இன்று மனித வாழ்க்கையில் மிகவும் இக்கட்டான
நிலைகளாகி வீழ்ந்து விட்டால் என்ன செய்வார்கள்?
சில பேர் வசதியாக இருப்பார்கள். வசதியற்ற
நிலைகளில் இருந்தால் ஆண்களாக இருந்தால் அந்தத் துன்பங்களை மறப்பதற்காகப் போதை
வஸ்துக்களைப் பயன்படுத்திச் சிந்தனையற்றவர்களாகி விடுகின்றனர்.
பெண்களாக இருந்தால் துன்பத்தைத் தாங்க
முடியவில்லை என்றால் “என்ன வாழ்க்கை..!” என்று இந்த உடலை வெறுத்துத் தற்கொலை
செய்து கொள்கின்றனர்.
விஷத்தை அருந்தி மனித எண்ணமே
இல்லாதபடித் தன் உடலை அழித்துக் கொள்கின்றனர்.
எந்த விஷத்தை உட் கொண்டு உடலை விட்டுப்
பிரிந்து சென்றார்களோ அந்த விஷத்தின் தன்மை உயிராத்மாவில் பரவி விஷம் கொண்ட
பாம்பின் ஈர்ப்பிற்குள் சென்று மறு பிறவியில் பாம்பாக உருவாக்கிவிடும்.
இதை இவர்கள் மறந்து விடுகிறார்கள்…!
வீட்டில் கஷ்டம் வந்தால் இப்படி ஏதாவது ஒன்றைச்
செய்து விட்டு என்ன வாழ்க்கை என்று இவர்கள் வெறுக்கலாம். கடைசியில் சமாளிக்க
முடியாத நிலைகளில் விஷத்தை உட்கொண்டால் மீண்டும் பாம்பாகப் பிறக்கிறார்கள்.
ஆண்கள் தன் மனதை மாற்றுவதற்காக வேண்டி போதைப்
பொருள்களுக்கு அடிமையாகித் தன்னை மறந்து நல்ல எண்ணங்களை எல்லாம் இழந்து கடைசியில்
உடலை விட்டு இந்த உயிராத்மா செல்லும்போது மந்திரக்காரர்களிடம் சிக்கிக்
கொள்கிறார்கள்.
போதை வஸ்துக்களை யார் யார்
பயன்படுத்துகிறார்களோ அவர்கள் மாமிசமும் உட் கொள்வார்கள். அந்த மாமிசம் இருந்தால்
தான் அது அவர்களுக்கு நல்லதாக இருக்கும்.
இந்த இரண்டையும் அவர்கள் பயன்படுத்தினால் அந்த
உயிராத்மாக்களை மந்திரக்காரர்கள் வெகு சுலபமாகப் பிடித்து விடுவார்கள்.
மாமிசத்தையும் போதை மருந்தையும் வைத்து
அதற்கென்று சில மந்திரங்களைச் சொன்னால் போதும். உயிராத்மா அந்த மந்திரக்காரனின்
கைகளில் போய்ச் சிக்கிவிடும்.
அவனிடம் சென்றபின் பல பல செயல்களைச் செய்யும்.
கெட்டதையும் செய்யும். நல்லதையும் செய்யும்.
ஒருவருக்கு தலை வலி போக வேண்டுமென்றால் இந்த
ஆத்மாவை இழுத்துச் சேர்த்துக் கொள்வார்கள். அவர் நோய் தீரும்.
ஆனால் மந்திரக்காரன் கையில் சிக்கிய ஆன்மா அந்த
உடலில் உள்ள நோயையெல்லாம் தன் உயிராத்மாவில் சேர்த்துக் கொள்ளும். மந்திரக்காரன்
ஆட்டிப் படைக்கும் சக்தியாக இருக்கும்.
ஒருவருக்குத் தொல்லை கொடுக்க வேண்டுமென்றால்
இந்த உயிராத்மாவை அங்கே ஏவி விடுவார்கள். தொல்லை கொடுக்கும் நிலைகளை அங்கே
உருவாக்கி அந்த உணர்வைத் தனக்குள் விளைய வைத்து இன்னும் அதிகமான விஷத்
தன்மையாகும்.
1.முதலில் மந்திரக்காரன் கையில் சிக்கும்.
2.பின் பல உடல்களிலிருந்து வேதனையெல்லாம்
சேர்க்கும்.
3.அந்த வினைக்கு நாயகனாகப் பாம்பாய் பிறக்கும்.
இன்று மந்திரங்களைக் கற்றுக் கொண்ட
உயிராத்மாக்கள் இன்னொரு உடலுக்குள் சென்று அவருடைய நோயை நீக்க.. “டேய்
உனக்கு நோயெல்லாம் போய் விடும்…!” என்று மந்திரத்தைச் சொல்லி ஜபிப்பார்.
அவர் உடலில் இருந்த நோயெல்லாம் இந்த
மந்திரக்காரன் உடலில் வந்து சேர்ந்துவிடும். நோயாளிக்கு உடல் நலமாகிப் போகும்.
இவர் காளியோ முருகனோ ஏதாவது ஒரு தெய்வத்தின்
பெயரைச் சொல்லி தான் மந்திரத்தை ஜபிப்பார். அந்த உணர்வின் தன்மை இங்கு வரும் போது
“எல்லாருக்கும் நன்மை செய்கிறான் முருகன்…! என்று பெயரைச் சொல்வான்.
அந்த முருகன் யாரென்றே தெரியாது…!
முருகன் பெயரைச் சொல்லியோ காளியின் பெயரைச்
சொல்லியோ இவ்வாறு செய்யும் போது அந்த உணர்வின் எண்ணங்களே இவர் உடலில் சேர்த்து அதே
வேலையை அங்கே செய்யும்.
நான் தான் காளி…! நான் தான் மாரி…! நான் தான்
முருகன்…! என்று இந்த ஆத்மா சொல்லும். ஆனால் இந்த உடலில் எதை எதைச் சேர்த்ததோ மற்ற
உடலிலிருந்து விஷத்தை எடுத்து அது அவர்களுக்கு நல்லதாகும்
என் தாய் உனக்கு நல்லது செய்தாள்…! என் முருகன்
உங்களுக்கு நல்லது செய்தார்…! என்று இவர்கள் சொல்லலாம்.
ஆனால் அதே சமயத்தில்
1.அங்கே இருக்கக்கூடிய விஷத்தின் தன்மைகள்
2.தன் உடலிலே அதிகமாகச் சேர்க்கப்பட்டு விஷம்
அதிகமாகி
3.இந்த உயிரையும் பிரிக்கச் செய்து மீண்டும்
இதே வேலைகளுக்குப் பயன்படுவார்.
4.வேதனையான விஷங்கள் அதிகமாகி விட்டால் கடைசி
முடிவு
5.மந்திரம் சொல்வோரும் சரி… மந்திரக்காரர்
கையிலே சிக்குவோரும் சரி…, “அவர்களின் முடிவு பாம்பு தான்…!”