ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

Showing posts with label துன்பமே! என்னைவிட்டு விலகிச்செல். Show all posts
Showing posts with label துன்பமே! என்னைவிட்டு விலகிச்செல். Show all posts

September 15, 2025

“வேதனை அதிகமாக இருக்கும் நேரத்தில் தான்” பேராற்றல் மிக்க சக்தியை நாம் எடுக்க முடியும்

“வேதனை அதிகமாக இருக்கும் நேரத்தில் தான்” பேராற்றல் மிக்க சக்தியை நாம் எடுக்க முடியும்


அன்று மெய் ஞானியான அகஸ்தியன் மனித உடல் அது எப்படி உருப்பெற்றது…? என்பதனைத் தாய் கருவிலே பெற்ற நஞ்சினை வென்றிடும் ஆற்றல் கொண்டு ஒவ்வொன்றாகத் தனக்குள் வளர்ச்சியாகித் தன்னை அறிந்தான்…” தனக்குள் விளைந்த உணர்வின் வலுக் கொண்டு அகண்ட பேரண்டத்தையும் அறிந்தான்…”
 
அவனுக்குள் விளைய வைத்த உணர்வுகள் நம் பூமியில் பரவி உள்ளது. அதனை உங்களுக்குள் பதிவாக்கப்படும் பொழுது இயற்கையின் உண்மையின் வளர்ச்சியை உங்களுக்குள் வலுவாக்கி அதன் உணர்வால் உருவாக்கும் ஆற்றலை நீங்கள் பெறுகின்றீர்கள்.
 
1.நமது குருநாதர் அவர் உருவாக்கியது போல அவர் நமக்குள் உருவாக்கிட
2.அவரைப் போன்றே நினைவினை நான் செலுத்தப்படும் பொழுது
3.அந்த உணர்வின் தன்மை கருவாக்கி உருவாக்கும் அந்த வலிமை பெறுகின்றது.
4.அதே வலிமையின் உணர்வுகளை உங்களுக்குள் இந்த உபதேச வாயிலாகச் சொல்லப்படும் பொழுது
4.நீங்கள் கூர்மையாகக் கவனித்த உணர்வுகள் உங்களுக்குள் பதிவாகி இந்த நினைவினை உங்களுக்குள் வளர்க்க இது உதவும்.
5.ஆகவேநம்முடைய நினைவாற்றல் குருநாதர் காட்டிய வழியில் அந்தத் துருவன் வழி செல்ல வேண்டும்.
 
நம்முடைய எல்லை எது…?
 
துருவன் பெற்ற அந்த எல்லையை அடைய வேண்டும் என்ற நினைவைக் கூட்டினால் இதனின் வரிசைத் தொடரில் அது வளர்ச்சியாகி பிறவி இல்லாத நிலை அடைந்து அந்த எல்லையை நாம் அடைகின்றோம்.
 
இல்லை…! என்னை இப்படிப் பேசினான் அப்படிச் செய்தான்…! என்ற இந்த உணர்வினை வளர்த்துக் கொண்டால் இதனின் உணர்வுகள் வளர்ச்சியாகி இந்த வேதனை நம்மை மீண்டும் கீழான நிலைகளுக்கு அழைத்துச் சென்றுவிடும்.
 
இதனின் வளர்ச்சி அதிகமாகி விட்டால் இப்போது உபதேசித்த இந்த உணர்வுகளை அது மேலே மூடிவிடும்.
 
ஆகஅப்படி ஆகாதபடி ஊழ் வினையாக இந்த உபதேச வாயிலாக அதை அமுக்கச் செய்து இந்த உணர்வினை அணுவாக்கப்படும் பொழுது உங்களுடைய நினைவின் ஆற்றல் அந்த மெய் ஞானி சென்ற பாதையில் செல்லும்.
 
இந்தக் காற்று மண்டலத்தில் மனிதனின் இச்சை கொண்ட உணர்வுகள் அதிகரிக்கப்படும் பொழுது
1.துருவ நட்சத்திரத்தினை நினைவுக்குக் கொண்டு வந்தால்
2.உங்கள் உடலுக்குள் தீமை இயக்காது அதை இது மறைத்துவிடும்.
 
குப்பைக்குள் ஒரு மாணிக்கம் கிடந்தால் மாணிக்கம் இருக்கிறது என்று கண்களுக்குத் தெரியுமா…? அந்தக் குப்பையை நீக்கி விலக்கிப் பார்த்தால் தான் அதற்குள் இருக்கும் ஒளிகளை நாம் காண முடியும்.
 
