ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

Showing posts with label தியானம் செய்பவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது. Show all posts
Showing posts with label தியானம் செய்பவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது. Show all posts

July 28, 2026

இந்தத் தியான வழியினை யாருக்கும் கட்டாயப்படுத்தி நாம் சொல்லக் கூடாது

இந்தத் தியான வழியினை யாருக்கும் கட்டாயப்படுத்தி நாம் சொல்லக் கூடாது


எப்பொழுதெல்லாம் உங்கள் மனம் தெளிய வேண்டுமோ அப்பொழுதெல்லாம் எம்முடைய அருள் ஞான நூல்களை எடுத்துப் படியுங்கள் எமது உபதேசங்களைக் கேளுங்கள்.
 
உங்கள் நண்பர்களுக்கும் எடுத்து ஓதுங்கள் அவர்களுக்குள் பதிவாக்குங்கள் நினைவாக்குங்கள். அவர்களையும் அந்த அரும்பெரும் சக்தியைப் பெறச் செய்யுங்கள்.
 
அந்தத் துணிவு உங்களுக்கு வரவேண்டும்.
 
1.நீங்கள் கண்ட உண்மைகளை எடுத்துச் சொல்லுங்கள் கேட்காதவரிடம் சொல்ல வேண்டியதில்லை.
2.ஒரு சிலர் கேட்க மறுப்பார்கள். அவர்களிடம் நாம் இதைப் பேச வேண்டியது இல்லை.
3.அவர்களுக்கும் நல்ல காலம் வரும் நல்வழி நடப்பார்கள் என்று நாம் அவர்களுக்காகத் தவம் இருக்க வேண்டும்.
 
மீறிச் சொன்னால் நம்மைக் கிண்டலாகச் சொல்வார்கள். அது தான் நடக்கும். பரவாயில்லை… ஒரு காலம் உங்களை அறியும்ண்மைகளை அறியும் அந்தச் சக்தி நீங்கள் பெறுவீர்கள் என்று சொல்லி விடுங்கள்.
 
1.உலக மக்களுக்காக நீங்கள் பேசும் இத்தகைய அருள் உணர்வுகள் உங்களுக்குள் விளைகின்றது உங்களுக்குள் பரவுகின்றது.
2.அவர்கள் முதலிலே கேட்க மறுத்தாலும் கூடச் சங்கடம் வரும் பொழுது உங்களை எண்ணுவார்கள் உடலில் பதிவானது நினைவுக்கு வரும்.
 
நாம் சொன்னதைச் செய்தால் நல்லது வரும் என்ற சிந்தனை அவர்களுக்கும் வரும். அப்பொழுது அந்த உணர்வுகளை நுகர்ந்து நம்மை அணுகி வருவார்கள்.
 
முதலில் சொல்கின்றோம் ஆனால் அவரிடம் விவாதிக்கும் தன்மைக்கு நாம் போகக்கூடாது அதை விட்டு விட வேண்டும். நீங்கள் நன்மை பெறுவீர்கள் நல் வழி நடக்கும் நீங்கள் நுகர்ந்த இந்த உணர்வுகள் உங்களுக்கு நல்வழி காட்டும் என்று மட்டும் நாம் சொன்னால் போதும்.
 
1.அடுத்து அழுத்தமாக இதைப் பெற்றே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்தக் கூடாது.
2.யாருக்கும் கட்டாயப்படுத்தி இந்தச் சக்தியைத் திணித்து அவர்களைப் பெறச் செய்ய முடியாது.
 
அன்புடன் ரவணைத்து உண்மையின் உணர்வை எடுத்துச் சொல்லத் துணிவு வேண்டும்.
 
இந்தத் தியானத்தை கடைபிடிப்போர் அனைவரும் உலக மக்கள் நலமாக இருக்க வேண்டும் என்ற உணர்வுகளை நாம் அடிக்கடி வெளிப்படுத்துதல் வேண்டும். இந்த உணர்வுகள் பூமியிலே படரும்.
 
ஒருவரிடம் சொல்கின்றோம் அவர்கள் நினைவானால் கவரும் சந்தர்ப்பம் வருகின்றது. சிந்திக்கும் ஆற்றல் அவர்களுக்குள் வரும். உங்கள் சொல்லும் வீணாகாது.
 
