ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 14, 2018

“எதை நீ குருவாக ஆக்க வேண்டும்” என்ற உண்மையை நான் (ஞானகுரு) அறிய குருநாதர் எனக்குக் கொடுத்த அனுபவப் பாடம்

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் நான் (ஞானகுரு) அனுபவம் பெறுவதற்காக வேண்டி
1.பல கஷ்டங்களையும் கொடுத்தார்.. கடுமையாகத் திட்டுவார்…!
2.கொச்சையாகப் பேசுவார். பொறுத்துக் கொள்ள முடியாது
3.காதிலேயே கேட்க முடியாது. அவ்வளவு மோசமாகப் பேசுவார்.
4.என்னை ஒவ்வொரு நொடியிலும் உதைப்பார்; இம்சிப்பார்; திட்டுவார்..! இத்தனையும் செய்வார்.

நன்றாக பேசிக் கொண்டே இருப்பார். திடீரென்று என்ன செய்கிறார் என்று எனக்கே தெரியாது. போய்க் கொண்டு இருக்கும் போதே இல்லாத கஷ்டத்தை எல்லாம் எனக்கு ஏற்படுத்தி வைப்பார்.

“இப்படிச் செய்து விட்டார்… பார்…!” என்று நான் திகைத்து நிற்பேன்.

அப்பறம் என்ன செய்வார்…?

இதை எடுத்து நீ பாருடா…! என்று சொல்வார்.
1.உன் உடலில் இப்போது என்ன செய்கின்றது…?
2.நான் இப்போது உன்னை என்ன செய்தேன்…?
3.நீ ஏன் அதைச் சுவாசித்தாய்?
4.அதை நீ “தடைப்படுத்து…!” என்று சொல்வார்.

எப்படி சாமி தடைபடுத்துவது…? என்றேன் நான்.

இதற்குத் தான் “குரு பலம்…!” வேண்டும் என்பது. ஆகவே “குரு” எது?

கோபமான எண்ணங்களை நீ பதிவு செய்து வைத்துக் கொள்கிறாய். அதைத் திருப்பி எண்ணும் போது குருவாக வந்து உன்னைக் கோபமாகச் சண்டை போட வைக்கின்றது. இது குரு பலம் தான்.

அதே மாதிரி உன்னைத் திட்டி வேதனைப்படுத்துகின்றார்கள். அதைப் பிடியாக வைத்துக் கொள்கிறாய். திருப்பி எண்ணியவுடனே அது குருவாக வருகின்றது.

உன்னை வேதனைப்படச் செய்து வேதனைப்படும் செயல்களைச் செய்ய வைக்கின்றது. உடலுக்குள்ளும் வேதனையாகின்றது. அது குருவாக நிற்கின்றது.

அப்படியென்றால் “நீ எதைக் குருவாக்க வேண்டும்…?” என்று வினா எழுப்புகிறார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

இந்த வேதனைகளையெல்லாம் நீக்கியவர்கள் அந்த “மகாமகரிஷிகள்…!”
1.அதை எடுத்து உனக்குள் குருவாக ஆக்கு.
2.அந்தக் குருவை நீ மதி
3.அந்தக் குரு உனக்குச் சகல நிலைகளையும் செய்யும்.

நான் இப்போது உன்னைக் கடுமையாகத் திட்டுகின்றேன். அதை நீ குருவாக எடுத்துக் கொண்டால்
1.என்னைப் “போடா சாமி…!” என்பாய்
2.என்னைப் “பைத்தியக்காரப் பயலே…!” என்று சொல்வாய்.
“இப்படியே” குருநாதர் சொல்கின்றார்.

நான் உன்னைத் திட்டுகின்றேன் என்கிற போது “நான் திட்டியதைத்தான்” நீ எடுத்துக் கொள்கிறாய்.

ஆனால் உன்னிடம் இருக்கிற “கெட்டதெல்லாம் போக வேண்டும்…!” என்று நான் திட்டுகின்றேன்.
1.அதை நீ எடுத்து கொள்ள மாட்டாய்…!
2.பாவி…! என்னைப் பைத்தியக்காரத்தனமாகத் திட்டுகின்றார்…, “இந்த மனிதன்..” என்று தான் நீ எண்ணுவாய்.

உனக்குள் மறைந்து சில நிலைகளைச் செய்கிறது அதை நீ நீக்கத் தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா…!

என்னைத் திட்டுகின்றான் என்பதை மட்டும் வெளியில் வருவதை… உன் செவிப்புலன் இயக்குகின்றது. இந்த உணர்வு இயக்குகிறது.

ஆனால் அதே சமயத்தில் என் மீது இருக்கக்கூடிய பிரியத்தின் படி “என்னைப் பைத்தியக்காரன்” என்று நீ திட்டுகிறாய்… அது இயக்குகின்றது. உன் வெறுப்பைக் காட்டுகின்றாய்.
1.”இவ்வளவையும்…” என் அனுபவத்திற்குக் கொண்டு வருகின்றார்.
2.ஆனால் குருநாதர் பைத்தியக்காரராகத்தான் இருந்தார்.

இந்த உணர்வுகள் உனக்குள் வினையாக எப்படிச் சேர்கின்றது? அதை நீ எப்படி நிறுத்த வேண்டும்? இதற்காக வேண்டித்தானப்பா…! இதைச் சொல்கிறேன் என்பார் குருநாதர். அனுபவரீதியாகத்தான் எல்லாமே கொடுத்தார்.

எனக்கு குருநாதர் இப்படிக் கொடுத்தார். உங்களுக்கு அனுபவம் எதில் கொடுக்கின்றேன் என்றால்
1.ஒரு கஷ்டம் வரும் போது இதைப் பயன்படுத்திப் பாருங்கள்
2.உங்கள் “கஷ்டம் போகும்” என்று சொல்கிறேன்
3.இதை அனுபவரீதியில் நீங்கள் பார்க்க வேண்டும்…!