சரவணபவா குகா கந்தா
கடம்பா கார்த்திகேயா,
இந்த ஆறாவது அறிவின் தன்மை. முருகன் யார் ஆறாவது
அறிவு. மயிலின் காலடியில் பாம்பு விஷம், அதற்குக் கதை எழுதியிருப்பார்கள்.
அசுரருடன் முருகன்
போர் செய்தான்.
போர் செய்யப்படும் பொழுது, அசுரன் இறக்கப்படும்
பொழுது “முருகா…! நான் உன் காலடியிலே இருக்கின்றேன்…
எனக்கு வரம் கொடு...!” என்றான்.
நம் வாழ்க்கையில்
எந்த நிலை இருந்தாலும் ரோட்டிலே போனாலும், ஒருவன் தவறு செய்கிறான் என்றால்
அந்த ஆத்திரமான உணர்வுகள் நம்மைத் தூண்டும்.
அப்பொழுது அந்த நேரத்தில் அது நமக்குள் “போராகின்றது…!”
ஆனால் போருக்குக்
போகும் பொழுது மனிதன் அந்த உணர்வைத் தடுத்து அதை அழிக்க வேண்டும்.
1.உணர்வை
மாற்றக் கூடிய சக்தி வரப்படும் பொழுதுதான்
2.அதை “அந்த
அசுரனை வென்றான்...” என்று சொல்கின்றோம்.
கருணைக் கிழங்கில்
உள்ள விஷத்தை நீக்கும் பொழுது அந்த அசுரச் சக்தியை நீக்குகின்றோம். கருணைக்
கிழங்கைச் சுவையாக வைத்துக் குழம்பாகச் சாப்பிட்டவுடன் அது நம்
காலடியில் இருக்கின்றது.
1.அப்பொழுது எனக்குள்
இருக்கும் விஷத்தின் தன்மை
2.ஆக்கபூர்வமான
சக்தியாக இருக்கின்றது.
3.அதைத் தான் அங்கே
காட்டுகின்றார்கள்.
நமக்கு வேண்டியவர்கள்
மிகவும் துன்பப்படும் நிலையைக் கண்டவுடன் வேதனையைத்
துரித நிலைகளில் இழுத்துவிடுவோம். அப்பொழுது அந்த விஷத்தின் தன்மையை
அதிகமாகக் கூட்டி
1.எல்லோருக்கும்
நன்மை செய்தேனே...
2.”எனக்கு
இந்த நிலை வந்துவிட்டதே...!” என்று சொல்லிக் கொண்டிருப்போம்.
இதைப் போன்று நம்மையறியாமல்
இயற்கையின் தன்மையில் வந்து சேரும் இதைப் போன்ற நிலைகளை மாற்றி அமைப்பதுதான் மெய்ஞானம்.
“பிரம்மாவைச்
சிறைப்பிடித்தான் முருகன்” என்று ஆறவாது அறிவின் தன்மையைக் காட்டி சேனாதிபதியாகக்
காட்டுகின்றார்கள்.
சேனாதிபதி தன்
படைகளுக்குக் கட்டளையிட்டு நாட்டைக் காப்பது போல் நம் ஆறாவது அறிவின் துணை கொண்டு அருள்
மகரிஷிகளின் அருள் சக்திகளை நுகர்ந்து உடலுக்குள் சந்தர்ப்பத்தால் வரும் அந்தத்
தீமைகளை அகற்றுதல் வேண்டும்.
அதைத்தான் சரவணபவா
என்று காட்டியுள்ளார்கள் ஞானிகள். அதாவது தீமைகளைச் “சரணமடையச் செய்யக்கூடிய சக்தி” நமக்கு உண்டு…!