ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 30, 2026

குரு பக்தி

குரு பக்தி


நமது வாழ்க்கையில் தீமையான உணர்வுகளை நமக்குள் புகாதபடி தடுக்க  நம் குரு காட்டிய அருள் வழியில் அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நாம் நுகர்ந்தல் வேண்டும்.
 
அதற்கு குரு பக்தி வேண்டும்.
 
1.குரு கவர்ந்த அந்த உணர்வின் சக்தியை
2.குரு பக்தி கொண்டு எவர் கவருகின்றாரோ
3.அவர் நினைக்கும் பொழுதெல்லாம் குருவின் சக்தி எளிதில் கிடைக்கும்.
4.அதன் மூலம் தீமை என்ற நிலைகள் தனக்குள் புகாது தடுத்து நிறுத்த முடியும்.
 
குரு பக்தி குறைந்து எவரொருவர் அதை அலட்சியப்படுத்துகின்றாரோ கிடைத்த சக்தியை உதறி விட்டது போன்று ஆகிவிடும்.
 
நாம் எண்ணும் எண்ணங்களே தெய்வமாகின்றது. கோபத்தின் உணர்வானால் அந்தக் கோபத்தைச் செயல்படுத்தும்  தெய்வமாகின்றது. வேதனையை நுகர்ந்தால் அந்த வேதனையைச் செயல்படுத்தும் தெய்வமாகின்றது.
 
ஆனால் இவை அனைத்தையும் ஒடுக்கித் தீமைகளை அகற்றி அசுர உணர்வுகளைத் தடுத்து உணர்வினை ஒளியாக மாற்றும் மெய் ஒளியின் உணர்வைப் பெருக்கியவர் அகஸ்தியர்.
 
அகஸ்தியர் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமானார்.
1.அதனைப் பின்பற்றி குரு என்ற வழிகளில்நாம் பெற்றோமானால்
2.நமது வாழ்க்கையில் வரும் தீமைகளில் இருந்து விடுபட முடியும்.
3.இந்த உடலுக்குப் பின் பிறவியில்லா நிலைகள் அடைய முடியும்.
 
குரு கொடுத்த உணர்வினைக் கெடுத்துத் தன்னைத் தாழ்த்திக் கொண்டு குருவிற்கு நாம் தவறு செய்தால் அந்தத் தவறின் பலன் முன் பகுதி சந்தோசத்தைக் கொடுக்கலாம். ஆனால் பின் பகுதி அதனின் அனுபவத்தைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.
 
இந்த உடலிலே தான் செய்யும் தவறின் உணர்வை உயிர் உணர்த்திவிடும்.
1.யாரிடத்திலும் பொய் பேசிடலாம்… ஆனால் உயிரிடமிருந்து தப்ப முடியாது.
2.பிறருக்கு நாம் தீங்கு விளைய வைத்து விடலாம்… ஆனால் உயிரிடமிருந்து தப்பவே முடியாது.
3.நாம் தவறு செய்யவில்லை… ஆனால் உயிரிடமிருந்து தப்ப முடியாது.
 
குருவுக்கு விரோதமான நிலைகளில் எவர் நடக்கின்றாரோ அதன் பலன்கள் நிச்சயம் தெரிந்துவிடும்.
1.அவருடைய வாழ்க்கையில் உயிரே அவருக்குள் உணர்த்தி
2.நல்ல பயனைப் பெறும் நிலையைத் தடைப்படுத்திவிடும்.
 
தனக்குத் தவறென்ற உணர்வை உணர்த்தி விட்டால் உணர்வின் அறிவை நிச்சயம் பெற்றே தான் ஆக வேண்டும்.
 
குறுகிய காலமே நாம் வாழ்கின்றோம். இந்த உடலை விட்டு எப்போது சென்றாலும் குரு காட்டிய அருள் வழியில் அருள் மகரிஷிகளுடன் தொடர்பு கொண்டு நாம் அங்கே செல்ல வேண்டும்.
 
ஒருவன் தீங்கு செய்கிறான் என்று அந்தத் தீங்கின் தன்மை பற்று கொண்டால் அதுவே குருவாகின்றது. அந்தத் தீங்கின் விளைவுகள் குருவாக்கப்படும் பொழுது அந்தத் தீங்கின் விளைவே உருவாகின்றது.
 