இதே போல இப்பொழுது உபதேச வாயிலாகப் பதிவு செய்யும் அருள் ஒளியின் உணர்வுகளை
1.குப்பையைப் போன்று வாழ்க்கையில் அதனைக் கொண்டு மூடி மறைத்து விட்டால்
2.அந்த ஒளியின் தன்மை மின்னும் நிலையோ அதன் உணர்வின் தன்மை பளிச்சிடும் நிலையில்
3.அதன் அருகில் இருக்கக்கூடிய பொருளைக் காணும் நிலையோ தடுக்கப்படுகின்றது காண முடியாது.
 
ஆகவே அதைக் காணும் ஆற்றல் கொண்ட ஞானிகள் உணர்வினை இப்பொழுது பதிவாக்கி அகண்ட பேரண்டத்தின் நிலைகளையும் துருவன் கண்ட நிலைகளையும் அவனில் அறிந்துணர்ந்ததையும் பெற்று இனி எந்த இருளிலும் சிக்காது ஒளியின் தன்மையாக மாற்றிய உணர்வுகள் உங்களில் விளைய வேண்டும் என்பதற்குத் தான் உபதேசிக்கின்றேன்.
 
குருநாதர் எமக்குள் அதனை உருவாக்கினார் அதை வளர்த்துக் கொண்டே இருக்கிறேன்.
1.அதையெல்லாம் நீங்கள் பெற வேண்டும் என்று ஏங்கிக் கொண்டே இருக்கின்றேன்.
2.நான் பெற வேண்டும் என்று அல்ல நீங்கள் பெற வேண்டும் என்று…!
 
அந்த உணர்வின் ஒளியாக நீங்கள் பெற வேண்டும் என்று ஏங்கப்படும் பொழுது
1.உங்களிடம் இருக்கக்கூடிய தீமைகளை நான் எண்ணுவதில்லை.
2.உங்களை அறியாது இயக்கும் கஷ்டங்களை நான் எண்ணுவதில்லை.
3.உங்களை அறியாத வந்த நோய்களை நான் எண்ணுவதில்லை.
 
யாம் உபதேசித்த வழியில் நீங்கள் அந்த அருள் ஞானத்தைப் பெற்றால் அந்தத் தீமைகள் அனைத்தும் அகன்று ஓடிவிடும்.
 
1.உங்களுக்குள் இருக்கும் கஷ்டத்தையும் துன்பத்தையும் நான் அறிய முற்பட்டு அதை அறிந்து கொண்டிருந்தால்
2.இந்த உணர்வின் தன்மை எனக்குள் இது தான் அதிகமாக வளரும்.
 
ஆகவே நாம் எண்ண வேண்டியது என்ன…? தனக்குள் நோய் வந்தாலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று அதை வளர்த்தல் வேண்டும்.
 
அதே சமயத்தில்
1.எது எவ்வளவு வேதனையாகின்றதோ அந்த நேரத்திலே
2.அருள் ஒளி எனக்குள் பெற வேண்டும்
3.இருளாக்கும் தீய வினைகள் நீங்க வேண்டும்
4.மெய்ப்பொருள் காணும் உணர்வுகள் தனக்குள் வளர வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

August 25, 2025

எம்மிடம் வரும் போது… “கஷ்டம்” என்ற வார்த்தையை விட்டு விடுங்கள்

எம்மிடம் வரும் போது… “கஷ்டம்” என்ற வார்த்தையை விட்டு விடுங்கள்


1.என் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் அந்த அருள் சக்தி வேண்டும்
2.என் பையன் ஞானியாக வேண்டும் அந்த அருள் சக்தி வேண்டும்
3.என் குழந்தைகள் உடல் நலமாக இருக்க வேண்டும் அந்த அருள் சக்தி வேண்டும்
4.என் தொழில் வளமாக வேண்டும் அந்த அருள் சக்தி வேண்டும் என்று
5.இதைத் தான் நீங்கள் என்னிடம் வாக்காகக் கேட்டுப் பெற வேண்டும்…. கீதையில் நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய்.
 
ஆனால் இப்படிக் கேட்பதற்குப் பதில் கஷ்டம் என்று சொல்லிவிட்டீர்கள் என்றால் முதலில் இருளாகிவிடும். அப்போது நான் சொல்லும் உயர்ந்த வாக்குகள் உங்களுக்குக் கிடைப்பது கஷ்டம்.
 
இதை எதிர்த்துத் தள்ளி விடுகின்றது. கஷ்டம் என்று நீங்கள் எண்ணினீர்கள் என்றால் நான் கொடுக்கும் நல்ல வாக்குகளை அது உள்ளே விடுவதில்லை. ஏனென்றால் அது வாலியாக மாறி விடுகின்றது.
1.உங்கள் எண்ணமே நல்லதைப் பெற முடியாதபடி தடுக்கும் சக்தியாக மாறிவிடுகிறது.
2.இதைப் போன்ற நிலையில் இருந்து விடுபட்டு நல்லதை வேண்டிக் கேட்டுப் பெறும் ஒரு பழக்கத்திற்கு வாருங்கள்.
 
