ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

Showing posts with label குழந்தைகள். Show all posts
Showing posts with label குழந்தைகள். Show all posts

April 2, 2026

குழந்தைகளுக்கு நாம் எப்படித் தியானிக்க வேண்டும்...?

குழந்தைகளுக்கு நாம் எப்படித் தியானிக்க வேண்டும்...?


நமது குடும்பத்தில் குழந்தைகள் நன்றாகப் படித்துக் கொண்டிருக்கும் பொழுது சந்தர்ப்ப பேதத்தால் படிப்பு குறைந்து போனால்ஐயோ நன்றாகப் படித்துக் கொண்டிருந்த குழந்தை இப்படி ஆகிவிட்டதேஎன்று வேதனைப்பட்டுக் குழந்தைகளை எண்ணவே கூடாது.
 
அந்த மாதிரிச் சொற்கள் வந்தாலேஈஸ்வராஎன்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும். எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.
 
அதற்குப் பின்… குழந்தையை நினைத்து அகஸ்திய மாமகரிஷியின் அருள் சக்தியும் துருவ மகரிஷியின் அருள் சக்தியும் சிந்தித்துச் செயல்படும் அந்தச் சக்தியும் என் குழந்தை பெற வேண்டும்,
1.நல்ல மன வலிமை பெற வேண்டும்,
2.கல்வியில் சிறந்த ஞானம் பெறக்கூடிய அருள் சக்தி பெற வேண்டும் என்று
3.நமது உடலில் இதை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
 
நாம் குழந்தைகளைப் பார்க்கும் பொழுதெல்லாம் கல்வியில் சிறந்த மாணவனாக மாணவியாக வர வேண்டும் என்று இந்த உணர்வோடு பார்த்து நீ வெற்றி பெறுவாய் தேர்வில் முன்னணியில் வருவாய்…!” என்று மனதில் எண்ணிப் பார்த்தால் போதும்.
 
பள்ளிக்குப் போகும் பொழுது ஆசீர்வாதம் கேட்டால் இதே போன்று சொல்லால் சொல்லி அந்த உணர்வைப் பாய்ச்சி அனுப்ப வேண்டும்.
 
அதே சமயத்தில் குழந்தைகள் மற்ற நேரங்களில் அவர்கள் உணர்வுக்குத்தக்க சில குறைபாடுகள் வருகிறது என்றால் அந்த உணர்வு நமக்குள் வந்துவிடும்.
 
அந்த உணர்வு நமக்குள் வராதபடி ஈஸ்வராஎன்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும், எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று நாம் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.
 
பின் பையனை எண்ணி
1.அவன் சிந்தித்துச் செயல்படும் சக்தியும் மலரைப் போன்ற மணமும்
2.மகிழ்ந்து வாழும் சக்தியும் மகிழச் செய்யும் உணர்வுகளும் அவனுக்குள் வளர வேண்டும்.
3.தெளிந்த மணமும் தெளிவான நிலை அவன் பெற வேண்டும் என்ற உணர்வை எடுத்து
4.நமக்குள் மாற்றி உருவாக்கி விட்டால் அவனைப் பார்க்கும் பொழுதெல்லாம் இந்த எண்ணங்கள் தான் வரும்.
 
இல்லாவிடில் குறை வந்து விட்டால் அவனை எண்ணும் பொழுதெல்லாம் கோபம் வரும். நம் உணர்வு அவன் மேல் பாயும்.
 
அப்பொழுது அந்த உணர்வின் எண்ணங்கள் அவன் மீது இப்படியே பண்ணிக் கொண்டிருக்கிறானேஎன்ன ஆகப்போகிறானோ?” என்று எண்ணும் போது அவன் சிந்தனை பூராவுமே குறைக்கப்பட்டு அவன் சிந்திக்கும் தன்மையையே இழந்து விடுகிறான்.
 
அப்படி ஆகாதபடி… துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நாம் ஒவ்வொரு நொடியிலேயும் எடுத்து அதை நம் உடலுக்குள்ளும் குழந்தைக்குள்ளும் சேர்த்துப் பழக வேண்டும்.

August 5, 2020

நம் பையன் சீராகப் படிக்கவில்லை என்றால்... உடல் நலம் சரியில்லை என்றால் எப்படித் தியானிக்க வேண்டும்...?