அதே சமயத்தில்
1.தீமையை அகற்றிடும் நிலைகளை குருவாக ஏற்றுக் கொண்டால்
2.“தீமையை அடக்கிடும் குருஎன்ற நிலைகள் அடைகின்றது.
3.இன்றைய செயல் நாளைய நிலைகளாக அடைகின்றது.
 
ஆகவே நாம் எதனின் நிலைகளை வளர்க்கின்றோமோ அதுவே நமக்குள் குருவாகின்றது.
 
ஒருவரை வேதனைப்படுத்தும் உணர்வினை எடுத்துக் கொண்டால் அந்த வேதனை உணர்வே நமக்குள் உருவாகின்றது. அதுவே குருவாகி நரகலோகத்தைச் சந்திக்கும் நிலையை உருவாக்குகின்றது.
 
திருடன் என்ற நிலைகள் வந்தால் அதுவே குருவாகி திருடன் என்ற நிலைகள் அடைந்து பிறருடைய துன்பங்களை அறியாது தவறு செய்யும் நிலைகளே வருகின்றன. அதுவும் குரு தான்.
 
நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றிய அருள் ஒளி என்ற நிலைகளில்
1.நாம் எந்தக் குருவைப் பின்பற்றுகின்றோமோ அந்த குரு உபதேசித்த உணர்வைத்தனக்குள் எடுத்தால்
2.தீமைகளை அகற்றி அருள் ஒளி என்ற சக்திகளை ஊட்டும்.
 
அரும் பெரும் உணர்வை நாம் பெறுவோம். இந்த வாழ்க்கையில் வரும் இருளை அகற்றுவோம். மெய்ப்பொருள் காணும் நிலைகளை உருவாக்குவோம்.
 
1.அனைத்து உலக மக்களின் உயிரையும் ஈசனாக மதிப்போம்.
2.அனைத்து உலக மக்களும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ வேண்டும் என்று தவம் இருப்போம்.

நீங்கள் சந்தோஷப்பட வேண்டும் என்ற நோக்கத்திலே தான் உபதேசிக்கின்றேன்

நீங்கள் சந்தோஷப்பட வேண்டும் என்ற நோக்கத்திலே தான் உபதேசிக்கின்றேன்


நம் உடலில் நல்ல அணுக்களை எப்படி வளர்க்க வேண்டும்…? தீய அணுக்கள் வராதபடி தடுக்கும் சக்தியாக நம் ஆறாவது அறிவின் தன்மை கொண்டு நம் உடலில் உள்ள ஜீவணுக்களை எப்படிப் பெருக்க வேண்டும்…? என்று தான் உங்களுக்குப் பயிற்சி கொடுக்கின்றேன்.
 
பயிற்சி கொடுத்தும் உடல் ஆசை வந்தால் ராவணனாக மாறி விடுகின்றது. ராவணனாக மாறிவிட்டால் நல்ல குணங்களை அது சாப்பிட்டு விடும். அசுர குணங்கள் கொண்ட அடுத்த உடலாக உயிர் மாற்றிவிடும்.
1.ஆனால் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்தால்
2.உயிரைப் போன்றே ஜீவணுக்களை மாற்றி உடலுக்குப் பின் அழியா ஒளிச் சரீரம் பெறுகின்றோம்.
 
இன்று நடக்கும் யுத்தங்களால் எத்தனையோ கடுமையான விஷங்கள் வந்தாலும் உலகமே அழிந்தாலும் இந்த உயிர் அழியாது நெருப்பிலே பட்டாலும் உயிர் அழிவதில்லை…” உடல் கருகுகிறது. கருகிய உணர்வுகளாக மாறுகின்றது.
 
பிறிதொரு உடலுக்குள் சென்றால் கருகிடும் உணர்வின் இயக்கத்தை அங்கே செயல்படுத்துகின்றது. அடுத்து வேதனைப்படும் உடலாக ஈர்த்து அந்த உடலைப் பெறுகின்றது.
 
உடல் பெறும் சந்தர்ப்பம் பெரும்பகுதி புழுவாகவும் பூச்சியாகவும் பாம்பாகவும் வாழக்கூடிய நிலைதான் வருகின்றது. விஷ அணுக்கள் பரவும் பொழுது மனித உடலிலே இது பர்ந்து விட்டால் இந்த உடலுக்குப் பின் கிருமிகள்தான் அதிகமாகும் பூச்சிகளாகத்தான் உருவாகும். மனித நிலைப் பெறுவது கடினமாகிவிடும்.
 
