ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 1, 2018

நம்மைச் சுற்றி உருவாக்க வேண்டிய “அருள் ஒளி வட்டம் – பாதுகாப்புக் கவசம்”

பரிணாம வளர்ச்சியில் வந்த மிருக இனங்கள் வெகு தூரத்தில் இருந்தே மணத்தால் உணர்ந்து உணவோ எதிரிகளையோ அறிந்து கொள்கின்றது. தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் நுகர்ந்தறியும் ஆற்றல் பெற்றவைகள் தான் மிருகங்கள்.

அதிலிருந்து வளர்ச்சி பெற்று மனிதனாக வந்த பின் தொழிலின் நிமித்தம் உணர்வுகளை அதிகமாகச் செலுத்தும் போது குடும்பப் பாரங்களை அதிகமாகச் செலுத்தப்படும் போது இது தான் முன்னணியிலே வருகின்றது.

வெகு தூரத்தில் இருந்து நமக்குள் அதாவது சலிப்பானவரை சங்கடப்படுவோரை வெறுப்பானவரை வேதனைப்படுவோரை உற்றுப் பார்த்தது எல்லாம் நம் உடலுக்குள் பதிவாகி இருக்கின்றது.

அவ்வாறு நமக்குள் பதிவாகி இருப்பதனால் அந்த உணர்வுகள் வந்தாலும் நாம் அதைப் பற்றிய இயக்கங்களை (நன்மை தீமைகளை) அறிய முடியாத நிலைகளில் தான் இருக்கின்றோம். ஏனென்றால்
1.வேலையின் நிமித்தம் வரும் பொழுது அந்த அழுத்தம் அதிகமாகி விடுன்றது.
2.குழந்தைகள் நாம் செல்லமாக வளர்க்கவேண்டும் என்ற ஆசை வருகின்றது.
3.நாம் கடன் கொடுத்தவர்கள் திரும்ப வரவில்லை என்றால் அதனுடைய உணர்வு அழுத்தமாகின்றது.
4.இத்தகைய தீமையான உணர்வுகள் நம் உடலுக்குள் போகின்றது
5.அது நம்மைப் பாதிக்கப் போகின்றது என்பதை நாம் உணர்வதில்லை.

அந்தத் தீய உணர்வுகள் அனைத்தும் உடலுக்குள் சென்று விளைந்து நம் நல்ல அணுக்களை மாற்றியபின் தான் வேதனை என்ற உணர்வாக நாம் அறிய முடிகின்றது.

மற்ற உயிர் இனங்கள் அனைத்தும் தீமை என்ற உணர்வுகள்
1.அந்த மணத்தைக் கண்ட பின் அது நுகராது மறுத்து விடுகின்றது.
2.அல்லது தடுத்து விடுகின்றது. அதற்கு அந்தச் சக்தி உண்டு.

ஆனால் மனிதனுக்கு இதை நீக்கும் சக்தி இருந்தும் அது நாம் நீக்க முடியாதபடி “உணர்வின் வேகத்திலயே…” நாம் செல்கின்றோம்.

இதை எல்லாம் நாம் மாற்றி அமைக்கக்கூடிய சக்தியாக நீங்கள் பெறவேண்டும் என்பதற்குத்தான் அடிக்கடி இந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைப் பற்றிப் பதிவாக்குகின்றோம்.

பல தீமைகளை நாம் பார்த்தாலும் அந்தத் தீமையின் உணர்வு நாம் நுகர்ந்தது நம் உடலுக்குள் சென்று அந்தத் தீமையான செயலைச் செயல்படுத்தாத படி தடுத்து நிறுத்த வேண்டும்.

குழம்பு வைக்கும்போது அதனுடன் காரமான மிளகாயைச் சேர்த்து நமக்குச் சுவையாக மாற்றிக் கொள்கின்றோம்.

அதைப் போல தீமையான உணர்வுகள் நமக்கு அடிமையாக்க வேண்டுமே தவிர நாம் அவைகளுக்கு அடிமையாகி விடாதபடி நம் நல்ல குணங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

அதற்காகத்தான் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நுகர்வதற்கு உங்களுக்கு இந்தப் பயிற்சியைக் கொடுக்கின்றோம்.

இன்றைய உலகில் நடக்கும் தீவிரவாதங்களும் பல கொலைகளும் கொள்ளைகளும் பல அசுர உணர்வுகளும் வெளிப்படும் உணர்வுகளை அது நம் உடலுக்குள் ஆக்கிரமித்துவிடக் கூடாது.

நம்மைக் குற்றவாளியாகவும் அல்லது கொலை செய்பவனாகவும் அல்லது நம் உடலுக்குள் இருந்து நல்ல அணுக்களைக் கொன்று அது கடும் நோயாக மாறும் தன்மைகளிலிருந்தெல்லாம் நாம் மாறிப் பழக வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை இந்த உடலில் அடிக்கடி எடுத்துச் சேர்த்துக் கொண்டே வந்தால் நமது மூச்சலைகள்
1.நம்மைச் சுற்றி ஒரு பெரும் அருள் ஒளி வட்டமாக மாறும்.
2.அப்போது தீமை என்ற உணர்வுகள் நமக்குள் வராதபடி அது ஒதுக்கிவிடும்.
3.எல்லோரும் ஒதுக்கிவிட்டால் ஈர்க்கும் சக்தி இல்லை என்றால்
4.தீமை செய்யும் அந்தக் கொடிய உணர்வலைகளைச் சூரியன் கவர்ந்து கொள்கின்றது.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நம் உடலிலே பெற வேண்டும் என்று நாம் பெரும் கூட்டமாகக் கூட்டுத் தியானங்களைச் செய்து இந்த வலுக்களை அவ்வப்போது கூட்டிக் கொள்தல் வேண்டும். 

உங்கள் வாழ்க்கையில் அடிக்கடி இதை மாற்றிக் கொண்டால் இந்தப் பிரபஞ்சமே அழிந்தாலும் நாம் ஏகாந்தமாக அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் ஒளியின் சரீரமாக வாழலாம்.