அந்தத் துருவ மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா பெறவேண்டும் என்று நமக்குள் முதலில் வலு ஏற்றிக் கொள்ள வேண்டும்.

1.என் பையன் உடல் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் படர வேண்டும்
2.அவன் அறியாது இருள்கள் நீங்க வேண்டும்
3.பொருள் காணும் உணர்வுகள் அவன் பெறவேண்டும்.
4.அறிந்துணர்ந்து செயல்படும் சக்தி அவன் பெறவேண்டும் என்று
5.இப்படி இந்த உணர்வைத் தாய் தனக்குள் சமைத்து அந்த உணர்வுடன் பையனை உற்று நோக்கி
6.ஒரு உணவுப் பொருளைக் கையிலே கொடுத்து... இதை நீ சாப்பிடப்பா...
7.உனக்கு நல்ல ஞாபக சக்தியும் ஞான சக்தியும் வரும் என்று சொல்லுங்கள்.

அதைப் போல சந்தர்ப்பத்தில் குழந்தைகளுக்கு உடல் நலம் இல்லை என்றால் என்ன செய்ய வேண்டும்...?

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டுமென்று தாய் தனக்குள் எண்ணி வலுவாக்கிய பின்
1.தன் பையன் இந்த உடல் நோய் நீங்க வேண்டும் என்ற உணர்வை இந்தத் தாய் எடுத்து
2.சிறு விபூதியோ ஏதோ ஒன்றை எடுத்துக் கொடுத்தாலும்
3.இந்த உணர்வு கலந்து அந்த உடல் ஆரோக்கியம் பெறும் சக்தி கிடைக்கும்
4.கடினமான மருந்தும் தேவையில்லை.

அகஸ்தியன் பல தாவர இனங்களின் தன்மையை விஷத்தின் தன்மையை ஒடுக்கியவர். அந்த உணர்வின் தன்மை பெற்று விஷம் கொண்ட மிருகங்களையும் அடக்கியவர்.

இப்படி அந்த அகஸ்தியன் பல தீமைகளை வென்று தீமைகளை வென்றிடும் உணர்வை வளர்த்துத் துருவனாகி திருமணமான பின் தன் மனைவியின் உடலில் அதை எல்லாம் பாய்ச்சிக் கணவனும் மனைவியும் இரண்டறக் கலந்து நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றியவர்கள். துருவ நட்சத்திரமாக இன்றும் உள்ளார்கள்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நுகர்ந்து
1.உங்கள்  குழந்தைக்கு அந்தச் சக்தி பெற வேண்டும் என்று எண்ணத்தில்
2.அவனைக் கண் கொண்டு உற்றுப் பார்த்து
3.அவன் கண்ணின் நினைவிற்குள் அவன் இந்த நோயிலிருந்து விடுபட வேண்டும் என்று
4.எதாவது ஒரு ஆகாரத்தை எடுத்து ஜெபித்துக் கொடுங்கள்.

அந்தக் குழந்தை உடல் நலமாகும் பார்க்கலாம்.

மருந்துகளை டாக்டர் கொடுத்தாலும் நாம் அடிக்கடி இந்த முறைப்படி செய்தோமென்றால் கடும் நோயாக உருவாகாதபடி அவனைக் காத்திடலாம்... நோயை தடுத்திடலாம்.

இதெல்லாம் நமக்குள் ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும்.

ஒரு பையன் சீராக வரவில்லை என்றால் இதைப் போல அந்தத் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும். துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று எண்ணி அந்த பையனுக்கு நல்லொழுக்கமும் நல்ல ஞானமும் உலகை அறிந்திடும் அருள் ஞானமும் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

இதைப் போல எண்ணி அவனுக்கு எதாவது பிரசாதத்தைக் கொடுத்து இதை உட்கொள்ளச் சொல்லுங்கள்.
1.நீ ஞானி ஆவாய்... உலகை அறிவாய்... உலக ஞானம் பெறுவாய்...!
2.நல்லொழுக்கம் பெறுவாய் பிறர் போற்றும் நிலையில் உன் வாழ்க்கை அமையும் என்று
3.இதைப் போன்ற உயர்ந்த வாக்கினை நீங்கள் கொடுத்துப் பாருங்கள்.

