நம் உடலுக்குள் எண்ணில் அடங்காத ஆன்மாக்கள்
உண்டு. அது எதனெதன் நிலைகள் விளைந்ததோ அதனின் உணர்வலைகளைக் காற்றிலிருந்து ஈர்க்கும்.
(தன் உணவுக்காக)
உடலுக்கு முன் பரவி வரும் உணர்வுகளை
அது கவர்ந்து இழுத்துத் தன் ஆன்மாவாகி உடலுக்குள் ஒரு அணுவின் கருவாக மாற்றிக் கொண்டு
இருக்கும்.
தீயவர்களைப் பார்க்கப்படும் போது தீய
உணர்வலைகளைக் கவரச் செய்து அதை உயிர் உணர்ச்சியால் நம்மை அறியச் செய்தாலும் உணர்வின்
அணுவாக மாற்றி விடுகின்றது. அணுவின் தன்மை மலமாக மாற்றி உடலாக மாற்றுகின்றது.
உடலுக்குள் அது தேங்கி நின்று தன் உணர்வை
(உணவை) எடுப்பதற்கு அந்த உணர்ச்சியைத் தூண்டும்.
உணர்ச்சிகளைத் தூண்டும் போது நமக்குள்
இருக்கக்கூடிய காந்தப்புலனறிவு எங்கிருந்து தீமைகளை உருவாக்கியதோ அதைக் கவர்ந்து நமது
ஆன்மாவாக மாற்றி நம்மைச் சுவாசிக்கச் செய்யும்.
சுவாசித்தது உயிரிலே பட்டு அந்தத் தன்
இனமான உணர்வுகளை நம் உடலுக்குள் பரப்பச் செய்து அதனைத் தனக்குள் சேமித்து வைத்துக்
கொள்ளும்.
நாம் உணவாக உட்கொள்வது உடலுக்குள் சென்று
அது சிறுகச் சிறுகக் கலந்து இரத்தமாகவும் உணர்வின் அணுக்களாகவும் மாற்றிக் கொண்டு உள்ளோமோ
இதைப் போல தான் தனது சேமிப்பாக அது எடுத்து அந்த உணர்வின் தன்மை (அந்த அணு) வளர்க்கும்.
1.அதில் கொஞ்சம் குறைகின்றது என்றால்
2.(நமக்குப் பசிப்பது போல்) உடனே உணர்ச்சிகளைத்
தூண்டும்.
உணர்ச்சிகளைத் தூண்டும் போது அதை எதனின்
உணர்வின் தன்மை பட்டதோ அதே காந்தப்புலன் அருகில் இருக்கும் இந்த உணர்ச்சியின் வேகம்
அதிகமாகும்.
அப்பொழுது இன்னொரு மனிதன் உடலில் விளைந்த தீமையான உணர்வை இது கவர நேரும்.
அவ்வாறு கவர்ந்தால் நமது ஆன்மாவாக இங்கே
சேருகின்றது. சுவாசித்து உயிர் வழி கொண்டு தனக்குள் அதை எடுத்துக் கொள்கின்றது. இந்த
இயற்கையின் நியதிகளே இது தான்.
அது எடுக்கப்படும் போது தன் ஆன்மாவில்
(நம்முடைய காற்று மண்டலம்) சேமித்துக் கொள்ளும்.
சாப்பாடு சாப்பிட்டு வயிறு நிறைந்தவுடனே
நாம் எப்படித் தூங்குகின்றமோ அதே போல உடலிலுள்ள அணுக்கள் அது அதனதன் உணவை எடுத்து உட்
கொண்ட பின் அது உறங்கச் செல்லும்.
அதே சமயத்தில் விஷத் தன்மையான அணுக்கள்
(வேதனை வெறுப்பு கோபம் ஆத்திரம்) வரப்படும் போது தன்னை அறியாமலே துடிப்பின் வேகம் அதிகமாகும்.
அப்போது நமக்குள் வேதனையின் தன்மைகளும் உருவாகும்.
இது இயற்கையின் சில நியதிகளில் நிலையானது.
நாம் எப்படிப் பசிக்கும் பொழுது உணவைத்
தேடுகின்றோமோ உணவை உண்ட பின் உறங்குகின்றோமோ அதை போல் தான் நம் உடலில் உருவான அணுக்கள்
இந்தக் காற்று மண்டலத்திலிருந்து அதனதன் உணர்வலைகளை உணவாக எடுத்து வளரும்.
நம்முடைய ஆன்மாவின் இயக்கங்களைப் பற்றி
நாம் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். அதற்காகத்தான் இதை உணர்த்துகின்றோம்.
1.வெளியிருக்கும் காற்று மண்டலம் பரமாத்மா
– பொதுவானது
2.நம்முடைய காற்று மண்டலம் ஆன்மா – உடலில்
உள்ள அணுக்களுக்குச் செல்லும் (உணவு) உணர்வலைகள்
3.சுவாசம் – உணர்வலைகள் உடலுக்குள் கவரப்பட்டுப்
போகும் பாதை
4.உயிர் – உயிரில் பட்ட பின் உணர்ச்சிகள்
இயங்கி அணுக்களுக்குப் பிரித்துக் கொடுக்கின்றது
இப்படித்தான் சுவாசம் அமைகின்றது. சுவாசத்தின்
வழி உடல் அணுக்கள் வாழ்வதும் உடலில் விளைந்ததிலிருந்து உயிர் தன் ஆற்றலைப் பெருக்கும்
நிலையும் நடந்து கொண்டயிருக்கின்றது.
மகரிஷிகளின் அருள் உணர்வுகளை
1.உடலிலே அணுக்களாகப் பெருக்கி வளர்த்துக்
கொண்டால் அது விளைந்தபின்
2.நம் உயிர் கடைசியில் அதனின் நுண் ஆற்றலாகப்
பெருக்கித்
3.தன் உயிராத்மாவாக்கி ஒளியாக ஆக்கி
4.அந்த மகரிஷிகளின் எல்லைக்கு நம்மை
அடுத்த நிலையாக அழைத்துச் செல்லும்.