ஆனால் ஏற்கும் பருவம் கொண்டு அவருக்குள் பதிவு செய்து ஏற்க வைத்து விட்டால்
1.நாளைக்கு ஒரு சிரமம் வரும் பொழுது உங்கள் நினைவு வரும்.
2.நீங்கள் எடுத்துக் கொண்ட உணர்வு இங்கே இருக்கும்...தைப் பெற வேண்டும் என்ற நினைவு அவருக்கு வரும்.
 
ஆனால் கட்டாயப்படுத்த கட்டாயப்படுத்த வெறுப்பின் தன்மை தான் வளரும் ஏற்றுக்கொள்ளும் பருவமே இழக்கப்படுகிறது.
 
ஒரு பொருளில் விஷம் கலந்தால் அது எல்லாம் விஷமாகத்தான் மாறும். ஆகவே கட்டாயப்படுத்தி யாருக்கும் சொல்ல வேண்டாம்.
 
அரவணைத்து அன்புடன் ஞானத்தைப் பதிவு செய்தால் சந்தர்ப்பம் வரும் பொழுது மற்றவர்களும் இந்த அருள் ஞானத்தைப் பெறுவார்கள். ஆகவே அந்தத் தகுதியைப் பெறச் செய்யுங்கள்.

July 20, 2026

தியானத்தில் இருந்தால் மட்டும் பத்தாது…!

தியானத்தில் இருந்தால் மட்டும் பத்தாது…!


மைனர்கள் எல்லோரும் தியானத்தில் இருந்தால் மட்டும் பத்தாது…” நீங்கள் ஒவ்வொருவரும் வழிகாட்டியாக அமைய வேண்டும் உலகத்திற்கு எடுத்துக்காட்டாக ஞானிகளாக மாற வேண்டும்.
 
சாமி மீது உங்களுக்குப் பற்று அதிகமாக இருக்கலாம் ஆனால்
1.பற்று எதுவாக இருக்க வேண்டும்…?
2.அந்த அருளைப் பற்ற வேண்டும் இருளைப் போக்க வேண்டும்.
3.அந்த அருள் பற்று தான் நமக்குத் தேவை.
 
சாமியினுடைய உடல் பற்றல்ல…!
 
1.சாமியைக் கௌரவிப்பதும் சாமியை உயர்வாகச் சொல்வதும் உடலைத் தான்.
2.சாமியிடம் கேட்கும் உபதேசங்களை… அந்த அருளைப் பற்றி அதை நாம் போற்றுதல் வேண்டும்.
 
சாமியிடம் இருக்கும் அருள் பற்று எப்படி இருக்க வேண்டும்…?
1.ஞானத்தை வளர்த்தால் சாமியின் உடல் பற்று வராது.
2.சாமியின் ஞானப்பற்று தான் உங்களுக்கு வரவேண்டும்.
 
எங்கள் சாமி உயர்ந்தவர்…” என்று சொல்வதைக் காட்டிலும்
1.”அந்த உயர்ந்த உணர்வு என்னிலே வளர்கிறது…” என்று
2.உலகிற்கு நீங்கள் எடுத்துக் காட்டினால் வழி நடத்தினால் ருள் பற்று வருகின்றது.
 
இந்தத் தியானத்தைக் கடைபிடிப்போர்கள் இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
 
நீங்கள் அனைவரும் இன்னொரு வேலை செய்ய வேண்டும். என்னுடைய உபதேசங்களை எழுத்து வடிவிற்குப் புத்தகமாகக் கொண்டு வர வேண்டும்.
1.அதை எழுதி என்னிடம் கொடுங்கள் திருத்தங்களைச் சொல்லிக் கொடுக்கின்றேன்
2.ஒவ்வொருவரும் அருள் ஞானத்தை வெளிப்படுத்தும் நூல் ஆசிரியராக வாருங்கள்.
 
அந்த மாதிரிப் பழகிக் கொண்டால் பகைமைகள் புகாது தடுக்கலாம். அருளைப் பெருக்கலாம்.ருண்ட உலகில் இருந்து மீட்டித் தெளிந்த மக்களாக கொண்டு வர முடியும்.
 
