புத்தகத்தைப் படித்துவிட்டு இயந்திரத்தில்
அமிலத்தைக் கலந்து புதிய துணிக்கு சாயத்தைக் (நிறம்) கொடுக்கின்றோம். படித்தவர்கள்
இந்த அளவு கோல்படி அமிலத்தை ஊற்றினால் நூல் கெட்டுப் போய்விடும் என்று அந்த
அளவுகோலையே நினைத்துக் கொண்டிருப்பார்கள்.
தெரியாதவர்கள் அமிலத்தை அதிகமாக
ஊற்றிவிட்டார்கள் என்றால் நூலுடன் கலந்து சாயத்தைக் கெட்டியாகக் கொண்டு
போய்விடும். சிறிது நாளைக்கு இந்தச் சாயம் இருக்கும். பின் துணியே கிழிந்து
போய்விடும்.
அந்த அமிலத்தின் அளவைக் குறையாக
ஊற்றியிருந்தால் சாயத்தை இழுத்து வைக்கக்கூடிய நிலைகள் குறைந்திடும்.
தண்ணீருக்குள் துணியைப் போட்டவுடனே சாயம் போய் விடும்.
சாயம் ஒன்றுதான். ஆனால் அமிலத்தின் அளவுகோல் இதனுடன்
இணைந்திருக்கும் போது எது அதிகமோ எது குறைவோ அதற்குத் தகுந்த நிலைகளைச் செய்யும்.
புத்தக அறிவில் படித்துக் கொண்டவர்கள் தான்
படித்த உணர்வு கொண்டு அவர்கள் அறிவுக்கெட்டிய நிலைகள் கொண்டு நிதானிக்கின்றார்கள்.
ஒருவர் போடுவதைப் பார்த்த உடனே இவர் துணியின் அளவுகோலைப் பார்க்கின்றார்.
நூல் எந்த அளவிற்குப் போடுகின்றார்களோ
அதற்குத்தகுந்த சாயத்தையும் அமிலத்தையும் போடுகின்றார்கள். அது பழக்கத்திற்கு
வரும் வரையிலும் சரியாக வராது.
படித்தவர்கள் துணி கெட்டியாக இருக்க வேண்டும்
என்று அளவுகோல் படி அமிலத்தை இணைப்பார்கள். ஆனால் துணி இத்துப் போய்விடும் என்று
தெரியாது.
அதே சமயத்தில் பெயர் வாங்க வேண்டும் அளவுகோலை
அதிகப்படுத்தி விட்டால் துணி போய்விடும். கெட்டிச் சாயம் என்று துணி வாங்குவோம்
துணி போய்விடும்.
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அனுபவத்தில்
எல்லாவற்றையும் அதை அறிந்து கொண்டவர். குருநாதர் தெளிந்த நிலை பெற்றவர்.
அவர் பெற்ற ஆற்றல்களை நமக்குள் பதிவு
செய்யப்படும்போது அது மகரிஷிகளின் அருள் சக்தியை இணைத்து அந்தந்தப் பக்குவ
நிலைக்கு நமக்குள் குருவாக நின்று வழி நடத்தும்.
கம்ப்யூட்டரில் சீராகப் பதிவு செய்திருந்தால்
ஒவ்வொரு நிமிடத்திலும் அது அளவுகோல் கொடுக்கும். ஒரு எல்லை வரும்போது ஒரே
நிமிடத்தில் உணர்வின் அழுத்தத்திற்குத் தக்கவாறு பல நிலைகளை நாம் பதிவு செய்ததை
அந்தக் கம்ப்யூட்டர் இயக்கித் தெளிவாக்குகின்றது.
ஆகவே குருநாதர் கண்டுணர்ந்த மெய்யுணர்வின்
தன்மையை ஆழமாகப் பதிவு செய்து கொண்டால் ஒவ்வொரு நிமிடத்திலும் வாழ்க்கையில் நமக்கு
அளவுகோல் கொடுக்கும்.
அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு
நிலைகளிலும்
1.நல்லது எது கெட்டது எது என்று எப்படி அறிவது?
2.நல்லதை எப்படிப் பிரித்து எடுத்துக் கொள்வது?
3.கெட்டதை எப்படி விலக்கித் தள்ளுவது?
4.கெட்டதை எப்படி நல்லதாக்குவது?
5.நன்மையின் பலனை எல்லோரையும் எப்படிப் பெறச்
செய்வது என்ற தெளிவைக் கொடுக்கும்.
அனுபவத்தில் பார்க்கலாம்.