சாதாரண மக்களும் எதன்னை அறியாது வந்த
தீமைகளிலிருந்து எப்படி மீள வேண்டும் என்று மகரிஷிகள் காட்டிய அந்த அருள் நெறிகளை நாம்
கடைபிடித்தல் வேண்டும்.
விஞ்ஞான அறிவால் பேரழிவு வந்து கொண்டு
இருக்கும் இவ்வேளையில் நமது குருநாதர் “மகரிஷி ஈஸ்வரப்பட்டாய குருதேவர்” அவர் கண்ட
உண்மையினுடைய நிலைகள் மக்கள் மீள வேண்டும் என்று
1.நம்மையெல்லாம் கடவுளாக்குகின்றார்.
2.நம்மைக் கடவுளாக மதிக்கின்றார்.
3.நாம் அனைவரும் கடவுளாக வேண்டும் என்று
விரும்புகின்றார்.
அதனைச் செயல்படுத்த அவர் காட்டிய நெறிகளை
எல்லோரும் பெற வேண்டும் என்று அந்த உணர்வை இங்கே வழிகாட்டுகின்றார்.
அவர் உணர்த்திய உணர்வை நமக்குள் பதிவு
செய்து அந்த முறைப்படி மகரிஷிகளின் அருள் உணர்வை எடுத்து வளர்த்துக் கொண்டால்
1.அவனுடன் அவனாகி
2.அவனின் ஒளியாக உயிருடன் ஒன்றிடலாம்
நாம் எடுக்கும் உணர்வின் தன்மையை நம்
உயிர் அறிவாகக் காட்டுகின்றது.
மற்றவருடைய உணர்வை நுகரும் பொழுது அதனின்
அறிவாக உயிர் இயக்கிக் காட்டினாலும் என்றுமே ஒளியாக நிலை கொண்டிருக்கும் மகரிஷிகள்
உணர்வை நமக்குள் சேர்க்கும்போது ஒளியாகவே நாம் நிற்க முடியும்.
அப்படி அடைந்தவர்கள்தான் மகரிஷிகள்…
“கல்கி”