விஞ்ஞானத்தின் விளைவுகளிலிருந்து நம்மையும் நாட்டையும்  உலகையும் காக்க முடியும்.
 
ஒரு வித்தை மண்ணில் ஊன்றினோம் என்றால் அது உபயோகமற்றதாக மாறுகின்றது. பின் செடியாக வளர்ந்து தன் இனத்தின் வித்தைக் கவர்ந்து எல்லோருக்கும் பசியாற்றுகின்றது.
 
இதைப் போன்று கருவில் வளரும் சிசுக்களுக்கெல்லாம் அருள் ஞான வித்துக்களைப் பதிவு செய்து ஊன்றினால் அவன் வளர்ந்து அருள் ஞானத்தைக் கொண்டு அனைவரையும் காக்கும் திறன் கொண்ட ஞானி ஆகின்றான் நாட்டைக் காக்கும் ஞானியாகின்றான்.
 
இத்தகைய அருள் ஞானிகளை வளர்த்தால் தான்
1.இனி அரசாங்கங்க நிர்வாகத்தைத் தனதாக மாற்றி
2.“நாம்…” என்ற நிலைகளில் ஒன்றுபட்ட இயக்கமாக அவன் கொண்டு வருவான்.
 
இப்பொழுது உலகெங்கிலும் நடக்கும் அரசாங்கங்கள் அனைத்தும் நான்…” என்ற நிலையில் தான் நடக்கிறது.
 
நாம் என்ற நிலையில் அத்தகைய அரசாங்கத்தை உருவாக்கி மகிழ்ந்து வாழும் மக்களாக நாம் உருவாக்க வேண்டும். அத்தகைய ஞானிகள் உருவானால் அனைவரையும் பிறவி இல்லா நிலை அடையச் செய்யும் அரும்பெரும் சக்தியாக அது மாறும்.
1.ஆகவே ஞானிகளை உருவாக்குவோம்.
2.நமக்கு இனி ஒரு பிறப்பு வேண்டாம் நம்முடைய எல்லை ஒளி உடல் பெறுவது தான்.

July 17, 2026

நாம் செய்யும் தியானம் சரி இல்லையோ…? என்ற எண்ணமே வரக்கூடாது

நாம் செய்யும் தியானம் சரி இல்லையோ…? என்ற எண்ணமே வரக்கூடாது


நமது அன்பர் ஒருவர் ஆட்டோவை வேகமாக ஓட்டி வருகிறார். அப்பொழுது அது அவருக்குக் குஷியாகத் தெரிகிறது. ஆனால் தபோவனத்தின் கேட்டின் பக்கம் வரும் போது பிரேக் போட்டவுடன் சரியான நேரத்தில் திருப்பாமல் விட்டதால் கவிழ்ந்து விட்டது. அவர் தப்பி விட்டார்… வண்டியில் இருந்தவர் சிக்கிக் கொண்டார்.
 
இதற்கெல்லாம் காரணம் நமது உணர்வுகளில் வேகம் எதுவோ அதில் மகிழ்ச்சியைத் தூண்டும்.
1.அதனின் வேகச் செயலாக வேலை செய்யும்.
2.இதன் விளைவு நமக்குள் எப்படி ஊட்டும்…? என்பதைத் தெரிந்து கொள்வதற்காகத்தான் இதைச் சொல்கிறோம்.
 
இதே மாதிரித் தான் நாம் ஆர்வமாகத் தியானம் செய்து கொண்டிருக்கிறோம். ஆர்வமாக இருக்கும் போது முந்தைய நிலைகள் நமக்குள் இயக்கும் போது என்னத்தை எடுத்தோம்…? இப்படி வருகிறதே…! நாம் ஜெயிக்கவில்லை நம்மால் முடியவில்லை போலும்…!” என்று விரக்தி அடைந்து விடுவார்கள்.
 
யாம் நீங்கள் அனைவரும் உயர்ந்த சக்தி பெற வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டுகின்றோம். இந்த உணர்வின் தன்மை மனக்கட்டுப்பாடு இல்லாதபடி இயக்கி வருகிறது.
 