எந்த ஆலயத்திற்குச் சென்றாலும் அந்தத் தெய்வீக குணம் பெற வேண்டும் கொவிலுக்கு வரும் அனைவரும் நலமும் வளமும் பெற வேண்டும் என்று எண்ணுங்கள். கோயிலை அவமதிக்காதீர்கள்.
 
நம்மைத் திரிந்து வாழச் செய்யும் நிலையில் நமக்குள் நல்ல குணங்களை வளர்த்துக் கொள்வதும் பகைமையிலிருந்து மாறவும் ஒன்றுபட்டு வாழ்வதற்கும் தான் கோவில் என்ற நிலையில் அதை மதித்து நடங்கள்.
 
ஆகவே நான் சொல்வதை நீங்கள் செய்வீர்கள் என்று நம்புகின்றேன்.
1.ஞானிகள் உணர்வை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கின்றேன்.
2.உங்களுடைய நினைவு கொண்டு தான் மீண்டும் அதை எண்ணி எடுக்க வேண்டும்.
 
திட்டியவனை நினைத்தவுடன் அவனுடைய உணர்வுகள் உடனடியாக உங்களுக்கு வருகிறது அல்லவா. கோபம் வருகிறது காரியமெல்லாம் கெடுகிறதுஅங்கேயும் புரையோடுகிறது காரியங்கள் கெடுகிறது.
 
பிள்ளை மீது பாசமாக இருந்து என்ன ஆனதோ…? ஏதானதோ…? என்ற துன்பப்பட்டால் அந்த வேதனையால் உங்கள் செயல்கள் தடுமாற்றம் ஆகின்றது.
 
நீங்கள் அந்த வேதனையுடன் சமையல் செய்தீர்கள் என்றால் சூடாக இருக்கும் பாத்திரம் பொங்கி வரும் போது சரியான முறையில் ஆதைக் கையாளாதபடி உடுத்தியிருக்கும் துணியில் தீ கூடப் பிடித்து விடும்.
 
காரணம்
1.சிந்தனை இல்லாத உணர்வு கொண்டு அவசரப்பட்டு இயக்கப்படும் பொழுது நமக்கே அது தீங்கு விளைவிக்கும் சக்தியாக வந்து விடுகிறது.
2.ஏனென்றால் வேதனை என்பது விஷம் சிந்திக்கும் தன்மையை அது இழக்கச் செய்து விடும்.
 
ஆகவே அடுத்தடுத்து அடுத்தடுத்து கஷ்டம் என்ற நிலையினை உள்ளே விடாதபடி மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் நான் பார்ப்பதெல்லாம் நன்றாக இருக்க வேண்டும் கணவன் மனைவி நாங்கள் ஒற்றுமை உணர்வுடன் உடல் நலத்துடன் வாழ வேண்டும் எங்களுக்குள் அருள் ஞானம் வளர வேண்டும் என்று அதிகாலையில் இப்படி எண்ணி எடுத்துப் பாருங்கள்.
 
பகைமைகள் அகலும்மனம் ஒன்றாகும். இருளைப் போக்கும் அருளைப் பெருக்கும். பேரருள் பேரொளியாக வளர்த்துக் கொள்ள முடியும். அத்தகைய ஆனந்தத்தை நீங்கள் பெறுங்கள்.
 
நான் பதிவு செய்த நிலைகள் கொண்டு எண்ணி எடுத்துப் பாருங்கள்.
 
தங்கத்திலே திரவகத்தை ஊற்றினால் செம்பும் பித்தளையும் எப்படிக் கரைகின்றதோ அதைப் போல் அருள் ஞானிகள் உணர்வை உங்களுக்குள் சேர்த்தால் அது உங்கள் கவலையையும் வேதனைகளையும் கரைத்து உங்களைச் சிந்திக்கச் செய்து ஆற்றல் மிக்க வலிமையைக் கொடுக்கும்.
 
அந்த வலிமை பெறச் செய்வதற்குத் தான் இந்த உபதேசமே.
 
இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால்
1.உங்கள் உயிர் கடவுள் உங்கள் உடல் ஒரு கோவில்
2.அந்த ஆலயத்தைப் பரிசுத்தப்படுத்த வேண்டும் என்ற ஆசையில் வெளிப்படுத்துகின்றேன்.
3.அதே ஆசையுடன் நீங்கள் அருள் சக்திகளை நுகர்ந்தால் அந்த அருள் உணர்வுகள் உங்களுக்குப் பாதுகாப்பாக வரும்.
4.சிந்திக்கும் தன்மை வருகின்றது அருளைப் பெருக்க முடிகின்றது அருள் வாழ்க்கை வாழ முடிகின்றது…!