ஆகவே
1.இன்று கவலையும் சஞ்சலத்தையும் சங்கடத்தையும் துரத்தி விடுங்கள்.
2.கவலையும் சஞ்சலமும் சோர்வும் பெரும் பிசாசாக மாறி நல்ல குணங்களை அழித்திடும் அத்தகைய நிலைகளை அப்புறப்படுத்துங்கள்.
 
கவலையும் சோர்வும் வரும் பொழுது தாங்க முடியவில்லை என்றால் கோபமும் பழி தீர்க்கும் உணர்வுகளையும் கூட்டி வெறுப்புணர்வாகி இந்த உடலையே வெறுக்கும் நிலை வருகிறது. வெறுத்து மற்றவர்களைத் தாக்கும் உணர்ச்சிகளையும் கொண்டு வருகின்றது.
 
இதிலிருந்தெல்லாம் நீங்கள் விடுபட வேண்டும்.
1.குரு அருள் உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று தான் உபதேசித்துக் கொண்டு வருகின்றேன்.
2.வீட்டுக் கவலையும் சலிப்பையும் சங்கடத்தையும் விட்டு விடுங்கள்.
3.குருநாதர் காட்டிய வழியில் தியானிப்போம் என்ற நிலைக்கு வாருங்கள்.
4.எல்லோருக்கும் என் மீது நல்ல அன்பு வளரட்டும்.
5.குடும்பத்தில் அனைவரும் நல்லவராக வளரட்டும் ஒன்றுபட்டு வாழும் நிலை பெற வேண்டும்
6.உலக மக்கள் அனைவரும் நல்ல உணர்வு பெற வேண்டும் என்று எண்ணித் தியானித்துப் பாருங்கள்.
 
யாம் உபதேசித்த உணர்வுகள் அனைத்தும் இங்கே இருக்கின்றது அந்தப் பதிவு உங்களிடம் இருக்கின்றது உபதேசித்த உணர்வுகள் அலைகளாகக் காற்றிலே பரவி உள்ளது உலகம் முழுவதும் உள்ளது.
 
1.அதை நீங்கள் எடுத்து வளர்த்துக் கொள்ள வேண்டும் அதற்குண்டான சந்தர்ப்பத்தைத் தான் உருவாக்குகின்றோம்.
2.நீங்கள் அனைவரும் சந்தோஷப்பட வேண்டும் என்ற நோக்கிலே நான் குரு வழியில் இதை உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.

April 29, 2026

குரு என்றால் யார்…?

குரு என்றால் யார்…?

 
குரு என்றால் என்ன?
 
உடலுக்குள் இருக்கும் அனைத்திற்கும் உயிரே குருவாக இருக்கின்றது. உயிர் ஒளியின் சிகரமாக இருக்கும் பொழுது அதனின் அறிவாக இயக்குகின்றது.
 
இந்த உடலின் வாழ்க்கையை ஞானத்தின் நிலைகள் கொண்டு சிந்தித்து பாருங்கள். குருவை நாம் எப்படி மதிக்க வேண்டும்?
 
1.உங்களைப் பழித்துப் பேசும் உணர்வுகளையோ உங்களைத் துன்பப்படுத்தும் நிலைகளையோ நான் எண்ணினேன் என்றால்
2.அது என் உயிரான குருவிற்கு நான் செய்யும் தீங்கே கும்.
 
அதாவது இந்த உயிரால் வளர்க்கப்பட்ட உண்மையின் உணர்வை மறந்து… நான் எடுக்கும் உணர்வுகள் எனக்குள் வந்தால் அது குருவிற்கு நான் செய்யும் துரோகம்…
 
எண்ணிலடங்கா நரக வேதனையின் நிலைகள் உயிரால் உருவாக்கப்பட்டு எத்தனையோ நிலைகள் உயர்ந்த நிலைகள் கொண்டு சகல வித்தைகளையும் கற்றுக் கொண்டது தான் இந்த உயிர்.
 
பல சரீரங்களில் பல தீமைகளிலிருந்து விடுபட்டு நம்மை மனிதனாக உருவாக்கியது உயிர்.
1.அப்படிப்பட்ட உயிரை மதிக்கத் தவறினால் அதற்குரிய தண்டனையை அனுபவித்துத்தான் ஆக வேண்டும்.
2.துரோகிளுக்கு உறுதுணையாகப் போனவர்களின் நிலைகள் நாம் அனுபவித்துத்தான் ஆக வேண்டும்.
 