1.ஏற்கனவே பதிவு செய்த உணர்வுகள் குறுக்கே குறுக்கே வருகிறது.
2.நாம் செய்யும் தியானம் சரியாக இல்லையோ…? என்று எண்ணத் தூண்டும்.
 
இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
 
முந்தைய நிலைகளில் பதிவு செய்த நிலைகள் நமக்குள் உண்டு… அதை நாம் அடக்க வேண்டும். இந்த ஆறாவது அறிவிற்குள் அந்த மெய் ஞானிகளின் உணர்வைக் கவரும் திறமையாக வரவேண்டும். இதைப் படைக்க வேண்டும்.
 
இது தான் பிரம்மாவைச் சிறைப் பிடித்தான் முருகன்.
1.இந்த ஆறாவது அறிவால் நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியைப் பெற வேண்டும்அதை ஞானமாக்க வேண்டும்.
2.இதைத் தான் உங்களுக்குள் அடிக்கடி பதிவு செய்கிறோம்.
 
றியாது வரும் தீங்குகளை எப்படி நீக்கிப் பழக வேண்டும்…? என்று பல வழிகளிலும் திரும்பத் திரும்ப உபதேசிக்கின்றோம்.

June 16, 2026

அருள் ஞானக் கருத்துக்களைத் துணிவுடன் வெளிப்படுத்த வேண்டும்

அருள் ஞானக் கருத்துக்களைத் துணிவுடன் வெளிப்படுத்த வேண்டும்


எம்முடைய உபதேசத்தைக் கேட்டீர்கள். ஆனாலும் அடுத்தவர்களுக்கு இந்த உண்மையை எடுத்துச் சொல்ல அச்சம் ஏற்படுகின்றது. அச்சம் ஏற்படும் போது சொல்ல வேண்டும் என்ற துணிவும் இருக்கின்றது சொல்ல முடியாமல் போகும் நிலையும் ஏற்படுகிறது.
 
காரணம்…
1.நம்மைக் கேவலமாக எண்ணுவார்களோ…?
2.அவருடைய பார்வையைப் பார்த்தாலே வித்தியாசமாக இருக்கிறது என்று விலகிச் சென்று விடுவோம்.
3.இந்த உண்மைகள் சொல்லாக வெளி வராது.
 
நம்முடன் சகோதரர்களாக இணைந்து வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் அவர்கள் குறைகளைக் காணும் பொழுது அந்தக் குறையை நிவர்த்திக்கும் உணர்வின் சத்துக்களை நாம் ஊட்ட வேண்டும்.
 
இதில் அச்சம் என்பது கூடாது அச்சமென்று வந்து விட்டாலே உண்மையை மறைக்கிறோம்…” என்று தான் பொருள்.
1.ஞானிகள் காட்டி உண்மைகள் இவ்வாறு தான் வேறு வேறு நிலைகளுக்கு மாற்றப்பட்டு
2.உண்மைகள் அறிய முடியாதபடி போய்விட்டது காலம் காலமாக…!
 
இன்று விஞ்ஞான அறிவில் மனிதனின் குணங்கள் அனைத்தும் அழியும் பருவம் பெற்று விட்டது. அசுரனின் நிலைகளுக்குச் செயலாக்கும் உணர்வுகள் வளர்ந்து கொண்டு வருகின்றது.
 
இதைப் போன்ற நிலைகளில் துணிவுடன்… உபதேசத்தைக் கேட்பதோடு மட்டுமல்லாதபடி
1.தன் குடும்பங்களில் குறைகள் ஏற்பட்டால் அவர்களுக்குத் தெளிவாக ஞானத்தை எடுத்துரைத்து
2.நாம் எப்படி வாழ வேண்டும்…? என்ற உண்மையினைத் துணிவுடன் எடுத்துச் சொல்ல வேண்டும்.
 
குடும்பம் எப்படி ஒன்று சேர்ந்து வாழ வேண்டும்…? குறைகள் நம்மை எவ்வாறு சாடுகின்றது…? அதிலிருந்து எப்படி மீள வேண்டும்…? என்ற உபாயங்களைச் சொல்லித்தான் அதை மாற்றுதல் வேண்டும்.
 
