ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 13, 2018

இலங்கைக்குள் சென்று சிறைப்பட்டிருக்கும் சீதாவை இராமன் “ஆஞ்சநேயன்” மூலமாக அறிந்த பின்பு..., “சுக்ரீவன் துணையுடன்” சீதாவை மீட்கிறார்

வெறுப்பு வேதனை கோபம் ஆத்திரம் பயம் என்ற உணர்வுகள் நம் உடலிலே வளர்ந்து விட்டால் சந்தோஷம் என்ற நிலை நமக்கு இல்லை.

தொழிலினாலோ அல்லது குடும்பத்தினாலோவேதனைப்படுவோர்; கோபப்படுவோர்; சஞ்சலப்படுவோர்; இன்னும் எத்தனை வகையான நிலைகளில் அவதிப்படுபவர்களிடம் ஒரு சந்தோஷமான செய்தியைச் செய்தால் அவர்கள் மனம் அதற்கு உடன்படுகின்றதா?

இதைத்தான் (தன் உடலிலுள்ள சந்தோஷத்தை) சீதாவைச் சிறைப் பிடித்தான் இராவணன்...!” என்று இராமாயணத்தில் காட்டுகிறார்கள்.  சந்தோஷத்தை உருவாக்கும் நிலையைச் சிறைப்பிடித்து அதை நாம் செயலற்றதாக மாற்றுகிறோம் என்று உணர்த்துகின்றார்கள்.

பையன் மேல் அன்பாக இருக்கின்றோம், அவன் சொன்னபடி கேட்கவில்லை என்றால்
1.நான் எண்ணியபடி அவன் நடக்கவில்லை என்று எண்ணி
2.அவனை உதைத்தால்தான் தீரும்...!” என்ற அரக்க உணர்வு வருகின்றது.

அவனுடைய சந்தோஷத்தில் மகிழ்வதற்கு மாறாக நாம் அந்த நல்ல உணர்வைச் சிறைப் பிடிக்கின்றோம். ஒவ்வொரு நாளும் நம் உடலிலே இத்தகைய நிகழ்ச்சிகள் நடந்து கொண்டே தான் இருக்கின்றது.

யாரும் இல்லை...” என்று மறுக்க முடியாது.

குடும்பத்தில் எவ்வளவு ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்தாலும் சில நேரங்களில் அசுர உணர்வுகள் வந்த பின் நம் நல்ல குணங்களைச் செயலற்றதாக அது மாற்றி விடுகின்றது.

அதைத்தான் இராவணன் சீதாவைச் சிறைப்பிடித்துச் சென்று விட்டான் என்று இராமாயணத்தில் தெளிவாகவே காட்டுகின்றார்கள்.

சீதாவை (மகிழ்ச்சியை) மீட்டுவதற்காக இராமனுடைய எண்ணங்கள்
வானரப் படைகளை நாடுகின்றது. வானரப்
படைக்குத் தலைமை தாங்கி நடத்துபவர் யார்...? சுக்ரீவன்.

சுக்ரீவன் என்றால் துருவ நட்சத்திரம்.

துருவ நட்சத்திரத்தின் துணை கொண்டு அந்த உணர்வின் அலைகளை நமக்குள் பாய்ச்சி நம் உடலுக்குள் இருக்கும் தீமைகளை எப்படி மாற்றிக் கொள்வது என்பதைத்தான் இராமன் சுக்ரீவன் துணை கொண்டு... சீதாவை மீட்கிறான் என்று இராமாயணம் காட்டுகின்றது

1.வான் வீதியிலிருந்து வரும் துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகள் அது தான் “வானரப் படை”
2.அந்தப் பேரருள் பேரொளியை நம் புருவ மத்தியின் வழியாகக் கவர்ந்து
3.நம் உடலுக்குள் செலுத்தி தீமை என்ற உணர்வுகளை நீக்கி
4.அரக்கச் சக்திகளை (அடக்க) மாற்ற வேண்டும் என்று வான்மீகி மாமகரிஷி காட்டுகின்றார்.

இராவணன் இடத்தில் சிறைப்பட்டிருக்கும் சீதா... எப்படி இருக்கிறாள்..?” என்று ஆஞ்சநேயர் இலங்கைக்குள் உட்புகுந்து பார்க்கின்றார்.