நமது குரு பைத்தியக்காரர் போல் இருந்தார். காட்டிற்குள் செல்லப்படும் பொழுது யானையைக் காட்டி அந்த யானையிடமிருந்து தப்பிக்க யானையுடன் நட்புக் கொள்ள வேண்டும்…” என்றார்.
 
பூனை எப்படி எலியின் உணர்வை நுகர்ந்து அந்த மணத்தைக் கொண்டு எலியை உணவாக உட்கொள்கின்றதோ அதைப் போல
1.“யானையின் மணத்தை நுகர்ந்து கொள்…
2.திரும்பத் திரும்ப நுகர்ந்து அந்த உணர்வின் அலைகளைப் பாய்ச்சு.
3.அதனுடைய எண்ணங்களுக்கு வரும் பொழுது யானை வலுவுடையதுதான் என்றாலும் அதன் வலுவின் தன்மை உனக்குள் சிக்கி
4.அது தாக்கும் நிலையில் இருந்து நீ தப்பிக்கலாம் என்றார்.
 
சில நேரங்களில் காட்டுக்குள் போகும் பொழுது குருநாதர் எமக்கு அனுபவத்தைக் கொடுத்தார். அந்த அனுபவத்தைத் தான் சொல்கின்றேன். நீங்கள் அலட்சியப்படுத்தினால் எனக்கு ஒன்றும் இல்லை.
 
அலட்சியப்படுத்துவோர்கள் உணர்வுகளுக்கு இந்தப் பாக்கியம் கிடைத்தைத் தவறவிட்டதாக ஆகி விடும்.

குருநாதர் கொடுத்த இன்னல்களைத் தாங்க முடியாதபடி பல முறை தற்கொலைக்கு முயற்சி செய்தேன்

குருநாதர் கொடுத்த இன்னல்களைத் தாங்க முடியாதபடி பல முறை தற்கொலைக்கு முயற்சி செய்தேன்


எனது குருநாதர் அடிக்கடி எம்மைத் துயரத்தில் ஆழ்த்தி துயரப் படும்படியாக வாழச் செய்தார் அதிலேயே உழலச் செய்தார். பல இன்னல்களைக் கொடுத்தார்.
1.அந்த இன்னல்களைச் சந்தித்த பின் குருநாதரிடமே வெறுப்பு கொண்டேன்.
2.என்னை இப்படி எல்லாம் தொல்லைப்படுத்துகின்றாயே கஷ்டப்படுத்துகின்றாயே…!
3.இது எதுவும் எனக்கு வேண்டாம் நான் பேசாமல் போகின்றேன்…! என்றேன்.
4.இன்னல்களைத் தாங்க முடியாது தற்கொலை செய்யவும் கூட முயற்சி எடுத்தேன்... ஒரு முறை அல்ல பல முறை...!
 
அவர் கொடுக்கும் இம்சைகளிலிருந்து மீள முடியாத நிலைகள் கொண்டு என்ன வாழ்க்கை…? என்று எண்ணினேன்.
 
மனைவியைக் காப்பாற்றினார் சில மகிழ்ச்சியான செயல்களும் நடந்தது. ஆனால் அதற்குப்பின் ஒவ்வொரு நொடியிலும் பல பல இன்னல்கள் வருகின்றதே…! என்ன வாழ்க்கை…? என்று எண்ணிய பின் பல முறை தற்கொலை செய்யும் உணர்வுக்கே அது என்னை அழைத்துச் சென்றது.
 
ப்பொழுது தான் குருநாதர் சுட்டிக் காட்டுகின்றார்.
 
உன்னுடைய உணர்வு கொண்டு பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் என்று விரும்புகின்றாய். ஆனாலும்ந்தத் தீமையின் உணர்வுகளை உனக்குள் நீ நுகரும் பொழுது
1.உன் நன்மையின் நிலைகளை அது எவ்வாறு செயலற்றதாக மாற்றுகின்றது…?
2.உன் உடலை அழித்திட வேண்டும் என்று இந்த உணர்ச்சிகள் உன்னை எப்படித் தூண்டுகின்றது.
 