நீ தியானம் செய்து கொண்டே தான் இருக்கின்றாய். ஆனால் நீ தவறு செய்யாமல் இருக்கின்றாயா…? என்று அவர்கள் நம்மைக் கேட்கும் நிலை வந்து விடுகின்றது.
 
1.அதாவது… தியானம் செய்து கொண்டிருப்பவர்களிடம் சிறிது குறைகள் வந்தாலும்…
2.பார்…! இவன் எனக்கு அன்றைக்கு உபதேசித்தான் ஆனால் இப்போது இவன் என்ன செய்கிறான்…? என்று சொல்லக்கூடிய நிலை வந்து விடுகின்றது.
 
உயர்ந்த குணங்கள் இங்கே மறைக்கப்படுகின்றது.
 
நாம் செய்து வைத்திருக்கும் உணவுப் பொருள்களிலே ஒரு துளி விஷம் பட்டு விட்டால் அந்த உணவையே இது கெடுத்து விடும் செயலற்றதாக மாற்றி விடுகிறது.
 
நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகளில்
1.நமக்குள் அறியாது வரும் பிழை உடனே அந்த உணர்ச்சிகளைத் தூண்டும்.
2.அப்பொழுது நமக்கே புரியும் நம்மை அறியாமல் இந்த சொல் வந்து விட்டது என்று…!
3.இந்தக் குற்றத்தை ஏற்றுக் கொண்டு அவர்கள் மனதைப் புண்படுத்தும் என்ற நிலையில் தன்னைத்தான் உணர்தல் வேண்டும்.
4.இதை உணர்ந்த பின் மகரிஷிகளின் அருள் ஒளியைப் பெற்று அதை நமக்குள் அடக்கிடல் வேண்டும்.
 
பின்…
1.என்னை அறியாது இயக்கும் இருள்கள் அகல வேண்டும் மெய்ப் பொருள் காணும் திறன் என்னிலே அது வளர வேண்டும் ஈஸ்வரா…!
2.என் பார்வை அனைவரையும் நலமாக்கும் சக்தி பெற வேண்டும்
3.என் சொல் அனைவரையும் மகிழ்ச்சி பெறச் செய்யும் செயலாக வர வேண்டும் என்று இவ்வாறு நாம் மாற்றிக் கொள்ள வேண்டும்.

June 14, 2026

நாம் எடுக்க வேண்டிய “பிரதிக்ஞை…”

நாம் எடுக்க வேண்டிய “பிரதிக்ஞை…”


ராமன் மனதைக் குவித்து எப்படிச் சிவலிங்கமாகப் பூஜித்தானோ இதே போன்று நாம் எண்ணம் கொண்டு உணர்வின் தன்மைகளை ஒன்று சேர்க்கும் போது “இராமலிங்கம்…” என்று உயிரின் தன்மை எண்ணத்தால் உணர்வை ஒளியாக மாற்றியது என்று சொல்வார்கள்.
 
ஏனென்றால் எல்லாவற்றிற்கும் காரணப் பெயர் வைத்துத் தான் ஞானிகள் உணர்த்தியுள்ளார்கள்.
1.இராமலிங்கம் என்று சொன்னாலே நம் எண்ணங்கள் ஒன்று சேர்த்து வாழ வேண்டும் என்ற இந்த எண்ணம் தான் ராமன்…”
2.அந்த மகிழ்ச்சி பெறும் உணர்வின் தன்மை நாம் பெறும் பொழுது தான் ராமன்.
 
ராமனின் பக்தன் யார்…? ஆஞ்சநேயன். தனை நாம் எண்ணுகின்றோமோ இந்தச் சொல்லைச் சொல்லும் பொழுது அதை நீங்கள் நுகர்ந்தால் உங்களுக்குள் வாயுவாகப் புகுகின்றது.
 
இராமனின் பக்தன் வாயு புத்திரன் அவன் ஒரு மந்திரி என்ற நிலைகளில் இந்த உணர்வின் தன்மை நீங்கள் சொல்லும் பொழுது பிறருடைய உடலில் இதைப் புகச் செய்தால் அவருடைய அறியாமையைச் நீக்கச் செய்யும்… சிந்திக்கச் செய்யும்.
 
