண்மையையும் அகண்ட நிலையும் அவருக்குள் கண்டறிந்த உணர்வினை,

1.நான் கண்ட உண்மையின் உணர்வை உனக்குள் உணர்ந்து கொள்

2.உன்னை அறியாது சேர்ந்த தீமையிலிருந்து நீ விடுபடு

3.அந்த உண்மையின் உணர்வை நீ உனக்குள் பெருக்கு

4.ஒவ்வொரு மனிதனின் உணர்வுகளில் இதைப் பெருக்கு

5.அதன் உணர்வினை இந்த  நாட்டிலே பெருக்கு

6.அதைக் கவர்ந்தோர் உணர்வுகளிலே இருள் நீங்கி மெய்ப் பொருள் காணும் சக்தி பெறட்டும் என்பதற்கே

7.“உன்னில் இதைப் பதிவு செய்கின்றேன் என்று இதைச் சொன்னார்.

இவ்வாறு அவர் எமக்குள் பதிவு செய்ததை யாம் நினைவு கொண்டு உங்களுக்கு இப்பொழுது உபதேசிக்கின்றோம்.

அவர் சொன்ன உணர்வினை யாம் வெளிப்படுத்தும் பொழுது இந்த உணர்வுகளைச் சூரியனின் காந்தசக்தி கவர்ந்து அலைகளாக மாற்றுகின்றது.

இந்த உணர்வுகளை நீங்கள் அனவரும் திரும்பத் திரும்பக் கேட்டு உணர்வுகளைப் பதிவாக்கிக் கொள்ளுங்கள்.

அப்படிப் பதிவாக்கும் பொழுது அன்று “வான்மீகி மகரிஷி கண்ட உண்மைகளையும் அன்று “வியாசக பகவான் கண்டுணர்ந்த உண்மைகளையும் இதற்கு முந்தி அன்று “துருவ மகரிஷி கண்டுணர்ந்த உண்மைகளையும் நீங்கள் “தொடர் வரிசையில் காணலாம்.

அவர்கள் கண்டுணர்ந்த உணர்வுகள் அனைத்தையும் நாம் பெற்றால் இருளை உருவாக்கும் நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றி ஆறாவது அறிவை ஏழாவது நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இனி பிறவி இல்லா நிலை என்ற நிலையை நாம் அனைவரும் அடைய முடியும்.

நாம் அடைய முடியுமென்றால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழிப்படி

1.உங்களுக்குள் பதிவாக்கி நீங்களும் அதை நினைவாக்கி

2.துருவ நட்சத்திரத்தின் பேரருளையும் பேரொளியையும் உங்களுக்குள் பெருக்கும்போது

3.அதைக் கண்டு யாம் மகிழ்ச்சியடைந்து அதனை மீண்டும் எமக்குள் பெருக்கி

4.உலக மக்கள் அனைவரும் பெறவேண்டும் என்ற ஆசையைக் கூட்டி

5.அருள் ஒளியை அனைவரும் பெறவேண்டும் என்ற உணர்வினை வெளிப்படுத்தி

அந்த உணர்வைக் கண்டு ஒவ்வொருவரும் மகிழ்வதைக் கண்டு “அருள் பேரானந்தப் படவேண்டும் என்று குருநாதர் காட்டினார்.

உண்மையான தியானமும் நாம் போக வேண்டிய மார்க்கமும்

உங்கள் தினசரி வாழ்க்கையில் அருள் மகரிஷிகளின் அருள் உணர்வை எடுத்துக் கொள்ளுங்கள்.

கணவனும் மனைவியும் எப்படி இருந்தாலும் (வெளி ஊரில்) காலையில் ஐந்து மணியிலிருந்து ஆறு மணிக்குள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று ஒரு பத்து நிமிடம் எடுத்தால் போதும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும். என் கணவர் உடல் முழுவதும் படரவேண்டும். என் மனைவி உடல் முழுவதும் படரவேண்டும். எங்கள் இரு மனமும் ஒன்றிட வேண்டும்.