எத்தனையோ உடல்களில் உன்னைக் காத்திட வேண்டும்…” என்ற உணர்வை நினைவு கொண்டாய் பரிணாம வளர்ச்சியில் இன்று மனிதனாக ஆனாய்.
 
ஆனால் மனிதரான பின் சிறு குறைகளை உன்னால் தாங்க முடியாது இந்த உணர்வின் தன்மை வளர்க்கப்படும் பொழுது இதே எண்ணம் இந்த உடலை அழிக்கச் செய்கின்றது.
 
இந்த உடலை அழித்து விட்டால்
1.உடலை அழித்திடும் உணர்வு கொண்டு இன்னொரு உடலை அந்த உடலையும் அழித்துவிடும் நிலைகளுக்குச் சென்று
2.இது போன்று உடலை அழித்துப் புசித்திடும் உணர்வின் தன்மை கொண்ட மிருகமாக நீ பிறப்பாய் போ…! என்று சாபமிடும் நிலையாக உணர்த்தினார்.
 
அதைச் சிந்தித்துப் பார் என்றார். அந்த உணர்வின் அலைகள் உனக்குள் எவ்வாறு செயல்படுகின்றது…? எதனை நீ அறிய வேண்டும்…? என்ற நிலைகளைத் தெளிவுபடுத்திக் காட்டினார்.
 
ஆகவே நாம் எதைக் கருத்தில் கொள்ள வேண்டும்…? எதனை நமக்குள் பருக வேண்டும்…? என்ற பேருண்மையை குருநாதர் அருளினார். அந்த உணர்வின் தன்மையை இன்று பாட நூல்களில் காட்டுவது போல அனுபவ ரீதியிலே எனக்குக் கொடுத்தார்.
 
1.நீங்கள் அனைவரும் தைப் பெற முடியும்
2.உங்களால் தீமைகளை அகற்றும் சக்தி பெற முடியும்
3.தீமையற்ற உடலாக மாற்ற முடியும்
4.தீமையற்ற நிலைகளை உங்களுக்குள் விளைய வைத்துப் பிறவா நிலை என்ற பெருநிலை அடைய முடியும்.
5.உங்கள் பார்வையால் பேச்சால் பிறருடைய தீமைகளைப் போக்க முடியும்
6.உங்கள் குடும்பத்தில் வரும் சிக்கலை அகற்ற முடியும்
7.உங்கள் வாழ்க்கையில் மன நிம்மதி பெற முடியும் என்று
8.குருநாதர் எனக்கு உணர்த்தியதை உங்களுக்குத் தெளிவாகக் காட்டுகின்றோம்… அதைப் போதிக்கின்றோம்.
 
ஆகவே எமது குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்த அருள் சக்திகளை அனைவரும் எளிதில் பெற முடியும் குடும்பத்தில் வரும் சிக்கல்களை நீங்கள் மாற்ற முடியும்.
 
உங்களை நீங்கள் நம்புங்கள்…!

April 28, 2026

தொழிலில் நஷ்டம் வராமல் தடுக்க நாம் என்ன செய்ய வேண்டும்…?

தொழிலில் நஷ்டம் வராமல் தடுக்க நாம் என்ன செய்ய வேண்டும்…?


மிளகாய் காரம் என்றால் தூக்கி எறிந்து விடுகின்றோமோ? அதைச் சேர்த்துச் சுவையாக மாற்றுகின்றோம் அல்லவா…!
 
அதாவது காரம் என்ற உணர்வு கோபப்படுபவர்களை வேதனைப்படுபவர்களை வெறுப்படைபவர்களை துயரப்படுபவர்களை  இந்த மாதிரி சங்கடங்களைக் கண்ணுற்றுப் பார்க்கும் பொழுது தெரிந்து கொள்கின்றோம்.
 
தனித்து விட்டால் அந்த உணர்வின் தன்மை நமக்குள் சேர்த்துக் கார உணர்ச்சிகள் அதிகமாகி நம் அணுக்களில் பெருக்கி விட்டால் இதன் நிலைகளில் ரூபம் மாறிவிடும்.
 