இந்த உணர்வின் தன்மை அவனுக்குள் பதிவாகி... நீங்கள் சொன்னது அவனுக்குள் மீண்டும் நினைவாகி... நீங்கள் எண்ணிய உணர்வு அங்கே இயக்கப்பட்டு... அவன் தீமையில் இருந்து விடுபடும் நிலை பெறுகின்றான்... நோயிலிருந்தும் விடுபடுகின்றான்.

August 4, 2020

நச்சு... நச்சு... என்று கைக் குழந்தைகள் அழுவதன் காரணம் என்ன...?


உதாரணமாக ஒரு கருவுற்ற தாய் இருக்கிறது என்று வைத்துக் கொல்வோம். பக்கத்து வீட்டுக்காரர்களுக்குள் சண்டை போட்டார்கள் என்றால் அவர்கள் மேல் இந்தக் கருவுற்ற தாய் அன்பாக இருந்தால் அதைப் போய்ப் பார்ப்பார்கள்.

யார் மேல் பற்றுடன் இருக்கின்றதோ இன்னொருத்தர் அவரைக்  கோபமாகப் பேசினனால் கருவுற்ற தாய் அந்தப் பாசமாக உள்ளவர்களை உற்றுப் பார்த்து அடப் பாவி…. அவர் சும்மா இருக்கிறார் இப்படி பேசிக் கொண்டே இருக்கின்றார்களே...! என்று அந்த உணர்வை எண்ணுகிறது.

1.இப்படிப் பேசுகின்றார்களே என்று வேதனையான உணர்வுகளை சுவாசித்து விட்டால்
2.தாய் நுகர்ந்த உணர்வுகள் கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்கும் இது பூர்வ புண்ணியமாக அமைந்துவிடுகின்றது.

இதைக் கேட்டறிந்த பின் தாய் என்ன செய்யும்...? வருபவர்களிடம் எல்லாம் சொல்லும். இந்த அம்மா சும்மா இருக்கின்றது... கோபமாகப் பேசுகிறார்கள் திட்டுகிறார்கள் என்று சொல்லிக் கொண்டே இருக்கும்.

ஆனால் கருவுற்றிற்கும் பொழுது சாதாரணமாகவே தாய் உடலில் அந்த சோர்வின் தன்மை இருக்கும். சண்டை இடும் போது எந்தக் கடினமான வார்த்தையைத் தாய் கேட்டதோ மீண்டும் அந்த உணர்வே இயக்கிக் கொண்டிருக்கும்.

பலவீனம் அடையப்படும் போது அவர் கேட்டறிந்த உணர்வுகள் இந்தக் கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்கு உணர்வாகும்போது பார்க்கலாம்... அந்த குழந்தைகள் துடித்துக் கொண்டே தான் இருக்கும்.

இந்த உணர்வின் நிலைகளை தாங்காது அப்பொழுது அந்த உணர்ச்சிகளை தூண்டும்போது தாயின் உடல் மேலும் சோர்வடையும் அதே சமயத்தில் பதிந்த உணர்வை நுகர அங்கே சண்டையிட்டோர் நினைவுகள் இது அதிகமாகக் கூடும்.

நாம் எல்லாப் பொருள்களையும் போட்டு அதிலே காரத்தை அதிகமாக இணைத்து விட்டால் நல்ல சுவையை இழக்கச் செய்து காரத்தின் தன்மையே முன்னணியில் இருக்கும்.

அதைப் போன்று தான் நாம் கேட்டறிந்த உணர்வுகள் நாம் சதா திரும்ப எண்ணும் போது கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்கும் நம்மை அறியாமலேயே இந்த உணர்வுகள் பதிந்து விடுகின்றது.

பின் அந்தக் குழந்தை பிறந்த பின் எப்படி அவர்கள் சண்டையிட்டு வேதனைப்பட்டாரோ இந்த வேதனையான உணர்வு கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்குள் விளைந்து பிறந்தபின் நச்சு... நச்சு...! என்று அழுகும்.

நச்சு... நச்சு...! என்று அழுகப்படும்போது ஐயோ பாவமே...! இந்தக் குழந்தைக்கு என்ன ஆகிவிட்டது...? என்ற நிலைகள் இதை அடிக்கடி எண்ணி அதே வேதனையின் உணர்வை நமக்குள் மீண்டும் வளர்த்திடும் சந்தர்ப்பமாகி விடுகின்றது. நம் நல்ல குணங்களைப் பலவீனமடையச் செய்கின்றது.