எங்களைப் பார்க்கும் அனைவரும் அருள் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும். எங்கள் பார்வையில் பிறருடைய தீமைகள் அகன்றிடும் அருள் சக்தி பெறவேண்டும்.

எல்லோருக்கும் அந்தத் தெளிந்த மனம் கிடைக்கும் அருள் சக்தி பெறவேண்டும். ஒவ்வொரு மனிதனும் அந்தத் தெளிந்த மனம் பெறவேண்டும் என்று காலையில் இப்படி எண்ணி கணவன் மனைவி இருவருமே உங்களுக்குள் படைத்துக் கொள்ளுங்கள்.

இதுதான் உண்மையான தியானமும் நாம் போகும் மார்க்கமும்.

நாம் உட்கார்ந்து மணிக்கணக்கில் ஜெபம் இருந்து ஆண்டவனை அடைவேன் அந்தச் சக்தியைப் பெறுவேன் என்றால் அது முடியாது.

1.அப்படி மணிக்கணக்கில் ஜெபமிருந்து முடிந்தாலும்
2.முடிந்த பின் வாழ்க்கைக்கு வரும் பொழுது தீமைகள் வரும்.
3.அப்படி ஜெபமிருந்து பல நிலைகளைப் பெற்றாலும் அது “முனி என்ற நிலையாகத்தான் வரும்.
4.ஒரே வைராக்கிய நிலைகள் கொண்டு “மற்றதைச் சிந்திக்கவிடாது செயல்படுத்தும் நிலைகள் தான் வரும்.

ஆகவே, அருள் ஞானத்தை வளர்த்து மெய்ப்பொருள் காணும் நிலையை இந்த உடலிலே வளர்த்துக் கொள்ளுங்கள்.

இந்த உபதேசங்களை ஒவ்வொரு நாளூம் திரும்பத் திரும்பப் படியுங்கள். வேலைக்குச் சென்று வீட்டுக்கு வந்தால் ஒரு 10 நிமிடமாவது இதைப் படியுங்கள்.

இதுவே ஒரு தியானமாகின்றது.

இதைப் படித்து முடித்த பின்பு “எல்லோரும் நலமாக இருக்க வேண்டும் என்ற உணர்வைப் பாய்ச்சுங்கள்.

அப்பொழுது இந்த உணர்வுடன் ஒன்றிய நிலைகள் கொண்டு மற்றவர்களை நலமாக்க இது உதவும்.

அருள் ஒளி பெறுவோம். இருளை அகற்றும் அருள் ஞானத்தைப் பெறுவோம்.

இந்த வாழ்க்கையில் பேரின்பப் பெருவாழ்வாக என்றும் எகாந்த நிலை என்ற நிலையில் வாழும் அந்த அருள் சக்தியைப் பெறுவோம்.

அருள் உணர்வின் சக்தியை நமக்குள் வளர்த்து உயிருடன் ஒன்றியே நிலைத்தே வாழ்வோம். அவனுடன் நாம் ஒன்றியே வாழ்வோம்.
1.என்றும் எதனையும் அறிந்திடும் உணர்வுடன் வாழ்வோம்.
2.எல்லாம் ஏகாந்தம் என்ற நிலையில் வாழ்வோம்.
3.பகைமையற்ற உணர்வுடன் வாழ்வோம்.
4.பகைமையான உணர்வுகள் சேராது அருள் ஒளி என்ற உணர்வை நமக்குள் உருவாக்குவோம்.
5.நம் பார்வையில் பகைமை உணர்வு ஓடவேண்டும்.., நஞ்சு கொண்டோர் உணர்வுகள் நீங்க வேண்டும்,
6.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நமக்குள் பெற்றோம் என்றால் நம் பார்வை பிறருடைய நஞ்சை போக்கும்.
7.அவருடைய நஞ்சின் தன்மை நமக்குள் வராது காக்கும்.

