இந்தப் பிராணாயாமம் என்று சுவாசத்தை மூக்கின் வழி
கொண்டு வலுக் கட்டாயமாகச் சுவாசிப்பார்கள்.
நம் உடலுக்குள் வேகமாக சுவாசிக்கும் நிலையில் அந்த
உறுப்புகள் துருத்தி போன்று விரிந்தும் கூடியும் வரும். அப்போது அதை அடக்கி இழுக்க
வேண்டும் என்ற உணர்வினை இந்த சுவாசப்பை இழுக்கப்படும் போது மூக்கு வழி கொண்டு
சுவாசித்து உள் செலுத்துகின்றது.
இப்போது அதிகமாக இழுக்கும் போது அசுத்த உணர்வுகளைத்
தான் நம் உறுப்புகளிலே செலுத்துகின்றது.
நம் சிரசில் இருக்கும் பெரு மூளையில் உருவாகும்
ஒரு சளி நாம் சுவாசிக்கும் உணர்வுக்குள் வரும் அசுத்தத்தை நீக்கி அதை வடிகட்டி உள்ளே
அனுப்புகின்றது.
கட்டாயப்படுத்ததி எடுக்கும் உள் சுவாசம் அதிகரிக்கும்
போது வடிகட்டும் திறன் இழந்து விட்டால் நமது சுவாச நுரையீரல்களில் இவை அனைத்தும் அசுத்த
நிலைகளாகின்றது.
அதே சமயம் விஷத்தன்மை கொண்ட வலுவும் பெறுகின்றது.
இப்படிப் பல முறைகள் செய்து விட்டால் அந்த மனிதனுக்கு வீரிய சக்தியும் இருக்கும்.
பிராணாயாமம் செய்தவருக்குள் வாயுவின் தன்மை அதிகரித்து
உடலில் உள்ள வாய்வு நரம்புகளில் ஊடுருவி “இங்கே குடு..குடு.., என்று ஓடுகின்றது..,
அங்கே குடு..குடு… என்று ஓடுகின்றது…” என்றெல்லாம் சொல்வார்கள்.
இதுவெல்லாம் நாம் எண்ணியதை அதற்குத்தக்கவாறு
நம் உயிர் உருவாக்குகின்றது.., உயிர்உருவாக்கத் தவறுவதில்லை.
அது தான் கீதையிலே, “நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய்”
என்று இந்தக் கண்ணின் நிலைகளைக் கீதாச்சாரத்தில் காட்டியிருப்பார்கள்.
என்று இந்தக் கண்ணின் நிலைகளைக் கீதாச்சாரத்தில் காட்டியிருப்பார்கள்.
ஒருவருக்கு நன்மை செய்ய வேண்டும் என்று எண்ணினால்
நம் கண் அவரைப் பார்த்த பின் அரவணைக்கச் செய்கின்றது.
அதே சமயத்தில் இவரை எப்படியும் தொலைத்துக் கட்ட
வேண்டும் என்று எண்ணி விட்டால் அதன் வழி கொண்டு இந்தக் கண் அவனைக் கண்டபின் உணர்ச்சியின்
வேகங்கள் கூடி அவனை எவ்வழியில் மடக்குவது என்று உணர்வுகளை ஊட்டுகின்றது.
நாம் எண்ணியதை வழி காட்டுவது கண்ணே. கண்கள் வழி
கூடி உற்றுப் பார்க்கப்படும் போது அந்த உணர்வைச் சுவாசித்து நம் உயிரிலே உராயப்பட்டு
உணர்வின் தன்மை தனக்குள் இயக்குகின்றது.
கண்ணன் சங்க நாதம் ஊதிய பின் தான்… “குருக்ஷேத்திரப்போர்…!”
என்று காவியங்களில் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது.
1.எண்ணத்தின் தன்மை கொண்டு நாம் எண்ணும் போது
2.இந்த உணர்வின் தன்மை சுவாசித்து உயிரிலே படும்
போது தான்
3.அந்த உணர்ச்சிகள் நம்மை இயக்குகின்றது.
4.இவையெல்லாம் வேதங்களில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
எதுவும் குறை இல்லை.
கண்களின் துணை கொண்டு புருவ மத்தியில் நினைவைச்
செலுத்தி விண்ணிலிருந்து வரும் மகரிஷிகளின் அருள் சக்திகளை எண்ணி ஏங்கித் தியானித்து
1.உயிர் வழியாக நமக்குள் சேர்ப்பதே
2.”ஞானிகள் சொன்ன பிராணாயாமம்…!”