இரவு தூங்கச் செல்லும் போதெல்லாம் துருவ
மகரிஷிகளின் அருள் சக்தியும் சப்தரிஷி மண்டலங்களின் ஒளி காந்த சக்தியும் சப்தரிஷிகளின்
அருள் சக்தியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள்
பெறவேண்டும் என்று பல முறை எண்ணுங்கள்.
காலையிலிருந்து இரவு வரையிலும் எத்தனை
பேரைப் பார்த்தீர்களோ அவர்களுக்கெல்லாம் அந்த துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் சப்தரிஷிகளின்
அருள் சக்தியும் சப்தரிஷி மண்டலங்களின் ஒளி காந்த சக்தியும் பெறவேண்டும் என்று எண்ண
வேண்டும்.
இந்த வாழ்க்கையில் நாம் எத்தனை பேரை
சந்தித்தோமோ அவர்களெல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும். அவர்கள் குடும்பம்
எல்லாம் நலமாக இருக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.
இதை நாம் எண்ணி ந்த உணர்வை நமக்குள்
வளர்த்து கொண்டால் அது நமக்குள் அணு தினமும் விநாயகர் “சதுர்த்தி…” தீமை என்ற நிலைகள்
நிறுத்தப்படுகிறது.
கண்களைத் திறந்தே எண்ணி எடுக்கவேண்டும்.
பிறகு புருவ மத்தியில் எண்ணும் பொழுது தானாகவே கண்களை இறுக்கி மூடச் செய்யும். நீங்கள்
கட்டாயப்படுத்தி கண்களை மூடவேண்டாம்.
துருவ மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்
என்று புருவ மத்தியில் எண்ணி இதை உங்கள் உடலுக்குள் நினைவைச் செலுத்தி உங்கள் உடலில்
உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் பெறவேண்டும் என்ற உணர்வை எண்ண வேண்டும். பெருகியபின் நம்
ஆன்மா தூய்மை ஆகும்.
என்னுடன் தொழில் செய்பர்களுக்கெல்லாம்
மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும். நாங்கள் தொழில் செய்த இடங்களில் பார்த்துப்
பழகிய அத்தனை பேரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும். அவர்கள் குடும்பங்கள் எல்லாம்
நலமாக இருக்கவேண்டும்.
இப்படி எண்ணினால் இதற்குப் பெயர் தவம்.
தெய்வத்தை எண்ணித் தவமிருப்பதைவிட ஞானிகள்
உணர்வை நமக்குள் சேர்த்து மற்றவர்கள் அதைப் பெறவேண்டும் என்று இதைத் தவமாக்க வேண்டும்.
மனிதனை உருவாக்கிய அந்த நல்ல உணர்வுகளுக்கெல்லாம்
அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று எண்ணும் பொழுது அது தவமாக மாறுகின்றது.
இரவு முழுவதும் நீங்கள் எண்ண வேண்டும்.
தொழில் செய்யும் போது நம்மிடம் வியாபாரம்
வாங்கிச் சென்றவர்களுக்கும் நாம் யார் யாரை எங்கெங்கெல்லாம் அன்றைய வாழ்க்கையில் பழகினோமோ
அவர்களுக்கும் மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.
1.அப்படியே அந்த நினைவை வைத்துக் கொண்டே
தூங்க வேண்டும்.
2.நீங்கள் சிறிது காலம் இதைச் செய்து
பழக்கப்படுத்தினால்
3.அந்த வான மண்டலத்தில் மிதப்பது போல
அந்த உணர்வு வரும்
4.சப்தரிஷி மண்டலத்துடன் தொடர்பு கொள்ளும்.
யார் யாரையெல்லாம் பார்த்து அதனால் வேதனைப்பட்டு
நமக்கும் நோயானதோ அந்த நோயெல்லாம் குறையத் தொடங்கும். காலையில் எழும் பொழுது ஒரு உற்சாக
உணர்வு வரும்.
அன்றாடக் காரியங்கள் மகிழ்ச்சியாக நடக்கும்.
நமக்குள் சோர்வோ சஞ்சலமோ வராது.
இரவு படுக்கப்போகும் போதும் காலை எழுந்திருக்கும்
போதும் பின் வெளியிலே வேலைக்குச் செலலும் பொழுதும் இதை எல்லாம் வரிசைப்படுத்தி எண்ண
வேண்டும்.
செய்து பாருங்கள்…!