ஏனென்றால் நாம் இந்த மனித உடலை விட்டுப் பிரிந்தால் மீண்டும் ஒரு பிறவிக்கு வரக்கூடாது. இன்னொரு உடல் பெறக்கூடாது.

அதற்குத்தான் இதைச் சொல்கின்றோம்.

May 29, 2017

கண்கள் செய்யும் திருட்டு வேலை எது...?

நாம் பாலைத் தயிறாக்கிக் கடைந்து அதற்குள் இருக்கக்கூடிய வெண்ணையை நாம் எடுத்து அந்தச் சத்தை நாம் உணவாக உட்கொள்கின்றோம்.

கண்ணன் வெண்ணையைத் திருடி எல்லோருக்கும் கொடுக்கின்றான். கண்ணன் வெண்ணையைத் திருடுகின்றான் என்று காவியங்களில் காட்டப்பட்டுள்ளது.

அதாவது, ஒரு மாடு மிரண்டு வருகின்றது என்று வைத்துக் கொள்வோம்.

1.அப்பொழுது அது சுவாசித்த உணர்வின் அணுவிற்குள் இருக்கக்கூடிய
2.“அந்த நுண்ணிய அலையை
3.வெண்ணெயைத் திருடுகின்றான்.

அதை நம் கண்கள் கவர்ந்து அதனின் வலிமையை (வெண்ணையை) உணர்த்தி “மாடு மிரண்டு வருகிறது நீ விலகிச் செல் என்று கண்கள் நம்மை வழி நடத்துகின்றது.

உதாரணமாக இன்று ஒருவன் தான் சம்பாதித்து வீட்டைக் கட்டித் தன் வீட்டிற்குள் பணத்தை வைத்திருக்கிறான். ஆனால், மற்றொருவன் பணம் இருப்பதை அறிந்துணர்ந்து அதைக் கொள்ளையடிக்க வருகின்றான்.

அப்பொழுது கொள்ளையடிக்கக் கூடியவன் அந்த வீட்டை நோக்கி வரும் பொழுது, “அந்த வீட்டிற்குரியவன் எப்படி இருக்கிறான்?” என்று தன் நினைவில் எண்ணிப் பார்க்கிறான்.

அங்கு அந்த ஆள் இருப்பதைப் பார்த்தவுடனே, “அந்த வீட்டிற்குள் அந்தப் பணத்திற்குரியவன் இருக்கிறான் என்று இந்தக் கண்ணனே உணர்த்துகின்றான்.

அதே சமயம் அவன் உடலிலே
1.அந்த வீட்டுக்காரர் இருக்கிறார் என்ற உணர்வில்
2.“அவன் மறைந்து நம்மைப் பிடிக்க வேண்டும் என்று எண்ணுவான் என்பதை
3.“திருடன் என்ற நிலையில் இவன் எண்ணுகின்றான்.
அந்த உணர்வின் சக்தியைத் திருடனுக்கு அந்தக் கண் தான் காட்டுகின்றது.

வீட்டுக்காரன் இருக்கிறான்.., நீ அந்தப் பக்கம் போகாதே என்கிற நிலையைத் திருடச் செல்பவனுக்குச் சொல்லி “நீ இந்தப் பக்கம் போ என்று வழி காட்டுகின்றது.

1.ஆனால் அந்த வீட்டுக்காரனுக்கோ,
2.“திருடன் வருகிறான்.., அவனை எப்படிப் பிடிப்பது?” என்று
3.முக்கிய ஆலோசனையைக் கண்ணன் சொல்கின்றான்.
4.ஆக, அவன் எடுத்துக் கொண்ட உணர்வுக்குள் இருக்கக்கூடிய வெண்ணையை கண்ணன் இவனுக்கும் கொடுக்கின்றான்.