சண்டையிட்டதை நினைத்து தாயின் கருவிலே வளரும்போது அது குழந்தைக்குப் பூர்வ புண்ணியமாக அமைந்தாலும்... தாய் அவனைக் காத்திடும் நிலைகள் இன்னும் அதிகமாகக் கூடக் கூடக் கூட... இந்த உணர்வின் தன்மை தாயின் உடலுக்குள் உருவாகி... அல்லும் பகலும் முழித்திருந்து வேதனையின் வினையாக தனக்குள் வித்தாகி அடிக்கடி இந்த வேதனையை நுகர வேண்டி வரும்.

தாய் ஆரம்பத்தில் எதை உற்றுப் பார்த்ததோ அது தாய் உடலில் வினையாகச் சேர்கின்றது. கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்கு இது பூர்வ புண்ணியமாக அமைகின்றது. பின் அந்தக் குழந்தை வளர்ந்தபின் அந்த உணர்வுகள் இயக்கும்போது ஏன் அழுகின்றது...? அது என்ன...? என்று தெரியாது.

சில குழந்தைகளைப் பார்க்கலாம். இந்த மாதிரி சண்டையிட்டோரைப் பார்த்திருந்தால் இனம் புரியாமல் நச்சு... நச்சு என்று அழுகும். சமாதானப்படுத்த நீங்கள் என்ன தான் கொடுத்தாலும் அதற்கு அந்த உணர்வுகள் தணியாது.

காலத்தால் தன் அறிவு என்று சிந்திக்கும் திறன் வந்து... மற்றவரை உற்றுப் பார்த்து அதை காணும் நிலை வரும்போது தான்... இது சிறுகச் சிறுக இது வந்து ஒடுங்கி இந்த உணர்வின் நிலைகள் மாறும்.

அது வரை எதுவும் அறியாத குழந்தையாக மூன்று மாதம் வரை அந்தக் குழந்தை இனம் புரியாமல் அழுது கொண்டே இருக்கும்.

ஆனால் சாதாரணமாக உள்ள குழந்தைகள் எல்லாம் ஒரு மாதம் ஒன்றரை மாதம் ஆனவுடன் தாயை உற்றுப் பார்க்கும். அதனின் செயல்கள் சீராக இருக்கும்.

கருவிலே இருக்கப்படும்போது பிறருடைய சங்கடங்களை எண்ணியிருந்தால் இது பூர்வ புண்ணியமாக அமைந்து பிறந்த பின்
1.குழந்தை தாயைக் கூட பார்க்காது
2.எங்கோ பார்த்து அது விக்கி விக்கி அழுகும். பயத்தின் நிலைகள் துடிக்கும் ஏங்கி அழுகும்.
3.இது போன்ற நிலைகளில் குழந்தைகளைக் காணலாம்

குழந்தை சில்லு... சில்லு என்று அழுகப்படும்போது நமக்குள் வெறுப்பின் தன்மைகள் கூடி... குழந்தைக்கு இப்படி ஆகிவிட்டதே...! என்று இந்தப் பாசத்தால் இந்த உணர்வுகள் அதிகமாக இதுவே வினையாகி நோயாக மாறுகின்றது.

குழ்ந்தை மேல் பாசம் கொண்ட நிலையில் இந்த உணர்வுகள் பதிவானபின் அவனில் இந்த நோய்கள் வளரப்படும்போது காத்திடும் தெய்வமாகத் தாய் இருப்பினும் அவனில் விளைந்த நோயினை தாய் அடிக்கடி எடுக்கும்போது இங்கேயும் அது வளர்கிறது.

இது வளர வளர பின் விளைவு அதிகமான வேதனையாக உருவானால் அந்த வேதனையின் தன்மை திரண்டு கேன்சராக மாறும்.

இதைப்போல ஒவ்வொரு நொடியிலும் அதனுடைய உணர்வு விளைந்து விட்டால் இதனுடைய பருவம் விளைந்தபின் தான் கேன்சரின் தன்மையே நமக்குள் தெரியவரும்.

1.ஆக நாம் தவறு செய்யவில்லை
2.சந்தர்ப்பத்தால் நுகர்ந்தது அந்த உணர்வின் தன்மை வந்துவிடுகின்றது.

ஒரு செடியிலே விளைந்த வித்தை மண்ணிலே ஊன்றினால் தன் உணர்வுக்குள் இருக்கும் சத்தை அதுவே ஏங்கித் தன் உணர்வால் கவர்ந்து கொண்டே இருக்கும்.

