ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 31, 2018

பழனிக்குச் சென்றால் முருகன் சிலையை “உற்றுப் பார்த்து…” அதிலிருந்து வெளிவரும் மூச்சலைகளை நம் உயிர் வழி “சுவாசிக்க வேண்டும்”

பழனியில் “நாம் பார்க்கும்.., முருகன் சிலை சாதாரணமானதல்ல. அதைச் சும்மா பார்த்தால் மட்டும் போதாது.

ஏனென்றால் 5300 ஆண்டுகளுக்கு முன் மெய்ஞானியான போகரால் அது உருவாக்கப்பட்டது. பல கோடித் தாவர இனங்களின் சத்தும் 27 நட்சத்திரங்களின் வைரக்கல்லின் ஆற்றலும் நவக் கோள்களின் பாஷாணமும் அந்தச் சிலைக்குள் உண்டு.

இருட்டறைக்குள் வைக்கப்பட்ட முருகன் சிலையின் மீது அக்காலங்களில் நீரை விடும்படி செய்தார் போகர்.

போகமாமகரிஷி காட்டிய அருள் வழியில் போகரை எண்ணி
1.“அந்தச் சிலையை உற்றுப் பார்த்து..,
2.அதிலிருந்து வரும் மணத்தை இழுத்துப்
3.புருவ மத்தியின் வழியாகச் சுவாசிக்க வேண்டும்.

பூமியின் வெப்பத்தால் மலையின் வெப்பத்தை அது எடுக்கும் பொழுது
1.சொட்டு நீர் சிலை மீது பட்டால்
2.முருகன் சிலையிலிருந்து மூச்சலைகள் வெளிவரும். (மனிதனைப் போன்று சிலை வியர்க்கும்)
3.நாம் எந்த ஏக்கத்துடன் செல்கின்றோமோ முருகன் சிலையிலிருந்து வெளிப்படும் அலைகளைச் சுவாசித்தவுடன்
4.நமக்குள் இருக்கக்கூடிய பல விஷத் தன்மைகளை மாய்க்கக் கூடிய சக்தியை நாம் பெற முடியும்.
5.பகைமைகளைப் போக்க முடியும்
6.கடுமையான நோய்களாக இருந்தாலும் அது ஒடுங்கும்.

மக்கள் அனைவரையும் மகிழச் செய்வதற்காகத்தான் முருகன் சிலையைப் போகர் உருவாக்கினார். பிறர் மகிழ வேண்டும் என்ற எண்ணத்தில் அந்தச் சிலையிலிருந்து வெளிவரும் வாசனையை நுகர்ந்தால் போகமாமகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்கும்.

அதனின் துணை கொண்டு அவன் எப்படி விண்ணிலே ஒளியின் சரீரம் பெற்று என்றும் பதினாறாக வாழ்கின்றானோ அவனின் ஈர்ப்பு வட்டத்தில் நாம் செல்லலாம்.

என்றுமே பேரானந்தப் பெரு வாழ்வாக வாழ்ந்திடலாம்.