ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 29, 2018

துருவ நட்சத்திரத்தின் உணர்வை “முன்னனியில்” வைத்துக் கொண்டால் அது மிகப் பெரிய "பாதுகாப்புக் கவசமாக..." நமக்கு அமையும்

காலையில் எழுந்தவுடன்
1.வீட்டில் பையன் இப்படிச் செய்துவிட்டான்
2.அவன் எனக்குத் தொல்லை கொடுத்துக் கொண்டே இருக்கின்றான்
என்று  இந்த எண்ணத்தில் சோர்வடைந்து விட்டால் இந்த உணர்வுகள் முன்னனியில் வந்துவிடுகின்றது.

அது முன்னாடி வந்துவிட்டால் நாம் போகும் பாதையில் ஒரு சைக்கிள் வருவது கூடத் தெரியாது. ஒரு பெரிய வாகனம் வருவதும் தெரியாது.

அப்பொழுது நம்மை அறியாமலே விபத்துக்கள் நடந்துவிடும்.

எதன் உணர்வு நம்மைச் சிந்தனையைக் குறைக்கச் செய்ததோ இதைப் போல் நம் வாழ்க்கையில் நடந்துவிடுகின்றது.

ஆனால், நாம் தவறு செய்யவில்லை. சந்தர்ப்பத்தால் நாம் நுகர்ந்த உணர்வுகள் அது முன்னனியில் வந்துவிடுகின்றது. அது நம்மை இயக்கிவிடுகின்றது.

இதையெல்லாம் மாற்றி உங்கள் வாழ்க்கையில் வெளியில் செல்லும் பொழுதெல்லாம் துருவ நட்சத்திரத்தை எண்ணி இந்த வலிமையான உணர்வுகளைச் செலுத்திக் கொள்ளுங்கள்.

வீட்டை விட்டு வெளியில் செல்லும் பொழுதெல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறவேண்டும் என்று எண்ணினால்... "இது நமக்கு  முன்னாடி வந்து...!" வலிமையான சக்தியாக நிற்கின்றது. 

அதே சமயத்தில் எதிரே திடீரென்று ஒரு வாகனம் வந்தாலும் நம்மை ஒதுங்கச் செய்யும்.

அப்பொழுது அதை முன்னிலைப்படுத்திச் செல்லும் போது
1.தீமை என்றால் விலகி வரும் உணர்வுகளையும்
2.தீமை வந்தால் விலகிச் செல்லும் உணர்வுகளையும்
3.சிந்தித்துச் செயல்படும் ஆற்றல்களையும்
4.வாழ்க்கையில் தெளிந்து வாழக்கூடிய உணர்வுகளையும்
நமக்கு அது ஊட்டிக் கொண்டேயிருக்கும்.