சூரியன் தன் உணர்வின்
ஆற்றல் கொண்டு வெப்ப காந்தங்களாக பரவச் செய்து எதை எதையெல்லாம் தனக்குள் எடுத்து உயர்ந்த
நிலைகள் பெற்றதோ அதை போல நாமும் பெறவே “பொங்கல் பண்டிகை”
இந்தப் பிரஞ்சத்தில்
இருக்கும்
அனைத்தையும் சூரியன் போங்கச் செய்வது போல் நம் உயிரின் துணை
கொண்டு நம் உடலுக்குள் உயர்ந்த எண்ணங்களைச் செலுத்தி நாம் நம் உடலிலே
அதைப் பொங்கச் செய்வது தான் பொங்கல் நன்னாள்.
சூரியன் அனைத்துச்
சக்திகளையும் பொங்க வைக்கின்றது. நாம் பொங்கல் வைக்கும் பொழுது, எவ்வாறு அறுசுவையாகப் படைக்கின்றோமோ அதைப் போல் மனித வாழ்க்கையில் நாம் பொங்க
வைக்க வேண்டும்.
மகரிஷிகள் எப்படி
நஞ்சைப் பிளந்து உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றி விண்ணுலகில் இன்றும் நிலை கொண்டு விண்ணிலிருந்து
வரும் நஞ்சின் தன்மை முறித்து அதை உணவாக எடுத்துக் கொண்டு சப்தரிஷி மண்டலங்களாக ஒளியாக
வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.
அதனின்று வெளிப்படும்
உணர்வின் அலைகளை சூரியனின் காந்த சக்தி கவர்ந்து பூமிக்குள் படரச் செய்யும் பொழுது
நாம் அதைக்
கவர்ந்து ஒரு வித்தாக “தை பிறந்தால் வழி பிறக்கும்”
என்ற நிலையில் அந்த ஞானியின் அருள் சக்திகளை விளையச் செய்ய
வேண்டும்.
மகரிஷிகள் அருள்
ஒளி இந்த
உலக மக்கள் அனைவரும் பெறவேண்டும். அவர்கள் பொருளறிது செயல்படும் திறன்
பெற வேண்டும். அவர்கள் குடும்பத்தில் ஒற்றுமை பெற வேண்டும் என்ற
நாம் எண்ணி
1.நம் உயிரான
நெருப்புக்குள்…
2.நம் உடலான
பாத்திரத்திற்குள் செலுத்தி..
3.இதைப்
பொங்க வைக்க வேண்டும் என்ற நிலை கொண்டுதான்
4.தைப் பொங்கல் என்று
காட்டினார்கள் அந்த மெய் ஞானிகள்.