1.சில வீடுகளில் இப்படிப் பேசுகிறானே உருப்படுவானாஎன்று சொல்லிச் சொல்லி
2.இவர்களே உருப்படாமால் பண்ணிக் கொள்வதைப் பார்க்கலாம்.
3.இந்த மாதிரிப் பேசுகிறவர்கள் உடல்களிலே நிறையச் சங்கடங்கள் வரும்.
4.குடும்பத்தில் சண்டை வரும்குழந்தைகளிடம் வெறுப்படைவார்கள்.
5.இவர்கள் எண்ணமே உதவி செய்வதற்கு மாறாகப் பிரித்துவிட்டு விடும்.
6.நண்பர்களிடமும் இதே போன்ற உணர்வுகளைத் தோன்றச் செய்து பிரித்துவிடும்.
 
எப்பொழுது பார்த்தாலும் இதே போலஉருப்படுவானா?” என்று சொல்வதைக் கேட்டு நண்பர்களுக்கும் இவன் உருப்படுவானா? என்ற எண்ணத்தைத் தோற்றுவித்துவிடும்.
 
அவர் இவ்வாறு காரம் என்ற நிலைகளை எடுத்தால் நோய் என்ற நிலைகள் விளைகின்றது. அதனை நாம் எடுத்தால் நமக்குள்ளும் அதே நிலையாக மாற்றும்.
 
ஆகையினால் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்றால் நமக்குப் பாதுகாப்புத் தேவை.
 
ஒவ்வொரு நொடியிலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று இதை எடுத்து வளர்த்துக் கொண்டால் இதன் வழி நமக்கு இந்த உண்மையின் நிலைகள் வரும்…”
 
நாம் தொழிலுக்குச் செல்லும் பொழுது இதே மாதிரி ஆத்ம சுத்தி செய்து விட்டு நம்மிடம் வேலை செய்பவர்கள் அனைவரும்…”
1.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
2.பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும்
3.தொழிலில் நல்ல நாட்டம் வரவேண்டும்
4.தெளிவான மனம் பெற வேண்டும் தெளிவாகத் தொழில் செய்யும் அந்த எண்ணம் வரவேண்டும் என்று
5.உங்கள் இடத்திலே உட்கார்ந்து ஒரு பார்வை பார்க்க வேண்டும்.
6.நீங்கள் எதை எண்ணுகிறீர்களோ அதே போன்று, நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.
 
யாராவது தவறு செய்கிறார்கள் என்றால் இயற்கையில் அவர்களது குடும்பத்தில் எத்தனையோ விதமான நிலைகள் இருக்கும்... பொருளாதாரத்தில் குறை இருக்கலாம் சொந்தத்திற்குள் யாராவது குறையாகப் பேசியிருக்கலாம்.
 
இந்த மாதிரி குறைகளைப் பேசி அவர்களுக்குள் வெறுப்பான நிலைகள் இருந்தால் நம்மிடம் வேலை பார்க்கும் பொழுது சிந்தனையிழந்து வேலை செய்யும் நிலை வரும். அப்பொழுது, நம் பொருள்களுக்கு நஷ்டம் வரும்.
 
அவ்வாறு வராதபடி செய்ய வேண்டுமென்றால்
1.நாம் அவருக்கு அருள் உணர்வுகளைப் பாய்ச்சி
2.மகரிஷிகளின் அருள் சக்தியால் நீ நன்றாக வேலை செய்வாய்
3.மகரிஷிகளின் க்தியால் நல்ல முறையில் உடல் நலத்துடனும் சிந்திக்கும் சக்தியும் பெற்று நலமாக இருப்பாய்
4.என்று அவனிடம் சொல்லி அனுப்ப வேண்டும்.
 
இதைப் போல நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் தினம்  தினம் அவருக்குச் சொல்ல சொல்ல அவர் காதிலே கேட்கக் கேட்க (தினமும் வேலைக்கு வந்தவுடன் அவரிடம் சொல்லிவிட வேண்டும்). “மகரிஷிகள் அருள் சக்தியால் நீ நன்றாக இருப்பாய்தொழிலில் சிறந்து விளங்க வேண்டும்என்று வாக்குகள் கொடுத்து இதே போன்று செய்யச் சொல்லிவிட வேண்டும்.
 
சில வெறுப்பான நிலைகளோ சிந்தனையிழக்கும் நிலைகளோ அதிகம் இருந்தால் விபூதியைக் எடுத்து கையில் கொடுத்து…” இதே போல சொல்லச் சொல்லி வேலை செய்யச் சொல்லுங்கள்.
 
இவ்வாறு செய்யச் சொன்னீர்கள் என்றால் தொழில் நன்றாக இருக்கும்.
 