1.இவ்வாறு நம் சொல்லுக்குள் தியானம் எடுத்த உணர்வுகள் கேட்போர் செவிகளில் பட்டபின்
2.கண் கவர்கின்றது அவருடைய ஆன்மாவாக மாற்றுகின்றது
3.உயிரில் உள்ள காந்தம் கவர்கின்றது. இந்த உணர்ச்சி உடல் முழுவதும் படர்கின்றது.
 
ஒவ்வொரு உணர்வுக்குள்ளும் தீமையை நீக்கும் உணர்வுகளைப் பரவச் செய்யும் பொழுது இந்த உணர்வின் தன்மை நமக்குள் ஞானமாக அந்த எண்ணங்கள் வருகின்றது.
 
அந்த எண்ணமும் சரி நமக்குள் எடுத்துக் கொண்ட அணுக்களும் சரி நம் உடலும் சரிஅந்த உணர்வுக்கொப்பத் தான் நம்முடைய செயல்களாகும் சொல்லும் வரும்.
 
ஆகையினால்
1.இந்த வழியில் நாம் அனைவரும் உலகுக்கே வழிகாட்டியாக
2.குரு வழியில் அகஸ்தியன் சென்ற பாதையில் நாம் சென்று இருளை அகற்றி
3.அருள் ஞானிகள் உணர்வை நமக்குள் பெருக்கி நாம் ஒவ்வொருவரும் அருள் ஞானிகளாக மாற வேண்டும்.
 
நமது பேச்சும் மூச்சும் பார்வையும் பிறருடைய தீமைகளை அகற்றச் செய்ய வேண்டும். நம் பேச்சும் மூச்சும் பிறரை நல்ல சிந்தனைகளைச் சிந்திக்கும்படி நல்ல உணர்வுகள் வளரும்படிச் செய்ய வேண்டும்.
 
நாம் பார்க்கும் பார்வை அவர்களை நலம் பெறச் செய்யும் சக்தியாக வர வேண்டும். அவர் வாழ்க்கையில் வளம் பெறும் நிலையாகச் செயல்பட வேண்டும்.
 
நமது பார்வை பிறருடைய தீமைகளையும் நோய்களையும் போக்கும் சக்தியாகப் பெற வேண்டும்.
1.அவருடைய நோயின் உணர்வு சங்கடத்தின் உணர்வு நமக்குள் புகாது
2.”தடுத்து நிறுத்தும்…” அந்த அருள் சக்தியாக நீங்கள் மாற வேண்டும்.
 
எனக்கு குரு கொடுத்த அருள் சக்தியை உங்களுக்கும் பெறச் செய்கின்றேன். ஒவ்வொரு நாளும் நீங்கள் இந்த உணர்வின் தன்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்.
 
அவ்வாறு வளர்ந்து என்றென்றும் ஏகாந்தமாக எந்த எதிர்ப்பும் இல்லாது உணர்வின் தன்மை ஒளியாக மாற்றுதல் வேண்டும்.
 
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்கு அருளி அருள் வழிப்படி
1.எனக்குள் அந்த ஞான வித்தை வளர்த்து
2.அந்த ஞானத்தின் வித்தைத் தான் உங்களுக்குள்ளும் பதிவு செய்தது.
3.நாம் அனைவரும் அதன் வழி நாம் செல்லும் போது பேரருளாக மாறுகின்றோம்.
4.பேரருளாக மாறும் பொழுது பேரொளியாக மாறுகின்றது.
5.பேரொளி என்ற நிலை வரும் போது பேரிருளையும் மாற்றும் சக்தி வருகிறது.
 
இதை நாம் தொடர்ந்து வழிப்படுவோம் அருள் ஞானத்தைப் பெருக்குவோம் அருள் வழி வாழ்வோம் என்ற இந்தப் பிரதிக்ஞையை…” நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்.
 
ஒவ்வொரு குடும்பத்திலும் அமைதி பெறச் செய்யக்கூடிய உணர்வுகளை நாம் பெருக்குதல் வேண்டும்.
1.ஒவ்வொரு தெருவிலும் அமைதி பெறச் செய்ய வேண்டும் சொல்லால் அல்ல
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்தி
3.அந்த உணர்வலைகளை நாம் மூச்சலைகளாகப் பரப்ப வேண்டும்.