July 17, 2025

அரசு அன்று கேட்கும்… தெய்வமோ நின்று கேட்கும்…!

அரசு அன்று கேட்கும்… தெய்வமோ நின்று கேட்கும்…!


உதாரணமாக நம் பையன் நன்றாகப் படிக்க வேண்டும் என்று எண்ணுகின்றோம். பாடப் புத்தகங்களையும் வாங்கிக் கொடுக்கின்றோம். அழகான துணிமணிகளையும் கொடுக்கின்றோம்.
 
அவன் நல்ல நிலையில் தெளிவாக வளர்ந்து வர வேண்டும் என்று இத்தனையும் ஆசை கொண்டு செயல்படுத்துகின்றோம். இவ்வாறு நினைக்கும் போது மூஷிகவாகனா.
 
அந்த உணர்வுகளைச் சுவாசித்து குழந்தைகக்கு வேண்டியதைப் பக்குவப்படுத்தி அவனைச் சீராட்டுகின்றோம் தாலாட்டுகின்றோம். ஆனால் இந்த மகிழ்ச்சி என்ன ஆகின்றது…?
 
பையனோ அவனுடைய உணர்வுக்கொப்ப அந்தப் புத்தகத்தில் இருக்கக்கூடிய பக்கங்களைக் கிழித்து விட்டு விளையாண்டு கொண்டிருக்கின்றான்.
 
நாம் எண்ணியபடி அவன் வரவில்லை என்ற நிலையில் அதைப் பார்த்த உடனே இப்படி நஷ்டம் ஆக்கிவிட்டானே…” என்று வேதனைப்படுகின்றோம்.
 
தேள் நம்மைக் கொட்டி விட்டால் சிந்தனை வருமா…? அந்தப் பொருள் வீணாகிவிட்டதே…! என்ற நிலையைச் சிந்தித்த உடனே விஷமான நிலைகள் கொண்டு கடுகடுப்பாகின்றது.
1.சிந்திக்கும் செயல் இழந்து இருள் சூழ்ந்த நிலைகள் கொண்டு இப்படிச் செய்து விட்டயாடா…?” என்று ஆத்திரம் வருகிறது.
2.நாம் எதைக் கொண்டு அவனைப்  பக்குவப்படுத்த வேண்டும் என்று விரும்பினோமோ அவனையே அழிக்கும் நிலைகள் வருகின்றது.
 
அது தான் மூஷிகவாகனா…! வேதனையும் எரிச்சலும் இரண்டும் சேர்த்து எனக்குள் சுவாசிக்கும் பொழுது கோபம் வருகின்றது காளி…!
 
அந்தக் காளி என்ன செய்கின்றது…? நாம் பார்க்கும் பொழுது தவறு செய்தால் துர்மார்க்கனை அழிக்கும் நிலை வருகின்றது.
 
அவன் செய்யும் சேட்டையை உணர்ந்து அவன் எதைச் செய்தானோ அதைப் பார்க்கும் பொழுது அதுவாகி அந்த உணர்வின் தன்மை கொண்டு அவன் செயலையே அழிக்கும் நிலைகளுக்கு நம்மை இட்டுச் செல்கின்றது.
 
அது தான்ம்
1.அவன் செய்த பிழையான உணர்வுகள் அங்கே இருள் அவனுக்குள் எடுத்த உணர்வுகள் வெளி வருகின்றது.
2.அவனைப் பார்த்து நாம் அதை எடுக்கப்படும் போது ஓம் நமச்சிவாய… அந்த உணர்வின் சத்து நமதாக இங்கே பிரணவமாகிறது.
 
அவன் எடுத்துக் கொண்ட உணர்வின் சத்து அங்கே இருக்கின்றது. அந்த உணர்வைச் சுவாசிக்கும் பொழுது
1.“அவனை உதைக்க வேண்டும் என்ற நிலைகளில் அவன் செயல் என்னை இழுத்துச் செல்கின்றது.
2.அது தான் ஓம் நமச்சிவாய சிவாயநம ஓம்… அதாவது நமதாக மாறி நம்மிடமிருந்து அதே உணர்வின் இயக்கமாக அங்கே திரும்பச் செல்கிறது.
 
நீ எதை நினைக்கின்றாயோ அதுவாக நீ ஆகின்றாய் என்ற நிலையும் இதைப் போன்ற உணர்வின் தன்மை அது எப்படி இயக்குகிறது…? என்ற தத்துவத்தைத் தான் நம் சாஸ்திரங்கள் கூறுகின்றது.
 