மேலும் எங்கள் வாடிக்கையாளர்கள் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தியால் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணும் பழக்கத்திற்குக் கொண்டு வர வேண்டும்.
 
சில சமயம் இதெல்லாம் மீறி நமது தொழிலில் சில குறைபாடுகளைக் கண்டால் அந்தக் குறை நம்மை இயக்கிவிடக் கூடாது…”
 
அந்தக் குறை உணர்வு வந்தவுடன் நமக்குக் கோபம் வரும் அல்லது வேதனைப்படுவோம். நாம் இதை நுகர்ந்தவுடனே நமது உயிர் இந்த உணர்வை, உணர்ச்சியால் உடல் முழுவதும் பரப்புகின்றது. நமது இரத்தநாளங்களில் கலக்கின்றது. அப்பொழுது என்ன செய்கின்றது?
 
1.நமது உடலில் உள்ள நல்ல அணுக்களில் விஷத்தன்மை போன உடனே அதை ஏற்க மறுக்கும்.
2.நாம் தைரியமாகச் செய்யக் கூடிய எண்ணங்களும் பலவீனமடையும்.
 
ஆகையினால் அவ்வாறு விடாதபடி அடுத்த நிமிடம்ஈஸ்வராஎன்று சொல்லி உங்கள் உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் இரத்தநாளங்களில் படர வேண்டும் என்று இரண்டு நிமிடம் எடுத்துவிட்டுப் பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும்தெளிவான மனம் பெற வேண்டும் தொழிலில் சிந்தித்துச் செயல்படும் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று (குறை செய்தவரை) எண்ணி நாம் இங்கே உருவாக்கிவிட வேண்டும்.
 
அப்பொழுது அவரின் உணர்வு இங்கே சிறுத்து விடுகின்றது. பின் அவரைக் கூப்பிட்டு சிந்தனையுடன் செய்வீர்கள் நன்றாக நீங்கள் செயல்படுவீர்கள்என்று சொல்லிவிடுங்கள்.
 
இதனை ஒரு பழக்கத்திற்குக் கொண்டுவர வேண்டும்.
 
ஏனென்றால் அவர் குடும்பத்தில் இருக்கும் சிக்கலால் அவர் அறியாமல் செயல்படும் பொழுது அவர் உணர்வை நாம் நுகர்ந்தோம் என்றால் நமது உடலிலும் கலக்கின்றது.
 
சேற்றில் விழுந்து வருபவர்களைக் கட்டித் தழுவினால் எப்படி இருக்கும்…? நம் உடலிலும் சேறாகிவிடும்.
1.ஆகையினால் அந்தச் சேற்றை நீக்கக் கூடிய அளவிற்கு
2.நம் உடலில் ஒட்டிவிடாதபடி, அதனைச் செயல்படுத்த வேண்டும்.
3.தொழிலில் இது ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும்.
 
இவ்வாறு
1.ஒவ்வொரு நிமிடமும் அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணும் பொழுது
2.ஒவ்வொரு கெட்ட குணத்திலேயும் அதை அடக்கக்கூடிய சக்தியாக நமது எண்ணம்வருகிறது.
 
அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நம் உயிரில் பட்டவுடன் இது கலந்து அவர் நல்ல குணம் வளர வேண்டும் என்கின்ற பொழுது இதையே நமது உயிர் நல்ல அணுக்களாக நமது உடலில் மாற்றுகின்றது.
 
நமது உடலில் உள்ள நல்ல அணுக்கள் அனைத்திலுமே அந்த உணர்வு அனைத்தையும் சேர்த்து இந்த வாழ்க்கையில் எத்தகைய தீமையின் நிலை வந்தாலும் சமப்படுத்த முடியும்.
 
மிளகாய் தனியாகக் காரமாக இருந்தாலும் குழம்பில் போட்டவுடன் ருசியாகிவிடுகின்றது. உப்பு தனியாகக் கரித்தாலும் குழம்புடன் சேர்க்கப்படும் பொழுது தணிந்து விடுகின்றது.
 
1.இதே போல நாம் தொழில் செய்யும் இடங்களில் பலவிதமான நிலைகள் இருந்தாலும் நாம் இது போன்று, செய்து பழக வேண்டும்.
2.தொழிலில் இது ஒரு பழக்கத்திற்கு வரவேண்டும்.