ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 2, 2018

விஞ்ஞானத்தினால் பரவப்பட்ட கதிரியக்கச் சக்திகள் “சூரியனுக்குள் ஏற்படுத்தும் மாற்றங்கள்…”

இன்று விஞ்ஞான உலகில் அணுக் கதிரியக்கங்கள் அதிகமாகப் பரவி விட்டது. அந்தக் கதிரியக்கங்களால் ஏற்படுத்தப்பட்ட கொதிகலன்களைச் (அதீத வெப்பங்கள்) சூரியனால் மாற்ற முடியாது.

எத்தகையை கதிரியக்கங்களைச் சூரியன் எடுத்ததோ அதன் வளர்ச்சியை மாற்றும்.
1.விஷத்தை முறிக்கும் தன்மைகளைச் சூரியன் முதலில் பெற்றிருந்தது.
2.மனிதனால் உருவாக்கப்பட்ட கதிரியக்கங்கள் சூரியனுடன் கலந்து
3.விஷத்தையே உமிழ்த்தும் தன்மை இன்று சூரியனிலிருந்து அதிகமாகி விட்டது.

விஷத்தின் தன்மையாக மாற்றும் தன்மை வரப்படும் பொழுது விஞ்ஞான அறிவால் ஏற்படுத்தப்பட்ட
1.கருவிகள் நாளடைவில் செயலிழந்து விடும்.
2.இந்தச் சூரியனும் நாளடைவில் செயலிழந்து விடும்.
3.சூரியனால் இயக்கப்பட்ட மற்ற ஒவ்வொரு கோள்களும் அது திசை மாறி உணர்வுகளை மாற்றிவிடும்.

இத்தகைய விஷத் தன்மை கொண்ட உணர்வுகள் வெளிப்படும் பொழுது நமது பூமி கவர்ந்தாலோ நமது பூமியில் உள்ள மனித இனங்களையே மாற்றி விடும்.

இதைப் போல விஷத் தன்மைகளை மாற்றி கொண்டே இருக்கும் இந்த நேரத்தில் நமது குரு காட்டிய அருள் வழியில் விஷத்தை ஒளியாக மாற்றும் பருவத்தை ஏற்படுத்துகின்றோம்.

எப்படி நாகம் பல விஷமுள்ள ஜந்துக்களை முழுமையாக விழுங்கி அதனுடைய விஷமும் இதனுடைய விஷமும் ஒன்றாக்கி அதை ஒளி கொண்ட “நாகரெத்தினமாக…” மிளிரச் செய்கின்றது.

இதைப் போன்று தான் நமக்குள் எத்தனை வகையான விஷத் தன்மைகள் வந்தாலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வைச் சேர்த்துச் சேர்த்துச் சேர்த்து நம் உடலுக்குள் உணர்வின் அறிவாகப் பேரருள் பேரொளியாக மாற்றிட முடியும்.

உயிருடன் ஒன்றி உயிரைப் போலவே உணர்வை ஒளியாக மாற்றி விஷம் என்ற நிலை நமக்குள் வராதபடி அதைப் பேரருளாக மாற்றி நாம் என்றும் ஏகாந்த நிலை என்ற நிலையில் முழுமை அடைய முடியும்.