திருடப் போகக்கூடிய இந்த உணர்வின் சத்தை இந்தக் கண் திருடனுக்குள் இருக்கக்கூடிய உணர்வின் தன்மையையே அங்கே வீட்டுக்குச் சொந்தக்காரனுக்கும் உணர்த்துகின்றது.

இந்த உணர்வின் சேர்க்கையிலே உடலுடன் பிணைந்த நம் வாழ்க்கைக்காக வேண்டி
1.நாம் எந்தெந்த உணர்வைச் செலுத்தி
2.கண்கள் வழியாக நம் உடலுக்குள் எதை இணைக்கின்றோமோ
3.அந்த உணர்வைச் சுவாசிக்கின்றோம்.

சுவாசித்து அந்த உணர்வின் அலையை நமக்குள் அணுக்களாகச் செலுத்தினால் அதை நாம் எண்ணும் பொழுது அதே உணர்வலைகள் கண்ணிலே பட்டவுடனே நம் குணத்தைப் பாதுகாக்கும்.

இதுவெல்லாம் வியாசகரால் கண்டுணரப்பட்டு காவியமாக உணர்த்தப்பட்டுள்ள பேருண்மைகள். அந்த ஞானிகள் உணர்வை உங்களுக்குள் பதிவாக்குகின்றோம்.

ஞானிகள் உணர்வுடன் காவியத்தைப் படித்தீர்கள் என்றால் அதில் உள்ள மூலங்களை அறிந்து “நாம் யார்?” என்ற நிலையில் நம்மை நாம் அறிய முடியும்.

நமக்குள் எது இயக்குகின்றது. எதை நமக்குள் இயக்கச் சக்தியாக மாற்றிட வேண்டும் என்பதை அறிந்து கொள்ள முடியும். இந்த உடலுக்குப் பின் என்ன என்பதை அறிந்து அந்த ஞானிகளுடன் ஒன்றிட முடியும்.

துன்பத்தை நீக்கிடும் அருள் சக்தியைப் பாய்ச்சி மகிழ்ச்சியான உணர்வை “சித்தர்கள் எப்படி நுகர்ந்தார்கள்” என்று காட்டினார் குருநாதர்

மனிதரின் வாழ்க்கையில் ஏற்படும் துன்ப நிலைகள் எப்படியெல்லாம் ஏற்படுகிறது என்பதைக் காட்ட காட்டுக்குள் என்னை (ஞானகுரு) அழைத்துச் சென்றார் குருநாதர்.

அங்கே பல துன்பங்களைக் கொடுத்து “என்ன வாழ்க்கை…?” என்று எம்மை வெறுப்படையும்படி செய்கிறார். அந்த வெறுப்படையும் உணர்வுகள் எமக்குள் என்ன செய்கிறது?

யாம் கண்ட சுகபோகங்களின் நிலைகள் என் குழந்தையின் மேல் பற்றுதலாக இருக்கப்படும் பொழுது…,
1.குருநாதர் என்னைக் காட்டுக்குள் அழைந்து வந்து
2.இத்தனை தொல்லைகள் கொடுக்கிறாரே என்ற எண்ணத்தை எனக்குள் கொடுத்து
3.இந்த உடலை விட்டு ஆத்மாவைப் பிரித்துவிடவேண்டும் (தற்கொலை செய்யலாம்) என்ற எண்ணத்தில் இருக்கிறேன்.
4.அவ்வளவு தொல்லைகள், உடல் நோய் மன நோய் குழந்தைகள் மேல் பற்று…, “அவர்கள் என்ன ஆவார்களோ…? என்ற எண்ணம் எனக்கு.

உன் குழந்தையின்பாலோ குடும்பத்தின்பாலோ பற்றான உணர்வுடன் தற்கொலை செய்யலாம் என்று எண்ணிக் கொண்டு இருந்தால் நீ எப்படிக் காக்கப் போகிறாய்..? என்று அப்பொழுதுதான் குருநாதர் காட்டுகின்றார்.