ஓம் நமச்சிவாய சிவாயநம ஓம் என்று சொல்வோருக்கு அபாயம் ஒன்றும் இல்லை என்று எண்ணினால் சரியாகிவிடுமா…?
1.அவன் கொடுத்த தத்துவத்தை அவன் காட்டிய சிவத்தை எதுவாக ஆக்க வேண்டும்…?”
2.எந்த உணர்வின் தன்மையாக உனக்குள் பெருக்க வேண்டும்…?
3.இயற்கையின் நீதிகளின் தன்மைகள் வளர்வதற்கு என்ன வழி…? என்று அன்று மெய் ஞானி உணர்த்தினான்.
 
அதைத் தான் அங்கே பார்க்கப்படும் பொழுது அரசு அன்று கேட்கும் தெய்வம் நின்று கேட்கும்…! நான் எடுத்துக் கொண்ட உணர்வுகள் எனக்குள் நல்ல குணங்களாக வளர்ந்து இருந்தாலும் அவன் செயலைப் பார்க்கும் பொழுது
1.நான் சுவாசித்த நிலைகளால் எனக்குள் இருக்கக்கூடிய குணங்கள் அனைத்தும் அடங்கி
2.வேதனையையும் கோபத்தையும் ஊட்டும் நிலையாக இது எனக்குள் ஆட்சிக்கு வருகின்றது.
3.கணங்களுக்கு அதிபதி கணபதி அவனைத் தாக்கும் நிலைகளுக்கு நான் வந்து விடுகின்றேன்உதைக்கின்றேன்
4.நான் வாங்கி கொடுத்த புத்தகத்தைக் கிழித்து விட்டயாடா பாவி…! என்று அவன் அழுதாலும் இரக்கமற்று அடிக்கின்றோம்.
 
காளிக்கு முன்னாடி என்ன இருக்கின்றது…? புலி…! அவன் உணர்வைச் சுவாசித்து அதன் வழியில் காளியின் ரூபமாக என்னை அழைத்துச் சென்று புலியைப் போன்று தாக்கும் நிலைகளை உருவாக்குகின்றது.
 
புலி எப்படி மற்ற உயிரினங்களை இரக்கமற்றுக் கொல்கின்றதோ அவனை அடித்து விட்டோம். இருந்தாலும் சுவாசித்த உணர்வுகள் என் உயிரிலே பட்டு அந்த உணர்வின் சத்தினை எனக்குள் வடித்து என் நல்ல உணர்வுடன் கலக்கப்படும் பொழுது
1.எனக்குள் இருக்கக்கூடிய நல்ல குணத்தை அழிக்கச் செய்து விடுகின்றது அந்தச் சக்தி…”
2.அரசு அன்று கேட்கும் தெய்வம் நின்று கேட்கும்…!
3.எனக்குள் உருவான அந்தக் காளியான சக்தி நல்ல குணங்களுக்குள் ஊடுருவி இரத்தக் கொதிப்பாக மாறி
4.வேதனை கொண்ட கடுகடுப்பும் வியாதியாகத் தோற்றுவிக்கும் நிலையாக உருப் பெறுகின்றது.
 
அதனால் தான் அரசு அன்று கேட்கும் தெய்வம் நின்று கேட்கும் என்று சொல்வது. அவனை அடித்த உணர்வுகள் திரும்பத் திரும்ப அதைச் சொல்லப்படும் பொழுது இந்த உணர்வின் தன்மையே இயக்கமாகிறது.
 
ஒரு ரேடியோவிற்குள் எப்படி அந்தப் பேசிய அலைகளை மீண்டும் நினைவு கூறும் பொழுது அதனின் அலைவரிசையைத் தொகுப்பாக வைத்துத் திருப்பி வைக்கப்படும் போது அந்த உணர்வின் நினைவலைகளை ஊட்டி நாம் அதன் மூலமாகக் கேட்பது போன்று
1.நமக்குள் இருக்கக்கூடிய காந்தப்புலனின் சக்தி வேகத் துடிப்பு கொண்டு அவனை அடிக்க வேண்டும் என்று எண்ணி எதைச் செயல்படுத்தினேனோ
2.அந்த உணர்வின் காந்தப்புலன்கள் கவர்ந்து நாம் மீண்டும் வேகமாக இழுக்கும் பொழுது
3.அந்த உணர்வலைகள் சுழன்று நின்று என்னைச் சுற்றி நிற்கின்றதுஅதுவே இயக்குகின்றது,
 