“இலங்கை...!” என்றால் இந்த உடலே ஒரு இலங்கை. அதாவது
1.நம் உடலுக்குள் வேதனை என்ற உணர்வு அதிகமான நிலையில்
2.சந்தோஷமாக இருக்கும் சீதா உடலுக்குள் எப்படி சிறைப்பட்டிருக்கிறது என்று
3..தன் எண்ணத்தால் எண்ணி சீதா எப்படி இருக்கிறது...! என்று அறியும்படி செய்கின்றார்கள்.

யாரை வைத்து…? வானரப் படைகளிலிருந்து வந்த ஆஞ்சநேயனைக் காட்டுகின்றார்கள்.

அதாவது பாராசக்தி குளித்துக் கொண்டிருக்கும் குளத்தில் ஆண்கள் குளித்தால் பெண்களாக மாறி விடுவார்கள் என்று சாபம் இருந்தது.

ஆனால் அந்தக் குளத்தில் ஒரு ஆண் குரங்கு தவறி வரப்படும் பொழுது விழுந்து விடுகின்றது. உடனே அது பெண்ணாக மாறி விடுகின்றது.

அந்தப் பெண் அழகான நிலைகளில் இருக்கப்படும் பொழுது வாயு ஆசைப்படுகின்றான். அதாவது நம்முடைய ஆசைகள் நாம் நுகரும் உணர்வு வாயுவாகி உடலுக்குள் செல்லுகின்றது.

அந்த உடலுக்குள் சென்று உணர்வின் தன்மை நம் உமிழ் நீராக மாறும் பொழுது நம் வாய்க்குள் வருகின்றது.

அந்த வாய்வு என்ற உணர்வு ஆசை என்ற உணர்வினுடன் சேர்த்து உமிழ் நீராக மாறும் பொழுது மற்ற உணர்வுடன் சேர்க்கப்பட்டு அது இந்திரீகமாக மாறுகின்றது. இந்திரன் அதனின் அழகைக் கண்டு இரண்டாவதாக ஆசைப்படுகின்றான்.  

நாம் நுகர்ந்த உணர்வுகள் உமிழ் நீராக மாறி இரத்தத்தில் (இந்திரீகம்) எப்படிக் கருவாக உருவாகின்றது? அதன் தன்மை எப்படி உருவாகின்றது என்பதனை இராமாயணக் காவியத்தில் தெளிவாகக் கூற்படுகின்றது.

“ஆஞ்சநேயன்...” என்று இப்படிக் காரணப் பெயர் வைக்கின்றார்கள். ஆனால் விளக்கம் சொல்லாது விட்டார்கள்.

நீங்கள் இராமாயணக் காவியத்தை இப்பொழுது படித்துப் பாருங்கள்.
1.முன்பு நீங்கள் படித்த நிலைக்கும்
2.இப்பொழுது யாம் (ஞானகுரு) சொல்லும் நிலையும் 
3.இராமாயணத்திற்குள் எவ்வளவு மூலக் கூறுகள் பொதிந்துள்ளது...!” என்பதை நீங்கள் அறிய முடியும்.

நம் எண்ணத்தால் உருவாக்கப்பட்ட உணர்வுகள் நம் உடலிலே எப்படி இயங்குகின்றது என்பதனை
1.தன்னை அறிந்து கொள்ள முடியும்.
2.”தன்னை அறிந்து கொள்ளும் நிலை தான்...” இராமயாணம்.
3.உடலுக்குள் (இலங்கைக்குள்) அசுர உணர்வுக்குள் இந்த எண்ணம் ஊடுருவி அதை அறியும் சக்தி வருகின்றது
4.இப்படி வலிமையான உணர்வுகள் (ஆஞ்சநேயன்) உடலுக்குள் அது பெருகிய பின்
5.நமக்குள் எது எது செயல்படுகின்றது...? என்பதை ஒவ்வொருவரையும்  உணரச் செய்வதற்கே வான்மீகி காவியமாகப் படைத்தார்.

தன்னைத் தான் அறிதல் என்ற நிலையில் நம்மை இயக்கும் தீமையான உணர்வுகளை அறிந்து அருள் மகரிஷிகளின் உணர்வை நுகர்ந்து அவைகளை அகற்றினால் பேரானந்தப் பெரு மகிழ்ச்சி என்ற நிலையை அடைய முடியும். 

மனிதனாகப் பிறந்த அனைவரும் துன்பமில்லாது வேதனையில்லாது ஏகாந்தமாக விண் செல்ல வேண்டும் என்பதையே இராமாயணக் காவியத்தின் மூலமாக வான்மீகி உணர்த்துகின்றார்.