ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 18, 2015

உயிர் நம்மை நேரடியாகத் துருவ நட்சத்திரத்திற்கே கொண்டு போய் நிறுத்தும்... எப்படி...?

உங்கள் உடலிலுள்ள எல்லா அணுக்களையும் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெறச் செய்வதற்குத்தான் இந்தத் தியானப் பயிற்சியைக் கொடுக்கின்றோம்.

எனக்கு எப்படி குருநாதர் ஒவ்வொரு அணுவையும் பெறச் செய்தாரோ அதே மாதிரி உங்கள் உடலிலுள்ள அணுக்களையும் பெறச் செய்கிறோம்.

ஒவ்வொரு அணுவும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் உங்களைத் தியானிக்கச் சொல்லிவிட்டு
நீங்கள் பெறவேண்டும் என்று யாம் தியானிக்கும் போது,
நீங்கள் கூட்டுத் தியானம் இருக்கும் பொழுது வித்தியாசம் தெரியும்,
ஜிவ்.., ஜிவ்.., என்று இழுக்கும்.

அப்பொழுது அந்த உணர்வைப் பெறுகின்றீர்கள். இதை ஓரளவிற்குப் பழகிக் கொண்டால் அடுத்தாற்போல் இது இழுப்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும்.
                                     
விவசாயத்தில் வித்து போடுவதற்கு முன்பு குப்பையை அதிகமாகப் போட்டால் வித்து வெந்து போய்விடும். அதனுடன் உப்பையும் சேர்த்து உரத்தையும் போட்டால் வெந்து போய்விடும்.

குப்பைக்குள் இருப்பது விஷத்தன்மையாக ஆனால் இதில் தண்டுப்புழு உருவாகும். குப்பை போடுவதிலும் வித்தியாசம் இருக்கின்றது.

அதே சமயத்தில் இன்று கெமிக்கல் கலந்த நிலைகளை நாம் அதிகமாகச் செய்கின்றோம். இது குப்பைக்குத்தான் போகின்றது. முன்பு யாரும் கெமிக்கல் கலந்து போடுவதில்லை.
இதற்குள் போய்விட்டதென்றால் இதில் தண்டுப்புழு வருகின்றது,
விஷமான கிருமிகள் வருகிறது.

இன்று பயிரினங்களே மிகவும் மோசமான நிலைகளில் வந்துவிட்டது. இதையும் குருநாதர் காட்டுகின்றார். முந்தைய செயல்களுக்கும் இன்றைய நிலைகளுக்கும் பார்க்கின்றோம்.

நாம் குப்பைகளைக் கொண்டுபோய் வயலில் போட்டவுடன் அது ஆவியாக மாறுகின்றது
இந்தக் குப்பையில் இருக்கக்கூடிய நிலைகளை
பக்குவமாக எடுத்து வெளியில் வந்துவிட்டது என்றால்
செடி அதை உறிஞ்ச ஆரம்பிக்கும்

அதைப் போன்று நாம் ஒவ்வொரு நிமிடமும் நம் உடலிலுள்ள அணுக்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறத் தியானிக்கும் பொழுது நன்றாக அந்தச் சக்தியை இழுக்க முடியும்.

அப்பொழுது அது கொஞ்சம் கொஞ்சமாக வளர ஆரம்பித்துவிடும். அப்படி வளரும்போது உங்களிடம் இருக்கும்
பழைய கசடுகள் எல்லாவற்றையும் உறிஞ்சி எடுத்துவிடும்.
அதை ஒளியாக மாற்றிவிடும். அதை நீங்கள் பார்க்கலாம்.

உங்கள் உடல் உறுப்புகளுக்குள் சில தீமைகள் விளைந்தாலும் கூட அதை இது கொஞ்சம் கொஞ்சமாகக் கரைத்துவிடும்.

ஆனால் இது ஒளியான பிற்பாடு யாரையும் கேட்காது. திடீரென்று அதுவாகப் போய்க்கொண்டே இருக்கும்.

என்ன நேற்று வரையிலும் நன்றாக இருந்தார், இன்று உடலை விட்டுப் போய்விட்டார் என்று நினைத்தீர்களென்றால் என்ன அர்த்தம்? ஏனென்றால், நாம் ஓளி சரீரம் பெறுவதற்குத்தான் இப்படித் தியானிக்கின்றோம்.

வேதனை அதிகமாவிட்டால் எப்பொழுது உடலைவிட்டுப் போவோம் என்று இருக்கும்.

முழுமையாகிவிட்டால் இது நம்மைக் கேட்காமலேயே போய்விடும்.
நாம் வளர்ப்பதற்குத் தகுந்த மாதிரி நம் உயிர்
நேரடியாக துருவ நட்சத்திரத்திற்கே
நம்மைக் கொண்டுபோய் நிறுத்தும்.