உதாரணமாக ஓசோன் திரை இந்தப் பூமிக்கு பாதுகாப்பாக எப்படி அமைந்ததோ… அதாவது விண்வெளியில் தோன்றும் விஷத்தின் அணுக்கள் பூமிக்குள் நுழையப்படும் பொழுது அது வெளிச் செல்லும் போது மீண்டும் காந்தப் புலன்கள் கவர்ந்து இதன் சுழற்சி வட்டத்தில் அந்த விஷத்தின் தன்மையைக் கவர்ந்துமீண்டும் தனக்குள் வரும் விஷத்தைத் தனக்குள் அடுக்கடுக்காகச் சேர்த்து இந்தப் பூமிக்குள் விஷம் வராதபடி அது ஆற்றல்மிக்க நிலையாக ஓசோன் திரையாக அது எப்படி வளர்கின்றதோ இதைப் போன்று
1.நாம் எடுத்த ஆத்திரத்தின் நிலைகள் வேகமாக எடுத்துக் கொண்ட அந்த உணர்வுகள்
2.ஓசோன் திரை போன்று ஆத்திரத்தை தூண்டும் உணர்வின் நிலைகளாக எனக்குள் ஆன்மாவாகக் “குவித்துக் கொள்கிறது…”
 
யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே…! அடுத்து நான் ஒரு வியாபாரத்திற்குச் செல்கின்றேன். வாங்க வருபவரிடம் பொருளை எடுத்துக் கொடுக்கின்றேன்.
 
இந்த உணர்வின் தன்மை கொண்டு எடுத்துக் கொடுக்கப்படும் பொழுது நான் எடுத்துக் கொண்ட உணர்வின் (ஆத்திரமான) ஒலிகள் அங்கே அவர் செவிகளில் பட்டு இதே உணர்வுகள் அங்கே உந்தும் பொழுது அவர் என்னைப் பார்க்கின்றார்…”
 
பாலுக்குள் காரத்தைக் கலந்து விட்டால் அது எப்படிச் சுவையற்றதாக மாற்றுகின்றதோ அதைப் போல அந்த ஆத்திரமான உணர்வுகள் அவருடைய சுவாசத்திற்குள் சென்று
1.நான் எப்படி என் பையனை வெறுத்துத் தாக்கினேனோ இதே உணர்வுகள் கண்ணின் புலனறிவுகளிலே பட்டு அங்கே பாய்ச்சப்பட்டு
2.எடுத்துக் கொடுக்கும் பொருளை சொல்லாகச் சொல்லப்படும் பொழுது இந்த உணர்வுகள் அவருக்குள் உணர்ச்சிகளாக இயக்கப்பட்டு
3.கையிலே எடுத்துக் கொடுக்கும் பொருளை வெறுக்கச் செய்கின்றது.
 
தன் இனத்தின் தன்மை தான் பாதுகாக்கும் நிலையாகத் தான் செய்த நிலையை உருப்பெறும் உருவாக்கும் சக்தியாக அங்கே உருவாகின்றது.
 
இதைத்தான் யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே. இவனை அடித்து விட்டேன் என்று எண்ணினாலும் இந்த உணர்வின் சத்து நாம் செயலாக்கப்படும் பொழுது இது முன்னணியில் வந்து விடுகின்றது.
 
அதைத் தான் இயற்கையின் நிலை அது எவ்வாறு இயக்குகிறது…? என்று அன்று காட்டினார்கள் ஞானிகள்.
 
ஞானிகள் காட்டிய அந்த உண்மைகளை எல்லாம் நாம் தெளிந்து தெரிந்து தெளிவான நிலைகள் கொண்டு அருள் உணர்வுகளைச் சுவாசித்து நல்லது செய்யக்கூடிய பண்புகளாக நாம் மாற்றிக் கொள்ள வேண்டும்.

July 16, 2025

வேதனையாக இருக்கிறது… முடியவில்லை…! என்று சொல்வதற்குப் பதில் “மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்” என்று சொல்லுங்கள்

வேதனையாக இருக்கிறது… முடியவில்லை…! என்று சொல்வதற்குப் பதில் “மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்” என்று சொல்லுங்கள்


மனித வாழ்க்கையில் வரக்கூடிய எத்தகைய இன்னல்களாக இருந்தாலும் யாம் சொல்லும் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை இணைத்து நமக்குள் பரிசுத்த நிலைகளை ட்டி மகிழ்ச்சியூட்டும் உணர்வாக நமக்குள் கூட்டி உணர்வின் எண்ண அலைகளை ஒளியாகக் கூட்டி இந்த உணர்வின் சக்திகள் உயிருடன் ஒளியாக மாறி வெளியில் சென்ற பின் எந்தத் தீங்கும் நேராவண்ணம் தீமையான உணர்வுகளை மாய்த்துத் தனக்குள் ஒளியின் சுடராக என்றும் பதினாறு என்ற நிலையை அடைய முடியும்.
 
