ஒவ்வொரு சமயத்திலும் மாமகரிஷி ஈஸ்வராய
குருதேவர் எனக்கு (ஞானகுரு) எப்படி ஞானத்தைப் போதித்தாரோ அதை அந்த மகரிஷிகளின் அருள்
உணர்வுடன் போதிக்கிறோம்.
1.அருள் ஞானத்தைப் பெறச் செய்யும்.
2.இருளைப் பிளக்க செய்யும்… பொருளைக்
காணச் செய்யும்.
3.வாழ்க்கையில் இதுவே உங்களுக்குத் தெளிவான
வழி காட்டும்.
தவறு மற்றவர்கள் செய்தாலும் அல்லது நாமே
செய்திருந்தாலும் அதற்குள் மறைந்த உண்மைப் பொருளை நாம் காண முடியும். அங்கிருக்கும்
இருளைப் பிளக்கின்றது. உண்மையின் உணர்வின் தன்மையை நாம் அறிய முடியும்.
இப்படி அந்த மகரிஷிகளின் உணர்வுகள் நமக்குள்
பெருகி நம் ஆன்மாவில் மறைத்துக் கொண்டிருக்கும் இந்த இருளைப் பிளக்கும். அப்பொழுது
மெய்ப் பொருளைக் காணும் அந்தத் திறன் நாம் பெறுகின்றோம்.
இதைச் சிறிது காலம் கடைப்பிடித்தாலே
உங்களால் தெளிவாக உணர முடியும். உங்களுக்குள் அந்தச் சக்திகள் கூடுவதைப் பார்க்கலாம்.
இன்று காற்று மண்டலம் மிக நச்சுத் தன்மையாக
இருக்கிறது. மனிதனின் சிந்தனைகளும் குறைந்து கொண்டே வருகின்றது
இப்படி இருக்கின்றதே…! ஐயோ நச்சுத் தன்மையாக
இருக்கின்றதே..! என்று அதைப் பதிவு செய்துவிட்டால் நச்சுத் தன்மைகளை இழுக்கும். நச்சுத்
தன்மை தான் நமக்குள்ளும் வளரும். நம் நல்ல சிந்தனையும் குறையும்.
நச்சுத்தன்மை என்ற உணர்வு வந்தவுடன்
அது நம்மை இழுக்கிறது… நம்மை மாற்றுகின்றது. அதற்குப் பதிலாக
1.மகரிஷிகளின் அருள் சக்தி இங்கு படர
வேண்டும்
2.மகரிஷிகளின் அருள் சக்திகளை எல்லோரும்
பெறுவோம்.
3.வாழ்க்கையில் எல்லோருக்கும் அந்த உயர்ந்த
நிலை கிடைக்க வேண்டும் என்று
4.இதை எண்ணி அந்த அலைகளை நாம் பரப்பிக்
கொண்டே இருக்க வேண்டும்.
குரு அருளை உங்களுக்குள் திரு அருளாக
மாற்றும் நிலைக்கே இதை உபதேசிக்கின்றோம்.
ஆகவே மகரிஷிகளின் அருள் சக்தி பெற நாம்
தியானிப்போம், மகரிஷிகளின் அருள் சக்தி உலக மக்கள் அனைவரும் பெறத் தவமிருப்போம்.