மேல் வலி தலை
வலி வயிறு வலி இதெல்லாம் வந்துவிட்டதென்றால், “அம்மம்மா…” அப்பா...!” என்றால் அந்த உணர்வுகள் எல்லாம் அதற்குச் சாப்பாடு கொடுத்துவிடும்.
சந்தோஷமான வார்த்தையைச்
சொல்லி வலியை நிவர்த்தி பண்ணலாம் என்றால் முடியாது. அது எதிரியாகி விடுகின்றது.
இந்த எதிரியை வென்றவர்கள்
யார்? இந்தச் சந்தோஷத்தை ஊட்டியவர்கள் யார்? அந்த மகரிஷிகள்
தான்...!
மகரிஷிகளின்
அருள் உணர்வை நாம் எண்ணும் பொழுது நமக்குள் அந்த நல்ல ஆகாரத்தை உடலில் உள்ள நல்ல
அணுக்களுக்குக் கொடுத்தவுடனே அதை வலுப் பெறச் செய்கின்றது.
இப்படி
வலிக்கிறது என்று வேதனையை எண்ணினால் நம் உயிர் அதைத்தான் உருவாக்கிக் கொடுக்கும்.
ஆகவே நம் உயிரான ஈசனிடம் எதை வேண்டி விரும்பிக் கேட்க வேண்டும்?
பதிவு செய்து
கொண்ட மகரிஷிகள் உணர்வுகளை நினைவிற்குக் கொண்டு வரவேண்டும். துருவ
மகரிஷியின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்ற நினைவைப் புருவ மத்தியில்
செலுத்திப் பழக வேண்டும்.
பிறர் படும்
துன்பங்களையும் துயரங்களையும் நாம் கண்ணுற்றுப் பார்க்கும் பொழுது அது ஆன்மாவாகிறது.
அதிலிருந்து சுவாசிக்கும் போது இந்த உணர்வுகளை உயிர் அகக் கண்ணாக இருந்து நமக்கு உணர்த்துகின்றது.
உயிர் அகக் கண்ணாக
இருந்து பதிவு செய்து மீண்டும் நினைவிற்குக் கொடுக்கின்றது. புறக்
கண் அதைப் படமெடுத்து ஆன்மாவாகி உயிருடன் ஒன்றும் பொழுதுதான் அந்த உணர்வை அகக்கண்ணான
கண் காட்டுகின்றது.
துருவ மகரிஷியின்
உணர்வை நமக்குள் பதிவு செய்து அதை மீண்டும் நினைவு கொண்டு உயிரான அகக் கண்ணுடன் இனைக்கப்படும்
பொழுது இந்த ஆன்மாவிலிருந்து வரக்கூடியதைத் தடைப்படுத்துகின்றது.
வேதனை அதிகமாக
இருக்கின்றது என்றால் “ஈஸ்வரா...! துருவ மகரிஷியின் அருள் சக்தியை நாங்கள் பெற வேண்டும்
என்று நினைவினை அங்கே செலுத்திவிட்டால் வேதனயோ மூச்சுத் திணறலோ எந்த வலியானாலும் குறையும்.
ஆனால் முதலில்
நம்மை எடுக்கவிடாது.
துருவ மகரிஷிகளின்
அருள் சக்தி பெறவேண்டும்.
அது எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும்
என்று உயர்ந்த சக்தியின் எண்ண அலைகளைப் பரப்பும் பொழுது கொஞ்சம் கொஞ்சமாகக் குறையும்.
1.இதற்கு முன்னாடி
தெரியாது.
2.ஏனென்றால் அது
பதிவாகியிருக்கின்றது அதற்குச் சாப்பாடு வேண்டும்.
3.தன் உணர்ச்சிகளைத்
தூண்டும்.
நுகர்ந்து ஆன்மாவாக மாற்றும்.
4.நமது உயிர் ஆன்மாவில்
இருப்பதை எடுத்து எது எது கேட்கின்றதோ வேண்டுதோ
5.அதற்கு சாப்பாடாகக்
கொடுக்கும் அதனுடைய கடமை அது.
தியான வழியில்
இது மிகவும் தெளிவாகத் தெரியும். ஆகவே நம் தாயான உயிரிடம் மகரிஷிகளின் அருள்
உணர்வை வேண்டி விரும்பிக் கேட்டால் அதை நமக்குள் உருவாக்கும்... அதை நமக்குள்
வளர்க்கும்..
நம்மை மகரிஷியாக மாற்றும்...!