ஆகையினால் யாம் லேசாகச் சொல்கிறோம் என்று யாரும் எண்ண வேண்டாம்.
 
யாம் கொடுக்கும் நல் வாக்கினை எண்ணி அதைப் பெற வேண்டும் என்று ங்கி இருந்தீர்கள் என்றால் ஆற்றல்மிக்க சக்திகள் உங்களுக்குள் ஊடுருவி உங்களுக்குள் நன்மைகளை வளர்த்து தீமைகளை விக்கி ஒளியின் சுடராகப் பெறும் தகுதி பெறுகின்றீர்கள்.
 
எல்லாமே வாக்கு தான்…! ஜோதிடம் ஜாதகம் பார்க்கப்படும் பொழுது
1.“கேட்ட நேரம் வருகிறது ஏழரை நாட்டான் சனி பிடித்திருக்கிறது என்று அவர்கள் சொன்ன வாக்கினை மனதினிலே ஏற்றி
2.அதன் உணர்வை ருக்கொண்டு உங்கள் வாழ்க்கையை நசித்துக் கொள்கின்றீர்கள் அல்லவா…!
 
ஆனால் சாதாரண ஒலியின் தன்மை தான் அது.
 
அவன் சொன்ன வாக்கை மீட்டுவதற்கு உபசாந்திகளைச் செய் யாகத்தைச் செய்தால் மீள்வாய் இந்த ஆலயத்திற்குச் சென்றால் மீள்வாய்…” என்று பல பொருள்களைச் செலவழிக்கச் சொல்வார்கள்.
 
அதை போல் அல்ல யாம் சொல்வது…!
1.நீங்கள் ஒவ்வொருவரும் யாம் சொன்ன முறைப்படி
2.மெய் ஒளியின் சுடரை எடுத்து ஒளியின் சுடராக உங்களுக்குள் வளரச் செய்யுங்கள்.
 
இந்த மனித வாழ்க்கைக்குத் தான் சொன்ன குறைகளை மாற்றி அமைப்பதற்குச் செய்யப்பட்ட நிலைகள் தான்
1.ஜாதகங்களையும் சாஸ்திரங்களையும் சொல்லி நீ இதைச் செய்ய வேண்டும் என்று சொல்கின்றார்கள்.
2.ஆனால் விதிப்படி நடக்கும்…!” என்று இருக்கப்படும் பொழுது கேள்விகளை நடத்தினால் எப்படி மாறும்…?
 
ஆனால் அதை எப்படி எதன் வழிகளில் நடத்த வேண்டும்…?
 
நம் உணர்வின் தன்மை ஒளியாக ஞானிகளின் அருள் வித்தாக நமக்குள் மாற்றி அமைத்தால் தான் இந்த வேள்வியை நடத்தினால்தான் மாற்ற முடியுமே தவிர புற கேள்விகளைச் செய்து அல்ல...!”
 
அவன் சொன்ன நிலைகளை நாம் எடுப்பது போல மெய் ஞானியின் அருள் வித்தை உங்களுக்குள் வளர்த்து மெய் ஒளியுடன் நீங்கள் செல்ல
1.அன்று ஆதிசங்கர் சொன்ன அருள் தத்துவத்தை உங்களுக்குள் ஏற்று
2.மெய் ஒளியாக நல்ல உணர்வினை இயக்கக் கூடிய சக்தியாக தனக்குள் துவைதமாக்கி
3.ணர்வின் மன ஒலியாக அத்வைதமாக இயக்கி
4.அத்வைதத்தின் தத்துவமாக என்றும் நம்முடைய பேச்சு மூச்சம் உலகைச் சிருஷ்டிக்கும் சக்தியாக
5.இருளை நீக்கி ஒளியின் சுடராகப் பெறும் தகுதியை நீங்கள் பெற முடியும்.
 
இது திசங்கரர் சொன்ன உண்மை நிலைகள்…! அதன் வழியில் நீங்கள் பெற வேண்டும் என்று அந்த ஆசையின் நிலைகள் கொண்டு இதைச் சொல்கின்றேன்.
 
ஆகவே நீங்கள் ஒவ்வொருவரும் கூட்டுத் தியானமும் ஆத்ம சுத்தி என்ற நிலையும் கடைப்பிடித்து உடலிலே எந்த நோயாக இருந்தாலும் வயிற்று வலியாக இருந்தாலும்
1,மகரிஷிகளின் அருள் சக்தி அந்த லி இருக்கும் இடங்களிலே படர்ந்து
2.அந்த வலிகள் நீங்கி நலம் பெற வேண்டும் என்று ஒரு 15 நிமிடம் எண்ணுங்கள்.
 