காற்றிலே மிதந்து வரும் உணர்வுகளை... அந்தத் தன் தாய் இனத்தில் இருந்து வெளி வருவதை அது உணவாக எடுத்து இந்தச் செடி வளர்கின்றது.

அந்தச் செடி மற்ற தாவர இனச் சத்தைத் தன் அருகிலே வராது தடுத்துக் கொண்டதோ இதைப் போன்றுதான்...
1.நமக்குள் எந்த குணத்தின் தன்மை வந்ததோ
2.மற்ற நல்ல குணங்கள் நம்மை அணுகாது
3.அந்த வேதனை என்ற உணர்வை தனக்குள் எடுத்து இங்கே விளைந்து விடுகின்றது.

தன் குழந்தைகளை எண்ணி அடிக்கடி இப்படி ஆகின்றதே என்று வேதனையை எடுக்க... அது நாளாக நாளாக இந்த தாய்க்கு கை கால் குடைச்சல்... ஒரு தலை வலி... முதுகு வலி... இடுப்பு வலி... இதைப்போன்ற நிலைகள் எல்லாம் வரக் காரணமாகின்றது.

இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.  ஏனென்றால் பார்த்தது வேடிக்கை என்றாலும் நுகர்ந்த உணர்வுகள் இத்தனை வேலையைச் செய்கிறது.  

November 6, 2018

நல் வழியில் நடப்பது பற்றி சிறிய குழந்தைகளுக்கு ஞானகுரு கொடுத்த சுதந்திர தின போதனைகள்..!


சுதந்திரம் என்றால் எது என்று நீங்கள் குழந்தைகள் தெரிந்து கொள்ள வேண்டும்.
1.உங்களுக்குத் தீடீர் தீடீரென்று கோபம் வரும். சோம்பேறித்தனம் வரும்.
2.இது எல்லாம் உங்களை அடக்குகின்றது. உங்களை அடிமைப்படுத்துகின்றது. (எது…?)
3.கோபம் வருவது சலிப்பு வருவது சங்கடம் வருவது வெறுப்பு வருவதெல்லாம் உங்கள் நல்ல குணத்தைச் சுதந்திரமாக இயக்காதபடி உங்களை அடக்குகின்றது… இல்லையா…!

அதிலிருந்து நீங்கள் விடுபட்டு உங்கள் நல்ல குணம் சுதந்திரமாக வாழ வேண்டும். உங்கள் நல்ல குணங்கள் உங்கள் உடலில் சுதந்திரமாக இருந்தால் தான்
1.நீங்கள் நன்றாகப் படிக்க முடியும்.
2.அம்மா அப்பா சொன்னபடி கேட்க முடியும்.
3.ரோட்டிலே யாராவது தவறு செய்தாலும் அந்தத் தவறான நிலைகள் சிக்காது உங்கள் அந்த நல்ல குணம் உங்களை விலக்கிக் கொண்டு வரும்.
4.அம்மா அப்பா சொல்லும் வேலைகளை உடனே செய்யச் சொல்லும்.
5.பள்ளிக்கூடத்திற்கு வந்தால்… ஆசிரியர் என்ன சொல்கிறார்…? என்ற நிலையைக் கேட்டு நடந்து
6.அந்த நல்ல குணம் உங்களைப் படிப்பில் சிறந்தவராகக் கொண்டு வரும்.

ஆகவே நல்ல குணத்திற்குச் சுதந்திரம் வேண்டும். உங்களை அடிமைப்படுத்தும் கோபம் குரோதம் வெறுப்பு வேதனை சலிப்பு சஞ்சலம் சங்கடம் அதிலிருந்தெல்லாம் நீங்கள் விடுபட வேண்டும்.

இதை ஒவ்வொரு நாளும் பள்ளிக்குச் செல்லும் போதும் சரி படுக்கப் போகும் போதும் சரி
1.அம்மா அப்பா அருளால் மகரிஷிகள் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.
2.எங்களுக்குள் மகிழ்ச்சியான நிலைகள் ஓங்கி வளர வேண்டும்.
3.எங்களுக்குள் இருக்கக்கூடிய கோபம் குரோதம் என்ற எண்ணங்களெல்லாம் எங்களை அடிமைப்படுத்தாது
4.எங்கள் தாய் தந்தையின் அருளால் எங்களுக்கு உயர்ந்த குணமும் மகரிஷியின் அருள் சக்தியும் பெறும் சக்தி பெற வேண்டும் என்று
5.இந்த எண்ணங்களை வளர்த்துக் கொண்டே வர வேண்டும்.