நீ இந்த எண்ணத்துடன் சென்றால் உன் குழந்தைகளின் உடலுக்குள் புகுந்து
1.பேயாகத்தான் ஆடமுடியும்.
2.இல்லையென்றால் நோயாகத்தான் செல்ல முடியும்.
3.அவர்களைக் காத்திடும் “எண்ணம்” உனக்குள் இருந்தாலும்
4.நீ அவர்களைக் “காத்திடும் நிலையில்” இல்லை.., வளர்ந்திடும் நிலையும் இல்லை.
5.நீ எதற்குச் செல்கின்றாய்..,? என்று கேள்விக்குறி போட்டு என்னைத் தனித்து நிற்கச் செய்கின்றார்,

அதே சமயத்தில் அகஸ்தியமாமகரிஷி “அகம்… என்ற நிலைகள் கொண்டு “அணுவை அறிந்தார்…” என்று காட்டுகிறார்.

இதைப் போல ஒவ்வொரு நிலையிலும் காட்டுக்குள் சித்தனாக தோன்றிய அனைவருமே அறிந்தோ அறியாமலோ தான் கண்டுணர்ன்ந்த தாவர இனச் சத்தின் தன்மை கொண்டு இருந்ததையும் காட்டுகிறார்.

ஒருவர் நோயினால் துன்புற்று இருக்கும்போது அந்தத் துன்பத்திலிருந்து விடுபடவேண்டும் என்று தான் கண்டுணர்ந்த தாவர இனச் சத்தைக் கொண்டு அவர்கள் நோய் நீங்கவேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்கிறார்கள்.

நோய் நீங்கவேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொண்டு அந்த உணர்வை நோயுற்றவர்களின் உடலில் விளையச் செய்து அவர்கள் படும் துன்பத்தை நேர்முகமாக எண்ணிப் பார்க்கப்படும் பொழுது அந்த உணர்வை அறிந்துணர்ந்து பல தாவர இனச் சத்தைக் கொடுத்து அந்த நோயை நீக்குகின்றார்கள்.

நோய் நீங்கி மகிழ்ச்சி பெறும் எண்ணங்களை அவர்கள் வெளிப்படுத்தும் பொழுது அதைச் “சித்தர்கள் எப்படி நுகர்கின்றார்கள்?” என்ற நிலையை அங்கே உணர்த்துகின்றார்.

அவ்வாறு பிறருடைய நோயை நீக்க வேண்டும் என்ற எண்ணத்தினால் சுவாசித்த இந்த உணர்வுகள்
1.அவர்கள் உயிர் அதை எப்படி இயக்குகின்றது?
2.அந்த உணர்வின் அலைகள் எவ்வாறு அந்த உடலில் படர்கின்றன?
3.இயக்கிய உணர்வின் ஆற்றலும் ஒவ்வொரு உணர்வுகளிலும் எவ்வாறு படர்கின்றது?
4.மகிழ்ச்சி கொண்ட உணர்வின் அலையைக் கண்டு நுகர்ந்து
5.தன்னில் எப்படி அவர்கள் வளர்த்துக் கொள்கின்றனர் என்று குருநாதர் காட்டினார்.

அந்த அகஸ்தியர் கண்ட நிலையைப் போல உனது வாழ்க்கையில் குறுக்கிடும் எத்தகைய நிலையிருந்தாலும் அந்த மெய்ஞானிகள் சென்ற வழியில் நீ ஒவ்வொரு நிமிடமும் அருள் உணர்வுகளை எடுத்து அதை உனக்குள் வளர்க்க வேண்டும் என்றுணர்த்தினார் குருநாதர்.


துன்பங்களை நீக்கிடும் அருள் சக்தி கொண்டு மற்றவர்களையும் அந்தத் துன்பத்தை நீக்கிடும் ஆற்றலைப் பெறச் செய் என்றார் குருநாதர்.