கேன்சர் நோய் வந்து விட்டது உங்களால் முடியவில்லை என்று எண்ண வேண்டாம் முடியவில்லை என்கிற பொழுது வேதனை வேதனை…” என்று எண்ணுவது போல அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்என்று எண்ண வேண்டும்.
 
உடலில் எங்கே கேன்சர் இருக்கின்றதோ அங்கே நினைவைச் செலுத்தி மகரிஷிகளின் அருள் சக்தியால் அந்த வேதனை நீங்கி மகரிஷிகளின் அருள் ஒளி ஆங்கே படர்ந்து மகிழ்ச்சியூட்டும் உணர்வாக எனக்குள் விளைய வேண்டும் என்று கண்ணைத் திறந்து வானை நோக்கி ஏகி பின் கண்களை மூடி அந்த இடத்திலே நினைவினைச் செலுத்த வேண்டும்.
 
கண்களை மூடி கண்களைத் திறந்து இவ்வாறு சிறிது நேரம் செய்ய வேண்டும்.
 
1.நாள் முழுவதற்கும் ஐயோ வலிக்கிறதே…” என்று வேதனையாகச் சொல்வதற்குப் பதில்
2.ந்த மகரிஷிகளின் அருள் உணர்வைப் பெற வேண்டும் என்று சொல்லுங்கள்.
 
இந்த வாக்கின் சுடரின் தன்மை உங்களுக்குள் அந்த மெய் ஒளியினை உணர்த்த அந்தத் தீய நிலைகளை மாற்ற அதனின் ன்மை கொண்டு நன்மை பயக்கும் நிலையை நாம் பெற முடியும்.
 
நாம் எடுத்துக் கொண்ட நினைவு தான் சுவாசமாகி அந்தச் சுவாசத்தின் உணர்வு தான் நமக்குள் இயக்கமாகி அந்த உணர்வின் சக்தி உறைந்து நமக்குள் விளைந்து பரிணாம வளர்ச்சியில் வந்திருக்கின்றோம்.
 
1.தீமைகளிலிருந்து மீட்டிட ஞானிகள் காட்டி அருள் வழியினைக் கடைப்பிடித்து அதைப் பெற வேண்டும் என்று பிராத்திக்கின்றேன்.
2.ஒரு நாளைக்கு ஆயிரம் முறை கூட அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணலாம்.
 
பத்திரிகையைப் பார்க்கின்றோம் டிவியைப் பார்க்கின்றோம். அதில் எத்தனையோ உணர்வுகளைத் தெரிந்து கொள்கின்றோம். அடுத்த கணமே ஆத்ம சுத்தி செய்து எங்கள் பேச்சும் மூச்சும் உலக நன்மைக்குப் பயன்பட வேண்டும் ங்கள் சொல்லும் செயலும் புனிதம் பெற வேண்டும் நாளை நடப்பது அனைத்தும் நல்லவையாக நடக்க வேண்டும் என்று எண்ண அலைகளைப் பரப்ப வேண்டும்.
 
அப்போது அந்தச் சங்கட உணர்வுகள் உங்களுக்குள் சேராது தடுக்க முடியும்.
 
நோயாளியைப் பார்த்தாலும் ஆத்ம சுத்தி செய்துவிட்டு உங்களுக்கு இனி நோய் இல்லை நலம் பெறுவீர்கள்…” என்று நல்ல வாக்கினைச் சொல்லுங்கள்.
 
உணவு உட்கொள்ளும் பொழுதெல்லாம் ஆத்ம சுத்தி செய்து அந்த அருள் உணர்வுடன் உணவை உட்கொள்ளுங்கள். அருள் உணர்வுகள் உமிழ் நீராகக் கலந்து நன்மை பயக்கும் சக்தியாக மாறும்.
 
இந்த வாழ்க்கையில் நல்லது என்று பார்க்கும் போது தீமை என்ற நிலைகளை உணர்த்துகின்றது.தைத் தெரிந்து தான் நாம் விலகிச் செல்கின்றோம்.
1.விலகிச் சென்றாலும் அந்த உணர்வின் சத்து உடலுக்குள் சென்று நோயாக மாறிவிடுகின்றது.
2.அதை அவ்வப்போது தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
 
அப்படி இல்லாதபடி கடவுள் செய்வார் யாரோ செய்வார் எவரோ செய்வார் ஜாதகம் செய்யும் நல்ல நேரம் செய்யும் என்று அப்படி எண்ண வேண்டியது இல்லை.
 
1.நல்ல நேரம் எது என்றால்…? நல்ல உணர்வுகளைச் சேர்க்கும் நேரமே நல்ல நேரம் ஆகின்றது…”
2.மனிதனுக்கு நேரமும் காலமும் ஜாதகமும் ஜோதிடமும் கிடையாது.