ஏனென்றால் கோபத்திற்கு நீங்கள் அடிமை ஆகிவிட்டீர்கள் என்றால் சோறு கூட சாப்பிட உங்களுக்கு மனம் விடாது. இரண்டு நாளைக்குப் பட்டினியாக இருந்தாலும் கோபத்துடன் சாப்பிடவிடாது. அப்புறம் கோபம் வந்து விட்டது என்றால் மேல இருக்கிற அழுக்கைத் துடைக்க விடாது. மேலில் இருக்கிற அழுக்கைத் துடைக்கவில்லை என்றால் உடலில் நோயாகிவிடும்.

இரண்டு நாளைக்குச் சோறு சாப்பிடவில்லை என்றால், நல்ல குணங்களுக்கு சோறில்லை என்றால் என்ன செய்யும்..? உடல் மெலியச் செய்கிறது. நோயாக மாற்றுகின்றது. உங்கள் நல்ல குணத்தைக் கொன்று விடுகிறது.

அந்த மாதிரி விடாதபடி அம்மா அப்பா நம்மை எவ்வளவு நல்லதாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ அவர்கள் சக்தியை முதலில் பெற வேண்டும். அவர்கள் சொல்வதை நீங்கள் கேட்க வேண்டும்.

அம்மா அப்பாவினுடைய சக்தியினால் தான் இப்போது நாம் பிழைக்கிறோம். சாப்பிடுகின்றோம். துணியெல்லாம் வாங்கிக் கொடுக்கிறார்கள். அவர்கள் எப்பொழுதுமே நமக்கு நல்லதை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்றால் நம் அம்மா அப்பா சுதந்திரமாக இருக்க வேண்டும்.

நாம் சந்தோஷமாகப் படிப்பில் கெட்டிக்காரராகவும் நம் உடலில் கெட்டிக்காரத்தனமாகவும் நல்ல பிள்ளைகளாக இருந்தால் அம்மா அப்பாவிற்கு அது தான் சுதந்திரம்…!

அப்படி நீங்கள் இல்லாமல் போனால் அவர்களுக்குச் சுதந்திரம் எப்படி வரும்…? என் பிள்ளை இப்படி இருக்கிறானே…! அவனுக்குத் தலை வலிக்கிறதே கஷ்டப்படுகிறானே…! என்று அவர்கள் நல்ல குணங்களும் சுதந்திரம் இல்லாது தவிக்கின்றது.

நீங்கள் கோபத்தையும் வெறுப்பையும் சலிப்பையும் கொண்டு வரப்போகும் போது அது உங்களையும் அடிமைப்படுத்துகிறது. உங்கள் நல்ல குணத்திற்குச் சுதந்திரம் இல்லாது தவிக்கின்றது இல்லையா…!

ஆகையினாலே உங்களுக்குள் வரக்கூடிய இந்தக் குணத்தை மாற்றிட அம்மா அப்பா அருளால் அருள் குணங்கள் எங்களுக்குள் ஓங்கி வளர வேண்டும். அறியாத நிலையில் எந்தத் தீங்கும் எங்களுக்கு வரக்கூடாது என்று அவர்கள் ஆசியைப் பெற வேண்டும்.
1.அவர்கள் அருளால் மகரிஷிகள் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.
2.அப்போது உங்களிடம் இருந்து வரக்கூடிய கோப குணத்தை குறைத்து விட்டது என்றால்
3.உங்களுக்கு நோயும் வராது. தலை வலியும் வராது. காய்ச்சலும் வராது.
4.இதெல்லாம் வரவில்லை என்றால் உங்கள் அம்மா அப்பாவிற்கு (என் பிள்ளை நன்றாக இருக்க வேண்டும் என்று) சந்தோஷமாக இருக்கிறது.
5.அவர்கள் நல்ல குணம் சுதந்திரமாக இருக்கிறது.

ஆனால் நீங்கள் அது இது என்று வேண்டாததைச் செய்துவிட்டு உடம்பில் நோயானால் என் பிள்ளைக்கு என்ன ஆனதோ…? என்று அவர்கள் நல்ல குணத்திற்குச் சுதந்திரம் இல்லாமல் போகிறது.

