ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 20, 2018

“நல்லது கெட்டது” என்று தனித் தனியாக எதுவும் இருக்கின்றதா...?

குழம்பு வைக்க காரம் புளிப்பு உப்பு எல்லாம் தேவைதான். ஆனால் சமப்படுத்துதல் வேண்டும். நமக்குள் அனைத்து உணர்வுகளும் இருந்தால்தான் அனைத்தையும் பெருகின்றேன்.

தீமை என்ற உணர்வு நமக்குள் இருந்தால் எதையும் அறிய முடியாது. வெறுப்பான நிலைகள் நமகுள் இல்லை என்றால் வெறுப்பின் தன்மை வராது. ஏனென்றால் நமக்கு அது தெரியாது.

ஆனால் தெரியப்படுத்தும் வெறுப்பு இருந்தாலும் அந்த வெறுப்பின் தன்மை தெரிவித்து வெறுப்பின் தன்மைகளையே வளர்த்துக் கொண்டால், வெறுப்பின் தன்மையே வரும். வெறுப்பை விலக்க வேண்டும்.

உப்பு கைப்பு என்ற நிலை இருந்தாலும் சுவையைக் கூட்ட உப்பைக் கலக்க வேண்டும். உணர்ச்சியைத் தூண்டும் காரத்தைக் குறைக்க வேண்டும். காரத்தை அதிகமாகக் கலந்தால் ஆபத்தை உருவாக்கும்.

இதைப் போன்ற நிலைகளில் எதுவும் கெட்டது அல்ல.

நல்லது நல்லதும் அல்ல. கெட்டது கெட்டதும் அல்ல. ஆறாவது அறிவு கொண்ட நாம் நமக்குள் அறிந்து
1.தவறு என்று உணர்ந்துவிட்டால்
2.நாமே திருத்தி அதை மாற்றி அமைக்க வேண்டும்.

பிறருடைய நிலைகளைக் குறை கூறுவது போல் நாம் நுகர்ந்தறிந்த உணர்வுக்குள் குறைகள் வராது நீக்கிப் பழக வேண்டும்.

நம்மை அறியாது குறைகள் வந்தாலும் நமக்கு நாமே நீக்க வேண்டுமே தவிர
1.நம்மால் பிறருக்குத் தீங்கு வரக் கூடாது.
2.நம்மால் பிறரது மனம் உடையக் கூடாது என்ற இந்த உணர்வுகளை நமக்குள் வளர்த்தல் வேண்டும்.

ஒரு சொல்லைச் சொல்லும்போது அது ஒருவரை புண்படச் செய்யும் நிலையாக வந்துவிடலாம். அப்பொழுது பகைமை ஆகிவிடும். எதனால் வந்ததோ அதுவே நமக்குள்ளும் விளைந்துவிடும்.

அருள் ஞானத்தை எப்படிப் பெருக்குவது? இந்தத் தீமைகளை எப்படி அடக்குவது? என்ற நிலைக்கு ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தையும் கொடுக்கின்றோம்.

அதைப் பயன்படுத்தி மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்து உங்களுக்குள் வரும் தீமைகளை அவ்வப்பொழுது அகற்றப் பழகிக்  கொள்ளுங்கள்.

என் (ஞானகுரு) சக்தியின் நிலைகளை நீங்கள் பயன்படுத்தினாலும் உங்களை உயர்த்திக் காட்டினால்தான் எல்லோருக்கும் சந்தோஷம் கிடைக்கும். உங்களுக்கும் சந்தோஷம் கிடைக்கும்.

எல்லோரையும் சந்தோஷப்பட வைக்கலாம். எமது அருளாசிகள்.