தொழிலில் சேர்க்கும்
சொத்து நம் உடல் வாழ்க்கைக்கு உதவும். அதிலே சீராக இல்லையென்றால் அதைக்
காக்க முடியாது.
மனதில் வேதனை
என்ற உணர்வு வரும் போது இந்தச் சொத்தைக் கொண்டு கொடுத்தால் “இது
எதற்கு...!” என்று தான் எண்ணத் தோன்றும்.
செல்வத்தைச்
சம்பாரித்துக் கொண்டு இருக்கும்போது எனக்கு இப்படி வந்துவிட்டதே என்று உடலின் மீது
பற்று வந்து வேதனையாகி
விட்டால் நஞ்சின் தன்மை வந்துவிடும்.
உடலின் பற்று வந்தபின்
யார் அதற்குக்
காரணமானோரோ… யார் மேல் இந்தப் பற்று வருகின்றதோ... அதைப் பற்றிக் கொள்கின்றோம்.
அந்த உடலை நாம் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றோம்.
அந்த உடலுக்குள்
சென்று இந்த உடலில் விளைந்ததை சாகாக் கலையாக்கி அங்கேயும் ஆசையைத் தூண்டி அதையும் மடியச்
செய்கின்றோம்.
இது பேயாக அந்த உணர்வின் வளர்ச்சியாக பூத கணங்களாக விளைகின்றது.
இது தான் பூதங்கள் என்பது.
பிறர் மேல்
உள்ள பாசத்தால் பாசத்தால் வேதனையை உருவாக்கப்படும்பொழுது தீமையின் நிலையை நமக்குள்
உருவாக்கி அந்த தீமையையே செயல்படச் செய்து தீமையை ரசித்திடும் உணர்வுகள்தான் நமக்குள்
வரும்.
நஞ்சினை வென்றிடும்
உணர்வினை நாம் இந்த
வாழ்க்கையில் வளர்க்கவில்லை எங்கே சென்று மோதுவோம் என்று தெரியாது.
தீமையின் உணர்வை
நீக்க வேண்டுமென்று உணர்வின் ஒளியாக மாற்றியவர்கள் கல்கியின் அவதாரமாக ஒளியின் சுடராக
சப்தரிஷி
மண்டலங்களாக உள்ளார்கள்.
“ஈஸ்வரா...!” என்று
உயிரிடம் வேண்டி மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டுமென்று நாம் கேட்டறிந்த உணர்வை ஆன்மாவிலிருந்து
பிளக்க வேண்டும்.
இதுதான் நரசிம்மா.
அருள் ஞானிகளின்
உணர்வைத் தனக்குள் சேர்த்து வரும் தீமைகளைப் பிளந்து உணர்வினை ஒளியாக்கி மற்றவர்களுக்கு
வழி காட்டியாக நாம் வளர்ந்திட வேண்டும்.
இதை வளர்த்தால் நம் உயிராத்மா
ஒளியாகும். ஆகவே அழியக் கூடிய உடலுக்காக வாழாமல் அழியாத நிலைகள் கொண்ட உயிருடன்
ஒன்றி வாழ வேண்டும்.
ஏனென்றால் உயிருடன்
என்றுமே ஒன்றி வாழ்பவர்கள் தான் விண்ணுலகில் என்றும் பதினாறாக வாழ்ந்து
கொண்டுள்ளார்கள்…!