அப்போது அம்மா அப்பாவிற்குச் சங்கடத்தைத் தான் கொடுக்கிறோம்.  அவர்களுக்குச் சந்தோஷத்தைக் கொடுக்க வேண்டும் என்றால் நீங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும்.

நீங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றால் உங்களிடம் கோப குணத்தை வெறுப்பான குணத்தை வராதபடி அம்மா அப்பா அருளால் எங்களுக்கு மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று எண்ணினால் அவர்கள் சக்தி உங்களுக்கு நல்லது செய்யும்.

பள்ளியில் படிக்கும் பொழுது அடுத்த பையன் ஏதாவது சொல்லித் திட்டிவிட்டான் என்றால் நீங்கள் உடனே உங்கள் அம்மா அப்பாவை நினைத்து
1.அவனுக்கு அவர்கள் அம்மா அப்பாவினுடைய நிலைப் பிரகாரம்
2.நல்ல பையனாக வர வேண்டும் என்று நினைக்க வேண்டும்.
3.அப்படி நினைத்துக் கொண்டீர்கள் என்றால் உங்களிடம் அந்த கோபம் வராது.

ரோட்டில் போகும் பொழுது ஏதோ சந்தர்ப்பத்தில் நீயே ஒரு கல்லைக் கொண்டு எறிகிறாய். ஒருவன் மேலே பட்டுவிட்டது என்று வைத்துக் கொள். அல்லது தமாஷாக உன்னுடைய பென்சிலை ஒருவன் எடுத்து வைத்து விட்டான் என்றால் “பார்…! என் பென்சிலை எடுத்து வைத்து விட்டான் என்று உடனே கோபம் வந்து விடுகிறது.

அப்போது அந்தக் கோபத்திற்குக் கோபம் தான் பதில் சொல்கின்றோம். அப்போது தவறு செய்வதை ஒப்புக் கொள்வதில்லை. ஆனால் அப்படிச் செய்யாமல்
1.நான் தான் தவறு செய்து விட்டேன்.
2.தெரியாமல் நான் தான் எடுத்தேன் என்று உடனே சொல்லிவிட வேண்டும்.

அதே மாதிரி அடுத்த பையன் நம்மிடம் கோபித்துக் கொண்டான் என்றால் நீ ஏன் என்னைக் கோபிக்க வேண்டும்…? என்று சொல்லக் கூடாது.

அம்மா அப்பா அருளால் நாங்கள் மனபலம் பெற வேண்டும். மகரிஷியின் அருள் சக்தியால் நாங்கள் மனபலம் பெற வேண்டும். உடல் நலம் பெற வேண்டும். எங்களுக்கு நல்ல ஞானம் வேண்டும் என்று எண்ணிவிட்டு
1.அவனுக்கும் அவர்கள் அம்மா அப்பா வழிப்படி
2.அவன் நல்லவனாக இருக்க வேண்டும் என்று இப்படித்தான் எண்ணுதல் வேண்டும்.

கூடப் படிக்கும் ஒரு பையன் சேட்டை செய்கிறான் என்றால் சேட்டை செய்கிறான் என்று ஆசிரியரிடம் சொன்னாலோ அல்லது அடுத்தவர்களிடம் சொன்னோம் என்றால் என்ன ஆகும்…?

ஒரு சாக்கடையை எடுத்து யார் மேலே போட்டாலும் என்ன செய்யும்…? யார் மேலே விழுந்தாலும் அந்தச் சாக்கடை நாற்றம் ஆகத் தான் செய்யும்.
1.அவன் தவறு செய்தான் என்று எல்லாரிடமும் சொன்னால்
2.அந்தத் தவறான உணர்வு எல்லோரிடமும் போகும்.

இதைப் போன்று இல்லாதபடி உங்கள் நல்ல குணங்கள் என்றைக்கும் சுதந்திரமாக இருக்க வேண்டும். அதே சமயத்தில் எல்லோரும் சுதந்திரமாக இருக்க வேண்டும்.

ஆகவே நீங்கள் சிறிய பிள்ளைகளாக இருந்தாலும் உங்களுடைய குணத்தைக் கண்டு உலகமே உங்களை மெச்சக்கூடிய நிலைகளுக்கு நீங்கள் வர வேண்டும். நிச்சயம் வருவீர்கள்…! எமது அருளாசிகள்…!